Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணீரின்றிய மரணங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

abortionbqz2.jpg

கருக்கலைப்பு மூலம் கொல்லப்பட்ட சிசு.

உயிராய் முளைத்த

அவர் காதலில்...

பூவாய் மலர்ந்தேன்

செடியாகும் கனவோடு..!

கருவறை தந்தவள்

கருணையே இன்றி

பாதியில் பறித்தாளே

சாய்த்தாளே என்னுயிர்.!

கண்ணீர் கூட

காணிக்கை இல்லை

உரிமைகள் கூட

எழுத்தில் இல்லை

கருக்கலைப்பென்று

வாழ்வை அழிப்பவரே

ஒரு கணம்...

எனக்காய் அழுவீரோ..??!

இல்லை

தொலைந்தது தரித்திரம்

சரித்திரம் படைபீரோ..??!

நீரும் ஓர் நாள்

கருவோடு இருந்தீர்

மறந்தீரே

துணிந்தீரே

பாதகரே..!

கண நேர

சுகத்துக்காய்

ஏனென்னை

பலியிட்டீர்...

சிதைக்கின்றீர்

தளிருடலை..!

பிறந்ததும் கொஞ்சும்

உறவு

பிறக்க முன்

பாடையில் போவது

பாவமில்லையோ..??!

தளைக்க மானுடம்..!!!

கருக்கலைப்பு ஆண்டுக்கு - கிட்டத்தட்ட 46 மில்லியன்கள்.

தினமும் 126,000 சிசுக்கள் உலகில் கருக்கலைப்பால் அழிக்கப்படுகின்றன.

நெடுக்கு,

ஓர் உயிர் என்று விஞ்ஞான ரீதியாக, மற்றும் மருத்துவ ரீதியாக எப்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது? குழந்தை பிறந்ததன் பின் தானே?

குழந்தை தாயின் உடலைவிட்டு வெளியேறமுன் அதை உயிர் உள்ள குழந்தையாக மருத்துவம் ஏற்றுக்கொள்கின்றதா? அதாவது அந்தக் குழந்தைக்கு உணர்வுகள் இருக்கின்றதா? எனக்கு தெரியாது. எனவேதான் கேட்கின்றேன்.

குழந்தை தாயின் வயிற்றினுள் இருப்பது அப்படியாயின் ஏன் இன்னும் சட்டத்தின் அங்கீகாரத்தை பெறவில்லை? சட்டம் ஏன் அதை ஓர் உயிராக தாயின் வயிற்றினுள் இருக்கும் குழந்தையை இன்னும் அங்கீகரிக்கவில்லை?

மேலைத்தேய நாடுகளில் பெண்கள் குழந்தையை சுமப்பதும், விடுவதும், பெறுவதும் தமது தனிமனித உரிமை என்று போராட்டம் செய்து வருகின்றார்கள்.

ஓர் உதாரணத்திற்கு சொல்கின்றேன். மேலைத்தேய நாடுகளில் சில சிறுமிகள் சுமார் பதின்மூன்று வயதில் கூட கர்ப்பம் அடைகின்றார்கள். இந்தச்சிறுமிகள் குழந்தையை பெற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கதா?

ஓர் பெற்றோராய் இருப்பவர்கள் தமது பதின்மூன்று வயதுச் சிறுமி மகப்பேறு அடைவதை வரவேற்பார்களா?

மேலும், குறைபாடுள்ள குழந்தைகள் பிறந்தால் என்ன செய்வது? ஸ்கான் செய்து பார்க்கும்போது குழந்தையின் பகுதிகள் வளர்ச்சிகுன்றி, அங்கவீனப்பட்டு இருப்பது அவதானிக்கப்பட்டால் அந்தச் சிசுக்கள் இந்த உலகில் வாழ்வது சாத்தியமா?

பூரண உடல்வளர்ச்சி உள்ளவனே இங்கு வாழ்க்கையில் நாயாய்ப்படுகின்றான். இந்த நிலையில் உடல் அவயவங்களில் குறைபாடுகள் உள்ள குழந்தைகளை அப்படிப் பிறக்கப்போகின்றது என்று தெரிந்தும், அதை வரவேற்பது உங்கள் பெருந்தன்மையாக இருந்தாலும், நீங்கள் உங்களை அந்தக்குழந்தையாக நினைத்துப்பார்க்கும் சமயத்தில் அதை வரவேற்கமாட்டீர்கள்.

24 மணிநேரமும் ஒட்சிசன் சிலிண்டர், கையிலும், காலிலும் ஊசிகள், சேலைன் வழங்கல்கள், சத்திரசிகிச்சைகள், தொடர்ச்சியான வேதனைகள், மருந்துக்குளிகைகள்.. இப்படி வைத்தியசாலையில் பிறந்தபின்பு தனது ஆயுளைக் கழிப்பதைவிட தாயின் வயிற்றினுள்ளேயே ஆயுளை முடித்துக்கொள்வதில் உங்களுக்கு உடன்பாடு இருக்காவிட்டாலும் அந்தக்குழந்தைக்கு உடன்பாடு இருக்கக்கூடும்.

பெண்சிசுக்கள் என்று கண்டுபிடித்ததும் அவற்றை இவ்வாறு கொலை செய்வது வேறு பிரச்சனை. அதைப்பற்றி நான் இங்கு கதைக்கவில்லை. உங்கள் கவிதை அவ்வாறான நிலமைக்கு முற்றிலும் பொருத்தமானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் என்று தனிக்கலமான அமீபாவே தெரிவு செய்யப்படும் போது பல கல நிலையில் உள்ள வளரும் சிசு எப்படி உயிரற்ற சடமாகும்..??!

சிசு என்பது ஒரு முதிர் மனிதனுக்குரிய முளைய நிலை. உயிர் என்பதற்கு எல்லா வகையான அடிப்படைகளும் அதற்கு உண்டு..!

உணர்வு.. நீங்கள் எந்த உணர்வைக் கேட்கிறீர்கள். மூளை வளர்ந்து அனுபவத்தால் பெறும் தகவல்களைச் சேகரித்து வைத்து அதற்கேற்ப உணரப்படும் உணர்வுகளையா..??! இல்ல முளைய நிலையில் மனித சிசு உணரும் உணர்வுகளையா..??! முளையம் கூட உணர்வுகளைத் தாக்கி இருக்கிறது. அது படிப்படியாக வளர்ந்தும் வருகிறது. அந்த உணர்வுகளின் பரிமானம் மாறுபட்டதாக அமைந்திருக்கும்..!

"பெண்சிசுக்கள் என்று கண்டுபிடித்ததும் அவற்றை இவ்வாறு கொலை செய்வது வேறு பிரச்சனை. அதைப்பற்றி நான் இங்கு கதைக்கவில்லை. உங்கள் கவிதை அவ்வாறான நிலமைக்கு முற்றிலும் பொருத்தமானது"

நான் சிசுக்களை ஆண் பெண் என்று பிரித்துப் பேசவில்லை. பெண் சிசுவை தேர்வு செய்து அழிப்பதும் ஒன்றுதான் தேர்வு செய்யாமல் சிசுக்களை அழிப்பதும் ஒன்றுதான். கருக்கலைப்பை ஆதரிப்பின் பெண் சிசுவை தேர்வு செய்தழிப்பதையும் ஏற்றுக் கொண்டேதான் ஆக வேண்டும். அதுவும் தனிமனித சுதந்திரம். தான் பெற்றுக் கொள்ளும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்று தேர்வு செய்யும் உரிமை ஒரு பெண்ணுக்கு ஏன் இருக்கக் கூடாது..???! ஒரு கருவை அழிக்க அல்லது தாங்க உரிமை பற்றிப் பேசும் நாம்.. பெண் என்று வந்ததும் அந்த உரிமைகளைப் பறிப்பது எப்படி நியாயமாகும்..???! ஆக உரிமை என்பது மனித தேவைப்பாடுகளால் எல்லையிடப்படுகிறதா இயற்கையால் நிர்ணயிக்கப்படுகிறதா..???! அல்லது இயற்கையில் எழுந்த மனித பகுத்துணர்வால் தீர்மானிக்கப்படுகிறதா..??! மனித தேவைப்பாடுகளால் அதிகாரமுள்ள சக்திகளால் தீர்மானிக்கப்படுவதே இன்றைய மனித உரிமைகள்..!

13 வயதில் உடலுறவு கொள்ள மரண தண்டனை விதியுங்கள். பல சிசுக்கள் கொல்லப்படுவதை தடுக்கலாம் அல்லவா..???! ஏன் செய்கிறார்கள் இல்லை..???!

கருவை தாங்குவதும் விடுவதும் பெண்களின் உரிமை என்பதற்கும் மேலாக இயற்கையின் உரிமை என்பதுதான் யதார்த்தமானது. பெண்கள் கணணிகள் போல மனிதனின் படைப்பல்ல. இயற்கையின் படைப்பு. ஆண்களும் அப்படித்தான்.

ஒரு ஆணுடன் உடலுறவு கொள்ளும் போதுதான் பெண் கற்பமடைகிறாள். ஆக.. அங்கு பெண் உடலுறவுக்குள் வைத்திருக்கும் சுதந்திரம் என்பதுதான் முக்கியமாகிறது. பெண்களின் உடலுறவுச் சுதந்திரம் 15 வயசு என்று தீர்மானிக்கின்ற மனிதன்.. (இயற்கை அப்படித் தீர்மானிக்கல்ல) ஏன் பெண்கள் கருக்கலைப்பு நிகழத்தக்க வகையில் உடலுறவு கொள்வதை சட்டத்தால் தடுக்க முடியாது..??! அல்லது உடலுறவின் போது தேவையற்ற கரு உருவாவததைத் தடுக்க கடும் சட்ட நடைமுறைகளை அமுல்படுத்தக் கூடாது..??!

கரு ஒன்றை உருவாக்கி அதைக் கலைக்க நேரிட்டாலோ அல்லது அனாதையாக விட்டாலோ.. கொன்றாலோ அதற்கான தண்டனை குறித்த பெண் முட்டை உருவாக்க முடியாத காலம் வரை சிறை இருக்க வேண்டும் என்று வையுங்கள் எத்தனை பெண்கள் உடலுறவின் போது தேவையற்ற கரு உருவாகமல் இருக்கு கவனம் எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்..??! பதிலுக்கு ஆண்களுக்கு என்ன தண்டனை என்று கேட்பீர்கள் அதை தண்டனை பெறும் பெண்கள் தீர்மானிக்க அனுமதிக்கலாம்.

ஏன் அதைச் செய்கிறார்கள் இல்லை. கருக்கலைப்பை மட்டும் செய்யத் தூண்டுகிறார்கள்..??! இங்குதான் மனிதப் பிறழ்வுகளை நான் இனங்காண்கிறேன்.

நான் அடிப்படையில் மனித சிசுப் படுகொலைகளைத் தவிர்க்க இறுக்கமான சமூக அறிவூட்டல்கள் ஒழுக்கங்கள் புகுத்தபடுதல் அவசியம் என்று உணர்கிறேன்..!

ஒழுக்கமற்ற கட்டுப்பாடற்ற பாலியல் நடத்தைகளே இவ்வாறான சிசுக்கள் உருவாகவும் அழிக்கப்படவும் வித்திடுகின்றன..! நீங்கள் இதை ஏற்றுக் கொள்வீர்கள் என்றால்.. அதற்கான தீர்வைப் பற்றி சிந்தியுங்கள்..! :lol:

24 மணிநேரமும் ஒட்சிசன் சிலிண்டர், கையிலும், காலிலும் ஊசிகள், சேலைன் வழங்கல்கள், சத்திரசிகிச்சைகள், தொடர்ச்சியான வேதனைகள், மருந்துக்குளிகைகள்.. இப்படி வைத்தியசாலையில் பிறந்தபின்பு தனது ஆயுளைக் கழிப்பதைவிட தாயின் வயிற்றினுள்ளேயே ஆயுளை முடித்துக்கொள்வதில் உங்களுக்கு உடன்பாடு இருக்காவிட்டாலும் அந்தக்குழந்தைக்கு உடன்பாடு இருக்கக்கூடும்.

இதை தீர்மானிக்கும் சக்தி கருவில் உள்ள குழந்தைக்கு இருப்பதாகக் கருதுவது வெளியில் உள்ள மனிதர்களே அன்றி குறித்த குழந்தையல்ல. மனிதர்கள் தீர்மானிக்க முடியாது யார் வாழ வேண்டும் யார் வாழக் கூடாது என்று. அதற்குத்தான் இயற்கை இருக்கிறது. அது தேர்வு செய்யும் வாழ வேண்டியதையும் அழிக்க வேண்டியதையும்..! மனிதன் உருவாக்கி வைத்துள்ள உலகத்துக்குள் வாழ முடியாது என்பதற்காக இயற்கையில் அது வாழ முடியாது என்று எப்படி மனிதன் தீர்மானிக்க முடியும்..! இயற்கை தீர்மானிக்கட்டும் இடமளியுங்கள். அதுதான் உயிரின் உரிமை..! :lol:

Edited by nedukkalapoovan

நெடுக்கு,

உயிருக்கு உங்கள் துறைசார் வரைவிலக்கணங்களோ அல்லது மனிதநேய விளக்கங்களோ இங்கு தேவையில்லை...ஏன் பெண் சிசு அல்லது ஆரோக்கியமற்ற குழந்தைகள்தான் கருக்கலைக்கப்படுகின்றன என்ற பிழையான எடுகோளில் தொடர்கிறீர்கள்...அவை மட்டுமா? யதார்த்தம் சொல்லுது...கண்களை மட்டுமல்ல மூளை ..மனம் எல்லாம் பரந்து நோக்கப்பட வேண்டும்...நியாயப்படுத்தல்கள

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு,

உயிருக்கு உங்கள் துறைசார் வரைவிலக்கணங்களோ அல்லது மனிதநேய விளக்கங்களோ இங்கு தேவையில்லை...ஏன் பெண் சிசு அல்லது ஆரோக்கியமற்ற குழந்தைகள்தான் கருக்கலைக்கப்படுகின்றன என்ற பிழையான எடுகோளில் தொடர்கிறீர்கள்...அவை மட்டுமா? யதார்த்தம் சொல்லுது...கண்களை மட்டுமல்ல மூளை ..மனம் எல்லாம் பரந்து நோக்கப்பட வேண்டும்... நியாயப்படுத்தல்கள் விட்டுவிட்டு பிரயோசனமாய் ஏதும் செய்யப்பாருங்கோ....

நீங்கள் யாருக்கு என்ன சொல்லுறீங்க என்றது குழப்பமாகவே இருக்குது பானு..! :lol::o

Edited by nedukkalapoovan

கரு உண்டாவதற்கு முன்னர் கரு உண்டாகாமல் தடுக்கும் விழிப்புணர்ச்சி மக்களிடம் ஒழுங்கான முறையில் புகட்டப்படாதலே கருக்கலைப்பு மூலம் சிசுக் கொலைக்கு கூடுதல் காரணமாக அமைகின்றது....!

கவிதை அருமை.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை நெடுக்ஸ்.இன்று கொலை செய்யப்படுவது குழந்தையல்ல.நாளைய ஞானி,விஞ்ஞானி,வழிகாட்டும் தலைவன்,தலைவி,கவிஞன்,சிந்தனைய

பாராட்டுக்கள். பயனுள்ள கவிதை.

"கருகலைப்பை" பற்றிய நெடுக்ஸ் தாத்தாவின் கவிதை கண்ணீரை வரவழைத்து செல்கிறது தாத்தா போட்ட படத்தை பார்க்கவே கவலையாக இருக்கிறது :o !!ஒரு நாளைக்கு இவ்வாறு 126,000 சிசுகள் கலைக்கபடும் தகவலை தாத்தா மூலம் அறிந்தேன் நினைக்கவே வேதனையாக இருக்கிறது :lol: .....ஆனா தாத்தா நேக்கு ஒரு சந்தேகம் சபோஸ் ஒரு வேளை சிசுவை அழித்தா தான் தாயை காப்பாற்றலாம் என்று வைத்து கொள்ளுங்கோ அப்போது அதனை அழிக்க தானே வேண்டும் இது தானே நியதி தாத்தா :icon_idea: !!என்றாலும் உங்கள் கவிதை வரிகள் மனதை தொட்டு செல்லும் வரிகள் தாத்தா.............

பிறந்ததும் கொஞ்சும்

உறவு

பிறக்க முன்

பாடையில் போவது

பாவமில்லையோ..??!

தளைக்க மானுடம்..!!!

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை!!

பிறந்த பின்னும்

ஒரு நாள் பாடை தான்

அதை காவ நாலு பேர்!!

தீயை மூட்டியவுடன்

அதுவும் கண்ணீரான உறவு

கருவரையில் கலைந்து போகும் நீயும்

கண்ணீரான உறவு தான்!!

இரு நாள் உலகு வடிக்கும் கண்ணீர் மறுநாள்

திருமணத்தில் சிரிபோலி!!

இது தான் உலகு தாத்தா......... :lol:

கருக்கலைப்பு கவிதை நல்லாக இருக்கு.

கருக்கலைப்பு க்கு முன்னரே கருக்கட்டலை தவிர்க்கும் விழிப்புணர்ச்சி மக்களிடத்தே இல்லாமல் கரு உண்டாகீய பின் ஏந்தான் கலைப்பு செய்கிறார்களோ? அதற்கு மூளையய யோசிக்கும்போது கருக்கட்டலுக்கும் யோசிக்கலாமே.

அதுசரி கருக்கலைப்பு செய்ய கூடுதலாக உந்துதலாக இருப்பவர்கள் ஆண்களா பெண்களா?

கருக்கலைப்பு கவிதை நல்லாக இருக்கு.

கருக்கலைப்பு க்கு முன்னரே கருக்கட்டலை தவிர்க்கும் விழிப்புணர்ச்சி மக்களிடத்தே இல்லாமல் கரு உண்டாகீய பின் ஏந்தான் கலைப்பு செய்கிறார்களோ? அதற்கு மூளையய யோசிக்கும்போது கருக்கட்டலுக்கும் யோசிக்கலாமே.

அதுசரி கருக்கலைப்பு செய்ய கூடுதலாக உந்துதலாக இருப்பவர்கள் ஆண்களா பெண்களா?

இதுகூடத்தெரியாதா..?? கருவைச் சுமப்பவர்கள் பெண்கள்தானே... பெண்களின் ஒப்புதலின்றி எப்படி கரு உண்டாகமுடியும் ..? அல்லது கருச்சிதைவு செய்வதாம் :lol::o

  • கருத்துக்கள உறவுகள்

கருக்கலைப்பு மூலம் கொல்லப்பட்ட சிசு வடித்த கவிதை அழகு .

கருக்கலைப்பு வேதனைதான் ஒவ்வொருவர்க மனசிலயும் எத்தனை எத்தனை பிரச்சனைகள் இருக்கு. அதன் வெளிப்பாடுகள் கருவினை சுமந்தும் பெற்றெடுக்க முடியாதநிலை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.