Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிறீலங்காவைப் புறக்கணி" என்ன வேடிக்கை விளையாட்டா..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vadali3lk0.jpg

அண்மைக் காலங்களாக புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்களை நோக்கி புறக்கணி சிறீலங்கா என்பதன் கீழ் சிறீலங்காவில் இருந்து தருவிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து அதன் மூலம் சிறீலங்கா அரசு பெறும் பொருளாதார வருவாயைக் கட்டுப்படுத்தி தமிழர்களின் பணம் போருக்கு உபயோகமாவதைத் தடுக்க குரல் எழுப்புகின்றனர்.

அந்த வகையில் அண்மையில் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்நாட்டு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை அழைத்து இந்தப் புறக்கணிப்புப் பற்றி கருத்துப் பகரப்பட்டதுடன் இவை குறித்து மக்களுக்கு அறிவுறுத்தவும் கேட்கப்பட்டனர்.

ஆனால்.. லண்டனில் இருந்து வெளிவரும் வர்த்தக விளம்பரங்களை நம்பிப்பிழைக்கும் "ஓசிப்" பத்திரிகைகள் உட்பட பத்திரிகைகள் தற்போதும் சிறீலங்கா எயார் லைன்ஸ் உட்பட சிறீலங்காவுக்குரிய சேவைகள் பொருட்களை மக்கள் பாவிக்க விளம்பரம் செய்கின்றன.

ஒரு பக்கத்தில் சிறீலங்கா சேவைகளை பொருட்களை பாவிக்க விளம்பரமும் மறுபக்கத்தில் சிறீலங்காவின் சேவைகள் மற்றும் பொருட்களைப் புறக்கணிக்கக் கோரும் கட்டுரைகளுமாக பத்திரிகைகள் வேடிக்கை விநோதம் காட்டும் செயலாக இப்புறக்கணிப்பு சிறீலங்காவை ஆக்கி வருகின்றன.

இது மக்களை ஒரு குழப்பமான சூழலுக்குள் தள்ளி உள்ளது. பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி தமிழ் பத்திரிகையாளர்களை அழைத்து அறிவுறுத்தியும் ஏன் இப்பத்திரிகைகள்.. சிறீலங்கா பொருட்கள் மற்றும் சேவைகள் சார்ந்த விளம்பரங்களை தொடர்ந்து பிரசுரிக்கின்றன. இப்பத்திரிகைகள் மறைமுகமாக சிறீலங்காவுக்கு சேவைதானே செய்கின்றன.

அப்போ இப்பத்திரிகைகளைப் புறக்கணிக்கவும் மக்களைக் கோர முடியுமா..??! சிறீலங்காவைப் புறக்கணிப்போம் என்பது உண்மையில் தாயக மக்களின் அக்கறையின் பேரில் நிகழ்கிறதா அல்லது தங்களை விளம்பரப்படுத்தவும் புகழ்தேடவும் சில தரப்புக்களை திருப்திப்படுத்தவும் செய்யப்படும் ஒரு போலி செயற்பாடா என்ற எண்ணமும் மக்கள் மனங்களில் எழாமல் இல்லை.

இவை குறித்து புறக்கணிப்பு சிறீலங்காவை முன்னெடுப்பவர்கள் மக்களையும் பத்திரிகைகளையும் விளம்பரதாரர்களையும் அறிவுறுத்துவார்களா..??!

இன்றேல்.. சும்மா வேடிக்கையை தொடர்வார்களா..??! அப்புறம் மக்கள் எந்தப் புறக்கணிப்பு கோசங்களையும் சீரியஸா எடுக்காத நிலையே தோன்றும்..! இவை பலபாதகமான விளைவுகளை எதிர்காலத்தில் உண்டுபண்ணலாம்..!

வடலி ஓர் உதாரணத்துக்காகப் பாவிக்கப்பட்டுள்ளது. வடலி மட்டுமல்ல கிட்டத்தட்ட எல்லாப் பத்திரிகைகளுமே இப்படித்தான் செயற்படுகின்றன. ஏனிந்த இரட்டை வேடம்..??! :lol:

Edited by nedukkalapoovan

நல்ல கேள்விதான். "சிறிலங்காவைப் புறக்கணி" பேச்சு வடிவிலேயிருந்து எழுத்து வடிவிற்கு வரவே பல்லாண்டு காலங்கள் பிடித்தது. அது செயல்வடிவம் பெறுவதற்கு நாங்கள் இன்னுமொரு நூற்றாண்டு காலம் பொறுக்கவேண்டியிருக்கும். அதுக்குள்ளே அவசரப்பட்டால் எப்படி? தமிழன் எப்பவும் ஆமை வேகத்திலை தான் போவான். இதாலைதான் எங்களுக்கு இன்னும் விடிவு பிறக்காமல் இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமுங்கொ......... வெளிநாட்டுக்கு ஓடிவந்து வெள்ளையனின்ர கால்நக்கிக்கொண்டு விடுதலய பத்தி பேசுற விசுக்கோத்து தமிழக்கூட்டம் இருக்கிற வரைக்கும் இப்புடித்தானாம்.......... நான் உங்கள சொல்லலிங்கோ :o

உண்மைதான். ஆனால் நீங்கள் மட்டும் தாயகத்திலை ஆட்லரித் தளத்திலை இருந்துகொண்டு கருத்தெழுதுகிறீங்களாக்கும். <_<<_<:huh:

உண்மைதான். ஆனால் நீங்கள் மட்டும் தாயகத்திலை ஆட்லரித் தளத்திலை இருந்துகொண்டு கருத்தெழுதுகிறீங்களாக்கும். :huh::wub::lol:

தமிழச்சி அக்கா ஆட்டிலறி தளம் என்றா என்ன அது எப்படி இருக்கும் <_< ...பூஸ் குட்டி அங்கையோ நிற்கிறவர்... <_<

அப்ப நான் வரட்டா!!

எனக்கும் வடிவாத் தெரியாது யமுனா. நானும் இஞ்சை கொஞ்சப்பேர் எழுதுறதை வாசிச்சுப் போட்டு, வெட்டி ஒட்டுறதுதான். உதெல்லாம் தெரிஞ்சால் நான் ஏன் இங்கை இருக்கிறன்? நான் பூனைக்குட்டி நிக்கிற இடத்தை மாத்திச் சொல்லிப் போட்டன். நான் நினைக்கிறன், அவர் அந்த நீலநிற உடுப்புப் போட்டு கொஞ்ச நாளைக்கு முதல் ஏதோ செய்திச்சினமே, அங்கை நிக்கிறார் போல. இல்லாட்டி அந்தப் புதுசாத் தொடங்கின அந்தப் பச்சை உடுப்புக் காறரோடை நிக்கிறாரோ தெரியேல்லை. உவையின்ர விசயம் எல்லாம் எங்களுக்குச் சரியாத் தெரிய வராதுதானே? நாங்கள் எல்லாம் ஒண்டுமே இல்லாத மரமண்டையள்தானே? :huh:<_<<_<

எனக்கும் வடிவாத் தெரியாது யமுனா. நானும் இஞ்சை கொஞ்சப்பேர் எழுதுறதை வாசிச்சுப் போட்டு, வெட்டி ஒட்டுறதுதான். உதெல்லாம் தெரிஞ்சால் நான் ஏன் இங்கை இருக்கிறன்? நான் பூனைக்குட்டி நிக்கிற இடத்தை மாத்திச் சொல்லிப் போட்டன். நான் நினைக்கிறன், அவர் அந்த நீலநிற உடுப்புப் போட்டு கொஞ்ச நாளைக்கு முதல் ஏதோ செய்திச்சினமே, அங்கை நிக்கிறார் போல. இல்லாட்டி அந்தப் புதுசாத் தொடங்கின அந்தப் பச்சை உடுப்புக் காறரோடை நிக்கிறாரோ தெரியேல்லை. உவையின்ர விசயம் எல்லாம் எங்களுக்குச் சரியாத் தெரிய வராதுதானே? நாங்கள் எல்லாம் ஒண்டுமே இல்லாத மரமண்டையள்தானே? :lol:<_<<_<

சரியா சொன்னீங்க அக்கா நாங்க மரமண்டையா இருக்கிறது எவ்வளவோ மேல் பாருங்கோ..இல்லாட்டி எங்களுக்கும் வியாதி தொற்றி இருக்கு... :huh::wub::lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கேள்விதான். "சிறிலங்காவைப் புறக்கணி" பேச்சு வடிவிலேயிருந்து எழுத்து வடிவிற்கு வரவே பல்லாண்டு காலங்கள் பிடித்தது. அது செயல்வடிவம் பெறுவதற்கு நாங்கள் இன்னுமொரு நூற்றாண்டு காலம் பொறுக்கவேண்டியிருக்கும். அதுக்குள்ளே அவசரப்பட்டால் எப்படி? தமிழன் எப்பவும் ஆமை வேகத்திலை தான் போவான். இதாலைதான் எங்களுக்கு இன்னும் விடிவு பிறக்காமல் இருக்கு.

<_<<_<

நீங்க மட்டும் முயல் வேகத்தில போறியளோ????????????????????? :huh:

நாங்களென்ன உங்கள மாதிரியா............. நீங்க யுத்த களத்தில நிண்டு வெளிநாட்டில இருக்கிற தமிழாக்கள் ஆமை வேகத்தில போறாங்க எண்டு சொல்றிங்கள்............................... நாங்க வெளிநாட்டில கிடந்து வெள்ளையன்ர கால நக்கிக்கொண்டு உப்பிடித்தான் விசுக்கோத்து கதையள் கதைக்கிறம் :wub::lol::lol:

Edited by poonai_kuddy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை பூனைக்குட்டி இன்னும் நக்குற புத்தியிலைதான் இருக்கிறார்

ஏனெண்டால் எதுக்கெடுத்தாலும் நக்குற சொல்லை அடிக்கடி பாவிக்கிறார்

அதுசரி பூனை எப்பவும் நக்கித்தானே .............. <_<

உங்க லண்டனில இருக்கிற முழு தெமிழர் பிரயாண முகவர் நிலயங்களின் விளம்பர பலகையை பார்த்தால் தெரியும் உந்த வலசுகள் எப்படி சீரிலங்கன் விமானத்திற்கு முன்னுரிமை கொடுக்கினம் எண்டு. விளக்கு அலங்காரங்களில் சிரிலன்கன் விமான சின்னத்தை போட்டு அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் தாங்கள் தான் எண்டு விசுகோத்துகள் பலகையை கொழுவிப்போட்டு இருக்குதுகள்.

இதுகள் தான் அகதியா வந்து தஞ்சம் கேட்கேக்க சிரிலங்கா எங்களை அடிக்குது அதுவும் ஒரு நாடோ. ஜயோ உங்கட நாட்டில இருக்க விடுங்கோ எண்டு இந்த விசுக்கோத்துகள் புலம்பினதுகள்.

இப்ப சிரிலன்கா விமானம் நல்ல விமானம் அதில போங்கள் எண்டு எச்சில் வடிய தமிழர் காசை சிங்களவனுக்கு இறைக்க விளம்பரப்பலகையை கொழுவிப்போட்டு யார் இளிச்ச தமிழன் வரான் நாலு காசை பறிச்சு போடலாம் எண்டு நாக்கை தொங்க போட்டு கொண்டு இலண்டன் சுற்று வட்டாரம் முழுக்க பெட்டிகடை போட்டு விட்டு குந்து கொண்டு இருக்கினம்.

பிணம் திண்டாலும் காசு வந்தால் சரி என்பதுதான் விசுக்கோத்துகளின் நிலைப்பாடு

ஏன் தமிழ் முகவர்களை திட்டுகின்றீர்கள். அவர்கள் செய்யாது விட்டால் வெள்ளை முகவர்கள் செய்வார்கள். யார் செய்கின்றார்கள் என்பது முக்கியமில்லை. ஆனால் மக்கள் எதை விரும்புகின்றார்கள் என்பது தான் முக்கியம். நேரடிப் பிரயாணம் குறைந்த விலையில் பிரயாணச்சீட்டு இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். புறக்கணிக்கச் சொல்பவர்கள் முதலில் மாற்று ஏற்பாட்டைச் செய்துவிட்டு புறக்கணிக்கச் சொல்லலாமே??

அதுசரி எந்த விமானம் எடுத்தாலும் கட்டுநாயக்கா போய்த் தானே போக வேண்டும். அதை என்ன செய்வது?? அப்புறம் கட்டுநாயக்கா விமானநிலையவரியும் அறவிடுகின்றார்களே அதை என்ன செய்வது?? பேசாமல் தாயகம் போவதையே புறக்கணிக்கவா??

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் இலங்கைக்கு போகின்றவர்கள் தவிர்க்க முடியாத காரணங்களுக்காகவே போகின்றனர். முன்னர் கதி பசிபிக், கே. எல். எம். போன்ற மலிவான சிறந்த விமான சேவைகள் இலங்கைக்கு போய் வந்தன. கதி பசிபிக் இப்போது போவதில்லை. இந்தியாவுக்கூடாக இந்தியனில் போகலாம் என்றால் அதற்கு இந்தியாவில் இலங்கைத்தமிழன் என்றால் பிடிக்கிறான் என்ற பயம்.

அதுசரி எந்த விமானம் எடுத்தாலும் கட்டுநாயக்கா போய்த் தானே போக வேண்டும். அதை என்ன செய்வது?? அப்புறம் கட்டுநாயக்கா விமானநிலையவரியும் அறவிடுகின்றார்களே அதை என்ன செய்வது?? பேசாமல் தாயகம் போவதையே புறக்கணிக்கவா??

இந்த மாற்று வழிகள் திறந்தால் மக்கள் சிறிலங்கன், இந்தியன் எல்லாத்தையும் விட்டுவிட்டு கூடின விலக்கு கூட போய்வருவார்கள்.

  • முல்லத்தீவு துறைமுத்துக்கு சிங்கப்புரிலிருந்து கப்பல் சேவை.
  • கிளிநொச்சிக்கு சிங்கப்புரில் இருந்து விமான சேவை.

Edited by Jude

இன்றைய நிலையில் இலங்கைக்கு போகின்றவர்கள் தவிர்க்க முடியாத காரணங்களுக்காகவே போகின்றனர். முன்னர் கதி பசிபிக், கே. எல். எம். போன்ற மலிவான சிறந்த விமான சேவைகள் இலங்கைக்கு போய் வந்தன. கதி பசிபிக் இப்போது போவதில்லை. இந்தியாவுக்கூடாக இந்தியனில் போகலாம் என்றால் அதற்கு இந்தியாவில் இலங்கைத்தமிழன் என்றால் பிடிக்கிறான் என்ற பயம்.

இந்த மாற்று வழிகள் திறந்தால் மக்கள் சிறிலங்கன், இந்தியன் எல்லாத்தையும் விட்டுவிட்டு கூடின விலக்கு கூட போய்வருவார்கள்.

  • முல்லத்தீவு துறைமுத்துக்கு சிங்கப்புரிலிருந்து கப்பல் சேவை.
  • கிளிநொச்சிக்கு சிங்கப்புரில் இருந்து விமான சேவை.

Jude

தற்போது சாத்தியமில்லை என்பதால் உங்கள் ஆசைக்கு எழுதுகின்றீர்கள்.

ஏன் பேசாமல் ஐரோப்பாவிலிருந்து நேரடியாகவே கிளிநொச்சிக்கு விமானசேவை என்பதையும் சேர்த்திருக்கலாம். <_<:D

  • கருத்துக்கள உறவுகள்

Jude

தற்போது சாத்தியமில்லை என்பதால் உங்கள் ஆசைக்கு எழுதுகின்றீர்கள்.

ஏன் பேசாமல் ஐரோப்பாவிலிருந்து நேரடியாகவே கிளிநொச்சிக்கு விமானசேவை என்பதையும் சேர்த்திருக்கலாம்.

சோமாலிலாந் என்ற அங்கிகரிக்கப்படாத நாட்டுக்கு மக்கள் எப்படி போய் வருகிறார்கள் என்று தெரியுமா?

அது போன்ற வழி கிளிநொச்சிக்கும் சாத்தியம்.

வாடகை விமானங்கள் வன்னிக்கு போய்வருவது சாத்தயமே.

Jude

மிக்க மகிழ்ச்சியாகவிருக்கின்றது உங்கள் போன்ற அதிபுத்திசாலிகளை பார்க்கும் போது. அப்படியே வன்னிக்கு நேரடி விமானசேவையை ஜாம்ஜாம் என்று ஏற்பாடு செய்து விடுங்கள். சுவிசில் நான் முகவராக செயல்படுகின்றேன். :D

இனி என்ன ஸ்ரீலங்கன் விமானசேவை ஈ, காக்கைகளைத் தான் ஏற்றிச் செல்ல வேண்டும். :wub::(

ஆஹா நாம் ஸ்ரீலங்கன் விமானசேவையை புறக்கணிக்கப் போகின்றோம். <_<:D

வருசத்தில 2...3 தரம் வன்னிக்கு போய்வாறாக்கள் மாற்று வழிகள் இல்லை எண்டு கவலைப்படுகினம். போறது கொழும்பு கண்டி கதிர்காமம் கிக்கடுவ. மிஞ்சி மிஞ்சி போன யாழ்பாணம் அதுவும் இரத்மலானையில இருந்து விமானத்தில ஏறி பலாலி இறங்கிறவை.

குறுக்ஸ்

அதற்கென்ன எனிமேல் Jude ஒழுங்கு செய்யும் விமானசேவையில் வன்னி சென்று அங்கிருந்து சிறியரக விமானத்தில் அல்லது ஹலியில் கொழும்பு கண்டி, கதிர்காமம், கிக்கடுவ, யாழ்ப்பாணம் செல்லலாம். இவைக்கும் குறைந்தவிலையில் பிரயாணச்சீட்டுகளை Jude ஒழுங்கு செய்வார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.