Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

Vishnupriya RUpdated: Friday, February 27, 2026, 17:14 [IST]

Vijay- Sangeetha Divorce

சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read

விஜய்யுடன் டான்ஸ்.. என் பொண்ணு குழந்தைன்னு கூட பார்க்காமல் இப்படி பேசுறாங்க! பாடகர் வேல்முருகன் வேதனை

இதுகுறித்து சங்கீதா தனது மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது திருமண வாழ்க்கை தொடக்க காலத்தில் மகிழ்ச்சியாகவே கடந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது கணவர் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தேன்.

பின்னர் கடந்த 2021 செப்டம்பர் டூ 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி கால கட்டத்தில் வழக்கறிஞர் மூலம் விஜய்யிடம் பேசினேன். அப்போது அந்த நடிகையுடனான தொடர்பை துண்டிப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் என்னை ஒதுக்கி வைத்துவிட்டு நடிகையுடன் தொடர்பை தொடர்ந்தார். இது எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு மீறிய இந்த உறவை நான் தட்டிக் கேட்டதால் பொருளாதார ரீதியாக எனக்கு நிறைய கட்டுப்பாடுகளை விஜய் விதித்தார்.

Recommended For You

விஜய்யை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? ஜூலியை கடுமையாக விமர்சித்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்

குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும், அவர்களின் மனமும் பாதிக்கப்படும் என்பதால் விவாகரத்து கோருவதை தள்ளி வைத்தேன். அந்த நடிகையுடன் பல்வேறு பொது இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விஜய் சென்று வருகிறார். அந்த நடிகையுடன் என் கணவருடன் எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார்.

அந்த புகைப்படங்களுக்கு விஜய் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. இதனால் எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துக்கான நோட்டீஸ் அனுப்பியும் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் விஜய் ஒத்துழைக்கவில்லை.

கவுரவமாக நவம்பர் 9ஆம் தேதி விஜய்யுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக பிரிய விரும்பினேன். ஆனால் அதற்கும் அவர் ஒத்துழைக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தேன்.

You May Also Like

தவெக-வில் எனக்கு மரியாதை இல்லையா? எஸ்பி வேலுமணிக்கு நேரடியாக பதிலடி கொடுத்த செங்கோட்டையன்

அந்த நடிகையின் பெயரை தற்போது குறிப்பிடுவதை தவிர்க்கிறேன். கணவன்- மனைவி உறவில் விஜய் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். சென்சிட்டிவான இந்த வழக்கை தனி அறையில் விசாரக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டு முதல் என்னை வார்த்தையால் விஜய் நிறைய முறை அவமானப்படுத்தியுள்ளார்.

நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் எனது கணவருக்கும் நடிகைக்குமான ஆதாரங்களை வெளியிடுவேன். இவ்வாறு சங்கீதா தனது மனுவில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். திருமணமாகி 27 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதலே விஜய்யை சங்கீதா பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

https://tamil.oneindia.com/news/chennai/vijay-s-wife-sangeetha-files-for-divorce-in-chengalpattu-family-court-reports-777257.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார்.

என விகடனும் செய்தி போட்டுள்ளது.

டிஸ்கி

சோனாமுத்தா…போச்சா….

பின்ன திமுகவை நோண்டினா விட்டுவாங்களா.

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா வடை போச்சா????🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

என்னப்பா வடை போச்சா????🤣

தான் கேட்டும் விஜை விவாகரத்து தரவில்லை எனவே கோர்ட்டுக்கு வருகிறேன் என்கிறார் சங்கீதா.

பேசாமல் கொடுத்து விட்டு போயிருக்கலாம்.

விஜி அண்ணி விடயத்தில் சீமான் விட்ட அதே தவறை விஜையும் விடுகிறார்.

தாய்குல வோட்டை லம்பா அள்ளுவார் என்றார்கள். இப்போ அது அம்போ.

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் தொடர்பு வைத்துள்ள நடிகை யார்?

ஏன்…. முள்ளம் பன்றி, மாதிரி… மற்றவர்களின் குடும்பத்துக்குள்

புகுந்து, குழப்பம் விளைவிக்கின்றாய் என்று,..

அந்த நடிகையுடனும், ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினால்

சிலவேளை பலன் அளிக்கலாம்.

பிற்குறிப்பு: இதற்கு எல்லாம்… சினிமாவில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கருணாநிதி, பாலிடால் உதயநிதி போன்றவர்களே காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

24trishavillain-1534922487.jpg

த்ரிஷா தான் தமிழகத்தின் எதிர்கால முதலமைச்சர். பொறுத்திருந்து பாருங்கள் ....

ஜெயலலிதாவின் இடத்தை பிடிப்பார்.

Prashanthan Navaratnam

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

24trishavillain-1534922487.jpg

த்ரிஷா தான் தமிழகத்தின் எதிர்கால முதலமைச்சர். பொறுத்திருந்து பாருங்கள் ....

ஜெயலலிதாவின் இடத்தை பிடிப்பார்.

Prashanthan Navaratnam

நாங்க தான் திரும்ப திரும்ப சொல்கிறோம் இல்லையா எம் ஜி ஆர் வழியில் ஆட்சி அதிகாரத்தை பங்கிடுவோம் என்று....😛

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

24trishavillain-1534922487.jpg

த்ரிஷா தான் தமிழகத்தின் எதிர்கால முதலமைச்சர். பொறுத்திருந்து பாருங்கள் ....

ஜெயலலிதாவின் இடத்தை பிடிப்பார்.

Prashanthan Navaratnam

சொல்றேன் கேட்டுகோங்கோ…

பெண் என்பதும்…

நடிகை என்பதும்தான்…

ஏனையவருக்கும் திரிஷாவுக்கும் வித்தியாசம்.

எம் ஜி ஆர் தாதா தான்…

ஆனால் கருணாநிதி, காஞ்சி காம கேடி என பெரிய தலைகளை எல்லாம் தூக்கி உள்ளே போட்ட…

படா தாதா ஜெ….

யாருக்குள்ளும் எந்த திறமையிம் இருக்கலாம்…

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

நாங்க தான் திரும்ப திரும்ப சொல்கிறோம் இல்லையா எம் ஜி ஆர் வழியில் ஆட்சி அதிகாரத்தை பங்கிடுவோம் என்று....😛

29 minutes ago, goshan_che said:

சொல்றேன் கேட்டுகோங்கோ…

பெண் என்பதும்…

நடிகை என்பதும்தான்…

ஏனையவருக்கும் திரிஷாவுக்கும் வித்தியாசம்.

எம் ஜி ஆர் தாதா தான்…

ஆனால் கருணாநிதி, காஞ்சி காம கேடி என பெரிய தலைகளை எல்லாம் தூக்கி உள்ளே போட்ட…

படா தாதா ஜெ….

யாருக்குள்ளும் எந்த திறமையிம் இருக்கலாம்…

இனியாவது தமிழகத்தை… திரிஷா என்ற தமிழச்சி ஆளவேண்டும். 💪

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, goshan_che said:

ஆனால் பாருங்கோ திமுக அடிச்சாடுது போலை

  • கருத்துக்கள உறவுகள்

விஜய்யை அண்ணா என்று பின்பற்றும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் எது நடந்தாலும் என்றும் விஜய்யின் ரசிகர்களே.

விஜய்யை ஒரு மாற்று சக்தியாக நினைக்காதவர்களுக்கும் இது ஒரு விடயம் அல்ல. சினிமாவில் இது சாதாரணம் மற்றும் இது தட்டில் கிடந்த முழுப் பூசணிக்காய்............ எப்பவோ தெரிந்தது தான்................

ஆனால் முக்கியமான விசயம் ஒன்று உள்ளது.............. 100 ரூபாக்கள் கொடுத்து 50,000 ரசிகர்கள் தேர்தலுக்கு தவெகவின் விருப்ப மனு வாங்கிச் சென்றார்கள். அதில் 500 பேர் மட்டுமே அதை நிரப்பி திருப்பிக் கொடுத்தார்கள்......................🫣.

சமூக ஊடகங்களில் ஸ்டேட்டஸ் போடுவது மட்டுமே விஜய் ரசிகர்களின் பிரதான நோக்கம்................ இன்று வரை ஒரு அரசியல் சக்தியாக அவர்கள் திரள்வதற்கான அறிகுறிகளே இல்லை.............. தேர்தல் அன்று வாக்குச் சாவடிகளுக்கு போவார்களா என்பதே சந்தேகம் தான்............................. வீட்டிலிருந்து கூட திரிஷா மட்டும் தான் போவார் போல.......................

  • கருத்துக்கள உறவுகள்

விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் - ஏப்ரல் 20 வழக்கு விசாரணை! 

27 Feb, 2026 | 05:34 PM

image

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 24ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இந்த விவாகரத்து மனுவை ஏற்ற தமிழ்நாட்டின் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம், விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கினை குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றியது.

இந்நிலையில், வருகிற ஏப்ரல் 20ஆம் திகதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இந்த வழக்கில் விஜய் நேரடியாக ஆஜராகவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த சங்கீதா விஜய்யை காதலித்து 1999ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். விஜய், சங்கீதா இருவருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

சினிமாவில் வலம் வந்த விஜய் தற்போது அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து, தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பிரச்சார கூட்டங்களில் அதிகமாக பங்கேற்று வருகிறார்.

இந்த சூழலில் விஜய்யும் சங்கீதாவும் கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தற்போது சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/239747

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வட்டுக்கோட்டையில் விஜய்க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!
இளைய தளபதி விஜயக்கு எதிராக எதிர்வரும் 2026.02.29 அன்று யாழ். வட்டுக்கோட்டையில் மாபெரும் கண்டன நிழல் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தான் கண்டுபிடித்த பிறகும் விஜய் அந்த உறவை கைவிடவில்லை என சங்கீதா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சங்கீதாவின் பிறந்த ஊரான யாழ். வட்டுக்கோட்டை பகுதி மக்கள் இணைந்து இந்த நிழல் ஆர்ப்பாட்டத்தை 2026.02.29 அன்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
இது விஜயின் அரசியலுக்கு மிகவும் பாதகமான ஒரு விடயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(யாவும் கற்பனையே😏)

கஜி ரிப்போர்ட் 

தோழர் என்ன இருந்தாலும் சங்கீதா ஈழத்து பெண் . உண்மையில் நீதி கோரி போராட்டத்தை ஆரம்பிக்கதான் வேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாதவூரான் said:

ஆனால் பாருங்கோ திமுக அடிச்சாடுது போலை

அவங்கள் சும்மாவே தூக்கி, தூக்கி அடிப்பாங்கள்…

இரும்பு நல்லா இளகின வாகில சிக்கி இருக்கு😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

விஜய்யை அண்ணா என்று பின்பற்றும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் எது நடந்தாலும் என்றும் விஜய்யின் ரசிகர்களே.

விஜய்யை ஒரு மாற்று சக்தியாக நினைக்காதவர்களுக்கும் இது ஒரு விடயம் அல்ல. சினிமாவில் இது சாதாரணம் மற்றும் இது தட்டில் கிடந்த முழுப் பூசணிக்காய்............ எப்பவோ தெரிந்தது தான்................

ஆனால் முக்கியமான விசயம் ஒன்று உள்ளது.............. 100 ரூபாக்கள் கொடுத்து 50,000 ரசிகர்கள் தேர்தலுக்கு தவெகவின் விருப்ப மனு வாங்கிச் சென்றார்கள். அதில் 500 பேர் மட்டுமே அதை நிரப்பி திருப்பிக் கொடுத்தார்கள்......................🫣.

சமூக ஊடகங்களில் ஸ்டேட்டஸ் போடுவது மட்டுமே விஜய் ரசிகர்களின் பிரதான நோக்கம்................ இன்று வரை ஒரு அரசியல் சக்தியாக அவர்கள் திரள்வதற்கான அறிகுறிகளே இல்லை.............. தேர்தல் அன்று வாக்குச் சாவடிகளுக்கு போவார்களா என்பதே சந்தேகம் தான்............................. வீட்டிலிருந்து கூட திரிஷா மட்டும் தான் போவார் போல.......................

நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திலும் தான் எப்படி பட்ட ஒரு தத்தி என்பதை விஜை நிருபிக்கிறார்.

மணமுறிவு ஒண்டும் பஞ்சமா பாதகமில்லை. அதே போல் தமிழக அரசியல், சினிமா மட்டும் அல்ல, பொதுவான வாழ்வில் கூட, குறிப்பாக ஆண்கள் தனி மனித ஒழுக்கம் தவறுவது பெரிய மேட்டர் அல்ல.

பெரியார், அண்ணா, காமராஜர், எம் ஜி ஆர், கருணாநிதி, உதய நிதி, போன்ற பெரிய அரசியல்வாதிகள் முதல், பெரிய கருப்பன், சீமான் போன்ற சின்ன அரசியல்வாதிகள் வரை அனைவரினதும் வாழ்க்கையும் பயில்வான் ரங்கநாதன் கதைக்கும் ரேஞ்ச்சுதான். ஆனாலும் அவர்கள் தலைவர்கள்.

ஆனால் இதை விஜை அழகாக கையாண்டு இருக்கலாம்.

இணைந்து வாழ முடியாது என தெரிந்ததும்…

தனுஷ்-ஐஸ்வர்யா, ஜீவிபி- சைந்தவி ஜோடிகள் போல் இணக்கமாக பிரிந்திருக்கலாம்.

இப்படி கோர்ட் படியேறி…

நடிகையுடன் உறவில் இருந்தார்…

என்னை மனதளவில் டார்ச்சர் செய்தார்…

புறக்கணித்தார்…

நிதியை முடக்கினார்…

என்றெல்லாம் குற்றம்சாட்ட படாமல்.

அதுவும் அரசியலுக்கு வரும் எண்ணம் இருந்தால்…இதை வரமுதலே வெட்டி முடித்திருக்க வேண்டும்.

வளர்ந்த பெண் பிள்ளை வேறு….

சரியான அடி முட்டாளாக இருக்கிறார்.

எஸ் ஏ சி மட்டும் இல்லை என்றால் - ஆளை எப்பவோ காக்கா தூக்கி போயிருக்கும் போல😂.

3 hours ago, தமிழ் சிறி said:

இனியாவது தமிழகத்தை… திரிஷா என்ற தமிழச்சி ஆளவேண்டும். 💪

😂 என்ன மொட்டையா திரிசா… அப்படி கூப்பிட நீங்க என்ன விஜையா?

புரட்சி தலைவி, இதயதெய்வம், அம்மா…

அவ்வளவுதான். பெயர் எல்லாம் சொல்லப்படாது😂

1 hour ago, தமிழ் சிறி said:

யாழ். வட்டுக்கோட்டையில் விஜய்க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!
இளைய தளபதி விஜயக்கு எதிராக எதிர்வரும் 2026.02.29 அன்று யாழ். வட்டுக்கோட்டையில் மாபெரும் கண்டன நிழல் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தான் கண்டுபிடித்த பிறகும் விஜய் அந்த உறவை கைவிடவில்லை என சங்கீதா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சங்கீதாவின் பிறந்த ஊரான யாழ். வட்டுக்கோட்டை பகுதி மக்கள் இணைந்து இந்த நிழல் ஆர்ப்பாட்டத்தை 2026.02.29 அன்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
இது விஜயின் அரசியலுக்கு மிகவும் பாதகமான ஒரு விடயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(யாவும் கற்பனையே😏)

கஜி ரிப்போர்ட் 

போராட்டத்தை தலைமை ஏற்க வட்டுகோட்டை விரைகிறார் சுமந்திரன்!😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் என்ன இருந்தாலும் சங்கீதா ஈழத்து பெண் . உண்மையில் நீதி கோரி போராட்டத்தை ஆரம்பிக்கதான் வேணும்.

தோழர்,

எந்த ஊர் பெண் என்றாலும் அவர் நியாயம் சபை ஏற வேண்டும்.

இதிலே அவர் கூறி உள்ள குற்றசாட்டுகள் யூகேயில் domestic violence என்ற வரையறக்குள் வரும்.

வஞ்சிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தக்க நியாயம் கிடைக்கவேண்டும்.

அது விஜி அண்ணியாகிலும், சங்கீதா அண்ணியாகிலும்.

9 minutes ago, goshan_che said:

தனுஷ்-ஐஸ்வர்யா, ஜீவிபி- சைந்தவி ஜோடிகள் போல் இணக்கமாக பிரிந்திருக்கலாம்

இதில் ஐஸ்வர்யா பெத்துராஜ் திருமணத்தை முன்னின்று நடத்திவர்களின் இராஜதந்திரத்தையும் மெச்சல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

இதில் ஐஸ்வர்யா பெத்துராஜ் திருமணத்தை முன்னின்று நடத்திவர்களின் இராஜதந்திரத்தையும் மெச்சல் வேண்டும்

பவர் இருந்தால் இராஐதந்திரம் தானாக வருமண்ணை. பெயரை மாற்றி எழுதி விட்டீர்களோ அது நிவேதா பெ த்துராஜ் இல்லை...?

இப்போது அதிகார பீடமாக இருந்தால் அண்ணி சங்கீதாவும் கோர்ட்டு படியேற மூன்றுக்கு நான்கு முறை யோசித்திருப்பார்.

பாவம் தூயசக்தி தமிழ்நாடு தற்போதைய அரசியலை M.G.R காலத்து அரதப்பழசு அரசியலுடன் காம்பேர் பண்ணி இப்போ காமசக்தியாக திரு திருவென்று முழிக்கிறது. இதுவரை ஏழரை இனி அஷ்டமமும் சேர்ந்து பயலை காக்டெயில் போடப்போகுது

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த மூன்று மாதத்தில் விஜை ஆட்சிக்கு வந்தால் தனக்கு நீதி கிடைப்பது கடினமாகிவிடும் என்பதால் தான் ஆட்சிக்கு வர முதல் சங்கீதா வழக்கு போட்டுள்ளார் என்றால் அது சரியானதே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, அக்னியஷ்த்ரா said:

பவர் இருந்தால் இராஐதந்திரம் தானாக வருமண்ணை. பெயரை மாற்றி எழுதி விட்டீர்களோ அது நிவேதா பெ த்துராஜ் இல்லை...?

இப்போது அதிகார பீடமாக இருந்தால் அண்ணி சங்கீதாவும் கோர்ட்டு படியேற மூன்றுக்கு நான்கு முறை யோசித்திருப்பார்.

பாவம் தூயசக்தி தமிழ்நாடு தற்போதைய அரசியலை M.G.R காலத்து அரதப்பழசு அரசியலுடன் காம்பேர் பண்ணி இப்போ காமசக்தியாக திரு திருவென்று முழிக்கிறது. இதுவரை ஏழரை இனி அஷ்டமமும் சேர்ந்து பயலை காக்டெயில் போடப்போகுது

ஓம்…ஓம் நிவேதாதான்.

ராஜேசையும் பெத்துராஜையும் குழப்பிகொண்டேன்.

நீங்களும் ஐலண்டும் சொல்வது போல், முதலமைச்சர் இல்லை, ஒரு 15% வாக்கை எடுத்திருந்தார் எனில் கூட சங்கீதா வழக்கை, விஜி வழக்கு போல் அடித்து நூத்திருப்பார்.

அதனால்தான் சங்கீதா முந்தியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் இதற்காகக் தான் திருமணம் செய்யாமல் இருந்தா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, island said:

அடுத்த மூன்று மாதத்தில் விஜை ஆட்சிக்கு வந்தால் தனக்கு நீதி கிடைப்பது கடினமாகிவிடும் என்பதால் தான் ஆட்சிக்கு வர முதல் சங்கீதா வழக்கு போட்டுள்ளார் என்றால் அது சரியானதே.

ஆமோதிக்கிறேன்.

Just now, ஈழப்பிரியன் said:

இவ்வளவு காலமும் இதற்காகக் தான் திருமணம் செய்யாமல் இருந்தா?

நானும் எனக்காக காத்திருப்பதாக அல்லவா எண்ணி கொண்டேன்😂

இல(ழ)வு காத்த கிளி😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.