Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

05 Jan, 2026 | 06:05 PM

image

(எம்.நியூட்டன்)

வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் தமது விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு, வடக்கு மாகாணம் மிகவும் பாதுகாப்பானதும் அமைதியானதுமான ஒரு பிரதேசமாகும். எனவே, ரஷ்யச் சுற்றுலாப்பயணிகளின் வருகையை வடக்குக்குத் திருப்ப உதவுவதுடன், எமது மாகாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளில் ரஷ்ய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதையும் ஊக்குவிக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யனிடம் கோரிக்கை விடுத்தார்.

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன், வடக்கு மாகாண ஆளுநரை இன்று திங்கட்கிழமை (5) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

IMG-20260105-WA0059.jpg

பல தசாப்தங்களுக்குப் பின்னர் ரஷ்யத் தூதுவர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டமை மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டு ஆளுநர் அவரை வரவேற்றார்.

இச்சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த ரஷ்யத் தூதுவர், 

ரஷ்யச் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு அதிகளவில் வருகை தருகின்றனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனினும், வடக்கு மாகாணத்துக்கான ரஷ்யச் சுற்றுலாப்பயணிகளின் வருகை மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு வரும் ரஷ்யப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வடக்கு மாகாணம் தனது சுற்றுலாத் திட்டங்களை முன்னெடுப்பது சிறப்பாக அமையும் எனச் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த ஆளுநர், இந்தியாவுடனான நேரடி விமான சேவை காரணமாக அதிகளவான இந்தியச் சுற்றுலாப் பயணிகள் வடக்கு மாகாணத்துக்கு வருகை தருகின்றனர். 

வடக்கு மாகாணமானது சுற்றுலாப்பயணிகள் தங்கிச் செல்வதற்கு மிகவும் பாதுகாப்பான சூழலைக் கொண்டுள்ளது. இதனைத் தாங்கள் ரஷ்ய மக்களுக்குத் தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களின் வருகையை அதிகரிக்க உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக ரஷ்ய முதலீட்டாளர்களை இங்கு முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறும் ஆளுநர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து, ரஷ்ய கலாசார நிலையத்தின் ஊடாக இலங்கையர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்துத் தெளிவுபடுத்திய தூதுவர், இவ்வாய்ப்புகளை வடக்கு மாகாண மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ரஷ்ய முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஊக்குவியுங்கள் - ரஷ்ய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

05 Jan, 2026 | 06:05 PM

image

(எம்.நியூட்டன்)

வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் தமது விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு, வடக்கு மாகாணம் மிகவும் பாதுகாப்பானதும் அமைதியானதுமான ஒரு பிரதேசமாகும். எனவே, ரஷ்யச் சுற்றுலாப்பயணிகளின் வருகையை வடக்குக்குத் திருப்ப உதவுவதுடன், எமது மாகாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளில் ரஷ்ய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதையும் ஊக்குவிக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யனிடம் கோரிக்கை விடுத்தார்.

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன், வடக்கு மாகாண ஆளுநரை இன்று திங்கட்கிழமை (5) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

IMG-20260105-WA0059.jpg

பல தசாப்தங்களுக்குப் பின்னர் ரஷ்யத் தூதுவர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டமை மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டு ஆளுநர் அவரை வரவேற்றார்.

இச்சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த ரஷ்யத் தூதுவர், 

இதற்குப் பதிலளித்த ஆளுநர், இந்தியாவுடனான நேரடி விமான சேவை காரணமாக அதிகளவான இந்தியச் சுற்றுலாப் பயணிகள் வடக்கு மாகாணத்துக்கு வருகை தருகின்றனர். 

ரஷ்ய முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஊக்குவியுங்கள் - ரஷ்ய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை  | Virakesari.lk

ரசியனும் மற்றவர்களும் வாறதுக்கு இந்திய நேரடி விமான சேவை மட்டும் போதுமா அதிபர் சார்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, சுவைப்பிரியன் said:

ரசியனும் மற்றவர்களும் வாறதுக்கு இந்திய நேரடி விமான சேவை மட்டும் போதுமா அதிபர் சார்.

உங்கள் ஆசை நிறைவேறும்

ஆனால் நாள் செல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்கள் ஆசை நிறைவேறும்

ஆனால் நாள் செல்லும்.

நீங்கள் சில வேளை நினைக்கலாம் என்னடா இவன் எப்ப பார்த்தாலும் இததையே பிடித்து தொங்கிக் கொன்டிருக்கிறான் என்டு.நான் வருடத்தில் இரன்டு முறை ஊர் போய் வருகிறேன்.இங்கிருந்து அங்கு ஏர்போட்டில் இறங்க பிடிக்கும் அதே நேரம் எனது ஊருக்கு போய் சேர பிடிக்குது.அப்ப கான்டு வரும் தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா....அமெரிக்கா பலாலியிலை வந்து இறக்கிக்கிக்காட்டீட்டுது.

இனி இந்திய கூட்டாளி ரஷ்யாவும் யாழ்ப்பாண பக்கம் ...

தகிட ததிமி தகிட ததிமி தம்தானா...

இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா...

தகிட ததிமி தகிட ததிமி தம்தானா...

இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா...

இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா...

என் கதை எழுதிட மறுக்குது என் பேனா...

இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா..🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் சில வேளை நினைக்கலாம் என்னடா இவன் எப்ப பார்த்தாலும் இததையே பிடித்து தொங்கிக் கொன்டிருக்கிறான் என்டு.நான் வருடத்தில் இரன்டு முறை ஊர் போய் வருகிறேன்.இங்கிருந்து அங்கு ஏர்போட்டில் இறங்க பிடிக்கும் அதே நேரம் எனது ஊருக்கு போய் சேர பிடிக்குது.அப்ப கான்டு வரும் தானே.

இல்லை சுவை அப்படி எதுவும் நினைப்பதில்லை.

நானும் வருடாவருடம் ஊருக்கு போய் வருகிறேன்.

35 மணிநேரம் தொடர்ந்து பயணம் செய்ய எனக்கும் ரொம்ப கஸ்டமாகவே உள்ளது.

பலாலியில் போய் இறங்கினால் எனக்கும் சந்தோசமே.

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ஸியாவின் அதிகாரியுடன் குமாரசாமியும் உடனிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவருக்குச் சொல்லாமல் இந்தச் சந்திப்பு நடந்திருக்கும் என்று நாம் நம்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

இல்லை சுவை அப்படி எதுவும் நினைப்பதில்லை.

நானும் வருடாவருடம் ஊருக்கு போய் வருகிறேன்.

35 மணிநேரம் தொடர்ந்து பயணம் செய்ய எனக்கும் ரொம்ப கஸ்டமாகவே உள்ளது.

பலாலியில் போய் இறங்கினால் எனக்கும் சந்தோசமே.

Choose your preferred flight from Chennai to Jaffna

MAAJAF

Tue, 06 Jan

--

Non-stop

Low cost first

Day departures

Fly Your Way

Select your preferred cabin & seats.

Stretch | Business

Economy

CS6E 1177

10:30

MAA, T2

01h 15m

Non-stop

11:45

JAF

Filling Fast

Starts at

₹11,319

+ Earn 1,058 IndiGo BluChips

Fare Types

Know more

Baggage

Change/cancellation

Add-ons and services

Saver fare

₹11,319

+ Earn 1,058 IndiGo BluChips

7 kg Cabin bag allowance

15 kg Check-in bag allowance

Change charges upto INR 5999

Cancellation charges upto INR 10000

Flexi plus fare

₹12,264

+ Earn 1,166 IndiGo BluChips

7 kg Cabin bag allowance

15 kg Check-in bag allowance

Change charges upto INR 1999

Cancellation charges upto INR 8024

Complimentary meal

Complimentary standard seat

Super 6E fare

₹15,519

+ Earn 1,538 IndiGo BluChips

7 kg Cabin bag allowance

20 kg Check-in bag allowance

Change charges upto INR 649

Cancellation charges upto INR 2999

Complimentary meal

Complimentary XL (Extra legroom) Seat 

Click here  to know more about flight

இந்த பாதையால் செல்லலாம்தானே ? அவர்களுடன் தொலைபேசியில் / ஈமையிலில் பேசினால் ஒரு கடடனத்துடன் இன்னும் ஒரு பொதி கொண்டு போக முடியும் என்று நம்புகிறேன்.

கொழும்பு ( மாலைதீவு) விமானநிலையம் அண்ணளவாக $120 டாலர்கள் வரி விதிக்கிறார்கள். எப்போதும் சென்னையில் இருந்து அல்லது வேறு இந்திய விமானநிலையத்தில் இருந்து டிக்கெட் குறைந்த விலையிலேயே கிடைக்கும். டிக்கெட்டும் மலிவாக கிடைக்கும் என்றே எண்ணுகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.