Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தினசரி தூறல்கள்...

Featured Replies

திருமண வலையில் சிக்க விரும்பாத விலாங்கு மீன்..தாம்பத்ய உறவுகளை..

கவிக்குள் நுழைப்பது கடினமில்லை..திருமணமான பின் தாம்த்ய கணங்களை சுகம்பட சுவையாய் தொகுப்பதுதான் கடினமாய் இருக்கும்போல் இருக்கிறது

ஆஹா...!

  • Replies 513
  • Views 102k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தூறல் நாள் 52

தூரத்து மேகம் வந்து

மழை தரும்..என்ற

விவசாயின் நம்பிக்கை போல

எமக்குள் இருக்கும்

இடைவெளிகள் குறைந்து

நீ என்னிடம்

வந்துவிடுவாயென்ற

நம்பிக்கை இருக்கிறது...

கொஞ்சம் பலவீனமாக..

ஜல்லிக்கட்டு காளையாக

துள்ளித்திரிந்த முரட்டுப்

பெண்ணே..ஒரே ஒரு

இதழ் முத்தம் உன்னை

இவ்வளவு அமைதியாக்கி

அழகாக்கி விட்டதா...

ஆச்சரியமடி..காளை

போல் திமிரும் பல

அழகிய இராட்சசிகள்

ஊரில் இருக்கிறார்கள்..

இளைஞர்களே..

நிலத்துக்கு வேலியிட்டு..

நீருக்கு அணைகள் போட்டு

நெஞ்சுக்கு விலங்கு போட்ட

மனிதா....காற்றுக்கு

வானுக்கு..என்ன

யோசனை செய்து வைத்திருக்கிறாய்?

கொதிக்கும் தேநீரை பாலை

நிலத்தில் இரசிக்கமுடியாது

கோடை சூரியனை நடுவானில்

இரசிக்கமுடியாது

கோபம் கொண்டவனால்

எதையும் இரசிக்கமுடியாது

விண்வெளிக்கு போகலாமாம்...

என்னையும் அழைத்தாய்..-பெண்ணே...

உனக்காக மயானவெளிக்கே போகவிருந்தவன்..

அண்டவெளிக்கு வரவா அஞ்சுவேன்?..

கனவுகளை விசாலமாக்கி..

தூக்கத்தை துளியாக்கி

உழைப்பை கடினமாக்கி

குறிக்கோளை நீ நோக்கி

நடந்தால்..வெற்றிக்கும்

உனக்குமிடையில்

இடைவெளி குறையும்..

நடக்க நடக்க..

இடைவெளி மறையும்!

என் பாட்டில்

குறை இருக்கிறது..

என்று நக்கீரர்

நயம் பிடிக்காதே

காதலியே.. உன்

கவிஞானத்தைக் குறைத்துக்

கொண்டு கடிதத்தை

கடிதமாகவே படித்துவிடு

தயை செய்து!!

ஜல்லிக்கட்டு காளையாக

துள்ளித்திரிந்த முரட்டுப்

பெண்ணே..ஒரே ஒரு

இதழ் முத்தம் உன்னை

இவ்வளவு அமைதியாக்கி

அழகாக்கி விட்டதா...

:lol: நல்ல அழுத்தமாக முத்ததை கொடுத்துவிட்டீங்க போல. பாவம் பொண்ணு :(

தூரத்து மேகம் வந்து

மழை தரும்..என்ற

விவசாயின் நம்பிக்கை போல

எமக்குள் இருக்கும்

இடைவெளிகள் குறைந்து

நீ என்னிடம்

வந்துவிடுவாயென்ற

நம்பிக்கை இருக்கிறது...

கொஞ்சம் பலவீனமாக..

பலவீனமாக இருக்காதீங்க விகடகவி. மனதில் நம்பிக்கையோடு அவள் என்றோ ஒருநாள் வந்துவிடுவாள் என்ற நினைப்பில் இருங்கள். வெற்றி நிச்சயம் :(

  • தொடங்கியவர்

ஐயோ....ஐயோ.... :lol::(:(

  • தொடங்கியவர்

தூறல் நாள் 53

என் கனவுகளுக்கு

காற்றாடி கட்டிவிட்டு..

நீ மட்டும் கண்மூடிக் கடக்கிறாய்..

இளமையில் நான்

எரிவது தெரிந்தும்

தெரியாதவள் போல்

மழைக்கால

காளானாய் உன்

காதல்

பருவத்தில் முளைத்தது..

கோடையில் முடியுமென்றேன்..

நீ என்ன சொல்வதென்று

மறுநாளே..சென்றாள்

மாற்றான் ஒருவனுடன்

ஒருகோடி முத்துகளை

ஒன்றாக்கி செய்த புன்னகைக்கு

சொந்தக்காரி..

திருமணத்திற்கு தன்னையும்

கொடுத்து தானமும் கொடுத்தாள்

தட்சணையாம்!!

அரியணை ஏறாத

அரசனாய் இருந்தாலும்..

அழகியை மணந்தால்

கைத்தடி ஏந்தாத

காவல்காரன்தான் நீ!!

அலுத்துப்போகாத அமுதம்

மழலை முத்தம்

கேட்கச் சலிக்காத கானம்

மழலைச் சத்தம்

பெருத்தும் வராது கோபம்

மழலைக் குற்றம்..

அனைத்தும் கிடைத்தும்

இரசிக்காத மனிதன்..

உயிருள்ள சிற்பம்..

உனக்குள் எரிந்த

நெருப்பை ஏனடி

எனக்குள் இறக்கிவிட்டாய்..

மாறிப்போனேன்..

மனமே மயானாமாய்...

கலைத்த முடி

திறந்த சட்டை

பறக்கும் வயது

பதினாறில்..எல்லாப்

பையன்களும் வாழ்ந்தபோது

நெற்றியில் பட்டையடித்து

நான் மட்டும்

புத்தகப்பூச்சியாய்..

மீண்டும் போக..மீண்டு..

இன்று தடை போட்ட தந்தையில்லை

ஆனாலும் அந்தநாட்கள்

திருப்பிப்போட முடியாத

படச்சுருளாய்...கல்ஙகலாக

கண்முன்!!

கவி, எல்லாம் உங்களோடதா???

  • தொடங்கியவர்

கவி, எல்லாம் உங்களோடதா???

:(:D:lol:

  • தொடங்கியவர்

தூறல் நாள் 54

எங்கேயோ பிறந்து

எங்கையோ வளர்ந்தவளை

என்னிடம் இழுத்து வந்த

விதியே..இந்த திருமண

முடிச்சுகளை யார்தான்

முடித்துவிடுகிறார்?..

வணக்கம் சொல்வதும்..

வந்தாரை விருந்தோம்பலும்

தமிழன் பண்பாடு...

அகதியாகிய பின்

இதய வறுமையாலோ...

மனஈரம் வரண்டதினாலோ..

பண்பாட்டை விற்றுக்கொண்டிருக்கிறான்..

கொஞ்சம் கொஞ்சமாக..

தாயின் பாலை

மறுக்கவில்லை...

தாயின் மடியை

வெறுக்கவில்லை

தாயின் சமையல்

வெறுக்கவில்லை..

தாயின் தமிழை மட்டும்..

பேச கசப்பது போல்

அபிநயிக்கிறாயே...

இளம் பிள்ளாய்..உன்

பெருமை பணத்தில் இல்லை

பகட்டில் இல்லை..

தாய்வழியில் இருக்கிறதன்பதை

ஓர் நாள் உணர்வாய்!!

விண்ணிலாடும் நிலவே

என் கண்ணிலாடும்

பொழுதில்..

காலங்கள் ஓடும் நதியாய்..

மேகங்கள் போடும் துடுப்பில்

தழுவிடும் தென்றல் காற்றில்

கண்களை மூடிப் போனேன்..

தடக்கி விழுந்தது மெய்தான்..

தாகங்கள் தீர்க்கும் பாலாற்றில்

விழுந்து..மோகங்கள் நீங்க

அமுதத்தில் குளித்து...

வேண்டாம் என்னும் வரை

வெண்ணையள்ளித் தின்று...

திகட்டும் வரை தேனைக்குடித்து...

பள்ளத்தில் இருந்து

தூக்கி விட கைகள்

இல்லாமல் மயங்கி கிடந்த

என்னைக் கத்தி

எழுப்பவதேன் அலாரமே!!

மெல்லியள் நடையும்

மேனியில் வளைவும்..

தெள்ளெனத் தெரியும்

தேவதை இடையும்..

கள்ளென மயக்கும்

கலசங்கள் திமிரும்..

கடந்தபினனரும்; அழைக்க..

கண்கள் தொடரும்..

பேரிய அழகுப்

பின்னல்கள் சிலிப்பி

பின்னே பார்த்தவள்..எய்த

புன்னகை அம்பில்

பூவில் வண்டாய்

விழுந்தது இதயம்...

ஆமைத்தலையாய்..

ஒளிந்ததென் கர்வம்!!

வெள்ளைச்சுவர்

குழந்தை இதயம்..

அன்பால் எழுதுங்கள்

ஆணியால் எழுதாதீர்கள்..

மழை கூட வேண்டா நேரத்தில்

இயற்கைப்பிழைதான்..என்

காதல்..கூட வேண்டா

நேரத்து பிழையாகிவிடக்

கூடாதென்று...வேண்டிய

நேரத்தில் பெய்யாத

பருவப்பிழையாகிவிட்டது!!

Edited by vikadakavi

வெள்ளைச்சுவர்

குழந்தை இதயம்..

அன்பால் எழுதுங்கள்

ஆணியால் எழுதாதீர்கள்..

அட....அட எப்படி மாமா இப்படி எல்லாம்.. :wub: (பேஷா இருக்கு தூறள்கள் எல்லாம்)...மாமாவின் கவி தூறளிற்கும் வானில் இருந்து பொழியும் மழைதூறளிற்கும் வித்தியாசமே தெரியல :D ..வாழ்த்துக்கள் மாமா. :wub: .

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

ஜம்ஸ் என்ன படம் வர வர சின்னதாக போறது.. இனி.. பிறந்தவுடன எடுத்த படம் போடுவியளோ....

எல்லாரும் வளருவினம் ஏன் ..... :-)

ஜம்ஸ் என்ன படம் வர வர சின்னதாக போறது.. இனி.. பிறந்தவுடன எடுத்த படம் போடுவியளோ....

எல்லாரும் வளருவினம் ஏன் ..... :-)

ம்ம்..மாமா என்ட டாடி சொன்னவர்..(ஜம்மு பேபி நீ வளர்ந்து கொண்டு போக போக :) )..எப்பவுமே உன்னை சின்னதாகவே நினை என்று..(அது தான் மாமா நான் டாடியின்ட சொல்ல தட்டாம படத்தை சின்னனாகிட்டேன் :) )..

ம்ம்..உந்த இரகசியத்தை ஒருத்தருக்கும் சொல்லிடாதையுங்கோ என்ன.. :lol: (எப்பவுமே டாடி சொல்ல கேட்கணும் ஆனா வலோ பண்ண கூடாது :wub: )...

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

தூறல் நாள் 55

மன்னவன் பிழைக்கு-மதுரை

மாநகர் எரித்தவள்

கட்புடை தெய்வமானாள்...

யாழில் கணவனை இழந்து

நீதிக்கு சென்றவள்..

காணாமல் போனாள்!!

கலிகாலம்?..

அண்ணன் தேசத்தைக்

காட்டிக்கொடுத்து

துரோகியானான்

தம்பி அண்ணனை பலிகொடுத்து

தியாகியானான்..

பயங்கரவாதி?..

நான்கு சக்கரத்தில் வந்து

சராமாரியாய் சுட்டு

சாகடிப்பார்?.. அப்பாவியை

ஒட்டுக்குழு...

இரண்டு சக்கரத்தில் வந்து

ஒரே குண்டில் களையெடுப்பார்

சங்கிலியன் குழு!!

பாவங்களுக்கு

மன்னிப்பு தூது போகும் பாதிரியாரை

பாவிகள் பரலோகத்துக்கு

அனுப்பினார்களே...

பரமபிதாவே...பாவிகளையா

இரட்சிக்கிறாய்?..

எங்கோ உயிரோடு இருக்கிறான்..

என்பிள்ளை என வாழ்வெனென்று

தூரதேசம் அனுப்பினாள் தாய்..

எங்கே இருக்கிறாள் தாய்

என்று தெரியாமல்

தெரியவும் விரும்பாமல் வாழ்வது சேய்!!

மனிதனாய்; பிறந்தாலும்..

விலங்காய்.. மனிதன்..

விலங்குகளாய் பிறந்தும்..

விசுவாசமாய் நாய்கள்!!

ஆயுதம் விற்க..

அரசியல் செய்யும்

பெரிய நாடுகளிடம்...

ஆயுதம் வாங்கி

அரசியல் செய்யும்

சிறிய நாடுகள்!!..

ஆட்சியில் இருப்பதென்ன

அரசா?.. ஆயுதமா?..

  • தொடங்கியவர்

தூறல் நாள் 56

நீ மறந்த பிறகு..

என் இமைகளில்

சுமை தொற்றிக்கொண்டது..

என் கனவுகள் காய்ந்து போனது..

என் மெத்தைகளில்

முட்கள் பூத்தது..

என் இரவுகள்..

விக்கியழுது விடிய மறுத்தது...

விளங்கிக்கொண்டேனடி...

காதல் நாணயத்தை

எறிந்தால்..

எறிபவர்கள் சந்தோச

பக்கத்தை மட்டுமே..

அறிந்திருப்பார்கள்..

எதிர்பார்ப்பார்கள்...

ஆனால்

மறுபக்கம்?..

கசக்கிப் போட்ட

காகிதத்துக்குள்..என்

இதயம் துடித்துக்கொண்டிருப்பதனை

அறியாத தேவதைப்பெண்ணே..

நீ அடிக்கின்ற போதெல்லாம்

வலிக்கிறது... உன்னைச் சினக்காமல்

மனது என்னையே வெறுக்கிறது!!

இனிப்பைச் சுற்றும்

எறும்புகள் போல

என்னை ஒரு நாளில்

சுற்றியிருந்த கூட்டத்தை

தேடிக்கொண்டிருக்கிறேன்..

கண்ணில்படாமல் அவர்களும்..

கசக்கிப்பிழிந்த கரும்புச்சக்கையாக நானும்..

மூழ்கிப்போகும் அந்தி சூரியன்..

முடிந்து போவதில்லையே..

மீண்டும் உதயமாவான்..

வெளிச்சப்புன்னகையால் உலகையே

சிரிக்கவைப்பான்..

தோல்விகள் நிஜமில்லை...

நிலையானதுமில்லை...

வீழ்ந்தாலும் மறுபடி மறுபடி

எழுந்திடுவோம்..வெற்றிக்காய்..

சூடான வார்த்ததைகள்..

கசப்பான உறவுக்கோபங்கள்..

உங்கள் இனிப்பான

புன்னகையை கலந்துவிடுங்கள்..

சுவையான தேநீர் போல்

வாழ்வே அழகாய்விடும்!

எந்த மதமும்

சொல்லாத வன்முறையில்

மதவாதங்களும்...

எந்த இனமும்

விரும்பாத யுத்தங்களில்

இனவாதமும்...

தலைவிரித்தாடுவதால்..

மனிதனுக்குள் மனிதனைத்

தேடிக்கொண்டு.. மனிதனே!!!.

  • கருத்துக்கள உறவுகள்

ம்.. என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள் தூயா!

அவர் ம். என்றால் நூறும், அம் என்றால் ஆயிரமும் பாடல் பாடும் அம்பிகாபதி அளவுக்கு விஷ்வரூபம் எடுக்கிறார்!!!

தோட்டத்தில் சின்னச் சின்னப் பூக்களைப் பார்த்து மனசு மகிழ்ச்சியில் விம்முவதுபோல் சந்தோசமாய் இருக்கிறது. தொடருங்கள் வாழ்த்துகள் கவிஞரே!!!

  • தொடங்கியவர்

ஏன்.... எதுக்கு..... :lol:

என்ன வைச்சு நகைச்சுவை பண்ணலையே... :wub:

( :) ஆங்கில வார்த்ததைக்கெல்லாம் அரிவாள் வெட்டு விழுதாம்...)

என்ன கொடுமை...சா..சா... ஐயா இது?... :D

சுவி உங்க பாராட்டுக்கு நன்றி.. :)

  • தொடங்கியவர்

தூறல் நாள் 57

வரிப்புலிகள் வான்புலிகள்...

கடற்புலிகள்..கரும்புலிகள்...

காலத்தின் கட்டளை ஏற்றிட்ட

வீரர்கள் தமிழ் ஈழப்புலிகள்...

புலிகள் என்றும் தூங்குவதில்லை

புகழ்மொழிக்காக ஏங்குவதில்லை

ஈழம் வந்து சேரும் வரைக்கும்

இவர்கள் இதயத்தின் நடுவே

எரிமலை இருக்கும்..

விடுதலை வீரன்..விழிகள் கக்கும்

கனலின் சிக்கும்.. பகைமை சிக்கி சிதறிவிடும்..

வரிப்புலிகள் வான்புலிகள்...

கடற்புலிகள்..கரும்புலிகள்...

காலத்தின் கட்டளை ஏற்றிட்ட

வீரர்கள் தமிழ் ஈழப்புலிகள்...

இமைப்பொழுதில்..

இவன் வருவான்..

இடியெனவே..முழங்கிடுவான்..

எதிரித்தடைகளை

இல்லாமல் செய்திடுவான்

இவன் உடலம் செம்பூக்களாய் தூவும்

உயிர் விடுதலை தீபத்தில் சேரும்

கரும்புலி..கரும்புலி கரும்புலி..

தமிழ் வீரத்தின் நாயகர் கரும்புலி..

வரிப்புலிகள் வான்புலிகள்...

கடற்புலிகள்..கரும்புலிகள்...

காலத்தின் கட்டளை ஏற்றிட்ட

வீரர்கள் தமிழ் ஈழப்புலிகள்...

வானத்திலே..

வான்புலிகள்..

வந்தனரே ஓர்நாள்..

விடுதலையின் வெளிச்சவழி

கண்டோமே அந்நாள்..

கண்காணிக்க நூறுகருவி..

எதிர்த்து தாக்கிட ஆயிரம் கணைகள்..

எல்லாம் கொண்ட எதிரியின்

கண்களில் தீயினைத் தூவும் புலிகள்

புலிமறவன் பெற்ற வான்புலிகள்

வான்புலி..வான்புலி..வான்புலி..

இனி எதிரிக்கும் வேண்டும் பெரும் பதுங்குகுழி..

வரிப்புலிகள் வான்புலிகள்...

கடற்புலிகள்..கரும்புலிகள்...

காலத்தின் கட்டளை ஏற்றிட்ட

வீரர்கள் தமிழ் ஈழப்புலிகள்...

கடலுக்குள் புயல் ஒன்று நீந்தும்-அது

கடமைகள் முடித்து..கரை வரும்போது..

எதிரி கப்பல் கடலுக்குள் தாழும்..

ஆழகடலுக்குள் ஆயுதம் கொண்டு..

அணியாய் வருவாரே..

அழிந்திடும் எதிரியின் ஆணவம் கண்டு

ஆனந்தம் கொள்வாரே..

கடற்புலி..கடற்புலி..கடற்புலி..

படைத்திட்ட காவியம் நூறடி..

வரிப்புலிகள் வான்புலிகள்...

கடற்புலிகள்..கரும்புலிகள்...

காலத்தின் கட்டளை ஏற்றிட்ட

வீரர்கள் தமிழ் ஈழப்புலிகள்...

Edited by vikadakavi

என்ன கவி இதை எல்லாம் ஒரு புத்தகமாய் வெளியிடுவமா....???

  • தொடங்கியவர்

யாழை விட சிறந்த புத்தகம்?....

  • தொடங்கியவர்

தூறல் நாள் 58

அந்தக்காலக்குமரி

கூந்தலை வாரிவழிததிழுத்திருப்பாள்..

இடைக்காலத்துக்குமரி

காதோரக்கூந்தலை சுருளச்செய்திருப்பாள்..

இந்தக்காலக்குமரி

கூந்தல்க்குஞ்சத்தைக்கொண்டு..

கண்களை மட்டும் மறைத்திருப்பாள்!!

சந்தர்ப்பங்களால்

வெல்லப்பட்ட காதல்களுக்கும்..

சந்தர்ப்பங்களால்

தோற்கடிக்கப்பட்ட காதல்களுக்கும்

பின்னால் மனிதவேடங்களில்

விதி!!!

உச்சக்கோபங்கொண்டு

எச்சமிருக்கும் பண்பையும்

இழந்துவிடுவதால்

மனிதன் கோபமேற்றவுடன்

விலங்காவான்..சினப்பான்..

சிந்தையற்று..சொல்லைச்

சிதறவிடுவான்..நிதானமற்று

நிர்க்கதியாவான்!!

நேற்று

உன் அக்காவிற்காக

காத்திருந்தேன்..

இன்று

உனக்காக

காத்திருக்கிறேன்

நாளை

உன் தங்கைக்காக

காத்திருப்பேன்..

சாத்திரம் பேசும்

விழிப்புணர்வின் முட்டுக்கல்

உன் வீட்டின்

வாய்பேச நினைக்கின்ற

கொல்லைப்புறக்

குத்துக்கல் நான்!!

எல்லோரும்..

உன்னைப் பற்றி

குறைகூறிக்கொண்டிருக்கிறார்

  • தொடங்கியவர்

தூறல் நாள் 59

பகலவன் உரசல்

தாங்காமல்

இரவுப்பெண் மறைவாள்...

இரவுப்பெண்..

நாடும் நேரம்...

களைப்புற்ற..

ஆதவன் தனை மறைத்து

துயிலச்செய்வான்...

கூட முடியாத

குற்றம்..ஒன்றுமில்லை..

இது

கூடுகின்ற திட்டம்..

இரவுப்பெண் நாட...

போர்வைக்குள் போகும்..

ஆதவனின்....

சல்லாபச் சங்கதியை...

வெளிச்சம் போட...

நிலவு முதாட்டி...

வெளிச்சம் போட்டுத்

தேடுவாள்..பாவம்...

இவள் தேட..

அவர்கள் நிழல்

உலகத்தில்..

உல்லாசமாய்..

இருப்பார்கள்..

நிலவு மூதாட்டிக்கு..

இரவுப்பெண்ணில்

என்ன கோபமோ..அடிக்கடி

நட்சத்திரக் கைக்கூலிகளை

விட்டு வேறு...

தேடச்சொல்கிறாள்...

இருந்தாலும்..இரவுப்பெண்

தன்னால் இயன்ற வரை...

சூரியச் சுந்தரனை

மடிமூடிக்கொள்கிறாள்..

சல்லாப நேரத்தில்

வில்லத்தனம் செய்யும்..

நிலவு மூதாட்டியையும்.. அவள்..

நட்சத்திரக் கூட்டத்தையும்..

தன்னுடைய நெருங்கிய தோழி..

கார்முகிலாலைக் கொண்டு

மறைத்தும் பார்க்கிறாள்..

ஆசை அறுபதுமில்லை..

மோகம் முப்பதுமில்லை

இவர்கள்.. கூடலும்..

தேடலும்.. இன்னும்..

தொடந்து கொண்டே...

இருக்கிறது...பெரிய..

காவியமாய்!!.

Edited by vikadakavi

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தூறல் நாள் 60

நீ மட்டுமே

வேண்டுமென்று

எண்ணியிருந்தால்..

நானும் நீயும் அனாதைகளாய்

போய்விட்டிருப்போம்...

இன்று

நம் காதல் மட்டும்

அனாதையாய்!...

எடுத்துப்போக முடியாத

செல்வத்தையெல்லாம்

சேர்ப்பான்..இருக்கும்போது

அனுபவிக்கத்தெரியாத மனிதன்..

தான் என்ற தன்னுடல்

தணலெரிவது தெரியாமல்..

உயிரர்த்தம் உணராமல்...

காதலில் மட்டும்தான்

காளையின்

கவனம் சிதறுவதில்லை..

கண்ணும் கருத்துமாய்..

கண் தூங்காமலே இருப்பான்..

காதல்க் கன்னி மேல்..

ஏழையாய்..

வலிகள் மட்டும்

வாழ்க்கையாய்..

கனவுகளில் அறியாத

சுகத்தை தேடி..

அலைபாயும்

இளைஞனே..

ஏழ்மை.. நிம்மதியின்

முகவரி

வலிகள் வாழ்க்கையின்

வரிகள்..

கனவுகள் தூக்கத்தின்

வரங்கள்..

நீ கிடைத்ததை

வெறுக்கிறாய்..

செல்வந்தன்.. கிடைத்ததில்

திருப்தி கொள்ளாமலிருக்கிறான்..

ஒரு பஞ்சு மூட்டை

கால்முளைத்து..

பவனி வரும்..அது

தொட்டுவிட்டால்..

ஆண் மூச்சே நின்று விடும்

பெண்ணுக்குள்..

ஆசைகள் பூவாய்..

பயம் முட்களாய்..

ஒரே கன்னிமனக் கருவரைக்குள்

முள்ளும் மலரும்!!

கை சுட்டதால்..

விளக்கை

அணைத்துவிட்டு..

இருட்டுக்குள் தவிக்கும்..

முட்டாள் ஆணே..

உன் முதல் காதல்

ஆறிப்போகும் வடுவல்ல

பரவப்போகும் வைரஸ்!!

அலட்சியம் செய்யாத

பெண்ணை இலட்சியம் கொண்ட

ஆண் கூட

தீவிரவாதிதான்..

அவன் கனவுகளை

சேகரித்து

காலங்களை

கரையவிட்டுக்கொண்டிருக்கிறா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூறல் நாள் 60

இன்றுதான் தங்கள் தூறலில் அடியேனும் நனைந்தேன் தம்பி கவி :wub:

கொத்துக் கொத்தாய் பூக்கின்ற முல்லைமலர் மாதிரி மனசள்ளிச் செல்கிறது ஒவ்வொரு தூறலும்!

நீ மட்டுமே

வேண்டுமென்று

எண்ணியிருந்தால்..

நானும் நீயும் அனாதைகளாய்

போய்விட்டிருப்போம்...

இன்று

நம் காதல் மட்டும்

அனாதையாய்!...*****

காதல் அனாதையாகுமா?! :)

எடுத்துப்போக முடியாத

செல்வத்தையெல்லாம்

சேர்ப்பான்..இருக்கும்போது

அனுபவிக்கத்தெரியாத மனிதன்..

தான் என்ற தன்னுடல்

தணலெரிவது தெரியாமல்..

உயிரர்த்தம் உணராமல்...

இதனால் தான் கெளதமர் புத்தரானார்...நாம் மனிதனாக ஆவது மாற வேண்டும் :(

காதலில் மட்டும்தான்

காளையின்

கவனம் சிதறுவதில்லை..

கண்ணும் கருத்துமாய்..

கண் தூங்காமலே இருப்பான்..

காதல்க் கன்னி மேல்..

***

அனுபவம் பேசுகிறதோ?

இளைஞனே..

ஏழ்மை.. நிம்மதியின்

முகவரி

வலிகள் வாழ்க்கையின்

வரிகள்..

கனவுகள் தூக்கத்தின்

வரங்கள்..

நீ கிடைத்ததை

..

***

அழகான ஆழமான வரிகள்.

ஒரு பஞ்சு மூட்டை

கால்முளைத்து..

பவனி வரும்..அது

தொட்டுவிட்டால்..

ஆண் மூச்சே நின்று விடும்

பெண்ணுக்குள்..

ஆசைகள் பூவாய்..

பயம் முட்களாய்..

ஒரே கன்னிமனக் கருவரைக்குள்

முள்ளும் மலரும்!!****

எ.பி **கருவறை

முள்ளும் மலரும் அன்பால்!! :D

..

முட்டாள் ஆணே..

உன் முதல் காதல்

ஆறிப்போகும் வடுவல்ல

பரவப்போகும் வைரஸ்!!

அடேங்கப்பா !! :lol:

அலட்சியம் செய்யாத

பெண்ணை இலட்சியம் கொண்ட

ஆண் கூட

தீவிரவாதிதான்..

அவன் கனவுகளை

சேகரித்து

காலங்களை

கரையவிட்டுக்கொண்டிருக்கிறா

  • தொடங்கியவர்

காதலர்கள் பிரிக்கப்படும்போது...

ஆதரிக்கப்படாத காதல் அனாதைதானே.. அக்கா

நன்றி உங்கள் குளுக்கோஸிற்கு... :wub:

  • தொடங்கியவர்

தூறல் நாள் 61

அத்தனையும் தந்தாய்..

பித்தனாயானேனே...

செத்துவிடத்தோணுதடி-உன்

மெத்தைமடி மோனத்திலே...

உச்சிமுதல் பாதம் வரை

எச்சிசெய்த என்னிதழை

மெச்சியுந்தன் இதழ்களால்-தேன்

வச்சுத் தந்தாய் தேவதையே...

கன்னமது மாம்பழமோ..

தின்னத்தின்ன தித்திக்குமோ..

மென்னிடை தொட்டால் பற்றிக்குமோ..-கட்டில்

பொன்னுடலால் சப்திக்குமோ..

உள்ளமெல்லாம் பெண்ணே

கொள்ளை கொண்டாய் மோகினியே..

வள்ளல் போல வந்தாய்..-என்

கள்ளத்தனம் நீயுரித்தாய் கண்ணே...

அத்தனையும் தந்தாய்..

பித்தனாயானேனே...

செத்துவிடத்தோணுதடி-உன்

மெத்தைமடி மோனத்திலே...

கட்டிலறை மக்கானேன்

தொட்டவரை சுகமானேன்

ஒட்டிவரும் உறவானேன்-நீ

விட்டுவிட்டால் விறகாவேன்..

ஆயிரம் காலம் போதுமடி

பாயினில் ஆசைகள் கூடுதடி

தூயவளே வந்து ஆடடி-என்

நோய் விரகமென்றால் விட்டு ஓடுமடி!!

ஆஹா ..... கவித்தூறல் எல்லாம் அருமையாயிருக்கே......! பாராட்டுக்கள்...

விகடகவி அண்ணா....தல அண்ணா சொன்னது போல் ஒரு புத்தகமாக வெளியிடலாம் போலருக்கே ........ :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.