Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து நாட்களில் 34கி.மீ பாலம் கட்டுவது சாத்தியமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நாங்கள் ஆய்வுக்கு எடுத்திருக்கும் பொருள், "ஐந்து நாட்களில் பாலம் கட்டுவது சாத்தியமா" என்பது. :huh: இதுபற்றி திரு நெடுக்காலபோவான் அவர்களின் ராமர் பாலம் பற்றிய ஆய்வு சம்பந்தமான திரியில் கருத்துச் சொல்லியிருந்தேன். அதற்கு திரு நெடுக்ஸ் அவர்கள் சாத்தியமே என்பது போலப் பதிலளித்துள்ளார். இது ஒரு தனி விடயமாக ஆராயப்பட வேண்டிய பொருளாக எனக்குப்படுவதால் இதை ஒரு தனித்திரியாகத் தொடங்கியிருக்கிறேன்.

இப்போது சிறிது அறிவியல் ரீதியாக இந்தப் பொருளை அலசுவோம். இது சாத்தியமான ஒரு கட்டுமானமாக இருக்குமா என்பதை இன்றுள்ள மிக வளர்ச்சியுற்ற தொழில்நுட்பத்தை ஒப்பிட்டு அலசுவோம்.

பாலத்தின் நீளம் : 34 கி.மீ.

எடுத்துக்கொண்ட நாட்கள்: 5

இப்போது ஒரு நாளில் 6.8 கி.மீ. என்பது அசாதாரணமானது. இதுபோல ஒரு கட்டுமானத்தை இந்த நாட்களுக்குள் செய்து முடிக்க எவ்வளவு பிரயர்த்தனம் தேவைப்படுமென்று பார்ப்போம்.

பாலம் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்தில் மண் திட்டு இருந்ததாகவே வைத்துக்கொள்வோம். பாலமும் பாறைகளால் நிரவப்பட்ட இலகுவகை கட்டுமானமென எடுத்துக்கொள்வோம். பாறைகள் கரையோரத்திலேயே கிடைத்ததாகவே இருக்கட்டும்.

பாலத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2.0மீ. என்று வைப்போம். இல்லையென்றால் வானரப்படை இலங்கைவரை செல்வது கேள்விக்குறியாகியிருக்கலாம

post-3092-1196308263_thumb.jpg

  • Replies 81
  • Views 9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார்.. நீங்கள் எங்கே பாலம் கட்டினீர்கள்...??! 34 கிமீ மொத்த நீளம். மொத்த நீளமும் 5 நாளில் கட்டப்பட்டதா அல்லது 34 கிமீ தூரத்திற்கு அமைந்திருந்த கடல்திட்டின் கடலரித்த பகுதிகளை நிரப்பி பாதை அமைக்கப்பட்டதா...??!

இந்திய அறிவியல் மையம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் சுமார் 103 க்கும் மேற்பட்ட கடற் குன்றுகளை இணைத்து இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளது என்ற குறிப்பு உள்ளது. ஒவ்வொரு கடற்குன்றின் நீளம் அகலம் கருத்தில் எடுத்தீர்களா..??! 34 கிமீ இல் 34000 மீற்றர்கள் உள்ளன. ஒரு குன்று சராசரிக்கு 200 மீற்றர்கள் நீளம் என்று கொண்டால் கூட 20600 மீற்றர்கள் ஏலவே கடலின் தரைத்தோற்றத்தோடு இருந்திருக்கிறது என்றும் கணக்குக் காட்டலாம் டங்குவார்..??!

அப்போதைய கால தரைத்தோற்ற அமைப்புப் பற்றிய விளக்கமில்லாமல் நீங்கள் றோட்டுப் போட்டிருக்கிறீங்க. அதுமட்டுமன்றி உங்கள் அளவைகள் தற்கால அளவீடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. வானரம் என்பதன் அர்த்தம் கூட நீங்கள் எடுத்துக்கொண்ட மாதிரித்தான் இருந்தது என்பதற்குக் கூட சான்றுகள் கிடைக்கல்ல...! எது எப்படி இருப்பினும் இப்பாலம் தொடர்பான அறிவியல் ஆய்வு என்பது முக்கியமானதாக அமையப்பெற்றுள்ளது. அதன் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியம் கருதி இந்த நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அறிவியல் கொண்டு ஆராயட்டும் அனுமதியுங்கள். அதைவிடுத்து நாம் ஏன் அவசரப்பட்டு ஆளாளுக்கு கற்பனைகளால் கணக்குப் போட்டு.. பாலமில்ல.. புதர் திட்டு என்று திட்டிக் கொண்டு திரிவான். அறிவியல் இருக்கிறது. அது ஆராய்ந்து தீர்ப்புச் சொல்லட்டும். அதுவரை பொறுத்திருப்பது நல்லது.

34000 மீற்றர் புவியியல் தோற்றத்தில் ஒரு 3000 மீற்றர்களைக் கூட வெட்டி ஆழப்படுத்தப் போறதில்ல. அதால பாலமோ புவியியல் அம்சமோ முழுசா அழிக்கப்படப் போறதில்லை. எனவே சேது கால்வாய் வெட்டுவதில் பாலமோ இராமாயணமோ தடையில்லை. ஆனால் தடை.. அரசியல் காரணங்களுக்காக எழுகிறதே தவிர... அறிவியல் சார்ந்ததல்ல என்பது வெளிப்படை. இதையே சாட்டு வைத்து இந்து மக்களின் மனங்களை புண்படுத்தும் செயலை வழமையாச் செய்து அரசியல் நடத்திறவையும் சந்தட சாக்கில தங்கட பகுத்தறிவுப் புலமையைக் காட்ட வெளிக்கிட்டு அறிவியலுக்கே சவால் விடுவது தற்கால குரங்குக் கூட்டத்தின் கையில் பூமானை சிக்கிய நிலைக்கு இந்த விவகாரம் இலக்காகி விட்டது என்பது வேதனைதான்..! :huh::unsure:

Edited by nedukkalapoovan

இந்திய அறிவியல் மையம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் சுமார் 130 க்கும் மேற்பட்ட கடற் குன்றுகளை இணைத்து இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளது என்ற குறிப்பு உள்ளது.

நீங்கள் ஏற்கனவே இணைந்திருந்த "இராமர் பாலம் இருந்தது உண்மைதான் - இந்திய அறிவியல் ஆய்வு மையம்" என்ற செய்தியில் இருந்து

இந்தியா - இலங்கை இடையிலான கடல் பகுதியில் 103 குறுமலைகளை இணைத்து வானரப் படையின் உதவியுடன் 34 கிமீ தூரமுள்ள பாலத்தை ராமர் 5 நாட்களில் கட்டி முடித்தார் என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெடுக்கண்ணா இன்னும் அறிவியல் ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக வால்மீகி ராமாயணம் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதை வைத்துதான் இராமர் பாலம் இருந்தது உண்மைதான் என்று அறிக்கையை இந்திய அறிவியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

மின்னல் நீங்கள் இந்திய அறிவியல் ஆய்வு மையத்தின் அறிக்கையைச் சரிவர விளங்கிக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். அந்த அறிக்கை என்பது வான்மீகி இராமாயணம் மற்றும் இதர குறிப்புக்களின் அடிப்படையில் அங்கு இராமர் பாலம் என்ற ஒரு கட்டமைப்பு இருந்திருக்கிறது என்பதை முன் வைத்து அதனை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதி பெறும் நோக்கோடு சமர்பிக்கப்பட்டுள்ளது. வெறும் மணற்திட்டை பல கோடி செலவு செய்து அறிவியல் ஆய்வு செய்ய அனுமதிக்க முடியாது என்பதால்... அறிவியல் ஆய்வுக்கு முன்னோடியாக கிடைப்பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்பேடுகளின் படியான ஆதாரங்களூடு அதற்கான அடித்தளத்தை இட முயன்றிருக்கின்றனர். எவருமே இதுவரை இது விடயமாக ஒரு பூரணத்துவம் முக்கிய அறிவியல் ஆய்வைச் செய்யேல்ல என்பதுதான் இந்த விடயம் தொடர்பாக இழுபறியும்.. திட்டுக்களும்.. சோடிப்புகளும்.. ஆளாளுக்கு தகுந்த மாதிரி புனைகதைகளும் வெளியிடவும் தொடரவும் வாய்ப்பளிக்கிறது. தேவையற்ற சமூக அமைதியின்மையை ஏற்படுத்துகிறது. எனவே இந்த புவியியல் அமைப்புப் பற்றிய அறிவியல் ஆய்வென்பது அனுமதிக்கப்படும் போது மட்டுமே உண்மைகள் வெளிப்படும். அதுக்கு முன்னோடியான அறிக்கையை வைத்துக் கொண்டு.. அது அறிவியல் அறிக்கை என்று இனங்காண்பது மிகத்தவறானது. :huh:

பெங்களூர்: ராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக பெங்களூர், இந்திய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ராமர் பாலம் குறித்து முழுமையாக ஆய்வு செய்த மையத்தின் இயக்குநர் ஹரி கூறுகையில், வால்மீகி ராமாயணத்தை முழுமையாக ஆய்வு செய்து பார்த்ததில் ராமேஸ்வரம் கடல்பகுதியில் ராமர் பாலம் கட்டியிருப்பது உண்மை என்று தெரியவருகிறது.

இந்தியா - இலங்கை இடையிலான கடல் பகுதியில் 103 குறுமலைகளை இணைத்து வானரப் படையின் உதவியுடன் 34 கிமீ தூரமுள்ள பாலத்தை ராமர் 5 நாட்களில் கட்டி முடித்தார் என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்கள் இணைத்த செய்தியில் உச்ச நீதிமன்று தெளிவான ஆய்வுக்கு உத்தரவிட வேண்டுமென அந்த அமைக்கு கேட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியே புராணத்தில் இருப்பதை வைத்துக் கொண்டு வேறு எந்தவித ஆதாரமும் இல்லாமல் இராமர் பாலம் கட்டப்பட்டது உண்மை என்று இவர்களால் முடிவிற்கு வர முடிந்தது என்பதே எனது கேள்வி.

புராணம் இனங்காட்டிய அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு பிற வரலாற்றுக் குறிப்பேடுகளையும் ஆராய்ந்து இந்த அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கின்றனர். வெறும் புராணம் மட்டுமல்ல அவர்களின் இந்த அறிக்கைக்கு ஆதாரமாக்கப்பட்டுள்ளது. அதிலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள் வெளிநாட்டு வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துக்கள் மற்றும் ஏறத்தாழ 600 ஆண்டுகளுக்கு முன்னரும் அப்பாதையூடு போக்குவரத்து நடந்துள்ளதாகவும்.. 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் தாக்கத்தால் குறிப்பிட்ட புவியியல் கூறு கடலில் தாழ்த்தப்பட்டுள்ளது என்றும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அறிவியல் ஆய்வுக்கு வழிகோல என்று முன்வைக்கப்பட்டுள்ள ஒரு அறிக்கையே அன்றி அறிவியல் சார்ந்த ஆய்வு முடிவல்ல...! :huh:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புஸ்பகவிமானம் எப்படி அந்தகாலத்தில் இருந்திருக்க வாய்ப்புள்ளது?

ஏன் அது சண்டைக்கு பயன்படுத்த வில்லை?

அதற்கான தொழில் நுட்பத்தை எப்படி பெற்றார்கள் ?

என்றேல்லாம் கேட்டு பாருங்கள் உடனே ஒடிவந்து கருத்துக்கள், கருத்துகளாக கொட்டுவார்கள்.

உண்மை என்னவென்றால் மூலகதையான வால்மீகி இராமாயணத்தில் அப்படி ஒரு கதையே இல்லை.

மூலக்கதையில் உள்ள படி சீதையை தோளில் வைத்து தூக்கி செல்வது கம்பனுக்கு உடன்பாடாக வில்லை ஒன்று தமிழ்கலாச்சாரம், இரண்டு பின்னாளில் இராவணன் ஏன் பலவந்தமாக சீதையை அடைய முயற்சிக்க வில்லை என்ற கோள்வி அவனை நல்லவனாக்கி விடும் அல்லவா? அதனால்தான் வில்லனை மிக மோசமான பாத்திரமாகவே உருவகம் செய்ய வேண்டும் என்பதால் சீதையை அவள் விருப்பம் இன்றி தொட்டால் அவன் இறந்துவிடுவான் என்ற மந்திர வித்தையை... தோளில் சீதையை காவ அனுமதித்தால், உபயோகிக்க முடியாது அல்லவா?

இப்படி மூலத்தில் இருந்தே முரண்பட்ட இந்த சம்பவங்களுக்கும் எங்கள் பக்கதர்கள் அறிவியல் பூர்வமாக அழகாக கதை அளப்பார்கள்.

கடவுள் நம்பிக்கை பற்றி குறை சொல்ல வில்லை. இப்படி கண்டதையும் நம்புவதை பக்தியின் தர்மமாக விரதம் பூண்டுள்ளமையை இட்டு வருத்தமாக இருக்கின்றது.

Edited by தேவன்

மூலக்கதையில் உள்ள படி சீதையை தோளில் வைத்து தூக்கி செல்வது கம்பனுக்கு உடன்பாடாக வில்லை

அப்பபோ சீதையைத் தூக்க எப்படி இலங்கையிலிருந்து இந்தியாவிற்கும் சீதையைக் கடத்திய பின்னர் எப்படி இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் இராவணனால் செல்ல முடிந்தது. இராமர் பாலம் கட்டிப்போனான். இராவணனால் எப்படிப் போகமுடிந்தது?

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அநுமான் எப்படி போனானோ அதே வித்தையைத்தான் இராவணனும் கையாண்டதாக மூலக்கதை சொல்கிறது.

கடவுளின் அவதாரத்து பாலம் தேவை.

இராவணுக்கும் தேவையில்லை. அனுமானுக்கும் தேவையில்லை.

அப்ப கடவுள் இராமனா? இராவணனா? அல்லது அனுமானா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று நாங்கள் ஆய்வுக்கு எடுத்திருக்கும் பொருள், "ஐந்து நாட்களில் பாலம் கட்டுவது சாத்தியமா" என்பது. :

கனடாவில் ஒரே நாளில் ஒரு பாலத்தை சிறிது நாட்களுக்கு முன்னர் கட்டி முடித்தார்கள்( 1-3 மாதங்களுக்கு முன்னர்)

அதன் விஸ்திரணம் அளவு பற்றி எனக்கு தெரியாது. யாருக்கும் இது பற்றி தெரிந்தால் சொல்லவும்.

கனடாவில் ஒரே நாளில் ஒரு பாலத்தை சிறிது நாட்களுக்கு முன்னர் கட்டி முடித்தார்கள்( 1-3 மாதங்களுக்கு முன்னர்)

அதன் விஸ்திரணம் அளவு பற்றி எனக்கு தெரியாது. யாருக்கும் இது பற்றி தெரிந்தால் சொல்லவும்.

கனடாவிலை குறிப்பாக ரொறன்ரோவிலை சாலைத் திருத்தங்கள் சாலையோடு தொடர்புடைய வேலைகள் எண்ட மாதக்கணக்கு வருடக்கணக்கு என்று இழுத்துக் கொண்டு செல்லுவார்கள். ஒரே நாளில் சிறு பாலத்தைக் கட்டியிருக்கிறார்களா? நம்பவே முடியேல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sorry...........:rolleyes:

They did not build at the first time. They renewed in one day in Toronto. They took old bridge out and installed new bridge in overnigt.

talk u guys latter c u 4 now...enjoy :rolleyes::wub:

Edited by tamillinux

இதிலிருந்து தெரிவது என்னவென்றால்...

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் டங்குவார்மாமா நல்லா கணக்கு விடுவார் :rolleyes: சா கணக்கு போடுவார் என்று சொல்ல வந்தனான் தங் சிலிப் ஆகிட்டு!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Sorry...........:rolleyes:

They did not build at the first time. They renewed in one day in Toronto. They took old bridge out and installed new bridge in overnigt.

talk u guys latter c u 4 now...enjoy :wub::o

அண்ணை அது எந்த இடத்தில் கட்டப்பட்டது என்று தெரியுமா?

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் டங்குவார்மாமா நல்லா கணக்கு விடுவார் :icon_mrgreen: சா கணக்கு போடுவார் என்று சொல்ல வந்தனான் தங் சிலிப் ஆகிட்டு!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

எங்க இங்கை யமுனாவைக் காணாம் எண்டு நினைச்சன் இங்கேயும் வந்திட்டீங்களா? பிளீஸ் ஒரே ஒரு கருத்து இந்த தலைப்புடன் தொடர்பாக எழுதிவிட்டுப்போங்களன்.

எங்க இங்கை யமுனாவைக் காணாம் எண்டு நினைச்சன் இங்கேயும் வந்திட்டீங்களா? பிளீஸ் ஒரே ஒரு கருத்து இந்த தலைப்புடன் தொடர்பாக எழுதிவிட்டுப்போங்களன்.

மின்னல் அண்ணா ரொம்ப பிரயோசனமான விசயம் கதைகிறியள் போல இருக்கு :o இப்படியா விசயம் எல்லாம் பேபிக்கு என்ன தெரியும் :rolleyes: நீங்களே ஒரு கருத்தை எனக்காக சொல்லிவிடுங்கோவேன்! :rolleyes: !வேண்டும் என்றா சிட்னி பிரிட்ஜ் எப்படி கட்டபட்டது என்று விவாதம் நடத்துங்கோ நான் வந்து கருத்தை சொல்லுறேன்...........

"என்னவெல்லாம் செய்றோம் உதை செய்ய மாட்டோமா" :wub:

அப்ப நான் வரட்டா!!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

(tamillinux @ Nov 29 2007, 02:22 PM)

கனடாவில் ஒரே நாளில் ஒரு பாலத்தை சிறிது நாட்களுக்கு முன்னர் கட்டி முடித்தார்கள்( 1-3 மாதங்களுக்கு முன்னர்)

அதன் விஸ்திரணம் அளவு பற்றி எனக்கு தெரியாது. யாருக்கும் இது பற்றி தெரிந்தால் சொல்லவும்.

கனடாவில் சாத்தியமில்லை.சீனாவில் என்றால் நிச்சயமாக நம்புவேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் சாத்தியமில்லை.சீனாவில் என்றால் நிச்சயமாக நம்புவேன்.

They did not build at the first time. They renewed in one day in Toronto. They took old bridge out and installed new bridge in overnigt.

அண்ணை அது எந்த இடத்தில் கட்டப்பட்டது என்று தெரியுமா?

மின்னல் எனக்கு இடம் தெரியாது. நீங்கள் TVI அல்லது எதாவது பத்திரிகையிடம் கேட்டால் சொல்வார்கள் என நினைக்கிறேன்

They did not build at the first time. They renewed in one day in Toronto. They took old bridge out and installed new bridge in overnigt.

மின்னல் எனக்கு இடம் தெரியாது. நீங்கள் TVI அல்லது எதாவது பத்திரிகையிடம் கேட்டால் சொல்வார்கள் என நினைக்கிறேன்

அப்படியா நீங்கள்தானே ஒரு நாளில் பாலம் கட்டின கதை சொன்னீர்கள். அதை நிறுவவேண்டியது நீங்கள்தானே. நானேன் போய் ரிவிஐ பத்திரிகைகளை கேட்க வேணும். ஏதாவது சொல்ல வெளிக்கிட்டால் அதுபற்றி விபரத்தைத் தெரிந்துபோட்டு எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியா நீங்கள்தானே ஒரு நாளில் பாலம் கட்டின கதை சொன்னீர்கள். அதை நிறுவவேண்டியது நீங்கள்தானே. நானேன் போய் ரிவிஐ பத்திரிகைகளை கேட்க வேணும். ஏதாவது சொல்ல வெளிக்கிட்டால் அதுபற்றி விபரத்தைத் தெரிந்துபோட்டு எழுதுங்கள்.

இதுக்கு தான் பொல்லு கொடுத்து அடிவாங்கிறது என்பதோ :lol::unsure:

http://www.nowpublic.com/canada-replaces-bridge-overnight

Edited by tamillinux

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பான யாழ்கள நேயர்களே..! இந்தத் தலைப்புக்கு பலவித எதிர்ப்புக் குரல்களும் ஒரு சில ஆதரவுக் கருத்துக்களும் வந்து சேர்ந்திருக்கின்றன..! :unsure:

முதலில் ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். இராமர் இருந்தார் / இல்லை என்பதோ அவர் பாலம் கட்டினார் / இல்லை என்பதோ, கடவுள் இருக்கிறாரா என்பதோ இங்கே விவாதப் பொருள் அல்ல. இந்திய அறிவியல் ஆய்வு மையம் இராமர் 103 குறுமலைகளை இணைத்து ஐந்து நாட்களில் பாலம் கட்டிமுடித்தார் என்று வால்மீகி ராமாயணத்தில் இருப்பதாகக் கூறுகிறது. இது சரியா என்பதே கேள்வி..

இந்தியா - இலங்கை இடையிலான கடல் பகுதியில் 103 குறுமலைகளை இணைத்து வானரப் படையின் உதவியுடன் 34 கிமீ தூரமுள்ள பாலத்தை ராமர் 5 நாட்களில் கட்டி முடித்தார் என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராமர் மனித / வானர வலுக்களை உபயோகித்திருந்தால் இது சாத்தியமற்ற ஒன்று என்பது என் கருத்து. ஒருவேளை குறுமலைகள் உண்மையிலேயே பெரிய தொடர்மலைகளாக இருந்து இடையிடையே இருந்திருக்கக்கூடிய இடைவெளிகளை கல் போட்டு நிரவியிருந்தால் அது சாத்தியம். அப்படி நடந்திருந்தால் அதைப் பாலமென்று கருத முடியாது.

மறுபுறத்தில் இராமர் கடவுளர்களுக்கே உரிய சக்திகளைப்பயன்படுத்தியிருந

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் டங்குவார்... இராமரைப் பற்றி இவ்வளவு அலசுறீங்களே தெய்வீக சக்தி படைத்த ஜேசு கிறிஸ்து கூட சிலுவை மரணம் வரை தான் இறையருள் மிக்கவன் என்று காட்டாமல் சாதாரண மனிதனாகத்தானே வாழ்ந்ததா கிறிஸ்தவம் சொல்கிறது. உயிர்ந்தெழுந்த போதுதான் அவருக்குள் இருந்த தெய்வீக மகிமை வெளிப்பட்டதாச் சொல்லுறாங்க. ஏன் இராமரும் இதே அச்சில் செயற்பட்டிருக்கக் கூடாது. அங்கால நபிகள் நாயகத்துக்குப் பின்னாடியும் நிறைய இருக்குது.

இராமர் பாலம் என்பது தற்போதைய நவீன கால பாலங்கள் போன்றது என்பதாக நீங்கள் கற்பனை செய்வதற்கு இராமாயணம் பொறுப்பல்ல. அது பாலமல்ல. கடலூடு தரையை இணைக்கும் பாதை. இடையிடையே குறுக்கடற்குன்றுகளைக் கடக்க பாலம் அமைத்திருக்கலாம் இல்லையா..??! அறிவியல் தான் தான் ஆராயிறன் என்றுதே பிறகேன் நீங்கள் இடையில இவ்வளவு கஸ்டப்படுறீங்க. அறிவியலுக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கட்டன். பாலமா.. புலுடாவா என்று..??!! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இராமர் பாலத்தை இப்போதைய நீள்-பாதைகள் போல மேலால, கீழால கட்டினது என மேலே உள்ள நண்பர் சந்தேகப்படுறார் போலக் கிடக்கு. அது உண்மையோ, பொய்யோ என்று எதுவுமே ஆராயாமல் பொய் என்று எப்படிச் சொல்லுவியள் என்ற கேள்விக்கு இது வரைக்கும் யாரும் பதிலளித்ததாகக் காணக் கிடைக்கல்லை.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வாறதற்கு மினக்கெட்டு, 40 அடியில் கட்டித் தான் வந்திருப்பான் என்ற மாதிரிக் கதைப்பதும் சரியாகப்படல்ல.

ஆனால் ஒன்று, இதைப் பற்றி யாழ்களத்தில் கதைக்க காலத்தில் நாங்கள் 4,5 பேர் சேர்ந்து கட்டி முடிச்சிருப்பம் என்பது யாராலும் மறுக்க இயலாத உண்மை. அப்படிப் பல தடவை வயிற்றெரிச்சாலோட கதைத்திருக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் விவாதக் களம் தமிழில் தட்டச்சிடும் பழக்கத்தை நன்கு ஊக்குவிக்கிறது.

பொறுமை சகிப்புத்தன்மை போன்ற பண்புகள் பெற வகை செய்கிறது.

யாழ் இணையக் குழுமத்தினரின் பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் பாராட்டுத் தராமல் இருக்க முடியாது.

சிறுவயதில் எனது அப்பா சொல்வார்

"தம்பி காகம் - வடைக் கதையை அரிவரியில் சொல்லிக் கொடுத்தால் பிள்ளைகள் ஆகா என்று இரசித்துக் கேட்பார்கள். ஆசிரியரை பெரிய ஆளாக மதிப்பார்கள். ஆனால் அதே கதையை பத்தாம் வகுப்பில் கொன்னால் என்ன நடக்கும்?" கேள்வியை முன்வைத்தே விளக்கம் தேடினார்.

"ஆசிரியருக்குத் தட்டிப் போச்சாக்கும் என்றே கருதுவம்" என்ற எனது பதில் கண்ட திருப்தியுடன் சொன்னார், "இதுதானடா அறிவு இது வளர்ந்து கொண்டே செல்லும். கடந்த காலங்களில் நாம் நடந்து கொண்ட செய்கைகள் அல்லது நினைப்புகள் பின்னர் நினைவில் வருபோது சிரிப்பாக சிலவேளைகளில் குற்ற உணர்ச்சியுடன் அருவருப்பாகவும் இருகக்கும்...." எனவாக அறிவு வளர்ச்சியை சுயவிமர்சனம் செய்யும் முறைமையைச் சொல்லித் தந்திருந்தார்.

இணையத் துளாவலில் இன்று வந்தபோது சுவையான பதிவொன்று கிடைத்தது. பொருத்தமானதாக இருப்பதால் மனம்விட்டு இரசிப்பதற்காக இதல் உள்ளிடுகிறேன்.

:lol:

- அய்யோ பாவம் ராமர்

திடீர்னு நம்ம யாகூ குரூப்புக்கு ஒரு இமெயில். ராமன் கட்டின பாலத்துக்கு ஆபத்து காப்பாத்த குரல் கொடுங்கன்னு. அடப்பாவிங்களா இப்ப எல்லாம் பாலத்துக்கு நேரமே சரி இல்லையோன்னு அந்த தளத்துக்கு போனேன். http://ramsethu.org/

ராமன் என்னைக்கு செங்கல் சுமந்து சூத்திர வேலை எல்லாம் செஞ்சாருனு யோசிச்சிகிட்டே அந்த சைட்ட போய் பார்த்தேனுங்க. சைட்ட உருவாக்கினவா யாருனு பார்த்தா, நம்ம என். ஆர். ஐ பசங்க. அவங்க எல்லாம் மெத்த படிச்ச பசங்க.. என்னோட அறியாமய கண்டு பாவப்பட்டு என் 'டவுட்'ஐ கிளியர் பண்ணுவாங்கனு நினைக்கிறேன்.

ராமன் கட்டின பாலத்த சேதப்படுத்த கூடாதுன்னு சொல்லுறது சரிதானுங்க. அதே மாதிரி கங்கை ஆத்துல இருக்குற அம்புட்டு பாலத்தையும் இடிக்க சொல்லணுமுங்க. கங்கை சிவபெருமானோட தலைல இருந்து வந்தது இல்லையாங்க? அத எப்படி அணை கட்டி தடுக்கலாமுங்க ?

நீங்க அதுக்கு ஒரு வெப்சைட் போடணுமுங்க. அட்லீஸ்ட் அந்த புண்ணிய ஆத்துல பொணத்த போடக்கூடாதுனாவது நீங்க சொல்லணுமுங்க.

"remains of an ancient bridge built by Lord Rama, as described in the holy epic, Ramayana."

எங்க அனுமாரு பசங்களை ஏவிவிட்டு ராமரு கட்டினதா தான் கேள்விப்பட்டிருக்கேனுங்க. இப்ப தான் தெரியுது ஏன் இந்த பாலம் முங்கி போச்சுனு. என்ன கேவலமான 'கன்ஸ்ட்ரக்சனுங்க' இது. கடவுள் ராமனாலயே ஒரு பாலத்த உருப்படியா - காலாகாலத்துக்கு யூஸ் பண்ற மாதிரி - முங்காமா இருக்குறமாதிரி கட்ட முடியல! ஒரு பாலத்தக் கூட ஒழுங்கா கட்ட முடியாதாவரெல்லாம் ஒரு கடவுளானு ISIட்ட காசு வாங்குன பசங்க கேக்கமாட்டானுங்க?

பொண்டாட்டிய பத்திரமா பார்த்துக்க தெரியல, தம்பிய சமாதானபடுத்த முடியல, ஒரு குரங்கு கூட்ட தலைவன நேர்மையா எதிர்க்க முடியல, இப்ப ஒரு பாலத்த உருப்படியா கட்டமுடியலைன்ற கெட்ட பேரு வேற....

"environmental impact" சரிதானுங்க. இதனால கொஞ்ச பாறை, மீன், பவளம் எல்லம் அழியப்போகுதுங்க. ஆனா பாருங்க, நர்மதைல அணை கட்டுற ப்ராஜெக்ட்ல எல்லாம் லெட்சம் பேரு ஊரை விட்டு கிளப்பணும், ஆயிரக்கணக்கான மரத்தை வெட்டணும்... இன்னும் எம்புட்டோ பெரிய பிரச்சினை எல்லாம் அதுல இருக்குங்க. அதுக்கு எல்லாம் ஏனுங்க நீங்க அடக்கி வாசிக்கிறீங்க?

"Ram Sethu is as holy to Hindus as the Western Wall is to the Jews, the Vatican to Catholics, Bodh Gaya to the Buddhists and Mecca to Muslims,"

இதுவரை நீங்க சீரியசா சைட் போட்டிருக்கீங்கனு நெனச்சு டைம் வேஸ்ட் பண்ணிட்டேனுன்க. உலகத்துல ரெம்ப ரெம்ப பழமையான மதத்துக்கு இப்பதான் அதோட புண்ணியதலமே தெரியுதாங்க?

சரி நம்ம எதாவது செய்யலாம்னு 'கான்ட்ரிப்யூட்'னு கிளிக் பண்ணினா, தட்சணை தான் கேக்குறாங்க. அதுவும் மெயில்ல அனுப்பலாமாம், போன்ல அனுப்பலாமாம், ஆன்லைன்ல அனுப்பலாமாம்.... காசக் குடுக்காம 'கான்ட்ரிப்யூட்' பண்ண முடியாதாங்க?

- பிரகாஷ்

*பின் குறிப்பு: நீண்ட ஆய்வு உள்ளிடுகைகள் கொண்ட இணைப்புகளுடன் இது பெறப்பட்ட வலையர் பதிவு இணையம் : மகாநடிகன்

இணைப்பு: http://maganadigan.blogspot.com/2007_09_01_archive.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் விவாதக் களம் தமிழில் தட்டச்சிடும் பழக்கத்தை நன்கு ஊக்குவிக்கிறது.

பொறுமை சகிப்புத்தன்மை போன்ற பண்புகள் பெற வகை செய்கிறது.

யாழ் இணையக் குழுமத்தினரின் பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் பாராட்டுத் தராமல் இருக்க முடியாது.

நிட்சயமாக உண்மை :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.