Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழில் நாம் விடும் தவறுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அச்சியந்திர காலத்துக்கு முன் எழுத்திலக்கியத்துக்கு மட்டுமல்ல பிறப்புக்கும் இறப்புக்கும் நோய்க்கும் மருந்துக்கும் சாத்திரத்துக்கும் சம்பிரதாயத்துக்கும் பாடல்கள்தான் வரி வடிவம் கொடுத்தன. அதனால், தொல்காப்பிய இலக்கண விதிமுறைகள் ஏறக்குறைய முழுவதும் செய்யுள் அமைப்புக்கானதே அன்றி உரைநடைக்குரியது அல்ல.

நவீன தமிழ் உரைநடைக்கு வரலாறு அதிக பட்சம் இரண்டு நூற்றாண்டைத்தாண்டாது. பொதுவாக செய்யுள்களில் ஓசைநயத்துக்காக சொற்களை இணைப்பதால் புணர்ச்சி விதிகள் தெளிவாக இல்லாவிட்டால் பொருள் மயக்கம் அல்லது குழப்பம் வர வாய்ப்புகள் அதிகம். செய்யுள் மொழிக்காக வகுக்கப்பட்ட இலக்கண விதிகளை உரைநடைக்குள் நிறுவமுனையும் போது பல இடங்களில் அமைதி கண்டாலும் சில இடங்களில் நெருடவே செய்கின்றன.

இதற்கு நல்ல எடுத்துக்காட்டு சொல்ல கனதூரம் போகவேண்டியதில்லை. ஏற்கனவே விவாதத்தில் இருக்கும் 'சின்னத்திரை' அல்லது 'சின்ன திரை' சிறப்பான உதாரணமாகும். சின்னத்திரை என்பதை பிரித்தேயாக வேண்டுமென்றால் சின்ன + திரை என்பதே மிகப்பொருத்தமானது. சின்னன்+திரை என்பதும் சின்னம்+திரை என்பதும் பொருள் குழப்பம் உடையன. அடுத்து 'சின்னத்திரை' சரியா அல்லது 'சின்ன திரை' சரியா என்பதைப்பார்ப்போம்.

என்னால் இப்போ நினைவு கூர முடியவில்லை அதை தொடக்கியது குமுதமா விகடனா அல்லது வேறு பத்திரிகையா என்பதை. ஆனால் சமாச்சாரம் ஒன்றும் ரொக்கெற் விஞ்ஞானம் அல்ல. உரைநடையில் சொற்களை உடைக்கும் போது 'சின்னத்திரை' என்பதை 'சின்ன திரை' என்பதாக எழுதுவதாகும். 'சின்ன' என்பது பேச்சு வழக்கு சொல்லாகினும் அதற்கு தனித்த அர்த்தம் உண்டு.

சில உதாரணங்கள்

வகை-1

என்பதைப்பார்ப்போம் = என்பதை பார்ப்போம்

நூற்றாண்டைத்தாண்டாது = நூற்றாண்டை தாண்டாது

வகை-2

சமாச்சாரமொன்றும் = சமசாரம் ஒன்றும்

குழப்பமுடையன = குழப்பம் உடையன

வகை-3

பாகல் காய் 'எனவெழுத' முடியாது = பாகல் காய் 'என எழுத' முடியாது

அனுகூலங்கள்' நிறையவுண்டு' = அனுகூலங்கள் ' நிறைய உண்டு'

வகை-4

பார்த்ததில்லை = பார்த்தது இல்லை

வகை-5

பொருட்குழப்பம் = பொருள் குழப்பம்

பெருங்கடல் = பெரும் கடல்

அந்த பகற்பொழுது போயிற்று = அந்தப்பகல் பொழுது போயிற்று.

(இவைகளில் சுவாரசியமான ஒரு நுண்ணிய பொருள் மாற்றமும் நிகழ்கிறது)

வகை-6

பாவற்காய் = 'பாவல் காய்' என எழுத முடியாது.

அகல்விளக்கு = அகல் விளக்கு (அகற்விளக்கு என எழுதுவது தவறு)

பொருட்குழப்பம் வராதபடி இவ்வகையாக சொற்களை புணர்த்தாமல் தனித்தனியாகவும் தேவையாயின் புணர்த்தி கூட்டாக எழுத அனுமதிப்பது தமிழ் மொழிக்கே உரித்தான சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

'தமிழ்ச்சொற்கள்' என்பதை 'தமிழ்ச் சொற்கள்' என்பதைவிட 'தமிழ் சொற்கள்' என்றெழுதுவதால் 'கூகிள்' பெருங்கடலில் அகல நீந்த வாய்ப்பு இருப்பினும் ஆழ நீந்த தேடல் தொழில் நுட்பம் இன்னும் அகலப்படுத்தப்பட வேண்டும்.

கூகிள் தேடலின் முடிவுகள் சொல்லும் தொகை இன்றைய நிலவரம்.

1. தமிழ்ச்சொற்கள் ----> 1090

2. தமிழ்ச் சொற்கள் ----> 13400

3. தமிழ் சொற்கள் ------> 213000

இனிவரும் காலத்தில் வாசிப்பு என்பதும் ஒரு திரை சார்ந்த நிகழ்வாகவும் அனுபவமாகவும் தீவிரமாக மாறிவிடும் என்பதால், வாசகன் தனக்குரிய முறையில் எழுத்தாக்கங்களை கண்களின் பார்வைக்கு கொண்டுவர, சொற்களை பொருட்குழப்பம் வராதபடி உடைந்து எழுதுவதில் அனுகூலங்கள் சில உண்டு.

ஆக,

இலக்கண விதிமுறைகளை மென்மையாக கையாளுதல், தேவைக்கேற்ப புதிய விதிமுறைகளை உருவாக்கி கொள்ளல் கணினி தொழில் நுட்பவளர்ச்சியின் அதியுட்ச பலாபலன்களை உள்வாங்க தமிழுக்கு வாய்ப்பாக இருக்கும்.

காண்டம் அவர்களே!மிக அருமையான விளக்கம் நன்றி.

  • Replies 55
  • Views 18.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

காண்டம்,

உங்களுடைய கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கது. சொற்களைப் பிரித்துப் பிரித்து எழுதுவதுதான் நல்லது.

நான் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக முடிந்த வரை பிரித்துத்தான் எழுதி வருகிறேன்.

இப்படி எழுதுவதுதான் இன்றைய தலைமுறைக்கு வாசிக்க இலகுவாக இருக்கிறது.

இப்பொழுது இந்த "வாழ்த்துகள்" என்பது பற்றி மீண்டும் ஒரு முறை பார்க்கலாம்

சில தமிழறிஞர்கள் "வாழ்த்துக்கள்" என்று எழுதுவது தவறு அல்ல என்று வாதாடுகிறார்கள்.

"தமிழே (கலைஞர்) சொல்லி விட்டது" என்று சொல்லி, சீமான் இந்தச் சர்ச்சைக்குள் சிக்காது தப்பி விட்டார்.

பொதுவாக மாறுபொருள் வரும் இடங்களில் "க்"ஐ தவிர்க்கும்படி தமிழறிஞர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் சில இடங்களில் இதை தவிர்க்க முடியாது.

உதாரணம் : பூக்கள்

இங்கும் பூ என்பதன் பன்மையும் பூவில் செய்த கள் என்றும் இரண்டு பொருட்கள் வருகின்றன. ஆனால் இதை பூகள் என்று எழுத முடியாது. பூக்கள் என்றுதான் எழுத வேண்டும்.

இதை தொடர்ந்து ஆராய்ந்ததில் ஒரு இலகுவான வழி கிடைத்தது.

குறில் வருகின்ற போது தவிர்க்கலாம். நெடில் வருகின்ற போது தவிர்க்க முடியாது.

உதாரணம்:

வாழ்த்துகள்

கருத்துகள்

கல்வெட்டுகள்

கொடிகள்

"கள்" என்பதற்கு முன்னால் து, டு, டி என்ற குறில் எழுத்துக்கள் வருகின்றன. "க்" தேவையில்லை. மாறுபொருள் கருதி தவிர்க்கப்படவும் வேண்டும்.

பூக்கள்

பாக்கள்

தேனீக்கள்

பூ, பா, தே என்று நெடில் எழுத்துக்கள் வருகின்ற போது "க்" தவிர்க்க முடியாததாக ஆகின்றது. இங்கேயும் மாறுபொருள் வரும் என்றாலும் இதை தவிர்க்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலர் தற்போது கணணி தமிழை வைத்து புதிய தமிழ் நடைமுறைகளை உருவாக்க முயற்சிக்கலாம்.

ஆனால் எழுதிய , எழுதிவரும் தமிழை குற்றம் காணும் போதுதான் ஏதோ நெருடுகின்றது.

இன்னொரு குறிப்பிடத்தக்க மாற்றம் 'ந்' , 'ன்' பயன்பாட்டில் நிகழ்ந்துள்ளது.

எனது பாடசாலை நாட்களில் நாம் 'ந்' னை பாவித்து எழுதிய சொற்கள் பல 'ன்'க்கு இப்போ மாறிவிட்டன. 70களில் அல்லது அதற்கு முன் அச்சிடப்பட்ட புத்தகங்கள் வைத்திருப்போர் இதை அவதானிக்கலாம். என் நினைவுக்கு உடன் வரும் சில சொற்கள் இன்று பொதுவாக (தமிழ்ப்படுத்தப்பட்டு?) எழுதப்படுவதை பார்ப்போம்.

விநாயகர் - வினாயகர்

அநுபவம் - அனுபவம்

அந்நியன் - அன்னியன்

அநுமான் - அனுமான்

அநுமதி - அனுமதி

அடுத்து வருட தொடக்க காலத்தில் பலர் கவனிக்கத் தவறுவது, 'பொங்கள் வாழ்த்துக்கள்' என்றெழுதுவது.

'பொங்கல் வாழ்த்துகள்' என்பதில், 'கல்' இருந்தால் தான் பொங்கல்' என்பார் எனது தமிழ் ஆசிரியர் பகிடியாக. 'வாழ்த்துகள்' இப்போ பலரால் 'வாழ்த்துக்கள்' என்றே சொல்லப்படுகிறது. காரணம் இயல், இசை ஊடகங்களின் பாதிப்பாக இருக்கலாம். வாழ்த்துகள் என்பதை விட வாழ்த்துக்கள் எனும் போது சொல் உச்சரிப்பில் ஒரு ஏற்ற இறக்கத்தை அனுபவமாக்கிக் கொள்ளலாம். யாழ் கருத்து களத்தில் இணைந்துள்ள இசைப்பாடல்கள் எழுதும் ஆற்றல் மிக்க கவிஞர் வ ஐ ச ஜெயபாலன் போன்றோரின் அபிப்பிராயம் இங்கு கவனங்கொள்ளத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிரயோசனமான குறிப்புகள். வாழ்த்துகள். :mellow::huh:

  • கருத்துக்கள உறவுகள்

பட்டால்த்தான் இதை எப்படி எழுதுவது ?

_ - இந்த கோடுகளை எப்படி தமிழில் சொல்வது?(இணைய தள முகவரி சொல்லும்போது இந்த சிக்கல் வருதே)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன், நல்லதொரு முயற்சி.

வாழ்த்து!!!

வாழ்த்து, நன்றி போன்ற சொற்களுக்கு 'கள்' விகுதி சேர்த்து, பன்மையாக்க வேண்டிய தேவை என்னவுள்ளது? என்பது என் கேள்வி

இப்படிப் பன்மையாக்குவது ஒருவகையில் ஆங்கிலவழிச் சிந்தனையாகப் படுகிறது.

இலக்கண முறைப்படி பார்த்தால் 'வாழ்த்துக்கள்' என்றெழுதுவது தவறன்று. குற்றியலுகரத்தோடு வருமொழி வல்லினமாதலால் ஒற்று மிகும்.

'கள்' என்பதை தனியே வருமொழி என்று எடுக்கலாம் என்று ஒரு சாராரும், இல்லை அப்படி எடுக்க முடியாது என்று இன்னொரு சாராரும் சொல்கிறார்கள். ஆனால், இரண்டு வழிமுறைகளும் சரியே என்பதுதான் இறுதி முடிபாகச் சொல்லப்படுகிறது.

என் தெரிவு, பன்மையை விட்டுவிட்டு தனியே 'வாழ்த்து'ச் சொல்வதுதான் நன்று.

ஏனைய சொற்களுக்கு (பாட்டு, கூத்து, வேட்டு ....என்பவற்றுக்கு) 'க்' சேர்த்துச் சொல்வதும் எழுதுவதும் சிறப்பென்று முடிபெடுத்துவிட்டேன். கலைஞர் சொல்வதைப் போல், அப்படியெழுதுவது கள் என்ற மதுவைக் குறித்தும் ஒரு பொருளைத் தருகிறது என்றபோதும், வாசகனும் கேட்பவனும் நான் சொல்லும் பொருளை நூறு வீதமும் சரியாகப் புரிவான் என்பதும், அது எவ்வகையிலும் தமிழிலக்கணத்தை மீறவில்லையென்பதுமே காரணம்.

பட்டால்த்தான் இதை எப்படி எழுதுவது ?

இடையில் 'த்' வரக்கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூகிள் தேடலின் முடிவுகள் சொல்லும் தொகை இன்றைய நிலவரம்.

1. தமிழ்ச்சொற்கள் ----> 1090

2. தமிழ்ச் சொற்கள் ----> 13400

3. தமிழ் சொற்கள் ------> 213000

காண்டம்,

தேடுபவர் தனக்கு எது தேவையோ அதைத்தான் தேட வேண்டும்.

'தமிழ்ச்சொற்கள்' என்று சேர்த்தெழுதப்பட்ட கட்டுரைகள் மட்டும் தேவையென்றால் முதலாவது முறைப்படிதான் தேட வேண்டும். அப்படி எழுதப்பட்ட கட்டுரைகள் மட்டுமே தேடலில் வரும். எனவே அது குறைந்த எண்ணிக்கையாகத்தான் இருக்கும்.

'தமிழ்ச்' என்ற சொல்லோ 'சொற்கள்' என்கிற சொல்லோ இருக்கும் கட்டுரைகள் தேவையென்றால் (இரண்டில் ஒன்றிருந்தாலே போதுமானதெனும் போது) இரண்டாவது முறைப்படி தேட வேண்டும்.

இதில் அதிகளவு கட்டுரைகள் விடையாகக் கிடைக்கும். காரணம், தமிழ் சான்றோர், தமிழ்ச் சூரியன் என்று எழுதப்பட்ட கட்டுரைகளும் கிடைக்கும். தனியே 'சொற்கள்' என்று எழுதப்பட்டிருந்தாலும் அவையும் திரட்டப்படும்.

இரண்டாவது முறைப்படியே தான் மூன்றாவதும். இங்கே 'தமிழ்' என்ற சொல்லைத் தேடுகிறோம். 'தமிழ்ச்' என்ற சொற்களிருக்கும் கட்டுரைகளையும் சேர்த்துத் தேடித்தரும். எனவே இது இன்னும் அதிகளவான திரட்டலைச் செய்யும்.

தேடுதல் என்பதை விட்டுப் பார்த்தால், முதலிரு முறைகளும் சரியானவை, மூன்றாவது தவறான வடிவம். சொற்களைப் பிரித்தெழுதும் எல்லாவிடத்திலும் புணர்ச்சிவிதிகளைப் புறந்தள்ளிவிட முடியாது.

அதிகளவான தேடுதல் எண்ணிக்கையைத் தருகிறது என்பதற்கா 'தமிழ் சொற்கள்' என்று எழுதுவதே சிறப்பு என்று சொல்வது குழந்தைப்பிள்ளைத் தனமானது (நீ ங்கள் அப்படிச் சொல்லவில்லையென்ற போதும்.)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேடும்போது, குறிப்பிட்ட சொல்லில் சாத்தியப்படக்கூடிய எழுத்துப்பிழை வடிவங்களையும் சேர்த்தே தேட வேண்டிய நிலைமைதான் இன்று தமிழிலுள்ளது.

'அக்கறை' என்ற சொல்லைக்கொண்டு நான் தேட வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சொல்லோடு 'அக்கரை' என்ற சொல்லையும் போட்டுத்தான் நான் தேட வேண்டும். காரணம் இன்று எண்பது வீதமான இந்தியர்கள் அக்கறை என்பதை 'அக்கரை' என்றுதான் எழுதுகிறார்கள்.

அக்கரை என்பது சரியான பொருளில் பயன்படுத்தப்படும் கட்டுரைகளும் வந்துதான் ஆகும். ஒன்றும் செய்ய முடியாது. அதுபோல் 'பொறுப்பு' என்ற சொல்லைப் போடுவதானாலும் 'பொருப்பு' என்பதையும் சேர்த்துத்தான் தேட வேண்டும். மிக அதிகளவில் இருக்கும் பிழைகளுள் இதுவுமொன்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கால போவான் கேட்டதைப்போல அவசியமான சில குறிப்புக்களைத் தொகுப்பாகச் சொல்வது சிறப்பு..

1. அன்று, அல்ல பயன்பாடு.

2. வினைமுற்றுப் பயன்பாடு

'படங்கள் நன்றாக உள்ளது' தவறு - உள்ளன சரி.

'மாடுகள் இதை உண்ணாது' தவறு - உண்ணா சரி.

3. ஒரு, ஓர் பயன்பாடு

உயிரெழுத்துக்களின் முன் 'ஓர்' வரவேண்டும், மற்றும்படி 'ஒரு' வரவேண்டும்.

தமிழர்களின் தான்தோன்றித்தனம் வெளிப்படுவது இவ்விடம்தான். ஆங்கிலத்தில் இதே விதியை அனைவரும் சரியாகப் பயன்படுத்துகிறார்கள், தமிழில் மட்டும் அப்படியொரு முறையிருப்பதே ஒருவருக்கும் நினைவிருப்பதில்லை.

'ஒரு ஊரில ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்' என்று கதை தொடங்கும்போதே பிழையாகத்தான் தொடங்குகிறது. 'ஓரூரில் பாட்டியொருத்தி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்' என்பது தான் சரி. கதைக்கும்போது 'ஓர்' என்பது எமக்கு அறவே வருவதில்லை. எழுதும்போதாவது கட்டிக்காப்போமே?

4. உயர்திணை முன் எண்ணிக்கையைக் குறிப்பதைத் தவிர்ப்பது.

'இங்கே பல மாணவர்கள் கற்கிறார்கள்' தவறு - 'மாணவர்கள் பலர்' சரி.

'நேற்று மூன்று பெண்கள் வந்தார்கள்' தவறு - 'பெண்கள் மூவர்' சரி.

உயர்திணைகளுக்குப் பின்பாக எண்ணிக்கைச் சொற்களைச் சொல்வது சிறப்பு. (தவிர்க்கவியலாச் சந்தர்ப்பங்கள் அவ்வப்போது வரக்கூடும்) அஃறிணையாயின் முன்னாற் சொல்வது தவறன்று.

5. தான் - தாம் பயன்பாடு.

ஒருமை - தான், பன்மை - தாம்.

'அவன் தான் என்னை அடித்தான்' - சரி.

'அவர்கள் தாம் என்னை அடித்தார்கள்' -சரி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மேற்சொன்னவைகளோடு இன்னும் சில அடிப்படைகளை எல்லோரும் கடைப்படித்தாலே இப்போதைக்குப் போதும். 'வாழ்த்து, வாழ்த்துக்கள், வாழ்த்துகள்' சண்டையெல்லாம் இப்போதைக்குத் தேவையற்றவை.

எனவே சபேசன் போன்றோர் இன்னும் அதிக எடுத்துக்காட்டுக்களோடு அடிப்படை விடயங்களைத் தொகுத்தால் நன்று. (உங்களுக்குத்தான் நேரம் அதிகமிருப்பது போன்று தெரிகிறது) நான் மேற்சொன்னவைகள் இன்னும் விரிவாக்கப்பட வேண்டும்.

நல்ல தகவல்கள் நல்லவன். நன்றி.

நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் "நன்றிகள்" என்று சொல்வது தவறென்றும், "நன்றி" என்று சொல்வதே சரியானது அல்லது போதுமானது என்றும் சிலர் அறிவுறுத்தி நான் திருத்திக்கொண்டுள்ளேன். :unsure:

அதேபோன்று "வாழ்த்துக்கள்" என்பது தவறில்லை என்றும், அதில் வருகிற "வாழ்த்து" என்பது வினையடிப் பெயர் என்றும், அதனால் "க்கள்" என்று வருவதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டார்கள்.

இன்னொரு விடயம்: "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே ..." என்று தொடங்குகிற பாடல் இலக்கணப்படி தவறென்றும் சொன்னார்கள். "ஒவ்வொரு பூவுமே ..." என்றே வரவேண்டும். "ஒவ்வொரு பூக்களுமே" என்று வந்தாலும் முடியும் போது "சொல்கின்றனவே ..." என்று முடியவேண்டும். இதுபற்றி எனக்கு விளக்கம் இல்லை. எனவே நேரமிருந்தால் இது தொடர்பாகவும் எழுதுங்கள்.

மேலும் இவை போன்ற தகவல்களை இங்கு எழுதுங்கள். நாம் எமது மொழியாற்றலை செம்மைப்படுத்த உதவும்.

நன்றி

Edited by இளைஞன்

  • தொடங்கியவர்

சினிமாப் பாடல்கள் என்று பார்க்கின்ற போது பல பிழைகளைக் கண்டு பிடிக்கலாம்.

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" என்ற வரி என்னுடைய கருத்தின்படியும் தவறுதான்.

"ஒவ்வொரு" என்று ஒவ்வொன்றாக பிரித்துச் சொல்வதால் அங்கே "பூக்கள்" என்று பன்மை வராது.

உதாரணமாக

ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு நிறம்

ஒவ்வொரு தமிழனும் அடக்குமுறையை எதிர்த்து போராடுவான்.

அதே போன்று

"ஒவ்வொரு பூவும் சொல்கிறது"

அத்துடன் இரண்டாவது விடயம்

பூக்கள் சொல்கின்றன - இதுதான் சரி.

"சொல்கிறது" என்பது ஒருமை. "சொல்கின்றன" என்பது பன்மை.

இப்பொழுது வேறு ஒரு கேள்வி உங்களைக் கேட்க விரும்புகிறேன். காலம் பற்றிய ஒரு கேள்வி

பறவை பறந்தது - இது இறந்தகாலம்

பறவை பறக்கிறது - இது நிகழ்காலம்

பறவை பறக்கும் - இது எதிர்காலம்

அதே போன்று

பறவைகள் பறந்தன - இது இறந்தகாலம்

பறவைகள் பறக்கின்றன - இது நிகழ்காலம்

இப்பொழுது இதனுடைய எதிர்காலம் என்ன?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்!

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறவைகள் பறக்கப்போகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

பறக்கப்போகின்றன என்பது பிறவினை.அதாவது இன்னுமொருவரால் அல்லது இன்னுமொன்றால் செய்யப்படுவது.ஆகவே தன்வினையில் பறவை, பறவைகள் பறக்கும் என்று தான் வரும் என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

பறவைகள் பறவா.. :lol:

  • தொடங்கியவர்

பறவை பறக்கும்" என்பதன் பன்மை எது என்று கேட்கப்பட்டிருக்கிறது

அந்த வகையில் "பறவைகள் பறக்கப் போகின்றன" என்பது தவறு. "பறவை பறக்கப் போகிறது" என்பதன் பன்மையே இது.

"பறவைகள் பறவா" என்பது "பறக்க மாட்டாது" என்ற அர்த்தத்தை கொடுக்கிறது.

எல்லோருமே "பறவைகள் பறக்கும்" என்றுதான் எழுதுகிறோம்.

எழுவாய் பன்மையிலும் பயனிலை ஒருமையிலும் இருக்கிறது. இது சரியாக இருக்காது.

நான் அறிந்த வரையில்

"பறவைகள் பறப்பன" என்பதுதான் சரி

நான் இப்படித்தான் அறிந்திருக்கிறேன் என்றாலும், இது பற்றி வைத்திருந்த குறிப்பை என்னால் மீண்டும் பெற முடியவில்லை.

அதே வேளை பொதுவாக "பறப்பன" போன்ற சொற்கள் வினைமுற்றெச்சமாகத்தான் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தப் பதில் உங்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கலாம். எதற்கும் நீங்களும் ஒரு முறை உங்களுக்கு தெரிந்த தமிழ் அறிஞர்களிடம் கேட்டுப் பாருங்கள். நானும் கேட்டுப் பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்காலத்தைக் குறிக்கும்போது 'பறக்கும்' என்பது சரியாகப் படுகிறது. எதிர்காலத்தைக் குறிக்க ஒருமை, பன்மை தேவையில்லையென்று நினைக்கிறேன். 'பறக்கும்' என்பதற்கு மட்டுமன்றி வேறும் பல வினைகள் அப்படித்தான்.

இலக்கணத்தில் இதற்கு வழியுண்டா என்று தேடிப்பாருங்கள். 'எல்லாம், ஆண்டு, உண்டு' என்பன போன்று ஒருமை / பன்மை கணக்கிலெடுக்கப்படாத சந்தர்ப்பங்கள் போல இதற்கும் ஏதாவது சொல்லப்பட்டிருக்கலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~

இளைஞன்,

திரைப்படப் பாடல்களில் இலக்கணக் குற்றம் பிடிக்க முடியாது.

கண்ணதாசன், வைரமுத்து முதற்கொண்டு தமிழ் வல்லோர்கள் இலக்கணத்தை மீறித்தான் பாட்டெழுதியுள்ளார்கள்.

'ஆசையிலோர் கடிதம்' என்று கண்ணதாசன் எழுதினார்.

இப்படி நிறைய எடுத்துக்காட்டுக்களுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

பறவைகள் பறக்கும் என்பதுதான் எனக்கும் சரியாகப் படுகிறது.

பறவைகள் பறப்பன, பாம்புகள் ஊர்வன, விலங்குகள் நடப்பன போன்றவை அவைகளின் நகரும் தொழிற்பாட்டையே குறிக்கின்றன.

மேலும் நம் பேச்சு வழக்கில்: பிள்ளை! உந்தக் கரப்பை வடிவா மூடனை இல்லாட்டில் 'குஞ்சுகள் ஓடீடும்".

தம்பி! கடவையை வடிவாய்க் கொழுவு பிறகு மாடுகள் பாஞ்சிடும் என சாதாரணமாகக் கதைப்பார்கள்.

மேலும் சினிமாப் பாடல்களோ, சில மரபுக்கவிதைகள், புதுக் கவிதைகள், ஹைக்கூ போன்றவைகள் சந்தங்களுக்காகவும் மற்றும் எதுகை, மோனைக்காகவும் முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி போன்றவையை அனுசரித்துப் பாடப்படுபவை. அவைகளை இலக்கணத்துக்குள் வைத்துப் பார்ப்பது சிரமம்.

நான் கூறியது தவறாகவும் இருக்கலாம். ஆயினும் இது மிகப் பிரயோசனமான வேலை. நன்றி. :wub::lol:

ஐய்யோ எனக்கு பேசுற தமிழும் மறந்திடும் போல இருக்கே சாமியோவ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐய்யோ எனக்கு பேசுற தமிழும் மறந்திடும் போல இருக்கே சாமியோவ்

இப்பமட்டும் எல்லாம் ஒழுங்காய் கதைக்கிற மாதிரி :mellow:

உதுகளை கொஞ்சம் கொஞ்சமாக eKalappai Keyman இல தன்னிச்சையாக சுட்டிக்காட்டும் படி கொண்டு வந்தா நல்லா இருக்கும்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பகுதி. ஆரம்பித்த சபேசனுக்கு நன்றி

  • தொடங்கியவர்

கடந்த இரு வாரங்களாக வேறு சில அலுவல்கள் வந்து விட்டதால் எழுத முடியவில்லை.

"பறவை பறக்கும்" என்பதன் பன்மை பற்றி பல இடங்களில் விசாரித்துப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த பேராசிரியர்களையும் கேட்டேன்.

பலருடைய கருத்து "பறவைகள் பறக்கும்" என்பதாகத்தான் இருக்கிறது.

அந்த வகையில் நான் முன்வைத்த "பறவைகள் பறப்பன" என்பது சரி அல்ல என்று படுகிறது. இது சரியா என்பதில் எனக்கு உள்ள சந்தேகத்தையும் நான் ஏற்கனவே வெளியிட்டிருந்தேன்.

ஒருமை பன்மை இரண்டிற்குமே "பறக்கும்" என்றுதான் வரும் என்பது பல தமிழாசிரியர்களின் கருத்து. இங்கே களத்திலும் பல உறவுகளும் அப்படித்தான் சொல்லியிருந்தார்கள். பல இடங்களில் விசாரித்ததன் பிறகு அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆகவே

"பறவைகள் பறக்கும்" என்பதுதான் சரி

  • கருத்துக்கள உறவுகள்

தேநீர் - தேனீர் இதில் எது சரி?

தேநீர் - தேனீர் இதில் எது சரி?

தேநீர் என்பது என் அபிப்பிராயம்.

சரி ஒரு கப் போட்டுத்தாங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

தேநீர் என்பது என் அபிப்பிராயம்.

சரி ஒரு கப் போட்டுத்தாங்கோ!

எல்லா இடத்திலேயும் தேநீர் கேட்கிறாங்களே? லண்டனில்ல ஒரு தேத்தண்ணி கடை போட்டா நல்ல வருமானம் கிடைக்கும் போலகிடக்கு :wub::wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.