Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

முரளி,

வாசுதேவன் எழுதிய கவிதையின் அடிப்படையிலா? எந்தக் கவிதையை சொல்கிறீர்கள்?

  • Replies 54
  • Views 12.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் - முளைநோக்கான்

முளையை நான் நல்லா நோக்கி இருக்கிறேன். எத்தின முளை பார்த்திருப்பன். ஊரில மழை காலத்தில புளியங்கொட்டை முளைச்சு வரேக்க என்ன அழகா இருக்கும். தினமும் ஒவ்வொரு வளர்ச்சி இருக்கும்..! தினமும் பார்த்து ரசிச்சிருக்கிறன்.

முலை என்று வந்தால் கூட நோக்கான் என்று வர முடியாது. நோக்கத்தானே அதை நெஞ்சுப் பகுதியில வைச்சிருக்குது. இல்ல அதை ஒளிச்சு உள்ள வைச்சிட்டு தேவைக்கு வெளிய வர வைச்சிருக்கலாம்.. இப்ப நாக்குப் போல.. ஏன் அப்படி வைக்கல்ல இயற்கை...! குட்டி பால் குடிக்க வசதியா வைச்சிருக்குது..! இதில என்ன இருக்குது..! ஆண்களிடமும் முலை இருக்குது. அது சின்னனா பதாங்கமா இருக்குது..!

நட்பு என்ற வகையின் கீழ் தோழியின் பருத்த முலை பற்றி விமர்சிக்க சபேசன் அனுமதி கேட்கேக்க.. அது குறித்து அலச வேண்டியது அவசியமாகிறது தானே..! ஏன் ஒளிக்க வேண்டும்..!

ஆனால் முலை வந்து எனக்கு நட்புக்கோ.. அல்லது அன்புக்கோ.. அல்லது மனிதாபிமானத்துக்கோ இடைஞ்சலா இல்லை.. என்றதைத்தான் நான் சொல்லவாறன்..! :wub:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று மட்டும் புரிகிறது.

ஆண், பெண் இருபாலருக்குமான நட்பு உங்கள் விவாதங்களை எடுத்துப் பார்க்கும்போது எங்கள் சமூகத்திற்குச் சாத்தியமற்றதாகவே உணரமுடிகிறது. இருப்பினும் எனக்கான நட்பு வட்டத்தில் இப்படியான சங்கடங்கள் ஏற்பட்டதில்லை. உங்கள் யாருக்கேனும் இப்படியான நட்பு ரீதியான அனுபவங்கள் இருக்கக்கூடும். பார்ப்போம். விவாதத்திற்கான அடிப்படையே பிழை என்று முரளி சுட்டிக்காட்டுகிறார்.

பண்பாடு உள்ள இடத்தில் நட்பு வாழமுடியாதா?

நட்பு உள்ள இடத்தில் பண்பாடு வாழமுடியாதா?

என்னுடைய இந்தக் கேள்வி குழந்தைத்தனமாக இருக்கிறது என்று நீங்கள் எல்லோரும் சேர்ந்து விழுந்து விழுந்து சிரிக்கலாம். ஏன் நட்பு என்பது அம்மண நிலை என்பது போல் பார்க்கிறீர்கள்? அதை ஆடைகட்டி நாகரீகமாகப் பார்க்கக் கூடாதா?

இங்கு வந்து பேசும் எல்லோருமே ஆண்களாகவே இருக்கிறீர்கள். எப்போதுமே ஆண்வர்க்கத்தின் ஆளுமையை நிலைநாட்டுவதற்காக பெண்களை ஏதோ வகையில் முடக்குவதாகவே ஆணினத்தின் செயற்பாடுகள் அமைவது கண்கூடு. இது காலங்காலமாகப் பலவிடயங்களில் உணரப்பட்டிருக்கிறது.

ஒரு ஆண் தன் சிநேகிதியிடம் தாய்மையின் அங்கத்திரட்சியை கண்களால் தழுவக்கேட்கின்ற திமிர் ஆணுக்குரிய இயல்பாக்கப்படுகிறதோ? எங்காவது ஒரு பெண் ஆணின் அந்தரங்க அங்கத்தை நட்பின் பெயரால் ரசிக்கக் கேட்டிருப்பாளா? பெண்ணின் இயல்பில் அத்தகைய செயல் நாகரீகமற்றதாகவே உணரப்படுகிறது. ஆக ஆண்கள் பெண்களின் நட்பை அங்கீகரிப்பார்களானால் அவர்களுக்கு இருக்கக்கூடிய ஆணென்னும் திமிரில் சிநேகிதியிடம் கேட்கும் அனுமதிகளை எங்கே தன் மனைவியும் நட்பென்ற ரீதியில் கட்டவிழ்த்துவிடுவாளோ என்ற பயம் ஆண்களுக்குள் ஒருதலைப்பட்சமாகவே செயற்படுகிறது. அதுவே ஆண், பெண் என்ற நட்பு நிலைக்கு ஆண்களின் கருத்து ஆரம்பத்திலேயே பண்பாட்டை நட்பு பேணமுடியாது என்னும் கருத்தை மறைமுகமாக வைக்க முனைகின்ற நிலையைத் தோற்றுவிக்கிறது.

விவாதம் தடம் மாறிச் செல்கிறதோ தெரியவில்லை. இருப்பினும் வாதவிவாதம் ஆரோக்கியமானவற்றை வெளிக் கொணருமானால் மகிழ்ச்சியே.

சபேசன்,

முதலில உங்கட பக்கத்து விவாதம் பற்றி மாத்திரம் பார்ப்பம். சகீரா ஏற்கனவே நொந்துபோய் இருப்பா. அவவின் விவாதம் பற்றி பிறகு பார்க்கலாம்.

நீங்கள் சொல்லுறீங்கள்...

உன் பருத்த முலைகளை

நான் ரசிப்பதை

இயற்கை எனக் கொள்ளும்

உயந்த நட்பை

தருவாயா தோழி!

இப்படி!

எனது முதலாவது கேள்வி என்ன எண்டால்...

எனது காதலியிடம் நான் அல்லது உங்கள் காதலியிடம் நீங்கள் பின்வருமாறு கேட்பீங்களா?

உன் பருத்த முலைகளை

நான் ரசிப்பதை

இயற்கை எனக் கொள்ளும்

உயந்த காதலை

தருவாயா காதலி!

இப்படி அவவிடம் சொன்னால் மூச்சையில் காறித்துப்புவார்களா? இல்லையா?

இதேபோல் நான் இன்னும் கலியாணம் கட்ட இல்லை. நீங்கள் கலியாணம் கட்டி இருந்தால் உங்கள் மனைவியிடம்

உன் பருத்த முலைகளை

நான் ரசிப்பதை

இயற்கை எனக் கொள்ளும்

உயந்த காமத்தை (?)

தருவாயா டார்லிங்!

இப்படி உங்கள் மனைவியிடம் சொல்லுவீங்களா? மனைவியாக இருந்தாலும் கூட இப்படி ஏதாவது ஏடாகூடமாக கதைச்சால் தும்புக்கட்டையால ரெண்டு சாத்தல் விழக்கூடும்.

ஆக மொத்தத்தில் காதலில் காமம் அனுமதிக்கப்படுகின்றது என்பதே முதலாவது வாதத்துக்குரிய பொருள். எங்கள் கலாச்சாரத்தை பார்த்தால் கலியாணம் முடித்தபின்பே மிகுதி ஊடல்கள் எல்லாம். காதல் செய்யும்போது இந்த விளையாட்டுக்கள் சரிவராது.

இந்தவகையில் பார்க்கும்போது நீங்கள் மேற்கண்ட கவிதை வரிகளின் அடிப்படையில் உங்கள் விவாதத்தை பின்னி எடுத்து இருப்பது பிழையாகத் தெரிகின்றது.

ஒரு நாகரீகமான ஒருத்தன் இப்படி தனது மனைவியிடம் கூட வெளிப்படையாக அவளது முளைபற்றிய தனது எண்ணங்களை வெளிப்படுத்துவானா என்பதே கேள்விக்குறி.

எனக்கு, மற்ற ஆக்களைப்பற்றித் தெரியாது. ஆனால், நான் ஒரு காலத்தில கலியாணம் கட்டினால் இப்படி எனது மனைவியைப் பார்த்து அவளது முளைபற்றிய எனது ஆசைகளை எல்லாம் சொல்ல மாட்டேன். இப்படி ஏதாவது கதைத்தால் அவள் என்னைப்பற்றி என்ன மனதில் நினைப்பாள்? அட ஒரு லூசனை கலியாணம் கட்டி இருக்கின்றேன் என்று யோசிக்க மாட்டாளா?

இந்தநிலைமையில்... நட்பு இப்படியான கொமண்டுகளை - கருத்துக்களை எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளும் என்பது கேள்விக்குறி. உண்மையில் நண்பர்களாக இருப்பவர்களிற்கு இப்படி சொன்னால், சிலது கோவிக்கக்கூடும். பின்னர் மன்னிச்ச்சு சமாதானம் அடையக்கூடும். அட எனது நண்பனுக்கு இப்பிடியும் மூள வேல செய்யுது எண்டு. ஆனால்... உண்மையில் யாராவது பெண்கள் தனது நண்பன் ஆண் தனது முளையை ரசிப்பதை அனுமதித்து ஏற்றுக்கொள்வார்களா?

அதாவது காமம் என்பது கீழ்த்தரமான ஒரு விடயம் இல்லை. ஆனால், நாங்கள் எப்படி நாகரிகமான முறையில் நடந்துகொள்கின்றோம் என்பது தான் முக்கியம். இன்னும் தெளிவாகச் சொன்னால்...

ஓர் ஆண் நண்பன் தனது பெண் நண்பியை திடீரென கட்டியணைத்து முத்தம் கொடுத்தால் அந்தப்பெண்ணுக்கு வராத கோபம், இப்படி அவளிடம் சொல்லும்போது வரலாம்.

உன் பருத்த முலைகளை

நான் ரசிப்பதை

இயற்கை எனக் கொள்ளும்

உயந்த நட்பை

தருவாயா தோழி!

பலர் செய்கைகளை விட வார்த்தைக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதும் உங்களுக்கு தெரியவேண்டும். எனவே, ஏதாவது ஏடாகூடமான செய்கையின்போது வராத பிரச்சனை வார்த்தை மூலம் வரக்கூடும்.

நான் வாசுதேவன் எழுதிய கவிதையை குறை உள்ளதாக கூற வரவில்லை. ஆனால்.. அவர் சும்மா கூறிய கருத்து ஒன்றின் அடிப்படையில் நிஜ வாழ்வை பிரதிபலிக்கும் வாதத்தை கட்டி எழுப்ப முனைவது பிழையாகப் படுகின்றது.

முரளி,

எல்லாம் இருக்கட்டும். முதலில் வாசுதேவன் எழுதிய கவிதை எது? எனக்கு இது புரியவில்லை.

மன்னிக்கவும் அது வாசுதேவன் எழுதவில்லையா.

அட யாராவது ஒருத்தர் எழுதினதை நீங்கள் இதுக்க இறக்கி இருந்தீங்கள். இதன்பின்னர்தான் உங்கள் விவாதம் பில்ட் அப் ஆனது.

நீங்கள் மேற்குறிப்பிட்ட கவிதையை அடிப்படையாக வைத்து உங்கள் விவாதத்தை பின்னி இருப்பதுபோலவே எனது கண்ணுக்கு படுகின்றது.

அப்படி இல்லை என்றால் மன்னித்துக்கொள்ளவும்.. அப்படியானால், நான் எனது கருத்தை வாபஸ் வாங்குகின்றேன். நன்றி!

நீங்கள் தோழியின் முலைகளை ரசிப்பது பற்றிய கவிதையைக் குறிப்பிடுகிறீர்கள் என்றால், அது நான் எழுதிய கவிதை.

நான் எழுதிய இந்தக் கவிதையினூடாக சொல்ல வருகின்ற விடயத்தை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பருத்த முலைகள் என்ற சொல் காமத்திற்கான குறியீடாக காட்டப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் "உன் அழகிய தொடைகள்", உன் வளைவுகள்" என்று எதை வேண்டும் என்றாலும் போட்டுக் கொள்ளலாம்.

சொல்ல வருகின்ற விடயம் பெண் மீது ஆணுக்கு ஏற்படும் காமம் சார்ந்த ஈர்ப்பு பற்றியது.

காமம் என்பது இயற்கையான ஒன்று என்று நீங்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நான் என் தோழிக்கு இப்படிச் சொல்கிறேன்:

"தோழி! உன்னுடைய அழகு எனக்குள் காமத்தை உருவாக்கலாம். அப்படி காமம் உருவாவது இயற்கையான ஒன்று என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். அதை கேவலம் என்று தவறாக கருதி என்னை புறக்கணிக்கக் கூடாது. எனக்குள் இயற்கையாக வருகின்ற உணர்வுகளையே நீ கேவலம்என்று கருதினால், அது எப்படி நல்ல நட்பாக இருக்க முடியும்? என்னை நானாகவே நீ அங்கீகரிக்க வேண்டும், உன்னை நான் நீயாகவே அங்கீகரிப்பது போல. அதுவே உயர்ந்த நட்பு "

இப்படிச் சொல்கிறேன். இந்த நான்கு வரிக் கவிதையில் நான் பல விடயங்களைச் சொல்வதாக நினைக்கிறேன். அப்படியே வெறும் வரிகளாக மட்டும் எடுத்து அர்த்தம் கற்பிப்பது நல்ல வாசிப்பு அல்ல.

ஆணுக்கு பெண் மீதும் பெண்ணுக்கு ஆண் மீதும் காமம் வருவது இயற்கையானது. இதை ஏற்காதது போன்று நடிக்கின்ற நட்போ, காதலோ அது உண்மையானது அல்ல.

இன்னும் ஒன்று. காதலியிடம் கேட்பீர்களா என்று கேட்டிருந்தீர்கள். தோழியிடம்தான் ரசிப்பது பற்றிக் கேட்பேன். காதலியிடம் ருசிப்பது பற்றித்தான் கேட்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சொல்கிறேன். இந்த நான்கு வரிக் கவிதையில் நான் பல விடயங்களைச் சொல்வதாக நினைக்கிறேன். அப்படியே வெறும் வரிகளாக மட்டும் எடுத்து அர்த்தம் கற்பிப்பது நல்ல வாசிப்பு அல்ல.

உவர் சபேசன் இப்ப என்ன சொல்ல வாறார் என்றால் தன்ர கவிதைக்க ஆழமான பல கருத்துக்கள் உண்டு என்று சொல்ல வாறார். அத்தோட தானே தன்ர கவிதையைப் பற்றி எழுத வேண்டும் என்றது இல்ல அவற்ற நோக்கம் அதில முலை என்ற பதம் வந்த படியா.. தானே வகுத்துக்கொண்ட பேசாப் பொருளை யாழில பேசுறன் என்றும் காட்ட நிக்கிறார்.

அவரைப் பொறுத்தவரை அவற்ற காமப் பார்வைகளை ஏற்றுக் கொள்ளுறவள் தான் அவரை அப்படியே ஏற்றுக் கொள்ளுற அவற்ற தோழியா வர முடியுமாம். அதை அவர் ரசிப்பாராம். ருசிக்க காதலிட்டப் போவாராம்.

விட்டா.. ஆடைய களைந்து காட்டச் சொன்னா செய்யுறவள் தான் தன்ர தோழி என்றும்.. அதில தான் என்னென்னத்தை ரசிச்சன் பின்னர் என்னென்னத்தை காதலிட்ட ருசிச்சன் என்றும் இங்க எழுதுவார். அதை பேசாப் பொருளை பேசத்துணிஞ்ச சபேசன் என்று கைதட்டி ஆரவாரிச்சிட்டா.. அவர் முழு மனத் திருப்தியோட யாழில் வெற்றிக்கொடி நாட்டிய சிங்களப் படை போல பெருமிதத்தோட இத்தலைப்பில தன்ர வாதத்தை நிறைவு செய்வார்.

அதுவரை பெண்களில எத்தனை வளைவு சுழிவு என்று சொல்லப் போறார் கேளுங்கோ..! :wub::(

உயர்ந்த நட்பு, தாழ்ந்த நட்பு எல்லாம் சும்மா பம்மாத்து சபேசன்.

ஒருத்தனில் அல்லது ஒருத்தியில் விருப்பம் என்றால் அவன் அல்லது அவள் மீது உள்ள காதலை ஏன் நட்பு என்ற ஒரு சொல்லினுள் போட்டு ஒளித்துக்கொள்கின்றீர்கள்?

சகீராவின் கவிதையை வாசிச்சபோதும், சகீராவின் வாதங்களை வாசிச்சபோதும் சகீரா கூறுகின்ற கருத்துகளுடன் எனக்கு உள்ள முரண்பாடு இதுதான்.

ரசிப்பதற்கு ஒருவன் அல்லது ஒருத்தி, ருசிப்பதற்கு வேறு ஒருவன் அல்லது வேறு ஒருத்தியா? ஏன் ரசிபவனையே அல்லது ரசிப்பவளையே ருசிக்கக்கூடாது? ருசிக்க முயற்சிக்கக்கூடாது?

காமத்தைபோல் காதலும் இயற்கையானது. இதை ஏன் பலர் ஒளித்துக்கொள்கின்றீர்கள் அல்லது கிழ்த்தரமாக நினைக்கின்றீர்கள் என்று விளங்கவில்லை.

சமூகம் ஏதாவது சொல்லும் என்ற பயமே காதலை நட்பு என்ற சொல்லினுள் போட்டு மூடி மறைப்பதற்கான காரணமாக இருக்கலாம்.

நட்பின்போது ஏற்படும் அடிப்படை உணர்வுகளிற்கும் காதலின்போது ஏற்படும் அடிப்படை உணர்வுகளிற்குமான வித்தியாசங்களை யாராவது வரையறுக்க முடியுமா?

மெய்ப்பொருள் காண வெளிக்கிட்டால் முதலில் சமூகத்தை தூக்கி எறிந்துவிடவேண்டும். அடி மனதில் சமூகம் பற்றிய பயம் இருந்துகொண்டு இருக்கும்போது, சுதந்திரமாக நடுவுநிலமையுடன் செய்யப்படாத எந்தவொரு வாதமும், தேடலும் வெறும் பூச்சுகளை, பொலிவை ஏற்பத்துவது தவிர வேறு ஒன்றையும் செய்யப்போவதில்லை.

முதலில நான் கொஞ்ச கேள்விகள் கேட்கிறன். இதற்குரிய விடைகளை கொஞ்சம் சிந்திச்சு பாருங்கோ.

1. ஒருவன் அல்லது ஒருத்தி கலியாணம் கட்டினாப்பிறகு அவன், மனைவி அல்லது அவள் புருசன் தவிர வேறு ஒருவன் அல்லது ஒருத்தி மீது காதல் வருவது தவறானதா? அப்படியான காதல் கேவலமானதா? கீழ்த்தரமானதா?

2. ஒருவனை அல்லது ஒருத்தியை காதலித்துக்கொண்டு வேறு ஒருவனை அல்லது வேறு ஒருத்தியை கலியாணம் செய்வது தவறானதா? கீழ்த்தரமானதா?

இதற்கு நீங்கள் ஆம் என்று பதில் கூறுவீர்களாக இருந்தால் சமூகத்தின் தாக்குதல்களில் இருந்து நீங்கள் ஒளிஞ்சு கொள்வதற்கு நட்பு என்ற ஒரு கவசம் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும்.

அதாவது நான் இங்கு கூறவருவது என்ன என்றால்...

ஒரு நிலைக்குமேல் ஆண்-பெண் உறவை நட்பு என்றபோர்வையினுள் போர்த்தி ஒளிக்கமுடியாது. சமூதாயத்தை திருப்திப்படுத்துவதற்காக காதலை காதல் என்று கூறாமல் சும்மா நட்பு என்று கூறி பெருமையுடன் வாழ்வது சரியாகப்படவில்லை.

சிறந்த ஆண்-பெண் நண்பர்கள் இருக்கின்றார்கள். நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், நட்பு என்று சொல்லி பெரிதாக பில்ட்-அப்புகள் செய்யப்படும் கதைகளின் பின்னால் காதல் இல்லை என்று கூறுவது குழந்தைப் பிள்ளைகளை ஏமாற்றுவது போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

1. ஒருவன் அல்லது ஒருத்தி கலியாணம் கட்டினாப்பிறகு அவன், மனைவி அல்லது அவள் புருசன் தவிர வேறு ஒருவன் அல்லது ஒருத்தி மீது காதல் வருவது தவறானதா? அப்படியான காதல் கேவலமானதா? கீழ்த்தரமானதா?

2. ஒருவனை அல்லது ஒருத்தியை காதலித்துக்கொண்டு வேறு ஒருவனை அல்லது வேறு ஒருத்தியை கலியாணம் செய்வது தவறானதா? கீழ்த்தரமானதா?

நான் இது இரண்டுக்கும் ஆம் என்று பதிலளிக்கிற அதேவேளை.. காமமில்லாத நட்பு சாத்தியம் என்றும் சொல்கிறேன்..!

ஒரு ஆண் ஒரு பெண்ணிடத்தில் எப்போதும் காமம் காதல் என்ற இரண்டு வகையில் தான் நெருங்கிறானா. அது மட்டுமே சாத்தியமா என்று கேட்கிறேன்..??!

தனி மனித ஒழுக்கத்துடன் ஏன் நட்பு என்ற எல்லை காதல் காமம் தாண்டி விரிய முடியாது..??!

ஒரு ஆணிடம் இன்னொரு ஆண் காமத்துடன் காதலுடன் போனால்.. அதை கேய் என்று வரையறுக்கிறம். ஆனால் ஆண் இன்னொரு ஆணுடன் நெருங்குவதை பொதுவாக இலகுவாக நட்பு எங்கிறோம். அதேபோல் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் காமம் காதல் என்று நெருங்கின் லெஸ்பியன் எங்கிறம். ஆனால் அந்தச் சாத்தியப்பாட்டை உடனடியாகக் கடந்து ஒரு பெண் இன்னொரு பெண்ணை நெருங்கிறதை பொதுவாக நட்பு என்று வகுத்துக் கொள்கிறோம். இதை ஏன் ஒரு ஆண் அல்லது பெண் ஒரு பெண்ணை அல்லது ஆணை நெருங்கும் போது நட்புக்குள் வைக்க முடியவில்லை.

உங்கள் மனதில் எழுப்பட்டுள்ள மாய விம்பமே அதற்குக் காரணம்..! :wub:

Edited by nedukkalapoovan

நான் சமூகம் பற்றிய அச்சத்தை தூக்கி எறிந்து விட்டுத்தான் என்னுடைய கவிதையை வைக்கிறேன்.

கட்டுப்பாடு, பண்பாடு, ஒழுக்கம் இது போன்ற வார்த்தைகளுக்குள் நாம் அடக்கி வைப்பது இயற்கையான காமத்தை.

இப்படி அடக்கி வைப்பது சரியா தவறா என்பது வேறு விவாதம். நானும் என்னுடைய பெண் தோழிகளுடன் என்னுடைய காமத்தை அடக்கி வைத்து "தனி மனித ஒழுக்கத்துடன்" "கண்ணியத்துடன்" பழகியிருக்கிறேன்.

ஆனால் அடக்கி வைத்து விட்டு அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்வதுதான் பெரிய மோசடி.

இந்த மோசடியை செய்ய நான் விரும்பவில்லை. காமத்தை கண்ணியம் கருதி நான் எனக்குள் ஒளித்து வைத்திருக்கிறேன் என்று உண்மையை வெளிப்படையாக சொல்லி விட்டு நட்பைத் தொடர்வது மேல்.

Edited by சபேசன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முரளி அருமையான கேள்வி.

என்னைப் பொறுத்தவரை என் அகராதியில் கணவனே கண் கண்ட தெய்வம் என்று வேதாந்தம் படிப்பதில்லை. கணவனே கரம் இணைத்த தோழன் என்பதுதான் எனது நூற்றுக்கு நூறுவீதமான கருத்து. கணவன் என்ற கரமிணைத்த நண்பனால்த்தான் தன் மனைவி என்ற நண்பியை நன்றாகப் புரிந்து கொள்ளமுடியும். நிற்க,

முரளி, நட்பு என்னும் ஒற்றைப்பதத்துடன் ஆணுக்கும் பெண்ணுக்குமான எல்லாம் முடிவதில்லை. நட்பிற்கு அப்பாலும் பல தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலையே கணவன் மனைவி. நட்பு என்பது கணவன் மனைவிக்குள்ளும் உண்டு. நட்புத்தான் முழுமையான கணவன் மனைவிக்கானது என்று சொல்லமுடியாது. அதுவேறு கோணத்திலும் பார்க்கப்படவேண்டியது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முரளி உங்களுடைய எழுத்துக்களையோ அல்லது சபேசனுடைய எழுத்துக்களையே அல்லது நெடுக்காலபோவானின் எழுத்துக்களையோ நான் வாசிக்கிறேன் , ரசிக்கிறேன் ஏன் நேசிக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அதன்பால் உங்களுடன் நட்பு எனக்கு ஏற்படுகின்றது என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அந்த நட்பின் மூலம் பேசாப் பொருளாக இருக்கக் கூடிய பலவிடயங்களைப் நாங்கள் பேசுகிறோம் என்றும் வைத்துக் கொள்ளுங்கள் அப்படி ஒரு நிலையில் நான் பெண் நீங்கள் ஆண் என்ற பிம்பப் பாகுபாட்டை ரசித்தபடிதான் உங்கள் நட்பை வளர்ப்பீர்களோ? உலகத்தில் உள்ள அத்தனையும் பேசுகிறோம் ஏன் காமத்தைப்பற்றிக் கூட விமர்சிக்கிறோம் என்றே வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கண்ணியமான நண்பர்களாக விவாதித்துக் கொண்டிருக்கும் நீங்கள் தன்னிலை தவறுவீர்களா? அப்படியானால் அங்கே உங்களுக்கு நட்பு என்பதைக் காட்டிலும் ஆண் பெண் என்ற பிம்பங்கள்தான் உங்களை ஆக்கிரமிக்கும் சக்தியாக இருக்கமுடியும். அங்கு நட்பல்ல நட்பென்ற போர்வையில் காமஉணர்வுகள்தான் கும்மாளமிடும்.

நெடுக்காலபோவான் கூறுவது போன்று காதல் இல்லாத நட்பும் சாத்தியமே. அது நாங்கள் தெரிவு செய்திருக்கும் நண்பரை பொறுத்து இருக்கிறது.

சகீரா, நெடுக்காலபோவான்,

காமம் இல்லாத நட்பின் சாத்தியம் பற்றி கூறுகின்றீர்கள்.

காமம் இல்லாத காதல் உள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்வீர்களா?

நான் பொதுவான விடயங்கள் பற்றியே இங்கு கதைக்கின்றேன்.

தனிமனித ஒழுக்கம் பற்றி கதைத்தால் இவ்வளவு பிரச்சனைப்படவேண்டிய தேவையே இல்லையே? தனிமனித ஒழுக்கம் உள்ளவர்கள் சமூகம் சொல்லுவதை பற்றி ஏன் கவலைப்பட்டு கண்ணீர் விடவேண்டும்?

உங்கள் கதைகளைப் பார்த்தால் காதலில் எப்போதும் காமமே உள்ளதுபோலவும், காதலிப்பவர்களிற்கு தனிமனித ஒழுக்கம் இல்லை என்று கூறுவது போலவும் உள்ளது.

எனது அறிவுக்கு எட்டியவரையில் நான் கூறக்கூடியது காதல் என்பது அன்பு மிகுதி. அதாவது ஒருவர் மீது உள்ள அன்பு மிகுதியே காதலாகின்றது.

நட்பில் காதல்போன்ற அன்பு மிகுதி இருப்பதில்லை என்று நினைக்கின்றேன். நட்பில் அன்புமிகுதியாக இருந்தால் அது நிச்சயம் காதலாகவே இருக்க முடியும்.

ஏதோ கே, லெஸ்பியன் எண்டு ஏதோ சொல்லுறீங்கள். விளங்க இல்லை.

நட்பு புனிதமானது, போற்றத்தக்கது, கண்ணியமானது என்று எல்லாம் கூறுபவர்கள் காதல் புனிதமானது, போற்றத்தக்கது, கண்ணியமானது என்று கூறுவதற்கு பின்னிற்கின்றார்கள் என்றால் குறைபாடு காதலில் அல்ல காதலித்தவர்களிலேயே உள்ளது.

எனது வாதம் எடுபடப்போவதில்லை என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஏன் என்றால் சமூகம் எப்போதும் உண்மைகளிற்கு மதிப்பு அளிப்பதைவிட தமது இருப்புக்களை பாதுகாத்துக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தும். ஆனால்.. நான் சபேசனுக்கு விளக்கம் அளிக்க வெளிக்கிட்டு இவ்வளவு கூறவேண்டி வந்துவிட்டது. மன்னிக்கவும்.

ஆணும் பெண்ணும் எட்டி

நின்று பழகினால் நட்பு

தொலைதூர நட்பாய் விடும்...

ஆணும் பெண்ணும்

தொட்டு நின்று பழகினால்

தவறாக நோக்கப்படும்...

ஆணும் பெண்ணும்

கட்டிக்கொண்டு பழகினால்..

பிறகென்னையா நட்பும்.. கற்பும்..

(பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடிக்கமாம்..நட்பு நடுவில நிற்கிறதால எங்களுக்கு ஹார்மோன் வேலை செய்யாது..நாங்க எப்படி வேணம் எண்டாலும்.. கட்டிக்கொண்டும்..ஒட்டிக்கொண்

டும் நட்பு பாராட்டுவோம் என்ற இந்த ஆண் பெண் நட்பை நடைமுறைக்கு சாத்தியபடுத்துறவை... கோடியில சிலர்..

அதிலயும்..யாருடைய மனசில என்ன இருந்தது எண்டு யாருக்குத் தெரியும்..

யாராச்சும் என்ர நட்பு சுத்தமெண்டு சொல்லுங்க நம்ப முயற்சிக்கிறேன்..ஆனால் மற்ற ஆள் மனசில என்ன இருக்குதெண்டு சபதம் கட்டாதீங்கோ..அது ஆண்டவனுக்குத்தான் தெரியும்..)

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes::D:unsure:

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான கவிதை சாகரா அக்கா!

தற்கொடைப் போராளி வினோத் தொர்பான உங்கள் பதிவு நெகிழ வைக்கிறது.

அடுத்து ஆண் பெண் நட்பில் காமம் கலக்கும் என்பதில் தத்துவரீதியாகவும் அனுபவரீதியாகவும் எனக்கு உடன்பாடில்லை. ஓரினச் சேர்க்கைகூட பல இடங்களில் நடக்கின்றன. அதற்காக நட்பை அந்த வட்டத்திற்குள் வைத்துக் கொள்ளலாமா?!!!!!

ஆண் பெண் நட்பு அதியமான் ஓளவை காலம் தொட்டே இருந்து வருகிறது. இருப்பினும் இந்த நூற்றாண்டில்தான் இது அதிக அளவில் பேசப்படுகிறது. காமம் என்பது தவறானது அல்ல ஆனால் முறையற்ற காமமும் (முறையான காமத்திற்கு எடுத்துக்காட்டு வள்ளுவரின் காமத்துபால் முறையற்ற காமத்திற்கு எடுத்துக்காட்டு வத்சயானரின் காமசாஸ்திரம்) ஆண் பெண் உறவை அதுதான் தீர்மானிக்கிறது என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத வாதம். பழமை வாதத்திற்கு எதிரான ஒரு பண்பாட்டு உறவாகவே காமம் கடந்த ஆண் பெண் நட்பு உருவாகிறது.

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

முன்னரும் வெண்ணிலா இது போனறதொரு கவிதையை போட்டு நட்பு காதல் காமம் என்று விவாதம் நடந்தது. ஆனாலும் சபேசன் வெளியில் இருந்து பார்ப்வர்களிற்கு நட்பிற்கும் காதலிற்கும் பெரிய வித்தியசம் தெரியமல் இருக்கலாம். அல்லது இரண்டிற்கும் நூலிடை வித்தியாசம் போல் தோன்றலாம். ஆனால் உண்மையான நட்புகிற்கிடையில் காதல் என்பதும் காமம் என்பதும் மிகப் பெரிய வித்தியாசம் அல்லது பெரிய இடைவெளி உண்டு. நீங்கள் எழுதியதைப்போல

உன் பருத்த முலைகளை

நான் ரசிப்பதை

இயற்கை எனக் கொள்ளும்

உயந்த நட்பை

தருவாயா தோழி!

இங்கு காதலும் இல்லை வெறும் காமம் மட்டுமே இருக்கிறது. இரு நண்பர்களிற்கிடையில் ஒருவர் மற்றவரது உடல் உறுப்புக்களின் மீதான ரசனை அல்லது ஒருவர் மீதான தொடுகையின்போது மற்றவரின் பாலியல் உணர்வு எந்த வினாடி தூண்டப்படகின்றதோ அந்த வினாடியே அவர்கள் நண்பர்கள் என்கிற தகுதியை இழந்து விடுகின்றனர்.அதன் பின்னர் உறுப்பை ரசிக்க உயர்ந்த நட்பை தருவாயா தோழி என்று கேட்டு நட்பு தோழி என்கிற சொற்பதங்களையே பாவிக்க வேண்டிய அவசியம் இல்லை.உண்மையான நட்பைப் புரிந்து கொள்வதற்கு நீங்கள் இதுவரை பழகிய நண்பிகள் எல்லோரையும் வரிசையாக மனக்கண் முன்நிறுத்தி ஒவ்வொருவராக எந்த ஒளிவு மறைவுமின்றி அவர்களுடன் நீங்கள் பழகிய விதங்களை நினைத்துப்பாருங்கள்.ஏதாவது ஒரு பெண்ணின் பருத்த முலைகளை ரசிக்க உங்களிற்கு தோன்றியிருக்காமல் இருக்கலாம். (அதற்காக அந்தப் பெண்ணிற்கு பருத்த முலை இல்லை அதனால் ரசிக்கவில்லை என்று காரணம் கூறக்கூடாது.) ஏன் எந்த உறுப்பையுமே இரசிக்க அல்லது தொடுகை உணர்வில் காமம் இல்லாமல் இருந்திருந்தால் அவர்தான் உங்கள் நண்பி.ஆனால் எந்தப் பெண்ணின் மீதான பார்வையிலும் உங்களால் உறுப்பு இரசிப்பும் அல்லது தொடுகை உண்ர்வு இன்பத்தை மட்டுமே அனுபவித்திருந்தால். நீங்கள் இதுவரை உண்மையான நட்பை சந்தித்திருக்கவில்லை அல்லது உணர்ந்திருக்கவில்லை என்பதே உண்மை.அது உங்கள்மீதான தவறே தவிர நட்பின் மீதான தவறு அல்ல.(இப்போதைக்கு இதுவரை)

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவலர் அறிவுமதி அவர்கள் எழுதிய கவிதைகளில் சில :

நடைமுறைக்குச் சற்றுப் பொருந்தாவிடினும் ஆண்-பெண் நட்பிற்கு சல்யூட் அடிக்கின்றன.

"ஒரு ஞாயிற்றுக்கிழமை

மதியத்தில்

தாமதமாய் வந்து

என்னை எழுப்பாமலேயே

நீ சொல்லியபடி

நான்

சமைத்து வைத்திருந்த உணவை

நிதானமாகச் சாப்பிட்டுவிட்டு

என் பக்கத்திலேயே

படுத்துத் தூங்கிவிட்டும்

போயிருக்கிறாய்

என்பதைச்

சொல்லிப் பரிகசித்தன

என் தலையணையில்

சில மல்லிகைகள்"

"அந்த நீண்ட பயணத்தில்

என் தோளில் நீயும்

உன் மடியில் நானும்

மாறிமாறி

தூங்கிக்கொண்டு வந்தோம்.

தூங்கு என்று

மனசு சொன்னதும்

உடம்பும் தூங்கிவிடுகிற

சுகம்

நட்புக்குத்தானே

வாய்த்திருக்கிறது"

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கோ அறிவுமதி எழுதியது கற்பனையோ உண்மையோ கவிதையாகி இருக்கலாம் ஆனால்பாலினக் காம உணர்வற்று ஒரு பாயிலேயே படுத்துறங்கிய என் நண்பிகள் பலர் இன்றும் உயிருடன் வெளி நாடுகளில் உள்ளனர்.இன்றும் நான் தொலைபேசியெடுத்தால் அவர்களது கணவர்கள் என்னை நலம் விசாரித்து விட்டு என் நண்பியிடம் தொலைபேசியை கொடுத்து விட்டு போவார்கள் நாங்கள் மணிக்கணக்காவும் பேசுவோம் அவர்களிற்கு தெரியும் நான் நண்பன் என்று அதே போல இத்தனை மணி நேரம் ஒரு பெண்ணோடை என்ன அலம்பல் எண்று எனது மனைவியும் கேட்டதில்லை அவளிற்கும் தெரியும் இது நட்பு என்று. இது புரிதல் இது இல்லாட்டி பொரிதல்தான் :):unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளங்கோ, சாத்திரி இருவருக்கும் நன்றிகள்.

சாத்திரி எழுதிய கருத்தை ஒரு ஆண் அதுவும் அத்தகைய ஆண், பெண் நட்பு நிலையை அடித்தளமாகக் கொண்ட ஒரு அனுபவநிலையிலிருந்து வந்து எழுதமாட்டாரா என்று நினைத்ததுண்டு. அதை சாத்திரி எழுதி ஆண், பெண் நட்பு நிலையின் உன்னதத்தை எடுத்துக் காட்டியுள்ளார். நன்றி சாத்திரி. இன்று யாழ்க்களத்தில் ஒரு விவாதம் வெட்டுகுத்து வாங்காமல் வெற்றி பெற்றிருக்கிறது. இங்கு பிம்பங்களைச் சுமந்த எவருமே வெற்றி பெறவில்லை. நட்பு என்னும் ஒற்றைச் சொல்லே வெற்றி பெற்றுள்ளது. மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆண் பெண் நட்பு இன்னும் எங்கள் சமூகத்தில் முழுமையாக அங்கீரிக்கப் படாத

ஒன்றாகவே இருந்து வருகிறது. உங்கள் உள்ளத்து உணர்வுகளை ஆண் பெண்

நட்பு நிலையை அழக்காகக் கவிதையில் குறிப்பிடுள்ளீர்கள் வல்வைசகாறா.

சபேசனின் கருத்தில் சிறிதும் எனக்கு உடன்பாடில்லை. அவர் சொன்ன கவிதையில்

நட்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அங்கே வெறும் காமம் மட்டுமே காணப்படுகிறது.

அந்தக் கவிதையில் அவர் வெறும் அங்கங்களை இரசிப்பதற்கு தோழி நட்பு என்று

போட்டு நமது சமூகத்தில் முழுமையாக அங்கீரிக்கப்படத நட்பையே கேள்விக்குறியாக்கிறார்.

சாத்திரி ஐயா... ஒரு யாயில படுத்தெழும்பினதா எழுதியிருந்தியள்..எத்தினை வயசில.. இருபது வயசிலயா... சரி நீங்க நல்ல மனிதர்.. நட்பு என்ற நல்லொழுக்கம் காரணமாக... நன்னடைத்தையுள்ளமை காரணமாக.. உங்களுக்குள் எந்திதமான தப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்..

உங்கள் மனம் சுத்தமாக இருக்கிறது என்று நீங்கள் 100 வீதம் நம்பலாம்.. நீங்கள் 100 வீதம் சொல்வதை நாங்கள் நம்பலாம்.. ஆனால் உங்கள் நண்பர் ஒரு நாள் கூட உங்களை தப்பாக மனதில் நினைத்திருக்க மாடடார் என்பதை நீங்கள் தனியாக சொல்ல முடியாதல்லவா..

வயசு என்றது.. சந்தரர்ப்பம் கிடைக்கும்போது மனசை வெண்டுவிடும்.. நட்பு என்ற போர்வையை போர்த்திக்கொண்டு சினிமா தியேட்டருக்குள் முத்தமிட்டுக்கொள்ளுறதையும்..

கடற்கரையில கட்டிப்புரளுறதையும்...இல்லை எண்டு சொல்லுறீங்களோ...

ஒரு நண்பி..காதலியாக மாறக்கூடியவள்..

மனைவியாக மாறக்கூடியவள்..(அம்மா சகோதரி, பேச்சை இதற்குள் இழுப்பது பொருத்தமில்லை)

அப்படி உறவு மாறக்கூடிய ஒருத்தி தனிமையில் சந்தர்ப்பம் கிடைக்கும்போது..தவறு நடக்க சாத்தியமுண்டு. அப்படி சாத்தியம் இருப்பதால் சமுதாய கண்ணோட்டங்கள்.. நம் வாழ்க்கைமுறை இது போன்ற காரணங்களால்.. ஆண் பெண் நட்பு வரையறைக்குள் வந்துவிடுகிறது.. நல்ல நட்பு என்பது சந்தர்ப்பமும் சோதனையும் வரும் வரை..

இது இரு மனது சம்பந்தப்பட்டவிடயம்.. இதை எங்கள் நட்பு பரிசுத்தமானது என்று ஒருவர் வந்து கற்பூரமடித்து சத்தியம் செய்வது அவரை அவர் ஏமாற்றிக்கொள்ளம் நாடகத்தின் தொடர்ச்சி என்று கூறி..உங்கள் அரங்கதிரும் உங்கள் பலத்த(திட்டுகளுடன்) அமைதியுடன்விடைபெறுகிறேன். :rolleyes:

இளங்கோ, சாத்திரி இருவருக்கும் நன்றிகள்.

சாத்திரி எழுதிய கருத்தை ஒரு ஆண் அதுவும் அத்தகைய ஆண், பெண் நட்பு நிலையை அடித்தளமாகக் கொண்ட ஒரு அனுபவநிலையிலிருந்து வந்து எழுதமாட்டாரா என்று நினைத்ததுண்டு. அதை சாத்திரி எழுதி ஆண், பெண் நட்பு நிலையின் உன்னதத்தை எடுத்துக் காட்டியுள்ளார். நன்றி சாத்திரி. இன்று யாழ்க்களத்தில் ஒரு விவாதம் வெட்டுகுத்து வாங்காமல் வெற்றி பெற்றிருக்கிறது. இங்கு பிம்பங்களைச் சுமந்த எவருமே வெற்றி பெறவில்லை. நட்பு என்னும் ஒற்றைச் சொல்லே வெற்றி பெற்றுள்ளது. மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

சகீரா விவாதம் வெற்றி பெற்று இருக்கின்றது என்று நீங்கள் ஒருதலைப்பட்சமாக முடிவு செய்யமுடியாது. :) எனது தரப்பில் நான் விம்பத்தை சுமந்து வந்தேன் என்று நீங்கள் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. :wub: நேரம் கிடைக்கும்போது இதன் - இந்த வாதத்தின் மிகுதி ஆராய்ச்சியை வேறு ஒரு தலைப்பில் தொடர்ந்து ஆராய்கின்றேன்.

நீங்கள் மிகநன்றாக கவிதை எழுதக்கூடியவர். அடிப்படையில் சமூகச் சீர்திருத்த கருத்துக்களை அடிப்படையாக வைத்து எழுதுறீங்கள் என்று நினைக்கின்றேன். எனது வாதம் உங்கள் கருத்தில் உள்ள சில அடிப்படை முரண்பாடுகளே தவிர வேறு ஒன்றும் இல்லை.

தொடர்ந்து யாழில் கவிதை படைக்க வாழ்த்துகள்!

நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலனோடு பேசிக்கொண்டிருக்கையில்

தாவணியைச் சரி செய்தேன்

நண்பனோடு பேசிக் கொண்டிருக்கையில்

தாவணியைச் சரி செய்தான்.

கவிஞர் அறிவுமதியின் அழகிய தமிழ்

எவ்வளவு அற்புதமான நட்பு இனிமையான நட்புக்கு இதைக்காட்டிலும் உதாரணம் சொல்ல முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.