Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலைக்கு அமெரிக்க உளவு நிறுவனமே காரணம்: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

Featured Replies

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலைக்கு அமெரிக்க உளவு நிறுவனம்தான் காரணம் என்று தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலைக்கு அமெரிக்க உளவு நிறுவனம்தான் காரணம் என்று தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும் "தமிழன்" தொலைக்காட்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10.02.08) ஒளிபரப்பான "வெளிச்சம்" என்ற நேரடி நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவர் கேள்விக்கு திருமாவளவன் பதிலளித்ததாவது:

ராஜீவ் காந்தி படுகொலையில் சர்வதேச அளவிலான சதி உள்ளது, குறிப்பாக அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. திட்டமிட்டு சதியை நிறைவேற்றியிருப்பதாகவே கருதுகின்றோம்,

ஏனெனில். மூன்றாம் உலக நாடுகளில் மிகப்பெரிய வல்லரசாக வளர்ந்து வரும் இந்தியாவில் ராஜீவ் காந்தியின் தலைமை அமெரிக்க வல்லரசுக்கே ஓர் அச்சுறுத்தலாக விளங்கியது. சுயேட்சையாக முடிவெடுக்கவும் தற்சார்பு பொருளாதாரக் கொள்கையை வளர்த்தெடுக்கவும் வலிமை பெற்றவராக ராஜீவ் வளர்ந்து வந்தார்,

இந்நிலையில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை தமது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற அமெரிக்க வல்லரசின் கனவு ராஜீவ் காந்தியின் வளர்ச்சியால் தகர்ந்து விடும் என்று அமெரிக்கா கருதியது.

திருகோணமலையில் இராணுவத் தளத்தை அமைப்பதற்கு நெடுங்காலமாக முயற்சித்து வருகின்ற அமெரிக்காவுக்கு ராஜீவ் காந்தியின் வலிமை மிக்கத் தலைமை பெரும் முட்டுக்கட்டையாக மாறும் என்று அமெரிக்கா கருதியிருக்கக்கூடும்,

இச்சூழலில் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில். ராஜீவ்காந்தி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினால் அது அமெரிக்காவின் நோக்கத்துக்கு நல்லதல்ல என்று கருதியிருக்கலாம். ஆகவேதான் ஈழத் தமிழர்களுக்கும் ராஜீவ் காந்தி அவர்களுக்குமான முரண்பாட்டை அமெரிக்க அரசு தமக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கக்கூடும் என்று ஐயப்படுகின்றோம்.

ராஜீவ் காந்தியின் படுகொலையில் புலிகள் மட்டுமே சம்பந்தப்பட்டிருந்தால் புலிகள் அல்லது ஈழத் தமிழர்களை மட்டுமே விசாரித்திருக்க வேண்டும்.

சி.ஐ.ஏ. நிறுவனத்தோடு தொடர்புடையவர்கள் என்னும் ஐயத்திற்குரிய நபர்களான சந்திராசாமி, சுப்பிரமணியசுவாமி ஆகியோரிடம் ஜெயின் கமிசன் விசாரணை நடத்தியது ஏன்?

அந்த விசாரணையில் வெளியான உண்மைகள் என்ன? அதனை வெளிப்படுத்தாதது ஏன்?

ஒரு தேசத்தின் தலைவரை அவ்வளவு எளிதாக போராளிக் குழுக்களால் நெருங்கிவிட முடியாது என்பது உலகறிந்த உண்மை.

பெரும்பாலும் சர்வதேச அளவில் வல்லரசுகளின் சதியால் மட்டுமே இத்தகையப் படுகொலைகள் நடத்த முடியும் என்பது வரலாற்றுச் சான்றுகளாகும்,

எனவே. அமெரிக்க வல்லரசைச் சார்ந்திராமல். பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை தற்சார்பு நிலையில் இந்தியாவை வல்லரசாக்குவதில் ராஜீவ் காந்தி வளர்ந்து வருகின்றார் என்கிற அச்சத்திலும் திருகோணமலையில் காலூன்ற விடமாட்டார் என்ற அச்சத்தாலும் சி.ஐ.ஏ. பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் சிலரைப் பயன்படுத்தி ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்திருக்கலாம் என்று வலுவாக நம்புகின்றோம்.

அத்துடன் இந்திய அமைதிப் படையால் ஈழத் தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகளுடன் ராஜீவ் காந்திக்கு ஏற்பட்ட முரண்பாட்டைச் சாக்காக வைத்து புலிகள் மீது அந்தப் பழியை திருப்பிவிட்டது என்றும் நம்புகின்றோம்.

எனவே ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளியான உண்மைகள் அனைத்தையும் இந்திய அரசு இந்திய நாட்டு மக்களின் பார்வைக்கு வெள்ளை அறிக்கையாக வெளியிடக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார் திருமாவளவன்

www.puthinam.com

  • 2 weeks later...

பிரபாகரன் எங்கள் மத்தியில் பேசியபோது

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்திக்காக புலிகள் மீது தடை விதிக்கவில்லை

Edited by nunavilan

இது ஏற்கனவே தெரிந்தது தான்! புலிகளின் மேல் கொண்டு வந்த தடை இந்திய றோ வின் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி. ராஜீவின் மரணத்தை றோ இந்தியாவில் ஒலித்த புலி ஆதரவு குரல்களை அடக்கவும், நடுநிலை வகித்த பல்லாயிரக்கணக்கானவர்களை புலி எதிர்ப்பாளர்களாக மாற்றவும் சரியாக பயன்படுத்திக் கொண்டது. அவ்வளவு தான் !

தொடர்ந்தும் தனது புலி எதிர்ப்புக்கொள்கைகளை தக்க வைத்துக் கொள்ள உறுதுணையாக இருக்கும் என்பதாலேயே ராஜீவ் மரணத்தின் உண்மை குற்றவாளிகளை வெளிக்கொண்டு வர றோ இன்று வரை தயாராக இல்லை.

இது இந்திய பாதுகாப்பில் உயர் பொறுப்ப்பு வகிக்கும் அனைவருக்கும் தெரியும்

Edited by vettri-vel

இந்தியாவில் அனைத்து உயர் பதவிகளிலும் இருப்பவர்கள் யார் என்பது வெற்றிவேலருக்கு நன்கு தெரியும் தானே :wub: ..... அதனால் தான் அவர்களுக்கு பிடிக்காதவர்கள் ஈழ ஆதரவாளர்களாக இருந்தாலும் அவர்களை வெறுப்பதன் மூலம் ... அந்த உயர் பதவிகளில் உள்ளோர் மனம் மாறும் என நினைக்கிறாரோ ^_^

அனைவரையும் தெரியாது. ஒரு சிலரை நிச்சயம் தெரியும். இங்கே மேற்கு நாடுகளில் சில பாரம்பரியம் மிக்க பலகலைகழகங்களில் படிக்கும் போது அப்படியான உயர் அதிகாரிகளை சந்திக்கவும் பழகவும் வாய்ப்புகள் கிடைப்பதுண்டு. புலமைபரிசில் பெற்றோ அல்லது விசேட பயிற்சிக்காகவோ அவர்கள் வருவதுண்டு

அப்படி நான் சந்தித்த கேரளத்தை சேர்ந்த ஒரு உயர் அதிகாரி என்னுடன் நட்புரீதியில் சொன்ன கருத்துக்கள் தான் அவை :unsure:

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரையும் தெரியாது. ஒரு சிலரை நிச்சயம் தெரியும். இங்கே மேற்கு நாடுகளில் சில பாரம்பரியம் மிக்க பலகலைகழகங்களில் படிக்கும் போது அப்படியான உயர் அதிகாரிகளை சந்திக்கவும் பழகவும் வாய்ப்புகள் கிடைப்பதுண்டு. புலமைபரிசில் பெற்றோ அல்லது விசேட பயிற்சிக்காகவோ அவர்கள் வருவதுண்டு

அப்படி நான் சந்தித்த கேரளத்தை சேர்ந்த ஒரு உயர் அதிகாரி என்னுடன் நட்புரீதியில் சொன்ன கருத்துக்கள் தான் அவை :wub:

தோழர் திருமாவளவனது சதுரங்கப் பலகை வேறு. எங்கள் சதுரங்கப் பலகை வேறு. எங்கள் பலகையின் நிலைக்கு தமிழக அன்பர்களை ஆடச்சொல்வதும் அவர்களது ஆடலை நாமும் தொடர்ந்து எம் பலகையில் ஆடுவதும்தான் எங்கள் அரசியல் அணுகுமுறையின் அடிப்படைத் தவறு. மிகவும் சென்சிறிவ்வான, ஒன்றுக்கு ஒன்று பலம்சேர்த்த இருவேறு பிரச்சினைகளில் எதற்க்கு அழுத்தம் கொடுப்பது என்பது அவரவர் அரசியல் உறவு நிலைகளோடும் விவாதச் சூழலோடும் அவர் அவர் ஆட்டப் பலகையில் நிகழ்வது.

ராமர் தொடர்பான சூர்ப்பனகையின் நிகழ்ச்சி நிரல் பழையது. இலக்குவன் மூக்கறுத்த தவறு சூர்ப்பனகையின் பழைய நிகழ்ச்சி நிரலை இலங்கை மன்னன் இராவணனின் புதிய நிகழ்ச்சி நிரலாக மாற்ற உதவுகிறது. ஏனோ அந்த காவிய நிகழ்வுதான் நினைவுக்கு வருகிறது.

Edited by poet

நீங்கள் பூடகமாக சொல்வது புரிகிறது கவிஞரே!

எனக்கு மிகவும் பிடித்த தமிழக தலைவர்களில் திரு. தொல் திருமாவாளவனும் ஒருவர். இங்கே சிலர் ஒரு குறுகிய வட்டத்தில் இருந்து சிந்திக்கும் வரை நாம் வைக்கும் கருத்துக்களின் தாற்பரியத்தை புரிந்து கொள்ள முடியாது.

பலருக்கு ஈழப்போராட்டத்தின் உண்மையான தளமும் கடந்து செல்ல வேண்டிய தடைகளுமே இன்னும் சரிவர புரியவில்லை. :wub:

நீங்கள் பூடகமாக சொல்வது புரிகிறது கவிஞரே!

எனக்கு மிகவும் பிடித்த தமிழக தலைவர்களில் திரு. தொல் திருமாவாளவனும் ஒருவர். இங்கே சிலர் ஒரு குறுகிய வட்டத்தில் இருந்து சிந்திக்கும் வரை நாம் வைக்கும் கருத்துக்களின் தாற்பரியத்தை புரிந்து கொள்ள முடியாது.

பலருக்கு ஈழப்போராட்டத்தின் உண்மையான தளமும் கடந்து செல்ல வேண்டிய தடைகளுமே இன்னும் சரிவர புரியவில்லை. ^_^

அது தான் உங்கள் இரட்டை நாக்கு எழுதுக்களை நண்பர் வேலவன் அப்பட்டமாக உரித்துக் காட்டி உள்ளாரே.

திருமாளவனைப் பிடிக்குமாம் ஆனால் திருமாமளவனின் தலித்து அரசியல் என்பது பிடிக்காதாம்.

திருமாவளவன் தனது அரசியற் தலவைனாகப்போற்றும் பெரியாரைப் பிடிக்காதாம்.

அப்படியாயின் எதற்க்காக திருமாமளவனைப்பிடிக்கும்? நல்ல நாடகம், :wub:

கருணானிதியை பெரியாரை அவதூறு செய்வோம் அதனால் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு தமிழகத்தில் பெருகுமாம்.புரிந்து கொண்டே வெறி பிடித்து அலைவோரை என்ன செய்வது?

[

QUOTE(வேலவன் @ Mar 23 2008, 08:08 AM)

கருணானிதியின் மருமகள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர் தெரியுமா???

வெற்று வேலவர் எழுதியது:

அவர் எத்தனை கோடிகளுக்கு அதிபதி என்பது உங்களுக்கு தெரியுமா?

Edited by narathar

அது தான் உங்கள் இரட்டை நாக்கு எழுதுக்களை நண்பர் வேலவன் அப்பட்டமாக உரித்துக் காட்டி உள்ளாரே.

திருமாளவனைப் பிடிக்குமாம் ஆனால் திருமாமளவனின் தலித்து அரசியல் என்பது பிடிக்காதாம்.

திருமாவளவன் தனது அரசியற் தலவைனாகப்போற்றும் பெரியாரைப் பிடிக்காதாம்.

அப்படியாயின் எதற்க்காக திருமாமளவனைப்பிடிக்கும்? நல்ல நாடகம், ^_^

கருணானிதியை பெரியாரை அவதூறு செய்வோம் அதனால் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு தமிழகத்தில் பெருகுமாம்.புரிந்து கொண்டே வெறி பிடித்து அலைவோரை என்ன செய்வது?

QUOTE(வேலவன் @ Mar 23 2008, 08:08 AM)

கருணானிதியின் மருமகள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர் தெரியுமா???

வெற்று வேலவர் எழுதியது:

அவர் எத்தனை கோடிகளுக்கு அதிபதி என்பது உங்களுக்கு தெரியுமா?

ஐயோ பாவம்! :unsure:

கோடிகள் கோடிகளுடன் சேரும். இதில் சாதி எங்கே வந்தது மதம் எங்கே வந்தது! என்று நாம் வைத்த கருத்தை கூட புரிந்து கொள்ள முடிய்வில்லையா?

கோடீஸ்வர குடும்பங்களில் சம்பந்தம் நடப்பது கோடிகளின் அடிப்படையில். ஒரு குடிசையில் வாழும் ஒரு ஏழை தலித்துடன் பணக்கார திராவிட தலைவர்கள் யாரும் இதுவரை சம்பந்தம் வைத்தது உண்டா? என்று கேட்டால், திரு. வேலவன் ஒரு கோடீஸ்வர சம்பந்தத்தை உதாரணமாக கொண்டு வந்து காட்டுகிறார்.

இதற்கு வக்காலத்து வேறு. இதை எங்கு போய் சொல்வது. :wub:

திரு. திருமாவளவனை பிடிக்கும் என்பதற்கு வேறு தனிப்பட்ட காரணங்கள் உள்ளன. முரண்பட்ட அரசியல் கருத்துக்கள் கொண்டவர்களுடன் நட்போ, பற்றுதலோ இருக்க கூடாது என்று உங்களுக்கு யார் சொல்லித் தந்தது?

நாராய் நராய் ஆராய்வாய்.

Please try to grow buddy. Do not say I am already 6' tall

:unsure::lol::lol:

வெற்று வேலவர்களாக இருந்தவர்களும், வெட்டி வேலவர்களாக இருந்தவர்களும் ஊழல் மேல் ஊழல் செய்து கோடிகள் கொட்டும் வேலவர்களாக வலம் வந்து கொண்டிருப்பது திராவிட கழகங்களில் தான் அதிகம். அது மட்டும் அல்ல அந்த கும்பலில் வைர வேல் திருடர்களும் இருக்கிறார்கள்

:):):)

இது போன்ற பகுத்தறிவு புரட்சி ஈழத்தமிழர்களுக்கு தேவையில்லை

தோசம் கழிப்பதற்காக திருவேற்காடு கோவில் கதவுகளை மூடி வைத்துக்கொண்டு திருட்டுத்தனமாக பூசை நடத்திய திராவிட பாரம்பரியங்களாவது தெரியுமா?

கோவிலுக்கு வந்து சாமி கும்பிடுவதென்றால் கும்பிட்டு விட்டு போக

வேண்டியது தானே! இதில் எல்லாமா திருட்டுத்தனம் செய்வது?

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பாவம்! ^_^

கோடிகள் கோடிகளுடன் சேரும். இதில் சாதி எங்கே வந்தது மதம் எங்கே வந்தது! என்று நாம் வைத்த கருத்தை கூட புரிந்து கொள்ள முடிய்வில்லையா?

கோடீஸ்வர குடும்பங்களில் சம்பந்தம் நடப்பது கோடிகளின் அடிப்படையில். ஒரு குடிசையில் வாழும் ஒரு ஏழை தலித்துடன் பணக்கார திராவிட தலைவர்கள் யாரும் இதுவரை சம்பந்தம் வைத்தது உண்டா? என்று கேட்டால், திரு. வேலவன் ஒரு கோடீஸ்வர சம்பந்தத்தை உதாரணமாக கொண்டு வந்து காட்டுகிறார்.

இதற்கு வக்காலத்து வேறு. இதை எங்கு போய் சொல்வது. :wub:

திரு. திருமாவளவனை பிடிக்கும் என்பதற்கு வேறு தனிப்பட்ட காரணங்கள் உள்ளன. முரண்பட்ட அரசியல் கருத்துக்கள் கொண்டவர்களுடன் நட்போ, பற்றுதலோ இருக்க கூடாது என்று உங்களுக்கு யார் சொல்லித் தந்தது?

நாராய் நராய் ஆராய்வாய்.

Please try to grow buddy. Do not say I am already 6' tall

:unsure::unsure::lol:

தோசம் கழிப்பதற்கு திருவேற்காடு கோவில் கதவுகளை மூடி வைத்துக்கொண்டு திருட்டுத்தனமாக பூசை நடத்திய திராவிட பாரம்பரியங்களாவது தெரியுமா?

:lol::):)

இது தமிழ்க் களம் ஆகைகயால் தமிழில் கருத்தாடவும்.

ஒரு அரசியற் தலைவரைப் பிடிக்கும் என்றால் அவரின் அரசியல் சார்ந்ததாகத் தான் அது முடியும்.அதற்காக அவரின் மீசை பிடித்திருகிறது என்று கூற முடியுமா?

நான் சொலவ்து ஒரு பணக்கார தலித்தான துணையையே எற்றுக் கொள்ள முடியாதா யாழ்ப்பணத்து வேளாளனை விட ,பணத்துக்காக் கட்டும் திராவிடன் பறுவாயில்லை என்று தான். மேலும் கலைஞரிடம் இருக்கும் பணம் பல தலமுறைக்குக் காணும்.ஆகையால் அவர்கள் பணதுக்காக் கட்டினார்கள் என்பது அவதூறான பிரச்சாராம்.இவ்வாறான் அவதூறுகள் தான் எமக்கு உங்களைப் போன்றாரால் ஈழ விடுதலைபோருக்கு நிகழ்த்தப்படும் துரோகம் என்கிறோம்.

வர்க்கம் என்பது சாதியமாகவும் இருக்கிறது என்னும் அடிப்படையிலையே வர்க்கப் போராட்டத்தை முன் நிறுத்தும் கம்னூனிசத் தோழர்களும் இன்று பெரியாரைனதும் அம்பேக்காரினதும் போராட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.அதனால் தான் இன்று டி ராஜா போன்ற கமூனிசக்கட்ச்சிக் காரரும் பொதுவுடமைக் கட்ச்சிக்காரரும் தமீஈழ நலனுக்காக ஒன்றாக வேலை செய்கிறார்கள் என்னும் அடிப்படை அரசியல் யதார்த்தம் உங்களுக்குத் தெரியுமா?

பிஜேபியின் இந்துதுவாப் பாசிசத்தை மூர்க்கமாக எதிர்ப்பவர்கள் பொதுவுடமைக் கட்சிக் காரர்கள் என்பதாவது தெரியுமா?

No one knows every thing, I have noticed your arrogance and small ness in many of your conversations.Name dropping and too much of an ego trip is not good for you.

இங்கே ஈழவிடுதலைப் போராட்டத்தின் நேச சக்திகளைப் பகைத்துக் கொண்டு செயலாற்ற முடியாது என்னும் அடிப்படையைத் தான் எல்லோரும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.அதனைப் புரிந்து கொண்டு செயற்படுங்கள்.உங்கள் சொந்த மமதைக்கும் மத வெறிக்கும் ஈழ விடுதலைப் போரட்டத்தைப் பகடைக்காய் ஆக்கதீர்கள்.

இது தமிழ்க் களம் ஆகைகயால் தமிழில் கருத்தாடவும்.

No one knows every thing, I have noticed your arrogance and small ness in many of your conversations.Name dropping and too much of an ego trip is not good for

தமிழ் களத்தில் ஆங்கில கருத்து வேண்டாம் என்பது! நான்கு வரிகள் கழித்து சொன்னவரே ஆங்கிலத்தில் கருத்து வைப்பது. முன்னுக்குப்பின் முரண்பாடு . பரவாயில்லை. அப்படி இருப்பது தான் பகுத்தறிவு பாரம்பரியம். வாழ்க! என்ன கொடுமை சரவணன் சார் இது!

:unsure::lol::lol:

ஒரு அரசியற் தலைவரைப் பிடிக்கும் என்றால் அவரின் அரசியல் சார்ந்ததாகத் தான் அது முடியும்.அதற்காக அவரின் மீசை பிடித்திருகிறது என்று கூற முடியுமா?

?????????!!!!!!! :wub:^_^:unsure:

மேலும் கலைஞரிடம் இருக்கும் பணம் பல தலமுறைக்குக் காணும்.ஆகையால் அவர்கள் பணதுக்காக் கட்டினார்கள் என்பது அவதூறான பிரச்சாராம்.இவ்வாறான் அவதூறுகள் தான் எமக்கு உங்களைப் போன்றாரால் ஈழ விடுதலைபோருக்கு நிகழ்த்தப்படும் துரோகம் என்கிறோம்.

திரு கருணாநிதியின் கோடீஸ்வர சம்பந்தம் பணம் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல. தராதரம் (Status) சம்பந்தப்பட்டது. தூங்குவது போல் நடிக்க முயற்சிக்கிறீர்கள், ஆனால் முடியவில்லை.

கருத்துக்களோடு மோத முடியாமல் போகும் போது தனிப்பட்ட தாக்குதலில் (Character assassination) இறங்கி விடுகிறீர்கள். அது உங்கள் எழுத்துக்களில் எப்போதும் பார்ப்பது தான். ஆனால் இது போன்ற மோடி மஸ்தான் வித்தை காட்டுபவர்களை ஏற்கனவே நிறைய பார்த்தாகி விட்டது :)

Edited by vettri-vel

முன்னுக்குப்பின் முரண்பாடு . பரவாயில்லை. அப்படி இருப்பது தான் பகுத்தறிவு பாரம்பரியம். வாழ்க! :unsure:

?????????!!!!!!! :wub:^_^:unsure:

திரு கருணாநிதியின் கோடீஸ்வர சம்பந்தம் பணம் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல. தராதரம் (Status) சம்பந்தப்பட்டது. தூங்குவது போல் நடிக்க முயற்சிக்கிறீர்கள், ஆனால் முடியவில்லை.

கருத்துக்களோடு மோத முடியாமல் போகும் போது தனிப்பட்ட தாக்குதலில் (Character assassination) இறங்கி விடுகிறீர்கள். அது உங்கள் எழுத்துக்களில் எப்போதும் பார்ப்பது தான். ஆனால் இது போன்ற மோடி மஸ்தான் வித்தை காட்டுபவர்களை ஏற்கனவே நிறைய பார்த்தாகி விட்டது :lol:

அவலத்தைத் தருபவனுக்கே அதனைத் திரிப்பிக் கொடுப்பதே எங்கள் வழி.

//Please try to grow buddy. Do not say I am already 6' tall //

தனி நபர் தாக்குதலை இங்கே தொடக்கியது நீங்கள்,அதனையே திருப்பித் தந்துள்ளோம்.

தமிழில் உரையாடும் போதூ ஆங்கிலத்தில் உரையாடுவதன் மூலம் உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்னும் படம் காட்டலும் மமாதையும் ஆங்கிலம் எதோ உயர்வானது என்னும் உங்கள் மேட்டுக் குடித் தனதுக்கும் எதிரான எனது எதிர்வினையே எனது ஆங்கில வாசகம்.

அறைந்தால் திருப்பி அறைவதே எனது வழக்கம். :lol:

அவலத்தைத் தருபவனுக்கே அதனைத் திரிப்பிக் கொடுப்பதே எங்கள் வழி.

//Please try to grow buddy. Do not say I am already 6' tall //

தனி நபர் தாக்குதலை இங்கே தொடக்கியது நீங்கள்,அதனையே திருப்பித் தந்துள்ளோம்.

மேலே உள்ளது தனி நபர் தாக்குதல் என்றால் "வெற்றுவேலர்" என்பது என்ன? ஓ! ஒருவேளை வேறு வேலை பற்றி சொன்னீர்களோ! :wub:^_^

தமிழில் உரையாடும் போதூ ஆங்கிலத்தில் உரையாடுவதன் மூலம் உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்னும் படம் காட்டலும் மமாதையும் ஆங்கிலம் எதோ உயர்வானது என்னும் உங்கள் மேட்டுக் குடித் தனதுக்கும் எதிரான எனது எதிர்வினையே எனது ஆங்கில வாசகம்.

மேட்டுக்குடியா?! நானா?! முடிவே செய்து விட்டீர்களா? :unsure: :unsure: :lol:

காட்டுல மேட்டுல அலைஞ்சவன் தான்

ஆடிட பாடிட வேணாம்மா!

வறுமையின் கொடுமைய பார்த்தவன் தான்

ஓன் உடையில வறுமையும் வேணாம்மா!

அடி ஆத்தாடி நான் பாட்டாளி. ஓன் கூட்டாளி

நெலா அது வானத்து மேலே! பலானது ஓடத்து மேலே

ஒய்யா ஓ அது என்னா ஓ

:lol::) :)

Edited by vettri-vel

அது தனி நபர் தாக்குதல் என்றால் "வெற்றுவேலர்" என்பது என்ன? ஓ! ஒருவேளை வேறு வேலை பற்றி சொன்னீர்களோ!

மேட்டுக்குடியா?! நானா?! முடிவே செய்து விட்டீர்களா?

காட்டுல மேட்டுல அலைஞ்சவன் தான்

ஆடிட பாடிட வேணாம்மா!

வறுமையின் கொடுமைய பார்த்தவன் தான்

ஓன் உடையில வறுமையும் வேணாம்மா!

அடி ஆத்தாடி நான் பாட்டாளி. ஓன் கூட்டாளி

நெலா அது வானத்து மேலே! பலானது ஓடத்து மேலே

ஒய்யா ஓ அது என்னா ஓ

'vettri-vel' என்பதை தமிழ் படுத்தினால் வெற்று வெல் என்று வருகிறது உயர்வாகச் சொல்லும் போது வெற்று வேலவர் என்று வரூகிறது. :wub:

தமிழல் உரையாடும் போது ஆங்கிலத்தில் உரையாடுவது டமிழ் மேட்டிக் குடித்தனம் என்று சொன்னேன்.

அதற்கு நிலாவுக் கெல்லாம் போக அவசியம் இல்லை. ^_^:unsure:

'vettri-vel' என்பதை தமிழ் படுத்தினால் வெற்று வெல் என்று வருகிறது உயர்வாகச் சொல்லும் போது வெற்று வேலவர் என்று வரூகிறது. :wub:

ஆஹா! அது VETTRU-VEL இது VETTRI-VEL

கட்டு கட்டு கீரை கட்டு

அடிக்கடி சப்பை கட்டு

ஓ பப்பம்மா! ஐயோ பாவம்மா! ^_^

NESAMANIPONNIAH தெரு என்பதை நாசமாபோனியா தெரு என்று வாசித்து விடாதீர்கள்

:unsure:

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் உங்கள் இரட்டை நாக்கு எழுதுக்களை நண்பர் வேலவன் அப்பட்டமாக உரித்துக் காட்டி உள்ளாரே.

திருமாளவனைப் பிடிக்குமாம் ஆனால் திருமாமளவனின் தலித்து அரசியல் என்பது பிடிக்காதாம்.

திருமாவளவன் தனது அரசியற் தலவைனாகப்போற்றும் பெரியாரைப் பிடிக்காதாம்.

அப்படியாயின் எதற்க்காக திருமாமளவனைப்பிடிக்கும்? நல்ல நாடகம்

திருமாவளவன் ராமசாமியைத் தன்னுடைய தலைவராகச் சொன்னாரா? அவர் எப்போது தன்னைத் திராவிடவாதியாகச் சொன்னார்? அவர் பௌத்தமதத்தில் பற்று வைத்திருக்கின்ற பக்திமான். மதிப்பு வைத்திருப்பது என்பதற்கும், அவரைத் தலைவராக வைத்திரு;ககின்றேன் என்பதற்கும் எவ்வளவோ வித்தியாசம்..... எனக்கும் ராமசாமி மேலே ஒரு காலத்தில் மதிப்பு இருந்தது. ஆனால் அந்த அறியாமை நீங்கியது, அவர் வழிவந்ததாகச் சொன்ன யாழ்கள உறுப்பினர்களையும், அவர் கருத்துக்களையும் படித்தப்புறம்...

NESAMANIPONNIAH தெரு என்பதை நாசமாபோனியா தெரு என்று வாசித்து விடாதீர்கள்

:wub:

Come here.. எண்டதை நாம் கோமி கிரி எண்டுதான் வாசிக்கிறனான்...!!

  • கருத்துக்கள உறவுகள்

Come here.. எண்டதை நாம் கோமி கிரி எண்டுதான் வாசிக்கிறனான்...!!

இத்தாலியன், ஸ்பானிஸ் படிச்சிருக்கின்றீர்களோ? அவர்கள் அப்படித் தானே உச்சரிப்பார்கள்... :wub:

ஆஹா! அது VETTRU-VEL இது VETTRI-VEL

கட்டு கட்டு கீரை கட்டு

அடிக்கடி சப்பை கட்டு

ஓ பப்பம்மா! ஐயோ பாவம்மா! ^_^

NESAMANIPONNIAH தெரு என்பதை நாசமாபோனியா தெரு என்று வாசித்து விடாதீர்கள்

:unsure:

ஓ வெற்றி வேலா? அதனை இப்படியும் எழுதலாம் vetree veel

பேசாமல் தமிழில் எழுதி இருந்தால் பிரச்சினை இருந்திருக்காது. :wub:

ஓ வெற்றி வேலா? அதனை இப்படியும் எழுதலாம் vetree veel

பேசாமல் தமிழில் எழுதி இருந்தால் பிரச்சினை இருந்திருக்காது. :wub:

ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே! பரவாயில்லை. பகுத்தறிவு(?) பாரம்பரியத்தை அப்படியே கடைப்பிடி க்கிறீர்கள்! ^_^

அதற்காக நீங்கள் களத்தில் NARATHAR என்று ஆங்கிலத்தில் இட்டுள்ள உங்கள்

பெயரை நான் நாற தார் என்று வாசித்துவிடப் போவதில்லை :unsure:

Edited by vettri-vel

அனைவரும் தடம் மாறி தனிப்பட்ட தாக்குதல்களை செய்யிறிங்க....! :wub:

ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே! பரவாயில்லை. பகுத்தறிவு(?) பாரம்பரியத்தை அப்படியே கடைப்பிடி க்கிறீர்கள்! :wub:

அதற்காக நீங்கள் களத்தில் NARATHAR என்று ஆங்கிலத்தில் இட்டுள்ள உங்கள்

பெயரை நான் நாற தார் என்று வாசித்துவிடப் போவதில்லை ^_^

நீங்கள் எப்படியாவது எழுதி விட்டுப் போங்கள், நான் உங்களைப் போல பேர் பிழையாக எழுதப்பட்டதற்காக கவலைப் படப் போவதில்லை. :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.