Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்ந்தவை பயனானவை. நன்றி. தாவரம் என்பதற்கு ஒரு சரியான விளங்கம் கூறுங்கோ நுணா.

  • Replies 516
  • Views 131.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஊரில் விவசாயம் செய்யும்/செய்ய விரும்பும் (பாலபத்ரஓணாண்டி)நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.....!  👍 பி.கு: தோட்டத்தில் நின்று சுவையான தேநீர் அருந்தும் போது ஒரு கணம் சுவியையும் நினைக்கவும்.....!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    259 X உங்கள் வயது X  39ஐ  பெருக்கி வரும் விடையை பாருங்கள் நீங்களே ஆச்சரியப் படுவீர்கள். வீட்டிலிலுள்ள மற்றைய குடும்ப அங்கத்தவர்களின் வயதையும் பெரிக்கிப் பாருங்கள்.

  • தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகள் :  :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: ::::::::::: வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத பெருமை நிறைய தஞ்சை கோவிலு

Posted Images

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D  

 

 

or

 

The difference between a tree and a plant is that a tree has a single trunk from which branches sprout and have a clear apical dominance while a plant may have one or more stems and may not show clear apical dominance. Trees are plants but grow to heights that are significantly higher than normal plants such as shrubs and herbs. Both plants and trees are photoautotrophic with eukaryotic cells.

  • கருத்துக்கள உறவுகள்

typing_all_keys.jpg

 

தட்டச்சில், Typewriter என்னும் எழுத்துக்களை , தட்டச்சின் மேலுள்ள ஒரே வரிசையிலிருந்து தேர்ந்தெடுத்து அடிக்கலாம்.

Edited by தமிழ் சிறி

  • 3 weeks later...

அரும்மை அரும்மை படிக்க படிக்க ஆவலைத்தூண்டும் தகவல்கள். தந்தமைக்கு நன்றி. தொடருங்கள்... வாழ்த்துக்கள்.  :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெருந்தலைவர் காமராஜரின் 111 ருசிகர தகவல்கள்

 
kamarajar1.jpg

1.காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச் சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபகசக்தி மிகுந்திருந்தது. 

2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார். 

3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார். 4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார்.. 

5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில் காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்து போய் இருக்கிறார்கள். 

6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான், திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி கட்டி போல கரைந்து மறைந்து விடும். 

7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக சொல்லி ஆச்சரியப்படுத்துவார். 

8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப் பெரிய தொகையாகும். 

9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். 

10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி. எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக் கொள்வார். 

11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார். 

12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால் பெரிய கேக் கொண்டு வந்து வெட்ட சொன்னால், " என்னய்யா... இது?'' என்பார். கொஞ்சம் வெட்கத்துடன்தான் "கேக்'' வெட்டுவார். 

13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காமராஜர், "மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறைய தொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான் இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. 

14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும் "காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார். 

15. காமராஜருக்கு "பச்சைத்தமிழன்'' என்ற பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார். 

16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும் அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டு விட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக் கொள்வார். 

17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர் ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார். 

18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார். 

19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது. அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234 பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார். 

20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், "மக்கள் தலைவர்'' என்றே கூறினார். 

21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில் 8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தே காமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளை வைத்திருந்ததாக சொல்வார்கள். 

22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார். இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது. 

23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன் முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார். 

24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர் சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றி இருக்கிறார். 

25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர். 

26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. "மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு. 

27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மா காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின் இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது குறிப்பிடத்தக்கது. 

28. காமராஜர் எப்போதும் "முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும், 4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார். 

29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக் கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்து போட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம் பேனா வாங்கி கையெழுத்திடுவார். 

30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதிய உணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையே பயன்படுத்தினார். 

31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே போட்டுக் கொள்வார். 

32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது. `எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு. 

33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார். 

34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள், இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக் ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார். 

35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து விட மாட்டார். நிதானமாக யோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்த செயலை எக்காரணம் கொண்டும் செய்து முடிக்காமல் விட மாட்டார். 

36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண கிராமத்தான் போலவே பேசுவார். 

37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனார். 

38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது. 

39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி' என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால் `கறுப்பு காந்தி' என்று அர்த்தம். 

40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராஜரையே சேரும். 

41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார். 

42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டார். 

43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார். 

44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும், ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுத்தன. 

45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச் சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். 

46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும் காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள் முழுவதும் இருந்தார்கள். 

47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழை மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக 1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர். 

48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால் ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள `ஓட்டல் எவரெஸ்ட்'டில் தான் தங்குவது வழக்கம். ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை. 

49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக் கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும் தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார். 

50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோ வரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகா வென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்ற பாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார். 

51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தினார். 

52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது. 

53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது. 

54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித் தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான். 

55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை கொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப் போவதுமில்லை. 

56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒரு பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான் சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில் ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால் விரும்பி சாப்பிடுவார் 

57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும் எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்' என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும். 

58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு டிரங்குப் பெட்டிதான். 

59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ். சீட் கேட்டு சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர் `மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' என அனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார். 

60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின் உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில் காமராஜரும் கலந்து கொண்டார். 

61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படி பேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார். 

62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல் நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராக இருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது. 

63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக் காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகிய மூவரும்தான். 

64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால் 1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது. 

65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதை செயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். 

66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப் பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான் ஏற்படுத்தப்பட்டது. 

67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும் பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. 

68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொரு பெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள் திறந்து வைத்து சாதனை படைத்தார். 

69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில், செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும் தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும். 

70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமே இரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும், தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது. 

71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது. விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது. 

72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ் மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சி காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. 

73. பெருந்தலைவர் காமராஜருக்கு "பாரத ரத்னா" எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது. 

74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்ட போது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கிய செயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3). நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது. 

75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காக எதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும் நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப் பேசுவார். 

76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம் செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர் பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி, முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான். 

77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறிய போதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர் காமராஜர். 

78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர் ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்கு இலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்து அனைவரையும் வியக்க வைத்தார். 

79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள் கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும். 

80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில் காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார். 

81. பெருந்தலைவர் காமராஜரின் முதலாம் ஆண்டு நினைவு நாளன்று 15.7.1976-ல் இந்திய அரசு 25 காசு தபால் தலையை வெளியிட்டது. 

82. தமிழ்நாடு சட்டப் பேரவையில் பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படம் அப்போதைய குடியரசு தலைவர் என். சஞ்சீவி ரெட்டியால் 1977-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. 

83. டெல்லியில் காமராஜரின் திரு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்ற மெரினா கடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்று தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் காமராஜர் நினைவாலயம், அமைக்கப்பட்டுள்ளது. 

85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை அவரது நினைவுச் சின்னமாக தமிழக அரசு மாற்றியது. 

86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர் மற்றவர்களுடைய பணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான். 

87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், `கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், `அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்! 

88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து! 

89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்! 

90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். `நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க' என்று கமென்ட் அடித்தார்! 

91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்! 

92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமான அரசியல் நோக்கு, தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவை செய்கிற ஆசை இருந்தது. 

93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒரு போதும் அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்து விடுவார். 

94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களை சட்ட விஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்க முற்படுவதையோ அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. 

95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாக எடுத்துக் கொள்கிற மனப்பக்குவம் கொண்டவர் காமராஜர். 

96. அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம் முடிந்து விட்டது என்று அர்த்தம். தன்னால் முடியாவிட்டால் `முடியாது போ' என்று முகத்துக்கு நேராகவே சொல்லி அனுப்பி விடுவார். 

97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப் பார்ப்பதில்லை. அவர்கள் சொல்வதைக் கவனமுடன் கேட்டு ஆவண செய்வார். 

98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்க முடியும். யார் வேண்டுமானாலும் அவரிடம் நேரில் சென்று விண்ணப் பங்களைக் கொடுக்க முடிந்தது. 

99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவே பிடிக்காது அவருக்கு. 

100. சொற்களை வீணாகச் செலவழிக்க மாட்டார். ரொம்பச் சுருக்கமாகத்தான் எதையும் சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவே அனாவசிய செலவையும் அவர் அனுமதிப்பதில்லை. 

101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார். ஆனால் 'எல்லாம் எனக்கு தெரியும்' என்கிற மனோபவம் ஒரு போதும் அவரிடம் இருந்ததில்லை. 

102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊரில் என்ன தொழில் நடக்கிறது. எந்த ஊரில் யார் முக்கியமானவர் என்பதெல்லாம் அவருக்குத் தெரியும். 

103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார். தேவைப்பட்டால் அவற்றில் திருத்தங்கள் செய்யத் தயங்குவதில்லை. 

104. சொல்லும் செயலும் ஒன்றாக இல்லாவிட்டால் அவருக்குக் கோபம் வந்து விடும். உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார். 

105. ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர் முழுமையாகப் பெற்றிருந்தார். அதனால்தான்அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச் சிறப்பாக வழிநடத்த முடிந்தது. 

106. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகி விடும். முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள் அதிகாலை ஐந்துமணி வரையும் நீடிப்பதுண்டு. எத்தனை மணிக்குப்படுத்தாலும் காலை ஏழுமணிக்கு விழித்துக் கொண்டு விடுவார் அவர். 

107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொரு திட்டமும் ஒரு மகத்தான குறிக் கோளாகவே இருந்தது. 

108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால் ஒருமுறை கூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள் எழவிலை. கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர் அவர். 

109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம். தம்முடைய கருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார் காமராஜர்.

110. காமராஜர் எந்த வேலையை யும் தள்ளிப் போட்டதில்லை. அன்றைய வேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கான வேலைத் திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டு விடுவார். 

111. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டு. ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச் செல்வார். 

 

Thanks to Malaimalar.com

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 
 
semmozi.jpg
1. அங்கோலா – Angola -10 (மொத்த மக்கள் தொகை 18,498,000)

2. அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் – United States of America – 200,000 (மொத்த மக்கள் தொகை 314,659,000)

3. அயர்லாந்து – Ireland 2,000 (மொத்த மக்கள் தொகை 4,515,000)

4. அர்ஜென்ரினா – Argentina 100 (மொத்த மக்கள் தொகை 40,276,000)

5. அல்ஜீரியா – Algeria 100 (மொத்த மக்கள் தொகை 34,895,000)

6. அன்ரிகுவா-பார்புடா – Antigua and Barbuda 1,000 (மொத்த மக்கள் தொகை 88,000)

7. ஆப்கானிஸ்தான் – Afganistan 100 (மொத்த மக்கள் தொகை 28,150,000)

8. ஆர்மினியா – Armenia 300 (மொத்த மக்கள் தொகை 3,083,000)

9. ஆஸ்திரியா – Austria 1,500 (மொத்த மக்கள் தொகை 8,364,000)

10. ஆஸ்திரேலியா – Australia 100,000 (மொத்த மக்கள் தொகை 21,293,000)

11. இத்தாலி – Italy 5,000 (மொத்த மக்கள் தொகை 59,870,000)

12. இந்தியா – India 81,000,000 (மொத்த மக்கள் தொகை1,198,003,000)

13. இந்தோனீசியா – Indonesia 300,000 (மொத்த மக்கள் தொகை 229,965,000)

14. இலங்கை – Sri Lanka 6,000,000 (மொத்த மக்கள் தொகை 20,238,000)

15. இஸ்ரேல் – Israel 100 (மொத்த மக்கள் தொகை 7,170,000)

16. ஈராக் – Iraq 1,000 (மொத்த மக்கள் தொகை 30,747,000)

17. ஈரான் – Iran 500 (மொத்த மக்கள் தொகை 74,196,000)

18. உகண்டா – Uganda 100 (மொத்த மக்கள் தொகை 32,710,000)

19. உக்ரெயின் – Ukraine 500 (மொத்த மக்கள் தொகை 45,708,000)

20. உஸ்பெகிஸ்தான் – Uzbekistan 300(மொத்த மக்கள் தொகை 27,488,000)

21. எகிப்து – Egypt 1,000 (மொத்த மக்கள் தொகை 82,999,000)

22. எதியோப்பியா – Ethiopia 100 (மொத்த மக்கள் தொகை 82,825,000)

23. எமிரேட்ஸ், ஐக்கிய அரபு – United Arab Emirates 200,000 (மொத்த மக்கள் தொகை 4,595,000)

24. எரித்திரியா – Eritrea 100 (மொத்த மக்கள் தொகை 5,073,000)

25. எல்சால்வடோர் – El Salvador 100 (மொத்த மக்கள் தொகை 6,163,000)

26. எஸ்ரோனியா – Estonia 500 (மொத்த மக்கள் தொகை 1,340,000)

27. ஐஸ்லாந்து – Iceland 25 (மொத்த மக்கள் தொகை 323,010)

28. ஓமான் – Oman 50,000 (மொத்த மக்கள் தொகை 2,845,000)

29. கம்பூசியா – Cambodia 1,000 (மொத்த மக்கள் தொகை 14,805,000)

30. கயானா – Guyana 10,000 (மொத்த மக்கள் தொகை 762,000)

31. கனடா – Canada 300,000 (மொத்த மக்கள் தொகை 33,573,000)

32. கஸாக்ஸ்தான் – Kazakhstan 100 (மொத்த மக்கள் தொகை 15,637,000)

33. காட்டார் – Qatar 10,000 (மொத்த மக்கள் தொகை 1,409,000)

34. கானா – Ghana 500 (மொத்த மக்கள் தொகை 23,837,000)

35. கியூபா – Cuba 100 (மொத்த மக்கள் தொகை 11,204,000)

36. கிர்கிஸ்தான் – Kyrgyzstan 100 (மொத்த மக்கள் தொகை 5,482,000)

37. கிரிபாத்தி – Kiribati 25 (மொத்த மக்கள் தொகை 98,000)

38. கிரேக்கம் – Greece 10,000(மொத்த மக்கள் தொகை 11,161,000)

39. கினீயா – Guinea 1,000 (மொத்த மக்கள் தொகை 10,069,000)

40. கினீயா பிஸ்ஸாவ் – Guinea-Bissau 100 (மொத்த மக்கள் தொகை 1,611,000)

41. குரோசியா – Croatia 100 (மொத்த மக்கள் தொகை 4,416,000)

42. குவாதமாலா – Guatemala 100 (மொத்த மக்கள் தொகை 14,027,000)

43. குவைத் – Kuwait 10,000(மொத்த மக்கள் தொகை 2,985,000)

44. கென்யா – Kenya 300 (மொத்த மக்கள் தொகை 39,802,000)

45. கொங்கோ சயர் – Congo – Zaire 25 (மொத்த மக்கள் தொகை 66,020,000)

46. கொமொறொஸ் – Comoros 100 (மொத்த மக்கள் தொகை 676,000)

47. வட கொரியா – North Korea 100 (மொத்த மக்கள் தொகை 23,906,000)

48. தென்கொரியா – South Korea 500 (மொத்த மக்கள் தொகை 48,333,000)

49. கொலம்பியா – Colombia 500 (மொத்த மக்கள் தொகை 45,660,000)

50. சமோவா – Samoa 100 (மொத்த மக்கள் தொகை 179,000)

51. சவூதி அரேபியா – Saudi Arabia 50,000 (மொத்த மக்கள் தொகை 25,721,000)

52. சாம்பியா – Zambia 2,500 (மொத்த மக்கள் தொகை 12,935,000)

53. சான் மறினோ – San Marino 25 (மொத்த மக்கள் தொகை 31,000)

54. சிங்கப்பூர் – Singapore 300,000 (மொத்த மக்கள் தொகை 4,737,000)

55. சிம்பாப்வே – Zimbabwe 250 (மொத்த மக்கள் தொகை 12,523,000)

56. சியாரா லியோன் – Sierra Leone 1,000 (மொத்த மக்கள் தொகை 5,696,000)

57. சிரியா – Syria 500 (மொத்த மக்கள் தொகை 21,906,000)

58. சிலி – Chile 100 (மொத்த மக்கள் தொகை 16,970,000)

59. சீசெல்சு – Seychelles 9,000 (மொத்த மக்கள் தொகை 84,000)

60. சீனா – China 5,000 (மொத்த மக்கள் தொகை 1,353,311,000)

61. சுரினாம் – Suriname 130,000 (மொத்த மக்கள் தொகை 520,000)

62. சுலோவாக்கியா – Slovakia 100 (மொத்த மக்கள் தொகை 5,406,000)

63. சுலோவேனியா – Slovenia 100 (மொத்த மக்கள் தொகை 2,020,000)

64. சுவாசிலாந்து – Swaziland 5,000 (மொத்த மக்கள் தொகை 1,185,000)

65. சுவிற்சர்லாந்து – Switzerland 60,000 (மொத்த மக்கள் தொகை 7,568,000)

66. சுவீடன் – Sweden 12,000 (மொத்த மக்கள் தொகை 9,249,000)

67. சூடான் – Sudan 100 (மொத்த மக்கள் தொகை 42,272,000)

68. செக் – Czech 100 (மொத்த மக்கள் தொகை 10,369,000)

69. செர்பியா – Serbia 200 (மொத்த மக்கள் தொகை 9,850,000)

70. செனகல் – Senagal 25 (மொத்த மக்கள் தொகை 12,534,000)

71. சைப்ரஸ் – Cyprus 500 (மொத்த மக்கள் தொகை 871,000)

72. சோமாலியா – Somalia 25 (மொத்த மக்கள் தொகை 9,133,000)

73. டென்மார்க் – Denmark 15,000 (மொத்த மக்கள் தொகை 5,470,000)

74. தஜிக்கிஸ்தான் – Tajikistan 100 (மொத்த மக்கள் தொகை 6,952,000)

75. தாய்லாந்து – Thailand 10,000 (மொத்த மக்கள் தொகை 67,764,000)

76. தான்சானியா – Tanazania 250 (மொத்த மக்கள் தொகை 43,739,000)

77. துர்க்மெனிஸ்தான் – Turkmenistan 50 (மொத்த மக்கள் தொகை 5,110,000)

78. துருக்கி – Turkey 500 (மொத்த மக்கள் தொகை 74,816,000)

79. துனீசியா – Tunisia 100 (மொத்த மக்கள் தொகை 10,272,000)

80. தென் ஆபிரிக்கா – South Africa 750,000 (மொத்த மக்கள் தொகை 50,110,000)

81. தைவான் – Taiwan 100 (மொத்த மக்கள் தொகை 25,300,000)

82. நமீபியா – Namibia 25 (மொத்த மக்கள் தொகை 2,171,000)

83. நவுறு – Nauru 100 (மொத்த மக்கள் தொகை 10,000)

84. நியுசிலாந்து – New Zealand 30,000 (மொத்த மக்கள் தொகை 4,266,000)

85. நெதர்லாந்து – Netherlands 12,000 (மொத்த மக்கள் தொகை 16,592,000)

86. நேபாளம் – Nepal 500 (மொத்த மக்கள் தொகை 29,331,000)

87. நைஜர் – Niger 25 (மொத்த மக்கள் தொகை 15,290,000)

88. நைஜீரியா – Nigeria 2,500 (மொத்த மக்கள் தொகை 154,729,000)

89. நோர்வே – Norway 15,000 (மொத்த மக்கள் தொகை 4,812,000)

90. பராகுவே – Paraguay 25 (மொத்த மக்கள் தொகை 6,349,000)

91. பல்கேரியா – Bulgaria 200 (மொத்த மக்கள் தொகை 7,545,000)

92. பனாமா – Panama 500 (மொத்த மக்கள் தொகை 3,454,000)

93. பஹ்ரெயின் – Bahrain 7,000 (மொத்த மக்கள் தொகை 791,000)

94. பஹாமாஸ் – Bahamas 200 (மொத்த மக்கள் தொகை 342,000)

95. பாகிஸ்தான் – Pakistan 1,000 (மொத்த மக்கள் தொகை 180,808,000)

96. பாபுவா-நியுகினீயா – Papua-New Guinea 500 (மொத்த மக்கள் தொகை 6,732,000)

97. பார்படாஸ் -Barbados 1,000 (மொத்த மக்கள் தொகை 256,000)

98. பாலஸ்தீனம் – Palestine 200 (மொத்த மக்கள் தொகை 3,336,000)

99. பிரான்ஸ் – France 50,000 (மொத்த மக்கள் தொகை 62,343,000)

100. பிரிட்டன் – United Kingdom 300,000 (மொத்த மக்கள் தொகை 61,565,000)

101. பிரெஞ்சு கயானா – French Guyana 1,000 (மொத்த மக்கள் தொகை 170,000)

102. பிரேசில் – Brazil 100 (மொத்த மக்கள் தொகை 193,734,000)

103. பிலிப்பைன்ஸ் – Philippines 200 (மொத்த மக்கள் தொகை 91,983,000)

104. பின்லாந்து – Finland 3,000 (மொத்த மக்கள் தொகை 5,326,000)

105. பிஜி – Fiji 125,000 (மொத்த மக்கள் தொகை 849,000)

106. புர்கினோ பாசோ – Burkina Faso 100 (மொத்த மக்கள் தொகை 15,757,000)

107. புறுணை – Brunei 1,500 (மொத்த மக்கள் தொகை 400,000)

108. பூடான் – Bhutan 100 (மொத்த மக்கள் தொகை 697,000)

109. பெர்முடா – Bermuda 100 (மொத்த மக்கள் தொகை 63,000)

110. பெரு – Peru 100 (மொத்த மக்கள் தொகை 29,165,000)

111. பெல்ஜியம் – Belgium 12,000 (மொத்த மக்கள் தொகை 10,647,000)

112. பொலிவியா – Bolivia 1,000 (மொத்த மக்கள் தொகை 9,863,000)

113. பொற்சுவானா – Botswana 1,000 (மொத்த மக்கள் தொகை 1,950,000)

114. போர்த்துக்கல் – Portugal 500 (மொத்த மக்கள் தொகை 10,707,000)

115. போலாந்து – Poland 500 (மொத்த மக்கள் தொகை 38,074,000)

116. மசிடோனியா – Macedonia 100 (மொத்த மக்கள் தொகை 2,042,000)

117. மலாவி – Malawi 500 (மொத்த மக்கள் தொகை 15,263,000)

118. மலேசியா – Malaysia 2,250,000 (மொத்த மக்கள் தொகை 27,468,000)

119. மால்ரா – Malta 100 (மொத்த மக்கள் தொகை 409,000)

120. மாலி – Mali 250 (மொத்த மக்கள் தொகை 13,010,000)

121. மாலை தீவு – Maldives 2,000 (மொத்த மக்கள் தொகை 309,000)

122. மியான்மா – Myanmar 600,000 (மொத்த மக்கள் தொகை 50,020,000)

123. மெக்சிகோ – Mexico 3,000 (மொத்த மக்கள் தொகை 109,610,000)

124. மொல்டோவியா – Moldovia 25 (மொத்த மக்கள் தொகை 3,604,000)

125. மொறிசியசு – Mauritius 126,000 (மொத்த மக்கள் தொகை 1,288,000)

126. மொறித்தானியா – Mauritania 100 (மொத்த மக்கள் தொகை 3,291,000)

127. மொறொக்கோ – Morocco 100 (மொத்த மக்கள் தொகை 31,993,000)

128. மொனாகோ – Monaco 50 (மொத்த மக்கள் தொகை 33,000 )

129. யப்பான் – Japan 200 (மொத்த மக்கள் தொகை 127,156,000)

130. யேமன் – Yemen 500 (மொத்த மக்கள் தொகை 23,580,000)

131. ரஷ்யா – Russia 5,000 (மொத்த மக்கள் தொகை 140,874,000)

132. ரினிடாட்-ரொபாகோ – Trinidad and Tobago 100,000 (மொத்த மக்கள் தொகை 1,339,000)

133. லக்செம்போர்க் – Luxembourg 1,000 (மொத்த மக்கள் தொகை 486,000)

134. லற்வியா – Latvia 500 (மொத்த மக்கள் தொகை 2,249,000)

135. லாவோஸ் – Lao 1,000 (மொத்த மக்கள் தொகை 6,320,000)

136. லிதுவானியா – Lithuania 100 (மொத்த மக்கள் தொகை 3,287,000)

137. லிபியா – Libya 500 (மொத்த மக்கள் தொகை 6,420,000)

138. லெசொத்தோ – Lesotho 500 (மொத்த மக்கள் தொகை 2,067,000)

139. லெபனன் – Lebanon 5,000 (மொத்த மக்கள் தொகை 4,224,000)

140. லைபீரியா – Liberia 500 (மொத்த மக்கள் தொகை 3,955,000)

141. வங்காள தேசம் – Bangladesh 1,000 (மொத்த மக்கள் தொகை 162,221,000)

142. வத்திக்கான் நகர் – Vatican City 20 (மொத்த மக்கள் தொகை 1,000)

143. வியற்னாம் – Viet Nam 3,000 (மொத்த மக்கள் தொகை 88,069,000)

144. ஜமைக்கா – Jamaica 30,000 (மொத்த மக்கள் தொகை 2,719,000)

145. ஜிபுற்றி – Djibouti 1,000 (மொத்த மக்கள் தொகை 864,000)

146. ஜெர்மனி – Germany 40,000(மொத்த மக்கள் தொகை 82,167,000)

147. ஜோர்டான் – Jordan 4,000 (மொத்த மக்கள் தொகை 6,316,000)

148. ஜோர்ஜியா – Georgia 25 (மொத்த மக்கள் தொகை 4,260,000)

149. ஸ்பெயின் – Spain 500 (மொத்த மக்கள் தொகை 44,940,000)

http://sfrfaizur.blogspot.ca/2013/09/blog-post_1194.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எக்ஸ் ரே - X Ray

 
%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%
 
 
நாம் கீழே வழுக்கி விழுந்துவிட்டாலோ அல்லது ஏதேனும் விபத்தில் அடிபட்டுவிட்டாலோ மருத்துவரிடம் செல்வோம். அப்போது, நம்மைப் பரிசோதிக்கும் மருத்துவர், உள்ளே உள்ள எலும்புகளுக்கோ நரம்புகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய எக்ஸ் ரே எடுத்து வரச் சொல்வார். நமது உடம்பின் உள்ளே ஊடுருவிச் செல்லும் கதிர்கள் அடிபட்ட தன்மையினைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
 
இன்றைய மருத்துவ உலகில் நோயின் தன்மையை அறியப் பெரிதும் பயன்படக் கூடியதே எக்ஸ் ரே கதிரியக்க முறை. புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் இக்கதிர்கள் பெரிதும் பயன்படுகின்றன. மருத்துவ உலகிற்கு மட்டுமல்லாமல், உயர்ந்த ஆபரணங்களை மறைத்துவைத்துக் கடத்துவதைக் கண்டுபிடிப் பதற்கும், இயற்கை வைரத்தைச் செயற்கை வைரத்திலிருந்து கண்டுபிடிப்பதற்கும், பெரிய கட்டடங்கள், இரும்புப் பாலங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதைப் பார்த்துச் சரி செய்வதற்குமான பல செயல்களில் இக்கதிர்கள் பயன்படுகின்றன. இந்த எக்ஸ் ரே முறையினைக் கண்டுபிடித் தவர் ஜெர்மனியில் 1845, மார்ச் 22 இல் லௌனப் என்ற இடத்தில் பிறந்த வில்ஹம் கான்ரட் ராண்ட்ஜென் என்பவர். இவரது தந்தை விவசாயி. 1885 இல் விர்ஸ்பொர் பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
 
தனது ஆய்வுக்கூடத்தில் சில வாயுக்களை வைத்து சோதனை செய்தார். வாயுக்களிலிருந்து வெளிப்படும் மின்சாரம்பற்றிய ஆராய்ச்சியைச் செய்து பார்த்தார். இந்த ஆய்வை, ஒரு கேத்தோடு குழாயை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்போது, அந்த அறை முழுவதும் இருட்டாக இருந்தது. கருப்புக் காகிதத்தால் கேத்தோடு குழாயையும் மூடி வைத்திருந்தார். அந்தக் குழாய்க்கு அருகிலிருந்த பிளாட்டிளா சையனைட் படிகம் வெளிச்சம்பட்டு மின்னியுள்ளது. ஆச்சரியத்தில் மூழ்கினார்.
 
குழாயிலிருந்து ஏதோ கதிர் ஒன்று வெளிப்பட்டு குழாயை மீறி, மூடி வைத்திருந்த கருப்புக் காகிதத்தையும் தாண்டி வந்திருக்க வேண்டும் எனக் கணித்தார். கண்களுக்குப் புலப்படாதவையாக இருந்த இந்தக் கதிர்கள் அதுவரையிலும் புதிதாகக் கண்டுபிடிக்கப்படாததால் எக்ஸ் ரே எனப் பெயர் வைத்தார்.
 
எல்லா ஒளிக்கதிர்களும் போட்டோ தகடுகளில் படியும் தன்மை கொண்டுள்ளதால் இவர் கண்டுபிடித்த கதிர்களையும் தகடுகளில் பதியவைக்க ஆசைப்பட்டார். எனவே, இக்கதிர்களை போட்டோ தகட்டில் வைத்திருந்த மனைவி கை மீது செலுத்திப் பார்த்தார். செலுத்தியபின் அந்தத் தகட்டிலுள்ள கருவியைப் பார்த்தார்.
 
அதில், அவரது மனைவியின் கை எலும்புகளும் அவர் அணிந்திருந்த மோதிரமும் தெரிந்தன. 1895 இல் - தனது 50 ஆவது வயதில் இந்த அற்புதத்தை நிகழ்த்தினார்.
 
இவரது இந்தக் கண்டுபிடிப்புக்காக 1901 இல் உலகின் இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 
இக்கதிர் அடிக்கடி ஊடுருவினால் உடலுக்குப் பெரும் பாதிப்பு உண்டாகும். ராண்ட்ஜென் மற்றும் அவருடன் ஆராய்ச்சி செய்தவர்கள் எக்ஸ் ரே கதிர்களின் பாதிப்பினாலேயே உயிரிழந்துள்ளனர்.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுகளுக்கு நன்றி நுணா.

  • கருத்துக்கள உறவுகள்

 நான் படிக்கிற காலத்திலேயே   எனக்கு மிகமிகப் பிடித்த தலைவர் காமராசர் !  :D

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2 TOUGH QUESTIONS

VERY INTERESTING.. READ ON...

Question 1:
If you knew a woman who was pregnant, who had 8 kids already, three who were deaf, two who were blind, one mentally handicapped, and she had syphilis, would you recommend that she have an abortion? Read the next question before looking at the response for this one.

Question 2:
It is time to elect a new world leader, and only your vote counts. Here are the facts about the three candidates.

Candidate A.
Associates with crooked politicians, and consults with astrologist. He's had two mistresses. He also chain smokes and drinks 8 to 10 martinis a day.

Candidate B.
He was kicked out of office twice, sleeps until noon, used opium in college and drinks a quart of whiskey every evening.

Candidate C.
He is a decorated war hero. He's a vegetarian, doesn't smoke, drinks an occasional beer and never cheated on his wife.

Which of these candidates would be your choice? Decide first... no peeking, then scroll down
for the response.

-------------------------------------------------------------

Candidate A is Franklin D. Roosevelt.
Candidate B is Winston Churchill.
Candidate C is Adolph Hitler.
And, by the way, on your answer to the abortion question: If you said YES, you just killed Beethoven.

Pretty interesting isn't it? Makes a person think before judging someone. Wait till you see the end of this note! Keep reading...

Never be afraid to try something new.
Remember: Amateurs...built the ark.
Professionals...built the Titanic

And Finally, can you imagine working for a company that has a little more than 500 employees and has the following statistics:

* 29 have been accused of spousal abuse
* 7 have been arrested for fraud
* 19 have been accused of writing bad checks
* 117 have directly or indirectly bankrupted at least 2 businesses
* 3 have done time for assault
* 71 cannot get a credit card due to bad credit
* 14 have been arrested on drug-related charges
* 8 have been arrested for shoplifting
* 21 are currently defendants in lawsuits
* 84 have been arrested for drunk driving in the last year...
Can you guess which organization this is?

Give up yet?
It's the 535 members of the United States Congress. The same group that crank out hundreds of new laws each year designed to keep the rest of us in line.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1394226_669589063059600_2138058715_n.jpg

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கேஸ் (கச்) திறந்து பற்ற வைத்த உடனே அடுப்பு நமது உபயோகத்துக்கு தயாராகிவிடுகிறது. வெளியே வரும் கேஸ் மட்டும் ஏன் எரிகிறது?சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றிக் கொள்வதில்லை?
 
நாம் சமையலுக்கு உபயோகிக்கும் கேஸ் என்-பியூட்டேன் (ண்-BஊTஆணே) என்ற எரிபொருள். எந்த ஒரு எரிபொருளாக இருந்தாலும், அது எரிய வேண்டுமானால் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.
 
ஒன்று அந்த எரிபொருள் தான் பற்றிக்கொள்ளும் வெப்பநிலையை (ஈக்னிடிஒன் பொஇன்ட்) அடைய வேண்டும்.இரண்டு எரிவதற்குத் தேவையான பிராண வாயு, ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைக்க வேண்டும்.
 
நமது கேஸ் அடுப்பில் என்ன நிகழ்கிறது? சமையல் வாயு பற்றிக்கொள்ளும் வெப்பநிலை 360 ஒC ஆகும்.சிலிண்டர் வால்வைத் திறந்ததும் கேஸ் வெளியேறி அடுப்பின் பர்னர் பகுதியை வந்தடைகிறது. அப்போது ஒரு தீக்குச்சியால் அல்லது லைட்டரால் பற்ற வைக்கும்போது சமையல் வாயு 360 ஒC வெப்பத்தை அடைந்து பற்றிக் கொள்கிறது அடுப்பைச் சுற்றிலும் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பதால் தொடர்ந்து எரிகிறது. 
 
சிலிண்டரின் உள்ளே உள்ள கேஸ் பற்றிக் கொள்ள வெப்பமும் , ஆக்சிஜனும் சிலிண்டரின் உள்ளே செல்ல வேண்டும். பர்னர் பகுதியிலிருந்து வெப்பம் ரப்பர் டியூப்களைத் தாண்டி சிலிண்டரின் வாய் பகுதியை அடைந்து உள்ளே பரவ வேண்டும். இது முற்றிலும் சாத்தியமில்லை.சிலிண்டரின் உள்ளே உள்ள கேஸ் மிக மிக உயர்ந்த அழுத்தத்துடன் உள்ளே அடைக்கப்பட்டுள்ளது. எனவே சிலிண்டரின் உள்ளே இருக்கும் அழுத்தம் வெளியிலுள்ள சுற்றுப்புற அழுத்தத்தை (ஆத்மொச்ப்ஹெரிc Pரெச்சுரெ) பல மடங்கு அதிகம். எனவே வெளியிலிருந்து அழுத்தம் குறைந்த ஆக்சிஜன் அழுத்தம் அதிகம் உள்ள சிலிண்டரின் உள்ளே நுழைவது சாத்தியமில்லை. 
 
இந்த இரு காரணங்களால் சிலிண்டரின் உள்ளே இருக்கும் எரிபொருள் பற்றிக்கொள்ளும் வாய்ப்பே இல்லை.
 
பாலைக் காய்ச்சும்போது அது ஏன் பொங்கி வருகிறது? 
 
பால் என்பது தண்ணீர், புரதம் , மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் பல தாதுப் பொருட்கள் அடங்கிய கலவை. பாலில் உள்ள கொழுப்பின் அடர்த்தி (Dஏண்ஸீTY) தண்ணீரின் அடர்த்தியைவிட குறைவாக இருப்பதால் பாலின் மேற்ப்பரப்பில் அவை மிதக்கின்றன. தண்ணீரின் கொதிநிலை வெப்பம் 100 ஒC. ஆனால், பாலில் உள்ள கொழுப்பு 50 ஒcல் உருக ஆரம்பித்துவிடும். பாலை காய்ச்சும்போது 50 ஒC நிலை வரும்போதே பாலில் உள்ள கொழுப்பு உருகி, மேற்ப்பரப்பில் வந்து ஒரு மெல்லிய படலமாகப் படர்ந்து நிற்கிறது. எந்த ஒரு திரவத்தைக் கொதிக்க வைத்தாலும் அந்தத் திரவத்திலிருந்து காற்றுக் குமிழ்கள் தோன்றி மேலே கிளம்பி வரும். பால் சூடாகும் போதும் காற்றுக் குமிழ்கள் உருவாகி மேலே வரும். மேற்ப்பரப்பில் கொழுப்புப் படலம் ஏடாகப் படிந்து இந்தக் குமிழ்கள் வெளியேறுவதை தடை செய்வதால், சிறு சிறு குமிழ்கள் ஒன்றாக இணைந்து பெரிய காற்றுக் குமிழ்களாக மாறி அந்த ஏட்டுப் படலத்தோடு மேலெழும்பி பொங்கி வழிகிறது. 
 
தொடர்ந்து துலாவிக்கொண்டே இருந்தால் பால் பொங்கி வழிவதில்லை ஏன்?
 
பாலை ஒரு கரண்டியால் தொடர்ந்து துலாவிக் கொண்டேயிருந்தால் 
மேற்ப்பரப்பில் ஏடு படிவது தடுக்கப் படுகிறது. தோன்றும் காற்றுக் 
குமிழ்கள் வெளியேறிவிடும் எனவே பால் பொங்கி வழிவது தடுக்கப்படுகிறது. 
 
 தண்ணீரைக் காய்ச்சினால் ஏன் பொங்குவதில்லை? 
 
தண்ணீரில் கொழுப்போ, மாவுச்சத்தோ, புரதங்களோ இல்லை. எனவே மேற்ப்பரப்பில் ஏடு எதுவும் படிவதில்லை. காற்றுக் குமிழ்கள் தடையின்றி வெளியேறலாம். எனவே நீரை கொதிக்க வைக்கும்போது அது பொங்குவதில்லை.
 
பீங்கான் அல்லது கண்ணாடி கப்பில் சூடான பானங்களை 
விடும்போது சூட்டினால் கப் உடைந்துபோவதுண்டு ஏன்?
 
வெப்பத்தால் பொருட்கள் விரிவடையும். கன்ணாடி கப்பில் 
சூடான பானங்களை ஊற்றும்போது , கப்பின் உட்பகுதி முதலில் 
வெப்பத்தால் விரிவடைகிறது. வெப்பம் சிறிது சிறிதாகப் பரவி சற்று 
தாமதமாகவே வெளிப்பகுதி விரிவடையும். சூடு அதிகம் இருந்தால்
உட்பரப்பு முதலில் விரிவடைந்து , வெளிப்பரப்பு விரிவடைய 
தாமதமாகும்போது கப் உடைந்து விடுகிறது.
 
ஒரு எவர்சில்வர் கரண்டியை கப்பில் வைத்துவிட்டு, பின்னர் சூடான 
பானத்தை ஊற்றினால் கப் உடையும் வாய்ப்பு குறையும். ஏன்?
 
பெரும்பான்மையான உலோகங்களும் கண்ணாடி அல்லது பீங்கானைவிட வெப்பத்தை அதிகமாகக் கடத்தும் தன்மையுள்ளவை. ஒரு எவர்சில்வர் அல்லது வெள்ளிக் கரண்டியை கப்பினுள் வைத்துவிட்டு பின்னர் சூடான பானத்தை ஊற்றும்போது அந்தக் கரண்டி பெருமளவில் வெப்பத்தை கிரகித்துக் கொள்வதால் கப் சூடாவதும் விரிவடைவதும் குறைகிறது. எனவே கப் உடையும் வாய்ப்பும் கணிசமாக குறைந்து போகிறது.
 
ஒரு பெரிய ஐஸ் கட்டியைக் காற்றில் திறந்து வைத்தால் அதிலிருந்து 
வெண்ணிறமான புகை (FஊMஏஸ்) கிளம்புகிறது அல்லவா? ஏன்? இது ஏதேனும் வாயுவா? 
 
ஐஸ் கட்டியிலிருந்து எந்த வாயுவும் வெளியேறுவதில்லை. ஐஸ் கட்டியை திறந்து வைக்கும்போது ஐஸ்ஸைச் சுற்றியுள்ள காற்று குளிர்வடைகிறது. ஒரு அளவிற்கு மேல் குளிர்வடையும்போது அந்தக் காற்றிலுள்ள ஈரப்பதம் (Mஓஈஸ்Tஊறே) மிக நுண்ணிய நீர்த்திவலைகளாக மாறுகிறது. அறையிலுள்ள காற்று மேலும் கீழுமாக நகரும்போது (Cஓண்VஏCTஈஓண் Cஊற்றேண்Tஸ்), இந்த நீர்த்திவலைகளும் நகருவதால் புகை போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
 
வெளவால் தலைக் கீழாகத் தொங்குவது ஏன்? 
வெளவால்களின் இறக்கைகள் 6 அங்குலம் முதல் 6 அடி வரை நீண்டிருக்கும். அவற்றின் கால்களுக்கு போதிய வலிமைக் கிடையாது. அதனால், வெளவால்களால் நீண்ட நேரம் நிற்கவோ நடக்கவோ முடியாது. மற்ற பறவைகளைப் போல் இவற்றால் பூமியில் இருந்து மேலெழும்பி பறக்க முடியாது. அதற்க்கு அவற்றின் போதிய வளர்ச்சியற்ற கால்களும், அதிக கனமான இறக்கைகளும்தான் காரணம். தலைக் கீழாகத் தொங்குவது வெளவால்களுக்கு செளகரியமாக இருக்கிறது. ஆபத்தில் இருந்து 
தப்பிக்க உதவுகிறது. இவ்வாறு தொங்கும் போது வெளவால்களுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுவதில்லை. உடனடியாகப் பறப்பதும் எளிதான விஷயமாக உள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ளவை பகிர்ந்த நுணாவுக்கு நன்றி.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
சே குவேரா மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்
 
 
che.jpg
அன்புள்ள ஹில்டா,

இந்த கடிதத்தை நீ நீண்ட காலத்துக்குப் பிறகுதான் படிப்பாய். உன்னைப் பற்றித்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீ இப்போது வளர்ந்து விட்டிருப்பாய். ஒரு குழந்தைக்கு எழுதுவதைப் போல் செல்லம் கொஞ்சி எழுத முடியாது.

நான், உன்னை விட்டு வெகு தொலைவில், நமது எதிரிகளோடு போரிட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான், உன்னைப் பற்றிப் பெருமையாக நினைத்துக் கொள்வதைப் போல், நீயும் என்னை நினைத்து பெருமை படுவாய் என்பது என் நம்பிக்கை.

நீண்ட காலத்துக்குப் போராட வேண்டியிருக்கிறது. ஆகையால், நீயும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். உன்னைத் தயார் செய்து கொள். புரட்சிகர எண்ணங்களை வளர்த்துக் கொள். நிறைய படி. அம்மா சொல் பேச்சைக் கேள்.

எல்லா விதத்திலும் சிறந்தவள் என்று பெயர் எடுக்க வேண்டும். நல்ல நடத்தை, அர்ப்பணிப்பு, தோழமை உணர்வு போன்றவற்றை வளர்த்துக் கொள். உன்னுடைய வயதில் நான் அப்படி இல்லை. நீ வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். அதற்கு பொருத்தமானவளாக நீ இருக்க வேண்டும்.

பெரிய மனுஷியே! உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னைப் பிரிந்திருக்கும் காலத்துக்கும் சேர்த்து வைத்து ஆரத் தழுவிக் கொள்கிறேன்.

அப்பா -
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பிகாசோ என்ன இப்படிச் சொல்கிறார் ?!
 
picasso.jpg
 
ஓவிய மேதை பிகாசோ, ஸ்பெயின் நாட்டில் பிறந்து, பிரான்ஸில் குடியேறியவர். 60 ஆண்டுகளாக ஓவியத்துறையில் பற்பல புதிய உத்திகளைக் கையாண்டு, தமது எண்ணங்களுக்கும், உள்ளத்து எழுச்சிகளுக்கும் உருவம் கொடுத்தவர்.
 
சித்திரக் கலையில் 'கியுபிஸம்', 'ஸர்ரியலிஸம்' போன்ற நவீன பாணிகளுக்குத் தந்தையாகக் கருதப்படுபவர்.
 
அவர், தமது கலைத் திறமையை பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டு, கலை உலகத்தையே பரப்படையச் செய்துள்ளார்.
 
அது என்ன அறிக்கை?
 
"இப்போதெல்லாம் மக்கள் ஓவியக் கலையிலிருந்து மன அமைதியையோ புத்துணர்வையோ பெறுவதில்லை. ஆனால் 'கௌரவமான' மனிதர்கள், பணக்காரர்கள், வேலையற்ற சோம்பேறிகள் ஆகியோர் எப்போதும் புதியவை, மிகையானவை, அவமானகரமானவை ஆகியவற்றையே விரும்புவார்கள்.
 
அவர்களையெல்லாம், என் மனதுக்குத் தோன்றிய விசித்திரச் சித்திரங்களின் மூலம் நான் திருப்திப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எவ்வளளவு குறைவாக அவர்கள் என் ஓவியங்களைப் புரிந்துகொள்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அதைப் புகழ்வார்கள்!
 
அர்த்தமற்ற இந்தச் சித்திர விளையாட்டுகளின் மூலம், நான் வெகு விரையில் புகழ் பெற்றவன் ஆனேன். ஓர் ஓவியனுக்குப் புகழ் என்றல், அவன் ஓவியங்களுக்கு விற்பனை அதிகம். அதன் மூலம் அவனுக்குச் செல்வம் குவியும். அப்படித்தான் நான் இன்று பெரும் பணக்காரனாகி இருக்கிறேன். பிரபல ஓவியர்களான கியாடோ, டிஷியன், ரெம்ப்ராண்ட், கோயா ஆகியவர்களைப் போல ஓவியன் என்ற சொல்லுக்கு நான் அருகதை உள்ளவன்தானா என்று ஐயம் எழுகிறது. என்னை ஓர் ஓவியனாக எண்ணிக்கொள்ளவே எனக்குத் துணிவு பிறக்கவில்லை. காலத்தின் மதிப்பை உணர்ந்த ஒரு பொது ஜன பொழுதுபோக்குக் கலைஞன் தான் நான்!" 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலையா ? பூவா ? டாஸ் போட்டு பார்க்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது ?
1385857_236029283226109_823467248_n.jpg
கி.மு. 10 ல் முதல் நாணயம் லித்தியன்களால் (இந்தோ- ஐரோப்பியன்) உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 900 ஆண்டுகளுக்குப்பிறகு தான் வெற்றி, தோல்வி நிர்ணயிக்க தலையா, பூவா - டாஸ் போட்டு பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது.

அதாவது, ஜூலியஸ் சீசர் காலத்தில் உபயோகத்தில் இருந்த நாணயத்தில் அவரின் தலை (முகம்) ஒரு பக்கத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும் பட்சத்தில் பேரரசர் இல்லாத போது அவரின் சார்பாகவும், கடவுளின் சாட்சியாகவும் நாணயத்தைத் தூக்கிப் போட்டு மேல் பாகத்தில் தலை பக்கம் விழுந்தால் சரியா ? தவறா ? என இவர்கள் கேட்ட கேள்வியின் பதிலாக எடுத்துக் கொண்டார்கள்.

டாஸ் இல்லாத கிரிகெட்டை நினைத்துப் பார்க்க முடியுமா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான தகவல்களுக்கு நன்றி நுணாவில்  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்படி கிறிக்கட் பந்து தயாரிக்கப்படுகிறது?

 

 

 
https://www.facebook.com/photo.php?v=251779454984425
 
 
 
 
 
வரவுக்கு நன்றி கு.மா அண்ணா.

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
வேலூர் புரட்சி ஒரு கண்ணோட்டம்
 
இப்பொழுது உள்ள இளைங்கர்களுக்கு வேலூர் புரட்சியைப் பற்றி அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே வரலாறை நாம் படித்திருக்கிறோம்....அதை இப்பொழுது எண்ணிப் பார்த்தால் வருத்தமாகத்தான் உள்ளது. இப்பொழுது இந்த வேலூர் புரட்சியைப் பற்றி சற்று படிப்போமே!!! 1806 ம் ஆண்டு ஜூலை 10 ம் தேதி வேலூர் கோட்டையிலிருந்த இந்திய சிப்பாய்கள், வெள்ளையர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர். இந்தப் புரட்சியே வேலூர் புரட்சி எனப்படுகிறது. புரட்சிக்கு என்ன காரணம்? 1799ம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்புசுல்தானுக்கும் நிஜாம் மற்றும் மராட்டியர்கள் ஆதரவு பெற்ற பிரிட்டிஷ் படைக்கும் போர் நடைபெற்றது. இதில் திப்பு கொல்லப்பட்டார். இது தென்னிந்தியா முழுவதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்த பாளையக்காரர்கள் அனைவரும் இணைந்து 1800௧801 ஆண்டுகளில் தொடர்ந்து புரட்சி நடவடிக்கைகளில் இறங்கினர். இதில் திப்புசுல்தானின் மகன்களும் பங்கு கொண்டனர். திப்புவின் குடும்பத்தினர் அனைவரும் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். இதனால் வேலூர் நகரம் புரட்சியின் மையப்பகுதியாக விளங்கியது. இதே நேரத்தில் இந்திய சிப்பாய்களுக்கு ஆங்கில அரசு பல புதிய உத்தரவுகளை பிறப்பித்தது. “மாட்டுத்தோலினால் செய்யப்பட்ட பன்றிக்கொழுப்பு தடவப்பட்ட தலைப்பாகை அணிய வேண்டும், மீசையின் அளவை குறைக்க வேண்டும், தாடி வளர்க்கக்கூடாது” போன்ற கட்டளைகள் இஸ்லாமிய சிப்பாய்கள் மத்தியிலும், திருநீறு அணியக்கூடாது போன்ற கட்டளைகள் இந்திய சிப்பாய்கள் மத்தியிலும் பெரிய கொந்த்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக 1806 ஜூலை 10 ம் தேதி அதிகாலை 2 மணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் புரட்சி வெடித்தது. வேலூர் கோட்டைக்குள் அணிவகுத்துச் சென்ற இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேய படைத்தளபதிகளை சுட்டுக்கொன்றனர். பீரங்கிகளால் தாக்கிக்கொண்டே முன்னேறினர். இந்திய சிப்பாய்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்த கர்னல் மிக்கிராங் சுட்டுக்கொல்லப்பட்டான். மூன்றே மணிநேரத்தில் புரட்சியாளர்கள் கோட்டையை கைப்பற்றினர். திப்புவின் புலிக்கொடியை கோட்டையில் ஏற்றினர். சிலமணி நேரங்களில் ஆற்காட்டிலிருந்தும் மற்ற பகுதிகளில் இருந்தும் வந்த ஆங்கிலேயப் படை வேலூர் கோட்டையை மீண்டும் கைப்பற்றியது. அதில் மூவாயிரம் புரட்சியாளர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். பிடிபட்ட ஆயிரக்கணக்கான சிப்பாய்களுக்கு ஆங்கிலேய அரசு மரணதண்டனை வழங்கியது. புரட்சி தோல்வியுற்றாலும் ஆங்கிலேய அரசிற்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியதாலும், இந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டியதாலும் இந்தப்புரட்சி வரலாற்றின் பக்கங்களில் அழுத்தமாக பதிந்துபோனது.
  • கருத்துக்கள உறவுகள்

எக்ஸ் ரே - X Ray

 
%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%
 

 

 

தனது 50 வயதிற்குள்... உலகமக்கள் அனைவருக்கும் ப‌யன்படும் படியான, எக்ஸ் றே கதிர்ப்படத்தை கண்டு பிடித்த ரொன்ஞன் ஒரு சாதனையாளர்.

பல அரிய தகவல்களை இப்பகுதியில் இணைக்கும் நுணாவிலானுக்கு, நன்றி.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
எத்தனை பெரிய எண்ணையும் 5ஆல் ஒரே வரியில் வகுக்க முடியும்.
உதாரணம்: 123456789 எண்ணை தேர்வு செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போ இந்த எண்ணை 5ஆல் வகுக்க வேண்டும். அதுக்கு தேர்வு செய்த எண்னை 2 ஆல் பெருக்க வேண்டும்.
123456789 X 2 = 246913578 என்று வரும். கடைசி இலக்க எண்ணுக்கு முன்னர் தசம குறியீடு போட வேண்டும். இதுதான் விடை. 24691357.8.
இதே போல் எந்த எண்ணாக இருந்தாலும் இரண்டால் பெருக்கி வரும் விடையின் கடைசி எண்ணுக்கு முன்னர் தசம குறியீடு ( புள்ளி ) போட வேண்டும்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
விமான விபத்துக்களில் பலியான உலக அரசியல் தலைவர்கள்
 
polish-president-plane-crash-305.jpg

கடந்த 10ம்திகதி ரஷ்யாவில் இடம்பெற்ற விமானவிபத்தொன்றில் போலந்து நாட்டின் ஜனாதிபதி லெச் கக்ஸின்ஸ்கி உட்பட மேலும் 95 பேர் பலியாகினர். அந்தவகையில் விமான விபத்துக்களில் பலியான உலக நாடுகளின் அரசியல் தலைவர்கள் தொடர்பான விபரங்கள்.....

1) அர்விட் லிண்ட்மன் - சுவீடன் நாட்டின் பிரதமர் [1906-11 & 1928-1930 வரை பதவி வகித்தவர்] - 1936ம் ஆண்டு விமானவிபத்தில் பலியானார்.

2) வல்டிசிலாவ் சிகோஸ்கிபோலந்து நாட்டின் பிரதமர் - 1943ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

3) ரமொன் மக்சசெய்பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி-1957ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

4) வர்திலெமி வொகண்டா - மத்திய ஆபிரிக்க குடியரசின்1வது பிரதமர் - 1959ம் ஆண்டு விமான விபத்தில்பலியானார்.

5) அப்துல் சலாம் அரிப் - ஈராக் நாட்டின் ஜனாதிபதி - 1966ம்ஆண்டு ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார்.

6) ரெனி வெரியன்ரோஷ் - பொலிவியா நாட்டின் ஜனாதிபதி - 1969ம் ஆண்டு ஹெலிகொப்டர் விபத்தில் பலியானார்.

7) ஜொய்ல் ரகோடொமலாலாமடகஸ்கார் நாட்டின் பிரதமர்- 1976ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

8) சிமல் வைஜிடிக் - யுகோஸ்லாவியா நாட்டின் பிரதமர் - 1977ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

9) அமேட் ஓல்ட் வசீவ் - மொரிரேனியா நாட்டின் பிரதமர் - 1979ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

10) பிரான்ஸ்சிஸ்கோ சா கர்னிரோபோர்த்துக்கல் நாட்டின்பிரதமர் - 1980ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

11) ஜய்மி ரொல்டோஸ் எகுலெராஈக்குவடோர் நாட்டின்ஜனாதிபதி - 1981ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

12) சமோரா மாகெல்மொசாம்பிக் நாட்டின் ஜனாதிபதி-1986ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

13) முஹமட் சியா-உல்-ஹக்-பாகிஸ்தான் நாட்டின்ஜனாதிபதி - 1988ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

Muhammad_Zia-ul-Haq.jpg

14) சைபிரியென் ரர்யமிராபுருண்டி நாட்டின் ஜனாதிபதி - 1994ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

15) ஜுவெனல் ஹவிரிமனாருவாண்டா நாட்டின் ஜனாதிபதி- 1994ம் ஆண்டு விமான விபத்தில் கொலைசெய்யப்பட்டார்.

16) வொரிஸ் ரஜ்கோவ்ஸ்கிமசிடோனியா நாட்டின்ஜனாதிபதி - 2004ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

17) ஜோன் கரங்சூடான் நாட்டின் உப ஜனாதிபதி - 2005ம்ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

18) லெச் கக்ஸின்ஸ்கி - போலந்து நாட்டின் ஜனாதிபதி - 2010ம் ஆண்டு விமான விபத்தில் பலியானார்.

KaczynskiTN.jpg


குறிப்புக்கள் -

 முஹம்மட் பின் லேடன் [ எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரிஇருக்கின்றதாஆம்... 9/11 தாக்குதல் சூத்திரதாரியானஒசாமா பின் லேடனின் தந்தையார் ] இறந்ததும்விமானவிபத்தில் தானாம். {1967ல் சவூதி அரேபியாவில்}

 கென்சி குரன்ஜே - தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின்தலைசிறந்த தலைவராக விளங்கியவர்கிரிக்கெட் பந்தயகுற்றச்சாட்டுக்களின் காரணமாக ஆயுட்காலதடைக்குள்ளாகியவர்இவர் இறந்ததும் விமானவிபத்தில்தான். {2002ல் தென்னாபிரிக்காவில்}

 

  • கருத்துக்கள உறவுகள்

போலந்து நாட்டின் பிரதமரும், ஜனாதிபதியும் 67 ஆண்டு இடைவெளியில்... விமான விபத்தில் பலியாகி உள்ளார்கள்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தெரிந்து கொள்ள
வேண்டிய தஞ்சை பெரிய
கோவிலின் சிறப்புகள் : 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: :::::::::::

வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத
பெருமை நிறைய
தஞ்சை கோவிலுக்கு உண்டு, அந்த
சிறப்பம்சங்கள் ...

* கோவிலில் உள்ள
நந்தி சிலையானது முழுவதும்
ஒரே பாறையில் செதுக்கப்பட்டதா
கும்... 

* 1003 வருடங்கள் ஆனாலும்
பழமை மாறாமல்
இருப்பது இன்னொரு பெருமை.

* ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரூபாய்
நோட்டு, நாணயம், மற்றும் அஞ்சல்
துறை வெளியிட்ட அஞ்சல் தலை,
ஆகியவற்றில் நம் பெரிய கோவில்
உள்ளது, இவை மூன்றிலும் இடம்
பெற்ற ஒரே கட்டிடம், தஞ்சை கோவில்
மட்டுமே.

* இன்று தமிழகத்தின் மிக
முக்கியமான சுற்றுலாத்தலமாக
விளங்கும் இது 1987ம்
ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி,
அறிவியல்,
பண்பாட்டு நிறுவனத்தால் உலக
பாரம்பரிய சின்னமாக
அறிவிக்கப்பட்டது.

* இக்கோவிலின் மிகப்பெரிய
சிறப்பு, இக்கோவிலின் மேல்
இடம்பெற்றுள்ள கோவில் கலசம்,
கீழே உள்ள சிவன்
லிங்கத்திற்கு துல்லியமாக
நேர்க்கோட்டில் அமைந்திருப்பது...

* இங்குள்ள சிவ லிங்கம்
மூலஸ்தானத்தின் நிலை கதவைவிட
பெரிதானது, அப்படியானால்
லிங்கத்தை வைத்தபிறகு கோவிலை கட்டினார்களா,
அப்படி இ
ருந்திருக்க

முடியாது காரணம் ஆகம
விதிப்படி கட்டப்பட்ட இந்த
கோவிலில்
லிங்கத்தை கடைசியகதான்
பிரதிஷ்டை செய்திருக்கவேண்டும்.
அப்படியானால்
அவர்களுக்கு லிங்கத்தை சிறிதாக்கி உள்ளே எடுத்துசென்று பெரிதாக்கும்
வித்தை தெரிந்திருக்கவேண்டும்.

* இங்குள்ள முருகன் சன்னதியில் உள்ள
சிற்பங்களில், மெல்லிய
முடி மட்டுமே செல்லும்
அளவுக்கு சிறிய துளைகள்
செய்துள்ளார்கள்.

இன்னும் நமக்கு தெரியாமல்
எத்தனை ரகசியங்களை மறைத்து வைத்திருக்குறார்
அந்த ராஜ ராஜ சோழன்...

 

fb

Edited by nunavilan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.