Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினசரி தூறல்கள்...

Featured Replies

  • தொடங்கியவர்

இங்கும் அங்கும்...

அண்ணன் இங்கே

தம்பி அங்கே...

அண்ணன் லண்டனில்

தம்பி கிளிநொச்சியில்...

மன்னாரில் பிறந்தவரகள்..

அண்ணன் வெளியூரில் அகதி...

தம்பி உள்ளுரில் அவதி...

அண்ணன் தண்ணீரில் தள்ளாடுகிறான்..

தம்பி அருந்தக்கூட நல்ல தண்ணீரில்லாமல் திண்டாடுகிறான்..

அண்ணனிடம்..இல்லையென்று சொல்ல செல்வம் ஏதுமில்லை...

தம்பியிடம் இல்லை என்ற சொல்லைவிட்டு வேறேதுமில்லை

அண்ணன் வீடு வீடாய் வாங்கி இடம் மாறுகிறான்..

தம்பி வீடுவிட்டு குடிசை..குடிசை விட்டு கொட்டில்..

கொட்டில்விட்டு..மரத்தடி என்ற நிலைக்கு வந்துவிட்டான்..

அண்ணன் பிள்ளைகளுக்கு பசிக்காத நோய்...

தம்பிபிள்ளைகளுக்கு பசிக்கின்ற நோய்..

அண்ணன் பிள்ளைகள் ஒரு நாளைக்கு ஒரு ஆடை போடும் நிலையில்

தம்பி பிள்ளைகள் மாற்றிப் போட இல்லாத நிலையில்...

அண்ணன் தம்பி ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்துவிட்டதும்...

அண்ணா ஏதும் உதவி செய்வார் என்று தம்பி எண்ணுவதும்..

செல்வச்செருக்கும் வறுமையின் வாட்டலும்..

அண்ணா பெற்றபிள்ளைகள் இரவுவிடுதியில் ஆடிவிட்டு கண்மயங்கி கிடக்கிறார்கள்..

தம்பி பெற்ற பிள்ளைகள்..சுடுவெயிலில் பசி மயக்கத்தில் கண்மயங்கிகிடக்கிறார்கள்..

அண்ணா பிள்ளைகளை நினைத்து துள்ளிக்குதிக்கிறான்..

தம்பி பிள்ளைகள் வேதனை பார்த்து தூங்கிப்போக நினைக்கிறான்

இங்கேயும் அங்கேயும் எத்தனை வேற்றுமைகள்..

இங்கே மனிதம் செத்து மனிதன் சிரிக்கிறான்..

அங்கே மனசு செத்து மனிதன் அழுகிறான்..

உதவிக்கரங்களும் உலக அமைப்புகளும்

உதவமுடியாமல்..

இருப்புப்போதாமல்..

யாரோ ஏதோ செய்வார் என்றால்..

ஏதும் நடக்காது..

ஊரில் துடிப்பது உன் உறவு...

பசியில் கதறுவது உன் இரத்தம்..

காட்டில் கதறுவது உன் சுற்றம்..

பாம்புக்கடியிலும்..முட்களின் சீண்டலிலும்..

அழுகின்ற உறவுகள் ஓசைகேள்..

நீங்கள் அழ வேண்டாம்..

நீங்கள் இரங்க வேண்டாம்...

நீங்கள் திரும்பிக்கூட பார்க்கவேண்டாம்..

ஏதோ ஒரு வழியில்..

உங்களால் ஒரு உதவி...

உடனே செய்யுங்கள்..

யார் மூலமாகவாவது...

உங்கள் ஈழ உறவுகளுக்கு...

உறையுள் முடியாவிட்டாலும்..

உடை முடியாவிட்டாலும்..

உயிர் வாழ உணவுக்கு உதவுங்கள்

Edited by vikadakavi

  • Replies 513
  • Views 102k
  • Created
  • Last Reply

உங்கள் கவிதை அருமை!!!

இந்த கவிதை பல உறவுகளின் கைகளில் காசோலைகள் போய் சேரவும் பசிப்பிணி போக்கவும் நிச்சயம் கைகொடுக்கும் என்பது எனது நம்பிக்கை

விகடகவி இல்லை நீங்கள் மக்கள் கவி.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விகடகவி .........

இன்றைய தூரலில் (19/08/2008) போட ஆடை இல்லாமல் என் வரக்கூடிய இடத்தில் சிறு பிழை உண்டு முடிந்தால் திருத்தவும் . நான் திருத்தி வாசித்தேன் , நன்றி .(குறைபிடிக்கும் எண்ணத்தில் சொல்லவில்ல

புரியும் என் எண்ணுகிறேன் ,)

  • தொடங்கியவர்

வெற்றிவேல் அண்ணாவிற்கும்..நில்லாமதிக்கு

ம் வணக்கம்...

நன்றி நிலாமதி திருத்தம் செய்தேன்..இதில் தப்பாக நினைக்க ஒன்றுமில்லை..தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால்தானே திருத்தமுடியும்...அதுவும் நேரப்பற்றாக்குறை மிகுந்த இந்தக் காலத்தில்..

Edited by vikadakavi

  • தொடங்கியவர்

தூறல் நாள் 86

வெந்துகொண்டிருக்கின்ற..

மனங்களில்.. பழுக்க

காய்ச்சிய இரும்பு ஈட்டியை

பாய்ச்சிடும்.. மானிடம்...

தொலைக்காட்சிகளில் மனிதநேயம்..

பேசி கைதட்டல்கள் வாங்கும்..

மாலைகள் வாங்கும்

விருது வாங்கும்..

மனிதம் வாங்க மட்டும்

தெரியாமல்..மிருகமாய் வாழும்

ஆட்சியில் இருக்கும் பேயாய்

தலைவிரித்தாடும்.

எனக்குள் இருக்கும் ஏகப்பட்ட குழப்பங்களில்

ஒன்றாய்.. தாய்மண் நிலவரம்..

நம்பிக்கை..பணம்..எதிர்பார்ப்ப

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் விகடகவி அண்ணா...

உங்கள் கவிதைகள் அருமையானவை. ஈழத்தின் நிலைகளை அருமையாகவும்

உண்மையாகவும் கவியில் வடித்துக் காட்டுகிறீங்கள்.

  • தொடங்கியவர்

வணக்கம் சாரணி.(சரணியா)..நன்றி உங்கள் கருத்துகளுக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விகடகவி .........

.வழக்கம் போலவே உங்கள் க்வி வரிகள் அழகு ,இன்றைய நிலைமைக்கு ஏற்ப

நம்பிக்கை தரும் வரிகள் ,தங்கள் கவி புலமைக்கு என் பாராட்டுகள் .நிலாமதி

  • தொடங்கியவர்

நன்றி நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வைரமுத்துவிடம் ஒரு கருவாச்சி காவியம். நம் கவியின்

தினசரி தூறல்கள் ஒரு காதல் காவியம்தான்.

தொடருங்கள் வாழ்த்துக்கள். கவிஞரே!!!

  • தொடங்கியவர்

நன்றி சுவி..

இருந்தாலும் நான் ஒருகடைநிலை மாணவன்.. அவர் ஒரு மிகப்பெரிய பேராசிரியர் வைரமுத்து மாதிரி எழுத...தமிழறிவு மட்டுமல்ல தெளிந்த ஞானமும் வயதும் வேணும்

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவியாரே , நேற்றைய வான் தாக்குதலைப்பற்றி ஒரு தூறலை எடுத்து விடுங்களேன் . :)

  • தொடங்கியவர்

வான்புலிகளை முடக்கியாச்சு

மூச்சுக்கு மூச்சு.. கெகலிய பேச்சு

கெக்கலிப்பாயாச்சு....இப்ப

போச்சு..அவர் பேச்சு...

வல்லரசெல்லாம்

வரம் தந்த பொறிகள்..

விரித்தவலைகளை

வான்புலி கிழித்தாச்சு

அவை திரும்பியும் போயாச்சு

சிங்களதேசம் சக்கரவீயூகம் போடலாம்..போடு

தலைவரோட சாணக்ய வியூகம் பாரடா..ஓடடா ஓடு

திட்டம் போடும் துரோகியர் கூட்டமும்

சிதறி ஓடும் பாரடா..

தமிழ் குழந்தையின் குருதியும் குடிக்க பார்க்கிறாய்..

மிருகங்களாய் ஏன் மாறினாய்..

நம் இரத்தமும் சதையும் எதற்கு கேட்கிறாய்..

நீ அழிந்தேயாக வேண்டுமா..அதுதான் உந்தன் ஆசையா

நாங்கள் என்ன கேட்கிறோம்..

நாம் வாழ்ந்த மண்ணைக் கேட்கிறோம்..

எரியும் எம் மண்ணில்

பூக்கள் கேட்கின்றோம்..

பசிக்கும் வயிறுகளில்

உணவுக்கு ஏங்குகிறோம்

மரத்தினடியே வாழ்வதற்கா

நாம் மனிதனாகினோம்..

மழையிலும் வெயிலிலும் மாள்வதற்கா

நாம் தமிழனாகினோம்..

எங்கள் வீடு..அந்த வாழ்வு

மீண்டும் கிடைக்காதா

எங்கள் பள்ளி..எங்கள் கோவில்

கதவுகள் திறக்காதா..

சந்தோசக் கதவுகள் திறக்காதா..

விழிகளில் நீரை நிரப்புகிறோம்

இறைவா விடியல் தருவாயா..

வேதனையாலே இரஞ்சுகிறோம்..

இறைவா துன்பங்கள் தீர்ப்பாயா..

இறைவன் ஒருவன் இருக்கிறான்

அவன் தலைவன்தானடா

தமிழ் மானம் துடைக்க வந்தவன்

புலிவீரன் தானடா...

எல்லாம் எல்லாம் நடக்கும்

தமிழ் புலிகள்..விலங்குகள் உடைக்கும்

விடுதலை கெஞ்சி வருவது இல்லை

புரிந்து கொள்ளடா மனிதா

புலிவீரத்துக்கெதிரிணை எவரும்

இல்லை தெரிந்து கொள்ளடா மனிதா

கடலிலும் காவியம் படைப்போம்

எதிரியின் அரண்கள் எங்கினும் உடைப்போம்

வானிலும் புலிக்கொடி விரிப்போம்..

தமிழ் விடுதலை முரசினை ஒலிப்போம்

தமிழ்மக்களின் கரங்கள் சேரும்..

தலைவன் காலத்தில் விடுதலை கூடும்

தலைவன் காலத்தில் விடுதலை கூடும்

தலைவன் காலத்தில் விடுதலை கூடும்

தலைவன் காலத்தில் விடுதலை கூடும்

தலைவன் காலத்தில் விடுதலை கூடும்

தலைவன் காலத்தில் விடுதலை கூடும்

தலைவன் காலத்தில் விடுதலை கூடும்

தலைவன் காலத்தில் விடுதலை கூடும்

தலைவன் காலத்தில் விடுதலை கூடும்

தலைவன் காலத்தில் விடுதலை கூடும்

தலைவன் காலத்தில் விடுதலை கூடும்

  • தொடங்கியவர்

மன்னிக்க..இரண்டு தடவைகள் வந்துவிட்டது

Edited by vikadakavi

வான்புலிகளை முடக்கியாச்சு

மூச்சுக்கு மூச்சு.. கெகலிய பேச்சு

கெக்கலிப்பாயாச்சு....இப்ப

போச்சு..அவர் பேச்சு...

:):D:D:D

  • தொடங்கியவர்

எல்லாப்பூக்களும்..

வாடிப்போனபின்னும்

வாடாத பூவாய்...மானுடம்

பெற்ற பரிசு..சிரிப்பு!

இரத்தமும் சதையும்

கொண்ட நான்..

முன்கோபியாய் இருப்பது

சாதரணமடி பெண்ணே

இரத்தமும் சதையும் கொண்ட நீ

தேவதையாய் தோன்றுவது

அதிசயமடி அன்பே!

பரிசுத்தமான இதயம்..மட்டும்தான்

நல்ல எண்ணங்களை

பிரசவித்துக்கொண்டிருக்கும்-ஆனால்

பத்துமாதம் சுமந்து பிரசவிக்கப்படுகின்ற

குழந்தைகள் வாழ்ந்த தாயின் கருவறை..

யாவற்றிலும் பரிசுத்தமானது

உன் கன்னத்தில்

நான் இடுகின்ற முத்தங்களுக்கு எல்லாம்

வங்கி கணக்கு வைத்திருக்கிறாயாமே..

என் கறார் காதலியே

எதற்கு காசுக்கணக்கு..

நான் தந்த முத்தங்களை

கடன்பட்டோர் கணக்கில் வைத்துக்கொள்கிறேன்

நீ கடன் கொடுத்தோர் கணக்கில் வைத்துக்கொள்

தேவைப்படும்போது வட்டியோடு பெற்றுக்கொள்கிறேன்

பின்குறிப்பு உனக்காக எவ்வளவு கடன் தரக்கூடிய நிலையிலும்

என் கருவாயை..மன்னிக்க வருவாயை வைத்துக்கொள்கிறேன்

நீ வந்துவிட்டுப்போனபின் தந்துவிட்டுப்போன வலிகள்

இவை நீ தந்துவிட்டுப்போன வலிகளல்ல-இவை

தானாகவே நெஞ்சில் வந்துவிட்ட வலிகள்..

அழகிய தேவதைக்கு ஆசைப்பட்டதால் வந்த வலிகளல்ல

உன் அன்புக்கு ஏக்கப்பட்டு வந்த வலிகள்

ஆனால் இனிக்கும் இந்த வலிகள்தான் இவன்

இலட்சியவாழ்வுக்கு இனி வழிகள்!

கண்களைமூடிக்கொள்ளத்தேவையில

தினசரி நனைவேன் தங்களின் தூறலில்..நனைத்து விட்டு பார்த்தால் எந்த தூறல் அழகு எண்டு என்னால் கண்டு கொள்ள முடியவே இல்ல..வாழ்த்துக்கள் மாமா.. :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

நன்றி ஜம்மு பேபே

தூறல் நாள் 89

நீ கூட புரியாமலா நீள்மௌனம் காக்கின்றாய்?

புயலுக்கு கூட

புழுதி கிளம்பாத

ஈரமண்ணாய் இவன் மனது..

நீ வந்தாய்..

அழகின் கொலுவாய்..

அன்பின் சொரூபமாய்...

இனிமையின் இருப்பிடமாய்

வெறித்து நோக்கியவன்..

விழியில் விழி பதித்தாய்..

காதல் எனும் ஓர் செடியை

கைதொட்டு நட்டாய்

செடிவிட்ட காதலுக்கு

உரம் போட்டாள் உன் அன்னை

கல்யாண எதிர்ப்பு கதைகள் பேசி..

விழவே விழமாட்டேன் என்று சபதங்கள் உரைத்து

சீண்டி பெண்களையே சினந்தவன்தான்..

புரியவில்லை..கல்யாணக் கனவுகளுக்குள்..

நான் நானே போய் விழுந்தேனா?

காட்டு மரமான என் காதல்

உன் காதல் மொழிகளாலும்..

உன் கனிவு மொழிகளாலும்..

தொலைபேசி ஒலிவாங்கி

ஊதிவிட்ட இச்சுகளும்...சிணுங்கள்களும்..

கட்டளையும் கலகலப்பும்..

அக்கறையும்..அணைப்புகளும்...

அடடா..தெம்பு பெற்ற தேக்காகி..

நின்ற என் காதலை...

பிடுங்கிப்போட வந்த

புயலைப்போல...

என் வீட்டில் பலரும்

உன் வீட்டில் சிலரும்

வேரின் நார்கூட

வேண்டாமடா என்று

பிடுங்கப் பார்த்தார்கள்..

வார்த்தைப் போர் கொண்டு

இழுத்துப்பார்த்தார்கள்

ஈரநிலம்தான் என் இதயம்..

காதல் மரத்தை மட்டும்

வலுகெட்டியாய்..பிடித்திருந்த

தது

நீ மட்டும் நினைத்திருந்தால்..

நம்காதல்..மரம்...நன்கு கிளைகள்விட்டு

நாலு பூப்பூத்திருக்கும்..

நறுமணம் தந்திருக்கும்..

உன் மௌனத்தால்

மரம் ஒடிந்து

மன மண்மேல் கிடக்கிறது

முயற்சி செய்கிறார்கள் முழுமூச்சாய்...

மண்ணைக்கிளறி வேறு மரம் நாட்ட

இது ஆழவேர்விட்ட...

ஆலமரமடி பெண்ணே..

என்னால் கூட எதுவும் முடியவில்லை

மரம் முறிந்த வலியே

மறக்காமல் உள்ளபோது

மரம் இருந்த வடுவா

மறைந்துவிடப்போகிறது?

இதை நீ கூடப் புரியாமலா...

நீள் மௌனம் காக்கின்றாய்?

  • கருத்துக்கள உறவுகள்

" இது ஆழவேர்விட்ட...

ஆலமரமடி பெண்ணே..

என்னால் கூட எதுவும் முடியவில்லை

மரம் முறிந்த வலியே

மறக்காமல் உள்ளபோது

மரம் இருந்த வடுவா

மறைந்துவிடப்போகிறது?

இதை நீ கூடப் புரியாமலா...

நீள் மௌனம் காக்கின்றாய்? "

காதலின் வலி தெரிகிறது ,

அருமையான வரிகள் . தொடருங்கள் நனைய காத்து இருக்கிறோம் .

  • தொடங்கியவர்

நன்றி நிலாமதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி

மிகவும் அருமையான வரிகள். எவ்வளவோ கற்பனைத்திறன் உள்ள கவிஞர்களை யாழில் பார்க்கும் போது மிகவும் பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்

இளங்கவி

  • தொடங்கியவர்

இளங்கவிக்கு இனிய நன்றிகள்...

விகடகவி இன்னும் காதல் நிறைவேறலையா? அதே போலவே தான் தொடர்கின்றதா?

இதுக்கு பதிலை கவிதை வடிவிலேயே உரையுங்கள். ஆவலோடு வெண்ணிலா

  • தொடங்கியவர்

அவள் அடிக்கடி வந்து

தொட்டுப்போவாள்

தூவானம் போல்..

ஆனாலும் நான்

சந்தோசமழையில்

நனையமுடிவதில்லை...

காரணம் நம் திருமணம்

தெரிகிறது தொடுவானம் போல் :wub:

அவள் அடிக்கடி வந்து

தொட்டுப்போவாள்

தூவானம் போல்..

ஆனாலும் நான்

சந்தோசமழையில்

நனையமுடிவதில்லை...

காரணம் நம் திருமணம்

தெரிகிறது தொடுவானம் போல் :)

தூவானம்

மழையென பொழிய வாழ்த்துக்கள் கூறுவதோடு

தொலைவானம் தொடும் தூரத்தில் தான் நம்பிக்கையோடு சிறகடித்து பறக்கவும் வாழ்த்துகின்றேன் :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.