Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் ஹீத்ரோ விமான ஓடுபாதையில் தமிழன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் ஹீத்ரோ விமான ஓடுபாதையில் தமிழன்!

கடந்த வியாழன் பிற்பகல் லண்டன் ஹீத்ரோ விமான ஓடுபாதைக்கு வேலியால் பாய்ந்து உள்ளே சென்றவர் கேதீஸ்வரன் உதயகுமார் என்று தெரிய வந்துள்ளது.. கடும் பாதுகாப்பையும் மீறி இவர் உட் புகுந்ததால் பல விமானங்களின் தாமதித்துப் புறப்பட்டன. சில ரத்துச் செய்யப்பட்டன!

Man in court after Heathrow alert

A man has appeared in court after triggering a major security alert at the UK's biggest airport.

Keetheeswaran Uthayakumar, 27, of no fixed abode, appeared before Uxbridge Magistrate's Court, charged with endangering aircraft at Uxbridge.

He was arrested near the northern runway of Heathrow Airport shortly after 1400 GMT on Thursday.

Mr Uthayakumar was remanded in custody and will appear before the same court on Thursday.

The incident caused the runway to be partially closed, and led to flight delays and some cancellations.

The security breach came the day before the Queen opened the £4.3bn Terminal 5 building - and was the second serious incident at the airport within 18 days.

http://news.bbc.co.uk/1/hi/england/sussex/7298248.stm

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலை முயற்சியோ, அல்லது மற்ற ஆட்களுக்கு முன்பே விமானத்தில் ஏறி இடம் பிடிக்கவோ.

தற்கொலை முயற்சியோ, அல்லது மற்ற ஆட்களுக்கு முன்பே விமானத்தில் ஏறி இடம் பிடிக்கவோ.

:lol: இடம் பிடிக்கிறதுக்கு இது என்ன ப்ஸ்ஸோ?

அவர் நினைச்சிருப்பார் இபப்டி செய்தால் தன் பெயர் பத்திரிகையில் இணையத்தில் எல்லாம் உலா வரும் என்பதற்காக செய்திருக்கலாம் அல்லவா :lol:

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா :

அவர் நினைச்சிருப்பார் இபப்டி செய்தால் தன் பெயர் பத்திரிகையில் இணையத்தில் எல்லாம் உலா வரும் என்பதற்காக செய்திருக்கலாம் அல்லவா

அதனால் வரும் பின்விளைவுகளை அவர் யோசித்திருக்க மாட்டார் என்று நினைக்கின்றேன்.

name='தமிழ் சிறி' date='Mar 15 2008, 08:23 PM' post='391739']

அதனால் வரும் பின்விளைவுகளை அவர் யோசித்திருக்க மாட்டார் என்று நினைக்கின்றேன்.

வீட்டுக்கை புகுந்து களவெடுக்க வந்தவனை கையும் களவுமாக பிடிச்சு கொடுத்தாலே மன நிலை சரி இல்லாதவன் , குடு போதையில் சாவியை தொலைத்து போட்டு வீடு மாறி வந்திட்டான் எண்டு விட்டு போடுறாங்கள்...

உந்த பெடி வெளியிலை வாறதே பெரிய விசயம்...??

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் நல்லாத்தான் பிரபல்யமாகிறான் :rolleyes:

லண்டன் ஹீத்துரு விமான நிலையத்தினுள் நேற்று சனிக்கிழமை மாலை அத்துமீறி நுழைந்த இலங்கைத் தமிழ் இளைஞனொருவர் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தினுள் விமானமொன்றுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் வந்ததாகக் கூறியே இலங்கைத் தமிழரெனக் கருதப்படும் கேதீஸ்வரன் உதயகுமார் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டதாக லண்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹீத்துரு விமான நிலையத்தின் பாதுகாப்பு வேலியை இவர் கடந்து வந்த போதே கைது செய்யப்பட்டதாக, விமான நிலையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கமாண்டோ படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இவர் தீவிர விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் கைது செய்யப்பட்டதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட அதே நேரம், இவர் அங்கு திடீரென நுழைந்ததால் விமான சேவைகளிலும் சிறிது நேரம் பாதிப்புகள் ஏற்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஹீத்துரு விமான நிலையம், ஏற்கனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வந்த நிலையில், அங்கு இந்த இளைஞர் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை லண்டன் பொலிஸார் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி தினக்குரல்

அட...அட தமிழனின்ட புகழ் லண்டண் ஹீத்ரோ விமான நிலைய ஓடுபாதை மட்டும் போட்டுதா..(நிசமா என்னால முடியல்ல :D )...அச்சோ..அச்சோ.. :lol:

லண்டன் விமான நிலைய ஓடு பாதையில ஓடுற நேரம் ஒலிம்பிக்கில ஓடி இருந்தா ஒரு கோல்ட் மடலாவது கிடைத்திருக்கு..(அச்சோ..அச்சோ :D )...அது சரி அடுத்து விமானநிலைய ஓடு பாதையில் எங்கள் அண்ணண் வசி அண்ணா ஒடுவார் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்... :D (கமோன் வசி அண்ணா யூ கான் டூ இட் :lol: )..என்னால முடியல்ல..

அது சரி இதுவும் ஒரு வித அநுபவம் தானே...(எனக்கு அது சொன்னா இது கேட்கும் :D )...எங்கையோ கேட்ட மாதிரி இல்ல...அச்சோ...அச்சோ.. :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழுற காலம் கொஞ்சம் அதுகுள்ள அநுபவிக்கிறதை எல்லாம் அநுபவித்திட வேண்டும்" :D

அப்ப நான் வரட்டா!!

இதுவரை காரணம் தெரியவில்லையா?

புலிகளில பழியை போடுற திட்டமா இருக்குமோ? <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்கொலை முயற்சியோ, அல்லது மற்ற ஆட்களுக்கு முன்பே விமானத்தில் ஏறி இடம் பிடிக்கவோ.

என்ன காரணமாவது இருக்கட்டும்! ஆனால் செய்தது தவறுதானே?! ஏன் எங்கடை ஆக்கள் இப்படிச் செய்யினம்?!.. <_<

அது சரி அடுத்து விமானநிலைய ஓடு பாதையில் எங்கள் அண்ணண் வசி அண்ணா ஒடுவார் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்... :D (கமோன் வசி அண்ணா யூ கான் டூ இட் :D )..என்னால முடியல்ல..

நான் ஓடுறன்... ஆனா பிறகு பொலிசு கேட்டா யாழ் களத்தில

இருக்கிற ஜமுனாதான் ஓடச்சொன்னவர் என்று சொல்லுவன்.

சரியா? <_<

இச்செய்தியைப் பார்க்கும் போது முன்பு தமிழ் நாட்டில் நடந்த ஒரு சம்பவம் பற்றிய செய்தி தான் ஞாபகம் வந்தது.

இந்தியாவில் முன்பு வி.பி. சிங் அரசு மண்டல்கமிஷன் அறிக்கையை செயல்ப்படுத்த முயன்றபோது பல மாணவர்கள் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது தமிழ்நாட்டு மாணவர் ஒருவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார்.

மரண வாக்குமூலத்தில் அவர் சொன்னது: எனது படமும் எனைப்பற்றிய செய்திகளும் எல்லாப் பத்திரிகைகளிலும் வரவேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்தேன்.

புலிகளில பழியை போடுற திட்டமா இருக்குமோ? <_<

சா...சா வசி அண்ணா...(எல்லாம் ஒரு அநுபவம் தான் பாருங்கோ :D )...

அப்ப நான் வரட்டா!!

நான் ஓடுறன்... ஆனா பிறகு பொலிசு கேட்டா யாழ் களத்தில

இருக்கிற ஜமுனாதான் ஓடச்சொன்னவர் என்று சொல்லுவன்.

சரியா?

அட...உது நன்னா இல்ல சொல்லிட்டன்... :( (நேக்கு போலிஸ் மாமா என்றா நேக்கு சரியான பயம் பாருங்கோ :D )...ஆனாலும் வசி அண்ணா ஓட வேண்டும்...(அதை சிட்னியில இருந்து கடலை சாப்பிட்டு கொண்டு நான் பார்க்க வேண்டும் :) )...வசி அண்ணா எனக்காக இதை கூட செய்ய மாட்டியளா என்ன... :o (ஆனா என்னை பொலிஸ் மாமாவிட்ட மாட்ட கூடாது வேண்டுமென்றா மட்டுஸ் யாரையாவது மாட்டிவிடுங்கோ வசி அண்ணா)..இது எப்படி இருக்கு... :D

அப்ப நான் வரட்டா!!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதென்ன விளையாட்டு றோட்டில ஓடச்சொல்லுறமாதிரிச் சொல்லுறியல் கம்பி எண்ணப்பொறிங்கள் போலக்கிடக்கு

அவலத்தை தந்தவனுக்கே திருப்பி கொடு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலி பாய்ந்த வீரத்தமிழன் வாழ்க :unsure:

இப்பவா நித்தாவால எழும்பினீங்கள்? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை இப்பான் மப்பு கொஞ்சம் குறைஞ்சிருக்கு :rolleyes:

இல்லை இப்பான் மப்பு கொஞ்சம் குறைஞ்சிருக்கு :rolleyes:

இன்று என்ன ஸ்பெசல்? கறுப்பு பட்டியோ? சிவப்பு பட்டியோ?

இப்பவா நித்தாவால எழும்பினீங்கள்? :unsure:

யாருக்கு தெரியும் வசி அண்ணா நம்ம கு.சா தாத்தா தான் ஓடு பாதையில ஓடினாரோ.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

சில வேலைவெட்டி இல்லாததுகளுக்கு இன்னும் நெருக்கடியை கொடுப்பதே வேலை இனி எல்லாத்தமிழனையும் சந்தேகத்தோடு பார்கட்டும் வாயில கெட்டவார்த்தைதான் வருது

சிலவேளை சித்தசுவாதீனமற்றவனாக இருக்கக்கூடுமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.