Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார்.

Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00

புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார்.

ஸ்டாக் புகைப்படம்: கெட்டி இமேஜஸ்

10352 பற்றி

ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புடினுடன் நேரடி உரையாடலை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் இணைய பல ஐரோப்பியத் தலைவர்களை அணுகியுள்ளதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.

மூலம் : ஐரோப்பிய பிராவ்தா, ஜெர்மனியின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க தினசரி செய்தித்தாள்களில் ஒன்றான Süddeutsche Zeitung ஐ மேற்கோள் காட்டி.

விவரங்கள் : உக்ரைனில் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதால், ரஷ்யாவுடன் நேரடித் தொடர்பை மீண்டும் தொடங்குவதற்கான தனது நோக்கம், உக்ரைனில் போரின் ஒரு புதிய கட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று மக்ரோன் விளக்கினார்.

ஐரோப்பியர்கள் ரஷ்யாவுடனான உரையாடலுக்கு அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்று அவர் நம்புகிறார், ஏனெனில் அவர்களின் கண்டத்தின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.

"எனது காரணம் மிகவும் எளிமையானது: இந்தப் பிரச்சினை பற்றிய விவாதத்தை மற்றவர்களிடம் ஒப்படைக்க விரும்புகிறோமா? நமது புவியியல் நிலை மாறாது, நாம் ரஷ்யாவை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ரஷ்யா நாளையும் அங்கேயே இருக்கும்... எனவே, ரஷ்யாவுடனான ஐரோப்பிய விவாதங்களை மீண்டும் தொடங்குவதை, அப்பாவித்தனமாக இல்லாமல், உக்ரேனியர்கள் மீது அழுத்தம் இல்லாமல், ஆனால் இந்த விவாதங்களில் மூன்றாம் தரப்பினரைச் சார்ந்து இல்லாமல் கட்டமைப்பது முக்கியம்," என்று மக்ரோன் பதிலளித்தார்.

இந்தப் பின்னணியில், கிரெம்ளினுடனான உரையாடலை மீட்டெடுக்கும் முயற்சிகளில் தனது ஐரோப்பிய சகாக்கள் பலர் தன்னுடன் இணைய வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி முன்மொழிந்தார்.

"சிலருக்கு, நாங்கள் செய்தது போல், அவர்களின் இராஜதந்திர ஆலோசகர்களை அனுப்புவது மிக விரைவில்" என்று மக்ரோன் கூறினார், ரஷ்யாவுடனான தொழில்நுட்ப அளவிலான தொடர்பு பற்றிய அறிக்கைகளை திறம்பட உறுதிப்படுத்தினார்.

கடந்த வாரம், மக்ரோனின் இராஜதந்திர ஆலோசகரான இம்மானுவேல் போன், ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாஸ்கோவிற்குச் சென்றிருந்தார் என்பது தெரியவந்தது. அந்த நேரத்தில், பிரெஞ்சு ஜனாதிபதி பதவி இந்த வருகையை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பாவின் நிலைப்பாட்டை குறைந்த எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றும் மக்ரோன் வாதிட்டார். அத்தகைய உரையாடல் அவசியம் என்றும்; இல்லையெனில், ஐரோப்பிய நலன்கள் அமெரிக்காவால் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு அமைதியும் ஐரோப்பாவை நேரடியாகப் பாதிக்கும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி கூறினார், மேலும் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான நேரம் போன்ற பிரச்சினைகளில் அமெரிக்க தூதர்கள் தங்கள் சார்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பியர்கள் அனுமதிக்கக்கூடாது என்று வாதிட்டார்.

பின்னணி:

  • டிசம்பரில், ஐரோப்பியர்கள் புடினுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மக்ரோன் கூறினார் . ரஷ்யாவின் இராணுவ அபிலாஷைகளைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கும் ஐரோப்பியத் தலைவர்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால் நடத்தப்படும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்கப்பட்டிருப்பது குறித்து விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

  • பிப்ரவரியில், புடினுடனான உரையாடலை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் தொழில்நுட்ப மட்டத்தில் நடந்து வருவதாகவும், அத்தகைய தொடர்புகள் உக்ரைனுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும் மக்ரோன் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

  • உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தலையிடாத பட்சத்தில், அந்த யோசனையை தான் ஆதரிப்பதாக ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் கூறினார்.

https://www.pravda.com.ua/eng/news/2026/02/10/8020328/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரஸ்சிய உக்கிரேன் யுத்தத்தில் உக்கிரேனுக்கு இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் ஏற்பட்ட தோல்விக்கு; உக்கிரேனிய அதிபர் செலன்ஸ்கி மட்டும் காரணம் அல்ல, அதற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களினதும் தொலை நோக்கற்ற பார்வையே காரணம்.

உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றத்தினை சரியாக கணிக்காவிட்டால் இவ்வாறான இக்கட்டான நிலையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படலாம், அதனாலேயே சிலர் யாழ்களத்தில் முன்னர் இரஸ்ஸிய உக்கிரேன் யுத்த பின்னணியில் அமெரிக்க நிலைத்தன்மை பற்றி பேசியதனை இப்போது உணரமுடிகிறது.

தற்போதும் உலக மாற்றத்தினை புரியாமல் fake it until make it எனும் நிலைப்பாடு கொண்டதாக (கற்பனை உலகில் வாழும்) ஒரு உலக நகர்வு உள்ளது.

இவ்வாறான பிடிவாத போக்கு ஒரு அரசியல் ரீதியான தோல்வியினை ஏற்படுத்திவிடும், அது மீழ் முடியாத பின்னடைவினை ஏற்படுத்தி விடுகிறது.

உக்கிரேன் மட்டுமல்ல ஐரோப்பாவும் ஏன் இரஸ்சியாவும் இதனை புரிந்து கொண்டு செயற்பட வேண்டிய நிலை உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, vasee said:

விவரங்கள் : உக்ரைனில் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதால், ரஷ்யாவுடன் நேரடித் தொடர்பை மீண்டும் தொடங்குவதற்கான தனது நோக்கம், உக்ரைனில் போரின் ஒரு புதிய கட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று மக்ரோன் விளக்கினார்.

ஐரோப்பியர்கள் ரஷ்யாவுடனான உரையாடலுக்கு அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்று அவர் நம்புகிறார், ஏனெனில் அவர்களின் கண்டத்தின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.

"எனது காரணம் மிகவும் எளிமையானது: இந்தப் பிரச்சினை பற்றிய விவாதத்தை மற்றவர்களிடம் ஒப்படைக்க விரும்புகிறோமா? நமது புவியியல் நிலை மாறாது, நாம் ரஷ்யாவை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ரஷ்யா நாளையும் அங்கேயே இருக்கும்... எனவே, ரஷ்யாவுடனான ஐரோப்பிய விவாதங்களை மீண்டும் தொடங்குவதை, அப்பாவித்தனமாக இல்லாமல், உக்ரேனியர்கள் மீது அழுத்தம் இல்லாமல், ஆனால் இந்த விவாதங்களில் மூன்றாம் தரப்பினரைச் சார்ந்து இல்லாமல் கட்டமைப்பது முக்கியம்," என்று மக்ரோன் பதிலளித்தார்.

இந்தப் பின்னணியில், கிரெம்ளினுடனான உரையாடலை மீட்டெடுக்கும் முயற்சிகளில் தனது ஐரோப்பிய சகாக்கள் பலர் தன்னுடன் இணைய வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி முன்மொழிந்தார்.

நான் இதே கருத்தை உக்ரேன்,ரஷ்யா சம்பந்தப்பட்ட திரிகளில் உறுதிபட எழுதியுள்ளேன்.ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ரஷ்யாவின் முக்கியத்துவம் பற்றியும் எழுதியுள்ளேன்.

ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கான எரிசக்தி கிட்டங்கி.அதை வெறுத்து ஒதுக்கினால் மல்லாந்து படுத்து காறிதுப்புவதற்கு சமன்.

ஐரோப்பிய ஒன்றியம் என்பதை அமெரிக்கா எதிரியாகவே என்றும் பார்க்கும். இதை இன்று கண்கூடாகவே பார்க்கின்றோம்.

3 hours ago, vasee said:

ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புடினுடன் நேரடி உரையாடலை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் இணைய பல ஐரோப்பியத் தலைவர்களை அணுகியுள்ளதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.

இந்த மனப்பான்மைக்காகவே நான் பிரான்ஸ் நாட்டை அன்று தொடக்கம் அதிகம் நேசிக்கின்றவன்.

அழிவுகள் இல்லாத நேரடி பேச்சுவார்த்தைகள். நல்லது கெட்டது எவர் பக்கம் இருந்தாலும் போர் தேவையற்றது. இன்றைய மக்ரோன் கொள்கையைத்தான் இரண்டாம் உலகப்போரில் அன்றைய பிரான்ஸ் நாட்டு தலைவர்களும் கடைப்பிடித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் சுடலை ஞானம் தான் பிறக்கிறது.

ருசியா, உக்கிரனுகு தொங்க முதல் பல வருடங்கள் சொல்லி அந்தத்தை தூக்கி எறிந்து,

;,,, இப்போது ஒரு நிலைமை இருமாகி இருக்கிறது.

அதன் படியே போகவேண்டியது தானே.

இது கூட, அமெரிக்கா, இரோப்பா அதன் பாதுஜாப் பார்த்துகொள்ள வேண்டும்என்ப\என்பதில் ருவாகிய இரானுப்பலத்தை கட்டி எழுப்புவாதத்திற்கு வேண்டிய கால அவகாசத்துக்கு.

மேட்ற்கு காலனித்துவ காகாலதிலிறுந்து போட ஒப்பந்தத்தை கிழிப்பதில் தான் வரலாறு.

அதில் மட்டுப்பட்டது ருசிஷ்ய, சீன, இரான், வடகொரியாவிடம்.

இவர்கள் கொடுக்கும் கடுக்காயில் வாந்திபேதி பெயர்த்து, தஞ்சம் கெடும் நிலையில், பழகிப்பார்ப்போம் என்ரா சாலமன் பாப்பையா ரஜனியின் ஒரு படத்தில்சொல்வது போல.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே டிரம்ப் எப்ஸ்டீன் கோப்புகளில் பல்லாயிரக்கணக்கான தடவைகள் பெயர் குறிப்பிடபடவில்லை என்பது போலவும்….

டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வாகவில்லை என்பது போலவும்…

பலர் எழுதுவது நகைப்புக்கிடமானது.

  1. இங்கே முழுக்க முழுக்க தோல்வி அடைந்துள்ளது அல்லது தோல்வி அடைய வைக்கப்பட்டுள்ளது, அமெரிக்காவின் நலன் மட்டுமே.

  2. ஈயூ வெற்றி தோல்வி இல்லாத டிரா நிலையில் இருக்கிறது. அமெரிக்கா விலகியதும், ஈயூ+யூகே நடுநடுங்கி விடும் என்ற புட்டின் எதிர் பார்ப்பை, உக்ரேனிலும், கிரீன்லாந்திலும் ஈயு தவிடுபொடியாக்கி உள்ளது. உக்ரேனின் 1/3 பகுதி நீங்கலாக மீதம் ஈயூவில் இணையும் எனில் - குறிப்பாக கருவாகி கொண்டிருக்கும் ஈயூ ஆர்மியில் உக்ரேன் இணையும் எனில் - அது ஈயூவின் நீண்டகால வெற்றியாக அமையும். கூடவே சீனாவோடு ஈயூ நெருங்குவதும், ரஸ்யாவுக்கு ஆப்பாகவே முடியும். அமேரிக்கா இல்லாமல் கூட ரஸ்யாவை விரட்ட, ஈயு அரசியல், இராணுவ, பொருளாதார முறைகளில் தயாராகி விட்டது. இது நல்ல விடயமே. மேலும் ஜேர்மனி இராணுவ மயபடும் போது, பிரான்ஸ்சின், யூகே யின் அணு ஆயுத வல்லமையோடு சேர்த்தால் - ரஸ்யா வாலட்ட முடியாதபடி செய்ய கூடிய இடத்துக்கு (அமெரிக்கா இல்லாமலே) ஐரோப்பா வந்து விட்டது.

  3. ரஸ்யாவுக்கு உக்ரேன் இராணுவ ரீதியில் 4 வருட 1 மாத மூக்குடைவு. அதில் எந்த மாற்றமும் இல்லை.

    அரசியல், ராஜதந்திர ரீதியில் கூட மாற்றம் ஏதுமில்லை.

  4. ஆனால் உளவு ரீதியில் டிரம்பின் தேர்வு பாரிய வெற்றி.

  5. இதில் முழு வெற்றி எண்டால் அது உக்ரேனுக்கே. செலென்ஸ்கி மட்டும் இல்லை என்றால். இப்போ உக்ரேன் என்று ஒரு நாடு உலக வரைபடத்தில் இருந்து நீங்கி 4 வருடம் ஆகி இருக்கும். செலென்ஸ்கி ஒரு உக்ரேனிய கிராமத்தை தக்க வைத்திருந்தாலே அது வெற்றிதான்.

    ரஸ்ய இராணுவத்தின் மூக்கை உடைத்ததில் இராணுவ வெற்றியும்.

    அத்தனை வல்லரசுகளை டீல் பண்ணும் விதத்தில் இராஜதந்திர வெற்றியும். தன் மக்களை கட்டுகோப்பாக வைத்திருப்பதில் அரசியல் வெற்றியும் அடைந்துள்ளவர் செலன்ஸ்கி மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2026 at 22:59, குமாரசாமி said:

இன்றைய மக்ரோன் கொள்கையைத்தான் இரண்டாம் உலகப்போரில் அன்றைய பிரான்ஸ் நாட்டு தலைவர்களும் கடைப்பிடித்தார்கள்.

புதிய வரலாறு படைப்போம்…

முடியாவிட்டால் இருக்கும் வரலாற்றை புதிதாக புனைவோம்😂

  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2026 at 17:06, goshan_che said:

மேலும் ஜேர்மனி இராணுவ மயபடும் போது,

https://x.com/visegrad24/status/2022311893281440038?s=46

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனுக்கு எரிவலு உதவியை செய்ய ஒத்து கொண்ட சீனா!

உக்ரேன், சீனா வெளிநாட்டமைச்சர்கள் முனிச் மாநாட்டில் பேச்சுவார்த்தை.

# நீ கொஞ்சம் அங்க பாரு கண்ணா

# கோமாளி #ராஜதந்திரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, goshan_che said:

ஜேர்மனியில் அடுத்து வரும் தேர்தல்களில்Afd கட்சி அமோக வெற்றி பெறும். அப்போது அதற்கான காரணத்தை போர் விரும்பும் கட்சிகள் உணரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் அடுத்து வரும் தேர்தல்களில்Afd கட்சி அமோக வெற்றி பெறும். அப்போது அதற்கான காரணத்தை போர் விரும்பும் கட்சிகள் உணரும்.

தனித்து. ஆட்சி. அமைக்குமா. ?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் அடுத்து வரும் தேர்தல்களில்Afd கட்சி அமோக வெற்றி பெறும். அப்போது அதற்கான காரணத்தை போர் விரும்பும் கட்சிகள் உணரும்.

  1. ஆயுத மயமாக்கல் ஜேர்மனி விரும்பாத ஆனால் அதன் மீது திணிக்கப்படும் ஒன்று. நீங்கள் விரும்பியது போலவே அமெரிக்கா ஐரோப்பாவை விட்டு விலகி விட்டது. ஆனாலும் ஐரோப்பா-ரஸ்யா முரண் தீரவில்லை. காரணம் - இந்த முரணின் அடிப்படை நான் முன்பே சொன்னது போல் அமெரிக்கா அல்ல,மாறாக ரஸ்யாவின் நில-வெறி. நேற்று மேர்ஸ் சொன்னதை கேட்டிருப்பீர்கள், 1991 இன் பின்னான ஒற்றை தலைமை நிலையும், 2ம் உலக யுத்ததின் பின்னான உலக ஒழுங்கும் இப்போ இல்லை. இந்த நிலையில் வளமிகு நாடான ஜேர்மனி ஆயுத படைகள் இல்லாமல் இருந்தால் சூறையாடப்படும்.

  2. AfD யின் எழுச்சியும் ஜேர்மனியின் ஆயுத மயமாக்கலும் ஒரு சேர நிகழ்வது ஆபத்தானது என்பதில் எனக்கும் வேறு கருத்தில்லை. நான் “புட்டினும் புதுமாத்தளனும்” எழுதிய போது இப்படி ஒரு நிலை வராது எள்ளி நகையாடியவர்களை இப்போ யதார்த்தம் முகத்தில் அறைக்கிறது என நினைக்கிறேன்.

  3. அமெரிக்கா தலைமையிலான ஒற்றை உலக ஒழுங்கு உடைந்தால் அதன் பலாபலன்களில் ஒன்று ஆயுத மயப்பட்ட ஜேர்மனி AfD கைக்கு போவதாக இருக்கலாம் என நான் பலதடவை எச்சரித்தேன். ஆனால் என்னை அமெரிக்காவின் அடிவருடி என முத்திரை குத்துவதிலேயே பலரின் கவனம் இருந்தது.

  4. “Be careful what you wish for, you just might get it".

    நீங்கள் வேண்டுவது எது என்பதில் மிக கவனமாக இருங்கள், வேண்டுதல்கள் பலித்து விடக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kandiah57 said:

தனித்து. ஆட்சி. அமைக்குமா. ?

ரஷ்ய செம்பான AFD ஆட்சியை கைபற்றுவது சீமான் வார்த்தையில் சொல்வதானால் வாய்பில்லை ராசா

மற்ற ஜனநாய கட்சிகளும் அதனுடன் கூட்டு சேராது உங்கள் தேர்தல் முறையும் அந்த கட்சி ஆட்சிக்கு வர முடியாமல் செய்யும் நல்ல விடயம்

அந்த கட்சியின் சக்கிவாய்ந்த தலைவி Alice Weidel இப்போ கொஞ்சம் நல்ல மாதிரி சிந்திக்கின்றாவாம் ரஷ்யாவுக்கு விசிட் பண்ண விரும்பிய தனது கட்சி செம்புகளை விமர்சித்துள்ளார் ரஷ்யாவின் எஸ்தோனியா போலந்திற்க்கு எதிரான வான்வெளி மீறல்களை கண்டித்துள்ளார். ரஷ்யா ஒரு ஆக்கிமிப்பு வெறி கொண்ட நாடு தானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 14/2/2026 at 09:49, goshan_che said:

நான் முன்பே சொன்னது போல் அமெரிக்கா அல்ல,மாறாக ரஸ்யாவின் நில-வெறி.

என்னது ரஷ்யாவிற்கு நிலவெறியா?

ஓ மை காட்.....😧

அப்படியானால் சூரிய அஷ்தமனம் இல்லாத உங்கள் பட்டத்து ரோயல் இராச்சியத்தின் நடவடிக்கைகளை என்ன என்பீர்கள்?

பிரான்ஸ் எனும் நாட்டில் கூட ஆபிரிக்கா இல்லையென்றால் வீட்டில் விளக்கு எரியாது என்று கூட சொல்கிறார்கள்.பிரான்ஸ் நாட்டின் ஆபிரிக்க சூறையாடல்களை பொது வெளியில் விவாதிக்க தொடங்கி விட்டார்கள். நிலமை கவலைக்கிடம் போல் உள்ளது.
அதை விட உங்களிடம் ஒரு கேள்வி?

மேலைத்தேயத்திற்கு படையெடுத்து வருபவர்கள்....இங்கே வந்து செயற்படும் செயல்களை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா?

உதாரணத்திற்கு...

பாலியல் வன்முறைகள்...

கத்தி குத்துகள்...

பொது மக்கள் கூடும் இடங்களில் வாகனங்களை ஏற்றி கொலைகள் செய்தல்..

வேலைகளுக்கு செல்லாமல் அரச பணத்தில் வாழுதல்...

இன்னும் பல...

On 14/2/2026 at 09:49, goshan_che said:

“Be careful what you wish for, you just might get it".

நீங்கள் வேண்டுவது எது என்பதில் மிக கவனமாக இருங்கள், வேண்டுதல்கள் பலித்து விடக்கூடும்.

உலகில் இருக்கும் ஒவ்வொரு இன மக்களும் தம் தேசியத்துடனும் சுய மரியாதையுடனும் தாம் பிறந்த மண்ணில் யாருக்கும் பங்கமில்லாமல் வாழ வேண்டும்.

இது தான் என் ஆசை.

நாம் எமது மண்ணுக்காக எப்படி போராடுகின்றோமோ..... அதே போல் அவர்களும்....

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

என்னது ரஷ்யாவிற்கு நிலவெறியா?

ஓ மை காட்.....😧

அப்படியானால் சூரிய அஷ்தமனம் இல்லாத உங்கள் பட்டத்து ரோயல் இராச்சியத்தின் நடவடிக்கைகளை என்ன என்பீர்கள்?

பிரான்ஸ் எனும் நாட்டில் கூட ஆபிரிக்கா இல்லையென்றால் வீட்டில் விளக்கு எரியாது என்று கூட சொல்கிறார்கள்.பிரான்ஸ் நாட்டின் ஆபிரிக்க சூறையாடல்களை பொது வெளியில் விவாதிக்க தொடங்கி விட்டார்கள். நிலமை கவலைக்கிடம் போல் உள்ளது

இங்கே பலருக்கு இருக்கும் பிரச்சனைதான் இது….

ரஸ்யாவை பற்றிய உண்மையை எழுதினால்…உடனே அதற்கு எதிரணியில் உள்ள நாட்டின் பிழையை சுட்டி காட்டுவது.

நான் இங்கே பிரித்தானியா திறம், பிரான்ஸ் திறம், அவர்களுக்கு நிலவெறி இல்லை, சுரண்டல் செய்வதில்லை என எங்கே எழுதினேன்?

ஜேர்மனி கூட உலக மகா சுரண்டல் நாடுதான்.

ஆனால் தற்போது ஐரோப்பாவில் ஏனைய நாடுகளின் நிலம் மீது கடைகண், அரைக்கண், முழு கண்ணெல்லாம் வைப்பது ரஸ்யா மட்டுமே.

இந்த திரியில் நாம் வரலாற்றை ஆராயவில்லை. நடப்பு உலக அரசியலை கதைக்கிறோம்.

9 hours ago, குமாரசாமி said:

மேலைத்தேயத்திற்கு படையெடுத்து வருபவர்கள்....இங்கே வந்து செயற்படும் செயல்களை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா?

அறவே இல்லை. இதில் ஈழதமிழரும் அடக்கம்.

9 hours ago, குமாரசாமி said:

உலகில் இருக்கும் ஒவ்வொரு இன மக்களும் தம் தேசியத்துடனும் சுய மரியாதையுடனும் தாம் பிறந்த மண்ணில் யாருக்கும் பங்கமில்லாமல் வாழ வேண்டும்.

இது தான் என் ஆசை.

நாம் எமது மண்ணுக்காக எப்படி போராடுகின்றோமோ..... அதே போல் அவர்களும்....

இதைத்தான் உக்ரேன் மொழி/இனவழி தேசிய இனத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது, உக்ரேன் பக்கம் சாய நானும், இன்னும் பல தமிழ் தேசிய ஆதரவாளரும் காரணமாக கொண்டோம்.

ரஸ்யாவை ஆதரித்த எவருக்கும் இந்த நிலைப்பாட்டை எடுக்கும் தார்மீக உரிமை இனி இல்லை எனபது என் தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, goshan_che said:

இங்கே பலருக்கு இருக்கும் பிரச்சனைதான் இது….

ரஸ்யாவை பற்றிய உண்மையை எழுதினால்…உடனே அதற்கு எதிரணியில் உள்ள நாட்டின் பிழையை சுட்டி காட்டுவது.

நான் இங்கே பிரித்தானியா திறம், பிரான்ஸ் திறம், அவர்களுக்கு நிலவெறி இல்லை, சுரண்டல் செய்வதில்லை என எங்கே எழுதினேன்?

ஜேர்மனி கூட உலக மகா சுரண்டல் நாடுதான்.

ஆனால் தற்போது ஐரோப்பாவில் ஏனைய நாடுகளின் நிலம் மீது கடைகண், அரைக்கண், முழு கண்ணெல்லாம் வைப்பது ரஸ்யா மட்டுமே.

இந்த திரியில் நாம் வரலாற்றை ஆராயவில்லை. நடப்பு உலக அரசியலை கதைக்கிறோம்.

உங்களுக்கு யார்,எவர், எந்த அரசியல்வாதி நேர்மையானவராக தெரிகின்றார்? எந்த நாட்டின் நிலவரங்கள் சரியாக தெரிகின்றது? 😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உங்களுக்கு யார்,எவர், எந்த அரசியல்வாதி நேர்மையானவராக தெரிகின்றார்? எந்த நாட்டின் நிலவரங்கள் சரியாக தெரிகின்றது? 😄

கண்ணாடி பாக்கிறியள் போல😂

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் மீதான் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்புப் போரினை முடிவிற்குக் கொண்டுவருவதற்கான பேச்சுக்களில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. ஆனால் இப்பேச்சுக்கள் தோல்வியடையும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகள் புட்டினுடன் நேரடியாக பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டி நேரலாம் என்றே மக்ரோன் கூறியிருக்கிறார்.

மக்ரோன் இப்படிக் கூறுவதன் காரணம் ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்புப் போர் நியாயமானது என்பதற்காகவோ அல்லது அது போரில் வெற்றிபெற்று வருகிறது என்பதற்காகவோ அல்ல. மாறாக நீண்டு செல்லும் இந்த ஆக்கிரமிப்புப் போரினால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவுகள், உக்ரேனின் தற்காப்பு யுத்தத்திற்காக தொடர்ச்சியாக ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்டுவரும் ஆயுத உதவிகளால் இந்நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார அழுத்தம், முடிவின்றித் தொடரும் ஆக்கிரமிப்புப் போர் இன்னும் எத்தனை வருடங்களுக்கு நீளப்போகிறது எனும் கரிசணை, ஐரோப்பாவின் எல்லைகளை இப்போர் அண்மிக்கும் தறுவாயில் அந்நாடுகளின் பாதுகாப்பிற்கான அச்சுருத்தல், ஐரோப்பாவினுள்ளும் இப்போர் விரிவடையும் பட்சத்தில் ஏற்படப்போகும் சிக்கல்கள், அசெளகரியமான சந்தர்ப்பத்தில் தவிர்க்கமுடியாதவாறு நேட்டோவும் இப்போரினுள் இழுத்துவிழப்படலாம் எனும் அச்சம், அணுவாயுதப் பாவனை நோக்கித் தள்ளப்படுதல் அல்லது அதற்கான நகர்வுகளைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுதல் எனும் ஆபத்து, கிழக்கு ஐரோப்பாவில் ஏற்படக்கூடிய நீண்டகால இஸ்த்திரத்தன்மையின்மை, அதிகரித்து வரும் எரிசக்திச் செலவுகள், பணவீக்கத்தினால் ஏற்படப்போகும் அழுத்தம், விநியோகச் சங்கிலியில் ஏற்படுத்தப்போகும் தாக்கம், சரித்திரத்தில் நீண்டகாலப் போர்கள் பேச்சுக்கள் ஊடாகவே முடிவிற்கோ அல்லது பனிப்பொர் எனும் நிலைமைக்கோ கொண்டுவரப்பட்டிருக்கின்றன எனும் பாடம் ஆகிய எல்லாமுமே சேர்ந்துதான் சில ஐரோப்பிய நாடுகளை ரஸ்ஸியாவுடன் பேசி இப்போரினை முடிவிற்கோ அல்லது குளிர் நிலைக்கோ கொண்டுவரலாம் எனும் நிலைப்பாட்டினை எடுக்க வைத்துள்ளன. .

பிரான்ஸும், எஸ்ட்டோனியாவும் புட்டினுடன் பேசலாம் என்று சிந்திக்கும் அதேவேளை கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானவையும், பின்லாந்து போன்ற நாடுகளும் பேச்சுக்களை எதிர்க்கின்றன. புட்டினுடனான பேச்சுக்கள் உக்ரேனினை பலவீனப்படுத்தும் என்பதும், ஆக்கிரமிப்பிற்கான பரிசாகவே பேச்சுக்கள் பார்க்கப்பட்டுவிடும் என்பதும் இந்நாடுகளுக்கு இருக்கும் இயல்பான கரிசணை. அதனாலேயே உக்ரேனின் விருப்பின்றி பேச்சுக்கள் நடப்பதை எதிர்க்கும் இந்நாடுகள், உக்ரேனின் நலன்கள் பாதிக்கப்படாத வகையில் பேச்சுக்கள் அமைவது அவசியம் என்று கூறுகின்றன.

இவை இப்படியிருக்க, கடந்த நான்கரை ஆண்டுகளாக புட்டின் நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரில் கிரிமியா தீபகற்பம் அடங்கலாக உக்ரேன் எனும் இறையாண்மையுள்ள நாட்டின் 15 இலிருந்து 20 வீதத்தைத்தான் ரஸ்ஸியா கைப்பற்றியிருக்கிறது. ஆனால் உக்ரேனின் பிரதான நகரங்கள் இன்னமும் உக்ரேனின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதுடன், ரஸ்ஸியாவின் பெரும் எடுப்பிலான ஆக்கிரமிப்பைச் சமாளித்துக்கொண்டே ரஸ்ஸியாவின் உட்பகுதியிலும் ஊடுருவி கடுமையான சேதத்தினை உக்ரேன் ஏற்படுத்தியிருக்கிறது.

போரில் வெற்றி அடைந்திருக்கிறது என்று கூறுமளவிற்கு ரஸ்ஸியா எதனையும் சாதிக்கவில்லை. ரஸ்ஸியாவுக்குச் சார்பான பத்தியாளர்களைத் தவிர்த்து, நடுநிலையான ஆய்வாளர்களைக் கேட்டால், ரஸ்ஸியா போரில் இதுவரை வெற்றியடையவில்லை என்றே கூறுகிறார்கள். நேற்று வெளிவந்த நான்கரை வருட ஆக்கிரமிப்புப் போரில் ஏற்பட்ட ரஸ்ஸிய இழப்புக்கள் என்று பட்டியல் ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்கள். மேற்கிற்குச் சார்பானது என்று பலர் இங்கே குறைகாணலாம் என்ப‌தனால் அதனை இணைப்பதைத் தவிர்க்கிறேன்.

புட்டின் ரசிகர் மன்றம் கருதுவதுபோல் ரஸ்ஸியாவின் போர் வெற்றியினாலேயே ஐரோப்பா அதனுடன் பேச எத்தனிக்கிறது என்பது கனவு மட்டுமே.

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்களின் அழிவிற்கு காரணமானவர்கள்தான்; உக்கிரேனின் இறையாண்மைக்காக உயிரையும் கொடுக்க தயாராக உள்ளார்கள்.

உக்கிரேனைனும் தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர், அதிகார சக்திகளின் இருப்பிற்காக இரு தரப்பும் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் அழிவிற்கு காரணமாக இருந்தது ஒற்றை துருவ உலக ஒழுங்கு மாற்றம் (அமெரிக்க உலக ஏகாதிபத்தியம்).

இதன் மையக்கோட்பாடு நாடுகளுக்கிடையே அமைதியினை முன்னெடுப்பதற்கு ஏதுவானது தாராளமயமாக்கம் (லிபரலிசம்), நாடுகள் பொருளாதார ரீதியாக ஒன்றோடொன்று தங்கியிருக்கும் நிலையில் போர் சாத்தியமற்றது, இந்த தாராள மயமாக்கலின் பண்பாக ஜன்நாயகம், ஊடக சுதந்திரம், அதிகார பரவலான நிலை (சர்வாதிகாரமற்ற) காணப்படல் வேண்டும், அதன் மூலம் போரினை தவிர்க்கலாம்.

நேட்டோ விரிவாக்கம் கூட அதன் ஒரு பங்காக அவர்கள் கூறுகிறார்கள், நாடுகளுக்கெதிராக நேரடியான போரிற்கு பதிலாக மெதுவான அழுத்தம் (Soft power)என கூறும் பொருளாதார தடையினை அமைதிக்கு குந்தகமான நாடுகளிற்கெதிராக பயன்படுத்தப்பட்டது, அதே நேரம் உள்நாட்டு பிரச்சினைக்கு உலக அமைதியினை கருத்திற்கொண்டு பாதிக்கப்படும் நாடுகளுக்கு தேவையான வன் அழுத்த உதவிகள் வழங்கப்பட்டது (இலங்கை உட்பட).

இரஸ்சிய உக்கிரேன் போர் என்பது ஒரு பல்துருவ உலக ஒழுஙில் ஏற்படும் ஒரு பிரச்சினை, ஆரம்பத்தில் உக்கிரேன் இரஸ்சிய போர் ஆரம்பத்தில் யாழ் களத்தில் சிலர் இந்த வேறுபாட்டினை கூறியிருந்தார்கள்.

ஒட்டோ பிஸ்மார்க் (இவர்தான் முதலாவது ஜேர்மன் அதிபர்) சுதந்திர போலந்து தமது இருப்பிற்கு ஆபத்து அதனால் அவர்களை மண்ணோடு மண்ணாக்கவேண்டும் என கூறினார் என கூறப்படுகிறது.

அதிகார சக்திகளுக்கிடையே மாட்டிக்கொள்ளும் அப்பாவி நாடுகளதும் மனிதர்களதும் நிலை இதுதான்.

இந்த பல்துருவ உலக ஒழுங்கு என்பது 18, 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய நிகழ்வுகள் போல காணப்படுகின்றது.

பல்துருவ உலக ஒழுங்கு ஒரு அமைதியற்ற பல போர்களுக்கு வழி வகுக்கும், காலமாற்ற புரிதல் இல்லாவிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள முடியாமல் போய்விடும்.

தற்போது நிகழும் இந்த போரில் அமெரிக்கா ஒதுங்கிவிட்டது, ஐரோப்பாவிற்கும் இரஸ்சியாவிற்குமிடையே நிகழும் இந்த போர் சில காலத்திற்கு நீண்டு செல்ல வாய்ப்புள்ளது.

இராணுவ அழுத்தத்துடன் பொருளாதார அழுத்தத்தினை தொடர்ந்து இரஸ்சியாவின் மீது பிரயோகித்தால் இரஸ்சியா முறிவடையும் என நம்புகிறார்கள்.

இரஸ்சியாவுடன் பேச வேண்டும் என ஐரோப்பிய தலைவர்கள் கூறுவது பிளான் " பி", ஆனால் போர்தான் முதலாவது தெரிவாக உள்ளது.

செய்திகளினடிப்படையில் உலக நகர்வுகளை பார்த்தால் அது ஒரு தவறான பக்கத்தினை காட்டிவிடும் என கருதுகிறேன், கதைகள் செய்திகளாக்கப்படும் யுகத்தில் வாழ்கிறோம்.

லிபரலிசத்தினை யதார்த்தவாதிகள் அமைதிக்கும் போருக்கும் காரணமானவர்கள் என கூறுகிறார்கள், யதார்த்தவாதிகளின் கூற்றுக்கு சரியான உதாரணம் உக்கிரேன் இரஸ்சிய யுத்தம்.

Edited by vasee

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்ல் வான் கிளாஸ்விட்ஸ்: 'போர் என்பது பிற வழிகளில் அரசியலின் தொடர்ச்சி.'

செனிகா

பிப்ரவரி 17

எழுதியவர்

போர் என்பது வேறு வழிகளில் அரசியலின் தொடர்ச்சி.

புகழ்பெற்ற பிரஷ்ய ஜெனரலும் இராணுவக் கோட்பாட்டாளருமான கார்ல் வான் கிளாஸ்விட்ஸ், "போர் என்பது பிற வழிகளில் அரசியலின் தொடர்ச்சி" என்று ஒருமுறை பிரபலமாகக் கூறினார். இந்த சக்திவாய்ந்த மேற்கோள், போர் என்பது அரசியலிலிருந்து ஒரு தனி நிறுவனம் அல்ல, மாறாக அதன் நீட்டிப்பு என்ற கருத்தை உள்ளடக்கியது, இது இராஜதந்திர மற்றும் அமைதியான நடவடிக்கைகள் விரும்பிய விளைவுகளை அடையத் தவறும் போது பயன்படுத்தப்படுகிறது. நேரடியான விளக்கத்தில், கிளாஸ்விட்ஸ் போர் மற்றும் அரசியலின் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை வலியுறுத்துகிறார், இரண்டு பகுதிகளுக்கும் இடையிலான உள்ளார்ந்த உறவை எடுத்துக்காட்டுகிறார். போர், அதன் அழிவுகரமான தன்மை இருந்தபோதிலும், இறுதியில் நாடுகள் தங்கள் அரசியல் நோக்கங்களைத் தொடர பயன்படுத்தும் ஒரு கருவி என்ற கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதால் இந்தக் கருத்து குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. இருப்பினும், இந்த மேற்கோளை ஆழமாக ஆராய்வது, மோதலின் தன்மை குறித்து புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்தும் எதிர்பாராத தத்துவக் கருத்துகளின் ஒரு பகுதியைத் திறக்கிறது. வரலாறு முழுவதும் தத்துவஞானிகளால் ஆராயப்பட்ட மனித இயல்பின் இரட்டைத்தன்மை பற்றிய கருத்து அத்தகைய ஒரு கருத்தாகும். இந்த சூழலில், போரை அரசியலின் தொடர்ச்சியாக மட்டுமல்லாமல், மனிதர்களுக்குள் உள்ள முரண்பட்ட தூண்டுதல்களின் வெளிப்பாடாகவும் காணலாம். அதிகாரம், ஆதிக்கம் மற்றும் கட்டுப்பாடு, இரக்கம், பச்சாதாபம் மற்றும் ஒத்துழைப்புக்கான திறன் ஆகிய அனைத்தும் போருக்கு வழிவகுக்கும் முடிவுகளை வடிவமைப்பதில் ஒரு பங்கை வகிக்கின்றன. மனித இயல்பின் கண்ணாடி மூலம் போரை பார்ப்பதன் மூலம், நமது நடத்தையில் உள்ளார்ந்த சிக்கல்கள் மற்றும் முரண்பாடுகளை, தனித்தனியாகவும் கூட்டாகவும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மனித இயல்பின் இரட்டைத்தன்மை பற்றிய தத்துவக் கருத்துடன் கிளாஸ்விட்ஸின் மேற்கோளை ஒப்பிட்டு வேறுபடுத்துவது போரின் தன்மை பற்றிய ஒரு அடுக்கு புரிதலை வெளிப்படுத்துகிறது. கிளாஸ்விட்ச் மோதலின் மூலோபாய மற்றும் அரசியல் பரிமாணங்களில் கவனம் செலுத்துகையில், தத்துவக் கண்ணோட்டம் விவாதத்திற்கு மிகவும் நுணுக்கமான மற்றும் உள்நோக்கக் கூறுகளைச் சேர்க்கிறது. மோதல்களைத் தூண்டுவதில் மனித இயல்பின் பங்கை ஒப்புக்கொள்வதன் மூலம், போர் என்பது அரசியலின் ஒரு கருவி மட்டுமல்ல, தனிநபர்களாகவும் சமூகங்களாகவும் நமது ஆழ்ந்த ஆசைகள் மற்றும் அச்சங்களின் பிரதிபலிப்பாகும் என்பதை நாம் அங்கீகரிக்கிறோம். இந்த சுருக்கமான பார்வை, போரின் தார்மீக, நெறிமுறை மற்றும் இருத்தலியல் தாக்கங்களைக் கருத்தில் கொள்ள நம்மை அழைக்கிறது, போர்க்களத்திலும் அரசியல் அரங்கிலும் நமது செயல்களுக்கு அடித்தளமாக இருக்கும் அடிப்படை நோக்கங்கள் மற்றும் மதிப்புகளை கேள்விக்குள்ளாக்குகிறது. முடிவில், கார்ல் வான் கிளாஸ்விட்ஸின் மேற்கோள், "போர் என்பது பிற வழிகளில் அரசியலின் தொடர்ச்சி", போருக்கும் அரசியலுக்கும் இடையிலான பிரிக்க முடியாத தொடர்பை ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக செயல்படுகிறது. இருப்பினும், மனித இயல்பின் இரட்டைத்தன்மையின் லென்ஸ் மூலம் பார்க்கும்போது, இந்த மேற்கோள் ஆழமான முக்கியத்துவத்தைப் பெறுகிறது, மோதல் பற்றிய நமது புரிதலை வடிவமைக்கும் சிக்கல்கள் மற்றும் முரண்பாடுகளை எதிர்கொள்ள நம்மை சவால் செய்கிறது. போரின் தத்துவ அடித்தளங்களை ஆராய்வதன் மூலம், தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் உலகம் முழுவதும் போரின் ஆழமான தாக்கத்தைப் பற்றி சிந்திக்க உதவும் ஒரு வளமான மற்றும் நுணுக்கமான முன்னோக்கைப் பெறுகிறோம். கிளாஸ்விட்ஸின் வார்த்தைகள் இன்றும் நம்முடன் எதிரொலிக்கின்றன,போர் மற்றும் மனித இயல்பின் நீடித்த உண்மைகளையும் நீடித்த மர்மங்களையும் இடைநிறுத்தி சிந்திக்கத் தூண்டுகிறது.

The Socratic Method

Karl Von Clausewitz: 'War is the continuation of politics...

War is the continuation of politics by other means. Karl Von Clausewitz, a renowned Prussian general and military theorist, once famously stated, "War is the continuation of politics by other means
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்விசார் சமூக அளவில் அதிகளவில் சர்ச்சைக்குள்ளான கன்ஸின் மனித இயல்பு யதார்த்த கொள்கை இரஸ்சிய உக்கிரேன் போரில் பெரிதும் பயன்படுத்தப்படுவதற்கு காரணம் அது இலகுவாக பாமரர்களிடையே கருத்துருவாக்கம் ஏற்படுத்த உதவுவதாக இருப்பதே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

இலங்கையில் தமிழர்களின் அழிவிற்கு காரணமானவர்கள்தான்; உக்கிரேனின் இறையாண்மைக்காக உயிரையும் கொடுக்க தயாராக உள்ளார்கள்.

2006–2009 காலகட்டத்தில், குறிப்பாக இறுதி கட்டத்தில் நடைபெற்ற Sri Lankan Civil War ன் போது, அமெரிக்காவைவிட ரஷ்யா இலங்கை அரசுக்கு நேரடி இராணுவ உதவியை அதிகமாக வழங்கியது. ஆனால் முழுப் படம் சற்று விரிவானது.

🇷🇺 ரஷ்யா

  • விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்ட இராணுவ உபகரணங்களை வழங்கியது.

  • United Nations இல் இலங்கைக்கு தூதரக ஆதரவு வழங்கியது, குறிப்பாக இலங்கை மீது மேற்கத்திய நாடுகள் முன்வைத்த தீர்மானங்களுக்கு எதிராக நிலைப்பாடு கொண்டது.

  • சீனாவுடன் சேர்ந்து, இந்தப் போர் ஒரு உள்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரித்தது.

🇺🇸 அமெரிக்கா

  • Liberation Tigers of Tamil Eelam (LTTE) அமைப்பை 1997 முதல் பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தது.

  • ஆரம்ப ஆண்டுகளில் சில பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பும் நுண்ணறிவு ஆதரவும் வழங்கியது.

  • ஆனால் போரின் இறுதி கட்டத்தில், பொதுமக்கள் உயிரிழப்புகள் குறித்து பொதுவாக விமர்சித்தும், தற்காலிக சமாதானம் மற்றும் விசாரணைகளை வலியுறுத்தியும் இருந்தது.

மொத்த மதிப்பீடு

2008–2009 இறுதி இராணுவ நடவடிக்கைகளின் போது நேரடி இராணுவ உதவி என்ற கோணத்தில் பார்க்கும்போது, அமெரிக்காவைவிட ரஷ்யா (மேலும் சீனாவும்) அதிக ஆதரவு வழங்கியது.

மேலும், அந்த காலகட்டத்தில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் மிகவும் தாக்கம் செலுத்தியவை.

5 hours ago, vasee said:

அதிகார சக்திகளின் இருப்பிற்காக இரு தரப்பும் பாதிக்கப்பட்டுள்ளன

2022 முதல் உக்ரைனில் ஏற்பட்டுள்ள பெரும் உயிரிழப்புகளும் அழிவுகளும் முதன்மையாக ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க எடுத்த முடிவின் விளைவாகும்.

2022 பிப்ரவரியில் Russia, Ukraine மீது முழுமையான இராணுவத் தாக்குதலை ஆரம்பித்தது. சர்வதேச சட்டத்தின் அடிப்படையில், இராணுவத் தாக்குதலைத் தொடங்கிய நாடே அதனால் ஏற்பட்ட அழிவுகளுக்கான முதன்மை பொறுப்பை ஏற்க வேண்டும். ஏவுகணைத் தாக்குதல்கள், குண்டுவீச்சுகள், நிலப்பரப்பு ஆக்கிரமிப்பு ஆகியவை பொதுமக்கள் மற்றும் இராணுவ உயிரிழப்புகளுக்கும் கட்டமைப்பு சேதங்களுக்கும் நேரடி காரணங்களாக உள்ளன.

அமெரிக்காவின் பங்கு என்ன?

United States உக்ரைனை ஆக்கிரமிக்கவில்லை.

  • இராணுவ உதவி (ஆயுதங்கள், பயிற்சி, நுண்ணறிவு தகவல்)

  • நிதி உதவி

  • ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் (sanctions)

  • தூதரக ஆதரவு

    ஆகியவற்றினை அது வழங்கியது

இந்த உதவி உக்ரைன் தன்னைத் தற்காத்துக்கொள்ள உதவுகிறது என்று ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
மறுபுறம், நேட்டோ விரிவாக்கமும் அமெரிக்காவின் புவியியல்-அரசியல் நடவடிக்கைகளும் பதற்றத்தை அதிகரித்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனால் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது:

  • புவியியல்-அரசியல் பதற்றங்கள் சூழலை உருவாக்கியிருக்கலாம்.

  • ஆனால் போர் தொடங்கும் இறுதி முடிவு ரஷ்யா தலைமையால் எடுக்கப்பட்டது.

நேட்டோ விரிவாக்கம் ரஷ்யாவின் பாதுகாப்பு கவலைகளை தூண்டியதாக யாராவது நினைத்தாலும், அதனால் தாக்குதலைத் தொடங்கிய நாட்டின் பொறுப்பு வேறு நாட்டிற்கு மாற்றப்படாது.

“அமெரிக்காவின் ஆதிக்கத்திற்காக உக்ரைன் விலை செலுத்துகிறதா?”

உக்ரைன் ஒரு மிகப் பெரிய விலையைச் செலுத்துகிறது, காரணங்கள்:

  • அது ஒரு சுயாட்சியுடைய நாடாக இருந்தாலும், பெரிய சக்திகளுக்கிடையில் சிக்கியிருப்பது

  • ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் முக்கியமான நிலைப்பகுதியாக இருப்பது

  • வரலாற்று தொடர்புகள் ரஷ்யாவுடன் இருந்தாலும், அரசியல் ரீதியாக ஐரோப்பாவை நோக்கிச் சென்றது

ஆனால் உடனடி மற்றும் நேரடி அழிவுகளுக்கான காரணம் ரஷ்யா தொடங்கிய போரே — அமெரிக்காவின் “ஆதிக்கம்” அல்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.