Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினசரி தூறல்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி விகடகவி.

உங்களின் மண்ணில் துயிலும் தெய்வங்களே கவிதையினை புதிய தலைப்பில் இட்டால் நன்றாக இருக்கும். கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள் விகடகவி.

Edited by கந்தப்பு

  • Replies 513
  • Views 102k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உங்களைச் சந்தித்தது எனக்கு மிக மகிழ்ச்சி ஐயா...(எப்படி சரியா எழுதியிருக்கிறேனா?..)

  • தொடங்கியவர்

மலைகள் தலைவணங்கும்

தலைவன் நிழலுக்குள்

மலரும் மாவீரன் பிறப்பான்.

இரவுகள் தூங்கும்

நட்சத்திர ஒளியில்

போராளி தவமிருப்பான்

சாரலுக்கு குடைபிடிக்கும்

சகோதரிக்கும் சேர்த்து

புலிவீரன் குண்டுமழைக்

குளித்திருப்பான்...

காதலை காதலன்

தியாகம் செய்வான்...

காதலனைக் காதலி

தியாகம் செய்வாள்...

இவர்களைக் காதல்

தியாகம் செய்யும்..

விடுதலைப் போராளிகளாய்

ஆனபோது...

ஈன்ற பொழுதில்

பெருதுவப்பாள் தன் மகனை

மாவீரனெனக் கேட்ட

ஈழத்தாய்.

வாரணமாயிரம் பலமும்

கம்பீரத் தோரணையும்..

தலைவன் நடையில்

நாம் கொண்ட பெருமிதம்..

எல்லைகள் மீறிய

தொல்லைகள் அழியும்..-நஞ்சு

வில்லையின் மாலைகள்..

நாளை மறையும்..

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

முத்தங்களால்..உன்னை மூடுவேன்

முற்றத்தில்முல்லை மெத்தை போடுவேன்-பால்

நிலவொளியில்..பனிபொழிந்தால்-என்

மார்புக்கு கம்பளியாயுன்னை நாடுவேன்..

முத்தங்களால்..உன்னை மூடுவேன்

கொடியிடையும் மெல்நடையும்

இது இயல்போ நாடகமோ..ஓஓ

மேனிதழோ தீண்டிடவோ

அது துடிக்கும் அழைப்பிதழோ..

விழியசைவில் ஆயுள்கைதி..உன்

ஆடிமையென்று ஆனேனடி

இராத்திரி நீளங்கள் போதாதென்று

சூரியனைத் தாமதிக்க கேட்டேனின்று..

காதில் விழும் முனகலும் மின்சாரம்தான்..

காதல் வேளாண்மைக்கு வியர்வை நீரூற்றுமாம்..

கொல்கிறாய்..மெல்கிறாய்..இன்பக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலைகள் தலைவணங்கும்

தலைவன் நிழலுக்குள்

மலரும் மாவீரன் பிறப்பான்.<<<

நிதர்சன வரிகள்

இரவுகள் தூங்கும்

நட்சத்திர ஒளியில்

போராளி தவமிருப்பான்<<<

கற்பனைகளைவிட உண்மை இனிக்கிறது விகடகவி அண்ணா(தம்பி:(

சாரலுக்கு குடைபிடிக்கும்

சகோதரிக்கும் சேர்த்து

புலிவீரன் குண்டுமழைக்

குளித்திருப்பான்...<<

அடடா

காதலை காதலன்

தியாகம் செய்வான்...

காதலனைக் காதலி

தியாகம் செய்வாள்...

இவர்களைக் காதல்

தியாகம் செய்யும்..

விடுதலைப் போராளிகளாய்

ஆனபோது...

<<<

மனசை என்னவோ செய்யுது..

ஈன்ற பொழுதில்

பெருதுவப்பாள் தன் மகனை

மாவீரனெனக் கேட்ட

ஈழத்தாய்.<<

நிஜம்

வாரணமாயிரம் பலமும்

கம்பீரத் தோரணையும்..

தலைவன் நடையில்

நாம் கொண்ட பெருமிதம்..<<<

மெய்

எல்லைகள் மீறிய

தொல்லைகள் அழியும்..-நஞ்சு

வில்லையின் மாலைகள்..

நாளை மறையும்..

<<

உண்மையைச் சொன்னதற்கு வாழ்த்து வேண்டுமா என்ன? "கவிவரிகளில் நிதர்சனம்மிளிர்கின்றது.

நன்றி அண்ணா..நல்ல வரிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்தங்களால்..உன்னை மூடுவேன்

முற்றத்தில்முல்லை மெத்தை போடுவேன்-பால்

நிலவொளியில்..பனிபொழிந்தால்-என்

மார்புக்கு கம்பளியாயுன்னை நாடுவேன்..

முத்தங்களால்..உன்னை மூடுவேன்

கொடியிடையும் மெல்நடையும்

இது இயல்போ நாடகமோ..ஓஓ

மேனிதழோ தீண்டிடவோ

அது துடிக்கும் அழைப்பிதழோ..

விழியசைவில் ஆயுள்கைதி..உன்

ஆடிமையென்று ஆனேனடி

இராத்திரி நீளங்கள் போதாதென்று

சூரியனைத் தாமதிக்க கேட்டேனின்று..

காதில் விழும் முனகலும் மின்சாரம்தான்..

காதல் வேளாண்மைக்கு வியர்வை நீரூற்றுமாம்..

கொல்கிறாய்..மெல்கிறாய்..இன்பக??கலை சொல்கிறாய்..

முத்தங்களால்..உன்னை மூடுவேன்

முற்றத்தில்முல்லை மெத்தை போடுவேன்-பால்

நிலவொளியில்..பனிபொழிந்தால்-என்

மார்புக்கு கம்பளியாயுன்னை நாடுவேன்..

முத்தங்களால்..உன்னை மூடுவேன்

பத்துவிரலும் உன் பத்துவிரலும்

ஒட்டிப்பழகி ஒன்றானதே...

கால்களுக்குள் பலப்பரீட்சை

கன்றல்கள்தாம் உண்டானதே..

நகங்களுக்கு வன்முறையை..

நல்லபெண்ணாள் நீ கற்றுத்தந்தாய்..

பற்களுக்கு படைப்பயிற்சி..

பருவப்பெண்ணாள் பயிற்றுவித்தாய்..

நெருப்புக்குளிருந்து எழுந்து வந்தேன்..*** நெருப்புக்குள்ளிருந்து ** ஒரு "ள்" ஐ விட்டிட்டியள்...சரி சரி காதலிலும் மோகத்திலும் இதெல்லாம் சகஜம் தானே/ :()

குளிரோடையில் கொஞ்சிக்குளிக்க வைத்தாய்

பாலைமணலில் பயணம் செய்தேன்..

பனிமழையில் பள்ளிகொள்ளும் வரங்கொடுத்தாய்

போதும் போதுமென்று சொல்லாதே..ஜடப்

போர்வையைத்தந்து செல்லாதே<<<< அட! அட! அடடா!! கம்பனையும் விஞ்சிவிடும் கவிவரிகளாய் இருக்கிறதே?!! அனுபவ மொழிகளோ?!! இந்தக்கவித்தேன் வரிகள்?????????!!!....

முத்தங்களால்..உன்னை மூடுவேன்

முற்றத்தில்முல்லை மெத்தை போடுவேன்-பால்

நிலவொளியில்..பனிபொழிந்தால்-என்

மார்புக்கு கம்பளியாயுன்னை நாடுவேன்..

முத்தங்களால்..உன்னை மூடுவேன்

எந்தப்பாட்டுக்கு இந்த வரிகளோ?!! காட்சிப்படுத்தலாமே?!!!....காதல் விஞ்சி தமிழ் கொஞ்சி உயிரை மிஞ்சி அலங்கரிக்கும் சொற்கள். அற்புதம்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூறல் நாள் 100

தைரியம்

உன் மொழி மௌனமாக

இருப்பதனால்தான்

நம் காதல்

ஊமையாயே இருக்கிறது..

*** பேசக்கூடாதோ?!! ஒருவார்த்தை என்று கேட்டுப்பாருங்களேன்!...

ஜாக்கிரதை

வண்ணத்துப்பூச்சிகள்

இலைகளில் ஓய்வெடுத்தால்

பூக்கள் சிறகுக்கு

ஆசைப்படும்!<<<

ஒரு பெரிய கருத்தையே ஒளித்து வைத்திருக்கின்றீர்கள் இந்த நான்கு வரிகளில்....அருமை அருமை...

வியர்வை

முயற்சியை

முணுமுணுக்கும்..

உடலருவி..

வித்தியாசமான ஆனால் உண்மையான சிந்தனை..

காலணி

புதிதில் கடிப்பதாக

சொல்லப்படாலும்

காலப்போக்கில்

காப்பதாக சொல்லப்படுகின்ற

பாதங்களின் கடவுள்!

அசத்தல்

நூறு நூறாது ஆயிரமாயிரமாய் சாரல் தூவட்டும்!!... "நிறைந்த் வாழ்த்துகள் கவி அண்ணா(தம்பி)

  • தொடங்கியவர்

தமிழ்த்தங்கையக்காள்...உங்கள் கருத்துகளுக்கு என் நெஞ்சு நிறைந்த நன்றிகள்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மண்ணில் குருதிமேல் நிற்கும் - புலி

மைந்தன் உறுதி குறைவதில்லை

என்றும் தலைமகன் வழி நடக்கும்-மா

வீரன் இதயம் தளர்வதில்லை

தொல்லைகள் நெருங்கலாம்-தேச

எல்லைகள் சுருங்கலாம்

புலி விரட்டியடிக்க நினைத்தார்-வீணர்

விழுந்து மடிய நுழைந்தார்..

இதயங்களில் தீ இருக்க..-இரும்பு

முள்ளும் வலையும் புலி நடக்க..

மண்ணில் யுத்தம் யுத்தம்

எனும் ஓர் பாட்டு...

ஈழப்பிள்ளைக்கில்லை

வேறு தாலாட்டு....

பாவம் என்று யாரும் சொல்ல

நெஞ்சம் தாங்காது

பிச்சை என்றும் யாரும் தந்தால்

அன்னம் இறங்காது

மானம் தமிழன் மூச்சு

ஈழ மண்ணே எங்கள் பேச்சு

வெற்றுக்காலுடன்

வீரன் நடக்கின்றான்

தன்னை மிஞ்சிடும்

பாரம் சுமக்கின்றான்

வாயில் நுரை வரும்

தாகத் தவிப்பிலும்

காயம் எரித்திடும்

தேகக்கொதிப்பிலும்

வீரன் வீரன் எழுவான்-புலி

வீரன் வீரன் எழுவான்

வீரன் வீரன் எழுவான்-புலி

வீரன் வீரன் எழுவான்

வீரன் வீரன் எழுவான்-புலி

வீரன் வீரன் எழுவான்

வீரன் வீரன் எழுவான்-புலி

வீரன் வீரன் எழுவான்

வீரன் வீரன் எழுவான்-புலி

வீரன் வீரன் எழுவான்

Edited by விகடகவி

  • தொடங்கியவர்

நல்ல காலம் எமக்கு வருமோ...

மாண்ட இன்பம் கொண்டு வருமோ...

நல்ல காலம் எமக்கு வருமோ...

பயமில்லை..கண்ணில் நீரில்லை

வீடு விட்டு கூடு தேட தேவையில்லை

பள்ளியடையில் விழுந்து துடிக்க தேவையில்லை

பசித்த வயிற்றுக்கு ஈரத்துணிகள் தேவையில்லை

பருவப்பெண்ணின் தாலியறுக்கத்தேவையில்லை

கற்பைக்கொடுத்து பெண்கள் கதறும் கொடுமையில்லை

என்றும் மாறும் நிலமை வருமோ..என்

மண்ணில் இன்பக்குரல்கள் மட்டும்

இசைக்கும் அந்த இனிய காலம் வருமோ

நல்ல காலம் எமக்கு வருமோ...

மாண்ட இன்பம் கொண்டு வருமோ...

நல்ல காலம் எமக்கு வருமோ...

குண்டைக் கொடுக்கின்ற கைகள்

முடமாய் ஆகட்டும்..

உலகம் கொட்டிடும் குண்டுகள்

பூவாய் மாறட்டும்..

கும்மியடிக்கவும் குழந்தை சிரிக்கவும்

நல்ல காலம் பிறக்கட்டும்

எம் கவலை மறக்கட்டும்

விழித் திவளை மறையட்டும்

எல்லோரும் போலவே..

இனிதாக வாழவே...

சுதந்திரக் காற்றுக்கு..

தமிழனின் பாட்டுக்கு...

பேராசையில்லை.. நம்

உரிமையென்றே..முழங்குகின்றோம்

...

எங்கள் தூக்கம் பறித்த

துயரம் கரைக்க..இனிமேல்..

நல்ல காலம் எமக்கு வருமோ...

மாண்ட இன்பம் கொண்டு வருமோ...

நல்ல காலம் எமக்கு வருமோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்ணில் குருதிமேல் நிற்கும் - புலி

மைந்தன் உறுதி குறைவதில்லை

என்றும் தலைமகன் வழி நடக்கும்-மா

வீரன் இதயம் தளர்வதில்லை<<<

பதுங்கி இருந்து பாய்வதுதான் புலியின் குணம். தன் செயல் முடிக்கும் வரை தம்பட்டம் அடிக்காது!.

தொல்லைகள் நெருங்கலாம்-தேச

எல்லைகள் சுருங்கலாம்

புலி விரட்டியடிக்க நினைத்தார்-வீணர்

விழுந்து மடிய நுழைந்தார்..

இதயங்களில் தீ இருக்க..-இரும்பு

முள்ளும் வலையும் புலி நடக்க..<<<<

தீயில் நடப்பவர்கள் தீயாய் எழுபவர்கள் பகையை பஞ்சென எரிப்பவர்கள்...எம்மவர்கள்.

மண்ணில் யுத்தம் யுத்தம்

எனும் ஓர் பாட்டு...

ஈழப்பிள்ளைக்கில்லை

வேறு தாலாட்டு....<<<

அந்த மண்ணில் பிறந்த பிள்ளை வேறு சொல்லைக்கேட்குமோ?!

பாவம் என்று யாரும் சொல்ல

நெஞ்சம் தாங்காது

பிச்சை என்றும் யாரும் தந்தால்

அன்னம் இறங்காது

மானம் தமிழன் மூச்சு

ஈழ மண்ணே எங்கள் பேச்சு<<

மானம் தன் மானம் தமிழ்மானம் காக்கும் வீரப்பரம்பரை எங்கள் புலிப்படை

வெற்றுக்காலுடன்

வீரன் நடக்கின்றான்

தன்னை மிஞ்சிடும்

பாரம் சுமக்கின்றான்

வாயில் நுரை வரும்

தாகத் தவிப்பிலும்

காயம் எரித்திடும்

தேகக்கொதிப்பிலும்

வீரன் வீரன் எழுவான்-புலி

வீரன் வீரன் எழுவான்

வீரன் வீரன் எழுவான்-புலி

வீரன் வீரன் எழுவான்

வீரன் வீரன் எழுவான்-புலி

வீரன் வீரன் எழுவான்

வீரன் வீரன் எழுவான்-புலி

வீரன் வீரன் எழுவான்

வீரன் வீரன் எழுவான்-புலி

வீரன் வீரன் எழுவான்

'வீரன்! வீரன் எதற்கும் சோரம் போகாமல் நிற்கின்ற வீரன் அதுதான் சர்வதேசமே வாயடைத்துப்போய் நிற்கின்றே ஒரே விடயம் பதவிக்கோ பணத்திற்கோ குனியாத தலைமையை கூட்டுச்சேர்ந்து வேட்டுவைக்க காத்திருக்கிறது!! 'வேங்கைகள் சிக்குவதில்லை என்பது இந்த வேதாளங்களுக்கு விளங்காது"...

வீர உணர்வை அள்ளித்தெறிக்கும் வரிகள் 'கவி அண்ணன்(தம்பி)

நல்ல காலம் எமக்கு வருமோ...

மாண்ட இன்பம் கொண்டு வருமோ...

நல்ல காலம் எமக்கு வருமோ...

பயமில்லை..கண்ணில் நீரில்லை

வீடு விட்டு கூடு தேட தேவையில்லை

பள்ளியடையில் விழுந்து துடிக்க தேவையில்லை

பசித்த வயிற்றுக்கு ஈரத்துணிகள் தேவையில்லை

பருவப்பெண்ணின் தாலியறுக்கத்தேவையில்லை

கற்பைக்கொடுத்து பெண்கள் கதறும் கொடுமையில்லை

என்றும் மாறும் நிலமை வருமோ..என்

மண்ணில் இன்பக்குரல்கள் மட்டும்

இசைக்கும் அந்த இனிய காலம் வருமோ

நல்ல காலம் எமக்கு வருமோ...

மாண்ட இன்பம் கொண்டு வருமோ...

நல்ல காலம் எமக்கு வருமோ...

குண்டைக் கொடுக்கின்ற கைகள்

முடமாய் ஆகட்டும்..

உலகம் கொட்டிடும் குண்டுகள்

பூவாய் மாறட்டும்..

கும்மியடிக்கவும் குழந்தை சிரிக்கவும்

நல்ல காலம் பிறக்கட்டும்

எம் கவலை மறக்கட்டும்

விழித் திவளை மறையட்டும்

எல்லோரும் போலவே..

இனிதாக வாழவே...

சுதந்திரக் காற்றுக்கு..

தமிழனின் பாட்டுக்கு...

பேராசையில்லை.. நம்

உரிமையென்றே..முழங்குகின்றோம்

...

எங்கள் தூக்கம் பறித்த

துயரம் கரைக்க..இனிமேல்..

நல்ல காலம் எமக்கு வருமோ...

மாண்ட இன்பம் கொண்டு வருமோ...

நல்ல காலம் எமக்கு வருமோ...

நல்ல காலம் வருமே!! என்றும் நல்ல காலம் வருமே!! தீயைத் தீ எரிப்பதில்லை தலைகீழாய்ப்பிடித்தாலும் தீ தலைகவிழ்ந்து எரிவதில்லை. இருட்டினைக்கிழிக்கின்ற வெளிச்சமாய் வருவார் நம் தேசம் வெளிக்க தம்மையே தருவார்!! அவர் சத்தியம் பொய்க்காது"...விடியல் வருமே!! விரைவில் விரைவில் நல்ல காலம் வருமே!..

  • தொடங்கியவர்

தமிழ்த்தங்கையக்காள்...உங்கள் கருத்துகளுக்கு என் நன்றி

  • 1 year later...
  • தொடங்கியவர்

எங்கே தொலைந்து போனாய்

என் பேனா..

நீயும் ..முள்ளிவாயக்காய்க்காலுக்குள்ளே..

முங்கிப்போய் முகவரி மாறிவிட்டாயா..

சிந்திக்க முடியாத கோழையா..

சித்தரிக்கமுடியாத வேதனையா..

வலியாய் கிடக்கும் வடுக்களா..

கோமாவாய் இருக்கச்சொல்லும் கொலைமிரட்டலா..

அகதியாக கூட அற்பத்தமிழனுக்கு

அந்தஸ்து இல்லையா..

அன்னைத் தமிழகத்தில் கூட

அழுது சாகும் அடிமை நிலையா..

பிறப்பால் தமிழனாய்..

ஆசையால் சிங்கள சேவகராய்.. வாழ்பவனை

நோவதா...கடவுள் விரல்

காட்டி பதவியேறியவனும்..

பல்லைக் காட்டி மானத்தை விற்றதை

எண்ணி குமுறுவதா..

உலகம்..உரிமை கேட்டவனை ஒடுக்கிவிட்டு..

உயிரைப் பறிப்பவனை ஆட்சி

நடத்தவிட்டு அழகு பார்க்கும்

நரகநாடகஅரங்கம்..என்றறிந்தும்..

ஊமையாய் உலவுவதா..

குருதி குருதியாய் குடித்தபின்னும்..

கொலைத்தாகம் அடங்கா

அரக்கன்.. ஆட்சிக்குள்

அடங்கியே அழிந்து போவதா..

சிறு பான்மை சிறு பான்மை என்று..

சிதறவைத்த..

இனத்தில் நாளை

ஒரு பயிரும் இல்லாமல் அருகிப்போவதா..

அரசன் அன்று கொல்வான்..

அரக்கன் கூட்டத்தோடு கொல்வான்..

அரக்கன் வாழ்கிறான்..

அதர்மமாய் வெல்கிறான்..

தெய்வ நியாயத்துக்கு

காத்துக்கிடந்து

வெறும் கனவுகள் கலைந்த

காற்றுப் பையாய் கல்லறை சேர்வதா..

பேனாவைத் தொலைத்தேன்

கண்ணீரில் மையைiயும் காயவிட்டுவிட்டேன்..

உறவுகளே உதறமுடியாத

வேதனை விசும்பல்களை

எழுத ஈழத்தில் இருந்து

புறப்பட்டபோதே தனித்தேயிருந்த

என் முதுகெலும்பை எடுத்து

மதி மருண்டு கிறுக்கிவிட்டேன்...

இது தூறலில்லை..

துயரங்களின் கீறல்

  • கருத்துக்கள உறவுகள்

இது தூறலில்லை..

துயரங்களின் கீறல் .............

...ஈழத்து மகனாக வடித்த கவிதை உண்மையான் கீறல். நெஞ்சு நிறைந்த சுமையை

கவிதைமூலம் இறக்கி வடித்த உங்களுக்கு பாராட்டு ......வலி யை உணர்கிறோம்

மீண்டும் கவிதை தருவது கண்டு மகிழ்ச்சி விகடகவி.

  • தொடங்கியவர்

நன்றி நிலாமதி...நன்றி மச்சான்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விகடகவி. கவிதை தூறல்களாய் உங்கள் உள்ள குமுறல்களை தந்துள்ளீர்கள் .தொடருங்கள்.

  • தொடங்கியவர்

இரவுக்குள் இருந்து

விடியலை எட்டிப்பார்க்கின்ற

அந்தக் கணங்களில்...

மெல்ல இமை திறந்தது..

ஏன்...இப்படி உலகம் இருக்கிறது..

மனதில் முளைத்த கேள்விகளில்

குழப்பமில்லை..

எனக்கு நானே சொல்லிக் கொண்ட

விடைகளில் தெளிவில்லை

தெய்வத்திற்கு நிகரான

ஒருவன்..மறைந்துவிட்டான்..

மறக்கடிக்கப்படான்..

அவனால் வெளியே வரமுடியவில்லை..

நரபலி கொள்ளும் அசுரன்..

ஊர்ஊராய் உல்லாசமாய்..

சுற்றுகிறான்..

சிவப்புக் கம்பளத்தில்

வரவேறகப்படுகிறான்..

நீதிக்கும் நியாயத்துக்குமில்லை

மாலையும் மரியாதையும்..

பதவிக்கும்..பணத்திற்கும்தபன்..

அப்படியென்றால்.. நியாயமாய் நடக்கவேண்டாமா..

தர்மமாய் இருக்கவேண்டாமா..

குழப்பமான இந்த வெளிச்சத்தை விட..

போர்வைக்கு இருக்கும்

இருட்டே.. மேல்..

மீண்டும்..இருண்ட

போர்வைக்குள் நான்

  • 4 months later...
  • தொடங்கியவர்

இரவுக்குள் இருந்து

விடியலை எட்டிப்பார்க்கின்ற

அந்தக் கணங்களில்...

மெல்ல இமை திறந்தது..

ஏன்...இப்படி உலகம் இருக்கிறது..

மனதில் முளைத்த கேள்விகளில்

குழப்பமில்லை..

எனக்கு நானே சொல்லிக் கொண்ட

விடைகளில் தெளிவில்லை

தெய்வத்திற்கு நிகரான

ஒருவன்..மறைந்துவிட்டான்..

மறக்கடிக்கப்படான்..

அவனால் வெளியே வரமுடியவில்லை..

நரபலி கொள்ளும் அசுரன்..

ஊர்ஊராய் உல்லாசமாய்..

சுற்றுகிறான்..

சிவப்புக் கம்பளத்தில்

வரவேறகப்படுகிறான்..

நீதிக்கும் நியாயத்துக்குமில்லை

மாலையும் மரியாதையும்..

பதவிக்கும்..பணத்திற்கும்தபன்..

அப்படியென்றால்.. நியாயமாய் நடக்கவேண்டாமா..

தர்மமாய் இருக்கவேண்டாமா..

குழப்பமான இந்த வெளிச்சத்தை விட..

போர்வைக்கு இருக்கும்

இருட்டே.. மேல்..

மீண்டும்..இருண்ட

போர்வைக்குள் நான்

  • கருத்துக்கள உறவுகள்

.

வாருங்கள் விகடகவி .

.

  • தொடங்கியவர்

வானம் இருட்டே

சூரியன் இன்றி..

வண்ணம் இருட்டே

பார்வைகளின்றி

நீலம் இருட்டே

நிலவு இன்றி

நினைவுகள் இருட்டே

சிந்தனை இன்றி

ஈழம் இருட்டே

வீரர்கள் இன்றி

தொலைத்தது இரவினில்

என்றால்

பகலில் தேடலாம்

தொலைத்தது பகலவனை

என்றால் எப்படித்

தேடுவோம்..

அசண்டையினால் அன்பை

இழந்தோம்

அச் சண்டையினால்

அவர்களை இழந்தோம்..

இருப்பு நிரந்தமில்லாமல்

அங்கே இருப்போரைக்

காக்கவேனும்..

ஒன்றாய் மனம் இணைவோம்..

ஒற்றுமையாய்க் கரமிணைவோம்..

தமிழ் என்ற ஒற்றைக் கூரையின் கீழ்

தமிழனாய் மட்டும்

ஒன்று கூடுவோம்..

தமிழனாய் மட்டும்

ஒன்று கூடுவோம்..

தமிழனாய் மட்டும்

ஒன்று கூடுவோம்..

  • தொடங்கியவர்

பனித்துளிகள் பூவிதழ்களில்

கரைவது..காதலாகி

உருகுவதைப் போல்-அதி

காலையில் ரசிப்பேன்..

அதிகாலையில் கொண்டைப்

பூக்காரனை எழுப்பி-ஊர் கேட்க

கூவிட அழைப்பேன்

ஊர் கேட்க உரத்தே

பாடி அன்றைய நாளிதழ்-நற்

செய்திகள் உரைப்பேன்

நற்செய்திகள் யாவும்

கேட்கும் முகங்களில்-பொங்கும்

இன்பங்கள் இரசிப்பேன்

பொங்கும் ஆர்வத்தில்

தெருவெல்லாம் வெடிக்கும்-சீனப்

பட்டாசாய் ஜொலிப்பேன்

சீனனும் சேர்ந்து என்னூரைச்-மண்ணுக்குள்

சிதைப்பான் எனஅன்றறியேன்

மண்ணுக்குள் புதைந்த

மலர்த்தோட்டமே..நான்

மறுபடியும்..மலர்வேனா..

புதையுண்ட இந்த

அரசடித் தாதத்தா

அங்கேயே ஒரு ஓரமாய்..

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இளமையின்

மழைக்காலங்களை

நினைத்து ..என்னுள்

நனைகிறேன்

பாழாய்ப்போன

இதயம் மட்டும்

ஏங்கிக் கிடக்கிறது

பாலைவனமாய்...

கடவுள் கண்களுக்கு

அகப்படாத கருணையென்றால்

எனக்குத் தெரிந்த

கடவுளின் சொந்தக்காரி

என் தாய்தான்

கற்கள் சுமக்கின்ற

பூக்கள்..

காயப்படுவது போல்

காதலைச் சுமக்கின்ற

இதயம் காயப்படும்!

அவன் அவளுக்குத் தெரிந்த குழப்பம்

அவள் அவனுக்குத் தெரிந்த குழப்பம்

கண்களால் பேசுவதால் குழப்பங்கள் இளமையில்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கவிஞரே! தொடருங்கள் வாழ்த்துக்கள்!! <_<

  • தொடங்கியவர்

செம்மொழியாம் எம் எங்கள்

தமிழ்மொழியாம்...

உள்ளத்துப்பால் சுரந்தோர்

தமிழுக்காய் ஊரறிய மேடையிலே...

உயிர்ப்பால் சுரந்தவனே தமிழனுக்காய்

நீ எங்கே...

அரசு நாற் காலிக்காய்

பலி கொடுக்கும் நரிகள்...

உன்னத சுதந்திர குறியில்

உயிர் கொடுத்த புலிகள்...

வாழ்த்தும் மாலையும்...

வாழ்வழிய வாய்மொழிந்தவருக்கு

தூற்றலும் துயரமும்

வாழ்வொளிக்காய் வாழ்வழிந்தவருக்கு

நாடகம் போட்டவர் நல்ல நாயகனாம்...

தாயகம் கேட்டவர் பயங்கர வாதியனாம்..

தமிழே என் தமிழ்த்தாய் சிதை மேலே..

உனக்கு பகுப்பாய்வும் பாராட்டும்..

எனக்கு வேண்டாம் தாயே ..இன்னமும்

என் தாய் சிதையில்

அவள் இதயம் வேகவில்லை

நெஞ்சு எரிய இதயம் புழுங்கி அழும்

ஈழத்தமிழனே..முகவரி தொலைத்தாலும்..

முகத்தைத் தொலைக்கமாட்டோம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.