Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணாநிதியிடமிருந்து இலங்கைத் தமிழர் எதிர்பார்ப்பது....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியிடமிருந்து இலங்கைத் தமிழர் எதிர்பார்ப்பது....

ஜ20 - யுpசடை - 2008ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ

இலங்கையில் சமாதானப் பேச்சுக்களை இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும் உலகத் தமிழர்களின் மூத்த தலைவருமான மு.கருணாநிதி யோசனை தெரிவித்திருக்கிறார். இலங்கைத் தீவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மோதலில் ஈடுபடும் தரப்பினரிடையே பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை இந்திய மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்பதும் சமாதானப் பேச்சுகள் பிரயோசனமானவையாகவும் பொருத்தமான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதாகவும் அமைய வேண்டும் என்பதும் கலைஞரின் யோசனையின் பிரதான அம்சமாகக் காணப்படுகிறது.

சமாதான அனுசரணையாளரான நோர்வே கடந்த வாரம் இலங்கையின் சமாதான நடவடிக்கைகளில் இந்தியா தீர்க்கமான பங்களிப்பை வழங்கும் என்று உறுதிபடத் தெரிவித்திருந்த நிலையில் இப்போது தமிழக முதல்வரும் மத்திய அரசாங்கத்திடம் இந்த அழைப்பை விடுத்திருக்கிறார். 1999 இன் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பிலும் விடுதலைப் புலிகளின் இணக்கப்பாட்டுடனும் சமாதான அனுசரணையாளராக நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒஸ்லோ தற்போது முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருக்கும் சமாதான நடவடிக்கைகளுக்கு உயிரோட்டம் அளிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்ற அதேசமயம் இப்போது அந்தப் பொறுப்பை இந்தியாவிடமே மீண்டும் ஒப்படைக்கும் விதத்தில் கருத்துத் தெரிவித்திருக்கிறது. தெற்காசியப் பிராந்தியத்தின் களநிலைமைகளை நன்கு உணர்ந்திருப்பதன் அறிகுறியாகவே அதாவது இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் ஆசீர்வாதமின்றி எதுவுமே நடக்கப்போவதில்லை என்பதை முழுமையாக விளங்கிக் கொண்டதன் விளைவாகவே நோர்வே தற்போது தீர்க்கமான பங்களிப்பை புதுடில்லி வழங்கும் என்று கூறியிருக்கிறது.

ஒஸ்லோவில் கடந்த 10இ 11 ஆம் திகதிகளில் இடம்பெற்ற தெற்காசியாவில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான மாநாட்டைத் தொடர்ந்தே இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் மீண்டும் சர்வதேச அரங்கில் சிறியளவில் முனைப்புக் கொண்டிருக்கின்றன என்ற சிறுதுளி நம்பிக்கை முளைவிட்டிருக்கின்றது. இதற்கு வலுவூட்டுவது போன்று தமிழக முதல்வரும் யோசனை தெரிவித்திருக்கின்றார். நோர்வேயில் இடம்பெற்ற மாநாடு தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம்இ வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடனும் விளக்கமாக எடுத்துக்கூறியிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் வைகோஇ இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் வேதனைகளையும் அவலங்களையும் விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். வைகோவின் கருத்துகளை செவிமடுத்த இந்தியப் பிரதமரும் இலங்கைத் தமிழரின் கஷ்டங்களை இந்தியா அலட்சியப்படுத்தி விடமுடியாது என்று கூறியிருக்கிறார்.

1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து இலட்சக்கணக்கான தமிழர்கள் புகலிடம் தேடி தமிழ்நாட்டில் தஞ்சமடைந்ததைத் தொடர்ந்து இலங்கையின் இன நெருக்கடியில் நேரடியாக புதுடில்லி தலையிட்டது. ஆனாலும்இ வடக்கு கிழக்கை தமது பாரம்பரிய தாயகமாகக் கொண்ட தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான முழுமையான உத்தரவாதத்தை இந்திய நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்கத் தவறி விட்டதாகவே கருத முடிகிறது. தமிழ் மக்களின் முழுமையான இணக்கப்பாடின்றியே கொழும்புடன் 1987 இல் புதுடில்லி ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அந்த ஒப்பந்தத்தில் முக்கியமாக விதந்துரைக்கப்பட்ட எந்தவொரு முக்கியமான அம்சங்களும் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என்பது யாவரும் அறிந்ததொன்றேயாகும். யாவற்றுக்கும் மேலாக அந்த ஒப்பந்தத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த தமிழர்களின் வரலாற்று ரீதியான வதிவிடமான வடக்குஇ கிழக்குப் பிராந்தியம் இப்போது துண்டாடப்பட்டுவிட்டது. அதேசமயம் கிழித்தெறியப்பட்ட பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த அதிகாரப் பரவலாக்கல் அம்சங்கள் கூட இலங்கை - இந்திய உடன்படிக்கையின் கீழான தீர்வுத் திட்டத்தில் இல்லையென அச்சமயம் தமிழ்த் தரப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன.

இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த இந்தியா ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டுமென்ற கருணாநிதியின் யோசனை வரவேற்கத்தக்க விடயமேயானாலும் புதுடில்லி நிர்வாகமானது இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களுக்கு அப்பால் தற்போது அதி முக்கியமான விடயமாக தோற்றம் பெற்றிருக்கும் வர்த்தக நலன்களுக்கு பாதிப்பின்றி பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்குமா என்பதே தமிழ் மக்கள் மனதிலுள்ள பரவலான சந்தேகமாகும். பக்கத்து வீட்டுக்காரன் உதவாவிடில் மற்றைய அயலவர்கள் எமது நலன்களை கவனிக்க தயாராக இருக்கின்றனர் என்ற செய்தியையே கொழும்பு மீண்டும் மீண்டும் விடுத்து வருகிறது. இந்நிலையில் புதுடில்லி நிர்வாகம் வர்த்தக நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தனது காய்களை நகர்த்துவதாக தென்படுகிறது. இதனால் புதுடில்லியின் கண்ணோட்டத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நலன்கள் இரண்டாம் பட்சமான நிலைமைக்கே தள்ளப்படும் நிலைமையே காணப்படுகிறது.

இதனை மாற்றியமைத்து இலங்கையில் தமிழ் மக்கள் சமவுரிமைகளுடன் வாழ்வதற்குரிய உத்தரவாதத்தையும் ஏற்பாடுகளையும் இந்தியா மேற்கொள்வதற்கு அதனை வழிநடத்தக்கூடிய அரசியல் அதிகார பலம் தற்போது தமிழக முதலமைச்சர் கருணாநிதியிடம் உள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தில் கலைஞரின் தி.மு.க. பலம் வாய்ந்த பங்காளியாக இருக்கும் நிலையில் இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வை பெற்றுக் கொள்வதற்கு அவர் தனது பலத்தையும் செல்வாக்கையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதே இலங்கையிலும் உலகின் பல பாகங்களிலுமுள்ள தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். தமிழ் நாட்டிலுள்ள ம.தி.மு.கஇ பாட்டாளி மக்கள் கட்சிஇ விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்காக உரத்துக்குரல் கொடுத்துவரும் நிலையில் ஹநானும் ஒருவன்' என்ற ரீதியில் கருத்துக்கள் யோசனைகளை தெரிவிப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் தமது இருப்பே கேள்விக்குறியாகியிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க முழு அளவிலான செயற்பாட்டில் கலைஞர் ஈடுபட வேண்டும். இதனையே இந்த முதுபெரும் தலைவரிடமிருந்து தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நன்றி:- தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

போர்நிறுத்த ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டதுடன் அனுசரணையாளர் பொறுப்பிலிருந்த நோர்வே ஓரங்கட்டப்பட்டதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு அரசுகளும் தனிநபர்களும் போட்டி போட்டு கிளம்பிவிட்டார்கள். பல்லுப்பிடுங்கப்பட்ட பாம்பு நோர்வேயும் உலக நாடுகள் மத்தியில் தனது மரியாதையைக காப்பாற்றிக்கொள்ள பகீரத பிரயத்தனம் செய்து அமைதிப்புறா வேடமிட்டு நாடகமாடுகிறது. ஈழத்ததமிழர் போராட்டத்தின் மீது இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் பார்வை இன்று சற்று மாற்றமடைந்து காணப்படுவது போல தோற்றமளித்தாலும் இந்த மணியோசைக்குப்பின் வருவது பால் தரும் பசுமாடா அல்லது முட்டிமோதும் காளைமாடா என்பது போகப் போகத்தான் தமிழருக்குப் புரியும். ராஜீவ் காந்தி விவகாரத்தில் ஈழத்தமிழினத்தை இந்திய அரசு மறந்து மன்னித்துவிட்டதென்ற தோரணையில் இந்தியாவின் காய் நகர்த்தல் அமைந்தாலும் அல்லது ஒருபடி முன்னேபோய் தமிழர் போரட்டத்தை அங்கீகரித்து விடுதலைப்புலிகள் மேலுள்ள தடையை நீக்கி மீண்டும் உறவுகளை ஏற்படுத்திக்கொண்டாலும் இந்தியா ஈழத்தமிழர் நலன்களை ஏற்றுக்கொண்டு முற்றுமுழுதாக நிறைவு செய்யும் என்று நம்பி நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்படும் தீர்வுகளில் ஈழத்தமிழர்களின் உரிமை, சுதந்திரம் எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் சுயநலம் தான் முக்கியப்படுத்தப்பட்டு அதற்கு ஈழத்தமிழர் வழைந்து கொடுக்கவேண்டும் என்றும் பிற்காலத்தில் நிர்ப்பந்திக்கப்படுவர். இந்திய தமிழ் அரசியல்வாதிகளும் இந்தியா தலையிட வேண்டும் என்று ஓலமிடுவதையும் நிறுத்தவேண்டும். இந்தியா எப்போதும் ஈழத்தமிழர் பிரச்சினையில் தலையிட்டுக்கொண்டுதான் வந்துள்ளது எனவே இந்தியாவைத் எமது விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்வது தான் புத்திசாலித்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா வரவேணும் வரவேணும் எண்டு எதிர்பார்க்கிறத விட அது வந்து எங்களுக்கு என்னத்தைப் பெற்றுத் தரவேணும் எண்டிறதுதான் முக்கியம் பாருங்கோ.

பெரிய இடமெண்டு பிச்சைக்குப் போகக் கரியை வழிச்சுக் கையில வைச்சானாம் எண்டு ஒரு பழமொழியிருக்குது. இந்தியாவைப் பொறுத்த வரையில ஈழத்தமிழருக்கு அது செய்ததும் இதைத்தான் இனிமேற் செய்யப் போறதும் இதைத்தான். ஆனபடியால் நாங்கள் சும்மா இந்தியா தரப்போற பிச்சையை நம்புறது அவ்வளவு புத்திசாலித்தனமி;ல்ல. எங்கட போராட்டத்தை அங்கீகரிக்கவேணும். போராளியள பகையாளியளாப் பார்க்கக்கூடாது. சிறீலங்காவுக்கு ஈழத்தமிழினத்தை அழிக்கச்சொல்லி ஆயதத்தைக் குடுத்துத் தூண்டிவிடுற செய்கையை நிறுத்த வேணும். இலங்கைக் கடற்படையை மறைமுகமாக ஏவி தமிழ் மீனவர்களைக் கொல்லுறதை நிறுத்த வேணும் எண்ட பல கோரிக்கைகளில பொருத்தமானதை இந்திய மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டியதுதான் இப்போதைக்குத் தமிழக அரசு செய்ய வேண்டிய வேலை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போர்நிறுத்த ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டதுடன் அனுசரணையாளர் பொறுப்பிலிருந்த நோர்வே ஓரங்கட்டப்பட்டதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு அரசுகளும் தனிநபர்களும் போட்டி போட்டு கிளம்பிவிட்டார்கள். பல்லுப்பிடுங்கப்பட்ட பாம்பு நோர்வேயும் உலக நாடுகள் மத்தியில் தனது மரியாதையைக காப்பாற்றிக்கொள்ள பகீரத பிரயத்தனம் செய்து அமைதிப்புறா வேடமிட்டு நாடகமாடுகிறது. ஈழத்ததமிழர் போராட்டத்தின் மீது இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் பார்வை இன்று சற்று மாற்றமடைந்து காணப்படுவது போல தோற்றமளித்தாலும் இந்த மணியோசைக்குப்பின் வருவது பால் தரும் பசுமாடா அல்லது முட்டிமோதும் காளைமாடா என்பது போகப் போகத்தான் தமிழருக்குப் புரியும். ராஜீவ் காந்தி விவகாரத்தில் ஈழத்தமிழினத்தை இந்திய அரசு மறந்து மன்னித்துவிட்டதென்ற தோரணையில் இந்தியாவின் காய் நகர்த்தல் அமைந்தாலும் அல்லது ஒருபடி முன்னேபோய் தமிழர் போரட்டத்தை அங்கீகரித்து விடுதலைப்புலிகள் மேலுள்ள தடையை நீக்கி மீண்டும் உறவுகளை ஏற்படுத்திக்கொண்டாலும் இந்தியா ஈழத்தமிழர் நலன்களை ஏற்றுக்கொண்டு முற்றுமுழுதாக நிறைவு செய்யும் என்று நம்பி நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்படும் தீர்வுகளில் ஈழத்தமிழர்களின் உரிமை, சுதந்திரம் எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் சுயநலம் தான் முக்கியப்படுத்தப்பட்டு அதற்கு ஈழத்தமிழர் வழைந்து கொடுக்கவேண்டும் என்றும் பிற்காலத்தில் நிர்ப்பந்திக்கப்படுவர். இந்திய தமிழ் அரசியல்வாதிகளும் இந்தியா தலையிட வேண்டும் என்று ஓலமிடுவதையும் நிறுத்தவேண்டும். இந்தியா எப்போதும் ஈழத்தமிழர் பிரச்சினையில் தலையிட்டுக்கொண்டுதான் வந்துள்ளது எனவே இந்தியாவைத் எமது விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்வது தான் புத்திசாலித்தனம்.

எனவே கருணாநிதியை வைத்து ஏன் விடுதலைப்புலிகளோடு தோளோடுதோள் கொடுக்கும் தமிழ்நாட்டுத்தலைவர்களை வைத்தும் காய்கள் நகர்த்தப்படலாம்

என்னதான் காய்கள் நகர்த்தப்பட்டாலும் தலைவரின் கை ஓங்கியறையும்வரைதான் உலகம் சமாதானம்பற்றி கத்தும்

எனவே தலைவரின் கையைப்பலப்படுத்துதலே தமிழரின் பேரம்பேசும் ஆற்றலை கூட்டும்

இல்லாவிட்டால்????

கழுதை தேய்ந்து கடடெறும்பு என்பதுகூட கனவுதான்????

என்னைப்பொறுத்தவரை

எமது விடுதலைப்போராட்டத்தின் அடுத்தகட்டநகர்வுகள் ஆரம்பித்திருப்பதாகவே தெரிகிறது

இதில் நாம் விரும்புகிறோமோ இல்லையோ இந்தியா அதற்குள் வராமல் விடாது

இது விடுதலைப்போராட்டத்தின் அடுத்தகட்டநகர்வுகள

விடுதலைப்போராட்டத்தின் அடுத்தகட்டநகர்வுகள் ஆரம்பித்ததற்கான காரணம்களம்

களத்தில் தற்போது மீண்டும் சமபலபடைநிலை ஏற்பட்டுள்ளது என்பதை சர்வதேசம் மீண்டும் உணரமுடிவதால் இந்த அடுத்தகட்டநகர்வுகள் ஆரம்பித்துள்ளன.

எனவே கருணாநிதியை வைத்து ஏன் விடுதலைப்புலிகளோடு தோளோடுதோள் கொடுக்கும் தமிழ்நாட்டுத்தலைவர்களை வைத்தும் காய்கள் நகர்த்தப்படலாம்

என்னதான் காய்கள் நகர்த்தப்பட்டாலும் தலைவரின் கை ஓங்கியறையும்வரைதான் உலகம் சமாதானம்பற்றி கத்தும்

எனவே தலைவரின் கையைப்பலப்படுத்துதலே தமிழரின் பேரம்பேசும் ஆற்றலை கூட்டும்

இல்லாவிட்டால்????

கழுதை தேய்ந்து கடடெறும்பு என்பதுகூட கனவுதான்????

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எப்போது இலங்கைப் பிரச்சினையில் தலையிடாமல் இருந்தது ? தன்னால் ஆன சகலதையும் செய்து பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது ? தனது காட்டுமிராண்டி ராணுவத்தை ஈழத்திற்கு அனுப்பி நரவேட்டையாடியதிலிருந்து இன்று சிங்களப் பேரினவாதத்திற்கு முண்டு கொடுப்பது வரை சகல அநியாயங்களையும் அது செய்துதானே வருகிறது ? கருனானிதி ஏதோ இந்தியா இவ்வளவு காலமும் பாராமுகமாக இருந்தது போலவும், இனிமேல்த்தான் அது எமது பிரச்சனையில் தலையிட வேண்டும் என்றும் கேட்பது இவ்வளவு காலமும் ஈழத்தமிழருக்கெதிராக இந்தியா செய்து வரும் அட்டூழியங்களை மூடி மறைக்கும் செயல்.

அவர் செய்ய வேண்டியதெல்லாம் இந்தியாவின் சகல சகுனி வேலைகளையும் நிறுத்தச் சொல்வதுதான், ஈழத்தையும் அதன் விடுதலைக்கான போராட்டத்தையும் அதன்பாட்டில் விட்டுவிட்டு இந்தியாவை ஒதுங்கிக்கொள்ளக் கேட்பதுதான். அதை விடுத்து இந்தியா தலையிட வேண்டுமென்று கேட்பதெல்லாம் உழகத்தமிழரின் தலைவர் என்று தன்னைத்தானெ சொல்லிக்கொள்ளும் ஒருவர் செய்யக்கூடிய செயல் அல்ல. அவரிடம் நீங்களும் எங்கள் அண்ணன் வைக்கோவைப்போல் போராடுங்கள் என்று கேட்கவில்லை, அவர் முண்டு கொடுத்து தக்கவைத்திருக்கும் சோனியாவின் ஆட்சி செய்யும் பாதகங்களையாவது நிறுத்தச்சொல்லிக் கேளுங்கள் என்பதுதான்.

இதை அவர் செய்யப்போவதில்லை. தனது ஆசனத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், பரம வைரியான ஜெயலலிதாவுடன் மல்லுக்கு நிற்கவுமே அவருக்கு நேரம் சரியாகிவிடும்.

"எவரோ எல்லாம் தம்மைத்தானே உலகத் தமிழரின் தலைவர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் வன்னியில் காட்டுக்குள் வெய்யிலிலும், மழையிலும் தமிழருக்காய் தனது உயிரையும் துச்சமென மதித்து களத்தில் நிற்கிறானே எங்கள் அருமைத்தம்பி பிரபாகரன், அவந்தான் உலகத் தமிழரின் உண்மையான தலைவன்'- அண்ணன் வைக்கோ !

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசியல்வாதிகளின் பேச்சும் நடவடிக்கையும் இந்தியா தற்போது ஈழத்தமிழர் விவகாரத்தில் ஒதுங்கி நிற்கிறது என்ற தோறணையிலேயே அமைந்திருப்பது விசனத்துக்குரியது. மாறாக எமது பிரச்சினையில் இந்தியா தன்னால் முடிந்த தலையீடுகளை எப்போதுமே செய்துகொண்டுதான் வந்திருக்கிறது. இந்தியா விலகியிருப்பதுபோல் பாவனை செய்வது ஈழத்தமிழர் விவகாரத்தில் தலையிடாமல் இருக்கவேண்டுமென்பதற்கல்ல தன் தலை இடம்மாறாமல் இருக்கவேண்டுமென்பதற்காகவே.

தமிழரின் தாயகத்தையும் சுயநிர்னய உரிமையையும் இந்தியா அங்கிகரிக்காத வரை.. எதுவுமே ஆகப்போறது இல்லை...

இந்தியா புலிகளை மன்னிக்கிறது இருக்கட்டும் .. முதலில் புலிகள் இந்தியாவை மன்னிக்கவேண்டும் அல்லது நம்ப வேண்டும்...

குறந்த பட்சம் தமிழ் மக்களாவது இந்தியாவை நம்ம வேண்டும்..

மன்னிக்கவும் நான் சங்கரி கோஸ்ட்டியை தமிழர் கூட்டத்தில் சேர்க்கவில்லை...

தமிழரின் தாயகத்தையும் சுயநிர்னய உரிமையையும் இந்தியா அங்கிகரிக்காத வரை.. எதுவுமே ஆகப்போறது இல்லை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் தாயகத்தையும் சுயநிர்னய உரிமையையும் இந்தியா அங்கிகரிக்காத வரை.. எதுவுமே ஆகப்போறது இல்லை...

சரி

மணியை யார் கட்டுவது

எல்லோரும் சும்மா சங்கு ஊதிக்கொண்டிருந்தால் இந்தியா மசியுமா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.