Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`பிரபாகரனை' வெளியிடுவதற்கு தணிக்கை சபை அனுமதித்தது(திரைப்படம்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`பிரபாகரனை' வெளியிடுவதற்கு தணிக்கை சபை அனுமதித்தது

[04 - March - 2008]

"பிரபாகரன்" என்ற பெயரில் 25 வருட இனப்பிரச்சினையை சித்திரிக்கும் திரைப்படத்தை வெளியிட இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன தணிக்கைச் சபை அனுமதியளித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் இந்த திரைப்படம் வெளிவருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கை அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் மத்தியில் பொது மக்கள் படும் துயரங்களை எடுத்துக் காட்டுவதாக இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் கதையானது விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தப்பித்த தற்கொலைக் குண்டுதாரியையும் அவர் எப்படி அந்த கடுமையான முடிவுக்கு தள்ளப்பட்டாரென்பதையும் விபரிப்பதாக அமைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

"3 தசாப்த கால இனப் பிரச்சினைக்கு புதிய அர்த்தமொன்றைக் கொடுப்பதும் மக்களின் பக்கமிருந்து அதை பக்கச் சார்பற்ற கோணத்தில் பார்ப்பதுமே இந்தப் படத்தின் எண்ணமாக அமைந்துள்ளதாகவும் மனித உயிர்களானது ஏனைய அனைத்தையும் விட மதிக்கப்பட வேண்டும்" என்று படத் தயாரிப்பாளர்களின் விவரணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் "பிரபாகரன்" திரைப்படமானது பயங்கரவாதத்தைப் பற்றியதென்றும் இதில் அரசியல் சம்பந்தமான எதுவும் கிடையாதென்றும் படத் தயாரிப்பாளரான துஷ்கார பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

http://www.thinakkural.com/news/2008/3/4/i...s_page46939.htm

Edited by கறுப்பி

வணக்கம் கறுப்பி,

நீங்கள் மிக முக்கியமான தெரிவுகளை இணைக்கிறீர்கள்

நாங்கள் தனிநாடாக வெற்றி பெறுவது அல்லது வெற்றிபெறாமல் இந்தியாவுக்குப் பின்னே செல்வது அல்லது இலங்கைக்குப் பணிந்துபோவது இதில்ப் பின்னே செல்வது என இதில் எது நடந்தாலும் இந்த நூற்றாண்டு முழுவதும் எங்கள் விடுதலைப் போராட்டத்தையும் பிரபாகரனையும் குறித்து நிறைய கதைப் புத்தகங்களும் ஆய்வுகளும் திரைப்படங்களும் வெளிவரும். இவற்றை எழுதுகிறவர்களில் பெரும்பகுதியினர் உணர்வுபூர்வமான எதிர்ப்பு ஆதரவு நிலையில் அல்ல நடந்த சம்பவங்களை அடியொற்றிய ஆய்வுகளின் அடிப்படையிலேயே வரலாற்றை மதிப்பிடுவார்கள். கறுப்பி ரூசிய சீனப் புரட்சிகளில் இருந்து கியூப புரட்சிவரை இதுதான் நிலமை. ஸ்டாலின் மாசேதுங் எல்லோருமே இன்று மீழாய்வுக்கு உட்பட்டிருக்கிறார்கள். வரலாறு ஈவிரக்கமற்ற ஒரு தேவதை கறுப்பி.

உலகமயமாதலும் பல்தேசிய தன்மையுள்ள இனங்களும் என எதிர்வரும் ஒரு சர்வதேசிய கருத்தரங்கிற்க்காக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன். என் தேடலில் கண்டடைகிற விடயங்கள் புதிய வெளிச்சத்தை பரப்பும் என நம்புகிறேன்.

உலகமயமாதலின் சவால்களைப் புரிந்துகொள்ளாமல் நம்மால் வெற்றியை நோக்கிச் செல்ல முடியாது. இதில் முக்கியமான விடயம் சேபியா கொசோவோ உறவு இலங்கை அரசுக்கும் எமகும் எமக்கும் இருப்பதாகும். இது இலன்கை அரசை பலகீனப் படுத்துகிறது. இதை நாம் அறிவோம். நாம் அறிய விரும்பாத ஒருவிடயம் அத்தகைய உறவு நமக்கும் ஈழத்து முஸ்லிம் மக்களுக்கும் இருப்பதாகும். உலக மயமாதல் பின்னணியில் இப்பிரச்சினையில் சேபிய அணுகுமுறை தோற்றுப் போகும். எனது ஆய்வுகள் முடிந்ததும் விரிவாக எழுதுகிறேன். உலகமயமாதல் பின்னணியில் முஸ்லிம்களது ஆதரவில்லாமல் கிழக்கையும் இமணைத்து ஒரு நாடாக எழும் வாய்ப்பில்லை. கருணா/பிள்ளையான் மகிந்த ஐக்கியத்துக்குப் பின்னர் முஸ்லிம் உறவுகள் தொடர்பாக புதிய சூழல் உருவாகி இருக்கு. புதிய சூழலில் முஸ்லிம்களுடன் உள்வாரி அதிகாரப் பகிர்வுக்கு விடுதலிப் புலிகள் தயரென்றால் வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் தயாராக உள்ளார்கள். இதனைத் தவறவிட்டால் எமது பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிபெறாது. செல்வி/செல்வன் கறுப்பி அவர்களே நாம் கசப்பான உண்மைகளை முன்னிலைப் படுத்தி முடிவுகளை எடுக்கவேண்டும். தவறினால் வீரத்தோடு போராடி வீழ்ந்தோம் என்கிறதே எமது கதையாகிவிடும். அது எனக்குச் சம்மதமில்லை. வீரத்தோடு போராடி விவேகத்தோடு வெற்றிபெற்றோம் என்கிறதாக எமது கதை எழுதப் படவேண்டும் என்கிறதுதான் கறுப்பி எனது நிலைபாடு.

உலகமயமாதலின் சவால்களைப் புரிந்துகொள்ளாமல் நம்மால் வெற்றியை நோக்கிச் செல்ல முடியாது. இதில் முக்கியமான விடயம் சேபியா கொசோவோ உறவு இலங்கை அரசுக்கும் எமகும் எமக்கும் இருப்பதாகும். இது இலன்கை அரசை பலகீனப் படுத்துகிறது. இதை நாம் அறிவோம். நாம் அறிய விரும்பாத ஒருவிடயம் அத்தகைய உறவு நமக்கும் ஈழத்து முஸ்லிம் மக்களுக்கும் இருப்பதாகும். உலக மயமாதல் பின்னணியில் இப்பிரச்சினையில் சேபிய அணுகுமுறை தோற்றுப் போகும். எனது ஆய்வுகள் முடிந்ததும் விரிவாக எழுதுகிறேன். உலகமயமாதல் பின்னணியில் முஸ்லிம்களது ஆதரவில்லாமல் கிழக்கையும் இணைத்து ஒரு நாடாக எழும் வாய்ப்பில்லை. கருணா/பிள்ளையான் மகிந்த ஐக்கியத்துக்குப் பின்னர் முஸ்லிம் உறவுகள் தொடர்பாக புதிய சூழல் உருவாகி இருக்கு. புதிய சூழலில் முஸ்லிம்களுடன் உள்வாரி அதிகாரப் பகிர்வுக்கு விடுதலிப் புலிகள் தயரென்றால் வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் தயாராக உள்ளார்கள். இதனைத் தவறவிட்டால் எமது பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிபெறாது. செல்வி/செல்வன் கறுப்பி அவர்களே நாம் கசப்பான உண்மைகளை முன்னிலைப் படுத்தி முடிவுகளை எடுக்கவேண்டும். தவறினால் வீரத்தோடு போராடி வீழ்ந்தோம் என்கிறதே எமது கதையாகிவிடும். அது எனக்குச் சம்மதமில்லை. வீரத்தோடு போராடி விவேகத்தோடு வெற்றிபெற்றோம் என்கிறதாக எமது கதை எழுதப் படவேண்டும் என்கிறதுதான் கறுப்பி எனது நிலைபாடு.

வரவேற்கத்தக்க கருத்துகள். வாழ்த்துகள்!

Unity in diversity is the essence of true freedom

Edited by vettri-vel

பிரபாகரன் எண்டு பேர் வச்ச உடனை தமிழர்களை புகழ்ந்து வாற கோதாரி எண்டு நினைச்சு போடாதேங்கோ....

கீழ இருக்கிற முன்னோட்டத்தை பாத்து முடிவு எடுங்கோ....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தயாரிப்பாளர் அந்தப்படத்தை நடுநிலையுடன் தயாரித்து இருப்பார் என்று எதிர் பார்ப்பது எம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகமுடியும்.

பொய்யும் புரட்டும் ஒன்று சேர்ந்து படம் எடுத்தால் எப்படி நடுநிலையாக இருக்கும்?

இணைப்பிற்கு நன்றி தயா.

பிரபாகரன் என்று பெயர் இருக்கிறதால ஏதோ எமக்கு சார்பான அல்லது நடுநிலையான கருத்துகள்

இருக்கும் என்று நினைத்தால் அது நமது அறியாமையே தவிர வேறொன்றுமில்லை.எந்த சிங்களவனிடமிருந்தும் என்றும் அதை எதிர்பார்க்கமுடியாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கறுப்பி,

நீங்கள் மிக முக்கியமான தெரிவுகளை இணைக்கிறீர்கள்

நாங்கள் தனிநாடாக வெற்றி பெறுவது அல்லது வெற்றிபெறாமல் இந்தியாவுக்குப் பின்னே செல்வது அல்லது இலங்கைக்குப் பணிந்துபோவது இதில்ப் பின்னே செல்வது என இதில் எது நடந்தாலும் இந்த நூற்றாண்டு முழுவதும் எங்கள் விடுதலைப் போராட்டத்தையும் பிரபாகரனையும் குறித்து நிறைய கதைப் புத்தகங்களும் ஆய்வுகளும் திரைப்படங்களும் வெளிவரும். இவற்றை எழுதுகிறவர்களில் பெரும்பகுதியினர் உணர்வுபூர்வமான எதிர்ப்பு ஆதரவு நிலையில் அல்ல நடந்த சம்பவங்களை அடியொற்றிய ஆய்வுகளின் அடிப்படையிலேயே வரலாற்றை மதிப்பிடுவார்கள். கறுப்பி ரூசிய சீனப் புரட்சிகளில் இருந்து கியூப புரட்சிவரை இதுதான் நிலமை. ஸ்டாலின் மாசேதுங் எல்லோருமே இன்று மீழாய்வுக்கு உட்பட்டிருக்கிறார்கள். வரலாறு ஈவிரக்கமற்ற ஒரு தேவதை கறுப்பி.

உலகமயமாதலும் பல்தேசிய தன்மையுள்ள இனங்களும் என எதிர்வரும் ஒரு சர்வதேசிய கருத்தரங்கிற்க்காக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன். என் தேடலில் கண்டடைகிற விடயங்கள் புதிய வெளிச்சத்தை பரப்பும் என நம்புகிறேன்.

உலகமயமாதலின் சவால்களைப் புரிந்துகொள்ளாமல் நம்மால் வெற்றியை நோக்கிச் செல்ல முடியாது. இதில் முக்கியமான விடயம் சேபியா கொசோவோ உறவு இலங்கை அரசுக்கும் எமகும் எமக்கும் இருப்பதாகும். இது இலன்கை அரசை பலகீனப் படுத்துகிறது. இதை நாம் அறிவோம். நாம் அறிய விரும்பாத ஒருவிடயம் அத்தகைய உறவு நமக்கும் ஈழத்து முஸ்லிம் மக்களுக்கும் இருப்பதாகும். உலக மயமாதல் பின்னணியில் இப்பிரச்சினையில் சேபிய அணுகுமுறை தோற்றுப் போகும். எனது ஆய்வுகள் முடிந்ததும் விரிவாக எழுதுகிறேன். உலகமயமாதல் பின்னணியில் முஸ்லிம்களது ஆதரவில்லாமல் கிழக்கையும் இமணைத்து ஒரு நாடாக எழும் வாய்ப்பில்லை. கருணா/பிள்ளையான் மகிந்த ஐக்கியத்துக்குப் பின்னர் முஸ்லிம் உறவுகள் தொடர்பாக புதிய சூழல் உருவாகி இருக்கு. புதிய சூழலில் முஸ்லிம்களுடன் உள்வாரி அதிகாரப் பகிர்வுக்கு விடுதலிப் புலிகள் தயரென்றால் வடகிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் தயாராக உள்ளார்கள். இதனைத் தவறவிட்டால் எமது பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிபெறாது. செல்வி/செல்வன் கறுப்பி அவர்களே நாம் கசப்பான உண்மைகளை முன்னிலைப் படுத்தி முடிவுகளை எடுக்கவேண்டும். தவறினால் வீரத்தோடு போராடி வீழ்ந்தோம் என்கிறதே எமது கதையாகிவிடும். அது எனக்குச் சம்மதமில்லை. வீரத்தோடு போராடி விவேகத்தோடு வெற்றிபெற்றோம் என்கிறதாக எமது கதை எழுதப் படவேண்டும் என்கிறதுதான் கறுப்பி எனது நிலைபாடு.

உங்கள் ஆரோக்கியமான கருத்துகளுக்கு நன்றிகள் கவிஞரே.

இன்றைய கால கட்டத்தில் சிங்களத் தயாரிப்பாளருக்கு நடுநிலைமையில் இருந்து படம் எடுப்பதற்குரிய சாத்தியங்கள் இங்கில்லை. பிரபாகரன் பற்றிய படம் ஒரு பயங்கரவாதியைச் சித்தரிக்கும் படமாகவே எடுக்கப்பட்டுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

நடுநிலையில் இருந்து எடுக்கப்பட்டிருப்பின் நிச்சயமாக திரைப்படக் கூட்டுத்தாபனம் வெளியிட அனுமதி வழங்கியிருக்காது.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

நாம் கசப்பான உண்மைகளை முன்னிலைப் படுத்தி முடிவுகளை எடுக்கவேண்டும். தவறினால் வீரத்தோடு போராடி வீழ்ந்தோம் என்கிறதே எமது கதையாகிவிடும். அது எனக்குச் சம்மதமில்லை. வீரத்தோடு போராடி விவேகத்தோடு வெற்றிபெற்றோம் என்கிறதாக எமது கதை எழுதப் படவேண்டும் என்கிறதுதான் கறுப்பி எனது நிலைபாடு.

அப்படியாயின் அதற்கு நாம் என்ன செய்தோம்

என்ன செய்ய வேண்டும்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரைப்படம் பற்றிய தகவல் சென்ற வருடத்தில் தளத்தில் இணைக்கப் பட்டிருந்தது. அதன் இணைப்பை தேடித்தான் பார்க்க னும்.

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கத்தக்க கருத்துகள். வாழ்த்துகள்! ‘ vettri-vel

. வீரத்தோடு போராடி விவேகத்தோடு வெற்றிபெற்றோம் என்கிறதாக எமது கதை எழுதப் படவேண்டும் என்கிறதுதான் கறுப்பி எனது நிலைபாடு.

அப்படியாயின் அதற்கு நாம் என்ன செய்தோம்

என்ன செய்ய வேண்டும்??? ‘- 'KUGATHASAN'

கடந்த தசாப்ததில் சுதந்திரப் பிரகடனம் மேற்கொண்ட நாடுகளின் அனுபவங்களை ஆராய்ந்து விவாதம் ஒன்றை ஏற்படுத்துங்கள். எரித்திரிய விடுதலை அமைப்பு எப்படி எரிதிரிய முஸ்லிம்களோடு சமரசம் செய்து கொண்டது என்பதை ஆராயுங்கள். ஈழத்துஇ சிங்களவர்கள்போல கொசொவோவில் அல்பேனியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தொடர்பான அப்ல்பேனிய கொள்கைகளில் சுதந்திரப் பிரகடனத்துக்கான என்ன விட்டுக் கொடுப்புகள் ஏற்பட்டது என்பதை ஆராயுங்கள். விடுதலைக்காக தென் ஆபிரிக்காவில் ஏ.என்.சியும் கிழக்கு தீமோரில் பிரட்லினும் தங்கள் எதிரிகளோடும் மாற்றுக் கருத்தாளர்களுடனும் எவ்வாறு இணக்கம் ஒன்றுக்குத் தயாரானார்கள் என்பதை ஆராயுங்கள். இத்தகைய ஒரு விவாதம் சுதந்திரப் பிரகடனத்துக்கு முன்னர் நாம் என்ன செய்யவேண்டும் என்கிற கேழ்விக்கான பதிலைத் தேட துணைபுரியும்.

சமரசங்கள் செய்து கொள்ளலாம் ...அதற்கு நியாயமான தீர்வு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் பலஸ்தினத்தில் ஏற்பட்ட கதி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

படையினருக்கும் - புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் மத்தியில் பொது மக்கள் படும் துயரங்களை சித்திரிக்கும் "பிரபாகரன்" என்ற திரைப்படத்தை வெளியிட இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன தணிக்கைச் சபை அனுமதி!

March 04,2008

"பிரபாகரன்" என்ற பெயரில் 25 வருட இனப்பிரச்சினையை சித்திரிக்கும் திரைப்படத்தை வெளியிட இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன தணிக்கைச் சபை அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் இந்த திரைப்படம் வெளிவருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கை அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் மத்தியில் பொது மக்கள் படும் துயரங்களை எடுத்துக் காட்டுவதாக இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் கதையானது விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தப்பித்த தற்கொலைக் குண்டுதாரியையும் அவர் எப்படி அந்த கடுமையான முடிவுக்கு தள்ளப்பட்டாரென்பதையும் விபரிப்பதாக அமைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

"3 தசாப்த கால இனப் பிரச்சினைக்கு புதிய அர்த்தமொன்றைக் கொடுப்பதும் மக்களின் பக்கமிருந்து அதை பக்கச் சார்பற்ற கோணத்தில் பார்ப்பதுமே இந்தப் படத்தின் எண்ணமாக அமைந்துள்ளதாகவும் மனித உயிர்களானது ஏனைய அனைத்தையும் விட மதிக்கப்பட வேண்டும்" என்று படத் தயாரிப்பாளர்களின் விவரணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் "பிரபாகரன்" திரைப்படமானது பயங்கரவாதத்தைப் பற்றியதென்றும் இதில் அரசியல் சம்பந்தமான எதுவும் கிடையாதென்றும் படத் தயாரிப்பாளரான துஷ்கார பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

http://theepori.com

இப்படத்தை அனுமதித்ததில் இருந்தே தெரியவேண்டும் நிச்சயமாக ஒரு நடுநிலையான ஒரு திரைப்படமாகவோ அல்லது தமிழருக்கு சார்பானதாகவோ இருக்குமென.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.