Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பரை கொன்றது யார்?

Featured Replies

சைவத்தில் நாயன்மார்களின் வரலாறு மிகப் பிரசித்தம். சிவபெருமானில் பெரும் பக்தியோடு இருந்த நாயன்மார்களின் வரலாறு பல திரிவுகளுக்கு உட்பட்ட ஒன்று. சிலருடைய வரலாறுகளை படிக்கின்ற போது, அவைகள் மிகவும்மூடத்தனமாக இருக்கும்.

இதில் குறிப்பிடக் கூடிய விடயம் நாயன்மார்களில் பெரும்பாலானவர்கள் நன்றாக வாழவில்லை. சாகும் போதும் வருந்திச் செத்தார்கள். இவைகள் எல்லாம் இறைவனோடு கலந்தார்கள் என்று பின்பு கற்பிக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்த நந்தனார் சிதம்பரத்திற்குள் செல்ல விரும்பியதால் பார்ப்பனர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டார். இன்றைக்கு அவருடைய சிலை கூட சிதம்பரத்தில் இல்லை.

சம்பந்தரும் தன்னுடைய குடும்பத்தோடு தீ வைத்து கொளுத்தப்பட்டார். இவரை கொலை செய்ததற்கான காரணங்கள் பலவாறு அலசப்படுகின்றன.

இதிலே அப்பருடைய முடிவுதான் ஒரு மர்மம் நிறைந்ததாக இருக்கிறது. அனைத்து நாயன்மார்களின் முடிவுகளையும் சொல்கின்ற பெரிய புராணம் அப்பரின் முடிவு பற்றி எதுவுமே சொல்லவில்லை. அப்பருக்கு என்ன நடந்தது.

அப்பரும் சம்பந்தரும் ஒரு காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். இருவரும் இணைந்தே இறைப்பணி செய்து வந்தார்கள். ஆனால் ஒரு நேரத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட ஆரம்பித்தன.

அப்பர் சிவபெருமானில் மிகப் பெரிய பக்தி உள்ளவர். அவரால் இந்து மதத்தில் உள்ள மற்றைய தெய்வங்களை ஏற்க முடியவில்லை. ஆனால் சம்பந்தர் அனைத்து கடவுள்களையும் வணங்கி வந்தார். அத்துடன் சம்பந்தர் யாகம், உயிர்ப்பலி போன்றவற்றிற்கும் ஆதரவாக இருந்து வந்தார்.

சமண சமயத்தில் இருந்த பல நல்ல நெறிகளை கற்ற அப்பரால் யாகங்களையும், உயிர்ப்பலியையும் பல தெய்வ வழிபாட்டையும் ஏற்க முடியவில்லை.

அப்பர் ஒரு நாள் சம்பந்தரைப் பார்த்து

"என்றும் நாம் யாவர்க்கு மிடையோ மல்லேம்...."

என்று தொடங்கும் பாடலைப் பாடி விட்டு வெளியேறுகிறார். இதனுடன் அவர்களுடைய தொடர்பு அறுந்து போகிறது.

அதன் பிறகு அப்பர் யாகங்களுக்கு, உயிர் பலிகளுக்கு, பல தெய்வ வழிபாடுகளுக்கு எதிராக பெரும் பரப்புரைகளை ஊர் ஊராகச் சென்று செய்து வந்தார்.

அப்படியே ஒரு நாள் திருநறுங்கொண்டை என்கின்ற சமணக் கிராமத்தை அவர் சென்றடைந்தார். அங்கே இருந்த சமணக் கோயிலுக்கும் சென்றார். அப்பரை சமணர்கள் மிகவும் அன்போடு வரவேற்றார்கள்.

எந்த மதத்தில் இருந்தாலும் கொல்லாமையை போதிப்பதால் அப்பர் மீது தமக்கு அன்பு உண்டு என்று சமணர்கள் தெரிவித்தார்கள். அந்த நேரத்தில் சம்பந்தரோடு சேர்ந்து சமணர்களுக்கு செய்த துன்பத்திற்காக அப்பர் வெட்கி தலை குனிந்தார்.

மிகச் சிறந்த கொள்கைகளை உடைய தனது உடன் பிறப்புக்களை கொலை செய்து பார்ப்பனக் கொள்கை வளர்வதற்கு உதவினேனே என்று அப்பர் வருந்தினார். அங்கே இருந்து சமணக் கடவுளை தொழுது பாடினார்.

"கற்றறியேன் கற்றவர்தாள் கழறறியேன் உன்..." என்று அந்தப் பாடல் தொடங்குகிறது.

சம்பந்தர் கொல்லாமையை போதித்து வந்ததாலும், சமணக் கோயிலுக்கு சென்றதாலும, சம்பந்தர் மீண்டும் சமணத்தில் சேர்ந்து விட்டார் என்று பார்ப்பனர்கள் சந்தேகப்பட்டார்கள்.

இந்த நேரத்தில் சிதம்பரத்தில் உற்சவம் ஆரம்பமாகியிருந்தது. இந்த உற்சவம் சிறப்பாக நடக்க வேண்டி அருகில் உள்ள பத்ரகாளி கோயிலில் உயிர்பலிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இதைக் கேள்விப்பட்ட அப்பர் உயிர்ப்பலியை தடுக்கும் நோக்கோடு சிதம்பரத்திற்கு சென்றார்.

அவரை நயவஞ்சகமாக சிதம்பரத்திற்குள் வரவழைத்த பார்ப்பனர்கள் கதவை மூடி விட்டு, அவரைக் கொலை செய்தார்கள். அப்பரை குழியில் போட்டு மூடிவிட்டு "சிவனோடு இரண்டறக் கலந்து விட்டார்" என்று கதையை பரப்பி விட்டார்கள்.

ஆயினும் இந்தச் செய்தி சிலரால் வெளியில் பரவத் தொடங்கியது. ஆயினும் கடவுளின் பெயரைச் சொல்லி அவர்களுடைய வாயையும் மூடினார்கள். இது "சிதம்பர ரகசியம்" வெளியில் பேசக் கூடாது என்று கட்டளை இட்டார்கள்.

இன்றைக்கு வரைக்கும் நாம் "சிதம்பர ரகசியம்" என்று சொல்லைப் பாவிக்கின்றோம். அதே வாயால் அப்பரின் தேவாரங்களைப் பாடுகிறோம். நாம் சிதம்பர ரகசியம் என்று சொல்வது தமிழைப் பாடிய அப்பர் மீதான படுகொலையை என்பதை அறியாது இருக்கின்றோம்.

குறிப்பு: மேற்குறிப்பிட்ட அப்பருடைய பாடல்கள் விரும்பினால் முழுமையாகத் தரப்படும். இந்த வரலாற்று உண்மையை மறுப்பவர்கள் "சிதம்பர ரகசியம்" குறித்து ஆராய்ந்து பார்க்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மார்வாடிகளின் பணத்தில் என்னமும் இப்படியான பொய்கள் பரப்பப்படும். இந்தக் கற்பனையும் அதற்கு விதிவிலக்கல்ல. நந்தனாரின் சிலை சிதம்பரத்தில் இருக்கின்றது.

தவிரவும் சிதம்ப இரகசியம் என்பது பற்றித் திருமூலர் வியாபித்துள்ளார். பொருள் அறிந்தவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளவும்

அப்பர் சிவபெருமானில் மிகப் பெரிய பக்தி உள்ளவர். அவரால் இந்து மதத்தில் உள்ள மற்றைய தெய்வங்களை ஏற்க முடியவில்லை. ஆனால் சம்பந்தர் அனைத்து கடவுள்களையும் வணங்கி வந்தார். அத்துடன் சம்பந்தர் யாகம்இ உயிர்ப்பலி போன்றவற்றிற்கும் ஆதரவாக இருந்து வந்தார்.

மிகச் சிறந்த கொள்கைகளை உடைய தனது உடன் பிறப்புக்களை கொலை செய்து பார்ப்பனக் கொள்கை வளர்வதற்கு உதவினேனே என்று அப்பர் வருந்தினார். அங்கே இருந்து சமணக் கடவுளை தொழுது பாடினார்.

இந்து மதத்தில் உள்ள மற்றய கடவுள்களை ஏற்க முடியாத அப்பாரால் மீண்டும் சமணக்கடவுளை ஏற்று வழிபட்டார் என்று ஏமாற்ற முனைவது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம். அதிலும் இவரைக் கொல்லப் பல தடவை முயன்ற சமணர்கள் பிற்பாடு இவரை அன்பாக வரவேற்றார்களாம் என்பது அதை விட பெரிய அயோக்கித்தனம்.

ஆதிசங்கரர் அனைத்து மதங்களையும் உள்வாங்கிய போது தான், சமணமும், பௌத்தமும் உள்வாங்கப்பட்டன. அதனால் தான் அவை அழிந்தும் போயின. பௌத்தம் கொண்டிருந்த புலால் உண்ணாமை இந்து மதத்தில் இணையக்காரணம் அதுவும் ஒன்று. ஆனால் தங்களுடைய கருத்துக்கள் அழிந்து போனதை ஏற்க முடியாத சமணர்கள் புதிது புதிதாக கதையெழுப்புவதன் மூலம் நிகழ்காலத்திற்குச் சாத்தியமாக சமணக்கொள்கைக்கு உயிர் கொடுக்க முனைகின்றார்கள்.

சிதம்பர இரகசியம் பற்றி ஆராய முனைபவர்கள் கதிர்காமத்தில் ஏன் சுவாமியறை திறக்கப்படுவதில்லை என்பதற்கும், ராமசாமி n

சத்தப்புறம் அவர் வீட்டில் இருந்து வழிபட்ட பிள்ளையhர் சிலை எப்படிக் கிடைத்தது என்பது குறித்தும், பேசிக்கலாம்.

  • தொடங்கியவர்

சமண சமயத்தவராக இருந்த சம்பந்தரால் பல கடவுள்களை ஏற்க முடியவில்லை. அதற்கு காரணம் அவருக்குள் இருந்த சமண தத்துவங்களின் தாக்கம்.

சைவத்தில் சேர்ந்த பிறகும் அப்பர் சமண தத்துவங்களை பரப்பி வந்ததை நாம் பார்க்கிறோம். அந்த வகையில் அவர் சமணக் கடவுளை வணங்கிப் பாடியதில் வியப்பில்லை.

யார் கண்டார்? அப்பர் உண்மையிலேயே மீண்டும் சமணத்திற்கு செல்ல முற்பட்டிருக்கலாம்.

அப்பர் ஒரு வேளாளர். சம்பந்தர் ஒரு பார்ப்பனர். இந்த முரண்பாடு அவர்களுக்குள் இருந்தது. வைணவ மதத்தில் பார்ப்பனர்களால் ஆதிக்கத்திலும் சைவம் வேளாளர்களின் ஆதிக்கத்திலும் இருப்பது உங்களுக்கு தெரியும்.

ஆயினும் சைவத்தில் தமது ஆதிக்கத்தை கொண்டு வர பார்ப்பனர்கள் பல வழிகளில் முயன்றார்கள். (சிதம்பரத்தில் அவர்களால் வெற்றி கொள்ள முடிந்தது) இது போன்ற பிரச்சனைகளும் அப்பரை சம்பந்தரிடம் இருந்து விலகச் செய்தது.

உண்மையில் பார்ப்பனியம் செய்த அக்கிரமங்களால் அப்பர் மிகவும் வருத்தத்தோடு இருந்தார். அவர் மீண்டும் சமணத்தில் இணைய முற்பட்டதால்தான் அவருடைய கடைசிக் கால வரலாறு பற்றி பெரிய புராணம் தெளிவாக எழுதவில்லை.

இவைகளை விருப்பு வெறுப்பின்று ஆராய்கின்ற போதுதான் புரிந்து கொள்ள முடியும்.

நந்தனார் சிலை அகற்றப்பட்ட பல ஆண்டுகள் ஆகி விட்டது. அது இன்றைக்கு யாராவது தீட்சிதர் வீட்டு காற்படியாக இருக்கும். இதைப் பற்றி ஒரு ஆக்கத்தை ஒருவர் எழுதியிருந்தார் தேடி இணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் காணாத விடயங்களைக் கற்பனைகளோடு காண்பதற்கு முயலாதீர்கள்

யார் கண்டார்கள் என்று கேட்கின்றீர்கள். நீங்கள் கண்டீர்களா? அல்லது அதற்கு நீங்கள் வைத்திருக்கின்ற குறைந்தபட்ச ஆதாரங்களையாவது காட்ட முடியுமா?

நிகழ்காலத்தில் புலிகள் சொல்வதையே திரித்து வேற மாதிர எழுதுகின்றவர்களை இங்கே பார்க்கின்றபோது, அப்பர் பற்றிய வரலாற்றையும் திரிப்பதற்கு நேரமாகிடப் போவதில்லை.

அப்பரும் சம்பந்தரும் சாதியடிகப்படையில் என்றைக்குமே வாழ்ந்ததில்லை. அப்பர் தன்னுடைய பல்லாக்கைத் தூக்கினார் என்பதைக் கேட்ட சம்பந்தர், உடனே இறங்கி அப்பரினன் காலில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்டதாக வரலாறே சொல்கின்றது.

சமணர்கள் பல தடவை கொல்ல முயன்ற அப்பர் குறித்து பிழையான கருத்தோட்டத்தை உங்களுடைய கற்பனைக்கூடாக வழங்க முனையாதீர்கள். அப்பர் மீது சமணர்கள்களுக்குக் கோபம் அதிகரித்துக் கொண்டு தான் இருந்தன. பல ஆலயங்களில் சமணர்கள் இந்துச் சிலைகளைப் புதைத்து வைத்ததை கண்டு பிடித்தவர் இந்த அப்பர். அதனால் அவர்களுக்கு அப்பர் மேலே கோபம் அதிகமாகியிருக்குமே தவிரக் குறையப் போவதில்லை.இ.

மேலும் நாயன்மார்களின் வரலாறு என்பது எல்லாம், சோக்கிழராலும், சுந்தரராலும் திரட்டப்பட்ட தகவல்களின் மூலம் தான் எமக்குக் கிடைத்திரு;ககின்றன. அவர்கள் எவ்வளவு தூரம் அதை;த திரட்டினார்களோ, அவ்வளவு தான் எம் கையை வந்தடைந்திருக்கின்றன.

எனவே அவர்களால் திரட்டப்படாத வரலாற்றை உங்களுடைய கற்பனைகளுக்கு விதையாக்காதீர்கள்.

மனைவி இரவு நேரத்தில் வீட்டை விட்டுப் போனாள் என்று கதை முடிந்தால், யார் வீட்டிற்குப் போனாள், யார் கூடத் திரிந்தாள், யார் கூடவும் ஊரை விட்டு ஓடிப்போனாள் என்றது போல கற்பனைகளுக்கு இடம் கொடுப்பது சுத்த அபத்தமானது.

சோக்கிழார் அரசன் கொடுத்த காலப்பகுதிக்குள் திரட்ட முனைந்த தகவல்களை மட்டுமே அவரால் தரமுடிந்தது.

எந்தக் காலத்திலும் சமணர்களை அப்பர் ஆதரித்ததாக இல்லை. ஏனென்றால் அவர்களால் அவர் பட்ட துன்பம் கொங்சநஞ்சமல்ல.

  • தொடங்கியவர்

சைவ இலக்கியங்கள் சமணர்களை "அருகர்" என்று அழைப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும்.

சமணக் கடவுளை "அருக தேவன்" என்று அழைப்பார்கள். அதனால் சைவர்கள் சமணர்களை அருகர் என்று அழைத்தார்கள்.

அந்தணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் சிரங்களை சிந்தவாது செயத் திருவுள்ளமே" என்று சம்பந்தர் தன்னுடைய பார்ப்பன வெறியை கொட்டியிருக்கிறார்.

இப்பொழுது திருநறுங்கொண்டையில் அப்பர் சமணக் கடவுளை வணங்கிப் பாடிய பாடலை படியுங்கள்

கற்றறியேன் கற்றவர்தாள் கழறேன்உன்

கழலிணைகள் கண்டு களிகூர்ந்த நாளுஞ்

சுற்றறியேன் யினாலயத்தை பொல்லாப் பாவி

சொற்சிதங்கி நின்செவிக்கே தோற்றாக்காண்பார்

உற்றதுணை யுன்னடிக்கே யதன்றான்

வீரவோங்கு தேவதையுமுயரு மூதூர்

நற்றமிழ் சேர் நறுங்கொண்டை அருகா உன்னை

நம்பினேன் நின்பதத்தை நல்குவாயே

திருநறுங்கொண்டை சமணர்கள் வாழ்ந்த ஒரு ஊர். யினாலம் என்பது சமணர்களின் கோயில். அருகர் அவர்களுடைய கடவுள். சமணர்களுக்கு செய்த துன்பத்திற்கு மனம் வருந்தி அருகப் பெருமானை வேண்டி சம்பந்தர் பாடுவது புரியும்.

இந்து மதம் நிறையப் பொய்களை திரிவுகளையும் தந்து உங்களை ஏமாற்றியுள்ளது குறித்து நீங்கள் மனம் வருந்தக் கூடும். அதற்காக பொய்கள் உண்மையாகி விடாது. பொய்கள் சொல்வதோடு நிறைய விடயங்களையும் மறைத்து விட்டது.

மறைக்கப்பட்ட உண்மைகளை சொல்லவும், தமிழர்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்லவும், தமிழை கோயிலுக்கு அழைத்துச் செல்லவும் நாம் வரவேண்டி இருக்கிறது.

அப்பரை கொன்றது யார்?

நானில்லை :wub::wub::lol::(

  • கருத்துக்கள உறவுகள்

அந்தணர்கள் என்போர் கோவிலில் பூசைசெய்பவர்களை மட்டும் குறித்தாக நீங்கள் நினைப்பது அறியாமை. அந்தணர்கள் என்போர், படித்த உயர்ந்த, மக்களால் மதிக்கப்படுகின்ற அனைவரும் ஆவார். அதனால் தான் திருவள்ளுவரும்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

, பிறவாழி நீத்தல் அரிது" என்கின்றார். அறம் செய்கின்ற அனைவரையும் தான் வள்ளுவர் உயர்த்துகின்றார். அப்படி இல்லை அது தவறு என்றால் திருவள்ளுவரைப் பற்றித் திராவிட அமைப்பினர் உயர்த்திப் பேசுகின்ற அனைத்துத் தவறாகிவிடும்.

எனவே சம்பந்தர் அந்தணர் என்று பிராமணரைத் தான் உயர்த்திப் பேசினார் என்று கதைப்பது ஏமாற்றுத்தனம்.

2. இந்தப் பாடலை எங்கிருந்து அப்பர் பாடலாக இனம் கண்டீர்கள் எனச் சொல்வீர்களா? அப்பர் பாடல் தான் இது எப்படிச் சொல்லுவீர்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பரையும் நந்தனையும் யார் கொன்றது என்பதா இப்போது தேவை?

கண்ணுக்கு முன்னால் எமது இரத்த உறவுகளாகிய தமிழர்கள் காணாமல் போகிறார்கள் கொலை செய்யப்படுகிறார்கள்.இதைப் பற்றி எழுதி யாருக்காவது அனுப்பலாமே?

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா !

இது திரிப்பு வேலையில் வல்லமை காட்டும் புரட்டு உலகமடா!

தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா! தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா!

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

எமக்குத்தான் அந்தணர்கள் என்பவர்கள் அறவோர்கள் ஆவார்கள். பார்ப்பனர்களைக் கேட்டால் அவர்கள் பிராமணருக்கு ஒத்த சொல் அந்தணர் என்று சொல்வார்கள்.

திருவள்ளுவர் எழுதுகின்ற போது அந்தணர் என்பவர்கள் அறவோர்கள்

சம்பந்தர் எழுதுகின்ற போது அந்தணர் என்பவர்கள் பார்ப்பனர்கள்

ஒரு சொல் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அர்த்தம் பெறும்(உதாரணம்: தீவிரவாதி). சொன்னது யார் என்பதை வைத்துத்தான் சொல்லின் அர்த்த்தை புரிந்து கொள்ள முடியும். இதை உணராது விட்டால் எந்த ஒரு ஆய்வையும் செய்ய முடியாது.

அப்பருடைய ஒவ்வொரு பாடலைப் பற்றியும் சந்தேகம் எழுப்ப முடியும். நான் இணைத்தது அப்பருடைய பாடல் என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்.

"சொற்றுணை வேதியனும்" , "மாசில் வீணையும்" "குற்றாயினவாறும்" மட்டுமே தெரிந்த தமிழர்களிடம் போய் அப்பர் இவைகளை விட வேறு பாடல்களையும் பாடியிருக்கிறார் என்று சொன்னால் அவர்கள் அதை நம்புவதற்கு கொஞ்சம் கஸ்ரப்படுவார்கள்என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்

தெளிவாகப் பதில் சொல்லலாமே.

சொற்றினை வேதியனோ, எந்தப் பதிகமோ, அப்பர் எச் சநதர்ப்பத்தில் பாடினார் என்று சொல்லுங்களேன். இந்தப் பாட்டை இது வரை காலமும் அப்பரின் பதிகமாகக் கேட்டதே இல்லை. எனவே தான் அறிய விரும்புகின்றேன்

அப்பரின் பதிகம் என்று அப்பரை தம்மவர்களாகக் காட்ட சூழ்ச்சி மிக்க சமணர்களின் சதியாக இதுவும் இருக்கலாம். முள்ளந்தண்டில்லாத அவர்கள் சூழ்ச்சியால் தான் பிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சம்பந்தர் காலத்திலும் அந்தணர் என்போர், அறநெறியில் நின்றோர் என்பதையே நாம் சொல்கின்றோம். முடிந்தால் இல்லை என்று ஆதாரம் கொடுங்கள்.

பூணூல் தொடர்பாகவும் அதே கருத்தே மேலேங்குகின்றது. பூணூல் என்பது பிராமணர்களுக்குச் சொந்தமானதல்ல. ஒருவர் உயர் நிலையை அடையு;மபோது, முக்கியமான சந்தர்ப்பங்களில் பூணூல் அணிவார்கள்.

யாழ்ப்பாணத்தில் மரணவீடுகளிலும், மர, சிற்பத் தொழில் செய்கின்ற ஆச்சாரிகள் பூணூல் அணிவதைப் பார்த்திருக்கின்றோம். எனவே ஒருவர் புனிதமான எந்தத் தொழிலும் செய்யும்போது பூணூல் அணியலாம். அவன் அந்தணரும் ஆவான்.

:Dம்ம்..யாரின்ட டாடியை கொன்றிட்டீனம்..(நேக்கு சொல்லவே இல்லை சொல்லி இருந்தா நானும் பார்த்திருப்பேன் என்று சொல்ல வந்தனான் பாருங்கோ :) )..ஓ..ஓ உவர் வந்து அந்த நாயனார் அந்த அப்பரோ..(நான் கொன்வீயூஸ் ஆகிட்டேன் சபேஷ் மாமா வெறி சாறி :( )..

அட இந்த கேஸை இன்னுமா கண்டு பிடிகல..வேண்டும் என்றா இந்த கேஸை நாங்க சி.பி.ஜை யிட்ட கொடுப்போமா சபேஷன் மாமா ஆனா என்ன.. :) (கேஸை ஓப்படைக்கிற எங்களை போய் ஏதாவது ஆஸ்பத்திரியில விட்டிடூவினம் பராவால்ல தானே :D ஆனா இப்படியே விட கூடாது நாங்க கண்டு பிடிப்போம் என்ன யார் அப்பரை கொன்றவர் என்று..(சிறிலங்காவில பிரமேதாசா போய் அடுத்தது யாரோ வந்தவை நேக்கு பெயர் தெரியாது அவரும் வந்து போய் சந்திரிக்கா வந்து போய் இப்ப மகிந்தவும் வந்திட்டார் ஆனா :( )...ஒன்னும் சொல்ல மாட்டன்.. :)

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா கண்ணுக்கு தெரியாம நடந்தா அது சரித்திரம் தெரிந்து நடக்கிறது எல்லாம் விசித்திரம்" :(

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

சபேசன் ..! உங்கள் ஊகங்களுக்கு வலுவான ஆதாரங்கள் உண்டா..? இல்லை என்றே நினைக்கின்றேன். இந்த மாதிரியான சர்ச்சையான விடயங்கள் ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்டால் நல்லது. இல்லையென்றால் வீண் விவாதங்கள் தான் ஏற்படும்..!

  • தொடங்கியவர்

திருநாவுக்கரசர் என்கின்ற ஒருவர் வாழ்ந்தார் என்பதற்கும் வலுவான ஆதாரங்கள் இல்லை. அப்படி ஒருவர் வாழ்ந்திருந்தாலும், அவர் பற்றி சொல்லப்படுகின்றவைகள் உண்மையா என்பதற்கும் எந்த ஆதாரங்களும் இல்லை.

அவர் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தாரர், 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தாரா என்றெல்லாம் விவாதங்கள் நடக்கின்றன.

கல்லைக் கட்டி கடலில் போட்டால் மிதக்க முடியாது என்பது குழந்தைக்கும் தெரியும். உயிர்க் கொலைக்கு எதிரான சமணர்களை கொலைகாரர்களாக காட்டுகின்ற முயற்சிகள்தான் இந்தக் கட்டுக்கதைகள்.

கல் மிதந்த கதையை நம்புபவர்கள் அப்பர் பற்றிய ஒரு ஆய்வை நம்ப மறுப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

முதலில் நாம் கேள்விகள் கேட்டுப் பழக வேண்டும். கேள்விகள் கேட்டால்தான் பதில்கள் கிடைக்கும்.

எல்லோருடைய முடிவுகளையும் சொல்கின்ற பெரிய புராணம் அப்பருடைய முடிவை ஏன் சொல்லவில்லை? சிதம்பர ரகசியம் என்றால் என்ன? நறுங்கொண்டையில் இருந்த சமண ஆலயத்தை "அப்பராண்டவர்" என்று அழைக்க காரணம் என்ன?

இப்படியான கேள்விகளுக்கு தனிதனித் பதில்களும்உண்டு. சிவபெருமான் நடனப் போட்டியில் பார்வதிக்கு தன்னுடைய ஆண்குறியை காட்டியதைத்தான் "சிதம்பர ரகசியம்" என்று சொல்வார்கள் என்ற கருத்தும் சிலரிடம் உண்டு.

அதே வேளை இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே புள்ளியில் சந்திக்கின்ற ஒரு பதிலும் உண்டு. அதுதான் நான் மேலே எழுதியிருப்பது.

நாம் எதையும் ஆராயும் போது விருப்பு வெறுப்பு இன்றி ஆய்வு செய்ய வேண்டும். கல்லைக் கட்டி கடலில் போட அது மிதந்தது என்பதை நம்பிக் கொண்டு ஆய்வு செய்யப் புறப்பட்டால் எந்தப் பதிலும் கிடைக்காது.

அப்பர் ஏறக்குறைய 4900 பாடல்கள் பாடியிருக்கிறார் என்பது சில ஆய்வாளர்களின் கருத்து. அது பற்றிய குறிப்பு பெரிய புராணத்தில் உண்டு. ஆனால் அப்பருடைய 3055 பாடல்கள்தான் கண்டு பிடிக்கப்பட்டன.

அப்பருடைய பாடல்களை அழித்தது சமணர்கள் அல்ல. இந்துக்கள்தான். சிதம்பரத்தில் பூட்டி வைத்து புற்று தின்னக் கொடுத்தார்கள். அப்பருடைய பாடல்களில் ஏறக்குறைய 2000 பாடல்களை அழித்து விட்டு அவருடைய வரலாறு பற்றி யாரால் சரியாக சொல்ல முடியும்?

இருக்கின்ற 3055 பாடல்களில் நாம்ஒரிரு பாடல்களைத்தான் தெரிந்து வைத்திருக்கிறோம். இதில் மற்றைய எந்தப் பாடல்களை யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். ஆகவே நான் வேறு பாடல்களை தந்தாலும், அவைகள் அப்பருடையதா என்ற கேள்வியை எழுப்ப முடியும்.

உண்மையில் இன்றைக்கு இந்த 3055 பாடல்களில் கூட அப்பருடைய பல பாடல்கள் சைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அப்பருடைய அனைத்துப் பாடல்களையும் ஆய்வுக்கு உட்படுத்த இவர்கள் தயாராக இல்லை. அப்படி ஆய்வு செய்தால் நாம் வந்த முடிவுக்குதான் அனைவரும் வரவேண்டி இருக்கும்.

அப்பருடைய பாடல்களை மறைத்து விட்டு, சிவனை வணங்கியதால் வயிற்று வலி போனது என்று சொல்கின்ற "குற்றாயினவாறையும்", கல் மிதந்தது என்று மடத்தனமாக நம்ப சொல்கின்ற "சொற்றுணை வேதியனையும்", போன்ற பாடல்களைத்தான் மக்களுக்கு சொல்லித் தருவார்கள். அதுதான் அவர்களுடைய கெட்டித்தனம்.

அப்பருடைய வரலாறு பற்றி சைவஇலக்கியங்கள் சொல்வதை விட எம்முடைய ஆய்வு வலுவானது என்பதை நடுநிலையாக நின்று சிந்தித்தால் புரியும்.

நாம் எதையும் ஆராயும் போது விருப்பு வெறுப்பு இன்றி ஆய்வு செய்ய வேண்டும். கல்லைக் கட்டி கடலில் போட அது மிதந்தது என்பதை நம்பிக் கொண்டு ஆய்வு செய்யப் புறப்பட்டால் எந்தப் பதிலும் கிடைக்காது.

அப்பருடைய பாடல்களை மறைத்து விட்டு, சிவனை வணங்கியதால் வயிற்று வலி போனது என்று சொல்கின்ற "குற்றாயினவாறையும்", கல் மிதந்தது என்று மடத்தனமாக நம்ப சொல்கின்ற "சொற்றுணை வேதியனையும்", போன்ற பாடல்களைத்தான் மக்களுக்கு சொல்லித் தருவார்கள். அதுதான் அவர்களுடைய கெட்டித்தனம்.

அப்பருடைய வரலாறு பற்றி சைவஇலக்கியங்கள் சொல்வதை விட எம்முடைய ஆய்வு வலுவானது என்பதை நடுநிலையாக நின்று சிந்தித்தால் புரியும்.

நீங்கள் கூறுகின்ற கருத்துக்களும் இவையைப் போல் நம்பத்தகுன்ந்தவையாக இல்லைய்யே...நீங்கள் எழுதியிருப்பது ஒரு ஊகத்தின் அடிப்படையில் தான்..!

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் நிலை ரெம்பப் பரிதாபம் சபேசன்.

அப்பரைப் பொய் என்கின்றீர்கள். ஆனால் அவரது பதிகங்களை எந்தப் பொய் என்று போட முடியாது என்பதால் வழமைபோலத் சிதம்பரத்தைக் குற்றம் சாட்டுகின்றீர்கள்.

சொல்லப் போனால் உங்களுக்கு அப்பரையும் சம்பந்தரையும் பொய் என்று காட்டவேண்டிய தேவை இப்படியெல்லாம் புலம்ப வைக்கின்றது.

நீங்கள் சொல்ல வருகின்ற விடயம் சமண இணையத்தளம் ஒன்றில் ஏற்கனவே படித்த ஒன்று தான். அதை நாரதரும் இங்கு முன்பொரு தடவை இணைத்துமிருந்தார்.

அவர்கள் முதலில் அப்பரையும் சம்பந்தரையும் பொய் என்றார்கள். பிறகு அடுத்த பந்தியில் 7ம் நூற்றாண்டில் பிறந்தவர் என்றார்கள், பிறகு 15ம் நூற்றாண்டில் பிறந்தவர் என்று மாறி மாறித் தங்களைக் குழப்பி எழுதியிருப்பார்கள். அந்த சூது மிக்க சமணர்களின் பரிதாப நிலை கண்டு அனைவரும் வருத்தப்படுகின்றோம்.

வழமையாகச் சமணர்கள் சூது செய்வதில் வல்லவர்கள் என்பது அனைவரும் அறிந்த கதை. அந்தச் சூதால் தான் அவர்களின் இருப்பும் அழிந்து போனது.

அப்பர் இத்தனை பாடல்கள் எழுதினார்கள் என்று சொல்லுகின்ற நீங்கள் அது பற்றிய உண்மையான ஆராய்வை ஏன் தரக்கூடாது. சமணர்கள் இப்படியான சந்தேகங்களைக் கிளப்பி விடுவதன் மூலம், தங்களுடைய இருப்புக்கு வழி தேடுகின்றார்கள்.

நான் கேட்டபடி அப்பரின் எத்தனையாவது பதிகம் நீங்கள் இணைத்த பாடல் என்று கேட்டதற்கு உங்களால் பதிலளிக்க முடியாமல் என்னவோ எல்லாம் கதைக்கின்றீர்கள்.

நறுங்கொண்டையில் இருந்த சமண ஆலயத்தை "அப்பராண்டவர்" என்று அழைக்க காரணம் என்ன?
எங்களுடைய அப்பாவை "அப்பர் எங்கே போய்விட்டார்" என்று தான் நான் அம்மாவிடம் கேட்கின்றனான். அதனால் அப்பருடைய பிற்காலப் பிறப்பாகத் தான் எங்களின் அப்பா இருப்பாரோ என்ற சந்தேகத்தைக் கிளப்பி ஆராய்வாளர் ஆகலாம் என முடிவெடுத்திருக்கின்றேன்.

உண்மையில் இன்றைக்கு இந்த 3055 பாடல்களில் கூட அப்பருடைய பல பாடல்கள் சைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அப்பருடைய அனைத்துப் பாடல்களையும் ஆய்வுக்கு உட்படுத்த இவர்கள் தயாராக இல்லை. அப்படி ஆய்வு செய்தால் நாம் வந்த முடிவுக்குதான் அனைவரும் வரவேண்டி இருக்கும்.

நீங்கள் செய்த இப்படி அடிப்படையே இல்லாத ஆராய்வுக்கு யாரும் வரப்போவதில்லை. ஒரு வித ஆதாரமும் உங்களால் வழங்கப்படாமல், எழுந்தமான சந்தேகம் கிளப்புவதற்குப் பெயர் ஆராய்வாக யாராலும் மதிக்கப்படப் போவதில்லை.

சமண மார்வாடிகள் எவ்வளவு பணம் கொடுத்து யாரையும் வாங்கினாலும் உண்மைக்கு முன்னால் சூது என்றுமே பலிக்கப் போவதில்லை.

அப்பரை யார் கொன்றால் என்ன எங்கட பிரச்சனை அது இல்லையே :D:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் காணாத விடயங்களைக் கற்பனைகளோடு காண்பதற்கு முயலாதீர்கள்

யார் கண்டார்கள் என்று கேட்கின்றீர்கள். நீங்கள் கண்டீர்களா? அல்லது அதற்கு நீங்கள் வைத்திருக்கின்ற குறைந்தபட்ச ஆதாரங்களையாவது காட்ட முடியுமா?

நிகழ்காலத்தில் புலிகள் சொல்வதையே திரித்து வேற மாதிர எழுதுகின்றவர்களை இங்கே பார்க்கின்றபோது, அப்பர் பற்றிய வரலாற்றையும் திரிப்பதற்கு நேரமாகிடப் போவதில்லை.

அப்பரும் சம்பந்தரும் சாதியடிகப்படையில் என்றைக்குமே வாழ்ந்ததில்லை. அப்பர் தன்னுடைய பல்லாக்கைத் தூக்கினார் என்பதைக் கேட்ட சம்பந்தர், உடனே இறங்கி அப்பரினன் காலில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்டதாக வரலாறே சொல்கின்றது.

சமணர்கள் பல தடவை கொல்ல முயன்ற அப்பர் குறித்து பிழையான கருத்தோட்டத்தை உங்களுடைய கற்பனைக்கூடாக வழங்க முனையாதீர்கள். அப்பர் மீது சமணர்கள்களுக்குக் கோபம் அதிகரித்துக் கொண்டு தான் இருந்தன. பல ஆலயங்களில் சமணர்கள் இந்துச் சிலைகளைப் புதைத்து வைத்ததை கண்டு பிடித்தவர் இந்த அப்பர். அதனால் அவர்களுக்கு அப்பர் மேலே கோபம் அதிகமாகியிருக்குமே தவிரக் குறையப் போவதில்லை.இ.

மேலும் நாயன்மார்களின் வரலாறு என்பது எல்லாம், சோக்கிழராலும், சுந்தரராலும் திரட்டப்பட்ட தகவல்களின் மூலம் தான் எமக்குக் கிடைத்திரு;ககின்றன. அவர்கள் எவ்வளவு தூரம் அதை;த திரட்டினார்களோ, அவ்வளவு தான் எம் கையை வந்தடைந்திருக்கின்றன.

எனவே அவர்களால் திரட்டப்படாத வரலாற்றை உங்களுடைய கற்பனைகளுக்கு விதையாக்காதீர்கள்.

மனைவி இரவு நேரத்தில் வீட்டை விட்டுப் போனாள் என்று கதை முடிந்தால், யார் வீட்டிற்குப் போனாள், யார் கூடத் திரிந்தாள், யார் கூடவும் ஊரை விட்டு ஓடிப்போனாள் என்றது போல கற்பனைகளுக்கு இடம் கொடுப்பது சுத்த அபத்தமானது.

சோக்கிழார் அரசன் கொடுத்த காலப்பகுதிக்குள் திரட்ட முனைந்த தகவல்களை மட்டுமே அவரால் தரமுடிந்தது.

எந்தக் காலத்திலும் சமணர்களை அப்பர் ஆதரித்ததாக இல்லை. ஏனென்றால் அவர்களால் அவர் பட்ட துன்பம் கொங்சநஞ்சமல்ல.

  • தொடங்கியவர்

தூயவன்!

அப்பர் பொய், அப்பரின் தேவாரங்களும் பொய் என்கின்ற கருத்தும் சிலர் மத்தியில் உண்டு.

அப்பர், சம்பந்தர், சுந்தரமூர்த்தி போன்றவைகள் எல்லாம் கற்பனைகள் என்றும், அனைத்துத் தேவாரங்களையும் சேக்கிழாரே எழுதினார் என்று ஒரு வலுவான கருத்து இருக்கிறது.

தேவாரங்கள் அனைத்தும் ஒரே முறையில், ஒரே மொழி நடையில் அமைந்திருப்பதைக் கவனிக்கும் போது, எனக்கும் இந்தச் சந்தேகம் இருப்பது உண்மைதான்.

சீவகசிந்தாமணி போன்ற சமண இலக்கியங்களில் லயித்திருந்த மன்னனை சைவசமயத்தின் பக்கம் திருப்பவதற்கு சேக்கிழார் எழுதியதுதான் பெரிய புராணம். பெரிய புராணம் முழுவதுமே, மற்றைய புராணங்கள் போன்று பொய்யும் புரட்டுக்களுமாக இருக்கக் கூடும்.

ஆனால் அப்பர் என்று ஒருவர் வாழ்ந்தார் என்பதை நம்பிக் கொண்டு, அவருடைய முடிவு என்ன என்கின்ற ஆய்வை விருப்பு வெறுப்பின்றி செய்கின்ற போது, "அப்பர் சிதம்பரத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்" என்ற ஒரு விடையும் கிடைக்கிறது.

இந்த முடிவை நான் நம்புவதற்கு காரணம், மற்றைய முடிவுகள் நிறைய முரண்பாடுகளோடு அமைந்திருப்பதுதான்.

அப்பர் என்று ஒருவர் உண்மையிலேயே இருந்தாரா என்பது இன்னொரு ஆய்வு. அப்படி அவர் இருந்திருந்தால் அவருடைய வாழ்க்கை எப்படி அமைந்தது என்பது இன்னொரு ஆய்வு.

நான் இரண்டாவது ஆய்வு குறித்தே பேசியுள்ளேன்.

வணக்கம் சபேசன் அண்ணா

சமணர்கள் என்றால் பெருமாள் விஷ்ணுவை வணங்குபவர்களா

அப்படியானாள் சமணரும் வைஸ்ணவர் ஒன்றா

  • தொடங்கியவர்

சமணர்கள் வேறு, வைணவர்கள் வேறு. வைணவர்கள்தான் பெருமாள் விஸ்ணுவை வணங்குவார்கள்.

சமணர்கள் விஸ்ணுவையோ, வேறு இந்துக் கடவுள்களையோ வணங்குவது கிடையாது.

சமண மதத்தை நிறுவியவரான தீர்த்தங்கரர் என்பவரை அருகக் கடவுள் என்று வழிபடுவார்கள். முதலாவது தீர்த்தங்கரருக்கு பின்பும் பல தீர்த்தங்கரர்கள் தோன்றினார்கள். அவர்களை வழிபடும் பழக்கமும் உண்டு.

நானில்லை :):D:(:huh:

வழக்கை FBI க்கு மாத்தி விடுகிறேன்.....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.