Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழாம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவரங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு. இவரது மகள் சுசீலா (13), அருகில் உள்ள இருஞ்சிறை கிராம அரசுப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

இருஞ்சிறையைச் சேர்நத ரவிச்சந்திரன் என்ற வாலிபர் சுசிலாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுபற்றி சுசீலாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந் நிலையில் கர்ப்பமான சுசீலாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனால் சுசீலாவின் பெற்றோர்கள் அனைத்து இந்திய மாதர் சங்க உதவியை நாடினர். அவர்கள் முயற்சியால் சுசீலாவை ரவிசந்திரனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறி மாவட்ட கலெக்டர், எஸ்.பி. ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர்.

தட்ஸ்ரமில்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

நிறையத் தெருநாய்களைத் தமிழ்நாட்டில் சுடவேண்டி இருக்கின்றது.

நிறையத் தெருநாய்களைத் தமிழ்நாட்டில் சுடவேண்டி இருக்கின்றது.

அப்ப நீங்கள் ஒருக்கால் தமிழ்நாட்டுக்குபோய் நாய்களை வேட்டை ஆடிப்போட்டு வரலாமே?

இந் நிலையில் கர்ப்பமான சுசீலாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது

எல்லாம் எழுதி கடைசியில குழந்தை அழகாகவும் இருக்கிது எண்டு எழுதி இருக்கிறீனம். டட்ஸ்தமிழ்காரருக்கு நல்ல கலை ரசனை இருக்கிது போல.

இந்த குழந்தையின் அப்பா நெடுக்காலபோவானாகும் எண்டு செய்தியப்பாத்திட்டு நான் நினைச்சன். மன்னிச்சுக்கொள்ளவும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழிலும் இப்படியான நிலைமை என்று தமிழ்நெற் சொன்னதே!

Authorities blind to sexual abuse of minors in SLA controlled Jaffna

[TamilNet, Monday, 03 March 2008, 16:34 GMT]

Government officials meant to look after the interests of minors turn a blind eye to sexual abuse of young girls which has risen at an alarming rate in Jaffna peninsula in recently, civil society groups in Jaffna peninsula said. Climate of war, continuing economic restrictions, poverty, lack of employment, restriction of free movement, and calculated plans of cultural decadence witnessed especially after the Sri Lanka Army (SLA) closure of the A9 land route to Jaffna peninsula are in the background of sexual abuse of minor-aged, the sources said. A 13-year-old girl in Valikaamam gave birth to a child recently and Court has directed the newborn to be placed in the care of Child Care Centre.

Two girl students under 15 years of age lost their lives when they attempted abortion in the latter part of February 2008.

One student is from a leading school in Pa'ndaththarippu, and Mallaakam Court has directed the police to arrest and produce the person responsible for sexually abusing the girl.

Although SLA troops are accused of sexual abuse of the said girl, the allegations remain unproven, the sources said.

The second girl student is from Kachchaai in Thenmaraadchi. She had travelled to Vaddukkoaddai to have the abortion carried out, residents in Vaddukkoaddai said.

A male relative of the girl from Kachchaai was arrested following the episode and is being detained in remand prison.

Officials responsible to attend to the interests of minors are attached to the offices of Government Agent, Assistant Government Agents, Regional and Divisional Secretaries in Jaffna peninsula but they have shown no interest in these cases, civil society groups said.

The District Children Security Committees in Jaffna Secretariat which functioned earlier in the peninsula were later renamed District Children Development Committees but officials remain inactive.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24847

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன காட்டுமிராண்டித்தனம்?

பதின்மூன்று வயது மாணவியை பலாத்காரம் செய்து வன்புணர்ச்சியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பின்னர் குழந்தை பிறந்ததற்காக இப்பெண்பிள்ளைக்கு, அவளை இந்நிலைக்கு உட்படுத்திய அவனுக்கே திருமணம் செய்து வைப்பது எவ்வளவு தூரம் அப்பெண்ணின் மனோநிலையைப் பாதிக்கப்போகிறது? இது என்ன பெண்கள் மீது விதிக்கப்பட்ட சாபமா? ஏன் சமூகத்தில் பொதுநல அமைப்புகள் இத்தகைய இடங்களில் மிகவும் பிற்போக்குத்தனமாக முடிவெடுக்கின்றன? எதிர்காலத்தில் அப்பெண்ணுக்கு ஏற்படப்போகும் உளவியல் தாக்கத்தை சமூகப் பொறுப்பு வாய்ந்தவர்களே ஏற்படுத்துகிறார்களே!

ஒரு பெண்ணை ஒருவன் விரும்பினால் அவன் அவளை பலாத்காரம் செய்து புணர்ந்தால் போதும் பிறகு அப்பெண் அவனது உடமை????

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்கள் ஒருக்கால் தமிழ்நாட்டுக்குபோய் நாய்களை வேட்டை ஆடிப்போட்டு வரலாமே?

அதெப்படி கலைஞன்

யாழ்களத்தில் வெட்டிவிளாசுவதற்காகப் போய்ச் செய்ய இயலும். உதாரணத்துக்கு செயற்திட்டம், அது இது என்றெல்லாம் எழுதுவோம். கடைசியில் வாசல்படி தாண்டவே ஒளித்துக் கொண்டு திரிவோம். யாழ்களத்தில் எழுதுவதற்காகப் போய்ச் செய்ய இயலுமா?

6 கோடி மக்கள் இருக்கும் தமிழ்நாட்டில் இபப்டி சிலது நடக்கும் நடந்தும் வெளியே வருபவை சில ஆனால் தமிழீழம் என்ற சிறிய நாட்டில் அதுவும் யாழ்ப்பாணம் என்ற மாவட்டத்தின் நிலை????????????????

அப்ப கொஞ்சம் பார்த்து கருத்துக்களை வைப்பம்

பாவம் அந்த 13 வயதுப் பிள்ளை, அந்தப்பிள்ளையே ஒரு குழந்தை அதற்க்கு ஒரு குழந்தையா. இது எல்லாம் என்ன கொடுமை. பலாத்காரம் பண்ணீனவனுக்கே கட்டிகொடுத்தால் அந்த பிள்ளை எப்படி சந்தோசமாக இருக்கும் அவன் மேல வெருப்பும், அருவருப்பும் தான் தோன்றும் :lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அந்த 13 வயதுப் பிள்ளை, அந்தப்பிள்ளையே ஒரு குழந்தை அதற்க்கு ஒரு குழந்தையா. இது எல்லாம் என்ன கொடுமை. பலாத்காரம் பண்ணீனவனுக்கே கட்டிகொடுத்தால் அந்த பிள்ளை எப்படி சந்தோசமாக இருக்கும் அவன் மேல வெருப்பும், அருவருப்பும் தான் தோன்றும் :):lol:

அப்ப அந்தப் பொண்ணுக்கு நீங்க தேடும் தீர்வுதான் என்ன..??!

குழந்தையை அரசு பரிமாரிப்பில விட்டிட்டு.. பொண்ணை ஸ்கூலில விடனும் என்றீங்க என்று வைப்பம். அந்தப் பொண்ணு.. பெரியவளானதும்.. என்னாகும்..??! அவளுக்கு நேர்ந்துள்ள இந்த துன்பியலில் இருந்து எப்படி அவளை விடுவிக்கப் போறியள்..???! அதைச் சொல்லுங்க... தீர்வைக் கேட்டா நீங்கள் எல்லாம் கேள்வியை விளங்கப்படுத்திற ஆக்களா எல்லோ இருக்கிறியள்..! :lol::rolleyes:

13 இக்கொடிய செயலுக்கு காரணமாவனை பிணையில் விட்டு அவனுக்கே அந்த சிறுமியை மணமுடிச்ச் கொடுப்பது...

இது எல்லாம் சரியா படேல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

13 இக்கொடிய செயலுக்கு காரணமாவனை பிணையில் விட்டு அவனுக்கே அந்த சிறுமியை மணமுடிச்ச் கொடுப்பது...

இது எல்லாம் சரியா படேல்ல...

தமிழ்ப் படங்கள் காட்டும் நீதியான தீர்வு இப்படித்தானே.. "சுபம்" போட்டு முடிக்காமல் இழுத்துக்கொண்டு போகுது!

அந்த பெண்ணை கட்டி வைப்பது மட்டும் தீர்வாகுமா? என்ன தான் ஒரு பிள்ளை பெற்றாலும் 13 வயது சிறுமி தானே..அப்படியே கட்டி வைத்தாலும், அந்த ஆண் நல்லாவா வைத்திருப்பார்? நல்லா வைத்திருப்பவர் இப்படி பண்ணியே இருக்க மாட்டாரே!!!

நெடுக்ஸ்,

இதுக்கு நல்ல ஒரு தீர்வு எது என நீங்க நினைக்கிறிங்க?

இங்கென்றால் நிச்சயம் அந்த பெண்ணிற்கு நல்ல பல வழிகள் வரும்...அங்கு அப்படி இல்லையே....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13 வயதுப் பிள்ளைக்கு தகுந்த மனநல, உடல்நல ஆலோசனை வழங்கி மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும். அவள் தன்னிலையை உணர்ந்து தானே சுயமா முடிவெடுக்கக் கூடிய வயதை அடையும் போது அவளுக்கு விருப்பமான முடிவை எட்ட அனுமதிக்கலாம்.

உண்மையில் அங்கு வன்புணர்வுதான் நடந்ததா என்பதையும் சட்டத்துக்குள் நின்று விசாரணை செய்ய வேண்டும். அப்படி நடந்திருப்பின்.. வன்புணர்வுக்கு உரியவருக்கு சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்பட்ட வேண்டும். வன்புணர்வு நடக்கவில்லை எனின் 13 வயதுப் பிள்ளை திருமணமாகும் வயதை எட்டும் போது அவளின் சுயவிருப்பின் கீழ் அவனை அவளுக்குத் திருமணம் செய்து வைப்பதில் தவறில்லை.

சட்டத்தின் கீழ் பாலியல் உறவு வைப்பதற்கான வயதெல்லையை அடையாத சிறுமியுடன் பாலியல் உறவு வைத்திருப்பின் அதற்கு தனியாக தண்டனை வழங்கப்படுதல் வேண்டும்.

13 வயது பிள்ளையின் குழந்தை, பிள்ளையின் பெற்றோரால் (வசதியானவர்கள் எனின் மட்டும்) அல்லது அரச காப்பகத்தில் வளர்க்கப்பட வேண்டும். அதற்காக செலவை அரசு ஏற்றுக் கொள்வதோடு.. அக் குழந்தையை வளர்ப்பதில் தாய்க்கு ஏதேனும் ஈடுபாடு இருப்பின் அதற்கு அனுமதிக்க வேண்டும். மற்றும்படி குழந்தையை பராமரிப்பது தொடங்கி அதை வளர்ப்பது ஈறாக அரசு தனது பொறுப்பை உணர்ந்து அதை ஏற்றுச் செயற்பட வேண்டும்.

இதுதான் நெடுக்ஸ் நாட்டான்மையின் தீர்ப்பு. :)

Edited by nedukkalapoovan

13 வயதுப் பிள்ளைக்கு தகுந்த மனநல, உடல்நல ஆலோசனை வழங்கி மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும். அவள் தன்னிலையை உணர்ந்து தானே சுயமா முடிவெடுக்கக் கூடிய வயதை அடையும் போது அவளுக்கு விருப்பமான முடிவை எட்ட அனுமதிக்கலாம்.

உண்மையில் அங்கு வன்புணர்வுதான் நடந்ததா என்பதையும் சட்டத்துக்குள் நின்று விசாரணை செய்ய வேண்டும். அப்படி நடந்திருப்பின்.. வன்புணர்வுக்கு உரியவருக்கு சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்பட்ட வேண்டும். வன்புணர்வு நடக்கவில்லை எனின் 13 வயதுப் பிள்ளை திருமணமாகும் வயதை எட்டும் போது அவளின் சுயவிருப்பின் கீழ் அவனை அவளுக்குத் திருமணம் செய்து வைப்பதில் தவறில்லை.

13 வயது பிள்ளையின் குழந்தை, பிள்ளையின் பெற்றோரால் (வசதியானவர்கள் எனின் மட்டும்) அல்லது அரச காப்பகத்தில் வளர்க்கப்பட வேண்டும். அதற்காக செலவை அரசு ஏற்றுக் கொள்வதோடு.. அக் குழந்தையை வளர்ப்பதில் தாய்க்கு ஏதேனும் ஈடுபாடு இருப்பின் அதற்கு அனுமதிக்க வேண்டும். மற்றும்படி குழந்தையை பராமரிப்பது தொடங்கி அதை வளர்ப்பது ஈறாக அரசு தனது பொறுப்பை உணர்ந்து அதை ஏற்றுச் செயற்பட வேண்டும்.

இதுதான் நெடுக்ஸ் நாட்டான்மையின் தீர்ப்பு. :)

தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே..

எட்டுப்பட்டியும் ஏற்றுக்கொள்ளலாம்..

அரசு தனது பொறுப்பை உணர்வதில் தான் பிரச்சனையே இருக்கு நெடுக்ஸ்..

நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லுங்கோ...(நேக்கு பிடிகல..பிடிகல :D )....அது தான் தீர்ப்பை சொன்னனான் பாருங்கோ..(அட என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் ட கிரேட் கிரிமனல் லோயர் ஜம்மு பேபியே தான் :lol: )...என்னால முடியல்ல..

எனது கட்சிகாரர் ரவிசந்திரன் எத்தகையை ஒரு சூழ்நிலையில் இதனை செய்தார் என்று உங்களுக்கு தெரியுமோ..(அப்படி இருக்கும் போது எப்படி தண்டனை கொடுப்பியள் )..அக்சுவலா சொல்ல போனா எனது கட்சிகாரர் வந்து மனநிலை பாதிபடைந்துள்ளார் :( ..அதற்கான மெடிக்கல் ரிப்பொர்ட்..(அட கொஸ்பிட்டலில கள்ளமா வாங்கினது என்று யாருக்கு தெரிய போகுது :D )...அச்சோ..அச்சோ..

சோ மனநிலை சரியில்லாத எனது கட்சிகாரர் இதனை வேண்டும் என்றே செய்யவில்லை..(ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் செய்து விட்டார் :lol: )...மை டியர் ஓனர்..ஆகவே மனநிலை சரியில்லாத ஒருவர் எப்படி 13 வயசு சிறுமிக்கு வாழ்க்கை கொடுக்க முடியும் பாருங்கோ..ஆகவே இந்த வழக்கை செல்லுபடியற்றதாக அறிவிக்கும்படி கணம் கோட்டார் அவர்களை கேட்டு கொள்கிறேன்.... :D

அத்துடன் அந்த 13 வய்து சிறுமி சிறுவர் காப்பகத்தில் வளர்ந்தா மிகவும் நல்லது அவளின் எதிர்காலதிற்கு..(அந்த சிறுமியின் எதிர்கால செலவீனங்களை அரசு பொறுபேற்க வேண்டும் :D )...யாரோ என்னவோ செய்ய கடைசியா அரசு தான் அதற்குமா...(முடியல்ல)...அத்துடன் அவளுக்கு பிறந்த குழந்தையை அவளின் தங்கச்சியாக பெற்றோர் வளர்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டு..(அதற்கான செலவையும் அரசு தான் மேற் கொள்ள வேண்டும் ஏனேனில் எனது கட்சிகாரர் மனநிலை பாதிக்கபட்டவர் அல்லோ :D )..

எதிர்காலத்தில் அந்த 13 வயது சிறுமிக்கு சுண்டல் அண்ணா போன்ற பெரிய மனது படைத்தவர்கள் வாழ்க்கை கொடுப்பார்கள் தானே.. :D (அப்ப எல்லாரும் சந்தோசமாக இருக்கலாம்)...இப்படி மனநிலை சரியில்லாத ஒருவருக்கு அந்த பெண்ணை கட்டி கொடுத்து..(அந்த சிறுமி இன்னும் கஷ்டங்களை அநுபவிக்க வேண்டுமா என்று கோர்டாரை கேட்டு கொண்டு விடை பெறுகிறேன் :D )..பிகோஸ் அடுத்த கேஸ் அட்டண்ட் பண்ண வேண்டும்..

அப்பாடா என்ட கட்சிகாரரை காப்பாற்றிட்டேன்...(பீஸை என்ட சுவிஸ் பாங் அக்கவுன்டில போட்டு விடுங்கோ என்ன!! )

ஜம்மு பேபி பஞ்-

"பெண்களுக்கு அப்பா பிடிக்கு ஆணிற்கு அப்பாவாகிறது பிடிக்கு"

அப்ப நான் வரட்டா!!

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.