Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

றுக்சானா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_44482770_forced_203b.jpg

ஊசியிலை மரங்களுடன் கூடிய ஐரோப்பிய மண்ணில் உள்ள இங்கிலாந்தில் பாகிஸ்தானிய இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தவள் றுக்சானா (Ruksana) என்ற அந்தச் சிறுமி.

எல்லா இங்கிலாந்துச் சிறுவர் சிறுமியர் போல அவளும் சுதந்திரச் சிட்டாக பள்ளிக் காலத்துக்குள் நுழைகிறாள். அவள் பள்ளியில் துடிப்புடன் செயற்பட்டு சிறந்த மாணவியாக ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய முக்கிய மூன்று பாடங்களிலும் set 1 (உயர்நிலைக்குரிய) மாணவியாகவே இருந்து வந்துள்ளாள்.

15 வயதை அடைந்து பருவமும் அடைகிறாள்.

15 வயதில் ஒரு சிறுமிக்குள் என்னென்ன அழகிய கனவுகள் ஓடுமோ அத்தனையும் இவளுக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில்.. பாகிஸ்தானிய பூர்வீகப் பெற்றோர் இவளை சுற்றுலாவுக்கு என்று பாகிஸ்தான் அழைத்துச் செல்கின்றனர்.

செல்லும் வழியில் விமான நிலையத்தில் சொல்கின்றனர் எனி நீ திரும்பி வரமாட்டாய். உனக்கு திருமணம் நடக்கப் போகின்றது என்று.

அவர்கள் சொல்லியது போலவே பாகிஸ்தான் மண்ணில் அங்குள்ள ஒரு இஸ்லாமிய ஆணுக்கு அவள் கட்டாய (அதாவது சிறுமியின் மொத்த விருப்புக்கும் புறம்பாக) திருமணம் செய்து வைக்கப்படுகிறாள்.

அதன் பின்..

அவள் வாழ்க்கையில் சிறுமிக்குரிய கனவுகள் வீசிய தென்றல் அல்ல உணரப்பட்டது.. ஒரு கொடூர ஆணின் அகோரத்தனம் வெளிப்பட்டது. அந்தக் கட்டாயத் திருமணம் என்ற புயல் வீசி ஓய்ந்த போது அவள் பாலியல் வன்முறைக்கு இலக்காகி 15 வயதிலேயே ஒரு கருவையும் சுமந்து கொண்டு பாகிஸ்தானில் இருந்து தப்பி மீண்டு வந்து விடுகிறாள் இங்கிலாந்து மண்ணுக்கு..!

வந்தவளை மீண்டும் தொடர்கிறான் அந்த ஆண். அவனும் இங்கிலாந்து வருகிறான். வாழ்க்கை ஒட்டவே இல்லை. சிறுமி விலகி ஓடுகிறாள்...

தற்போது சிறுமி இங்கிலாந்து அரசு சார் புகலிடமொன்றில் அடைக்கலம் புகுந்திருக்கிறாள். அவள் இன்று தன்னிலைக்காக இங்கிலாந்து அதிகாரிகளைக் குற்றம் சுமத்துகிறாள்.

காரணம்.. அவள் 12 வயதாக இருக்கும் போது தான் வீட்டு வன்முறைக்கு இலக்காவதாகவும் கட்டாயத் திருமணத்துக்காக வற்புறுத்துவதாகவும் செய்த முறைப்பாட்டை சரிவரக் கையாண்டிருந்தால் தான் இன்று இந்த நிலைக்கு ஆளாகி இருக்க மாட்டேன் எங்கிறாள்.

இதே ஒரு முறைப்பாட்டை வெள்ளையின பெண்பிள்ளை செய்திருந்தாள் அவளுக்கு இப்படி ஒரு நிலை தோன்ற பிரிட்டன் அனுமதித்திருக்குமா என்று நீதி கேட்கிறாள் இன்று தன் குழந்தையை தோளில் சுமந்து கொண்டு அந்தச் சிறுமி.

ஜி சி எஸ் சியைக் கூட நான் தொட முடியல்ல எனக்கு கல்லூரி.. யுனி என்று போக எல்லாம் ஆசை இருந்தது. எல்லாமே வீணாகிடுச்சு. திருமணமே எனக்குப் பிடிக்கல்ல எங்கிறாள் எதிர்காலத்தை தொலைச்சிட்டமே என்ற அதிர்ச்சியில் அந்தச் சிறுமி.

அப்பாவிகளின் (அது ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன) குரலுக்கு பெறுமதி இல்லையே தோழி..!

எல்லாம் முடிந்த பின்.. விசாரிக்க மட்டும் ஆயிரம் பேர் வருவர் போவர். செய்தியாக்கி வாசித்து முடிப்பர். பயனென்ன.. நாளை இன்னொருத்தி இப்படி விபரிக்கும் வரை... எத்தனை எத்தனையோ.. சீரழிவுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கப் போகின்றன.

ஆண்களுக்கும் தான். எல்லாருமே கொஞ்சம் நெஞ்சில் ஈரம் வைச்சுக்குங்க.

- கண்களில் சொட்டும் நீர் துடைத்து.. வழங்குவது நெடுக்ஸ் தாத்தா. :(

செய்தி அடிப்படை:

http://news.bbc.co.uk/1/hi/uk/7288820.stm

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் தாத்தாவின் கண்களிள் இருந்து கண்ணீர் சொட்டும் திரைகாவியத்தை பார்த்துவிட்டு :( ....கண்களிள் இருந்து கண்ணீர் வடிய...(வாயால் வார்த்தைகள் முட்ட :D )....திரையரங்கில் இருந்து வெளியேறுபவர் ஜம்மு பேபி.. :o .

"றுக்சனா" இருளிள் தொலைக்கபட்ட சிறு துரும்பு :D ....எல்லாரும் பார்க்க வேண்டிய திரைகாவியம்....!! :D

அப்ப நான் வரட்டா!!

நான் தலைப்பை பார்த்திட்டு நுணாவிலான் ஏதோ புதுசா

சமையல் குறிப்பு போட்டிருக்கிறார் என்று நினைச்சன்.. :(

பிறகு பார்த்தா நம்மட பெண்கள் எதிர்ப்பாளர் நெடுக்கு ஒரு பெண்ணைப்பற்றி

கவலையுடன் எழுதியிருக்கிறார்... :D (நம்பமுடியவில்லை.....வில்லை..... வில்லை :o )

இது உண்மையான சம்பவமா?

Edited by vasisutha

  • கருத்துக்கள உறவுகள்

றுக்சானாவை விட வயது கூடிய 19 -- 25 வரையுள்ள பல பாகிஸ்தானிய பெண்கள் வெளிநாட்டில் திருமணம் செய்யலாம் என்று சொல்லி ஸ்பொன்சரும் செய்து இங்கு (மேற்கு நாடுகளுக்கு) கொண்டு வரப்பட்டு 45 -- 50 வயதுள்ளவருக்கு திருமணம் செய்து வைக்கப்படும். பிறகு அவர் வீட்டில் இருந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பார்.அப

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் தலைப்பை பார்த்திட்டு நுணாவிலான் ஏதோ புதுசா

சமையல் குறிப்பு போட்டிருக்கிறார் என்று நினைச்சன்.. :(

பிறகு பார்த்தா நம்மட பெண்கள் எதிர்ப்பாளர் நெடுக்கு ஒரு பெண்ணைப்பற்றி

கவலையுடன் எழுதியிருக்கிறார்... :D (நம்பமுடியவில்லை.....வில்லை..... வில்லை :o )

இது உண்மையான சம்பவமா?

வசிப் பையா.. இது உண்மை சம்பவம். லிங்கு போட்டிருக்கமில்ல.

பட் சோ சாட்..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

றுக்சானாவை விட வயது கூடிய 19 -- 25 வரையுள்ள பல பாகிஸ்தானிய பெண்கள் வெளிநாட்டில் திருமணம் செய்யலாம் என்று சொல்லி ஸ்பொன்சரும் செய்து இங்கு (மேற்கு நாடுகளுக்கு) கொண்டு வரப்பட்டு 45 -- 50 வயதுள்ளவருக்கு திருமணம் செய்து வைக்கப்படும். பிறகு அவர் வீட்டில் இருந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பார். அப் பெண் அவருக்கு சமிக்க வேண்டும்.வீட்டு வேலைகள் எல்லாம் செய்ய வேண்டும். பிறகு அப்பெண் தான் வேலைக்கு போய் காசும் கொண்டு வரவேண்டும். என்ன உலகம்??? எங்கே மனித நேயம். "மனிதன் மாறி விட்டான் மரத்தில் ஏறிவிட்டான்".

காந்தி அடிகளும் இளம் பெண்களை வைச்சு தனக்கு உதவி பெற்றவர். ஈ வே ரா என்ற பகுத்தறிவு பேசினவரும் அப்படி செய்தவர். இப்படி வயது போனவை இளம் பெண்களை திருமணம் செய்யுறது மேற்கிலும் சகஜம்.

அதுவும் பல இளம் பெண்கள் நல்ல பணக்கார வயதானவர்களை திருமணம் செய்து பணத்தை கையில் எடுத்திட்டு வெளியில் இன்னொருவர் அல்லது இன்னும் பலருடன் வேற மாதிரியான வாழ்க்கை வாழுறவை..!

நான் அப்படிப்பட்ட பெண் நாய்களுக்கு எல்லாம் குரல் கொடுப்பவன் அல்ல. :(

ஏதும் அறியா ஒரு சிறுமி அதுவும் 12 வயசில.. அவளின் கனவுகள் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம்..15 வயசில பாலியல் தொந்தரவு என்று பட்ட அவஸ்தைகள் அதைக் கருதி அவளின் மனித நேயத்தின் உண்மைத் தன்மைக்கு தான் இந்த பதிவு.. குறிப்பா சிறுமிகள் இப்படிச் சீரழிவதால அவர்கள் வளர்ந்து சமூகத்தை சீரழிக்க முயல்வார்கள். அதைத் தடுக்கனும் என்றால் இவை தொடர்பா நல்ல விழிப்புணர்வு வரனும் மக்களிடம்..!

Edited by nedukkalapoovan

என்னோட ஒரு பிள்ளை படிச்சவ ஆறாம் வகுப்பில இருந்து எட்டாம் வகுப்பு மட்டும். நான் மூன்டாம் வகுப்பில இருந்து எட்டாம் வகுப்பு மட்டும் மிக்ஸ் ஸ்கூலிலதான் படிச்சனான். அப்ப விசயம் என்ன என்டால்..

நான் பத்தாம் வகுப்பு படிக்கேக்க - ரோட்டில ஒரு பெண் கையில குழந்தையோட ஒருவர் சைக்கிளில ஏத்திக்கொண்டு போகப் பாத்தன். அது முந்தி என்னோட ஸ்கூலில படிச்ச பிள்ளை.

அப்ப நான் பெடிங்கள கேட்டன் என்ன எண்டு. அவங்கள் சொன்னாங்கள் 14 வயசுலையே கலியாணம் கட்டீட்டாவாம்.

சும்மா பாகிஸ்தான் எண்டு தூர எல்லாம் போகாதிங்கோ. எங்கட ஊருக்கையே 14 வயசில கலியாணம் கட்டின எத்தினயோ பேர எனக்கு தெரியும்.

பெரும்பாலும் இப்பிடி நடக்கிறதுக்கு வறுமைதான் காரணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலும் இப்பிடி நடக்கிறதுக்கு வறுமைதான் காரணம்.

ஊரில வறுமையை உதவிக் கூப்பிட்டு தவறுகளை மறைச்சிட அல்ல மன்னிச்சிட காரணம் தேடுறது. அது கூடத் தப்புத்தான். வறுமை என்றா ஏன் பிள்ளை பெத்துக்கிறீங்க...! ஊரில பிரச்சனைகளின் வடிவம் வேற. மேலை நாடுகளில வேற..!

இந்தச் சிறுமி ஆசியச் சிறுமி என்பதால் அவளின் முறைப்பாடு கூட கவனமாக பரிசீலிகப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படல்ல என்றதும் ஒரு குறையா இருக்குது..!

பிரிட்டனில என்ன பிரச்சனை..???! சைல்ட் கிரடிட் எடுக்கிறீங்க.. பணமா வருகுது. இலவசக் கல்வி. இதுக்குப் பிறகும் என்ன தேவையாம்...???! பெத்துப் போடுறதுதான் வேலை. அரசுதான் வளர்க்குது. ஊரை அப்படியே இங்க ஒப்பிடாதேங்க. :wub:

Edited by nedukkalapoovan

சரி இப்ப என்ன சொல்ல வாறீங்கள்? நீங்களும் பிரிட்டனில இருக்கேக்க தானே இது எல்லாம் நடந்து இருக்கிது. நீங்களாவது ரொனு பிளேயர் இல்லாட்டி சாள்ஸ் இல்லாட்டி வில்லியம் இல்லாட்டி மகாராணி யாருக்காச்சும் இங்கிலிசில ரெண்டு கிழிகிழிச்சு கடிதம் எழுதி அனுப்பி இருக்கலாம் தானே?

இப்ப என்ன செய்யலாம் எண்டு சொல்லிறீங்கள். அந்த சிறுமிக்கு தமிழ் பழக்கி யாழில எழுதச்சொல்லுவமா? இல்லாட்டி யாழ் சார்பா கொஞ்சம் காசு சேத்து அனுப்புவமா?

ஊரில வறுமை தவிர வேற என்ன பிரசனை இருக்கிது?? ஆமி பிரச்சனை எண்டு யாரும் பதினான்கு வயசில கலியாணம் கட்டுறீனமோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தச் சிறுமி இப்போ அதிகாரிகளின் கவனிப்பின் கீழ் உள்ளார். எனி அவரின் பிரச்சனைகளை அவர்கள் கவனிப்பார்கள்.

பிரச்சனை என்ன என்றால்..இன்னும் இப்படி எத்தனையோ சிறுமிகள் இதே சூழலை எதிர்கொண்டபடி..வெளில இருக்காங்க.. என்பதுதான். அவங்களும் இப்படி ஆகக் கூடாது என்றதை தமிழ் மொழி பேசுறவங்களும் அறியனும் தடுக்க முயலும் என்றதுதான் எங்க எதிர்பார்ப்பு...!

ஆமி பிரச்சனை எண்டு யாரும் பதினான்கு வயசில கலியாணம் கட்டுறீனமோ?

ஊரில தனிய இருந்தா இயக்கத்துக்குப் போடுவான்.. வெளிநாட்டுக்குப் போற வழியில ஆமி பிடிச்சிடும் என்று 18 வயசுப் பொடிக்கு 16 வயசுப் பெட்டையை கலியாணம் கட்டிக் கொடுத்து ஒரு வருசத்தில குழந்தை பிறக்க அதைக் காவிக் கொண்டு கொழும்புக்கு வந்து.. வெளிநாட்டுக்கு போய் அசைலம் அடிச்ச கனக்கப் பேர் இருக்கினம்... ஊர் விடுப்புகளை அவிழக்கச் செய்யாதீங்க... அது நம்ம ஆக்களை நாறடிச்சிடும்.

நம்மாக்களிலும் இப்படிச் செய்யிற ஆக்கள் இருக்கினம்.. வீட்டு வன்முறை நடக்குது என்றதை நான் அறிஞ்சிருக்கிறன். அதைவிட பல கூத்துகள் நடக்குது. ஆனா நான் எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு அமைய வெளில நேரடியா ஆதாரங்களோட சொல்ல முடியாது. :wub:

Edited by nedukkalapoovan

நல்ல ஐடியாவா இருக்கிதே? அட எனக்கும் இப்பிடி பதினெட்டு வயதில கலியாணம் கட்டி தந்து இருந்தால் சூப்பரா இருந்து இருக்கும். ஆனா எண்ட அம்மா அப்பாவுக்கு அவ்வளவுக்கு யோசிச்சு செயற்பட மூளை காணாது.

ஊரில படிப்பும் இல்லாமல், தொழிலும் இல்லாமல் சும்மா உந்த உதயன் பேப்பரையும், கிரிக்கட் மச்சுகளையும் பாத்துக்கொண்டு இருந்த நேரம் கலியாணமாவது கட்டி இருக்கலாம். அட மிஸ் பண்ணீடிது.

இயக்கத்துக்கு போறது அவரவர் விருப்பம். ஆனால் இயக்கத்துக்கு போகாமல் கலியாணம் கட்டினது சரி இல்லை எண்டு சொன்னதை ஏற்றுகொள்ள முடியவில்ல நெடுக்கு. ஏன் அப்ப நீங்கள் போய் இருக்கலாம் தானே இயக்கத்துக்கு? பிறகு ஏன் யூகேயுக்கு ஓடி வந்தனீங்கள்? ஓடுறதுதான் ஓடினீங்கள், ஒரு பொம்பிளையக் கலியாணம் கட்டிப்போட்டு சோடியா ஓடி இருந்தால் தமிழினத்தின்ட தொகையையாவது பெருக்கி இருக்கலாம்.

நாட்டை விட்டு ஓடேக்கே சிங்கிளா ஓடுறது கப்பிலா ஓடுறது எல்லாம் ஒண்டு தானே?

ஹாஹா.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்ன் கண்களில் கண்ணீர் . :wub:

லண்டனில் அதிகம் கட்டாயத்திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறத

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஐடியாவா இருக்கிதே? அட எனக்கும் இப்பிடி பதினெட்டு வயதில கலியாணம் கட்டி தந்து இருந்தால் சூப்பரா இருந்து இருக்கும். ஆனா எண்ட அம்மா அப்பாவுக்கு அவ்வளவுக்கு யோசிச்சு செயற்பட மூளை காணாது.

ஊரில படிப்பும் இல்லாமல், தொழிலும் இல்லாமல் சும்மா உந்த உதயன் பேப்பரையும், கிரிக்கட் மச்சுகளையும் பாத்துக்கொண்டு இருந்த நேரம் கலியாணமாவது கட்டி இருக்கலாம். அட மிஸ் பண்ணீடிது.

இயக்கத்துக்கு போறது அவரவர் விருப்பம். ஆனால் இயக்கத்துக்கு போகாமல் கலியாணம் கட்டினது சரி இல்லை எண்டு சொன்னதை ஏற்றுகொள்ள முடியவில்ல நெடுக்கு. ஏன் அப்ப நீங்கள் போய் இருக்கலாம் தானே இயக்கத்துக்கு? பிறகு ஏன் யூகேயுக்கு ஓடி வந்தனீங்கள்? ஓடுறதுதான் ஓடினீங்கள், ஒரு பொம்பிளையக் கலியாணம் கட்டிப்போட்டு சோடியா ஓடி இருந்தால் தமிழினத்தின்ட தொகையையாவது பெருக்கி இருக்கலாம்.

நாட்டை விட்டு ஓடேக்கே சிங்கிளா ஓடுறது கப்பிலா ஓடுறது எல்லாம் ஒண்டு தானே?

ஹாஹா.. :wub:

நான் வெளிநாட்டுக்கு தங்க என்று வரேல்ல. தாய் நாட்டுக்குப் போவன் என்றுதான் வந்தனான். எங்களுக்கு அங்கேயே வசதியா வாழ எல்லாம் இருக்குது. இஞ்ச தான் கஸ்டம்..! நிச்சயம் என்ர அலுவல் முடியப் போவன். :lol:

பெட்டையள் சுத்தினதுவள்.. நான் தான் ஏறெடுத்தும் பார்க்கல்ல... இப்பவும் பார்க்கிறதில்ல.. இப்ப அவை பார்க்கினமோ என்றும் நான் பார்க்கிறதில்ல..! அதுக்காக நான் வொறி பண்றதும் இல்ல..! :D

என்னால உந்தப் பெண்களை கலியாணம் கட்டி அவையட அலுவல் பார்த்திட்டு முன்னும் பின்னும் திரிய முடியாது. அவைக்கு கோவம் வரப் பேசுவினம்.. அன்பு வர சிணுக்குவினம். உதெல்லாம் சரிவராது. எனக்கு ஒன்றில் அன்பா இருக்கனும்.. இல்லைன்னா என்ன என் வழில விடனும்..! நா அப்பா அம்மா கூடவே அப்படித்தான். அவங்க ஏதாச்சுக்கும் பேசுனா கூட கதைக்காமல் இருந்துடுவன்..!

நான் ஒரு பிள்ளையை குளோன் பண்ணிக்குவன்..! அதுக்கு ஒரே ஒரு டாட் மட்டும் தான் நோ மம்மி..! நீங்க கேட்டதுக்காகச் சொல்லுறன். :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஐடியாவா இருக்கிதே? அட எனக்கும் இப்பிடி பதினெட்டு வயதில கலியாணம் கட்டி தந்து இருந்தால்

இருந்தால்... இப்ப உங்களுக்கு 18 வயதில ஒரு பிள்ளை இருந்து அதுக்கு கலியாணம் பேசிக் கொண்டிருந்திருப்பீர்கள். நங்கள் எல்லாம் ஒண்டிலிருந்து தப்பி இருப்போம் :wub:

Edited by Sabesh

இருந்தால்... இப்ப உங்களுக்கு 18 வயதில ஒரு பிள்ளை இருந்து அதுக்கு கலியாணம் பேசிக் கொண்டிருந்திருப்பீர்கள். நங்கள் எல்லாம் ஒண்டிலிருந்து தப்பி இருப்போம் :lol:

ஏன் மாமா பிள்ளைக்கு கல்யாணம் பேச வேண்டும் அவையாவே பார்த்து கொள்ளுவீனம் தானே... :wub: (குருவிற்கு பார்க்க தெரியல்ல போல :wub: )...நேக்கும் தான் :) ...அது சரி ஒண்டிலிருந்து தப்பி இருப்போம் என்று சொன்னீங்க அது என்ன மாமோய்..(அப்ப மற்றது :lol: )...

அப்ப நான் வரட்டா!!

நான் ஒரு பிள்ளையை குளோன் பண்ணிக்குவன்..! அதுக்கு ஒரே ஒரு டாட் மட்டும் தான் நோ மம்மி..! நீங்க கேட்டதுக்காகச் சொல்லுறன். :(:D

ஓம் நல்லா குளோன் பண்ணுங்கோ. குழந்தை வளரேக்க அதுசெய்யுற அட்டகாசங்கள தாங்க ஏலாமல் அதுக்கு பிறகு குழந்தைய வளர்க்க ஒரு பெண்ணை கலியாணம் செய்யாமல் இருந்தால் சரி.

இருந்தால்... இப்ப உங்களுக்கு 18 வயதில ஒரு பிள்ளை இருந்து அதுக்கு கலியாணம் பேசிக் கொண்டிருந்திருப்பீர்கள். நங்கள் எல்லாம் ஒண்டிலிருந்து தப்பி இருப்போம் :D

ஹிஹி.. நான் பதினெட்டு வயதில கலியாணம் கட்டி இருந்தா இப்ப எனக்கு பதினான்கு வயசில ஒரு பிள்ளை இருந்து இருக்கும். அது பெட்டையா இருந்து இருந்தால் வளர்ந்தாப்பிறகு அதை எண்ட சீடனுக்கு கலியாணம் கட்டி குடுத்து இருக்கலாம். ஹாஹா

இன்னும் ரெண்டு மூண்டு வருசத்தில நான் கலியாணம் கட்டி எனக்கு பிள்ளை வந்தால் - அது பெண்பிள்ளையா இருந்தால் பிறகு ஒரு காலத்தில உங்கட மகனுக்கு பேசி கலியாணம் செய்து வைப்பம். :lol:

ஏன் மாமா பிள்ளைக்கு கல்யாணம் பேச வேண்டும் அவையாவே பார்த்து கொள்ளுவீனம் தானே... :) (குருவிற்கு பார்க்க தெரியல்ல போல :( அப்ப நான் வரட்டா!!

ஓம் அவையா பாத்துக்கொள்ளுவீனம். எண்டாலும் அவையா பாக்காவிட்டால் நாங்கள் தானே பிறகு பாக்கவேண்டும். வயசுபோன காலத்தில தேடித்திரியாமல் முன்னுக்கே பாத்து வச்சால் கஸ்டப்பதேவை இல்லத்தானே. அதான்.

ஹிஹி.. நான் பதினெட்டு வயதில கலியாணம் கட்டி இருந்தா இப்ப எனக்கு பதினான்கு வயசில ஒரு பிள்ளை இருந்து இருக்கும். அது பெட்டையா இருந்து இருந்தால் வளர்ந்தாப்பிறகு அதை எண்ட சீடனுக்கு கலியாணம் கட்டி குடுத்து இருக்கலாம். ஹாஹா

குருவே எனக்கு அழுகை அழுகையா வருது... :wub: (உங்களுக்கு ஏனப்ப 18 வயசில கல்யாணம் நடக்கல்ல நடந்திருந்தா நீங்க எனக்கு மாமனார் ஆகி இருப்பீங்க)..என்ன கொடுமை இது :wub: ..நல்லவங்கள தான் ஆண்டவன் ரொம்பவே சோதிக்கிறான்..(பின்னே எனக்கு மகளை கல்யாணம் கட்டி தந்திருப்பார் என்று சொல்லுறார் என்றா :unsure: )..அவர் எவ்வளவு நல்லவர் என்று பாருங்கோ...நிசமா என்னால முடியல்ல... :wub:

அப்ப நான் வரட்டா!!

ஓம் அவையா பாத்துக்கொள்ளுவீனம். எண்டாலும் அவையா பாக்காவிட்டால் நாங்கள் தானே பிறகு பாக்கவேண்டும். வயசுபோன காலத்தில தேடித்திரியாமல் முன்னுக்கே பாத்து வச்சால் கஸ்டப்பதேவை இல்லத்தானே. அதான்.

ம்ம்ம்..சரியா சொன்னீங்க குருவே... :lol: (அப்ப எனி நான் பார்க்க தொடங்கட்டே உங்களுக்கும் சேர்த்து பார்க்கவோ இல்லாட்டி எனக்கு மட்டும் பார்க்கவோ உங்களுக்கு வாறவா எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னா ஈசியா இருக்கும் பார்க்க :wub: )..

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெட்டையள் சுத்தினதுவள்.. நான் தான் ஏறெடுத்தும் பார்க்கல்ல... இப்பவும் பார்க்கிறதில்ல.. இப்ப அவை பார்க்கினமோ என்றும் நான் பார்க்கிறதில்ல..! அதுக்காக நான் வொறி பண்றதும் இல்ல..! :D

ஐயோ நெடுக்கு சாமி! :o

உங்களுக்கு ஏதோ வருத்தம் இருக்கு ஹோர்மோன் பிரச்சனையாயும் இருக்கலாம் :rolleyes:

எதுக்கும் நல்ல பரியாரியாரிட்டை கொண்டேய்க் காட்டுங்கோ :lol:

ஆகலும் முத்த விட்டுடாதேங்கோ :(

ஐயோ நெடுக்கு சாமி! :)

உங்களுக்கு ஏதோ வருத்தம் இருக்கு ஹோர்மோன் பிரச்சனையாயும் இருக்கலாம் :rolleyes:

எதுக்கும் நல்ல பரியாரியாரிட்டை கொண்டேய்க் காட்டுங்கோ :lol:

ஆகலும் முத்த விட்டுடாதேங்கோ :D

இதை இப்பதான் கண்டு பிடிச்சனீங்களோ தாத்தா? தாத்தாவுக்கு வயசு போன நேரத்திலை இதுகளைச் சொல்லாதையுங்கோ. இருக்கிற கொஞ்சக் காலத்துக்காகவாவது சந்தோசமாக இருந்து விட்டுப் போகட்டும். :o:(

ஓம் நல்லா குளோன் பண்ணுங்கோ. குழந்தை வளரேக்க அதுசெய்யுற அட்டகாசங்கள தாங்க ஏலாமல் அதுக்கு பிறகு குழந்தைய வளர்க்க ஒரு பெண்ணை கலியாணம் செய்யாமல் இருந்தால் சரி.

ஹிஹி.. நான் பதினெட்டு வயதில கலியாணம் கட்டி இருந்தா இப்ப எனக்கு பதினான்கு வயசில ஒரு பிள்ளை இருந்து இருக்கும். அது பெட்டையா இருந்து இருந்தால் வளர்ந்தாப்பிறகு அதை எண்ட சீடனுக்கு கலியாணம் கட்டி குடுத்து இருக்கலாம். ஹாஹா

இன்னும் ரெண்டு மூண்டு வருசத்தில நான் கலியாணம் கட்டி எனக்கு பிள்ளை வந்தால் - அது பெண்பிள்ளையா இருந்தால் பிறகு ஒரு காலத்தில உங்கட மகனுக்கு பேசி கலியாணம் செய்து வைப்பம். :D

ஓம் அவையா பாத்துக்கொள்ளுவீனம். எண்டாலும் அவையா பாக்காவிட்டால் நாங்கள் தானே பிறகு பாக்கவேண்டும். வயசுபோன காலத்தில தேடித்திரியாமல் முன்னுக்கே பாத்து வச்சால் கஸ்டப்பதேவை இல்லத்தானே. அதான்.

என்ன கொடுமையப்பா இது. :(:( இப்பவே சம்பந்தம் பேசி முடிச்சால், பாவம் பிள்ளைகள். அதுகளின்ர விருப்பத்திற்கு விட மாட்டியள் போல. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனில் வருடாந்தம் 4000 கட்டாயத் திருமணங்கள் !

வெளிநாட்டு பின்னணி கொண்ட பல பெற்றோர்கள் தங்களுடைய இளம் பிள்ளைகளின் திருமண விருப்பங்களை அடியோடு நிராகரித்து தமது விருப்பை நிறைவேற்றும் கட்டாயத் திருமணங்களை நடாத்தி வருகிறார்கள். இந்த வகையில் கடந்த ஆண்டு மட்டும் கட்டாயத் திருமணங்களில் இருந்து தம்மை பாதுகாக்கும்படி அபயம் கோரி சுமார் 400 இளம் பெண்களிடமிருந்து 5000 தடவைகள் வரை தொலைபேசி அழைப்பு வந்ததாக போலீஸ் பிரிவு தெரிவிக்கிறது. ஒவ்வொரு பத்து இளம் பெண்களுக்கும் எட்டு இளம் பெண்கள் என்றளவில் பெற்றோருடைய அத்துமீறலும், கட்டாய நெருக்குதலும் நிலவுவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பார்போட் நகரில் மட்டும் கடந்த ஆண்டு 16 வயதுடைய 33 பெண்கள் கட்டாயத் திருமணத்திற்குள்ளாக்கப் பட்டுள்ளனர். 1999 ல் கட்டாயத் திருமணங்களை தடுக்கும் சட்டங்கள் வந்த பின்னர் வருடாந்தம் 70 அதிரடிப் பாய்ச்சல்கள் இடம் பெறுகின்றன. பங்களாதேசை சேர்ந்த 18 வயது யுவதி ஒருவர் தந்திரமாக பங்களாதேஸ் அழைத்து செல்லப்பட்டு கட்டாயத் திருமணம் நடாத்தப்பட்டது இதற்கு ஓர் உதாரணமாகக் காட்டப்படுகிறது. கட்டாயத் திருமணத்திற்கும், பேச்சுத் திருமணங்களுக்கும் இடையேயுள்ள நுண்ணிய வேறுபாட்டை பிரித்தறிவது கடினமாக இருக்கிறது என்றும் தெரிவிக்கிறது.

http://www.alaikal.com

குருவே எனக்கு அழுகை அழுகையா வருது... :lol: (உங்களுக்கு ஏனப்ப 18 வயசில கல்யாணம் நடக்கல்ல நடந்திருந்தா நீங்க எனக்கு மாமனார் ஆகி இருப்பீங்க)..என்ன கொடுமை இது :) ..நல்லவங்கள தான் ஆண்டவன் ரொம்பவே சோதிக்கிறான்..(பின்னே எனக்கு மகளை கல்யாணம் கட்டி தந்திருப்பார் என்று சொல்லுறார் என்றா :rolleyes: )..அவர் எவ்வளவு நல்லவர் என்று பாருங்கோ...நிசமா என்னால முடியல்ல... :(

அப்ப நான் வரட்டா!!

ம்ம்ம்..சரியா சொன்னீங்க குருவே... :lol: (அப்ப எனி நான் பார்க்க தொடங்கட்டே உங்களுக்கும் சேர்த்து பார்க்கவோ இல்லாட்டி எனக்கு மட்டும் பார்க்கவோ உங்களுக்கு வாறவா எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னா ஈசியா இருக்கும் பார்க்க :( )..

அப்ப நான் வரட்டா!!

சரி பரவாயில்ல. மாமவா இல்லாட்டி என்ன. எதிர்காலத்தில ரெண்டுபேரும் சம்மந்தியா இருந்துட்டு போவம். எதிர்காலத்தில பிறக்கப்போகும் உங்கட குழந்தைக்கும், எதிர்காலத்தில பிறக்கப்போகும் எனது குழந்தைக்கும் இப்பவே கலியாணம் பேசி முடிப்பம். இதப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்? எனக்கு பெண் குழந்தையா இருந்தால் சீதனம் ஒண்டும் தரமாட்டன். ஆனா ஆம்பளையா இருந்தால் உங்களிட்ட இருந்து சீதனம் எதிர்பார்ப்பன். உங்கட வசதி என்ன மாதிரி?

என்ன கொடுமையப்பா இது. :(:D இப்பவே சம்பந்தம் பேசி முடிச்சால், பாவம் பிள்ளைகள். அதுகளின்ர விருப்பத்திற்கு விட மாட்டியள் போல. :o

என்ன உலகத்தில நடக்காததையா செய்யுறம். அவேக்கு விருப்பம் எண்டால் பிறகு அவே பாட்டில விடலாம். அவே ஒண்டையும் பாக்காம பேசாமல் எங்கட மடியுக்க சும்மா இருந்தால் பிறகு வயசுபோன காலத்தில எங்களுக்கு தானே உபத்திரவம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ நெடுக்கு சாமி! :(

உங்களுக்கு ஏதோ வருத்தம் இருக்கு ஹோர்மோன் பிரச்சனையாயும் இருக்கலாம் :rolleyes:

எதுக்கும் நல்ல பரியாரியாரிட்டை கொண்டேய்க் காட்டுங்கோ :lol:

ஆகலும் முத்த விட்டுடாதேங்கோ :D

சிஸ்டம் எல்லாம் நல்லாத் தான் இருக்குது. ஆனா பொண்ணுங்க போக்கு சரியில்ல.. எனக்குப் பிடிக்கிறாப் போல இல்ல..! இதைவேற பப்பிளிக்கில சொல்ல வேண்டி இருக்கு..! :lol::o

Edited by nedukkalapoovan

சரி பரவாயில்ல. மாமவா இல்லாட்டி என்ன. எதிர்காலத்தில ரெண்டுபேரும் சம்மந்தியா இருந்துட்டு போவம். எதிர்காலத்தில பிறக்கப்போகும் உங்கட குழந்தைக்கும், எதிர்காலத்தில பிறக்கப்போகும் எனது குழந்தைக்கும் இப்பவே கலியாணம் பேசி முடிப்பம். இதப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்? எனக்கு பெண் குழந்தையா இருந்தால் சீதனம் ஒண்டும் தரமாட்டன். ஆனா ஆம்பளையா இருந்தால் உங்களிட்ட இருந்து சீதனம் எதிர்பார்ப்பன். உங்கட வசதி என்ன மாதிரி?

என்ன உலகத்தில நடக்காததையா செய்யுறம். அவேக்கு விருப்பம் எண்டால் பிறகு அவே பாட்டில விடலாம். அவே ஒண்டையும் பாக்காம பேசாமல் எங்கட மடியுக்க சும்மா இருந்தால் பிறகு வயசுபோன காலத்தில எங்களுக்கு தானே உபத்திரவம்?

அவை ஏன் உங்களுக்கு உபத்திரவம் தரப் போகினம். நீங்கள் குடுக்காமல் இருந்தால் சரி. இப்ப இருக்கிற பிள்ளையளே தெளிவாத் தான் இருக்கினம். இனி வாற தலைமுறை, இன்னும் தெளிவா இருப்பினம். அவை உங்கடை மடியிலை இருப்பினம் எண்டு எதிர்பார்க்காதையுங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவை ஏன் உங்களுக்கு உபத்திரவம் தரப் போகினம். நீங்கள் குடுக்காமல் இருந்தால் சரி. இப்ப இருக்கிற பிள்ளையளே தெளிவாத் தான் இருக்கினம். இனி வாற தலைமுறை, இன்னும் தெளிவா இருப்பினம். அவை உங்கடை மடியிலை இருப்பினம் எண்டு எதிர்பார்க்காதையுங்கோ

அவை மடியிலை இருக்காயினம்.. மடிக்க மறைச்சு வைச்சிட்டு இருப்பினமே ஆயிரம் பிரச்சனைகள். அதுதான்.. யோசிக்கிறார்..! :lol::rolleyes:

Edited by nedukkalapoovan

சரி பரவாயில்ல. மாமவா இல்லாட்டி என்ன. எதிர்காலத்தில ரெண்டுபேரும் சம்மந்தியா இருந்துட்டு போவம். எதிர்காலத்தில பிறக்கப்போகும் உங்கட குழந்தைக்கும், எதிர்காலத்தில பிறக்கப்போகும் எனது குழந்தைக்கும் இப்பவே கலியாணம் பேசி முடிப்பம். இதப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்? எனக்கு பெண் குழந்தையா இருந்தால் சீதனம் ஒண்டும் தரமாட்டன். ஆனா ஆம்பளையா இருந்தால் உங்களிட்ட இருந்து சீதனம் எதிர்பார்ப்பன். உங்கட வசதி என்ன மாதிரி?

அட சம்மந்தியா..(என்னும் நேக்கு கல்யாணமே நடக்கல்ல அதுகுள்ள :) )..என்னால முடியல்ல..எனக்கு இதில ஒன்னும் ஆட்சேபனை இல்லை குருவே..(பேஷா பண்ணிகோவமே :rolleyes: )வேண்டும் என்றா இப்பவே தட்டையும் மாற்றி கொள்வோம்..(இது எப்படி இருக்கு)..அட எனக்கு தான் பெண் குழந்தை பிறக்க வேண்டும் பிகோஸ் நேக்கு கேள் பேபி என்றா தான் ரொம்ப நன்ன விருப்பம்.. :lol: (கீயூட்டா இருக்கும் என்ன மாதி :D ரி)...ரொம்ப கொடுமையா இருக்குமோ..அட சீதனம் மாட்டர் இருக்கோ பரவால்ல நானே தாரன்..(காசை வைத்து தான் என்ன செய்ய போறோம் அது தான் :lol: )..

ஆனா ஒன்று என்ட மகளை கண் கலங்காம வைத்திருக்க வேண்டும் சொல்லிட்டன் :o அவள் அழுதால் என்றா அதற்கு பிறகு நான் தாங்க மாட்டன் சொல்லிட்டன்.. :( (அட என்னும் நான் பேபியாக்கும் என்ன :( )...

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.