Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட் அதிரடி தடை - தற்போது தடை விலக்கல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jallikattu12-250_11012008.jpg

டெல்லி: தமிழகத்தில் பொங்கல் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என்றும் அது வர்ணித்துள்ளது.

தமிழகத்தின் வீர விளையாட்டாக வர்ணிக்கப்படுவது ஜல்லிக்கட்டு. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ் பெற்றது. 3வது நூற்றாண்டு முதல் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீப காலமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது மாடுகள் முட்டி உயிர்ப் பலி ஏற்படுவது அதிகரித்து வந்தது. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் (இவரது மகன் ஜல்லிக்கட்டில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு அதை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் ஜல்லிக்கட்டை நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதித்து சில நிபந்தனைகளும் விதித்தது. அதன்படி கடந்த பொங்கலின்போது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் நேரில் பார்வையிட்டு, கண்காணித்து எந்தவித உயிர்ப் பலியும், அசம்பாவிதமும் ஏற்படாமல் ஏற்பாடுகள் செய்தார்.

இருப்பினும் சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிலர் அப்பீல் செய்தனர். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க வேண்டும், அதற்காக தடையை விலக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தமிழக அரசு சார்பிலும் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு - தமிழக அரசு

தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் ஒரு முக்கிய அம்சமாக ஜல்லிக்கட்டு இடம்பெற்றுள்ளது.

எனனவே பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டின்போது உயிர்ப்பலி உள்ளிட்ட அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது.

போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு எந்தவித சித்திரவதையும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும். போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் முறைப்படுத்தப்பட்டு நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை தமிழக அரசும், மதுரை மாவட்ட நிர்வாகமும் முறையாக கடைப்பிடித்ததால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்ைல என்பதை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், காளைகளை சித்திரவதைப்படுத்தி, அதைப்பிடிப்பது என்பது மிகவும் கொடூரமானது. எனவே இதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கூடாது என்று வாதிடப்பட்டது.

காட்டுமிராண்டித்தனம்!

அனைத்துத் தரப்பு விளக்கத்தையும் ஆராய்ந்த பின்னர் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதுகுறித்து நீதிபதிகள் அளித்த உத்தரவில், தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இது மிகவும் காட்டுமிராண்டித்தனமான ஒரு பவழக்கம். இதை நிறுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. இதுதான் சரியான நேரம். அனைவரும் நாகரீகமாக மாற வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது தொடரும். அதேசமயம், வேண்டுமானால், ரேக்ளா ரேஸ், மாட்டு வண்டிப் பந்தயம் போன்றவற்றை நடத்திக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியில் மதுரை கலெக்டர்

மதுரை மக்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக உச்சநீதிமன்றத்திற்கு இன்று வந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர் பெரும் அதிர்ச்சியுடன் காணப்பட்டார். தீர்ப்பு அவருக்கு திருப்தி தரவில்ைல என்பது அவரது முகமே காட்டிக் கொடுப்பதாக இருந்தது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக காத்திருந்த தென் மாவட்டத்தினர், குறிப்பாக அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

thatstamil.com

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

போதுமான மருத்துவவசதி, பாதுகாப்பு ஏற்பாட்டைத் தமிழக அரசு வழங்குமாக இருந்தால் ஜல்லிக் கட்டுத் தொடர்பாக பயப்பட வேண்டியதில்லை. காயப்பட்டவர்கள், மருத்துவமனையைத் தேடிப்போகும்போது நிறைய நேரம் எடுப்பதால் தான் அதிக மரணம் ஏற்படுகின்றது.

துணிச்சலான தீர்ப்பு!

மிருகங்களுடன் மிருகங்களாக மோதி உயிரை மாய்க்கும், மற்றும் ஊனமடையும் இளைஞர்களை நல்ல வழியில் சென்று மேம்பாடடைய இது உதவும்.

இது போன்றே காட்டுமிராண்டி மதங்களையும், மூடநம்பிக்கைகளையும் நீதிமன்றம் துணிந்து தடைசெய்தால் தமிழக மக்கள் வாழ்வில் புதிய மறுமலர்ச்சி தோன்றும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டுக்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம்

_40738727_bulfightbody3.jpg

தமிழர்களின் பாரம்பரியத்துக்கு அடையாளமான பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் விலக்கிக் கொண்டிருக்கிறது. சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதியளித்தது.

சில நிபந்தனைகளுடன், ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்திருந்ததை எதிர்த்து, பிராணிகள் நல அமைப்பின் சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்த இடைக்காலத் தடையை நீக்க முடியாது என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றம் மறுத்தது.

இந் நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மாற்றியமைக்கக் கோரி தமிழக அரசு மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.

மனிதர்களின் பாதுகாப்புக்கும் விலங்குகள் நலனுக்கும் பங்கம் ஏற்படாது என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

அந்த மனு, செவ்வாய்க்கிழமை பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்று தமிழக அரசு முன்வைத்த வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், அரசு தானாக முன்வந்து தெரிவித்த நிபந்தனைகள் அடிப்படையில் அனுமதியளிப்பதாகவும், அவை கண்டிப்பாகக் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். காளை மாடுகளுக்கும், ஜல்லிக்கட்டில் பங்கேற்போருக்கும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும். நிகழ்வுகள் முடிந்து இரண்டு வாரங்களில் மாவட்ட ஆட்சியர்கள் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும்.

உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இது குறித்த விரிவான பெட்டகத்தை நேயர்கள் தமிழோசையில் கேட்கலாம்.

bbc.tamil

----------

நல்ல தீர்ப்பு. மனித உயிர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமும்.. விலங்குகளின் நலனில் அக்கறையும் செலுத்த தூண்டியுள்ளது இந்தத் தீர்ப்பு.

ஒரு இன மக்கள் குழுமத்தின் பாரம்பரிய அடையாளத்தை முற்றாக அழிக்காமல்.. தேவையான அவசிய மாற்றங்களோடு அதைத் தொடர அனுமதி அளித்திருப்பத்தோடு மக்களுக்கு தமது பாதுகாப்பு மட்டுமன்றி.. விலங்குகளின் நலனிலும் அக்கறை வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது.

இந்துக்களும் தமிழர்களும் அதிகம் ஜீவகாருணியம் மிக்கவர்கள் என்பதால்.. தமது பாதுகாப்புடன் விலங்குகளின் நலனிலும் அதிக கவனம் எடுப்பர் என்று எதிர்பார்க்கலாம்..! :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கம் மகிழ்ச்சியளிக்கின்றது. ஆனால் நான் சொல்ல விளைவது,

தீர்ப்புக்கள் என்பன அரசியல், சூழ்நிலை, நாடு, நாட்டின் பாதுகாப்பு என்பன குறித்துத் தான் வழங்கப்படுகின்றனவே தவிர, உண்மையான நீதிக்காக இல்லை என்பதை இத்தீர்ப்பால் உணர்ந்து கொள்ளலாம்.

எனவே, நீதி மன்றத் தீர்ப்பு ஒன்றும் நியாயமாக இருக்கும் என நம்பக் கூடாது. ராஜிவ் காந்தி கொலையுற்பட...

Edited by தூயவன்

ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) வரலாறு

முனைவர் மு.இளங்கோவன்

ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது.

இவ்விளையாட்டு,முல்லை நில (ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது. முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது.

பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இங்கு நோக்குவோம்.

பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலிலும் (330335), பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.

குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர். இதனை,

'இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு

மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை

மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்

கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப

வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய

நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330335)

என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.

ஏறுதழுவுதலுக்கு முதல்நாள் அல்லது அன்றைய நாளில் குரவைக்கூத்து நடைபெறும். முதல்நாள் நடந்தால் பெண்கள் ஏறு தழுவும் வீரன் வெற்றிபெற வேண்டிப்பாடுவர். ஏறு தழுவும் நாளின் மாலையில் குரவைக்கூத்து நடைபெற்றால் வெற்றிபெற்ற வீரனின் வெற்றியைப் புகழ்ந்து பாடுவர்.

வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரம்,

'மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்.இக்

முல்லையம் பூங்குழல் தான்' (சிலம்பு.ஆய்ச்சி. கொளு.8)

என்று குறிப்பிடும்.

கலித்தொகை

கலித்தொகையின் முல்லைக்கலியில் இடபெறும் பகுதியில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவு தலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறபாகக் காட்டப்பட்டுள்ளன.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட இவ் ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்கவேண்டும்.

பிடவம்பூ, செங்காந்தள்பூ, காயாம்பூ உள்ளிட்ட மலர்களை அணிந்த ஆயர்கள் தம் காளைகளை அடக்குபவர்களுக்குத் தம் மகளைத் தருவதாக உறுதியளித்துச் சிவபெருமானின் குந்தாலிப்படை போன்று மாட்டின் கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அவ் எருதுகள் இடிஒலி போல முழக்க மிட்டுத் தொழுவுக்கு வந்தன. அந்த எருதுகளைத் தழுவியவருக்கு அளிப்பதாகச் சொன்ன மகளிர் வரிசையாய் நிற்பர். அல்லது பரண்மீது அமர்ந்து பார்ப்பர்.

ஏறு தழுவதற்கு முன்பாக அத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் நீர்த்துறைகளிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படித் தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவர். அவ்வாறு அடக்க முற்படுபவனின் மார்பைக் காளைகள் குத்திக்கிழிப்பது உண்டு. அக்காட்சி பாரதக் கதையில் திரொளபதையின் கூந்தலைத் தொட்ட துச்சாதனனின் மார்பைப் பிளந்த வீமனைப்போல் இருந்தது என்று ஏறு தழுவும் காட்சி முல்லைக்கலியில் விளக்கப்பட்டுள்ளது.

பல வகை காளை மாடுகள் ஓரிடத்தில் (பட்டி) அடைக்கப்பட்டு, பின்பு மாடுபிடிக்க விடப்படும். அவ்வாறு அடைக்கப்படிருந்த பல மாடுகளின் காட்சி ஒரு குகையில் சிங்கம், குதிரை, ஆண் யானை, முதலை முதலியவற்றை ஒரே இடத்தில் அடைத்தால் ஏற்படும் நிலைபோல பட்டியில் இருந்தது எனச் சங்க இலக்கியப் புலவன் குறிப்பிட்டுள்ளான்.

ஒரு காளைமாடு இளைஞன் ஒருவனைக் கொம்பால் குத்துகிறது. அவன்குடல் சரிந்து வெளி வருகிறது. அவற்றை அவன் எடுத்து வயிற்றில் இடுகின்றான்; வேறொரு காளை மாட்டில் தொத்திக் கிடப்பவன் காளைமாட்டின் மேல் இடப்பட்ட மாலைபோல் இருந்தான் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலரை மாடுகள் குத்திக் கிழிப்பாதல் மாடுபிடி களம் குருதிக் கறையுடனும் மரண ஓலத்துடன் விளங்கித் தோன்றியுள்ளது. இது துரியோதனன் உள்ளிட்டவரைக் காவுகொண்ட படுகளம் போல் இருந்தது என(1044) ஒரு பாடல் குறிப்பிடுகிறது.

எனவே நம் முன்னோர்கள் பல் உயிர்களைக் கொல்ல வாய்ப்புள்ள இடமாகவும், பலருக்குக் காயம் முதலியன விளைவிக்கும் இடமாகவும், நிகழ்வாகவும் உள்ளதை நன்கு அறிந்திருந்த சூழலிலும் ஏறு தழுவுதலை வீரக்கலையாகவே ஏற்றுக்கொண்டிருந்தனர்.

'கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்

புல்லாளே,ஆயமகள்' (கலி.முல்லை.103 6364)

என ஏறுதழுவும் இளைஞர்களைப் பண்டைத்தமிழ்ப் பெண்கள் விரும்பி மணம் முடித்தமையை முல்லைக்கலி குறிப்பிடுகின்றது.

கொலைத் தொழிலையுடைய காளையை அடக்கும் வலிமையில்லாதவனைப் பண்டைக்கால ஆயமகளிர் மணப்பது இல்லை. எனவே தமிழர்களின் திருமண வாழ்வுடன் தொடர்புடைய ஏறு தழுவுதல் மிகப்பெரிய இனக்குழு அடையாளமாகக் கருதலாம்.

காலப் பழைமையால் பல்வேறு மாற்றங்களுடனும், சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும் இது தொன்மையானது என்பதிலும், மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை. தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான ஏறுதழுவுதல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.

நன்றி தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) வரலாறு

முனைவர் மு.இளங்கோவன்

இதில் எத்தனை வீதம் உண்மை :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருக்க ஏலாம காளைமாட்டின் கூரான கொம்போட விளையாடப் போய் குடல் கிழிஞ்சி செத்தான் பண்டைத் தமிழன் எண்டிறது பெரிய பெருமையாய்த் தெரியல்லப் பாருங்கோ. உத விட்டுப் போட்டு மைதானங்களில வேற பாதுகாப்பான வீர விளையாட்டுகளில ஈடுபட்டு ஒலிம்பிக்கில வெற்றி வாகை சூடத் தமிழன் தன்னைத் தயார் படுத்துறதுதான் நமக்கும் நல்லது வாயில்லா ஜீவனான மாட்டுக்கும் நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்பானியாவில் நடக்கும் கொடூரமான காளை அடக்குபோட்டியை விட இது மோசமானதா?

அதை விட ஆறறிவு படைத்த மனிதன் பங்குபற்றும் எத்தனையோ வீரதீர விளையாட்டுக்களை அல்லவா தடை செய்ய வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதை விட ஆறறிவு படைத்த மனிதன் பங்குபற்றும் எத்தனையோ வீரதீர விளையாட்டுக்களை அல்லவா தடை செய்ய வேண்டும்.

அதுதானே.. ஒலிப்பிக்கில.. மனிசனை மனிசன் அடிபடை விட்டு மூக்குடைக்க விடுற.. பொக்சிங்.. யூடோ (குத்துச் சண்டைகள்) எல்லாம் நிறுத்தப்படனுமே..! மனிதனை மனிதன் சித்திரவதை செய்யுறதை.. விளையாட்டு என்று பார்த்து ரசிக்கிறது ஒன்றும் ஆரோக்கியமாப் படேல்ல..! :lol:

2 மனிசாளும் உடன்பட்டுத்தானே விளையாடினம். அவைக்கு மூக்குடைஞ்சா என்ன பல்லுடைஞ்சா என்ன?

ஜல்லிக்ட்டில புல்பைற்றிங் போன்றவற்றில் காளை சம்மதித்ததோ சண்டைக்கு வாறன் எண்டு? வியர்நாம் கம்போடிய பகுதிகளில் சேவல் சண்டையும் நடக்கிறது. ஆபிரிக்காவிலும் இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப சரிசரி மாடு ஓம் பட்டுதெண்டால் எல்லாதையும் வெட்டி ஆடலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சரிசரி மாடு ஓம் பட்டுதெண்டால் எல்லாதையும் வெட்டி ஆடலாம்

காளைக்கும் புண்ணாக்கு கொடுக்கிறதென்றா சம்மதிக்கும். குத்துச் சண்டை போடுறவையும் காசுக்கும் மெடலுக்கும் தானே சண்டை போடினம்..! மனித வதையை அங்க அங்கீகரிக்கினம்..! காளை மட்டும் புண்ணாக்குக்கு வதை பட்டா குற்றமாம்.. என்ன ஒரே புண்ணாக்கா இருக்கு கதை.. என்டாதேங்கோ கு.சா...! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காளைக்கும் புண்ணாக்கு கொடுக்கிறதென்றா சம்மதிக்கும். குத்துச் சண்டை போடுறவையும் காசுக்கும் மெடலுக்கும் தானே சண்டை போடினம்..! மனித வதையை அங்க அங்கீகரிக்கினம்..! காளை மட்டும் புண்ணாக்குக்கு வதை பட்டா குற்றமாம்.. என்ன ஒரே புண்ணாக்கா இருக்கு கதை.. என்டாதேங்கோ கு.சா...! :lol::D

:D:lol::lol::):):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காளை அடக்குதல் சரியா பிழையா எனக்கு தெரியாது. அதைக் கூற எனக்கு அருகதையும் இல்லை

ஆனால் இனத்திற்காக ஒரு வீரம் மிக்க விடுதலைப் போர் ஒன்று நடக்கையில் உயிரை காப்பாற்ற தாயகத்தை விட்டு ஓடிய கோழைகள், இன்று வீரத்திற்காக காளை கொம்பு குடலை கிழித்தாலும் பரவாயில்லை என்பதை எங்கே போய் சொல்லிச் சிரிக்க?

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காளை அடக்குதல் சரியா பிழையா எனக்கு தெரியாது. அதைக் கூற எனக்கு அருகதையும் இல்லை

ஆனால் இனத்திற்காக ஒரு வீரம் மிக்க விடுதலைப் போர் ஒன்று நடக்கையில் உயிரை காப்பாற்ற தாயகத்தை விட்டு ஓடிய கோழைகள், இன்று வீரத்திற்காக காளை கொம்பு குடலை கிழித்தாலும் பரவாயில்லை என்பதை எங்கே போய் சொல்லிச் சிரிக்க?

இதை நீங்கள் சொல்கின்றீர்கள்?

ஹி.........ஹி.......ஹி........ கு.சா இப்படி இடைக்கிடை அறிக்கை விட்டாவது எங்க தேசியப்பற்றைக் காட்ட வேண்டாமா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை நீங்கள் சொல்கின்றீர்கள்?

உங்கள மாரி ஆக்கள் இப்பிடி கேப்பீங்க எண்டு தெரிஞ்சுதான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்:

"அதைக் கூற எனக்கு அருகதையும் இல்லை"

ஏனெனில் நானும் அந்த கோழைகளில் ஒருவன்.

இன்னும் விளங்கவில்லையென்றால் .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.