Jump to content

நிலக்கடலை சுண்டல்


Recommended Posts

உடனே இது எங்க சுண்டலா என்று கேட்பீர்களே? இங்கு கேட்கலை என்றால் கூட தனிமடலிலாவது கேட்பீர்களே..அது தான் முதலே சொல்லிடுறேன்.

2.jpg

இனி செய்முறையை பற்றி:

இப்போதெல்லாம் அடிக்கடி இந்திய உணவுகளை வீட்டில் சமைக்கும் எனக்கு ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இவை பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலம் ஈழத்து சமையல்களை தெரிந்து கொண்ட போதும், இந்திய சமையல் முறைகளை அறிந்து கொள்ள நினைத்த போது, பெரிதும் உதவியாக இருந்தது இணையம் தான். இணையத்தில் செய்முறைகளை பார்த்து தான் இந்திய சமையலை பற்றி தெரிந்து கொண்டேன், சமைத்துப்பார்க்கவும் கற்றுக்கொண்டேன். இதன் மூலம் பல நல்ல சமையல் முறைகளை கற்றுக்கொண்டு அவற்றை எப்படி மாற்றி சமைக்கலாம், எப்படி கொழுப்பை குறைக்கலாம் (சமையலில்), எப்படி இங்கு கிடைக்கும் பொருட்களை கொண்டு சமைக்கலாம் என பல ஆராய்ச்சிகளை செய்வது வழக்கம். இணையம் எனக்கு பல நல்ல சமையல்வித்தகர்களை அடையாளம் காட்டியுள்ளது. அப்படி ஒருவரின் செய்முறையை தான் இந்த பதிவில் பார்க்கவுள்ளீர்கள்.

செய்முறை: தாளிக்கும் ஓசையில் இருந்து எடுத்த செய்முறை. நல்ல செய்முறையாக இருந்ததால் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேவையான பொருள்கள்:

நிலக்கடலை - 1 கிலோ

பச்சை மிளகாய் - 5

இஞ்சி - சிறிய துண்டு (விரும்பினால்)

தேங்காய் - 1 1/2 கப்

எள்- 1 டேபிள்ஸ்பூன்

கசகசா - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க: எண்ணெய், கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

* நிலக்கடலையை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

* ஊறிய கடலையை ஒரு கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 3 விசில் வரை வைத்து நன்கு வேகவைத்து, மீண்டும் நீரை வடிக்கவும்.

* எள், கசகசாவை வறட்டு வாணலியில் நன்கு வறுத்து மிக்ஸியில் நைசாகப் பொடிக்கவும். (வறுக்காவிடில் கசகசா மசியாது.)

* இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காயை உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

* அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

* வேகவைத்த கடலை, அரைத்த விழுது சேர்த்து நன்கு நீர்ப்பசை இல்லாதவாறு வதக்கவும்.

* இறக்கும் முன் அரைத்த பொடியைத் தூவி மேலும் இரண்டு நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

* மற்ற சுண்டல்களை விட நிலக்கடலை அதிகப் பித்தம் சேர்க்கும். இஞ்சி சேர்ப்பது நல்லது.

* எளிமையாக எதுவுமே அரைத்துவிடாமல், காய்ந்த மிளகாய் தாளித்து, தேங்காய்த் துருவல் மட்டும் சேர்த்தும் செய்யலாம்.

* சுண்டல் மிஞ்சினால் அரைத்துவிட்ட கூட்டு, குழம்பில் சேர்க்கலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹிஹி அதானே பாத்தன் என்னவச்சு பாப்ஸ் காமடி கீமடி ஏதாச்சும் பன்னிதான்னு... சோ பாப்ஸ் வாட்ஸ் அப்? :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான சமையலா இருக்கே . இணைப்புக்கு நன்றி

Link to comment
Share on other sites

எப்படி கொழுப்பை குறைக்கலாம் (சமையலில்),

நல்லவேளை சமையலில் என்று அடைப்புக்குள்

போட்டீங்கள்... :lol:

சுண்டல் மிஞ்சினால் அரைத்துவிட்ட கூட்டு, குழம்பில் சேர்க்கலாம்.

நம்மட சுண்டல சொல்லவில்லை தானே? :lol:

சொல்ல மறந்துட்டேன் நன்றி தூயா :D

Link to comment
Share on other sites

அட சுண்டல் அண்ணாவின் பெயர் இவ்வளவு பேமஸ் ஆகீட்டோ :D ............படத்தை பார்க்க சாப்பிட வேண்டும் போல தான் இருக்கு தூயிஸ் ஒருக்கா செய்து அனுப்பிவிடுங்கோவேன் பேபிக்கு!! :lol: சுண்டல் அண்ணாவின் சுண்டல் பிசினசிற்கு போட்டியா நிலக்கடலை சுண்டல் வந்திட்டு போல :lol: ..............அட நன்றி சொல்ல வேண்டுமோ செய்முறைக்கு நன்றி தூயிஸ்!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இப்போதுதான் பார்க்கிறேன். நல்லாயிருக்கும் என்றுதான் நினைக்கிறேன். இனைப்புக்கு நன்றி சகோதரி. :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

சென்றமாதம் ஒரு இந்திய நண்பரின் மகனின் பிறந்தநாள் விழாவில் இந்த சுண்டல் சாப்பிட்டேன். நல்ல ருசி.

Link to comment
Share on other sites

:rolleyes: இதை நான் சரவணபவன் உணவகத்தில் சாப்பிட்டனான் நல்லா இருந்தது, எப்படி செய்றது என்று தெரியாது இருந்தனான்.நன்றி தூயா
Link to comment
Share on other sites

இனைப்புக்கு நன்றி.

:)

ஹிஹிஹி அதானே பாத்தன் என்னவச்சு பாப்ஸ் காமடி கீமடி ஏதாச்சும் பன்னிதான்னு... சோ பாப்ஸ் வாட்ஸ் அப்? :D:D

ச்சே ச்சே அப்படி என்றால் சொல்லிடுவோமே முன்னாடியே..கிகி :D

வித்தியாசமான சமையலா இருக்கே . இணைப்புக்கு நன்றி

சுவையும் நன்றாக தான் இருந்தது..முயற்சித்து பாருங்கள்

நல்லவேளை சமையலில் என்று அடைப்புக்குள்

போட்டீங்கள்... :D

நம்மட சுண்டல சொல்லவில்லை தானே? :icon_idea:

சொல்ல மறந்துட்டேன் நன்றி தூயா :)

தெரியும்ல எனக்கு உங்கள பத்தி..அது தான் அடைப்புக்குள் போடுறது... ;)

சுண்டலை சொல்லறேனா இல்லையான்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க வசிண்ணா...

நல்லவேளை நன்றி சொல்லிட்டிங்க..இல்லேன்னா பிரச்சனை ஆகி இருக்கும் :P

அட சுண்டல் அண்ணாவின் பெயர் இவ்வளவு பேமஸ் ஆகீட்டோ :( ............படத்தை பார்க்க சாப்பிட வேண்டும் போல தான் இருக்கு தூயிஸ் ஒருக்கா செய்து அனுப்பிவிடுங்கோவேன் பேபிக்கு!! :

அப்ப நான் வரட்டா!!

சரி அனுப்பிவிடுறேன்..சுண்டலிடமே குடுத்துவிடுகின்றேன்..

நானும் இப்போதுதான் பார்க்கிறேன். நல்லாயிருக்கும் என்றுதான் நினைக்கிறேன். இனைப்புக்கு நன்றி சகோதரி. :D:D

நானும் முதல்முறையாக தான் சமைத்தேன்..சுவை நன்றாகத்தான் இருந்தது..

இணைப்புக்கு நன்றி தூயா.

முயற்சித்து பார்த்துவிட்டு சொல்லுங்க்கள்

சென்றமாதம் ஒரு இந்திய நண்பரின் மகனின் பிறந்தநாள் விழாவில் இந்த சுண்டல் சாப்பிட்டேன். நல்ல ருசி.

அப்படியா? பார்ப்பதற்கு இப்படி இருந்ததா? நிறத்தில் வித்தியாசம் இருந்ததா?

இதை நான் சரவணபவன் உணவகத்தில் சாப்பிட்டனான் நல்லா இருந்தது, எப்படி செய்றது என்று தெரியாது இருந்தனான்.நன்றி தூயா

இந்தியாவில் உள்ள சரவணபவனா?

Link to comment
Share on other sites

அப்படியா? பார்ப்பதற்கு இப்படி இருந்ததா? நிறத்தில் வித்தியாசம் இருந்ததா?

அதில் கரட் சேர்க்கப்பட்டிருந்ததால் நிறத்தில் மஞசல் தன்னை காணப்பட்டது. மற்றும் இது போன்ற கலவையாகத்தானிருந்தது.

Link to comment
Share on other sites

இல்லை தூயா கனடாவில் உள்ள சரவணபவணில்

ஓ அங்கும் இருக்கா...!!!!!!!!!

அப்படியா? பார்ப்பதற்கு இப்படி இருந்ததா? நிறத்தில் வித்தியாசம் இருந்ததா?

அதில் கரட் சேர்க்கப்பட்டிருந்ததால் நிறத்தில் மஞசல் தன்னை காணப்பட்டது. மற்றும் இது போன்ற கலவையாகத்தானிருந்தது.

மஞ்சள் சேர்த்திருப்பார்கள் என நினைக்கின்றேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இச் சுன்டலைச் செய்து சாப்பிட்டேன் மிக நன்றாகவிருந்தது. படத்திலிருந்த மாதிரியே அதே அழகில் நன்றாக வந்திருந்தது.

செய்முறைக்கு நன்றி தூயா. :icon_idea::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒம். உண்மை தான் ஆனால்  ஜேர்மனியன்.  ஆள்வான்    ஆளப் போகிறாரன். 🤣😂
    • இங்க இப்படி நடந்து கொள்வது பாகிஸ்தானிகள். அண்ணன், தம்பி, மச்சான், மாப்பிள்ளை, மகன் என கூட்டாக சேர்ந்து அரசின் பராமரிப்பில் இருக்கும் 12-19 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பல சம்பவங்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க படுகிறது. ஏனைய கலாச்சார பெண்கள் என்றால் போக பொருட்கள் என சொல்லி கொடுக்கும் மதம், கலாச்சாரம், சமூகம்தான் காரணம். நீங்கள் ஆறரை அடி உயரத்தில், எம் ஜி ஆர் கலரில் தக தக என மின்னுவதால் உங்களை ஆப்கானி என நினைக்கிறார்கள் போலும்🤣. 
    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
    • தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள்  இரண்டு மூன்று  மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு  தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள்  ஆனால்  வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள்    வேலையில். சேர்ந்தால்.  500. .....1000,.......2000. யூரோக்கள்.  நன்கொடை. தரலாம். என்கிறார்கள்    இந்த தொழிலாளர்கள் ஏன்??   ஆரமப சம்பளம்  15 யூரோ   நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை   சும்மா  9,....10,.யூரோக்கு    உடம்மை  முறித்துக்கொண்டது தான்   கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம்    இப்போது மிகச் சுலபம்    🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.