Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானை பற்றி தெரியமால் ... மேட்ற்கு பிரச்சாரத்தை தூக்கி வந்து ..

செய்தி விடயத்தை மட்டும் சொல்கிறேன் - ஏனெனில் இது விவிலிய பிரளய கிருமிகளால் உருவாக்கப்பட்ட கிருமிப் பிரளயம் (இதை ஏற்கனவே அலசி விட்டேன்.)

அரபு நாடுகள் அமெரிக்கா இராணுவ / உளவு தளங்களை கொண்டிருக்கும் வரையிலும், அவை இரானை தாக்குதலில் ஈடுபடுகின்றன. ஏனெனில் இவற்றில் இருந்தே ஏவுகணை கண்காணிக்கப்பட்டு , தரவுகள் உரிய அழிக்கும் ஆயுத கட்டுமானத்துக்கு வழங்கப்படுகிறது.

மாற்றம் cia, மொசாட் நிலைகள் இருப்பது. இவை இடம் மாறிக் கொண்டு இருக்க, இரான் அவற்றை ஏறத்தாழ real-time இல் கண்காணிக்கிறது, தாக்குகிறது

இவ்வாற்றை தாக்குவதிலேயே உயர்மாடி கட்டிங்களில், குறித்த வதிவிடம் தாக்கப்படுவது. அதில் சில பிழைத்து இருககலாம்

அதனால் தன மீண்டும். மீண்டும் குறிவைக்கப்டுவது.

(மாறாக அமெரிக்கா / இஸ்ரேல் முழு கட்டியதையும் அழிப்பது (இரானால் செய்ட் இருக்க முடியம்).

அத்துடன் இந்த நாடுகளின் வான்வெளியிலேயே , அமெரிக்கா awacs போன்றவை நிலையெடுத்து கொள்வது, இரானில் விமானதாக்குதலுக்கு. அத்துடன், பாலையானத்தில் ஈரானின் ஏவுகணைகளை அழி க்க செல்லிட ஏவுகணைகளை / ஊர்திகள் ஊர்மறைப் செய்யப்பட்டு, தேவையான நேரத்தில் வேண்டிய இடத்துக்கு நகர்த்துவது.

அமெரிக்கா வீழ்ந்த விமானங்கள் எப்படி குவைத்தில் அவசர முட்டி மோதி தரையிறக்கம் (crash landing) இட்டது ? வெளிப்படையாக இந்த அரபு நாடுகள் பங்குபற்றும் ஆதாரம் இருக்கும் பொது..

இரான் ஏவுகணை தாக்குதல் பெருமளவில் குறிக்கோள்களை அடைந்துள்ளது.மற்றது இரான் குறிவைத்தே பொதுவாக தாக்குகிறது. ஏனெனில், அமெரிக்கா, மேட்ற்கு, இஸ்ரேல் இன் ஏவுகணையை கண்காணிக்கும் கண்கள் பெருமளவில் குருடாக்ப்பட்டுவிட்டன .

இது தெரிவது, இரானில் இப்பொது விவிலிய பிரளயக் கிருமிகள் பொதுக்கட்டுமானத்தை தாக்குகிறார்கள் - இதன் அர்த்தம் ஈரானின் இராணுவ இலக்குகள் மீதான என்று விவிலிய பிரளயக் கிருமிகள் நம்பிய தாக்குதல் பொதுவாக பலன் அளிக்கவில்லை.

இதுவே நிலைமை.

(அனால் ஈரான் சொன்னதின் மொழிபெயர்ப்பு முன்பு நான் சொன்னது - தாக்குதலுக்கு வழிகோலுதற்கு துணைபோகாமல் இருக்கும் வரையிலும் இரான் தாக்காது. அரபு கூட்டங்களால் அந்த நிலையை தடுக்க முடியாது.)

இந்த தத்தெடுத்து உருவாக்கப்பட்டு, இப்போதும் தத்தெடுத்தவரின் அரவணைப்பில் உள்ள அரபி மொக்களுக்கு ,

வரலாறு வழியே அதுவாக, அதனால் மட்டும் உருவாகிய இரான் சொல்லுவது விளங்கவில்லை.

அனால், இங்கே உள்ள சிலருக்கும் விளங்கவில்லை.

அனால் , டிரம்ப் ஈரானை 2-3 அரசுகளாக பிரிக்கும் எண்ணத்தை ஒத்துகொண்டு இருப்பது (map won't be same / will be different ) - முன்பே நான் சொல்லியது , எந்த திரி என்பது மறந்துவிட்டது.

இங்கே இரானை பற்றி தெரியாமல் மேற்றுகின் பிரச்சாரத்தில் ஊழன்று ஈரான் ஆட்சி பற்றி சிலர் கதைப்பது.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உள்ள இராணுவ ஆய்வாளர் விடயம் அறிந்தவர். youtube click bait அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

மத அடிப்படை வாதம் மக்களை முட்டாள்கள் ஆக்கும். இயன்ற அளவுக்கு அது அரசியலில் இருந்து அகற்றப்படல் வேண்டும்்அல்லது அரசியலில் ஆக குறைந்தது தாக்கத்தை ஏற்படுத்தாவண்ணம் பலவீனப்படுத்தப்படல் வேண்டும். ஆரம்பத்தில பாலஸ்தீன விடுதலை என்று புறப்பட்ட பாலஸ்தீன விடுதலை இன்று ஹமாஸின் இஸலாமிய மத அடிப்படை வாதத்தில் வந்து நிற்கிறது.

மத்திய காலத்தில் மனிதர்களை மூடபழக்கங்களுக்குள் தள்ளிய உலகில் உள்ள எல்லா மதங்களும் மீண்டும் அந்த நிலைக்கு போக அனுமதிக்கக கூடாது.

இலங்கையில் புத்தமதம் இந்தியாவில் இந்துமதம் ஆகியவையும் இதே போல செல்லவே முயலுகின்றன. ஈழத்தமிழர்களிடமும் மத அடிபடைவாதத்தை புகுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மக்களிடையே முட்டாள்தனங்களை பரப்பி அதை விமர்சிக்கமுடியாத அளவுக்கு புனிதப்படுத்திவிட்டால் கேள்விகள் எதுவும் இன்று தமது எதேச்சதிகாரத்தை தொடர முடியும் என்பதும் கேள்வி கேட்பவனை கடவுளுக்கு எதிரானவன் என்று அடக்கலாம் என்பதுமே மத அடிப்படைவாதத்தின் நோக்கம்.

மத அடிப்படைவாதம், கண்மூடித்தனமான தேசபக்தி, இனப்பற்று என்ற ரீதியிலான இனவெறி என்பன மக்களை தர்ககரீதியாக நியாயமான கேள்விகளை கேட்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தும் கருவிகள். அதை நாடுகளும் விடுதலை இயக்கங்கள் என்று கூறப்படுபவையும் சிறப்பாக பயன்படுத்துகின்றன.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிலும் இப்போது மதவாதம் மேலோங்கி உள்ளது. வெளிப்படையாகவே டிரம்ப் ஐயாவும், அவர் குழுவும் புதிய பாணியில் அமெரிக்காவின் அரசியலை மதத்தின் அடிப்படையில் நிறுவுகின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, ரஞ்சித் said:

இந்த கேள்விகளுக்கு முதலில் விடையளியுங்கள், பின்னர் தொடர்ந்து பேசலாம்.

1. வத்திக்கான் எந்த நாட்டு மக்களை மத அடிப்படைவாதத்தினை வைத்து கொடுங்கோலாட்சி புரிகிறது?

ஆசிய ஆபிரிக்க அமெரிக்க நாடுகளில் அத்து மீறி பிரவேசித்து அந்த மண் மக்கள் மீது கொடுங்கோல் ஆட்சி செய்து மதமாற்றத்தை கடுமையாக்கிய வரலாறுகள் தெரியவில்லையா?

இலங்கையில் கூட மதம் மாறியவர்களுக்கு அரச வேலை என ஆசை காட்டிய வரலாறுகள் தெரியுமா?

2. ஆது எந்த நாட்டில் அணுவாயுத உற்பத்தியை உருஇவாக்க முயற்சிக்கிறது?

அணு ஆயுதம் வைத்திருக்கும் கிறிஸ்தவ நாடுகள் எத்தனை? முஸ்லீம் நாடுகள் எத்தனை?

3. அது எந்த நாட்டினை உலக வரைபடத்திலிருந்து முற்றாக இல்லாதொழிப்போம் என்பதை தனது கொள்கையாகக் கொண்டு இயங்குகிறது?

பலஸ்தீனமண் கறையான் அரித்துக்கொண்டு போவது போல் அரிக்கப்படுகின்றது. இது உங்களுக்கு உறுத்தவில்லையா?

386356573-2514766828687381-1427884852288

4. அது எந்த மத அடிப்படைவாத அ,மைப்புக்களுக்கு ஆயுதங்களும் பணமும் வழங்கி இன்னொரு நாட்டிற்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுங்கள், அந்நாட்டு மக்களைக் கொல்லுங்கள் என்று உசுப்பெற்றி வருகிறது?

வத்திக்கானில் இருந்து மாதா மாதம் சம்பளமாக உலகம் முழுவதும் இருக்கும் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு போய்க்கொண்டிருக்கின்றது. அதை விட இதர கிறிஸ்தவ அமைப்புகளும் பணம் அனுப்பிய வண்ணமே இருக்கின்றன.

5. அது எந்த நாட்டினை அழிப்பதற்காக நீண்டதூர ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் தயாரித்து வருகிறது?

நேற்றைய செய்தியில் அதிக ஆயுத உற்பத்தியிலும் விற்பனையிலும் முக்கிய நாடுகள் பட்டியலில்.....

1)அமெரிக்கா

2)பிரான்ஸ்

2)ஜேர்மனி

என முன்னணி நாடுகள் என அறிவிக்கப்பட்டது.எதற்காக இவ்வளவு ஆயுத உற்பத்தியும் விற்பனையும்?

மக்கள் மீது பூ தூவவா?

6. எந்த நாட்டினை பெரிய சாத்தான் என்று சிறிய சாத்தான் என்று அடையாளப்படுத்தி அந்நாடுகளுக்கு மரணத்தினை வழங்குவோம் என்று சூளுரைத்து வருகிறது?

சாத்தான்கள் பற்றி கிறிஸ்தவமும் அதிகமாக பேசுகின்றதல்லவா?

  1. அது எந்த நாட்டில் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதி அடக்கி வருகிறது?

    தவறுதான். இருந்தாலும் முஸ்லீம் நாடுகளில் இருக்கும் பெரிய பிரச்சனை. தனியே ஈரான் மீது பழியை போட முடியாது.

  2. அது எந்த நாட்டில் தனது குடிமக்களையே கொடுங்கோலாட்சிக்கெதிராக கோஷமிட்டதற்காக பல்லாயிரக்கணக்கில் கொன்றுகுவித்து வருகிறது?

    பிழைகள் உண்டு. இதற்கு முன்னுதாரணமாக அமைந்தவர்கள் சுரண்டல் மன்னர்களாகிய மேற்குலகினர் மட்டுமே.

தொடர்ந்து பேசுவோமாக......cool

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

அமெரிக்காவிலும் இப்போது மதவாதம் மேலோங்கி உள்ளது. வெளிப்படையாகவே டிரம்ப் ஐயாவும், அவர் குழுவும் புதிய பாணியில் அமெரிக்காவின் அரசியலை மதத்தின் அடிப்படையில் நிறுவுகின்றனர்.

"ட்ரம்ப் ஐயா" வும் அவரது கூட்டுக்களும் அமெரிக்கா அல்ல! அவர்களிடம் தற்போது ஒலி வாங்கி இருக்கிறது, எனவே அவர்களது குரல்கள் தான் பெரிதாகக் கேட்கிறது. இதன் அர்த்தம் "அமெரிக்காவில் மதவாதம் ஓங்கியிருக்கிறது" என்பது அல்ல!

2024 இல் எடுக்கப் பட்ட கணக்கெடுப்பின் படி, அமெரிக்காவில் மத நம்பிக்கையில்லாதோரின் வீதம் மெதுவாக அதிகரித்து வருகிறது. கீழே ஆதாரம்👇.

Gallup.com
No image preview

How Religious Are Americans?

Most Americans have a religious preference -- predominantly a Christian one -- but less than half say religion is "very important" to them.
  • கருத்துக்கள உறவுகள்

எந்த உணர்ச்சியும் அற்ற புவிஅமைப்பு பட அமெரிக்கா அமெரிக்கா தள அழிவு ஆய்வு.

ஈரான் பொதுவாக இராணுவ இலக்குகள் மீது தாக்குதல்.

(அனால், விவிலிய பிரளயக் கிருமிகளின் நோக்கம் சமூகத்தை அழிப்பது, அததையே இரானுக்கு செய்கின்றன)

இது வரையில் இரானின் பெரும்பகுதி கவனம் அமெரிக்கா தளங்களை அழிப்பது. ஏனெனில், இவற்றை அழிப்பது ஏவுகணை பாதையில் தடைகளை அகற்றுவது. அனால், பொதுவாக இந்த தளங்கள் தொலை தூர பார்வை உள்ள கண்கள், கேட்கும் செவிகள் மற்றும் தாக்குதலை நெறிப்படுத்தும் நிலைகள்.

உ.ம். இஸ்ரேல் இல் நேற்றும், இரானில் எண்ணை குதம் தாக்கப்பட்டதுக்கு பதிலாக, ஹைபா எண்ணை சுத்திகரிப்பு நிலை (ரத்த தடையும் இல்லாமல் முழுமையாக தாக்கி அழிக்கப்பட்டு உள்ளது.

இதில் சொல்ல வந்தது :

1) இரான் இதை தனியாக, எந்த வித செய்மதி வழிநடத்தல் உதவி இன்றி செய்தது என்பதை நம்பமுடியாது. இஸ்ரேல் கூட இதை செய்ய முடியாது (இஸ்ரேல் செய்வது நிலைக்கு கிட்டவாக இருந்து தாக்குவது, அததற்கு உளவு கச்சிதமாக இருப்பது ). (ஆனால், இரானிடம் inertial navigation இருக்கிறது என்பதும்.)

ஆனல், இதில் அந்த துல்லியமே முக்கியமானது.

ஆகவே, இரான் ஒன்றில் சீன, அல்லது ருசிஷ்ய இடம் உதவி பெற்று இருக்க வேண்டும். அந்த ஆய்வாளர் சொல்லுவது, சீன என்று. சிலவ்வேலைகளில், சீன, ருசியா தனித்தனியாக உதவி இருக்கலாம்.

ஏனெனில், பாரிய கட்டமானத்தில், சில குக்குறிப்பிட பகுதிகளே தாக்கி அழிக்கப்பட்டு இருப்பது. அதாவது அந்த ரேடார் மாற்றம் இலத்திரனியல் யுத்த கட்டுமானங்கள் / வசதிகள் இருந்த பகுதி.

2) இவ்வளவு யுத்த வசதி / கட்டுமானங்களை வைத்து கொண்டு, அதை அமெரக்கா / இஸ்ரேல் பாவிக்க, அரபி நாடுகள் தாம் யுத்தத்தில் ஈடுபடவில்லை என்பது. (இதற்கு , அதாவது இஸ்ரேல் உடன் இவளவு நெருக்கத்தக்கு காரணம் இருக்கிறது)

3) இது அமெரிக்காவ்வுக்கு எச்சரிக்கையாக, தணிக்காவிட்டால், வேறு இலக்குகளும் குறிவைக்கப்படும் வாய்ப்புகளும் இருக்கிறது என்பதை சொல்லாமல் விடப்பட்டு உள்ளது

4) சர்வதேச சட்டம் / விதிகளின் படி, அமெரிக்கா நிலப்புலமே தாக்கப்பட்டு உள்ளது. அந்தந்த அரபு நாடுகள் அல்ல. ஏனெனில். அதில் இந்த அரபு நாடுகளுக்கு இறைமை இல்லை,

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

ஊடக பிரச்சார தகவல்கள் மற்றும் அந்த தகவலின் ஊட்டலின் தரவுகளினடிப்படையில் செயற்படும் செயற்கை நுண்ணறிவுகள் மூலம் உலக நகர்வுகளை சரியாக புரிந்து கொள்ளமுடியாது.

பல இலட்சம் பேர்களை கொல்லும் எதிரெதிர் தரப்புக்களில் சினிமாத்தனமான கதாநாயக் விம்பங்களை உருவாக்கும் கட்டமைப்புகளில் நின்று சரிகளையும் அதன் எதிர்த்தரப்பினை தவறாகவும் பார்க்கும் நிலை உண்மையான புரிதலை கொடுக்காது.

அறிவு அனைவரது பிறப்புரிமை, அதனைபக்க வாதங்களுடன் அணுகாமல் சிந்திக்கும் சமுதாயமாக மாறினாலே எமது சமூகம் தன்னை காலா காலத்திற்கும் நிலைத்து முன்னேறும்.

ரஸ்ய சார்பு கட்டுரைகளை மட்டும் தேடி, தேடி கூகிள் டிரான்சிலேட் பண்ணி ஒட்டினால் - உண்மையான புரிதல் ஏற்படுமா வசி😂

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே முல்லாக்களுக்கு என்ன டப்பாங்குத்து ஆடி முட்டு கொடுத்தாலும்😂….

அதை எல்லாம் உடைக்க ஒரு படம் போதும்….

அவுசில் அடைக்கலம் கிடைத்த மறு நொடியே ஹிஜாபை தூக்கி முல்லாக்கள் மூஞ்சியில் வீசிய ஈரானிய சகோதரிகள்.

large.IMG_8203.jpeg

ஈரான் கறுப்பா, வெழுப்பா என்பது கூட தெரியாமல்…கார்ள்சன் போன்ற பொக்ஸ் நியூசே துரத்தி விட்ட பைத்தியங்களை எல்லாம் வல்லுனர் என்பதெல்லாம் அடுத்த லெவல் டப்பாங்குத்து.

புலம்பெயர் தேசம் எங்கும் ஈரானியர்கள், இஸ்ரேல் கொடி தூக்கி ஆர்பரிக்கிறார்கள். அரபிகள் கூட ஆதரிக்கிறார்கள்.

தெற்காசிய வழிவந்த “Temu” முஸ்லிம்களும் 😂, மேற்கு அலர்ஜியால் பாதிக்கப்பட்ட சிலருமே முல்லாக்களை ஆதரிக்கிறனர்😂.

  • கருத்துக்கள உறவுகள்

முல்லாக்களுக்கு முன் நிற்க முடியாது (என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது?)- 5 பேர் மட்டும் தான் இரான் அணிக்கு ஆள் எண்ணிக்கைக்கு சென்று இருந்தால்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, vasee said:

ஊடக பிரச்சார தகவல்கள் மற்றும் அந்த தகவலின் ஊட்டலின் தரவுகளினடிப்படையில் செயற்படும் செயற்கை நுண்ணறிவுகள் மூலம் உலக நகர்வுகளை சரியாக புரிந்து கொள்ளமுடியாது.

பல இலட்சம் பேர்களை கொல்லும் எதிரெதிர் தரப்புக்களில் சினிமாத்தனமான கதாநாயக் விம்பங்களை உருவாக்கும் கட்டமைப்புகளில் நின்று சரிகளையும் அதன் எதிர்த்தரப்பினை தவறாகவும் பார்க்கும் நிலை உண்மையான புரிதலை கொடுக்காது.

அறிவு அனைவரது பிறப்புரிமை, அதனைபக்க வாதங்களுடன் அணுகாமல் சிந்திக்கும் சமுதாயமாக மாறினாலே எமது சமூகம் தன்னை காலா காலத்திற்கும் நிலைத்து முன்னேறும்.

🤣 இன்னொரு திரியில் இதே "தரவுகளின் அடிப்படையிலான தேடலையும், அபிப்பிராயத்தையும்" உங்களிடம் தேடினேன்! உங்களிடம் அப்படியானதொரு நடு நிலையான தரவுகள் தேடி முடிவெடுக்கும் தன்மையைக் காணவில்லை! ஆனாலும், ஏனையோரிடம் இதை எதிர்பார்க்கிறீர்கள்😂!

நினைவூட்டலுக்கு: அணுசக்தி நீர்மூழ்கிகள் ஒன்றைக் கூட வைத்திருக்காத ஈரான் 60% யுரேனியத்தை "அணுசக்திப் பிறப்பாக்கிக்காக சேகரிக்கிறது" என்று நீங்கள் காரணம் எடுத்துக் கொடுத்திருந்தீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

தணிக்கைகள்/பிரச்சார போர்/ஊடக போர்/உளவியல் யுத்தம் இவைகளை தாண்டி உண்மை செய்திகள் வெளிவருகின்றதா என்பது சந்தேகம். அப்படியாக உண்மை செய்திகளை வெளிவிடும் ஊடகம் ஏதும் உள்ளதாகவும் தெரியவில்லை. அவரவர் அங்குமிங்குமாக பார்க்கும், கேட்கும், வாசிக்கும் செய்திகளை அளவுகோலிட்டு, ஆய்வு செய்து தத்தமது அறிவுக்கேற்ற வகையில் கிரகிக்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

மத பயங்கரவாதத்தை sponsor பண்ணி உலகிற்கு பரப்பிய மோசமான நாடு ஈரான். ஹமாஸின் இஸ்லாமிய மத அடிப்படை வாதத்திற்கும் லெபனான் நாசமானதிற்கும் இதுவோ காரணம். முல்லாக்களின் கொடுங்கோல் மத ஆட்சி ஒழிந்து ஈரானிய மக்களும் மேற்குலகில் வாழ்கின்ற ஈரானியர்கள் தமிழர்கள் போன்று சுதந்திர வாழ்க்கையை வாழவேண்டும்.

3 hours ago, goshan_che said:

புலம்பெயர் தேசம் எங்கும் ஈரானியர்கள், இஸ்ரேல் கொடி தூக்கி ஆர்பரிக்கிறார்கள். அரபிகள் கூட ஆதரிக்கிறார்கள்.

தெற்காசிய வழிவந்த “Temu” முஸ்லிம்களும் 😂, மேற்கு அலர்ஜியால் பாதிக்கப்பட்ட சிலருமே முல்லாக்களை ஆதரிக்கிறனர்😂.

ஈரானியர்கள் மகிழ்ச்சியை நேரிலே பார்க்கின்றோமே. புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற சில தமிழர்களுக்கு என்ன பிரச்சனையாம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

🤣 இன்னொரு திரியில் இதே "தரவுகளின் அடிப்படையிலான தேடலையும், அபிப்பிராயத்தையும்" உங்களிடம் தேடினேன்! உங்களிடம் அப்படியானதொரு நடு நிலையான தரவுகள் தேடி முடிவெடுக்கும் தன்மையைக் காணவில்லை! ஆனாலும், ஏனையோரிடம் இதை எதிர்பார்க்கிறீர்கள்😂!

நினைவூட்டலுக்கு: அணுசக்தி நீர்மூழ்கிகள் ஒன்றைக் கூட வைத்திருக்காத ஈரான் 60% யுரேனியத்தை "அணுசக்திப் பிறப்பாக்கிக்காக சேகரிக்கிறது" என்று நீங்கள் காரணம் எடுத்துக் கொடுத்திருந்தீர்கள்!

இதுதான் அந்த திரி!

3 hours ago, goshan_che said:

ரஸ்ய சார்பு கட்டுரைகளை மட்டும் தேடி, தேடி கூகிள் டிரான்சிலேட் பண்ணி ஒட்டினால் - உண்மையான புரிதல் ஏற்படுமா வசி😂

"You see what you want to see"

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

தணிக்கைகள்/பிரச்சார போர்/ஊடக போர்/உளவியல் யுத்தம் இவைகளை தாண்டி உண்மை செய்திகள் வெளிவருகின்றதா என்பது சந்தேகம். அப்படியாக உண்மை செய்திகளை வெளிவிடும் ஊடகம் ஏதும் உள்ளதாகவும் தெரியவில்லை. அவரவர் அங்குமிங்குமாக பார்க்கும், கேட்கும், வாசிக்கும் செய்திகளை அளவுகோலிட்டு, ஆய்வு செய்து தத்தமது அறிவுக்கேற்ற வகையில் கிரகிக்க வேண்டியதுதான்.

எப்பொருள் யார்…யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு (ரிது).

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

மத பயங்கரவாதத்தை sponsor பண்ணி உலகிற்கு பரப்பிய மோசமான நாடு ஈரான். ஹமாஸின் இஸ்லாமிய மத அடிப்படை வாதத்திற்கும் லெபனான் நாசமானதிற்கும் இதுவோ காரணம். முல்லாக்களின் கொடுங்கோல் மத ஆட்சி ஒழிந்து ஈரானிய மக்களும் மேற்குலகில் வாழ்கின்ற ஈரானியர்கள் தமிழர்கள் போன்று சுதந்திர வாழ்க்கையை வாழவேண்டும்.

  1. கிறிஸ்தவர், சன்னி, சியாக்கள், யூதர் என சேர்ந்து வாழ்ந்த, கிழக்கின் பாரிஸ் என போற்றப்பட்ட பெய்ரூட்டும், லெபனானும் 1979 இல் முல்லாக்கள் ஈரானில் ஆட்சிக்கு வந்ததுடன் நாசமானது.

  2. ஈரான் யாசிர் அரபாத்துக்கு எதிராக ஹமாசை கொம்பு சீவி, அவரின் பட்டா இயக்கத்தை காசாவை விட்டு கொலைகள் மூலம் அடித்து விரட்டியது.

    பலஸ்தீன பிரச்சனை தீரக்கூடாது என்பதில் வலதுசாரி யூதர்கள் போல் அழுங்கு பிடியாக நிற்பவர்கள் ஈரானிய முல்லாக்கள்.

  3. என்ன காரணம் ? தீர்ப்பு நாளில் என்ன நடக்கும் என குரான் சொன்னது போல் நடக்கும், நடக்க வேண்டும் என்ற அடிப்படை வாத நம்பிக்கை.

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஈரானியர்கள் மகிழ்ச்சியை நேரிலே பார்க்கின்றோமே. புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற சில தமிழர்களுக்கு என்ன பிரச்சனையாம்

இது வேற பிரச்ச்னை….

8 க்கும் 5 க்கும் வித்தியாசம் தெரியாத நுனிப்புல் மேய்தல்+சதிக்கோட்பாட்டு மனநிலை+ அரைகுறை ஆங்கிலத்தினூடு விளங்கி கொள்ளமுனைதல்+வேற்று கிரக மொழியாளுமை எல்லாமும் சேர்ந்த ஒரு வித மாய உலகத்தில் வாழ்வதன் பிரதிபலன்.

2 hours ago, vasee said:

You see what you want to see"

And you translate, cut and paste what you want us to see 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, island said:

மத அடிப்படை வாதம் மக்களை முட்டாள்கள் ஆக்கும். இயன்ற அளவுக்கு அது அரசியலில் இருந்து அகற்றப்படல் வேண்டும்்அல்லது அரசியலில் ஆக குறைந்தது தாக்கத்தை ஏற்படுத்தாவண்ணம் பலவீனப்படுத்தப்படல் வேண்டும். ஆரம்பத்தில பாலஸ்தீன விடுதலை என்று புறப்பட்ட பாலஸ்தீன விடுதலை இன்று ஹமாஸின் இஸலாமிய மத அடிப்படை வாதத்தில் வந்து நிற்கிறது.

மத்திய காலத்தில் மனிதர்களை மூடபழக்கங்களுக்குள் தள்ளிய உலகில் உள்ள எல்லா மதங்களும் மீண்டும் அந்த நிலைக்கு போக அனுமதிக்கக கூடாது.

இலங்கையில் புத்தமதம் இந்தியாவில் இந்துமதம் ஆகியவையும் இதே போல செல்லவே முயலுகின்றன. ஈழத்தமிழர்களிடமும் மத அடிபடைவாதத்தை புகுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மக்களிடையே முட்டாள்தனங்களை பரப்பி அதை விமர்சிக்கமுடியாத அளவுக்கு புனிதப்படுத்திவிட்டால் கேள்விகள் எதுவும் இன்று தமது எதேச்சதிகாரத்தை தொடர முடியும் என்பதும் கேள்வி கேட்பவனை கடவுளுக்கு எதிரானவன் என்று அடக்கலாம் என்பதுமே மத அடிப்படைவாதத்தின் நோக்கம்.

மத அடிப்படைவாதம், கண்மூடித்தனமான தேசபக்தி, இனப்பற்று என்ற ரீதியிலான இனவெறி என்பன மக்களை தர்ககரீதியாக நியாயமான கேள்விகளை கேட்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தும் கருவிகள். அதை நாடுகளும் விடுதலை இயக்கங்கள் என்று கூறப்படுபவையும் சிறப்பாக பயன்படுத்துகின்றன.

யாரை நினைத்து வெறும் உரலை இடிக்கின்றீர்கள் என தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, goshan_che said:

ரஸ்ய சார்பு கட்டுரைகளை மட்டும் தேடி, தேடி கூகிள் டிரான்சிலேட் பண்ணி ஒட்டினால் - உண்மையான புரிதல் ஏற்படுமா வசி😂

மேற்கு சார்பு கட்டுரைகளும், செய்திகளும் சத்திய வாக்கியங்களா கோசான்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

And you translate, cut and paste what you want us to see 😂

வீட்டில் குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் போது கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாள் இரவில் வந்து அவர்கள் வைக்கும் பாலையும், பிஸ்கட்டினையும் குடித்து, உண்டுவிட்டு அவர்களுக்கு சான்டா பரிசில்கள் வைத்துவிட்டு போகும் நடைமுறையினை நம்பியிருந்த காலகட்டத்தில்; அது பெற்றோரே அதனை செய்கிறார்கள் என்ற உண்மையினை சொன்னபோது குழந்தைகள் அதனை விரும்பவில்லை, குறிப்பாக எனது மகன் நான் பொய் சொல்வதாக கூறினார், நான் செய்த அந்த செயல் சிறிய குழந்தைகளை எவ்வளவு மோசமாக பாதித்தது என உணர்ந்த போது கடினமான மன உணர்வு ஏற்பட்டது.

சில நம்பிக்கைகளுக்கு அளவு கடந்த சக்தி உண்டு, அந்த விம்பம் உடைக்கப்படும்போது ஏற்படும் ஏமாற்றம், மறுதலிப்புகள் ஒரு தற்காலிக மன ஆறுதலை வழங்குகிறது, ஆனால் அவர்கள் எப்படியோ எது உண்மை என தாங்களாகவே ஒரு கட்டத்தில் உணர்ந்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

🤣 இன்னொரு திரியில் இதே "தரவுகளின் அடிப்படையிலான தேடலையும், அபிப்பிராயத்தையும்" உங்களிடம் தேடினேன்! உங்களிடம் அப்படியானதொரு நடு நிலையான தரவுகள் தேடி முடிவெடுக்கும் தன்மையைக் காணவில்லை! ஆனாலும், ஏனையோரிடம் இதை எதிர்பார்க்கிறீர்கள்😂!

நினைவூட்டலுக்கு: அணுசக்தி நீர்மூழ்கிகள் ஒன்றைக் கூட வைத்திருக்காத ஈரான் 60% யுரேனியத்தை "அணுசக்திப் பிறப்பாக்கிக்காக சேகரிக்கிறது" என்று நீங்கள் காரணம் எடுத்துக் கொடுத்திருந்தீர்கள்!

அந்த திரியில் நிங்கள் கூறிய கருத்து👇

On 7/3/2026 at 06:37, vasee said:

  On 7/3/2026 at 02:35, Justin said:

அப்படியானால் "ஏன் 60% யுரேனியம் செறிவாக்கல்?" என்ற கேள்விக்கு "ஈரான் அணுவாயுதம் தயாரிக்க முயல்கிறது" என்பது தான் யாரும் ஊகிக்கக் கூடிய பதில்.

அதற்கு எனது அந்த திரியில்👇

On 7/3/2026 at 06:37, vasee said:

மருத்துவ, அணுசக்தியில் இயங்கும் இயந்திரம் போன்ற பயன்பாட்டிற்கும் 60% செறிவாக்கல் உதவுகிறது.

IAEA ஈரான் அணுகுண்டை தயாரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறிய செய்தியினையும் அந்த திரியிலேயே இணைத்துள்ளேன்

https://www.middleeastmonitor.com/20260304-iaea-says-no-evidence-iran-is-building-a-nuclear-bomb/

IAEA துறைசார் வல்லுனர்களின் கருத்தினடிப்படையில் அணுகுண்டு தயாரிக்காவில்லை என கூறும் நிலையில் நீங்கள் 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் அணுகுண்டிற்கு மட்டும்தான் பயன்படுத்தப்படுவது (90% செறிவூட்டலின் பின்னரே அணுகுண்டு தயாரிப்பினை மேற்கொள்ளலாம் என கூறுகிறார்கள், நான் துறைசார் நிபுணன் இல்லை) எனும் உங்கள் கருத்திற்கான பதிவினை நீங்கள் இப்போதும் எவ்வாறு புரிந்து கொண்டுள்ளீர்களோ தெரியவில்லை.

நான் வெளிநாடு வந்த காலத்தில் என்னை பார்க்க வந்த ஒருவர் என்னை காரில் அழைத்து சென்றார், நாங்கள் மொத்தம் 5 பேர் அந்த காரில் பயணித்தோம், நகரத்திற்கு செல்லும் ஒரு குறுகலான இரு வழிப்பாதையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாலை நேரமாக நினைவுள்ளது.

காரினை ஒரு "U" வடிவ திருப்பம் ஒன்றினை அந்த நெரிசலில் மிகவும் சிரமப்பட்டு எடுத்தார், அது இலகுவாக இருக்கவில்லை, துரதிர்ஸ்டவசமாக எங்கிருந்தோ திடீரென காவல் துறை வாகனம் (சாதாரண கார் போல) வந்து எமக்கருகில் நிறுத்தி விசாரணையில் ஈடுபட்டார், காரை ஓட்டினவர் பயிலுனர் அனுமதி அட்டை மட்டுமே வைத்திருந்தார் (காரில் வெளிப்புறத்தில் பயிலுனர் எனும் இலச்சினை வைத்திருந்தாரா என்பது நினைவில்லை).

காவல் துறையில் இருந்த பெண்மணியிடம் காரை ஓட்டினவர் நான் நீண்டகாலமாக கார் ஓட்டுகிறேன் என அவரது பேச்சிற்கு எதிர் பேச்சாக பேசிக்கொண்டிருந்தார், உள்ளே இருந்த எனக்கு இவர் எதற்காக அந்தப்பெண்மணியிடம் வம்பிழுக்கிறார் என திகைப்பாக இருந்தது, காரை ஓட்டியவரரது சாரதி அனுமதி பத்திரத்தினை வாங்கிக்கொண்டு காருக்கு வந்து சாரதி ஆசனத்திற்கு அருகில் அமர்ந்திருந்தவரிடம் உனக்கு சாரதி முழு அனுமதி பத்திரம் உள்ளதா? என கேட்டார், அதற்கு அவர் இல்லை என கூறினார்.

பயிலுனர் சாரதி அனுமதிப்பத்திரத்துடன் சரியான மேற்பார்வையின்றி வாகனம் செலுத்தியமை, போக்குவரத்து நெரிசல் உண்டாக்கியமை என இரு அபராதங்களை விதித்து விட்டு சென்றார்கள் (ஆனால் தொடர்ந்து பயணிக்க அனுமதித்தார்கள்?)

நான் முதலில் இவர் வம்பிழுத்ததாக நினைத்தேன் பின்னர் அவரரது ஆங்கில புலமை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே இருந்ததால் அவர் தனது வாகன செலுத்தும் திறமையின்மையினாலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக காவல் துறை நினைத்திருக்க கூடும் என நினைத்து அவ்வாறு கூறினாரோ தெரியவில்லை என நினைக்கிறேன்.

IAEA தெரியாத விடயம் ஜஸ்ரினிற்கு தெரிகிறது என்பதால் எனக்கு முரண்பாடெதுவும் இல்லை (இப்படியும் இருக்குமோ என்பதே எனது அபிப்பிராயம்).

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

ஈரானியர்கள் மகிழ்ச்சியை நேரிலே பார்க்கின்றோமே. புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற சில தமிழர்களுக்கு என்ன பிரச்சனையாம்

இது வேற பிரச்ச்னை….

ஓம்

9 hours ago, goshan_che said:

8 க்கும் 5 க்கும் வித்தியாசம் தெரியாத நுனிப்புல் மேய்தல்+சதிக்கோட்பாட்டு மனநிலை+ அரைகுறை ஆங்கிலத்தினூடு விளங்கி கொள்ளமுனைதல்+வேற்று கிரக மொழியாளுமை எல்லாமும் சேர்ந்த ஒரு வித மாய உலகத்தில் வாழ்வதன் பிரதிபலன்.

ஆனால் பாருங்கள் இவர்களின் மாய உலகத்தில் எப்போதும் சர்வாதிகாரிகளு ம் கொடுங்கோலர்களுமே இவர்களுக்கு ஹீரோவாக இருப்பார்கள். ஆனால் அந்த மாய உலகத்தில் வாழும் போது கூட அவர்கள் சொந்த வாழ்கையில் மட்டும் புத்தி கூர்மை நன்றாக வேலை செய்யும் கொடுங்கோல் ஆட்சியாளர்களிடம் இருந்து விலகி சென்று கிலோ மீட்டர்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் இடைவெளியை ஆவது பாதுகாப்பு கருதி கடைபிடித்து கொள்வார்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.