Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மால் ஆஃப் அமெரிக்கா(mall of America)

 

 MOA_J2017_8_620x319.jpg

 

மினசோட்டாவின் பெருமைகளில் ஒன்றான மால் ஆஃப் அமெரிக்காவிற்கு இது வெள்ளி விழா ஆண்டு. அப்படியென்ன பெருமை என்றால், அமெரிக்காவின் மிகப் பெரிய அங்காடி வளாகம் என்ற பெயரைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சூடிக் கொண்டு நிற்கிறதே.

மினியாபொலிஸ் வாசிகளுக்கு இந்த மால் மேல் எந்தளவு க்ரேஸ் இருக்கிறதோ தெரியாது, இங்கு வரும் வெளியூர் விருந்தினர்களுக்கு இதன் மேல் பெரும் ஆர்வம் இருக்கும். மினியாபொலிஸில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னும் லிஸ்டில் இது கண்டிப்பாக இருக்கும். இதன் முக்கியச் சிறப்பம்சம், இந்த மாலின் நடுவே இருக்கும் நிக்கலோடியன் யூனிவர்ஸ் (Nickelodeon Universe) உள்ளரங்குக் கேளிக்கைப் பூங்கா.

MOA_J2017_2_620x349.jpg

MOA_J2017_7_620x349.jpg

குழந்தைகளைக் கவரும் கேளிக்கை விளையாட்டுப் பூங்கா இது. உள்ளரங்கில் இருப்பதால், மழை, வெயில், பனி என்று எவ்விதத் தடங்கலும் இல்லாமல், வருடம் முழுக்கச் சென்று விளையாடுவதற்கு ஏற்ற இடம் இது. குளிர்காலத்தில் வெளியே எங்கே செல்வது என்று குழப்பமில்லாமல், ஒருநாள் முழுக்க நேரத்தைக் கழிப்பதற்கு, இவ்விடம் உதவும். இந்த மால் வளாகத்திற்குள்ளோ அல்லது இந்த விளையாட்டுத் திடலுக்கோ நுழைய எந்தக் கட்டணமும் இல்லை. விளையாடுவதற்குத் தனித்தனியாக டிக்கெட்டோ, அல்லது ஒருநாள் முழுக்க அனுமதி அளிக்கும் கை வளையமோ (Wristband) வாங்கிக்கொண்டு செல்லலாம். ஒருநாள் அனுமதி வாங்கினால், எதில் வேண்டுமானாலும், எவ்வளவு முறை வேண்டுமானாலும் விளையாடிக் கொள்ளலாம். அங்கு சென்று வாங்குவதை விட, இணையத்தில் வாங்கினால் கொஞ்சம் சீப்பாகக் கிடைக்கும். அதைவிட மலிவாகக் காஸ்கோவில் (Costco) கிடைக்கும்.

MOA_J2017_6_620x349.jpg

MOA_J2017_5_620x349.jpg

இங்கு குழந்தைகளைக் கவரும் மற்றொரு இடம் – சீ லைஃப் அக்வாரியம் (SeaLife Aquarium). இது ஒரு கடல்வாழ் உயிரினங்களின் அழகிய கண்காட்சிச் சாலை. நட்சத்திர மீன், கடல் குதிரை போன்ற காண்பதற்கு அரிய உயிரினங்களை இங்குக் காணலாம். நட்சத்திர மீன் போன்றவற்றைத் தொட்டுக் கூடப் பார்ப்பதற்கு வாய்ப்புக் கொடுப்பார்கள். இங்குக் கடலுக்கு அடியில் மீன்களுடன் சேர்ந்து நடக்கும் உணர்வை அளிக்கும் கடல் சுரங்கப்பாதை (Ocean Tunnel) பார்வையாளர்களைக் கவரும். இந்த இடத்தில் இரவு முழுக்க விட்டத்தில் மீன்கள் அங்குமிங்கும் சென்று வருவதைப் பார்த்துக் கொண்டே, ஒரு குழுவாக உறங்குவதற்குத் திட்டம் வைத்திருக்கிறார்கள். கடலுக்கு அடியில் தூங்க முடியுமா என்று யோசிப்பவர்கள், இதை முயற்சித்துப் பார்க்கலாம்.

மால் ஆஃப் அமெரிக்காவில் இவை சிறார்களைக் கவரும் அம்சம் என்றால், பெண்களைக் கவரும் அம்சமாகப் பல கடைகள் உள்ளன. மொத்தம் ஐநூறுக்கும் மேற்பட்ட கடைகள். பரப்பளவில் மட்டுமல்ல, கடைகளின் எண்ணிக்கையிலும், அமெரிக்காவின் பெரிய மால் இது தான். மேசிஸ், சியர்ஸ், நார்ட்ஸ்ராம், மார்ஷல்ஸ், ஓல்ட் நேவி, ஃபாரெவர் 21 முதலிய பெரிய உடை அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்குமான கடைகளும், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், பெஸ்ட் பை போன்ற தொழில்நுட்பக் கடைகளும் இங்கே அமைந்துள்ளன. ஒரு பக்கம் பெண்களையும், மறுபக்கம் குழந்தைகளையும் அனுப்பிவிட்டுவிட்டு, ஆண்கள் இன்னொரு பக்கம் வருவோர் போவோரைப் பராக்குப் பார்க்கலாம்!!

திருமணம் செய்யும் திட்டம் உள்ளவர்கள், இங்கிருக்கும் காதல் தேவாலயத்தை (Chapel of Love) ஒரு முறை சென்று பார்க்கவும். இது வரை இங்கு 7500 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன. திருமணத்திற்குத் தேவையான உடைகளும் பிற பொருட்களும் இங்கே கிடைக்கின்றன. திருமணம் ஆன பின்பு, எப்படியும் குழந்தை குட்டியோடு இங்கு அடிக்கடி வர வேண்டி இருக்கும். அப்படி வரும்போது, இந்த நிலைக்குக் காரணமான நிகழ்வு இங்குதான் நடந்தது என்பதை மகிழ்வாகவோ, அல்லது அவரவர் நிலைக்கு ஏற்பவோ  நினைவு படுத்திக் கொள்ளலாம்!!

இன்று மால் ஆஃப் அமெரிக்கா இருக்கும் இடத்தில் தான், 1956 இல் இருந்து 1981 வரை மெட்ரோபாலிடன் ஸ்டேடியம் என்ற விளையாட்டு மைதானம் இருந்தது. 1986 இல் இந்த இடத்தை வாங்கிய கெர்மேசியன் (Germezian) என்ற நிறுவனம், 1989 இல் கட்டுமானப் பணியைத் தொடங்கியது. 1992 இல் கட்டுமானப் பணி நிறைவுற்று, இந்த மால் திறக்கப்பட்டது. திறந்த சமயத்தில் இருந்தே, இதுதான் அமெரிக்காவின் பெரிய ஷாப்பிங் மால். இன்றும் இதுவே அமெரிக்காவின் பெரிய ஷாப்பிங் மால். வட அமெரிக்கக் கண்டம் என்று எடுத்துக் கொண்டால், கனடாவில் இருக்கும் வெஸ்ட் எட்மான்டன் மால் (West Edmonton Mall) தான் பெரியது. அதன் உரிமையாளர்கள் தான், இதைக் கட்டியவர்களும் கூட. முன்பு இங்கு இருந்த ஸ்டேடியத்தின் ஞாபகமார்த்தமாக, அங்கிருந்த ஸ்டேடியத்தின் பெயர் பொறித்த சட்டகத்தினை இங்குத் தரையில் பதித்து வைத்திருக்கிறார்கள். அங்கிருந்த நாற்காலி ஒன்றையும் இங்குள்ள ஒரு சுவரில் மாட்டி வைத்திருக்கிறார்கள்.

MOA_J2017_1_620x349.jpg

மால் ஆஃப் அமெரிக்கா கட்டிடத்தில் மொத்தம் நான்கு தளங்கள் உள்ளன. முதல் தளமான தரைத்தளத்தில் ஏற்கனவே நாம் குறிப்பிட்ட நிக்கலோடியன் யூனிவர்ஸ் விளையாட்டு அரங்கமும், சுற்றிலும் நான்கு பக்கமும் கடைகளும் உள்ளன. இங்கிருக்கும் லெகோ (Lego) கடையில் சிறுவர்கள் உட்கார்ந்து லெகோ விளையாட்டுப் பொருட்கள் கொண்டு விளையாடுவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள். ஹார்ட் ராக், க்ரேவ் ஆகிய உணவகங்கள் தரைத்தளத்தில் உள்ளன.

இரண்டாம் தளத்தில், ஓக்லே ஸ்டோர், ஸ்கெட்சர்ஸ், அவேடா, சன்க்ளாஸ் ஹட் போன்ற ஆடை, அணிகலன்களுக்கான கடைகள் உள்ளன. மேசிஸ், சியர்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களின் பேரங்காடிகள் பல தளங்களுக்குப் பரந்து இருக்கின்றன.

மூன்றாவது தளம், உணவுக்கான தளம். பலவித சாப்பாட்டுக் கடைகள் இருக்கின்றன. பஃபலோ வைல்ட் விங்க்ஸ், கிரேவ், ரெயின் பாரஸ்ட் கபே போன்ற சாவகாச உணவகங்களும், சிப்போட்லே, பர்கர் கிங், நூடுல்ஸ் & கம்பெனி உள்ளிட்ட துரித உணவகங்களும் பல இங்குக் கடை விரித்திருக்கிறார்கள். முன்பே சொன்னது போல், ஒருநாள் முழுக்க இருந்து, விதவிதமாகச் சாப்பிட்டு விட்டுச் செல்லலாம். மற்றபடி, நடக்கும் வழியெங்கும் அனைத்து தளங்களிலுமே, கரிபோ, ஸ்டார் பக்ஸ் போன்ற காபிக்கடைகள் இருக்கின்றன.

MOA_J2017_4_620x349.jpg

நான்காவது, ஸ்மாஷ் என்ற விர்சுவல் ரியாலிட்டி விளையாட்டு அரங்கம். இந்திய பூர்வீகத்தைக் கொண்ட நிறுவனம். மற்ற தளங்களை ஒப்பிடுகையில், இங்கு நான்காவது தளம் கொஞ்சம் குறைந்த ஜன நடமாட்டத்துடன் தான் இருக்கும். முன்பு, சில தியேட்டர்கள் இருந்தன. இப்போது அவை மூடப்பட்டு, விளையாட்டுத் தளமும், சில உணவகங்கள் மட்டுமே உள்ளன. மக்கள் அதிகம் சுற்றிக் கொண்டு இருப்பது, முதல் தளத்திலும், மூன்றாம் தளத்திலும் தான். பறக்கும் அனுபவம் (Flyover America), வண்ண அனுபவம் (Crayalo Experience), ஒளி அனுபவம் (Universe of Light) என இன்னும் பார்க்க இங்கு இருக்கின்றன. விருப்பத்திற்கேற்ப ஒரு ரவுண்ட் சென்று வரலாம்.

இந்த மால் ஊரில் சரியான இடத்தில் அமைந்திருக்கிறது எனக் கூறலாம். மினியாபொலிஸிற்குத் தெற்கே இருக்கும் ப்ளுமிங்டன் பகுதியில் இந்த மால் இருக்கிறது. மினியாபொலிஸ் டவுண்டவுன், செயின்ட் பால் டவுண்டவுன் இரண்டுக்குமே சம தொலைவில் அமைந்துள்ளது. இதற்கெனத் தனியாகவே பகுதி இலக்க எண் (Zip Code) தபால் துறையால் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறுவர்கள். ஆனால், அது அப்படியல்ல. இந்த எண்ணில் அருகே இருக்கும் பிற பகுதிகளும் அடக்கம். நகருக்குள்ளேயே இந்த மால் இருப்பதால், சென்று வருவது சுலபம். பஸ் வசதி, ரயில் வசதி இரண்டும் உள்ளன. பக்கத்தில் தான் ஏர்போர்ட் என்பதால், ப்ளைட்டில் வந்து கூட இறங்கலாம். டவுன்டவுனில் இருந்தும், ஏர்போர்ட்டில் இருந்தும், மாலுக்கு நேரடியாகச் செல்ல ரயில் இருக்கிறது. இவையனைத்திற்கும் மேல், காரில் சென்றால் பார்க் செய்வதற்கு 12000+ இடங்கள் உள்ளன. பார்க் செய்த தளம் மறந்து விடக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு தளத்திற்கு ஒவ்வொரு அமெரிக்க மாகாணத்தின் பெயரைச் சூட்டியுள்ளார்கள்.

மால் ஆஃப் அமெரிக்காவிற்குப் பக்கத்தில் தான் ஐக்கியாயும் (IKEA), வாட்டர் பார்க் ஆஃப் அமெரிக்காவும் (Water Park of America) அமைந்துள்ளன. தற்சமயம், வாட்டர் பார்க் ஆஃப் அமெரிக்கா சீரமைப்பு வேலைகளுக்காக மூடப்பட்டுள்ளது. ஒரே மாதிரி பெயர் இருந்தாலும், இதற்கும் மால் ஆஃப் அமெரிக்காவிற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

MOA_J2017_3_620x349.jpg

ஒவ்வொரு ஊரிலும் ஆங்கிலப் புத்தாண்டுக்கு மக்கள் ஏதேனும் இடத்தில் ஒன்று சேர்ந்துக் கொண்டாடுவது உலக மரபாகிவிட்டது. புத்தாண்டு சமயம் குளிர் உச்சத்தில் இருப்பதால், மினசோட்டாவாசிகளுக்குத் திறந்த வெளியில் புத்தாண்டு கொண்டாடுவது சிரமமான விஷயம். வருடத்தின் முதல் நாளிலேயே அவ்வளவு சிரமத்தை அனுபவிக்கக் கூடாதல்லவா? அதனால் மக்கள் பெரும் திரளாக இந்த மாலுக்குப் படையெடுத்து விடுவார்கள். வருட இறுதி நாளின் மாலையில் இருந்தே சேரத் தொடங்கும் கூட்டம், நடுராத்திரி வரை இங்கேயே உலாவுவார்கள். விளையாடுவார்கள். உண்பார்கள். பனிரெண்டு மணிக்கு முன்பாக மாலின் மத்திய பகுதி ஒன்றில் கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டு மின்னணுப் பலகையில் ஒளிரத் தொடங்க, மக்கள் அனைவரும் இங்கு சங்கமிக்கத் தொடங்குவார்கள். பனிரெண்டு மணிக்குக் கவுண்ட் டவுன் இறுதியில் பலமான இசைச் சத்தத்துடன் மக்கள் ஆரவாரத்துடன் ஆடத் தொடங்குவார்கள். அப்படியே அரை மணி நேரம் கூட்ட நெரிசலில் ஆடிக் களைத்து, உறங்க வீட்டிற்குக் கலைந்துச் செல்வார்கள்.

இப்படி மினசோட்டாவாசிகள் பலரின் வருடப் பிறப்பு இங்கு தான் தொடங்கும். வருடப் பிறப்பில் முதலில் இந்த மால் தரிசனம். பிறகு தான், மற்ற ஆலய தரிசனமெல்லாம். வருடத்திற்கு வருகை தரும் 40 மில்லியன் விருந்தினர்களில், 40 சதவிகிதம் வெளியூர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தான் இங்கு வருகிறார்கள்.  இது மினசோட்டாவின் “டோண்ட் மிஸ்” இடமாக இருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.

http://www.panippookkal.com/ithazh/archives/12389

  • 3 weeks later...
  • Replies 516
  • Views 131.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஊரில் விவசாயம் செய்யும்/செய்ய விரும்பும் (பாலபத்ரஓணாண்டி)நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.....!  👍 பி.கு: தோட்டத்தில் நின்று சுவையான தேநீர் அருந்தும் போது ஒரு கணம் சுவியையும் நினைக்கவும்.....!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    259 X உங்கள் வயது X  39ஐ  பெருக்கி வரும் விடையை பாருங்கள் நீங்களே ஆச்சரியப் படுவீர்கள். வீட்டிலிலுள்ள மற்றைய குடும்ப அங்கத்தவர்களின் வயதையும் பெரிக்கிப் பாருங்கள்.

  • தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகள் :  :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: ::::::::::: வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத பெருமை நிறைய தஞ்சை கோவிலு

Posted Images

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

Digital pigeon
What they saw next to Putin is not a pigeon, it is one of the fifth-generation weapons developed by Russian research centres and called it "automatic pigeon" can't be divided with a natural pigeon, this automatic pigeon is flying, running and remote-controlled. With A Gbs System that is in constant contact with satellites, this pigeon is capable of flying long distances between states and is equipped with a solar-powered system that provides the number of three lithium batteries, which is fitted with a prada that works according to the latest reconnaissance techniques and Mira and sensor to detect remote explosives, guard important characters, sing about personal security and comb roads and buildings before the arrival of VIP guests. The electronic pigeon has been developed so that you can identify and determine the character of the president, Prime Minister and senior Officials of the Russian Federation are equipped with a digital information base that distinguishes state officials through the iris and hand fingerprints and can identify the important character through one method, which is the fastest Iris (Eye Print) or hand print in the clip that president Putin has directed. His hands to the automatic dove, and immediately after he was identified through the print, the dove turned around and did the serious military salute that the svr was able to provide the electronic pigeon with the prints of a number of Russian security wanted, which contributed to the capture of a Explosive Adhesive being supplied to the pigeon.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இறந்த பின்பும் மூளை செயற்படுகிறது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஏன் (a+b)²=a²+2ab+b²

 

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 6 Personen, Personen, die lachen, Text

இதுவரை 10´000 அறுவை சிகிச்சைகளை... ஒரு உயிரிழப்பும் இன்றி  செய்து முடித்துள்ள, 90 வயது ரஷ்ய பெண் மருத்துவர். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bulls are not threatened by anything below eye level...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு வரலாறு

 

*கச்சதீவு வரலாறு.*

கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் ஆகும். கச்சத் தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது.

அதாவது, சென்னை சென்ட்ரலுக்கும், தாம்பரத்துக்கும் உள்ள தூரத்தை விட குறைவானது.

கடலோர எல்லை, நாட்டிக்கல் மைல் (NAUTICAL MILES) அளவு கொண்டு சர்வதேச அரங்கில் கணக்கிடப்படுகிறது. அதன்படி கச்சத் தீவு ராமேஸ்வரத்திலிருந்து 12 நாட்டிக்கல் மைல் அளவுக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது.

முந்தைய காலத்தில் ராமநாதபுரம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 8 தீவுகளில் கச்சத் தீவும் ஒன்றாகும்.

1480 ம் ஆண்டில் ஏற்ப்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்ப்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டாயின.

01 ராமேஸ்வரம்

02 குந்துகால்

03 புனவாசல்

04 முயல் தீவு

05 பூமரிசான் தீவு

06 முல்லைத் தீவு

07 மணல் தீவு

08 வாலித் தீவு (கச்சத் தீவு)

09 அப்பா தீவு

10 நல்ல தண்ணீர் தீவு

11 உப்பு தண்ணீர் தீவு

12 குடுசடி தீவு

கோடிக்கணக்கான இந்து மதத்தினர் நம்பும் ராமாயண இதிகாசத்தில் ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட தீவுதான் கச்சத் தீவு.

23.07.1974-ல் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில், அப்போதைய குவாலியரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிற்கால பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கச்சத் தீவை, ‘வாலி தீவு’ என கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்று குறிப்பு 11891ம் பக்கம் 14ல் இதற்கான ஆதாரம் உள்ளது. 1480 ம் ஆண்டு தோன்றிய இத் தீவுகள் யாவும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தன.

1802ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஜமிந்தாரி நில உரிமைச் சட்டப்படி கச்சத்தீவு ராமநாதபுரம் ராஜாவிற்கு அரசுடமையாக்கப்பட்டது. அதற்கு பிறகு ராமநாதபுரம் ராஜா அவர்கள் அந்த இடத்தை தனி நபர்களுக்கு குத்தகையாக கொடுத்து அவர்கள் மூலமாக பயன் பெற்று இருகின்றனர்.

1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன் படையாச்சி என்ற மீனவர் புனித அந்தோனியார் கோயிலைக் கட்டினார்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் நாள் திருவிழா நடக்கும். இதில் தமிழர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் செல்லாம். இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று தான் வரவேண்டும்.

1947 ம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் கொண்டு வரும் வரையில் கச்சதீவு சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் இருந்தது.

இதற்கு 1822 ம் ஆண்டிலிருந்து நிறைய சான்றுகள் உண்டு. கிழக்கிந்திய கம்பெனி 1822ல் இஸ்திமிரர் சனட் என்ற ஒப்பந்தத்தில் ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து கச்சத்தீவை பயன்படுத்தி கொள்ளும் உரிமை பெற்றது. 69 கடற்கரை ஊர்களும் 8 தீவுகளும் சேதுபதிக்கு உரியது. இந்த 8 தீவுகளில் ஒன்று தான் கச்சத்தீவு. கிழக்கிந்திய கம்பனி இவை யாவற்றையும் பயன்படுத்தி கொள்ள ராஜாவிடம் இருந்து இசைவு பெற்று இருந்தது.

இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கை பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் இலங்கையின் எல்லையை பற்றி குறிப்பிடும் போது கச்சத்தீவை குறிக்காமலும், ராமநாதபுரம் அரசை பற்றி குறிப்பிடுகையில் கச்சத்தீவு அவருக்கு உரியதென்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை முந்நாளைய இலங்கை அமைச்சரவை செயலாளர் பி. ஈ. பியரிஸ் உறுதிபடுத்தி உள்ளார்.

1947 டிசம்பர் திங்களில் சண்முக ராஜேந்திர சேதுபதியிடமிருந்து வீ. பொன்னுசாமி பிள்ளை, கே.எஸ். மொகம்மது மீர்சா மரைக்காயர் ஆகிய இருவரும் கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்துள்ளனர்.

இலங்கையின் பழைய வரலாற்று அவணங்களிலோ, நூல்களிலோ எதிலும் கச்சத் தீவு பற்றிய எந்த விவரமும் இல்லை.

இதுவரையில் கச்சத் தீவில் எங்களுக்கு உரிமை உண்டு என்பதற்கான ஆதாரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவும் இல்லை.

டச்சுக்காரர்கள், போர்சுகீசியர்கள் என்று யார் தயாரித்த இலங்கை தேசப்படங்களிலும் கச்சத்தீவு இல்லை.

17 ம் நூற்றாண்டில் பர்நோப் எனும் வரலாற்று ஆய்வாளர் இலங்கைக்கு வந்தார் அவர் இலங்கை தேசப்படம் ஒன்றை உருவாக்கினார். அதிலும் கச்சத்தீவு இல்லை.

1857 – 61 ம் ஆண்டுகளில் இலங்கை தேசப்படங்களை வெளியிட்ட ஜே.ஆரோஷ்மிக் மற்றும் டெண்னன்ட் ஆகியோரும் இலங்கை தேசப்படத்தில் கச்சத்தீவை சேர்த்து வெளியிடவில்லை.

1920 ம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது.

இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.

1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.

28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர்.

ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு.

இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா; ஸ்வரன்சிங்,

“ 1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவா;களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து,

கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார்.

1976ம் ஆண்டு ஒப்பந்தம் (இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன்பிடி உரிமை பற்றிய கடிதப் போக்குவரத்து நடந்தது. அந்த கடிதங்களே 1976 மார்ச் மாதம் ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட்டது)

கச்சத் தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லகூடாது என்று முற்று புள்ளி வைத்தே விட்டது.

1974ம் ஆண்டு ஆகஸ்ட் 21லிருந்து இன்றுவரை நாம் தீர்மானம் நிறைவேற்றி கொண்டே இருக்கிறோம்.

சீன ராணுவம் கச்சத் தீவை தனது தளமாக பயன்படுத்த இலங்கை அனுமதித்துள்ளது என செய்திகள் வருகின்றன. அதன்படி பார்த்தால் கச்சத் தீவை நாம் மீட்கா விட்டால் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு – குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கச்சத்தீவு இருக்கப் போகிறது.ஆனால் நல்ல வேளை நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி வந்ததாலும்,ராஜபக்சே தொலைந்ததாலும் சீன வருகை நின்று போனது.

1971 முதல் 1974 ஆம் ஆண்டு வரை அந்தோணியார் விழாவின் போது இலங்கை முப்படைகளம் அங்கு முகாமிட்டன.

இராணுவ ஹெலிகாப்டர் கச்சத் தீவில் வட்டமிட்டுக் கொண்டேயிருந்தது. போர்க் கப்பல் கஜபாகு கச்சத் தீவில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்தியா கடுமையான எதிர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை; தன் படையையோ அதிகாரிகளையோ அனுப்பி உரிமையை நிலைநாட்டவில்லை.

தன் நாட்டுத் தீவு என்ற அக்கறையே இல்லாமல் இருந்தது.

பாகிஸ்தான், சீனப் போரில் பல்லாயிரக்கணக்கான சதுர மைல் பூமிகளை அந்நாட்டிடம் இழந்து இன்னும் அதை மீட்க முடியாத  இந்திய அரசு – மேற்கு வங்கத்தின் பெருவாரியை வங்க நாட்டுக்கும், அந்தமான் நிக்போபர் அருகில் உள்ள கொக்கோ தீவை பர்மாவிற்கும் தானம் செய்த இந்திய அரசு அதுபோல் கச்சத் தீவைத் தாமாகவே இலங்கைக்குக் கொடுக்க முடிவு செய்து விட்டது.

வினோபா பாவேயின் “பூமிதானம்” என எண்ணிவிட்டனர்.
இந்திய அரசு கச்சத் தீவைக் “கண்டுகொள்ளாததால்” இலங்கை எளிதாக ஆக்கிரமிப்புச் செய்தது. இந்திய மண்ணில் அடிக்கடி கால் வைத்தது.

*“ஒரு நாட்டின் ஒரு பகுதியை மற்றொரு நாடு தன்னுடைய பகுதி என்று அறிவித்தால், அதனை உரிய நாடு வலிமையாக எதிர்க்காமல் அமைதியாக இருந்தால், அது ஆக்கிரமித்த நாட்டின் உரிமையை வாய்ச் சொல்லில் சொல்லாமல் ஒப்புக் கொண்டது என்றே பொருள்” – என்பதுதான் சர்வதேசச் சட்டமாகும்.*

இலங்கை முப்படையினர் கச்சத் தீவில் முகாம் இட்டும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால் கச்சத் தீவு இலங்கைக்கு உரியது என்று ஒப்புக் கொண்டது என்பதே பொருளாகும்.

இது இந்திய அரசின் மாபெரும் தவறாகும்.

தமிழகமbx் அவற்றைக் கண்டு மவுனம் காத்தது அதைவிடப் பெரிய தவறு!

20160705113937.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், தாடி மற்றும் உரை

பாகுபலி படத்தில்... கட்டப்பாவாக நடித்த, சாத்தியராஜின் மெழுகு சிலை.. லண்டனில் வைக்கப் பட்டுள்ளது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

29176761_403177663441699_588688276805019

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

29433113_2094004967512569_54387467221991

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

29243967_1601027760010722_86211853753411

இது ஒன்றை கழித்துவிட்டால் நிர்வாகமே ஆட்டம் கண்டுவிடும்..!!அவர்களை சீண்ட வேண்டாம், ஆங்கில இணையம் கொடுத்த அதிரடி ரிப்போர்ட்.....

மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..! தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்..தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்..

ஒட்டுமொத்த இந்தியாவின் ஜி.டி.பி அளவையும் ஒப்பிடும் போது வடகிழக்கு மாநிலங்கள் மொத்தமாக சேர்ந்து அளிக்கும் வருமானத்தை விட தமிழ்நாட்டின் வருமானம் அதிகம் என்கின்றது புள்ளிவிவரம்

இந்தியாவிலேயே செல்வ வளம் கொழிக்கும் மஹாராஷ்டிராவுக்கு அடுத்து 155 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவுக்கு வருமானத்தை கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே.

1960-ல் இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு. இன்று இந்தியாவின் முதல் ஐந்து பணக்கார மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்பது குறிபிடத்தக்கது

ஒருவேளை இந்தியா தமிழ்நாட்டை தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என்று ஆங்கில இணையதள ஆய்வு தெரிவிக்கிறது.

ஆட்டோ மொபைல், அரிசி விவசாயம், தோட்டங்கள், சுற்றுலா.,ஆயத்த உடைகள் ஏற்றுமதி, இந்தியா முழுவதுமான பட்டாசு உற்பத்தி, துப்பாக்கி டாங்கி தொழிற்சாலை, ஹிந்திக்கு அடுத்தப்படியாக சினிமா தொழிற்துறை,

டெல்லிக்கு பிறகு அனைத்து நாட்டு தூதரகங்களும் உள்ள ஒரே மாநிலம் தமிழகம் என்பது மிக முக்கியமானது

ஆன்மீகத்தில் மிக முக்கிய கோவில்கள், வரலாற்று இடங்களை கொண்டுள்ளது தமிழகம்...

உலக நாடுகளில் கிட்டத்தட்ட 5 நாடுகளில் தேசிய மொழியாக உருவெடுத்துள்ள மொழி தமிழ்...இரண்டாம் மொழியாக அங்கீகாரத்துக்கு 20 நாடுகளில் காத்திருக்கும் ஒரே மொழி தமிழ்.

தமிழ்நாடு யானை போன்றது. துரதிஷ்டவசமாக அதன் பலம் அதற்கு தெரிவதில்லை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டெர்லைட் ஆலை
பற்றிய சில தகவல்கள்

1.உரிமையாளர் - அனில் அகர்வால்.

2.தலைமையிடம் - இலண்டன்.

3.நிறுவனப் பெயர் - வேதாந்தா ரிசோர்ஸ்.

4.அமைத்துள்ள இடம் - தூத்துக்குடி.

5.முக்கிய உற்பத்தி - தாமிரம் (copper ).

6.கழிவு உற்பத்தி - தங்கம், சல்ப்யூரிக் அமிலம் , பாஸ்ஃபோரிக் அமிலம்.

7.முதலில் தேர்ந்தெடுத்த இடம் - குஜராத்.

8.அனுமதி மறுத்த மாநிலங்கள் -குஜராத், கோவா, கர்நாடகா, கேரளா.

9.அனுமதி தந்து பிரச்சினை சந்தித்த இடம் - மகாராஷ்டிரா.

10.அப்போதைய மகராஷ்ர முதல்வர் - சரத்பவார்.

11.அனுமதி தந்த மாநிலம் - தமிழ்நாடு.

12.அப்போதைய முதல்வர்-ஜெ.ஜெயலலிதா.

13.அனுமதிக்க காரணம் - தூத்துக்குடி துறைமுகம்.

14.முதல் உண்ணாவிரத போராட்டம் - 1996.

15.போராட்டம் நீர்த்துபோக காரணம் - தென் மாவட்ட *சாதிசண்டை*

16.தண்ணீர் எடுக்கப்படும் ஆறு - தாமிரபரணி.

17.ஆலைக்கு எதிரான முதல் வழக்கு - 1997 நவம்பர்7.

18.முதல் விபத்து - ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997).

19.இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி - 1).

20.மூன்றாவது விபத்து-செப்புக்கலவை வெடிப்பு(பலி - 3).

21.நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு (பொறியாளர் - 5, கூலித் தொழிலாளி -12).

22.ஐந்தாம் விபத்து - ஆயில் டேங்க் வெடிப்பு.

23.ஆறாம் விபத்து -நச்சுப்புகை வெளியேற்றும்
அனுமதிக்கப்பட்ட உற்பத்தி அளவு -70000டன்.

24.உற்பத்தி செய்தது - 2லட்சம் டன் (2005 கணக்கில்).

25.ஆலையை மூட முதல் தீர்ப்பு - 2010 
செப்டம்பர் 28.

26.தொடக்கம் முதல் எதிர்க்கும் கட்சி-மதிமுக.

27.ஆலையை எதிர்த்து வாதாடியவர்-வை.கோ(1998).

28.ஆலை மூட உத்தரவிட்டவர்-ஜெ.ஜெயலலிதா.

29.100 கோடி ரூபாய் அபராத்துடன் மீண்டும் ஆலை திறக்க அனுமதித்தது - உச்சநீதிமன்றம்.

30.தமிழ்நாடு பசுமை வாரியம் - தடை.

31.இந்திய பசுமை வாரியம் - அனுமதி.

தமிழகம் அழிவதைப்பற்றி இந்தியாவுக்கு ஏது அக்கறை?

தமிழகத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் இந்தியா இயங்குகிறது.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

கடந்த 20 ஆண்டுகளாக மனிதன் ஏன் விண்வெளியில் வாழ்கிறான்? விண்வெளி ஆய்வு மையத்தில் என்ன நடக்கிறது? பல அறிய காட்சிகளுடன்...

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

1917´ல்,  அச்சடிக்கப்  பட்ட  இந்திய ஒரு ரூபாய் தாளில்.... ஹிந்தி மொழி இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

36426831_10156918970004305_6493903106017

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தீர்களா நம் தமிழ் மொழியின் அருமையை.

Doctor -- வைத்தியநாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Pediatrist -- குழந்தைசாமி
Psychiatrist -- மனோ
Marriage Counselor -- கல்யாண
சுந்தரம்
Ophthalmologist--கண்ணாயிரம்
ENT Specialist -- நீலகண்டன்
Diabetologist -- சக்கரபாணி
Nutritionist -- ஆரோக்கியசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சித்திரகுப்தன்
Meteorologist -- கார்மேகம்
Agriculturist -- பச்சைப்பன்
Horticulturist -- புஷ்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Barber -- சவுரிராஜன்
Beggar -- பிச்சை,பிச்சையாண்டி, பிச்சைமுத்து
Alcoholic -- மதுசூதனன்
Exhibitionist -- அம்பலவானன்
Fiction writer -- நாவலன்
Makeup Man -- சிங்காரம்
Milk Man -- பால் ராஜ்
Dairy Farmer -- பசுபதி
Dog Groomer -- நாயகன்
Snake Charmer -- நாகராஜன்
Mountain Climber -- ஏழுமலை
Javelin Thrower -- வேலாயுதம்
Polevaulter -- தாண்டவராயன்
Weight Lifter -- பலராமன்
Sumo Wrestler -- குண்டு ராவ்
Karate Expert -- கைலாசம்
Kick Boxer -- எத்திராஜ்
eBowler -- பாலாஜி
Spin Bowler -- திருப்பதி
Female Spin Bowler -- பாலதிரிப்புரசுந்தரி
Driver -- சாரதி

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 6 people

உலகின் தலைசிறந்த 10 அறிஞர்களுக்கு சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் சிலை வைக்கப் பட்டுள்ளது.
அதில் நமது திருவள்ளுவரும் ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: 6 people

உலகின் தலைசிறந்த 10 அறிஞர்களுக்கு சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் சிலை வைக்கப் பட்டுள்ளது.
அதில் நமது திருவள்ளுவரும் ஒருவர்.

எங்களோட படித்தவர்கள் வேறு எவரும் இல்லையா சிறி?

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2018 at 7:10 AM, nunavilan said:

பார்த்தீர்களா நம் தமிழ் மொழியின் அருமையை.

Doctor -- வைத்தியநாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Pediatrist -- குழந்தைசாமி
Psychiatrist -- மனோ
Marriage Counselor -- கல்யாண
சுந்தரம்
Ophthalmologist--கண்ணாயிரம்
ENT Specialist -- நீலகண்டன்
Diabetologist -- சக்கரபாணி
Nutritionist -- ஆரோக்கியசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சித்திரகுப்தன்
Meteorologist -- கார்மேகம்
Agriculturist -- பச்சைப்பன்
Horticulturist -- புஷ்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Barber -- சவுரிராஜன்
Beggar -- பிச்சை,பிச்சையாண்டி, பிச்சைமுத்து
Alcoholic -- மதுசூதனன்
Exhibitionist -- அம்பலவானன்
Fiction writer -- நாவலன்
Makeup Man -- சிங்காரம்
Milk Man -- பால் ராஜ்
Dairy Farmer -- பசுபதி
Dog Groomer -- நாயகன்
Snake Charmer -- நாகராஜன்
Mountain Climber -- ஏழுமலை
Javelin Thrower -- வேலாயுதம்
Polevaulter -- தாண்டவராயன்
Weight Lifter -- பலராமன்
Sumo Wrestler -- குண்டு ராவ்
Karate Expert -- கைலாசம்
Kick Boxer -- எத்திராஜ்
eBowler -- பாலாஜி
Spin Bowler -- திருப்பதி
Female Spin Bowler -- பாலதிரிப்புரசுந்தரி
Driver -- சாரதி

என்னப்பா இது எல்லாம் ஆண்களின் பெயராக இருக்கு.


எத்தனை பெண்கள் பெயர் உள்ளது

முத்தம்மா  
பாலகுமாரி
தொடையாச்சி
ரூபசுந்தரி
சிந்து‍‍ஜா
கரலக்சுமி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 7/16/2018 at 4:20 AM, colomban said:

என்னப்பா இது எல்லாம் ஆண்களின் பெயராக இருக்கு.


எத்தனை பெண்கள் பெயர் உள்ளது

முத்தம்மா  
பாலகுமாரி
தொடையாச்சி
ரூபசுந்தரி
சிந்து‍‍ஜா
கரலக்சுமி 

இதற்கான ஆங்கில  பெயர்களையும் எழுதி விடலாமே!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
On 7/16/2018 at 6:03 AM, ஈழப்பிரியன் said:

எங்களோட படித்தவர்கள் வேறு எவரும் இல்லையா சிறி?

இவர்கள் மட்டும்தான் வெளியே இருக்கிறார்கள் பிரியன்.......!  ?  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.