Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தாண்டு பலன்கள்! 2008 - 'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டு பலன்கள்! 2008 -

'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன்

அதிரடி மாற்றங்களுக்கும் அரசியலுக்கும் ஆத்ம ஞான ஆன்மிகத்துக்கும் புரட்சிக்கும் அதிபதியாக விளங்கும் சூரியனின் ஒன்றாம் எண்ணைப் பிறவியாகக் கொண்டும், நியாயத்துக்கும் ஜனநாயகத்துக்கும் செல்வத்துடன் பக்திக்கும் அதிபதியான குருவின் எண் மூன்றை விதியாகக் கொண்டும் இந்த 2008-ம் ஆண்டு பிறக்கிறது. எனவே, இந்தப் புத்தாண்டு கடந்த ஆண்டை விட மக்கள் மத்தியில் அதிக மகிழ்ச்சியைத் தருவதுடன் திட்டமிட்டு செயல்படும் குணத்தையும் உழைக்கும் எண்ணத்தையும் அதிகமாக்கும்.

மேஷம்

எதையும் நுணுக்கமாக செய்வீர்கள். யாரேனும் தவறு செய்தால் உடனே தட்டிக் கேட்பீர்கள். பண்பாட்டுடன் பழைய கலைப் பொருட்களைப் பாதுகாக்கும் குணம் கொண்ட நீங்கள், புதுமையை விரும்புவீர்கள்.

உங்களின் யோகாதிபதியான குரு பகவானும் ராசிநாத னான செவ்வாயும் பரஸ்பரம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பாதியில் நின்ற பல வேலைகள் உடனே முடியும். எதிர்பாராத பண வரவும் ஏற்படும். உங்களின் ராசிக்கு ஆறாவது வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் வீண் பழி, வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். எட்டாவது வீட்டில் சுக்ரன் நிற்பதால் கணவன் - மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். கணவருக்கு இருந்த முன்கோபம், உடல் உபாதை நீங்கும். பிப்ரவரி மாதத்தில் புதிய வீட்டில் குடி புகும் வாய்ப்பு அமையும். பிள்ளைகளை விளையாட்டு, இசை, நடனம் ஆகியவற்றில் பயிற்சி பெற வைப்பீர்கள். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அவர்களின் உடல்நலம் மற்றும் செயல்பாடுகளில் கவனம் தேவை. கர்ப்பிணிப் பெண்கள் இந்தக் கால கட்டத்தில் கவனமாக இருப்பது நல்லது.

உங்கள் ராசிநாதன் செவ்வாய் மே மாதம் முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை பலவீனமாவதால் சிறு விபத்துகள், உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து விலகும். புதன் சாதகமாக இருப்பதால் பழைய கடனைத் தீர்க்க புதிய வழி பிறக்கும். அழகு, இளமை கூடும். பழைய நண்பர் களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உங்களைப் பார்த்தும் பார்க் காமல் சென்றவர்கள் தேடி வந்து பேசுவார்கள். ஜூன் மாதத்தில் குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய வழி கிடைக்கும்.

வியாபாரத்தில் இருந்து வந்த ஏற்ற இறக்கங்கள் இனி இருக்காது. பழைய பாக்கிகள் எளிதாக வசூலாகும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளால் பந்தாடப்பட்டீர்களே.. மறைமுகமாக பல பிரச்னைகளை சந்தித்தீர்களே.. அந்த அவல நிலை மாறும். வேலைச்சுமை குறையும். சக ஊழியர் களால் மதிக்கப்படுவீர்கள். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அமையும். கலைத் தொழிலில் உள்ளவர்கள் பரிசும் பாராட்டும் பெறுவார்கள். நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்த 2008-ம் ஆண்டு நியாயமான செலவுகளையும் அலைச்சல்களையும் ஒருபக்கம் தந்தாலும், மறுபக்கம் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதாக அமையும்.

ரிஷபம்

தோல்வியைக் கண்டு துவளாத நீங்கள், எப்போதும் வருங்காலத்தைப் பற்றி அதிகம் யோசிப்பீர்கள். உடன் இருப்பவர்கள் வசதியாக வாழ வேண்டுமென நினைப்பீர்கள்.

உங்களின் பூர்வபுண்ணிய வீடான புதனின் ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் நிம்மதி கிடைக்கும். உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியைப் பார்ப்பதால் கணவரின் ஆதரவு அதிகரிக்கும். உறவினர் வகையில் இருந்த மனத்தாங்கல் விலகும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். வருடம் பிறக்கும்போது கேது, உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் நிற்பதால் தாய்வழி சொத்துக்களில் வில்லங்கம், தடைகள், வழக்குகள் வந்து விலகும். ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை.

9.4.08-ல் இருந்து உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டுக்கு கேது வர இருப்பதால் மன உளைச்சல் குறையும். தடைபட்ட வேலைகள் எளிதில் முடியும். வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். வீடு வாங்குவது, விற்பதில் இருந்த தடைகள் நீங்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். குரு உங்கள் ராசிக்கு 8-ல் நின்றாலும் வருடப் பிறப்பின்போது சுகாதிபதி சூரியனுடன் நிற்பதால் அரசாங்க வேலைகள் உடனே முடியும். வழக்கில் வெற்றி கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், அதிகளவு முதலீடு செய்வதைத் தவிர்த்து விடுங்கள்.

ஏப்ரல் மாதம் வரை செவ்வாய், உங்கள் ராசிக்கு இரண் டாவது வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் மற்றவர்களிடம் பேசும்போது உணர்ச்சிவசப்பட வேண்டாம். உங்களை சீண்டி விட்டு சிலர் வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால், இந்த வருடத்தின் பிற்பகுதியில் வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ், கௌரவம் உயரும். உங்களுக்கு எதிராகப் பேசியவர் களின் மனம் மாறும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.

வியாபாரம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பரபரப் பாக இருக்கும். ஆனால், உங்களிடம் வேலை பார்த்தவர்களே போட்டியை உண்டாக்குவார்கள். ஜூன் மாதத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்வார்கள். நேரங்காலம் பார்க்காமல் வேலை பார்ப்பீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் சச்சரவு ஏற்படும். வருடக் கடைசியில் சம்பளம், பதவி உயரும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.

மொத்தத்தில், இந்தப் புத்தாண்டின் முற்பகுதி கொஞ்சம் அலைச்சலை தந்தாலும் மையப் பகுதியும் இறுதிப் பகுதியும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

மிதுனம்

சமாதானத்தை விரும்பும் நீங்கள், வம்பு சண்டைக்குச் செல்ல மாட்டீர்கள்; வந்த சண்டையை விட மாட்டீர்கள். எப்போதும் எங்கும் நியாயத்தை பேசுவீர்கள்.

உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் இந்த வருடம் பிறப்பதால் தடைபட்ட வேலைகள் எல்லாம் உடனே முடியும். பணம் வந்தும் கையில் தங்காமல் இருந்த நிலை மாறும். சனி சாதகமாக இருப்பதால் நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். இந்த வருடப் பிறப்பின்போது சுக்ரன் ஆறாவது வீட்டில் நிற்பதாலும் ராசிக்குள்ளேயே செவ்வாய் நிற்பதாலும் உடல் உபாதைகள் வந்து விலகும். உங்கள் ராசியை தொடர்ந்து குரு பார்த்துக் கொண்டிருப்பதால் மருத்துவச் செலவுகள் வந்தாலும் பெரிய ஆபத்து ஏதும் இருக்காது. வி.ஐ.பி-க்களின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல்கள் நீங்கும். கொடுத்த பணம் திரும்பி வரும்.

9.4.2008-ல் இருந்து ராசிக்கு இரண்டாவது வீட்டில் கேதுவும் எட்டாவது வீட்டில் ராகுவும் அமர இருப்பதால் வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது. மற்றவர்களின் விவகாரத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். மே மாதத்தில் செவ்வாய் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் முன்கோபம், வாக்குவாதங்கள் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஷேர் மூலம் பணம் வரும். அரசாங்கத் தால் அனுகூலம் உண்டாகும். நவம்பர் மாதத்தில் பிள்ளை களின் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டி இருக்கும். இல்லத்தில் நடைபெறும் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை பிறக்கும்.

வியாபாரத்தில் பிப்ரவரி, ஜூன், ஜூலை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். அனுபவம் மிக்க புதிய வேலை யாட்களை நியமித்து பழைய சரக்குகளை புதிய யுக்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். அரசாங்க கெடுபிடிகள் தளரும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வை இந்த வருடத்தில் எதிர்பார்க்கலாம். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களை பழைய சிக்கல் களில் இருந்து விடுவிப்பதுடன் கடன் பிரச்னைகளிலிருந்து காப்பாற்றுவதாகவும் வசதி வாய்ப்புகளைத் தருவதாகவும் அமையும்.

கடகம்

கலகலப்பாகப் பேசும் நீங்கள், சில நேரங்களில் கணக்காகவும் பேசி எதிரியை கலங்கடிப்பீர்கள். மனசாட்சிப்படி நடக்கும் நீங்கள், மற்றவர்களின் நாடியைப் பிடித்துப் பார்ப்பதில் வல்லவர்கள்.

உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். தைரியம் கூடும். உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீட்டில் சுக்ரன் நிற்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். வீடு கட்டும் பணி நிறைவு பெறும். சூரியன் வலுவாக நிற்பதால் அரசாங்க வேலைகள் சுலபமாக முடியும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணவரின் முன்கோபம் குறையும்.

உங்கள் ராசிக்கு முன்னும் பின்னும் செவ்வாயும் சனியும் நிற்பதால் இனம் புரியாத மனக் கவலைகள் வந்து விலகும். உடல்நலனில் அதிக அக்கறை காட்டுவது அவசியம். 1.5.2008 முதல் 23.6.2008 வரை உங்கள் ராசிக்குள்ளேயே செவ்வாயும் கேதுவும் சேர்வதால் இந்தக் காலகட்டத்தில் பிள்ளைகளாலும் பெற்றோராலும் அலைச்சலும் மருத்துவச் செலவும் ஏற்படும். 24.6.2008-ல் இருந்து 11.8.2008 வரை எதிலும் யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். இந்தக் காலகட்டத்தில் சொத்து வாங்குவது, விற்பதில் நிதானம் தேவை. மற்றபடி இந்த வருடத்தின் பிற்பகுதி எல்லா வகையிலும் சாதகமாக இருக்கும்.

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சுப நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். திடீர் பண வரவு ஏற்படும். டிசம்பர் மாதத்தில் நீண்ட நாள் சிக்கல்கள் தீரும். கணவருக்கு அதிரடி முன்னேற்றம் உண்டாகும். கௌரவப் பதவிகளும் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

வியாபாரத்தில் போட்டிகள் வலுக்கும். மற்றவர்களை நம்பி கூட்டுத் தொழிலில் இறங்க வேண்டாம். கடன் வாங்கி முதலீடு செய்து சிக்கிக் கொள்ள வேண்டாம். வேலையாட்கள் உங்களை தூக்கியெறிந்து பேசுவார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். மறந்தும் மற்றவர்களின் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். அதிகாரிகள் கோபப்படுவார்கள். பழி சுமத்துவார்கள். அமைதி காக்கவும். கலைஞர்கள் தடைகளைத் தாண்டி முன்னேறுவார்கள். பரிசு பெறுவார்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களை ஒரு பக்கம் புரட்டி எடுத்து புதிய அனுபவங்களை தந்தாலும் வருட இறுதிப் பகுதி எல்லாவற்றையும் இன்பமயமாக்கும்.

சிம்மம்

வெள்ளை மனசுக்காரரான நீங்கள், உண்மையே பேசி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். கலை நய சிந்தனை யும், கடின உழைப்பால் எதையும் சாதித்துக் காட்டும் திறனும் கொண்டவர்கள் நீங்கள்.

உங்கள் ராசிக்கு இரண்டாவது வீடான தன வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எல்லா வகையிலும் நன்மையே உண்டாகும். எடுத்துக் கொண்ட வேலையை விரைந்து முடிப்பீர்கள். முகத்தில் தெளிவு பிறக்கும். மன வலிமை கூடும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவரின் சம்பளம் உயரும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். குடும்பத்தினருடன் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவதும் நல்லது. உறவினர்களுடன் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு சேமிக்கத் தொடங்கு வீர்கள். அவர்களின் உயர் கல்விக்காகக் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

16.7.2008 முதல் 16.8.2008 வரை அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். செப்டம்பர் மாதத்தில் இருந்து பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். பெண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். சகோதர வகையில் மகிழ்ச்சி பெருகும். அரசாங்க விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிதாக சொத்து வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த மோதல் போக்கு மறையும். பூர்வீக சொத்து விவகாரங்களில் அனுகூலமான நிலை காணப்படும்.வெளிநாட்டிலிருக்

  • கருத்துக்கள உறவுகள்

காசு உழைக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலப் புத்தாண்டுக்கும் சோதிடம் வெளியிடுகின்றார்கள். இதில் "சோதிட ரத்னா" என்று விருது வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

சரியான புத்தி ஜீவித்தனத்தோட யோசிச்சால் தமிழ்ப் புத்தாண்டுக்குத்தான் சோதிடம் சொல்ல வேணும். நீங்க சொல்லுறது சரி.

  • கருத்துக்கள உறவுகள்

ம். சித்திரை மாதம் வரை அவர் காத்திருக்க வேண்டும். அல்லது தமிழ்ப் புத்தாண்டுப் படி கணிக்கப்படுகின்ற தைப்பொங்கலை வைத்துக் கூட சொல்லிக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி கறுப்பி. :):lol:

நானும் தான் ஒவ்வொரு வருசமும் இதுகள வாசிக்கிறன்... இதுவரைக்கும் எனக்கு வாழ்க்கையில ஏதாவது நல்லது நடக்கும் எண்டு இந்த நாசமா**வாங்கள் சொல்லக் காண இல்ல. எப்பவும் இப்பிடித்தான் ஏதாவது சொல்லுறாங்கள்..

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களை ஒரு பக்கம் புரட்டி எடுத்து புதிய அனுபவங்களை தந்தாலும் வருட இறுதிப் பகுதி எல்லாவற்றையும் இன்பமயமாக்கும்.

நீங்கள் சொன்னா ரொம்பச் சரியாத்தான் இருக்கும். நாசமாப் போக!

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களை ஒரு பக்கம் புரட்டி எடுத்து புதிய அனுபவங்களை தந்தாலும் வருட இறுதிப் பகுதி எல்லாவற்றையும் இன்பமயமாக்கும்.

கவலைப்படாதே கலைஞா...

உங்களை சனி பகவான் கடைக்கூறில நிண்டு வழிநடத்துவதால்

எல்லாம் நன்மையிலேயே முடியும்...ஆனாலும் அவதானமா..இருங்கோ.. :huh:

கவலைப்படாதே கலைஞா...

உங்களை சனி பகவான் கடைக்கூறில :huh: நிண்டு வழிநடத்துவதால்

எல்லாம் நன்மையிலேயே முடியும்...ஆனாலும் அவதானமா..இருங்கோ.. :D

அடப்பாவிகளா.. ஆளாளூக்கு விளங்காத பாசையில சோதிடம் சொல்லி கெதியில என்ன அங்கோடைக்கு அனுப்பி வைப்பீங்கள் போல இருக்கிதே. வாழ்க்கையில கெட்டது நடக்கிதோ இல்லையோ.. இந்த சோதிடம் சொல்லிறவங்கள் வாயால ஒரு நல்ல வார்த்தை வராது. ஆ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோதிடமாவது கத்தரிக்கையாவது...பேசாமல் என்னை மாதிரி சோதிடத்தில் நம்பிக்கை வைக்காமல் வாழப்பழகுங்கள். வாழ்க்கையின் கசப்பு இன்னும் கொஞ்சமாவது குறையும் பாருங்கோ... :huh:

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயதில் என் இராசிக்காரருக்கு விரைவில் திருமணம் ஆகும் என்று வந்திருந்தபோது, பயந்து போய்(சத்தியமாக :huh: ) அம்மாவிடம் போய்ச் சொன்னது இப்போதும் ஞாபக்ததில் இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

உறவினர்கள் உங்களின் வேலைச் சுமையைப் பகிர்ந்து கொள்வார்கள்.

செய்து விட்டாலும்... :huh::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயதில் என் இராசிக்காரருக்கு விரைவில் திருமணம் ஆகும் என்று வந்திருந்தபோது, பயந்து போய்(சத்தியமாக :unsure: ) அம்மாவிடம் போய்ச் சொன்னது இப்போதும் ஞாபக்ததில் இருக்குது.

இப்போ அப்படி (திருமணம் ஆகும் எண்டு) வந்திருந்தால் பயப்படமாட்டியள் தானே :rolleyes:

  • 2 weeks later...

வம்பு சண்டைக்குச் செல்ல மாட்டீர்கள்; வந்த சண்டையை விட மாட்டீர்கள்.

அட அட ஜம்மு பேபியை பற்றி கரக்டா போட்டிருக்கீனம் :) .........ம்ம்ம் இந்த வருசம் என்ன நடக்க போகுது என்பது என் கையில் தான் தங்கியுள்ளது சோ இந்த வருசம் என்ன செய்யலாம் என்னுமே யோசிக்கவில்லை :) சோ எனக்காக கறுப்பி அக்கா யோசித்து சொல்லுங்கோ!! :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ் 2008-

"வாழ்கையில பல வருசங்கள் வரலாம் ஆனா சனியும்,ஞாயிறும் தான் விடுமுறை இது மாறாது" :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.