Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் வெறும் வெற்றியை மட்டும் கொண்டாடும் சந்தரப்பவாதிகளா?

Featured Replies

நான்காம் கட்ட யுத்தம் ஆரம்பித்து இன்று சிறீ லங்கா முழுவதுமான ஒரு யுத்தம் நடை பெறுகின்ற இந்த வேளையில் சிறீ லங்கா அரசானது ஒரு தந்திரோபாயமான உளவியில் ரீதியான ஒரு போரை புலம் பெயர் தமிழ் மக்கள் பக்கம் முடக்கிவிட்டுள்ளது.

கிழக்கு மீட்கப்பட்டு விட்டது, வடக்கில் இராணுவம் வெற்றியை நோக்கி நடைபோடுகிறது என்ற பாணியில் தனது உளவியில் ரீதியான ஒரு பிரச்சார யுத்தத்தை தமக்கு ஆதரவான தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் ஊடாக நடாத்தி வருகிறது. புலிகளின் தலைவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார், பொட்டம்மானுக்கு இருதய வருத்தம், புலிகளுக்குள் மோதல், புலிகள் பலவீனமடைந்து விட்டனர் என்று தினமும் தொடர்ச்சியாக சிறீ லங்கா அரசின் உளவுப்பிரிவு மிகவும் கட்சிதமாக தனது பரப்புரையை செய்து வருகிறது. இன்று புலம் பெயர் நாட்டில் உள்ள பல தமிழ் பேசும் மக்கள் இதனை நம்பவும் தயாராக உள்ளனர். நெருப்பில்லாமால் புகைவராது என்ற பழமொழியை முன்னுதாரணம் காட்டி தமிழ் தேசிய விடுதலைக்கு ஆதரவானவர்கள் கூட இந்த பிரச்சார வலையில் வீழ்ந்து வருகிறார்கள். இதற்கு புலம் பெயர் நாட்டில் உள்ள சில தமிழ் ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மையும் ஒரு காரணியாக உள்ளது.

விடுதலைப் போராட்டம் என்பது நாள் குறித்தோ அல்லது நேரம் குறித்தோ நடாத்தப்படக் கூடிய ஒரு விடயம் அல்ல! ஒரு விடுதலைப் போராட்டமென்பது இழப்புகள் நிறைய வரும் என்பதை ஏற்றுக்கொண்டு மிகுந்த அர்பணிப்புடன் வெற்றியை நோக்கி இறுதி வரை உள உறுதியுடன் போராடுவதே! இது வரலாற்று உண்மை. களத்திலும் சரி அதற்கு ஆதரவாக புலம் பெயர் நாட்டிலும் சரி போராட்ட சக்திகள்; மற்றும் அதை ஆதரிப்பவர்கள் தமது உள சுத்தியான முழுமையான அர்ப்பணிப்பை வழங்குவதன் மூலமே ஒரு விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும். ஒரு விடுதலைப் போராட்டத்தில் குறிப்பாக பலம் வாய்ந்த ஒரு எதிரியுடன் நடாத்தும் ஒரு போராட்டத்தில் நமக்கு இழப்பகள் வருவது என்பது தவிர்க்க முடியாத ஒரு விடயம். ஒவ்வரு இழப்புமே ஒவ்வொரு பலம் வாய்ந்த தூண்களாக போராட்டத்தை உறுதிப்படுத்தும். எம்மை விட பலமடங்கு சக்தி வாய்ந்த எதிரியுடன் நாம் பெறும் சிறு சிறு வெற்றிகளே நமது பெரு வெற்றிகளின் அடிக்கல்களாக அமையும். வடக்கில் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை தம் வசப்படுத்த சிறீ லங்கா அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளும் தொடரந்த தோல்வியையே எதிர்கொள்கிறது. பலம் வாய்ந்த விமானப்படை, பல மடங்கு பலம் வாய்ந்த தரைப்படையிருந்தும் சிறீ லங்கா அரசின் வடக்கின் முன்நகர்வு இன்னமும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. அனால் இதை நாம் ஒரு வெற்றியாக கருதாது புலிகள் இன்னமும் அடிக்க தொடங்க வில்லை என்று குறைபாடுவதை என்னவென்பது? பலம் வாய்ந்த எதிரி பலமாக இருக்கும் பொது அவனுடன் மோதுவது மிகவும் முட்டாள்தனமான ஒரு விடயம். எதிரி பலவீனமாக இருக்கும் போதே அவனை தாக்கவேண்டும். இது அனைவரும் அறிந்த போர் தந்திரம். புலம் பெயர் நாட்டில் பிரச்சனை என்ன வென்றால் நாட்டுக்கொரு இராணுவ ஆய்வாளர் சாத்திரம் சொல்லுற கணக்கில் ஆய்வுகள் நடாத்துவதே. இது தேவையை? விடுதலைப் போராட்டம் என்பது எதிர்வு கூறி நடாத்தப்படுவது அல்ல என்பதை இந்த ஆயர்வாளர்கள முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வெறும் வெற்றிகளை மட்டுமே கொண்டாடி தோல்வியுறம்போது சோர்வடைவது என்பது விடுதலைப் போராட்ட ஆதரவிற்கு உரம் சேர்க்கும் விடயங்கள் அல்ல! இழப்புகள், தடைகள் எது வந்தாலும் ஒரு போராட்ட வெற்றிக்கு உறுதுணையாக மன உறுதியுடன் நிற்க தயாராக இருப்பவர்களே உண்மையான ஆதரவாளர்கள்! ஏனையவர்கள் வெறும் வெற்றியை மட்டும் கொண்டாடும் சந்தரப்பவாதிகள் என்பது மறுக்க முடியாத உண்மை. இவர்களுக்கான ஆங்கிலப் பதம் Glory Hunters!

நன்றி : www.orunews.com/

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேறை ஜனா. யாழிலேயும் கொஞ்சபேரின் நக்கலும் நளினமும் எள்ளளவும் சிங்கள ஆங்கில ஊடகங்களுக்கு குறைவாக இல்லையே. இவர்களுக்கு ஏன் இப்படி ஒரு குறுக்காலே போன புத்தியோ அவனுக்கு தான் வெளிச்சம்.

  • தொடங்கியவர்

கொழுமபு வெள்ளவத்தையில் சொகுசு வீடு கொழும்த்த சம்பளம் (எலும்புத்...) இனத்தின் பால் பற்று எப்படி வரும். இன்னும் சிலர் .... வேண்டாம் ஏன் வீண் வம்பு.

ஜானா

வலியன வாழும்...

போராடமல் வெற்றி கிடைக்காது... நெருப்பில்லாமல் புகையாதென்று கதைக்கிறவங்களால எந்த பிரயோசனமும் இல்லை... வெறும் வெத்துவேட்டு த்தான்..

  • கருத்துக்கள உறவுகள்

நாம் வெறும் வெற்றியை மட்டும் கொண்டாடும் சந்தரப்பவாதிகளா?

இதற்கான பதிலுக்கு எந்த ஆராய்ச்சியும் தேவையில்லை. இரண்டு விதமான சாவுச்செய்திகள் கீழே..!

1) எழுத்தாளர் சுஜாதா (பார்வைகள்: 2163) (கருத்துகள்: 36)

2) தணிகை நிலவன், வேழினி, இராகவன், குயிலன், வெற்றிமகன், நிலவன், களக்கண்ணன், திருமாறன், ஈழவன்(பார்வைகள்: 1102) (கருத்துகள்: 11)

ஈழப் போராட்டம் புலம்பெயர்ந்தவர்களை மையமாக வைத்து நடத்தப்படவில்லை என்பது எல்லோருக்குமான தெளிவு. புலம் பெயர்ந்தவர்களினால் செய்யப்படும் போராட்டத்திற்கான உதவியினை போராட்டத்தின்பால் உணர்வும், தெளிவும் கொண்டவர்களிடமிருந்து இந்த உக்கிப்போன பிரசாரங்களினால் தடுத்துவிட முடியாது. உண்மையைக் கூறப்போனால், போராட்டம் பற்றிய சரியான செய்தி இலங்கையில் வாழ்பவர்களை விடவும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நன்கு அறிவர்.

தெளிவில்லாதவர்களிடந்தான் இந்தப் பருப்பு வேகும். இலங்கையின் தகவல்களை தற்போது சிங்கள ஊடகங்களே நையாண்டி செய்கின்ற நிலையில், இந்தக் களத்திலே இருக்கின்ற நையாண்டியாளர்கள் கோமாளிகள்தான்.

அண்ணை அரசின் பரப்புரைகளை புலம்பெயர்ந்தவர்கள் நம்புறார்களோ இல்லையோ தெரியாது. உண்மையைச் சொன்னா புலத்தவர்கள் மத்தியிலை ஒரு கணிசமானவர்களிடம் புலிகளின் பலம் தொடர்பில் நம்பிக்கை குறைந்து வருகிறது என்பது உண்மை. இதற்கு எங்களின் ஊடகங்கள் மற்றும் அவற்றில் பணிபுரியும் போரியல் மேதைகளே காரணம்.

சமகால அரசியல் மற்றும் இராணுவ நிலவரம் தொடர்பாக 10.02.08 அன்று அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை வழங்கிய மிக நீண்ட நேர்காணலும், நேயர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களும்(28.02.08)

real player stream

mp3 download

நீண்ட நேர்காணல் (கிட்டத்தட்ட 2மணத்தியாலம் 40 நிமிடங்கள்). பொறுமையாக கேட்டீர்கள் என்றால் பல விடையங்களைப் புரிந்து கொள்ளலாம். தற்போதை நிலமை, புலம்பெயர்ந்தவர்கள் பற்றிய எதிர்பார்ப்புகள், தற்கால எதிர்காலக் கடமைகள் என்று பலவிடையங்கள் நேர்மையாக மழுப்பல்கள் இன்றி தொடப்பட்டிருக்கிறது.

புலிகளின் உத்தியோக பூர்வ ஏடுகள் பேச்சாளர்கள் என்று எடுத்துக் கொண்டால் அவர்களால் தமிழர்களிற்கு 1 கதை சிங்களத்திற்கு 1 கதை சர்வதேசத்திற்கு 1 கதை என்று தமது நிலமை பற்றி சொல்ல முடியாது. தமிழரிற்கு என்று சொல்லுவதையும் சிறீலங்கா முதல் சர்வதேசம் வரை மொழிபெயர்த்து கவனமாக அவதானிக்கிறது. அது தாயகத்தில் இருந்து பேசினாலும் சரி சமாதான காலத்தில் ஐரோப்பா வந்த பொழுது புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் பேசினாலும் சரி. அவை அனைத்தும் சிறீலங்கா சர்வதேசம் என்று எல்லாத்தரப்பும் இந்தப் பேச்சுகளில் இருந்து புலிகளின் நிலைப்பாடுகளை நிலமைகளை அறிய முற்படுவார்கள் என்பதை உள்வாங்கிய படிதான் பேச முடியும்.

எமது தேவைகளை எதிரியின் பலம் ஏனைய போராட்டங்களின் வரலாறுகளின் இருந்து ஒப்பீடுகள் மூலம் அறிவூட்ட முற்படுவது ஊடகர்கள் ஆய்வாளர்களின் கடமை. இதை புலிகளின் பிரமுகர்களே உத்தியோகபூர்வ ஏடுகள் ஊடகங்கள் செய்யப் போவதில்லை. முதலில் தேவைகள் சவால்கள் இருக்கு என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் அதன் பின்னர் தான் அதற்கேற்ப பங்களிப்பது பற்றி சிந்தித்து செயற்படுவது பற்றிய மனநிலைக்கு புலம்பெயர்ந்தவர்கள் நகர்வார்கள்.

இன்று புலிகளின் பலம் என்பதை பற்றி அந்த ஆயுதம் இருக்காம் இந்த ஆயுதம் இருக்காம் அப்பிடி அடிக்கலாமாம் இப்பிடி அடிவிழலாமாம் என்ற சாகசக் கதைகள் தான் எமது ஊடகங்களின் அவதானமாக இருக்கிறது. இதை மாத்தி நாங்கள் அப்படிப் பலவீனமாக இருக்கிறம் இப்படிப்பலவீனமாக இருக்கிறம் அந்த எரி பொருளுக்கு தட்டுப்பாடாம் இந்த உதிரிப்பாகத்திற்கு தட்டுப்பாடாம் எண்டு கதைப்பது அல்ல குறிக்கோள். எதிரியின் பலம் பற்றியதாக அவதானத்தை மாற்ற வேண்டும். அதை சமச்சீர செய்ய நாம் என்ன செய்யலாம் எப்படி பங்களிக்கலாம் உழைக்கலாம் என்ற சிந்தனைகளைத் தூண்டும் ஆய்வுகள் கண்ணோட்டங்கள் தேவை. இந்தியனாமிக்கும் அடிச்சனாங்கள் எடிபலவில புடுங்கினாங்கள் ஜெயசுக்குருவில உருவினாங்கள் என்றது. பிறகு கடசிப் புலியின் கடசி மூச்சுவரை போராட்டம் நடக்கும் காத்துப் புகமுடியாத இடத்துக்கை புகுந்து பட்டாம் பூச்சி பிடிப்பம் எண்டு கதைகள் பார்வையாளர்களாக பொழுது போக்காகத்தான் போராட்டத்தை பற்றி பார்க்க வைக்கு.

சுயமாக போராடி தேசிய கட்டமைப்புகளை வழர்த்தெடுத்தவர்கள் செய்த முதலீடுகள் அவற்றின் ஆழ அகல பரிமாணங்கள் பற்றி தெளிவு பெற வேண்டும். இவற்றிற்கு நீண்ட கால நோக்கில் புலம்பெயர்ந்தவர்கள் எந்தெந்தத் துறைகளில் ஈடுபட வேண்டும் போன்று பல விடையங்கள் இருக்கிறது. இங்கு துறை எண்டவுடன் நாங்களும் area 51 மாதிரி உருவாக்க வேணும் அணுகுண்டு உருவாக்க வேணும் குறைந்தபட்சம் 1200 கிலேமீற்றர் போறதுகள் தான் செய்ய வேணும் எண்ட புலம்பல்கள் அல்ல.

இன்று வன்னியில் உள்ள மொத்த மக்கள் தொகை கனடாவில் உள்ள ஈழத் தமிழரின் எண்ணிக்கைக்குச் சமன். அதேபோல் எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள ஈழத் தமிழர்களின் எண்ணிக்கைக்கும் சமன். ஆனால் பழு எப்படிப் பகிரப்படுகிறது? நேரம் எப்படிச் செலவு செய்யப்படுகிறது?

ஒரு நாடு தனித்து இயங்குவதற்கு எத்தனை துறைகள் தேவை? ஊடகத்துறை, மனிதஉரிமை விவகாரங்கள், வெளியுறவு விவகாரங்கள், கல்வி, மருத்துவம், பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு என்பன அவற்றில் சில.

எமது ஊடகங்களில் இராணுவம் பாதுகாப்பு என்ற துறைகளில் செய்யும் சின்னப்பிள்ளைத்தனமான ஆய்வுகளை விட வேறு ஏதாவது துறைகளின் எமது தேவைகள் தயார்ப்படுத்தல்கள் பற்றி கவனம் செலுத்துகிறார்களா? சிறீலங்கா ஊடகங்களிலும் அவர்களது பொருளாதார நிலமைகள் பற்றி எத்தனையே விபரங்கள் வருகிறது. அவற்றைப்பற்றி மொழி பெயர்த்தாவது போடுகிறார்களா? இல்லை... "அங்காலை 10 பலி 20 காயமாம் இங்காலை 15 பலி 24 காயமாம். 20 வெடிகணை விழுந்து வெடிச்சதாம் அதில 4 துல்லியமாக ஓடுபதையில விழுந்தாம். அதாலை 4 டாங்கிக்கு காத்துப் போட்டுதாம். கவசபடையணி அழிஞ்சு போச்சுதாம் இனியார் பிச்சை போட போகினம்?"

இதுகளை வாசிச்சுப் போட்டு புலம்பெயர்ந்தவர்கள் தெருக்கூத்துக்கு கூட்டம் கூட்டுவது போல் கூடுவினம். சாகசம் குறைந்தால் உது இழுபடும் போல கிடக்கு பங்களிப்பை நிறுத்தப் போறன் எண்டு புலபுவினம்.

Edited by kurukaalapoovan

அண்ணை அரசின் பரப்புரைகளை புலம்பெயர்ந்தவர்கள் நம்புறார்களோ இல்லையோ தெரியாது. உண்மையைச் சொன்னா புலத்தவர்கள் மத்தியிலை ஒரு கணிசமானவர்களிடம் புலிகளின் பலம் தொடர்பில் நம்பிக்கை குறைந்து வருகிறது என்பது உண்மை. இதற்கு எங்களின் ஊடகங்கள் மற்றும் அவற்றில் பணிபுரியும் போரியல் மேதைகளே காரணம்.

அது எப்படி உங்களை நம்பிக்கையை குறைச்சது எண்டு நீங்கதான் புரிய வைக்க வேணும்....! மற்றவனைகுறை சொல்லாட்டா உங்களுக்கு எல்லாம் நித்திரையே வாறதில்லை போல...??

உங்கட வியாபாரத்தை நீங்கள் உங்கடையா பத்தீங்கள் எண்டா வியாபாரம் எப்படி போகுது எண்டு விளங்கும்... ஆனா அதை மற்றவனை செய்ய விட்டு போட்டு கணக்கை மட்டும் கேட்டு தெரிஞ்சா இப்பிடித்தான் வியாபாரம் நட்டத்திலை போகுதா இல்லை லாபத்திலை போகுதா எண்டு சந்தேகம் வரும்...

புலம்பெயந்த பன்னாடைகள் எண்டு சொல்லும் போது அதிலை நீங்களும் சேர்த்தி எண்டு நினைச்சு பாருங்கோ, உங்களுக்கு புரிவது எல்லாரும்க்கும் புரியும்....

குறுக்கண்ணா அருமையான கருத்து.

வெறுமனே போர்வெற்றியை நோக்கியே எங்களது சிந்தனைகள். மற்றைய விடயங்கள் பற்றி நாம் சிந்தித்துக்கூடப் பார்ப்பதில்லை. போர்க்களத்தில் நின்று உயிர் கொடுப்பவர்கள்தான் நாளை நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் உழைக்க வேண்டிய நிலை.

படையினர் மீது ஒரு பெரிய அடி. ஆயிரம் இரண்டாயிரம் எண்டு ஆமி சாகவேணும். இடத்தைப் பிடிக்க வேணும். இதுதான் புலத்தவர்களிற்கு வேண்டியது. இதற்குப்பிறகு நாட்டை யார் நாட்டின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது.? கட்டியெழுப்புவது?

Edited by மின்னல்

படையினர் மீது ஒரு பெரிய அடி. ஆயிரம் இரண்டாயிரம் எண்டு ஆமி சாகவேணும். இடத்தைப் பிடிக்க வேணும். இதுதான் புலத்தவர்களிற்கு வேண்டியது. இதற்குப்பிறகு நாட்டை யார் நாட்டின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது.? கட்டியெழுப்புவது?

ஆமி சாகாமல் இடத்தியும் பிடிக்கஏலாது, இடத்தை பிடிக்காமல் தமிழீழமும் கிடையாது. தமிழீழம் இல்லாமல் புதிய கட்டுமானமும் கிடையாது.

புதிசா வந்த காலக்கணிப்பை ஓடிப்போய் பதிவிலை பாருங்கோ ஏதாவது தெரியுதா எண்டு பாருங்கோ.

எங்களுக்கு எது வேணும் எண்டது எல்லாம் சரி இது வேண்டாம் எண்டு சொல்ல குறுக்கர் யார் மக்கிந்தவின் சிந்தனையை அமுல் படுத்துறவரோ.? அது ஏன் எண்டேதெரியாம்மல் தாளம் வேறை. முதல்லை நீங்கள் திருந்துறதை பாருங்கோ பிறகு தமிழ் மக்களை திருத்தலாம்.

இன்று புலிகளின் பலம் என்பதை பற்றி அந்த ஆயுதம் இருக்காம் இந்த ஆயுதம் இருக்காம் அப்பிடி அடிக்கலாமாம் இப்பிடி அடிவிழலாமாம் என்ற சாகசக் கதைகள் தான் எமது ஊடகங்களின் அவதானமாக இருக்கிறது.

தமிழ் ஊடகங்கள் எண்டதுக்கை தேசிய தொ[ல்]லைகாட்சியையும் சேர்த்து தானே சொல்லுகிறீயள்.? அவை தான் காலக்கணிப்பு , அவசிய அறிக்கை , ஈழக்கிழவன் எண்டு புரளியை கிழப்புறவை. அவை அதை ஏன் செய்யினம் எண்ட தெளிவு இருக்கிறதா தெரிய இல்லை. ஏன் எண்டு கேட்டியள் எண்டா விளங்கின சனம் விளங்கபடுத்தும்.

இப்பவும் தீத்ததை பிரசாதம் எண்டு அடம்பிடிக்கிற உங்களுக்கு விளங்கப்படுத்துறது கஸ்ரம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

புதுவை 2 மணிநேரம் 40 நிமிடம் கதைத்ததை சரியாக இருந்து கேட்க நேரம் இருக்கே. அந்த நேரத்தில் இரண்டு படங்களை ஓடவிட்டுப் பாத்து முடித்திடலாம். என்றாலும் அவர் என்ன சொல்லியிருப்பார் என்று ஊகித்துக் கருத்து வைக்கப் பல விண்ணர்கள் உள்ளனர்!

காலக் கணிப்பு, நிலவரம், ஈழக்கிழவன் எல்லாம் எல்லாவற்றையும் புட்டுபுட்டு வைப்பதில்லை. புலத்தவர்களை போராட்டத்தின்பால் தொடர்ந்து ஈடுபாடு காட்ட பல விடயங்களைச் சொல்லுகின்றது.. அதனூடே நேரிடையாகச் சொல்லப்படாத பல செய்திகளும் உள்ளன..

புதுவை 2 மணிநேரம் 40 நிமிடம் கதைத்ததை சரியாக இருந்து கேட்க நேரம் இருக்கே. அந்த நேரத்தில் இரண்டு படங்களை ஓடவிட்டுப் பாத்து முடித்திடலாம். என்றாலும் அவர் என்ன சொல்லியிருப்பார் என்று ஊகித்துக் கருத்து வைக்கப் பல விண்ணர்கள் உள்ளனர்!

காலக் கணிப்பு, நிலவரம், ஈழக்கிழவன் எல்லாம் எல்லாவற்றையும் புட்டுபுட்டு வைப்பதில்லை. புலத்தவர்களை போராட்டத்தின்பால் தொடர்ந்து ஈடுபாடு காட்ட பல விடயங்களைச் சொல்லுகின்றது.. அதனூடே நேரிடையாகச் சொல்லப்படாத பல செய்திகளும் உள்ளன..

புலம்பெயர்ந்திருப்பவர்கள் பற்றி அங்கிருக்கின்றவர்களுக்கு தெரிந்தது கூட இங்கிருக்கிற குறுக்காலபோனதுகளுக்கு தெரியுதில்ல. ஏதோ மற்றவர்களை குறைசொல்லுவதன் மூலம்

போராட்டத்திற்கு வலுச்சேர்க்கிறம் என்று நினைக்கினம். ஆனால் அறிந்தோ அறியாமலோ

போராட்த்திற்கு மேலும் மேலும் எதிரிகளைத்தான் சம்பாதித்துக்கொடுக்கின்றா

காலக் கணிப்பு, நிலவரம், ஈழக்கிழவன் எல்லாம் எல்லாவற்றையும் புட்டுபுட்டு வைப்பதில்லை. புலத்தவர்களை போராட்டத்தின்பால் தொடர்ந்து ஈடுபாடு காட்ட பல விடயங்களைச் சொல்லுகின்றது.. அதனூடே நேரிடையாகச் சொல்லப்படாத பல செய்திகளும் உள்ளன..

அப்படி விளக்கம் கூடின நீங்கள் என்ன ம*** ருக்கு பூடகம் போடுகிறீங்கள்... ??? எது தேவை இல்லை எண்டு சொல்ல நீங்கள் யார்..?? உங்களை மாதிரி சிலருக்கு மட்டும்தான் மறைச்சு வச்சு சொல்லுகினம்...! வெளிப்படையா மக்களுக்கு சொல்லுறதுக்கு பயம் கண்டியளே...

போராட்டதுக்கு தேவை இல்லாதவை எண்டு நீங்கள் சொல்ல என்னதை இப்ப கிளிச்சு போட்டியள்....??? புலத்தவன் மட்டை, உண்ணி எண்டுற நேரத்திலை நீங்கள் யாராவது புலம் பெயந்த நாட்டவைக்கு அனுப்பி வைக்க கூடிய கடிதங்களையாவது தயாரிச்சு இங்கை இணைச்சு இருக்கிறீயளா..??

புலத்தவன் சந்தோசப்படக்கூடாது எண்டுறதை எங்களுக்கு சேர்த்து உயிரை விடும் புலிகள் கூட சொன்னது கிடையாது... இங்கை புடுங்குற உங்களுகு தேவை இல்லாத வேலை ஏன்...

அது சரி புதுவையார் சொன்னவைகளை கேட்டு கிளிச்சனீங்கள் எண்டு பீத்தி கிளிக்கிறதை விட்டு போட்டு ஆக்கமா ஏதாவது செய்ய பாருங்கோ..

எல்லாரும் நல்லவர்களா நடிக்கிற்றதை முதலிலை நிப்பாட்டினால் நல்லது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி புதுவையார் சொன்னவைகளை கேட்டு கிளிச்சனீங்கள் எண்டு பீத்தி கிளிக்கிறதை விட்டு போட்டு ஆக்கமா ஏதாவது செய்ய பாருங்கோ..

எல்லாரும் நல்லவர்களா நடிக்கிற்றதை முதலிலை நிப்பாட்டினால் நல்லது...

ஆக்கபூர்வமான வேலைகள் ஏதாவது இருந்தால் ஒரு லிஸ்ட் தாருங்கோவன்..

சிலவேளை இஸ்ரேல்காரன் என்ன புது ஆயுதம் செய்கிறான், சீனாக்காரன் என்ன புதுசா ஆயுதம் செய்கிறான், அமெரிக்கனின் என்ன ஆயுதம் எப்படி பாவிக்கலாம் என்டு கதையளப்பதும் ஆக்கபூர்வமான வேலைதானோ!

எல்லாரும் நல்லவர்களா நடிக்கிற்றதை முதலிலை நிப்பாட்டினால் நல்லது...

ஆக்கபூர்வமான வேலைகள் ஏதாவது இருந்தால் ஒரு லிஸ்ட் தாருங்கோவன்..

சிலவேளை இஸ்ரேல்காரன் என்ன புது ஆயுதம் செய்கிறான், சீனாக்காரன் என்ன புதுசா ஆயுதம் செய்கிறான், அமெரிக்கனின் என்ன ஆயுதம் எப்படி பாவிக்கலாம் என்டு கதையளப்பதும் ஆக்கபூர்வமான வேலைதானோ!

எல்லாரும் நல்லவர்களா நடிக்கிற்றதை முதலிலை நிப்பாட்டினால் நல்லது...

ஏன் உங்களுக்கு தொரியாத விடயதை மற்றவர்கள் அறிந்து இருக்கினம் எண்டது குத்தலாக இருக்குதோ...! உது தாள்வு மனப்பாண்மை.. அதை தமிழீழத்துக்கு ஆகாது எண்டு தடுக்கிறது எங்கட ஆச்சி இரவிலை வெளியிலை போகாதை பேய் அடிச்சு போடும் எண்டதுக்கு சமனா இருக்குது...!

எல்லாருமே அறிவுரை சொல்ல கிழம்பினா யார்தான் கேட்டு திருந்துறது... அதாலை உங்கட அறிவுரைகள் நக்கல்கள் கிண்டல்களை நீங்களே வைச்சு இருக்கிறதுதான் நல்லது...!

பொழுது போகாட்டில் வந்து உங்கட கடலைகளை தமிழீழம் சாராத இடங்களிலை போடுங்கோ...!

  • கருத்துக்கள உறவுகள்

அதை தமிழீழத்துக்கு ஆகாது எண்டு தடுக்கிறது எங்கட ஆச்சி இரவிலை வெளியிலை போகாதை பேய் அடிச்சு போடும் எண்டதுக்கு சமனா இருக்குது...!

பொருத்தமான உவமை!

இப்படியான ஒரு கேவலமான கருத்தாடல் தேவை தானா?

ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி?

புலத்துக்கு வந்தாச்சு இனி அங்கை போய் ஆயுதம் தூக்கி அடிபடுறதுக்கு உடலும் சுக போக வாழ்க்கையும்

இடம் கொடுக்குமோ தெரியாது ஆனால் இன்றுஇ 20 ஆயிரம் போராளிகள் 80 ஆயிரம் பொது மக்கள்

இவர்களின் இறப்புக்களை எல்லாம் கேவலம் செய்யும் அளவுக்கு கருத்துக்கல் எதிர் பிரச்சாரங்கல் காட்டி கொடுப்புக்கள் என்று பலது நடக்கிறது அதை விட வேற ஏதும் கேவலம் இருக்கா?

இல்லை குருக்கால போனவரின் கிண்டல் பேசு நக்கல் நயாண்டிகளை விடவா ஒரு கேவலம் இருக்கு?

அட அதை விடுங்கள் இங்கு யாழ்களத்தில் தமிழ்தேசியத்தை ஆதரிக்கிரம் என்று சொல்லுர எத்த்னை பேர் Mஸ்னில் செக்ஸ் பேசிகிறார்கள் என்று தெரியுமா?

பொருத்தமான உவமை!

அதை யார் என்ன செய்ய வேணும் செய்ய கூடாது எண்டு கட்டளைகளை திணிக்கிறதுக்கு முன்னம் சிந்திக்க வேண்டியது...

தமிழீழத்துக்கு தேவையானவை நிறைய இருக்கு அதுக்கு வளி காட்டுங்கோ வேண்டாம் எண்டு யாருமே சொல்ல இல்லை.... ஆனா வெளியிலை நிண்டு கொண்டு புலம்பெயந்த செம்மறியள் எண்டு எதோ தாங்கள் மட்டும் சுத்தமானவையா நாடகங்களை போடாதேங்கோ...! நீங்கள் வெள்ளை காறனாய் உங்களால நடிக்க மட்டும்தான் முடியும்....

உங்களுக்கு புதுசா புதுவையண்ணா சொன்னதை சொல்லுறன்.. நாங்கள்( தமிழர்) எப்பவுமே நூறு வீதம் சுத்தமானவர்கள் எண்டு சொல்லி கொள்ள இல்லை தவறு எல்லாரும் செய்கிறார்கள்... ஆனாலும் காலத்தின் கட்டாயமாக இணைந்து பணியாற்றுங்கள் எண்டுறார்...

அதாவது எல்லாரும் இணைந்து... அதை விட்டு போடு மற்றவனின் மூக்குக்கை கையை விட்டு என்ன கிடக்குது எண்டு கிண்டாமல் வேலையை பாருங்கோ.. உங்கட பிரச்சினைகளை தாயகம் சுதந்திரம் அடைந்த பின்னர் பார்க்கலாம்....

அவர் இறுதியாக சொன்னது மிகவிரைவில் உங்களை ஈழத்தில் சந்திப்பார் .. அதை நோக்கிய வேலையை முடிந்தால் செய்யுங்கள் ...

இன்னும் 10 வருசம் பின்னாலை நிக்காதேங்கோ...

கருத்தாடலின் போக்கே மாறியிருப்பது தேவையற்றதும், கவலைக்குரியதுமாகும். புலம் பெயர்ந்தவர்களிடம் ஏற்படுத்தப்படும் குழப்பங்கள் ஈழப்போராட்டத்தினை மழுங்கடிக்கும் என்பது பிரச்சார உத்தி. அதற்குப்பலியாகக் கூடாது.

எங்களது பல்லைக் குற்றி நாங்களே மணக்கும் நிலையில் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. எங்களிடமிருக்கும் குறைகளை அலசுவதில் தவறில்லை. போராட்டத்திற்கு நாமென்ன செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டுவதிலும் தவறில்லை. போராட்டத்தினை கொச்சைப்படுத்தி அதனைப் பலமிழக்கச் செய்யும் செயலை எதிரிதான் செய்வான். அவைகளுக்கு நாம் துணைபோகக் கூடாது என்பது எனது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் பேச்சாளர்களாலொ அல்லது அவர்களின் ஊடகங்களினாலோ புலம் பெயர்ந்தவர்களுக்கு விடுக்கப்படும் செய்திகளை நம்பிக்கை வைப்பது அவசியம். இதில் வேறு குறை பிடிப்பது என்றால் எதைத்தான் நம்பப் போகிறோம் ? புலிகள், புலம்பெயர்ந்தவர்களுக்கு ஒரு செய்தி, வெளிநாடுகளுக்கு ஒரு செய்தி, அரசுக்கு ஒரு செய்தி கூறுவதாக நாங்களே கதை சொல்லும் இலட்சணத்தில் போராட்டம் விரைவு படுவது எப்படி ?

வெட்டினம், புடுங்கினம் எண்டு வாய்சவடல் விடுவது புலிகளோ அல்லது அவர்களின் ஊடகங்களோ அல்ல. தமது வியாபாரத்தைப் பெருக்குவதற்கு புலிகளல்லாத தமிழ் ஊடகங்களே இதைச் செய்கின்றன.இங்கு அடிக்கடி ஒருவர் குறிப்பிடுவது போல, என்ன ஆயுதம் வைச்சிருக்கினம் எண்டு ஆராய்ச்சி பண்ணாமல் வேறு துறைகளில் ஆராய்ச்சி பண்ணுங்கோ எண்டால் என்னத்தில பண்ணுறது ? பொருளாதாரத்தடையிலும் என்னெண்டு வன்னியில விவசாயம் பண்ணலாமெண்டோ அல்லது காசு தட்டுப்பாடாப் போட்டுது இன்னும் எவ்வளவு காசு அச்சடிக்க வேண்டுமெண்டோ அல்லது வன்னியில மொபைல் போன் நெட்வேக் ஒண்டை ஆரம்பிக்கலாம் எண்டோ ? உது வேறொண்டுமில்லை, சனத்தின்ர கவனத்தை திசை திருப்புற வேலை. நல்ல பழமொழி ஒண்டு நினைவுக்கு வரூது, "ஆடறுக்க முதல் வேறொண்டு அறுக்க வேணுமெண்டு" அழுவதைப்போல. மனுசர் நிம்மதியா வாழுறதுக்கு ஒரு தேசமில்லை அதுக்குள்ள அதைப்பற்றி ஆராய்ச்சி இதைப்பற்றி ஆராய்ச்சியெண்டு வந்திட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான நண்பர்களே, எமது போராளிகளும், மக்களும் நாளுக்கு நாள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்.புலம் பெயர்ந்த ஒவ்வொருவரும் தங்களாலான பங்களிப்பை இயன்றளவில் அளியுங்கள்.வாதங்கள் எங்களை எங்கேயும் கொண்டு போய் விடாது. மாறாக மனஸ்தாபங்களை தான் உருவாக்கும். ஒருவரை ஒருவர் புறணி கூறுவதில் நிச்சயமாக எந்த வித பயனுமில்லை. உருப்படியாக ஏதாவது செய்வோம்.

"சூதும் வாதும் வேதனை செய்யும்".

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.