Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை இந்திய பிர்லா கம்பனி பொறுப்பேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையை இந்திய பிர்லா கம்பனி பொறுப்பேற்பு

19.01.2008 / நிருபர் எல்லாளன்

உலகின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான இந்திய பிர்லா கம்பனி இலங்கையின் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையைப் பொறுப்பெடுக்கவுள்ளதாக கட்டுமான மற்றும் பொறியியல்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிறுவனத்துடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் உற்பத்தி வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேற்படி நிறுவனத்தின் உயரதிகாரிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி இலங்கை வரவுள்ளதாகவும் அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினைச் சந்தித்து இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

"முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் நிபந்தனைகளுக்கமைவாகவே அவர்கள் சீமெந்து உற்பத்தியை மேற்கொள்வார்கள். அதற்காக நாம் அவர்களுக்கு அந்த நிலத்தினை குத்தகைக்கு வழங்க வேண்டும். இந்த நிறுவனம் உலகிலுள்ள சீமெந்து உற்பத்தி நிறுவனங்களின் வரிசையில் 11வது இடத்தில் இருக்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் முதலாவது சீமெந்து உற்பத்தித் தொழிற்சாலையான காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை 1980களில் நாட்டில் ஏற்பட்ட மோதல் நிலைமைகளின் காரணமாக மூடப்பட்டது.

மீண்டும் தொழிற்சாலையில் சீமெந்து உற்பத்திகள் ஆரம்பிக்கப்படுமானால் இலங்கையின் சீமெந்துத் தேவையில் 40வீதத்தினை பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்குமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படியும் பாப்பாணர் (ரோ) வாறது என்று தான் அடம் பிடிக்கினம்.

தமிஈழத்தின் பொருளாதாரம் இலவசமாகவே கட்டப்படுகின்றது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிஈழத்தின் பொருளாதாரம் இலவசமாகவே கட்டப்படுகின்றது....

தமிழீழத்தின் சூழல் திட்டமிட்டபடி மாசுபடுத்தப்பட போகின்றது என்றும் சொல்லலாம் :(

40 000 - 50 000 சிங்கள ரானுவத்தை விடவா மாசுபடுத்தப்படும்?

  • கருத்துக்கள உறவுகள்

போரால் யாழ்ப்பாணத்துக்கு ஏற்பட்ட ஒரே நன்மை யாழ்பாணதின் காற்றையும் சுண்ணப் படிவ அத்திவாரத்தையும் நாசமாக்கிய சீமெந்துத் தொழிற்சாலை முடங்கிதுதான். நாம் உலகெங்கும் இப்பவே போர்க் கொடி தூக்க வேண்டும். காங்கெசன்துறையும் உயர் பாக்துகாப்பு வலயமும் நாழை நமது சிலிக்கன் பள்ளத்தாக்காக வேண்டிய பகுதிகள். விடுதலைப் புலிகளும் தமிழர்கூட்டணி எம்பீக்களும் நமது தமிழக நண்பர்களும் காலம் தாழ்த்தாது போர்க்கொடி தூக்க வேண்டும். நாழை தமிழகத்தில் ஆரம்பிக்க இருக்கும் உண்ணாவிரத போராளிகளின் காதிலும் யாராவது இந்தச் சேதியைச் சொல்லுங்கள்.

இராணுவம் இருக்கிற இடத்தை துப்பரவு செய்து கொடுக்கிறதுக்கா இவங்க வரப்போறாங்க?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவம் இருக்கிற இடத்தை துப்பரவு செய்து கொடுக்கிறதுக்கா இவங்க வரப்போறாங்க?

ஓ ரோ வரப் போறாங்களா அந்த இடத்துக்கு அல்லது தொப்பி காரங்கள் வாறத்துக்கு ஆயத்தம் பண்ணவா :(

திருகோணமலையில குத்தகைக்கு கொடுத்த காலம் போய் இப்ப யாழ்பாணத்திலையும் குடுக்கத் தொடங்கிவிட்டாங்கள். பொருளாதார நலன் என்பதன் பெயரால் வெளியுறவுக் கொள்கை முன்னகர்த்தப்படுகிறது. கத்தியின்றி இரத்தம் இன்றி ஆக்கிரமிப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழரின் முக்கிய பிரதேசங்கள் யாவும் இந்தியாவின் கைகளுக்குள் சிறிது சிறிதாக போகின்றன. அடுத்தது மன்னார் போகும். (பாக்கு நீரிணை) இனி வரும் காலங்களில் இந்தியா தமது முதலிடுகளை பாதுகாக்க என்று வெளிக்கிடும்...............

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பிரதேசங்களிலுள்ள இயற்கை வளங்களை இந்தியாவுக்கு நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்குக் கொடுப்பதன்மூலம் தனிழரின் வளங்கள் சுரண்டப்படுவது மட்டுமல்லாமல் இவற்றின் இருப்புக்காக இந்திய படைகளின் பாதுகப்பும் கோரப்படலாம். இது இன்னொரு வகையில் இந்தியாவை முழுமையாகவே இலங்கைப் பிரச்சனைக்குள் இழுத்துவிடும் முயற்சி. இந்தியாவுக்கும் இது தெரியாதது அல்ல. ஏனென்றால் இந்தியாவின் தேவையும் அதுதானே ?!!

சீமெந்து தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதே சரியானது. ஏற்கனவே யாழ்ப்பாணம் சுண்ணக்கல்லை தோண்டி எடுப்பதால் கடல் நீர் உள்வரும் அபாயம் உள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன....

தனி அரசு வந்தால் கூட சீமெந்து தொழிற்சாலை மீண்டும் அங்கு வருவது சந்தேகமே.

Edited by நேசன்

சீமெந்து தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதே சரியானது. ஏற்கனவே யாழ்ப்பாணம் சுண்ணக்கல்லை தோண்டி எடுப்பதால் கடல் நீர் உள்வரும் அபாயம் உள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன....

தனி அரசு வந்தால் கூட சீமெந்து தொழிற்சாலை மீண்டும் அங்கு வருவது சந்தேகமே.

உங்கள் தகவல் தவறானது சீமேந்து உற்பத்திக்கு தேவையான கற்கள் முருங்கன் பகுதியிலிருந்தே காங்கேசன்துறை சீமேந்துத் தெராழிற்சாலைக்கு எடுத்து வரப்படுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவுக்கும் இது தெரியாதது அல்ல. ஏனென்றால் இந்தியாவின் தேவையும் அதுதானே ?!!

யாழ்பாணத்தில் ஒரு குளு குளு வசதியுள்ள நவீன திரையரங்கம் கட்டலாமா என்று யோசிக்கிறேன்.

உங்களுக்கும் ஏதாவது இப்படி ஜடியா உண்டா. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

:D:D நல்ல ஐடியாதான், ஆனால் டக்கிளசு கோவிச்சுக்கொள்ளுமே ? யாழ்ப்பாணத்து மக்களின் கலாச்சாரத்தையே அடியோடு குழி தோண்டிப் புதைக்கும் பொறுப்பை மகிந்த அந்த டக்கிளசுக்கு அல்லவா கொடுத்திருக்கிறது ? இதில் நாம் வேறு ஏதாவது செய்ய வேணுமா ?!!!!!

:lol: மன்னிக்க வேண்டும் வசம்பு, முருங்கன் பகுதியென்றால் என்ன, காங்கேசந்துறை என்றால் என்ன , எல்லாம் எமது நிலம் தானே ? இதில் காங்கேசந்துறை தப்பினால் போதும், முருங்கன் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை என்று நினைப்பது தப்பில்லையா ?

:D மன்னிக்க வேண்டும் வசம்பு, முருங்கன் பகுதியென்றால் என்ன, காங்கேசந்துறை என்றால் என்ன , எல்லாம் எமது நிலம் தானே ? இதில் காங்கேசந்துறை தப்பினால் போதும், முருங்கன் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை என்று நினைப்பது தப்பில்லையா ?

நான் அவரது தகவல் தவறானது என்பதை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். அதுவும் அவர் ஆராய்ச்சியாளர்கள் யாழ்ப்பாணத்தினுள் கடல் நீர் நுழையும் அபாயம் என சொல்லியுள்ளதாக கற்பனையை வேறு புகுத்தியிருந்தார்; அதனையே நான் சுட்டிக் காட்டினேன்.

அதுபோல் என்னைப் பொறுத்தவரை எமது தாயகத்தில் என் பிறந்த ஊருக்கு அடுத்தபடியாக எல்லா ஊரும் எனக்கு ஒன்று தான். அதேபோல் ஒன்றைப் பெற வேண்டுமானால் எதையாவது இழப்பில்லாமல் பெற முடியாது. எமது மண்ணில் சீமேந்து உற்பத்திக்காக கல் தோண்டி எடுப்பது ஆபத்து என்றால் அதை எந்த ஊரில் செய்தாலும் அந்த ஊருக்கு ஆபத்துத் தானே. அந்த ஊரிலுள்ளவர்கள் பாவமில்லையா?? எமக்குச் சீமேந்தும் வேண்டும அதனால் நமக்கு எவ்வித இழப்பும் ஏற்படக்கூடாது. ஆனால் வேறு எவருக்காவது இழப்புகள் ஏற்பட்டு அதனால் நமக்குச் சீமேந்து கிடைத்தால், அதனை சந்தோசமாக ஏற்றுக் கொள்வோம். நல்ல கொள்கை. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில குத்தகைக்கு கொடுத்த காலம் போய் இப்ப யாழ்பாணத்திலையும் குடுக்கத் தொடங்கிவிட்டாங்கள். பொருளாதார நலன் என்பதன் பெயரால் வெளியுறவுக் கொள்கை முன்னகர்த்தப்படுகிறது. கத்தியின்றி இரத்தம் இன்றி ஆக்கிரமிப்பு.

கடைசியிலை பட்டம் விட்டு விழையாட தேனிப்புளியடி வயலும் இல்லாமல் போகப்போகுது :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் சாத்திரியார் உதை நீங்கள் குத்தகைக்கு எடுத்து நடத்தேலாதோ :lol:

கிட்டத்தட்ட காங்கேசன்தறை சீமேந்துத் தொழிற்சாலை 1985-86 வரை முழுமையாக இயங்கியது என நினைக்கின்றேன். பழைய தொழிற்சாலையிலும் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த தொழிற்சாலையிலும் வேலை செய்து 10000 குடும்பத்திற்கு மேல் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார்கள். அதே போல் மாவிட்டபுரம் வெத்திலைக்கு காரம் கூட என்று மவுசு வந்ததும் இந்தச் சீமேந்துத் தொழிற்சாலைப்புகை அவ்வெத்திலைகளில் படிவதால்த் தான்.

சீமேந்துத் தொழிற்சாலையால் பாதிப்பு என்பது இருந்தாலும் அது பல்லாயிரக் கணக்கான குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருந்தது என்ற உண்மையையும் மறுக்க முடியாது. அதுபோல் மீண்டும் அத்தொழிற்சாலை இயங்கத் தொடங்கினால் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். அதுபோல் தற்போது காடுகள் போல் காட்சியளிக்கும் தொழிற்சாலையை அண்டிய மாவிட்டபுரம், தெல்லிப்பழை, கீரிமலை போன்ற கிராமங்கள் மீண்டும் புத்துயிர் பெறவும் வாய்ப்பிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொலவது சரிதான். பொருளாதார ரீதியில் அப்பிரதேசம் வளர்ச்சியடையும். அதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு நாம் குடுக்கும் விலை ? எதிரியின் ஆக்கிரமிப்பில், அந்நிய நாட்டுச் சுரண்டல். எமது வளங்களை எப்படிப் பாவிப்பது என்பதை நாம்தான் தீர்மனிக்க வேண்டும். எம்மை ஆக்கிரமித்து நிற்கும் எதிரியும் அதன் நெருங்கிய தோழனுமல்ல !

நீங்கள் சொலவது சரிதான். பொருளாதார ரீதியில் அப்பிரதேசம் வளர்ச்சியடையும். அதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு நாம் குடுக்கும் விலை ? எதிரியின் ஆக்கிரமிப்பில், அந்நிய நாட்டுச் சுரண்டல். எமது வளங்களை எப்படிப் பாவிப்பது என்பதை நாம்தான் தீர்மனிக்க வேண்டும். எம்மை ஆக்கிரமித்து நிற்கும் எதிரியும் அதன் நெருங்கிய தோழனுமல்ல !

தமிழர் பிரதேசத்தில் முக்கனிகள் போல் வாழைச்சேனை கடுதாசியாலை, பரந்தன் இரசாயணத் தொழிற்சாலை, காங்கேசன்துறை சீமேந்துத் தொழிற்சாலை ஆகியவற்றை கொண்டு வந்த பெருமை அமரர்ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களையே சாரும்.

எமது வளங்களை எப்படிப் பாவிப்பது என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமென்றாலும் ஏற்கனவே நல்ல முறையில் இயங்கி; தற்போது இயங்காமலிருக்கும் ஒரு தொழிற்சாலை மீண்டும் இயங்கப்போவது பல வகைகளில் எமக்கு நன்மையே. ஒரு காலத்தில் அத்தொழிற்சாலை நமது கைக்கு வரும்போது அது நன்றாக இயங்கக் கூடிய நிலையிலிருப்பது தொடர்ந்தும் நம் மக்களுக்கு தொழில் வாய்ப்பைப் பெறவே உதவுமென்பதையும் புரிந்து கொள்ளுங்கள். இலங்கையில் 3 இடங்களில்(காங்கேசன்துறை, புத்தளம், காலி) இருந்தாலும் மிகவும் பிரபலமாகவும் கூடிய உற்பத்தித்திறன் கொண்டதுமாக இயங்கியது காங்கேசன்துறை சீமேந்துத் தொழிற்சாலையே. பலவேளைகளில் நாம் எமது முடிவுகளை இராஜதந்திரரீதியாக எடுப்பதே எதிர்காலத்தில் நன்மை பயக்கும் என்பதை புரிய முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்.

Edited by Vasampu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.