Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் ஆக்கள் எல்லாரும் இந்தமுறை வெளிநாடுகளில பொங்கல் கொண்டாடுறீங்களோ?

தமிழ் ஆக்கள் எல்லாரும் இந்தமுறை வெளிநாடுகளில பொங்கல் கொண்டாடுறீங்களோ? 34 members have voted

  1. 1. தமிழ் ஆக்கள் எல்லாரும் இந்தமுறை வெளிநாடுகளில பொங்கல் கொண்டாடுறீங்களோ?

    • ஆம் - விமரிசையா கொண்டாடுறம்
      6
    • ஆம் - சிறிய அளவில அடக்கமா கொண்டாடுறம்
      18
    • இல்லை - இந்தமுறை கொண்டாட இல்லை
      0
    • இல்லை - ஊரைவிட்டு வெளிக்கிட்டபின் ஒருதடவையும் கொண்டாடுவது இல்லை
      9
    • வேறு ஏதாவது பதில்?
      1

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • தொடங்கியவர்

எல்லோராலும் எதிருக்கெதிராக கருத்துகள் எழுத முடியும்.ஆனால் நிஜம் ஒன்று இருக்கின்றது.

இங்கே கருதெழுதுபவர்கள் பலர் ஏனோ விதண்டாவாதமும் தமக்கு அதிகம் தெரியுமென்பதையே காட்ட முனைகின்றனர்.

கு.சா அண்ணை, நீங்கள் என்ன சொல்ல இல்ல தானே? :lol::D

கு.கா, நான் மதம் மாறுவதால் சாதியம் ஒழியும் என்று கூறவில்லை. நான் ஒரு மதத்தில் இருக்கும்போது அந்தமதம் என்னை கீழ்நிலையில் வைத்து இருந்தால், அதேவேளை இன்னொரு மதத்திற்கு தாவும்போது எனக்கு நல்ல வாழ்வு கிடைக்குமாக இருந்தால் நான் மதம் மாறுவேன் என்று கூறுகின்றேன்.

எனது தனிப்பட்ட வாழ்வை நடைமுறையில் கீழ்நிலைப்படுத்தக்கூடிய ஒன்றை நான் எப்படி போற்றிப்புகழ்ந்து பின்பற்றுவது?

மதம் மாறியவர்கள் சாதியம் ஒழியவேண்டும் என்பதற்காகவா மதம் மாறுகின்றார்கள்? இல்லையே!

நான் "தமிழ் ஆக்கள் எல்லாரும் இந்தமுறை வெளிநாடுகளில பொங்கல் கொண்டாடுறீங்களோ?" எண்டு கேள்விகேட்டு கருத்தாடல் ஆரம்பித்தன். ஆனா பொங்கல் தமிழ் ஆக்களுக்கு உரித்தானது இல்லை. இந்துக்களிற்கு உரித்தானது எண்டு ஒரு பிரச்சனை வந்திட்டிது.

ஓ அப்பிடி என்றால் "தமிழ் இந்துக்கள் இந்தமுறை வெளிநாடுகளில் பொங்கள் கொண்டாடுறீங்களோ?" எண்டு கேட்டு நான் கருத்தாடலை தொடங்கி இருக்கவேணுமோ?

  • Replies 92
  • Views 12.6k
  • Created
  • Last Reply

நீங்கள் கேட்டதில் தவறில்லை என்று தான் நான் சொல்லுவேன். பொங்கலை தமிழருக்கு பொதுவான ஒரு நாள் ஆக கொண்டாடுவதில் தவறில்லை. அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பை பொறுத்தது.

மதம் மாறியவர்கள் சாதியம் ஒழியவேண்டும் என்பதற்காகவா மதம் மாறுகின்றார்கள்? இல்லையே!

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால் களத்தின் பல இடங்களில் பலரால் மத மாற்றம் என்பது சாதிய கொடுமையில் இருந்து மீள ஒரு வழி என்பது போல் சொல்லப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொரு தலைப்பிலும் எனது கருத்தை வெட்டி ஒட்ட முடியாது. அதனால் இங்கே சொல்லியுள்ளேன். அந்தளவும் தான்.

ஒரு மதம் உங்களை கீழ் நிலையில் வைத்திருக்கிறது என்று இன்னொரு மதத்துக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்று போகிறீர்கள். அங்கும் அதே நிலை தான் என்றால் பிறகு அது எப்படி தீர்வாகும்?? அதை விட எல்ல மதத்தையும் விட்டு வெளிய வரலாமே. எந்த பிரச்சனையும் இல்லை.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல கருத்து.

  • தொடங்கியவர்

கு.கா என்ன நாட்டில விசயம் தெரியாமல் கதைக்கிறீங்கள்? மனிதன் ஒரு சமுதாய விலங்கு. நாம் ஏதாவது ஒருமதம் சார்ந்து இல்லாமல் தனியாக நின்றால் பிறகு சைக்கோ பட்டங்கள் தான்பெறவேண்டிவரும்.

இதைவிட, ஒரு மதத்திலையும் நான் இல்லை எண்டால் யார் எனக்கு பொண்ணு தருவாங்கள் கலியாணம் கட்டுறதுக்கு?

அட்லீட்ஸ்ட் கலியாணம் கட்டிமுடியும்மட்டுமாவது ஏதாவது மதத்தில் இருக்கவேண்டிய தேவை இருக்கிது.

அதுக்குபிறகு பிள்ளை ஏதாவது ஒரு மதத்தில இருந்தால்தான் பிள்ளைக்கும் எதிர்காலத்தில கலியாணம்கட்டி குடுக்க்கலாம்.

மதங்களை கலைஞ்சு வெளிய வாறது எண்டுறது சொல்ல நல்லாத்தான் இருக்கும். ஆனா நடைமுறை வாழ்வுக்கு சரிவராது.

நீங்கள் தெளிவாக தான் இருக்கிறீர்கள். :D அப்போ நீங்கள் சொன்ன இந்த கருத்துக்கு என்ன பதில்?

ஒரு மதம் உங்களை கீழ் நிலையில் வைத்திருக்கிறது என்று இன்னொரு மதத்துக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்று போகிறீர்கள். அங்கும் அதே நிலை தான் என்றால்

நீங்கள் போகும் இடத்திலும் தீர்வு இல்லை என்றால்? :lol:

தமிழனுக்கு ஒரு நாடு வேணும் என்றதற்காகவும், தமிழனின் விடிவுக்காகவும் சாதி மதம் மறந்து நாங்கள் எல்லாம் தமிழர்கள் என்று போராளிகள் நமது விடுதலைக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்கள் நீங்க இங்க இருந்து கொண்டு இதைப்பற்றி கதைச்சுக்கொண்டு இருங்கோ, யாழில் கொஞ்ச நாளா சாதி மதம் பற்றியே கதைச்சுக்கொண்டு இருக்கினம் அது இன்னும் முடியிற்பாட்டை காணோம். உங்களுக்கு விருப்பம் இருந்தா கொண்டாடுங்க இல்லாட்டி விடுங்க.

யாழ் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்க்கும் போது இவங்க எல்லோருக்கும் வேற வேலை இல்லை ஜரோப்பிய நாடுகளில் வழங்கும் இலவச காசு தான் இதுக்கெல்லாம் காரணம் :lol:

  • தொடங்கியவர்

நீங்கள் தெளிவாக தான் இருக்கிறீர்கள். :) அப்போ நீங்கள் சொன்ன இந்த கருத்துக்கு என்ன பதில்?

நீங்கள் போகும் இடத்திலும் தீர்வு இல்லை என்றால்? :lol:

தீர்வு இல்லை என்றால் தீர்வு ஒன்றை திரும்பவும் தேடவேண்டியதுதான். :D

பார்க்கும் போது இவங்க எல்லோருக்கும் வேற வேலை இல்லை ஜரோப்பிய நாடுகளில் வழங்கும் இலவச காசு தான் இதுக்கெல்லாம் காரணம் :(

இலவசகாசு வாங்குற ஆக்களுக்கு இப்பிடி எல்லாம் மூளை வேலை செய்யுமோ? அப்பிடி என்றால் இதுபற்றி நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலவசகாசு வாங்குற ஆக்களுக்கு இப்பிடி எல்லாம் மூளை வேலை செய்யுமோ? அப்பிடி என்றால் இதுபற்றி நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டும்.

இதற்கும் முளை வேண்டுமா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இந்துக்கள் தான் அடுக்குமாடி விமானத்தின் முன்னோடிகள் மாதிரி பொங்கல் இந்து மதப் பண்டிகை என்று சொந்தம் கொண்டாடலாம் என்று நிறுவலாம் போல கிடக்கு.

தமிழை தமிழரின் கலாச்சாரம் பண்பாட்டை அழிக்க முயன்ற கிறீஸ்தவம் இஸ்லாம். அன்று இந்து மதம் தமிழை காப்பாற்றியிருக்கா விட்டால் இன்று தமிழீழம் என்று ஒரு போராட்டமே நடந்தேயிருக்காது. எனவே ஈழப்போராட்டத்திற்கும் தமிழீழத்திற்கும் இந்து மதம் சொந்தம் கொண்டாடலாம். அத்தோடு கிறீஸ்தவத்தை கொண்டுவந்த ஐரோப்பியர்களால் தான் தமிழன் நாடுகளையும் ஆட்சிகளையும் இழக்க வேண்டி வந்தது. எனவே கிறீஸ்தவர்கள் தமிழீழத்தின் எதிரிகள் என்று பிரகடனம் செய்யலாம் போல கிடக்கு.

அது சரி பழந்தமிழர்களான இந்துக்கள் பெரிய சாம்ராச்சியங்கள் எல்லாம் வைத்திருந்தார்கள் அடுக்குமாடி விமானத்தின் முன்னோடிகள் ஏவுகணைகளின் முன்னோடிகள். ஆனால் இவ்வளவு கெட்டித்தனமானவர்கள் கோவணம் உட்பட பல விடையங்களிற்கு முன்னோடியானவர்கள் எப்படி நாடு பிடிக்க மதம் பரப்ப வந்த கிறீஸ்தவர்களின் நயவஞ்சகத்திற்கு 1...2 சமர்களில் அல்ல முழுப் போரிலுமே தோற்று எல்லாத்தையும் இழந்து அம்மணமானார்கள்?

ஓ இந்துமதம் சொல்லிற மாதிரி உலகம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருக்கால் முழுக்க அழிந்து மீண்டு உருவாகிறது. முன்பு அழிந்து போன உலகத்தில் இருந்த பழந்தமிழர்களான இந்துக்கள் முன்னோடிகளாக இருந்தவர்கள். அவற்றின் நினைவுகளை இந்த உலகில் உள்ள பழந்தமிழர்களான இந்துக்கள் ஞாபகப்படுத்தி இலக்கியமாக கவிதையாக வடிக்கிறார்கள் போல கிடக்கு.

தொடர்ந்து நகைச்சுவை நாவல்கள் வாசித்தாலும் இப்படித்தான் எழுதத்தோன்றுமோ என்னமோ? :lol:

  • தொடங்கியவர்

இஞ்ச நாங்கள் பொங்கல யார் கொண்டாட உரிமை இருக்கிது, யாருக்கு உரித்தானது எண்டு பிடுங்குப்பட்டுக்கொண்டு இருக்கிறம். அங்காலப் பக்கத்தால பகிடி என்னவெண்டா சனம் திங்கள் கிழமையா இல்லாட்டி செவ்வாய்க்கிழமையா பொங்கலை கொண்டாடுவது எண்டு குழம்பிப்போய் நிக்கிது.

இனி யாராவது வந்து நாட்காட்டி தமிழரிண்ட இல்லை, இது இந்துக்கள் பாவிக்கும் நாட்காட்டி எனவே பொங்கலிற்கு உரித்தானவர்கள் இந்துக்களே எண்டு வந்து நிறுவுங்கோ.

எனக்கொரு சந்தேகம், தமிழருக்கு எண்டு தமிழ்நாட்காட்டி முதலில இருக்கிதோ? அதாவது இந்துமதம் சார்பு அற்ற தமிழ்நாட்காட்டி?

இது ஏற்கனவே பல முறை பலரும் சொல்லிவிட்டார்கள். :lol:

தை 1 ஆம் திகதி, அல்லது அண்ணளவாக ஜனவரி 14/15 ஆம் திகதி வரும் தைப்பொங்கல் இந்து நாட்காட்டியை தான் அடிப்படையாக கொண்டது.

எங்கேயோ யாரோ கேட்டிருந்தார்கள் ஏன் தைபொங்கல் வட இந்தியாவில் கொண்டாடுவதில்லை என்று?

அதே போல் தான் தமிழ் வருடப்பிறப்பு என்று கொண்டாடும் சித்திரை வருட பிறப்பு கூட வட இந்தியாவில் கொண்டாடுவதில்லை. ஏன் தென்னிந்திய மானிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திர மானிலத்தவர் கூட சித்திரை வருட பிறப்பை கொண்டாடுவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருடைய வருட பிறப்புக்களும் வேறானவை.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி ஏன் சிங்களவர்களும் சித்திரை மாதம் முதலாம் திகதியை சிங்களப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்?

  • தொடங்கியவர்

ஓம் கந்தப்பு நல்ல ஒரு கேள்வி. இனவிரோதிகளான சிங்களவர், தமிழரிண்ட நாட்காட்டிகள் மட்டும் எப்பிடி ஒரேமாதிரி ஒத்து போகிது?

இதன்படி பார்த்தால் இனி தமிழ்நாட்காட்டிய அடியொற்றியே சிங்கள நாட்காட்டி உருவாக்கப்பட்டது எண்டு நாங்கள் நிறுவலாமோ?

இந்த தேற்றத்தை நிறுவ அண்ணை தூயவன் நீங்கள் முயற்சித்து பார்க்கலாமே? ஹிஹி

அதுசரி ஏன் சிங்களவர்களும் சித்திரை மாதம் முதலாம் திகதியை சிங்களப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள்?

கந்தப்பு நல்ல கேள்வி தான்? :lol:

ஓம் கந்தப்பு நல்ல ஒரு கேள்வி. இனவிரோதிகளான சிங்களவர், தமிழரிண்ட நாட்காட்டிகள் மட்டும் எப்பிடி ஒரேமாதிரி ஒத்து போகிது?

இதன்படி பார்த்தால் இனி தமிழ்நாட்காட்டிய அடியொற்றியே சிங்கள நாட்காட்டி உருவாக்கப்பட்டது எண்டு நாங்கள் நிறுவலாமோ?

இந்த தேற்றத்தை நிறுவ அண்ணை தூயவன் நீங்கள் முயற்சித்து பார்க்கலாமே? ஹிஹி

கலைஞன் உங்கட கேள்வியும் நல்லது தான்.

எப்படி சிங்கள இனவிரோதிகளின் நாட்காட்டி ஒத்து பொகுது? சிங்களவருக்கும் எங்களுக்கும் இருக்கிற பகை பல விசயங்களை சிந்திச்சு கூட பாக்க விடாமல் கண்ணை மறைத்துவிடுகிறது.

சிங்கள அரசுகளை அடிக்கடி கைப்பற்றி அரசாண்டவர்கள் தமிழர்கள். இப்படி இருக்கும் போது கலாச்சார, பழக்க வழக்க கலப்புக்கள் நடைபெறுவதற்கு சாத்தியமில்லை என சொல்ல முடியாது. அதே நேரம் கலப்பு நிச்சயமாக நடந்தது என்று சொல்லவும் எனக்கு தெரியாது.

எப்படி தமிழர்கள் மட்டும் வணங்கும், தமிழரின் கடவுள் என சொல்லும் முருகனை சிங்களவரும் வணங்குகிறார்கள், தமிழரின் சிலப்பதிகார காவிய நாயகியான கண்ணகியை ஈழத்தில் தமிழரும் வணங்குகிறார்கள், அதே நேரம் பத்தினி தெய்யோ என்று சிங்களவரும் வணங்குகிறார்கள். தமிழர் எங்கு கண்ணகியை வணங்குகிறார்கள் என்று கேள்வி கேட்காதிர்கள், உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்

ஈழத்தில்

நவாலி,மட்டுவில், மீசாலை, வரணி, கச்சாய், விடத்தற்பளை, பூனகரி மற்றும் வற்றாபளையில் இருப்பவை கண்ணகி அம்மன் கோயில்கள். அவற்றை விட மட்டக்களப்பு பிரதேசத்தில் கண்ணகி வழிபாடு பிரபலமானது.

எப்படி இது நடந்தது என்று யோசித்தீர்கள் என்றால் ஓரளவு புரியும் ஈழத்தை அடிக்கடி ஆண்ட தமிழ்/ தமிழக சோழ, பாண்டிய மன்னர்களின் செல்வாக்கு தான் காரணம் என்று.

நேரம் கிடைச்சா பேராசிரியர் இந்திர பாலா எழுதின புத்தகத்தை பெயர் மறந்துவிட்டது ஆர்வம் இருந்தா தேடி அப்பிடி நிறுவலாமோ இப்பிடி நிறுவலாமோ எண்டு கேக்கிறதை விட்டிட்டு வாசிச்சு பாருங்கோ.

அந்த புத்தகத்தை பற்றி கள உறுப்பினர் அற்புதன் தனது வலைப்பதிவில் எழுதின ஞாபகம்.

அதிலை சிங்களவர் ஆரியர் எணடதுக்கு போதுமான ஆதாரம் இல்லை அது வெறும் இட்டுகட்டல் எண்டும், சிங்களவரின் மரபணு குழு (Gene pool) வட இந்தியர்களோடு ஒத்திருப்பதை விட தென்னிந்திய திராவிட மக்களின் மரபணு குழுவுடன் தான் ஒத்து போகிறது என்று சொல்லியிருப்பார்.

அதற்காக யாரும் என்னோடு சண்டைக்கு வராதீர்கள். சிங்களவருக்கும் எமக்கும் இருக்கும் பகை என்பதை மறந்து நாம் ஒன்றாகலாம் என்று நான் சொல்வதாக கூறி கூட எனக்கு துரோகிபட்டம் தர கூட சிலர் வருவார்கள்.

கீழே உள்ள் இணைப்பை வாசித்து பாருங்கள். உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும்

http://www.tamilcanadian.com/page.php?cat=189&id=4861

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவரின் மரபணு குழு (Gene pool)

மரபணுக் குழு என்பது Gene pool க்கு சரியான மொழிபெயர்ப்பாகுமா..??! பரம்பரையலகுத் தடாகம் என்பதாகத் தான் பாவிக்கப்படுகிறது. மரபணு என்பது டி என் ஏ போன்ற மூலக்கூறுகளைக் குறிப்பிடுகிறது என்றே நினைக்கின்றேன். ஜீன் என்பது இயல்புகளைத் தீர்மானிக்கின்ற (பழைய பிறப்புரிமையியல் சொல்லிலக்கண )எதிருருக்களைக் குறிக்கிறது. எதிருரு (allele) த்தான் பரம்பரை அலகு அதாவது ஜீன் எங்கிறோம் தற்போது. ஜீன்கள் டி என் ஏயின் ஒரு பகுதியால் தான் ஆக்கப்படுகிறது. எனவே.. அதை முழு மரபணு என்று கூற முடியாதுதானே.

பரம்பரை அலகு - ஜீன். Gene pool என்பது பரம்பரையலகுத் தடாகம் என்றுதானே வரும். மீன் தாடகத்தில் பல வித மீங்கள் இருப்பது போல.. பரம்பரை அலகுத் தடாகத்தில் பல வித பரம்பரை அலகுகள் இருக்கும்..! ஆனால் பலவித மரபணுக்கள் இருக்கும்..(செயற்கையாகப் பெறப்படுபவை தவிர்ந்த) (டி என் ஏக்கள் (DNA)) இருக்கும் என்பது அறிவியல் உண்மையன்று. ஆனால் இயற்கையாகவே பல வகை ஆர் என் ஏக்கள் (RNA) இருக்கின்றன. ஆர் என் ஏ க்களில் அமையும் பரம்பரை அலகுகளும் சில உயிரிகளில் (Ribovirus) இயல்பைத் தீர்மானிக்கின்றன.

பல தமிழ் அறிவியல் தளங்களில் செய்தித் தளங்களில் இப்பதங்கள் தொடர்பில் எழுந்தமானமான சொல்லாடல்கள் இடம்பெறுவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. இது குழப்பம் தரவல்லதாக அமையும் என்பதால் இக்குறிப்பை இங்கு இடுகின்றேன். எனது விளக்கம் தவறென்றால் சுட்டிக் காட்டி திருத்தங்கள் அமைத்து சரியான சொல்லாடலை தமிழ் அறிவியல் செய்திகளில் பாவிக்க உதவுங்கள். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஊரை விட்டு வந்தப் பிறகு எனக்குத் தெரியாமலே கழிந்த பொங்கல் நாட்களும் உண்டு. போர்ச் சூழலில் பொங்கலைக் கொண்டாடுவதில் எனக்கு விருப்பமில்லை.

ஜெனரல்!!

தைபொங்கல் மீன்ஸ் சூரியனிற்கு தாங் பண்ண கொண்டாடுற வங்கசன் அது தானே :( ..சூரியனிற்கு தாங் பண்ணுறோமோ இல்லை நாம நல்லா செலிபிரேட் பண்ணுறனாங்க தான் பட் அவுஸிசிற்கு வந்தா பிறகு நீங்க சொல்லி தான் எனக்கு தைபொங்கல் என்றே தெரியும் :D ...அக்சுவலா காலம எழும்பி அல்லோ சூரியனிற்கு படைக்கவேண்டும் எனக்கு காலம டிரேயினை பிடிக்க வேண்டும் வேலைக்கு அதை மிஸ் பண்ணிணேன் என்றா என்ற கதி அம்மோ :( தான் சோ வேலையால வந்து படைக்கலாம் என்று நினைத்தா நான் வேலையால வரமுன்னம் சூரியன் மறைந்துபோயிடுவார் :( பிறகு நான் எப்படி கொண்டாடுறது :D .இது தான் எனக்கு பெரிய பிரச்சினையா இருக்கு வேண்டுமென்றா எனக்காக சூரியன் நாளைக்கு எக்ஸ்டாராவ கொஞ்ச நேரம் வானத்தில இருந்தார் என்றா கண்டிப்பா படைத்துவிடுறேன்.... :) (அது சரி நேக்கு இன்னொரு டவுட் நாளைக்கு சூரியன் வராம மழை பெய்தா என்ன செய்யிறது இதை பற்றி ஒருத்தருமே யோசிக்கவில்லை.. :) )...ஆனாலும் நான் கண்டிப்பா மாட்டு பொங்கலை மட்டும் கொண்டாடிடுவேன் ஏனேன்றா அது நம்ம யாழ்கள மெம்பர்சின்ட வங்கசன் ஆச்சே என்ன நான் சொல்லுறது சரி தானே!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"ஒருத்தன் ஓடினா கேட்டு போட்டு ஓடவேண்டும் ஊரே ஓடினா கேட்காம ஓடவேண்டும்" :lol:

கனடால சினோ கொட்டுது உதுக்கை நான் வெளியால போய் சூரியனைத் தேடிப்பிடிச்சு பொங்கல் படைச்சு இது எல்லாம் நடக்கிற காரியமா? அதால நான் என்ட வீட்டு குசினிக்கை உள்ள அடுப்புல வெண்பொங்கல் காச்சி நானே சாப்பிட்டுட்டன் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்பு நல்ல கேள்வி தான்? :D

கலைஞன் உங்கட கேள்வியும் நல்லது தான்.

எப்படி சிங்கள இனவிரோதிகளின் நாட்காட்டி ஒத்து பொகுது? சிங்களவருக்கும் எங்களுக்கும் இருக்கிற பகை பல விசயங்களை சிந்திச்சு கூட பாக்க விடாமல் கண்ணை மறைத்துவிடுகிறது.

சிங்கள அரசுகளை அடிக்கடி கைப்பற்றி அரசாண்டவர்கள் தமிழர்கள். இப்படி இருக்கும் போது கலாச்சார, பழக்க வழக்க கலப்புக்கள் நடைபெறுவதற்கு சாத்தியமில்லை என சொல்ல முடியாது. அதே நேரம் கலப்பு நிச்சயமாக நடந்தது என்று சொல்லவும் எனக்கு தெரியாது.

எப்படி தமிழர்கள் மட்டும் வணங்கும், தமிழரின் கடவுள் என சொல்லும் முருகனை சிங்களவரும் வணங்குகிறார்கள், தமிழரின் சிலப்பதிகார காவிய நாயகியான கண்ணகியை ஈழத்தில் தமிழரும் வணங்குகிறார்கள், அதே நேரம் பத்தினி தெய்யோ என்று சிங்களவரும் வணங்குகிறார்கள். தமிழர் எங்கு கண்ணகியை வணங்குகிறார்கள் என்று கேள்வி கேட்காதிர்கள், உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்

ஈழத்தில்

நவாலி,மட்டுவில், மீசாலை, வரணி, கச்சாய், விடத்தற்பளை, பூனகரி மற்றும் வற்றாபளையில் இருப்பவை கண்ணகி அம்மன் கோயில்கள். அவற்றை விட மட்டக்களப்பு பிரதேசத்தில் கண்ணகி வழிபாடு பிரபலமானது.

எப்படி இது நடந்தது என்று யோசித்தீர்கள் என்றால் ஓரளவு புரியும் ஈழத்தை அடிக்கடி ஆண்ட தமிழ்/ தமிழக சோழ, பாண்டிய மன்னர்களின் செல்வாக்கு தான் காரணம் என்று.

நேரம் கிடைச்சா பேராசிரியர் இந்திர பாலா எழுதின புத்தகத்தை பெயர் மறந்துவிட்டது ஆர்வம் இருந்தா தேடி அப்பிடி நிறுவலாமோ இப்பிடி நிறுவலாமோ எண்டு கேக்கிறதை விட்டிட்டு வாசிச்சு பாருங்கோ.

அந்த புத்தகத்தை பற்றி கள உறுப்பினர் அற்புதன் தனது வலைப்பதிவில் எழுதின ஞாபகம்.

அதிலை சிங்களவர் ஆரியர் எணடதுக்கு போதுமான ஆதாரம் இல்லை அது வெறும் இட்டுகட்டல் எண்டும், சிங்களவரின் மரபணு குழு (Gene pool) வட இந்தியர்களோடு ஒத்திருப்பதை விட தென்னிந்திய திராவிட மக்களின் மரபணு குழுவுடன் தான் ஒத்து போகிறது என்று சொல்லியிருப்பார்.

அதற்காக யாரும் என்னோடு சண்டைக்கு வராதீர்கள். சிங்களவருக்கும் எமக்கும் இருக்கும் பகை என்பதை மறந்து நாம் ஒன்றாகலாம் என்று நான் சொல்வதாக கூறி கூட எனக்கு துரோகிபட்டம் தர கூட சிலர் வருவார்கள்.

நல்ல விளக்கம் குளக்காடரே!இதே போன்ற இலகுவான விளக்கங்களை தாருங்கள் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரை விட்டு வந்தப் பிறகு எனக்குத் தெரியாமலே கழிந்த பொங்கல் நாட்களும் உண்டு. போர்ச் சூழலில் பொங்கலைக் கொண்டாடுவதில் எனக்கு விருப்பமில்லை.

நெடுக்கு சாமியோவ்! அப்படீன்னா வெளிநாட்ல ஈக்கிர ஈழத்துதமிழனுங்க எல்லாரு டெய்லி இழவுவீடுதான் கொண்டாடோணுமுங்க :D

அப்படியாயின் ஏன் கிறிஸ்தவதமிழர்களும் இஸ்லாமியதமிழர்களும் தைப்பொங்கலை கொண்டாடுவதில்லை?

யார் சொன்னார்கள் கிறிஸ்தவர்கள் தமிழர் திருநாளை கொண்டாடுவதில்லை என்று. எனது சிறுவயது பிராயம் உறவினர்வீட்டுடன் தொடங்கி எனது கிறிஸ்தவ ஆசிரியர் வீட்டுடன்தான் முடிவுறும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு சாமியோவ்! அப்படீன்னா வெளிநாட்ல ஈக்கிர ஈழத்துதமிழனுங்க எல்லாரு டெய்லி இழவுவீடுதான் கொண்டாடோணுமுங்க :D

என்னால முடியல்ல கு.சா. சொந்த மன்ணில நிம்மதியா ஒரு உலை மூட்டி பொங்கல் பண்ணி.. வெடி சுட்டு.. நண்பர்கள் கூடிக் குலாவி மகிந்த இடத்தில்.. இன்று விடிந்தால் எதிரியின் வெடிகணை எத்திக்கில் இருந்து வெடிக்கும் என்று சாவை முன்னிலைப்படுத்தி எதிரியின் வரவுக்காய் காவலரணில் காத்திருக்கும் எங்கள் நண்பர்களின் நண்பிகளின்.. நிலையை எண்ணிப் பார்க்கிறேன்.

1990 இல் யாழ் கோட்டைக் காவலரணில் சில தினங்கள் பதுங்குழி அமைக்கப் போயிருந்தேன். அப்போ தான் ஒரு காவலரணில் செயற்படும் வீரனின் நிலையை உணர்ந்தேன்..! படுக்க ஒரு இடம் கூட இருக்காது. அப்படி இடம் கிடைப்பினும்.. எதிரியின் துப்பாக்கி முழக்கம்.. நித்திரைக்கு இடம் தராது. அவர்கள் (எதிரிகள்) தாங்கள் அலேட்டா இருக்கிறம் என்று காட்ட.. நேர அட்டவணைப்படி ஆள் மாற முதல் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுப் போவார்கள்.

இடையே மழை வந்து கொட்ட.. தண்ணி வழிந்தோடும்.. தார்பாரையும் மீறி உடைகளை நனைக்கும்..கால் சகதிக்குள் அமிழும்... வெட்டிப் போட்ட மண் கரைந்தோடி.. குழியை நிரப்பும்.. இரவு எல்லாம் கண்விழித்து விடிய வீதியில நடந்தால்.. எங்கோ அந்தரத்தில் நடப்பது போன்ற உணர்வு.. கண்கள் சிவந்து.. நோகும்..இப்படி எத்தனையோ.. கஸ்டங்களை தாங்கி தாய் மண்ணின் விடுதலைக்காய் தங்கள் சுகங்களை திறந்து நிற்கும் இளசுகளை நினைக்கேக்க.. முடியல்ல. என்னால முடியல்ல...!

தாய் மண்ணில் என்று சுதந்திரச் சூரியன் உதிக்குதோ அன்று.. உயிரோடு இருந்தால் பொங்குவன். இல்ல.. பொங்குபவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.. இத்தனை துன்பங்களை தாங்கிய அந்த மாவீரர்களுக்காக நினைவுக் கல்லாவது வைத்து அவர்களையும் பொங்கலுக்கு அழையுங்கள் என்று..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் சொன்னார்கள் கிறிஸ்தவர்கள் தமிழர் திருநாளை கொண்டாடுவதில்லை என்று. எனது சிறுவயது பிராயம் உறவினர்வீட்டுடன் தொடங்கி எனது கிறிஸ்தவ ஆசிரியர் வீட்டுடன்தான் முடிவுறும்.

எல்லோரின் கருத்தையும் நான் ஏற்றுக்கொள்கின்றேன். நானும் ஆங்கிலபுதுவருடத்தையும் நத்தார்பண்டிகையையும் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டாடுபவன் தான் மாறிமாறி வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதெல்லாம் சர்வசாதாரணம்.

இருப்பினும் தைத்திருநாளில் அதாவது தைப்பொங்கல் அன்று அதிகாலை எழுந்து முற்றம் கூட்டி துப்பரவு செய்து சாணக நீர் தெளித்து கும்பம் வைத்து குத்துவிளக்கேற்றி அதன் பின் அடுப்புக்கல் வைத்து புதிய பானையில் யார் பொங்குவார்கள்?

பொங்கும் போது எந்தப்பக்கம் முதலில் பொங்கிவழிகிறதோ அதை வைத்து கூட ஆரூடம் எம் முன்னோர் கூறுவர்

எல்லாம் இருக்கட்டும் பூரணகும்பத்தின் முன் சூரியோதய நேரம் பார்த்து தலைவாழையிலையில் பொங்கல் படைத்து யார் தேவாரம் படிக்கின்றார்கள்?

அதை விட சாணகத்தில் பிள்ளையார் பிடித்து அறுகம்புல் குத்தி வழிபடுவது பற்றி யாராவது தமிழர் பண்டிகைஒப்பாரி வைப்பவர்கள் கூறட்டும்.

நாம் சாமிக்கு படைத்த பொங்கலையே ஒரு சிலர் சாப்பிட மறுக்கின்றனர் :D .இன்று ஒரு தொலைக்காட்சியில் கூட ஒருவர் தமிழர் திருநாளைப்பற்றி சளாப்பிக்கொண்டிருந்தார் சிரிப்பாகத்தான் இருந்தது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.