Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலிகாலம் என்பது இதைத்தானா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எஜமானின் மனைவி, வேலைக்காரன் மேல் மையல் கொண்டு..

7. சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானனின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்.

8. அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார்.

9. இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.

10. அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.

11. இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டிற்குள் போனான்; வீட்டு மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை.

12. அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்.

13. அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது,

14. அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரெய மனுஷன் நம்மிடத்தில் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படிக்கு என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டேன்.

15. நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள்.

16. அவனுடைய எஜமான் வீட்டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தைத் தன்னிடத்தில் வைத்திருந்து,

17. அவனை நோக்கி: நீர் நம்மிடத்தில் கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் சரசம்பண்ணும்படிக்கு என்னிடத்தில் வந்தான்.

18. அப்பொழுது நான் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவன் தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள்.

http://www.tamil-bible.com/lookup.php?Book...&Chapter=39

  • Replies 102
  • Views 15.9k
  • Created
  • Last Reply

பைபிளில் மட்டுமல்ல மதம் சம்பந்தப்பட்ட, புராணங்கள் தொடர்பான பல நூல்களிலும் வெற்றுச் சோடனைகளும் நம்ப முடியாத கதைகளும் நிறைந்துள்ளன.

அவற்றையெல்லாம் நீக்கி தூய்மைப்படுத்தப்படும் புராணங்களும் சமயங்களும் மட்டுமே நிலைத்திருக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கவியா

புராணக்கதைகள் இந்து மதத்தில் தொகுக்கப்பட்டத்லல. அது வேதங்களுக்குள், அல்லது அது சார்ந்த பக்திச் செயற்பாட்டில் அடங்காதவை. யாரோ ஒருவர் ஏதோ காலத்தில் மக்களுக்குச் சொல்லப்பட்டது. செருகப்பட்டது தான் புராணக்கதைகளே தவிர, அது வழிபாட்டு முறைகள் அல்ல.

தூயவன்

நானுமு; சைவ சமயத்தைச் சேர்ந்தவன் தான். ஆனால் ஏனைய மதங்கள் தவறானவை. எங.கள சமயம் தான் சரியானது என்ற வாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

சைவ சமயத்தில் தவறான ஏற்றுக் கௌ;ள முடியாத கதைகள் எதுவும் இல்லையா?

இல்லை என்று நீங்கள் தர்க்கித்தால் இது 10 12 பக்கங்கள் போகக் கூடும். அது நாத்திக ஆத்திக விவாதக் களமாய்ப் போய்விடும்.

மதங்கள் ஒவ்வொன்றிலும் சில நல்ல விடயங்களும் இருக்கின்றன. சில ஏற்க முடியாத விடயங்களும் இருக்கின்றன.

உதாரணமாக இஸ்லாமியர்கள் மரணச் சடங்கை செய்யும் முறை மிகச் சிறப்பானது. சிக்கனமானது. சமத்துவமானது. ஆனால் அவர்களது பெண்கள் தொடர்பான அணுகுமுறை எற்றுக் கொள்ள முடியாதது.

எனவே நல்லவற்றை எடுத்து வாழ்வது தான் சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அந்தக் கதைகள் இங்கு விவாதிக்கபடவில்லை என்கின்றீர்களா? அப்போது எல்லாம் எங்கு போனீர்கள். எனவே அதைப் பற்றி இங்கே கதைப்பதற்கு வேறு இல்லை என்றே நம்புகின்றேன்.

பைபிளில் உள்ள அனைத்துப் பாலியல் கதைகளையும் நான் இங்கே இணைக்கவில்லை. முறை தவறிய பாலியல் குற்றங்களை மட்டும் தான் பட்டியலிட்டுள்ளேன். அப்படி எல்லாக் கதையையும் இணைத்தால் எத்தனை மனைவிகள், வைப்பாட்டிகள் என்று தனிப்பட்டியல் போட்ட கதையே கொண்டு செல்லலாம்.

சபேசன் இங்கே இந்துக்கதைகள் என்று சாதாரண பாலியல் கதைகளை இணைத்து, அது தான் பக்தி என்று கொச்சைப்படுத்தியபோது தாங்களைக் காணமுடியவில்லை. எல்லோரும். ஒரு பேப்பர்காரர் என்பதற்காக அமைதியாக இருந்துவிட்டீர்களாக்கும்....

தூயவன்

மதம் தொடர்பார்க நான் உங்களுக்கும் சபேசனுக்கும் இடையில் இருப்பவன்.

நீங்கள் எமது சமயம் நூறு வீதம் சரி என்றும் சபேசன் நூறு வீதம் பிழை என்றும் கருதுபவர்கள். ஆனால் நான் இடையில் இருக்கிறேன். நான் சபேசனின் பக்கம் என்றால் நானும் எனக்குத் தெரிந்த எங்கள் சமயத்தில் இருக்கின்ற பொட்டுக் கேடுகளை பதிவிட்டிருப்பேன்.

ஆனால் அதற்கான தேவை எனக்கிருக்கவில்லை.

எனக்கு யாரும் என்னுடைய சமயம் தான் சரி. எனையவை பிழை என்று வாதிடுவதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

அது அல்லேலுயாக் கூட்டம் என்றாலும் சரி. அல்லது விஷ்வ ஹிந்து பரிசத்தாயிருந்தாலும் சரி.

அதைத் தான் குறிப்பிட்டேனே தவிர வேறு காரணங்கள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தன் சகோதரி கூட.... இதெல்லாம் தலையில் வைச்சால் நோய் தீருமாம்..

அவள் முதலில் சொல்கின்றாள் இது பாவம் என்று. அப்போது உயர்ந்தவளாகத் தெரிந்த அவள், அடுத்த வரியில் தந்தையிடம் கேள், அவர் என்னைத் உனக்குத் தர மறுக்க மாட்டார் என்கின்றாள்... கழுவேறிக் குடும்பம் என்பது இதைத் தானா?

-----------------------------------------------------------------------------------

1. இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகம்கொண்டான்.

2. தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்; அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள்; அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய, அம்னோனுக்கு வருத்தமாய்க் கண்டது.

3. அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி.

4. அவன் இவனைப் பார்த்து: ராஜகுமாரனாகிய நீ, நாளுக்குநாள் எதினால் இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச்சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசைவைத்திருக்கிறேன் என்றான்.

5. அப்பொழுது யோனதாப் அவனைப்பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன்படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம்கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க, என் கண்களுக்கு முன்பாக உட்காரும்படி தயவுசெய்யவேண்டும் என்று சொல் என்றான்.

6. அப்படியே அம்னோன் வியாதிக்காரன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு, என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படி உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.

7. அப்பொழுது தாவீது, வீட்டுக்குத் தாமாரிடத்தில் ஆள் அனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப்போய், அவனுக்கு சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச்சொன்னான்.

8. தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப் போய், மாவெடுத்துப் பிசைந்து, அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி பணியாரங்களைச் சுட்டு,

9. சட்டியை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்; பின்பு அம்னோன் எல்லாரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான்; எல்லாரும் அவனை விட்டு வெளியே போனார்கள்.

10. அப்பொழுது அம்னோன் தாமாரைப்பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறைவீட்டிலே கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறைவீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டுபோனாள்.

11. அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப்பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி என்றான்.

12. அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்.

13. நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவோடே பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள்.

14. அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான்.

15. பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.

16. அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைப்பார்க்கிலும், இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவள் சொல்லைக் கேட்க மனதில்லாமல்,

17. தன்னிடத்தில் சேவிக்கிற தன்வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை, என்னை விட்டு வெளியே தள்ளி, கதவைப்பூட்டு என்றான்.

18. அப்படியே அவனிடத்தில் சேவிக்கிறவன் அவளை வெளியே தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவருணமான வஸ்திரத்தை உடுத்திக்கொண்டிருந்தாள்; ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த, சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள்.

19. அப்பொழுது தாமார்: தன் தலையின்மேல் சாம்பலை வாரிப்போட்டுக்கொண்டு, தான் தரித்திருந்த பலவருணமான வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தன் தலையின்மேல் வைத்து, சத்தமிட்டு அழுதுகொண்டுபோனாள்.

20. அப்பொழுது அவள் சகோதரனாகிய அப்சலோம் அவளைப் பார்த்து: உன் சகோதரனாகிய அம்னோன் உன்னோடிருந்தானோ? இப்போதும் என் சகோதரியே, நீ மவுனமாயிரு; அவன் உன்னுடைய சகோதரன்; இந்தக் காரியத்தை உன்மனதிலே வைக்காதே என்றான்; அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அப்சலோமின் வீட்டில் தனித்துக் கிலேசப்பட்டுக்கொண்டிருந்தா

சபேசன் இங்கே இந்துக்கதைகள் என்று சாதாரண பாலியல் கதைகளை இணைத்து, அது தான் பக்தி என்று கொச்சைப்படுத்தியபோது தாங்களைக் காணமுடியவில்லை. எல்லோரும். ஒரு பேப்பர்காரர் என்பதற்காக அமைதியாக இருந்துவிட்டீர்களாக்கும்....

நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள். என்னால் ஒத்துக் கொள்ள முடியாத ஆனால் உங்களால் ஏற்றுக் கொள்ளப்படும் விடயங்களுக்கு ஆதரவாக நானும் கதைத்திருக்க வேண்டுமா? குறிப்பாக

எங்களுடைய சைவக் கடவுளுக்கத் தமிழ் தெரியாது. சமஸ்கிருதம் தான் தெரியும் என்று ஆமோதித்திருக்க வேண்டுமா?

அல்லது எல்லாம் தெரிந்த கடவுளுக்கு நான் கோயிலுக்கு வந்தது தெரியாது. அதை அர்ச்சனை என்ற பெயரில் ஒரு இடைத்தரகரை வைத்து மூல நட்சத்திரத்து முனுசாமி வந்திருக்கிறார். அவரைக் கவனித்துக் கொள் என்று சொல்லுவிக்க வேண்டும் என்பதையா?

அல்லது ஆயிரம் எழைக் குழந்தைகள் பசியால் இருக்க அவர்களுக்குக் கொடுக்காமல் அபிசேகம் என்ற பெயரில் அதைக் கல்லுக்கு ஊற்றுவதையா ( என்னைப் பொறுத்த வரை மனமொன்றி வணங்குவதற்கான ஒரு குறியீடே சிலைகள். அவை கடவுள்கள் அல்ல)

எனவே அந்த இடத்தில் வந்து கருத்துக்களைச் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கிருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அதைத் தான் இங்கே செய்யச் சொல்கின்றேன். அங்கே கதைக்க ஜோக்கியம் இல்லை என்றால் இவ்விடத்தலும் எனக்குப் புத்திசொல்வதைத் தவிர்ப்பதே பொருத்தமாக இருக்கும்.

சரி நீங்கள் தாராளமாகப் பொறுக்கிப் போடுங்கள்.

ஆனால் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிகிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பைபிளில் கிடக்கின்ற வசனங்களைத் தானே போடுகின்றேன். ஏதோ நான் புராணக்கதை போல எழுதித் தருவதைப் போலச் சொல்கின்றீர்களே. கண்ணாடி வீடு என்று எதைச் சொல்லவருகின்றீர்கள். தேசியம் உடனே இதனால் பாதிக்கப்படும் சம்பந்தப்படுத்தப் போகின்றீர்களா??

நண்பர் யஸ்ரின் உற்பட்ட சிலர் இந்து மதத்தைச் சாடியபோது அந்தப் பிரச்சனை கிளம்பாதபோது, இவ்விடயத்தில் எந்தக் கண்ணாடியும் உடையாது.

கண்ணாடி வீடு என்று நான் சொன்னது இந்து சமயத்திற்குள் இருக்கின்ற தவறுகளை.

ஜெருசலேமில் பிறந்த எங்கள் யேசுநாதருக்குத் தமிழ் புரிகிறது. எங்கள் ப+சைத்திருப்பலியைத் தமிழிலும் செய்கிறோம். ஆனால் உங்கள் தமிழ்க் கடவுளான முருகனுக்குத் தமிழ் தெரியாதோ என்று ஒரு கிறீஸ்தவர் கேட்டால் நீங்கள் என்ன பதிலைச் சொல்லப் போகிறீர்கள்.

இது போன்ற அழுக்குகளைக் களைந்தகற்றினால் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் மத மாற்றங்களைத் தடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேசுநாதருக்குத் தமிழ் புரியத் தான் வேண்டும். ஏனென்றால் அவர் பேசிய மொழி இப்போது இல்லை. வேறு வழியில்லாமல் எல்லாமொழியிலும் மாற்றினார்கள். அவர்களின் அந்த வெட்கக்கேட்டை எல்லா மொழிக்கும் மாற்றிவிட்டோம் என்று மறைத்துப் பெருமையடிக்கின்றார்கள்.

மற்றும்படி இஸ்லாமியன் அரபிக்கிலும், பௌத்தன் பாளியிலும் தான் இப்போதும் ஓதிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழில் மந்திரங்கள் இல்லை என்ற குறைபாடு ஏற்கக் கூடியது. ஆனால் அவற்றை மொழி பெயர்க்கின்றபோது, அதில் தெய்வத்தன்மையுள்ளதாகப் படிக்கின்றபோது, இனிமை தருவதாக மாற்றக் கூடிய புலமையுள்ளவர்கள் தேவை. அதையெல்லாம் எங்களால் மாற்றி விடமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளை விலை பேசியது தொடர்பாக சுவிடன் பெண்மணி. அவர்களுக்கு எந்தெந்த வழியில் வியாபாரம் ஆகின்றதோ, அதற்காக வியாபாரயுக்திகளைப் பாவிப்பார்கள். இன்றைக்கு நீங்கள் கேட்கின்ற தமிழ் யுக்தியும் கூட அதுவாக இருக்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.... துயவன்!

உங்களிடம் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். உங்களை மதவெறி பிடித்த மாடு என்று எழுதியதற்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். ஐயோ துயவன் ஏன் நீங்கள் அவசர படுகின்றீர்கள் என்று தெரியவி;லலை இதில் எங்கே நான் பைபிளை புனித படுத்தி எழுதியுள்ளேன்? உண்மையிலேயே உங்களுக்கு சாதகமாகவே நான் எழுதினேன். தொடக்கமே முறைகெட்டுத்தான் தொடங்கபட்டிருக்கின்றது............. இதில் இனி என்ன முறை கேடு என்ற மாதிரியே எழுதினேன். உங்களுக்கு அது விழங்கவில்லையா? நீங்கள் அவசர அவரமமாக வாசிக்கின்றீர்கள் போல் தெரிகின்றது.

பின்னாளில் மனைவிக்கு வயது போகும் காலத்தில் என்ன செய்வதென்ற எண்ணம் பேபியை இப்போதே இரண்டு மூன்று பெண்பிள்ளைகளை பெற்று வைக்க தூண்டுவதுபோல் உள்ளது????

இது உலக சட்ட அமைபிற்கு எதிரானது ஏன் இவர்களை கைது செய்யாது இருக்கிறார்கள்?

அச்சோ...நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன் :) ..(அட ஜம்மு பேபியை இப்படி திங் பண்ணி போட்டீங்க :D )..நிசமா நான் நல்ல பேபி அல்லோ..கெட்டப்பை தான் மாற்றுவன் பட் கரக்டர் சேம் தான் பாருங்கோ.. :wub:

ம்ம்..உலக சட்ட அமைபிற்கு எதிரானதா..(உங்க இருக்கிறவைக்கு தெரியாது போல :lol: )..நீங்க சொன்னீங்க என்று அவுஸ் பொலிஸிட்ட சொல்லி உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கிறன் என்ன :lol: ..(இப்ப சந்தோசமா)..அட வாழுற வயசில அவைய ஏனப்பா பிரிக்கிறீங்க :) ..(இந்த கிரான்பா பிரிசின் போயும் சும்மா இருப்பார் என்று நினைக்கிறியளோ :( )..முடியல என்னால.. :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பாக இருக்கின்றது ஜஸ்ரின். பைபிளில் இருப்பதை இணைத்தவிடயங்களுக்கு, உண்மை தான் என்று சான்றிதழ் தரச் சொல்லி யாரும் கேட்டதில்லையே. நான் நடுக்கடல் போய் எடுத்தாலோ, கரையில் நின்று எடுத்தாலோ எல்லாம் ஒரே வித உப்புக் கொண்ட தண்ணி தானே..

மேலும், ஒரு சிலர் தான் இதைப் பின்பற்றுகின்றார்கள் என்பதெல்லாம் வேண்டாமே. எல்லாக் கத்தோலிக்கர்களும் இந்த வசனங்களைக் கொண்ட பைபிளைத் தான் வைத்துக் கொண்டு திரிகின்றார்கள். ஒரு புனித நூலில் கற்பனைக் கதைகள் என்பது அந்த நூலை அசிங்கப்படுத்துவது போலில்லையா? இந்தக் கதைகள் மட்டும் தான் கற்பனையா அல்லது, ஜேசு நாதர் தொடர்பானதும்......

இதற்குள் வர்ணாச்சிரமம் என இழுத்தது எதற்காக? உங்களின் இயலாமையைக் காட்டுவதற்குத் தானே? வர்ணாச்சிரமத்தை நாங்கள் பின்பற்றுகின்றோமாம். ஆனால், இவர்கள் இப்படிப் பட்ட அசிங்கங்களை வரவேற்பதில்லையாம். இதைத் தானே தினமும் காலையும், மாலையும் படித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.

சென்ற போப் இருந்த நேரம், அமெரிக்காவில் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் ஒருவர் மன்னிக்கப்பட்டார். அதற்குக் கூட, இப்படியான வசனங்கள் காரணமாக இருந்ததோ தெரியவில்லை....

[b]ஐந்து நிமிடம் பைபிளைப் படித்து விட்டு நீங்கள் கஷ்டப் பட்டதால் அதன் பின்னணி பற்றி ஒரு விளக்கம் தந்தேன். அவ்வளவே. மற்றபடி கரைத் தன்ணிக்கும் நடுத்தண்ணிக்கும் வித்தியாசம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே நான் சொன்ன பழமொழி புரியும். உங்களுக்கு "ஏறாதது" ஆச்சரியமில்லை.

இவை எப்படிப் பிறந்த கதைகள் என்று ஏற்கனவே என் பதிவில் சொல்லி விட்டேன். மீண்டும் படிக்கவும். மூட நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்து சக மனிதனைத் துன்புறுத்துவதை விட சில பாலியல் கதைகள் கொண்ட புத்தகத்தைக் கையில் காவிக்கொண்டு மனிதனாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்.

ஒரு செய்தியை உங்களால் பைபிளுடன் இணைக்க முடிகிறது. ஆனால் ஏன் வர்ணாசிரமம் உதாரணமாகக் காட்டப் பட்டது என்று புரியவில்லை. இதை நான் நம்புகிறேன். வர்ணாசிரமம் சாதியின் அடிப்படை என்றும், எனவே இந்து மத விழுமியங்களில் சாதியும் ஒன்றென்றும் நீங்கள் தான் வாதாடி வந்தீர்கள். புத்தகத்திலிருக்கிற பாலியலைப் பின்பற்றும் படி கத்தோலிக்கமோ கிறிஸ்தவமோ சொல்லவில்லை. ஆனால் "உதாரண இந்து " வான நீங்கள் சாதிவெறியை இந்து மதம் சொல்கிறது என்பதற்காகவே கண்னை மூடிக்கொண்டு பின்பற்றுகிறீகள். இப்போது புரிந்ததா? இல்லையா? விடுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம்!

இத்தனை முத்துக்கள் தேடியெடுத்த அதே பைபிளில் "உன் போதகரை அப்படியே பின் தொடராதே" என்றும் இருக்கிறது. போதகனும் பலவீனம் கொண்ட மானிடனே என்ற கருத்தில் சொல்லப் பட்டது இது. போப் மன்னித்த போதும் நியூ யோர்க் திருச்சபை பல மில்லியன் டொலர் நஷ்ட ஈடு கொடுக்க ஒப்புக் கொண்ட பிறகு தான் நீதித் துறை சட்ட நடவடிக்கையைக் கைவிட்டது. எனவே தண்டிக்கப் படாத குற்றமில்லை இது.உங்கள் சாதி வாதச் சித்திரவதைக்கு என்ன தண்டனை அல்லது நிவாரணம் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? அது தான் குற்றமேயில்லை என்பீர்களே, பிறகேன் தண்டனையும் நிவாரணமும்?

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

பைபிளில் மட்டும் இப்படியான கதைகள் உள்ளனவா? ஏன் சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் புகழ்பாடும் திருவிளையாடற் புராணத்தில் (மாபாதகம் தீர்த்த படலம்)தாயுடன் சயனித்த பார்ப்பனன் ஒருவனுக்கு சிவபெருமான் முக்தியழித்ததாக இருக்கிறது. அதையும் கோயில்களில் வைத்திருக்கிறார்கள், படிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது யஸ்ரின். நான் பைபிளை 5 நிமிடம் படித்தேனா, 10 நிமிடம் படித்தேனா என்பதா இங்கு பிரச்சனை. இப்படிப்பட்ட அழுக்குகளின் உறைவிடம் பைபிள் என்பதை ஏற்றுக் கொள்வதற்கு ஏன் வெக்கப்படுகின்றீர்கள்? நான் எல்லாத் தண்ணியும் ஒன்று என்று சொன்னது, எங்கு எடுத்தாலும் பைபிளில் அசிங்கம் தான். அதற்கு நியாயம் தேவையில்லை என்று. புரியாதவர்களுக்கு நான் என்ன செய்ய..

உங்களுக்கு இப்படிப்பட்ட கீழ்தரமான சிந்தனைகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் இந்து மதத்தை இழுத்து இன்பம் காண்கின்றீர்கள். ஏன் கிறிஸ்தவர்களிடம் மூடநம்பிக்கையில்லையா? கறுப்பினமாகப் பிறந்தவர்கள் சாத்தானின் புதல்வர்கள் என்று சொல்லித் தானே கொத்தடிமையாக வைத்தீர்கள். ஹட்லர் என்பவன் யூதர்கள் தான் ஜேசுவைக் கொன்றார்கள் என்று சொல்லி இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவிக்கவில்லையா???

இப்படிப்பட்ட பாலியல் கதைகளைத் தாங்கியிருப்பது தப்பில்லை என நியாயம் சொல்கின்றீர்கள். இது வெறுமனே பாலியல் கதையில்லை. அசிங்கம்... சொந்த சகோதரி கூடவும், தந்தை கூடவும் வைத்திருப்பது சாதாரண பாலியல் கதையா? என்ன நியாயம் சொல்கின்ற உங்களுக்கு கொஞ்சம் கூட அருவருப்பாக இல்லையா??

வர்ணாச்சிரம்ம சாதியை அடிப்படையாகக் கொண்டதல்ல, அதில் இருக்கின்ற 4 சாதிகளும் தொழில் அடிப்படையிலாது என்பதை ஏற்கனவே இங்கே நிருபிக்கப்பட்டிருக்கின்றத

பைபிளில் மட்டும் இப்படியான கதைகள் உள்ளனவா? ஏன் சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் புகழ்பாடும் திருவிளையாடற் புராணத்தில் (மாபாதகம் தீர்த்த படலம்)தாயுடன் சயனித்த பார்ப்பனன் ஒருவனுக்கு சிவபெருமான் முக்தியழித்ததாக இருக்கிறது. அதையும் கோயில்களில் வைத்திருக்கிறார்கள், படிக்கிறார்கள்.

தூயவன் இந்தக் கருத்தை நீங்கள் கவனிக்கவில்லையா?

உங்கள் பதிலை அறிய ஆவலாயிருக்கிறேன்.

ஜேசுநாதருக்குத் தமிழ் புரியத் தான் வேண்டும். ஏனென்றால் அவர் பேசிய மொழி இப்போது இல்லை. வேறு வழியில்லாமல் எல்லாமொழியிலும் மாற்றினார்கள். அவர்களின் அந்த வெட்கக்கேட்டை எல்லா மொழிக்கும் மாற்றிவிட்டோம் என்று மறைத்துப் பெருமையடிக்கின்றார்கள்.

ஆனால் கிறிஸ்தவ சமயத்திலோ பௌத்த சமயத்திலோ அல்லது இஸ்லாமிய சமயத்திலோ சமயக் கல்வியைக் கற்றுத் தேர்கின்ற யாரும் பூசகர்களாக வர முடியும். ஆனால் இந்து சமயத்தில் மட்டும் பிறப்பிலே பிராமணனாக இருந்தால் மட்டும் தான் அந்தத் தகுதி இருக்கும்.

அதிலும் வேடிக்கை என்னவென்றால் இந்தப் பிராமணர்கள் எல்லாத் தொழிலும் செய்ய முடியும்?

அதிலும் இந்து மதத்தை இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இவர்களுக்குக் கிடையாது.

மாறாக இந்துக்களை அழிக்கின்ற கூட்டங்களுக்குத் துதிபாடித்திரிவார்கள்......

அடுத்ததாக பகுத்தறிவுடன் சிந்திக்கின்ற ஒருவன் எல்லாம் தெரிந்த கடவுளுக்குத் தமிழ் தெரியாதா என்று கேட்பதில் நியாயமில்லையா?

கவிஞர் காசி ஆனந்தன் காஞ்சி சங்கராச்சாரியாரை கிண்டல் செய்து (தமிழில் பூசை செய்ததால் கோயில்களில் தீட்டுப் பட்டுவிட்டதென்ற கருத்துக்கு எதிராக) எழுதிய கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது

நீ தான் சொன்னாய்

கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்று

நீ தான் சொல்கிறாய்

கடவுளுக்குத் தமிழ் தெரியாது என்று

நீ அன்று சொன்னது சரியா

இன்று சொல்வது சரியா

இரண்டும் சரியென்றால்

நீயென்ன குள்ள நரியா?

இந்து மதம் வழிபாடு அனைத்தும் புராணக் கதைகளின் அடிப்படையில் நடைபெறுகிறது. புராணக் கதைகளுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றால், இத்தனை தெய்வங்கள் இந்து மதத்தில் வந்திருக்காது.

நான் அடிக்கடி சொல்வது உண்டு. மதங்கள் அனைத்துமே குப்பைகள். ஒரு குப்பையில் இருந்து இன்னொரு குப்பைக்கு போகாதீர்கள். குப்பைகளை விட்டு வெளியே வாருங்கள்.

கிறிஸ்தவத்தில் உள்ள அழுக்குகளை தந்த தூயவனுக்கு நன்றி.

இப்பொழுது இந்து மதத்தைப் பார்ப்போம்.

இந்து மதத்தில் படைப்பின் தத்துவத்தை பரப்பிரம்மம் என்று சொல்வார்கள். இந்தப் பரப்பிரம்மம் முதலில் பவானி என்ற பெண் தெய்வத்தை உருவாக்கியது. பவானிக்கு சிவன், விஸ்ணு, பிரம்மா என்னும் மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். பவானி மூன்று பெண்களாக மாறி இந்த மூவருக்கும் மனைவியானாள். அதாவது தாய் தன்னுடைய பிள்ளைகளுக்கு மனைவியானாள்.

இன்னும் ஒன்று

பிரம்மாவிற்கு பிறந்த பெண்தான் சரஸ்வதி. சரஸ்வதி மிகவும் அழகாக இருந்தாள். தன்னுடைய மகளான சரஸ்வதியைக் கண்ட பிரம்மாவிற்கு ஆசை உருவாகியது. சரஸ்வதியை துரத்திக் கொண்டு ஓடினான். சரஸ்வதி சிவனிடம் தஞ்சம் புகுந்தாள். பின்பு சிவன் சரஸ்வதியை சமாதானப்படுத்தி பிரம்மாவிற்கு மணம் செய்து வைத்தார்.

இங்கே தந்தை மகளுக்கு கணவன் ஆனான்.

மதங்கள் என்பவைகள் மனிதன் மூடர்களாக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்டவை. அறிவுள்ள மனிதர்கள் அவைகளை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

முத்திப்போச்சு நிலமை கவலைக்கிடம் :)

வர்ணாச்சிரம்ம சாதியை அடிப்படையாகக் கொண்டதல்ல, அதில் இருக்கின்ற 4 சாதிகளும் தொழில் அடிப்படையிலாது என்பதை ஏற்கனவே இங்கே நிருபிக்கப்பட்டிருக்கின்றத
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மதங்களுக்குள்ளும் நல்லது கெட்டவை இரண்டும் உண்டு. இந்து மதத்துக்குள் மட்டும் தான் கெட்டது உள்ளதாக இல்லை. மதம் என்பது மனித உருவாக்கம். அறிவியல் கல்வி அறிவு வளரமுதல் இருந்த ஆதிகால மனித நடத்தைப் பிறழ்வுகள் புராண வடிவில் அதில் செருகப்பட்டு பிரதிபலித்திருப்பது... மதம் ஒட்டு மொத்தமாகக் கெட்டது என்பதாகாது. மதங்கள் இன்றும் மனிதனுக்கு தேவையான நல்ல விடயங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றை இனங்காட்டிக் கொள்வதோடு.. சீர்கேடுகளை அகற்றி சீர்படுத்திக் கொண்டு செல்வதை விடுத்து.. மத எதிர்ப்பு பாசிசத்தை கொட்டுவது.. குறிப்பாக இந்து மதத்தை நோக்கி மட்டும் செய்வதை தவிர்க்க வேண்டும்..!

பகுத்தறிவு என்று எவனும் எவளுடனும் கூடலாம் களிக்கலாம்.. பாட்டன் பேத்தியோடும் வாழலாம் என்று வாழ்வதிலும்.. மதங்கள் சொல்லும் சீர்கெட்டவற்றை அகற்றிவிட்டு நல்ல பல விடயங்களைப் பின்பற்றுவது எவ்வளவோ மேல். அது மனித நாகரிகம் என்பது ஒரு மனித ஒழுக்கத்துக்கு வகை செய்து வளமான மனித இனம் தொடர்ந்து உலகில் நிலைத்திருக்க உதவும்..! :)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.