Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் காலை எங்கு ஊன்றி வச்சு இருக்கிறீங்கள் என்று ஒருக்கால் தலையைக் குனிஞ்சு பாருங்கோ.

தம்பி ராசா நான் நல்லா குனிஞ்சுதான் பார்க்கிறன். அதில பிழையாக எதுவும் இருப்பதாக தெரியவில்லை. முதலில் ஆங்கில முறைத் தட்டெழுத்துக்கு எதிராக பரவலான கருத்துக்கள் வெளியில் பல இடங்களில் நடைபெறுகின்றன. தனிய குனிந்து மட்டும் பார்க்காமல் நிமிர்ந்தும் பாருங்கள். அம்மா என எழுத amma என உச்சரிப்பதன் அபத்தத்தை புரிந்து கொள்ளுங்கள். அதனை கைவிடுங்கள். கீமானில் பாமினி வகையுள்ளது. அதாவது தமிழிலேயே விசைப்பலகையில் எழுத்துக்கூட்டி எழுதுவது. அல்லது தமிழ் 99 முறையுள்ளது. அதனைப் பயன்படுத்துங்கள்.

முதலில் உங்களை போலவே எல்லாரும் வெளியேயுள்ளார்கள் என்ற - - - - --- தன சிந்தனையை நிறுத்துங்கள்.

ஆங்கிலத்தை போலவே வெவ்வேறு நாடுகளிலுள்ளவர்களும் அந்த நாட்டு மொழியை தமிழில் கலந்து எழுதுவோம் என்றால் என்னாகும்.

திணிப்புக்கள் மூலம் மொழி வளரப்போவாதில்லை. மாறாக அது அழிவையே நாடிச்செல்லும்..

நல்லது - ஈழத்தில் தனித்தமிழில் பெயர் வைக்கச்சொல்லி அறிவுறுத்தப்பட்டது. கட்டாயமாக்கப்பட்டது. அது அழிந்து விட்டதா ?

  • Replies 100
  • Views 11.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பழைய யாழ்க்களம் பாமினி முறையில் தான் இயங்கியது. இந்தியத் தமிழர்கள் தான் எழுத்துக் கூட்டி எழுதினார்கள். ஈழத்தில் பலர் பாமினி மூலம் தான் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

நிர்வாகம் "ஹாய்" "கூய்"க்கு அனுமதித்தால் நான் எனி வரும் காலங்களில் எனக்குத் தெரிந்த பிரான்சு, மற்றும் இத்தாலியச் சொற்கள் கலந்து தான் எழுதுவேன்.

நீங்கள் காலை எங்கு ஊன்றி வச்சு இருக்கிறீங்கள் என்று ஒருக்கால் தலையைக் குனிஞ்சு பாருங்கோ.
அதற்காக அவர்களின் வாலைப் பிடித்துக் கொண்டு திரியவேண்டுமோ? தமிழருக்குள் கதைக்கின்றபோதும் ஆங்கிலச் சொற்கள் தேவை என்றால் எங்கே போய் முட்டுவது. அவர்கள் குனிந்து பார்த்தால் செவ்விந்தியர்கள் தான் தெரிவார்கள்..
  • கருத்துக்கள உறவுகள்

தமிங்கிலம் வளர்க்க பலர் பாடுபடுவது போலுள்ளது.. இதற்குப் பதிலாக சிங்களம் படித்து சிங்களத்தை வளர்க்கலாம்.. சொர்க்கத்தீவில் சுதந்திரமாக இருக்கலாம்.. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே ஒருசில கருத்துக்கள உறவுகள் தாங்கள் இங்கே அங்கத்தவராவதிற்கு எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மறந்துவிட்டார்கள் போலிருக்கின்றது.இருப்பினும் வாதாடுவது தப்பில்லை என்பது என் கருத்து. :)

நன்றி ஐயா நன்றி.

"ஈவிரக்கமின்றி" முற்றுமுழுதாக நீக்கப்படும்.

தூய தமிழைப் பேண நீங்கள் தொடர்ந்திருக்கும் இந்த முயற்சி என்னை மகிழ்விக்கிறது.

முடிந்தவரை நானும் "தமிழிலே" எழுத முயற்சிக்கிறேன்.

எழுதுறதே ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா. ம்ம்ம்.

நல்லது. தொடருங்கள்.

உங்கள் அனைவரினதும் தமிழ் பற்றினை பார்க்க புல்லரிக்கின்றது. உங்களிற்கு தெரிந்த செந்தமிழில் இனிவரும் காலங்களில் ஒருவரை ஒருவர் அறுத்து தமிழை வளர்த்துக் கொள்ளுங்கள். நானும் நேரம் கிடைக்கும்போது உங்களைப் பின்பற்றி உங்கள் பணி தொடர்கின்றேன். அடிப்பது அரட்டை அதை செந்தமிழில் தான் அடிப்போம் என்று ஒற்றைக்காலில் நிற்கின்றீர்கள். நானும் முயற்சி செய்கின்றேன்.

"ஐஸ்" பழம் எண்டதுக்கு என்ன தமிழ் சொல்லுங்கோ...??

ரேடியோவை கண்டு பிடிச்ச மார்க்கோணி அதுக்கு ரேடியோ எண்டு பேர்வைக்க அதுக்கு தமிழர் ஓசியையில், மேட் இன் தமிழர்நாடு எண்டு மேல எழுதி அதுக்கு வானொலி எண்டு பெயர் வைச்சது போல இல்லாமல் இருந்தால் எல்லாம் நல்லது...

  • கருத்துக்கள உறவுகள்

"ஐஸ்" பழம் எண்டதுக்கு என்ன தமிழ் சொல்லுங்கோ...??

...

முகமாலையில் களமுனைப் போராளிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி வாழ் மக்கள் சமைத்த உணவு, உலர் உணவு, குளிர்களி என்பவற்றை வழங்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது ..........

http://www.puthinam.com/full.php?2b3dUW04a...4iZf20cc3si4Bde

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு விதமான குழப்பங்கள் எம்மிடையே இருக்கின்றன.

பெயர் வைத்தால் அதை மொழி மாற்றம் செய்யலாமா என்பது தான் பிரச்சனை. தயாண்ணா சொன்ன "ஐஸ்"பழம் என்பது கூட அச்சந்தேகத்தில் எழுந்ததாகவே நினைக்கின்றேன்.

உண்மையில் பொதுப்பெயர், தனிப்பெயர் என இரண்டு வேறுபாடுகள் உண்டு என்பதே சரியானது.

இப்போது தொலைக்காட்சிப் பெட்டியை எடுத்தால், அது "சொனியின் தொலைக்காட்சிப் பெட்டி" என்பதில் தொலைக்காட்சிப் பெட்டி என்பது பொதுவான பெயர். எந்த நிறுவனம் அதைத் தயாரித்தாலும் அப்பெயர் வந்து தான் ஆகவேண்டும். அப்படித் தான் அழைக்கப்படும். அதை மாற்றலாம். . ஆனால் சொனி என்பது ஒரு தனியாருடைய நிறுவனம். அதை எம்மால் மாற்றிட முடியாது.

எனவே வேறுபாடுகளைப் புரிந்து ஒத்துழையுங்கள்.

தமிழில் பூரணமான தமிழ்ச் சொற்கள் இல்லை என்பது உண்மை தான். ஆனால் அதைக் கேலி பண்ணிக் கொள்வது சரியானதா? அந்தத் தேவைகளை நாம் தான் பூர்த்தி செய்தாகவேண்டும்.

தவிர்க்க முடியாத இடங்களில், ஆங்கிலச் சொற்களைப் பாவிக்கின்றபோது, மேற்கோள் குறிக்குள்(எடுத்துக்காட்டு: "ஐபோன்") என்று போட்டு எழுதுவது நல்லது என்பதே என் பரிந்துரை.

கடைப்பிடிப்பது முதலில் கடினமாகத் தான் இருக்கும். என்னால் கூட முடியுமா தெரியவில்லை. ஆனால் அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு என்பது அவசியம்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

"கொம்பியூட்டர் என்ற சொல்லை நீங்கள் பிறக்கும்போதே பழகிக் கொண்டு வந்தீர்களா? பிறகு தானே தெரிந்து கொண்டீர்கள். அவ்வாறு கணனி என்பதையும் அறிந்து கொள்வது தானே? தமிழில் போதுமான தமிழ் சொற்கள் இல்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்று தான். ஆனால் இருப்பதைப் பாவிக்கமட்டும் ஏன் முடியாமல் போகின்றது".

தூயவன் நீங்கள் சரியான முறையில் , ஆக்கபூர்வமான , நிர்வாகத்தினரின் எதிர்பார்ப்புடன் ஒத்துப்போகக்கூடிய முறையில் கருத்துக்களை முன்வைக்கின்றீர்கள், பாராட்டுக்கள்.

தமிழ்த்தேசியம் என்றால் என்ன? தமிழ், தமிழர், தமிழீழம் என்பனவையாகும்.

தமிழ்மொழியைக் காப்பாற்ற இதுவும் ஒரு சிறந்த வழி தான். இதுவொரு வரவேற்கத்தக்க முயற்சி. எங்களால் ஆக்கப்படுகின்ற ஆக்கங்களை தனித்தமிழில் படைக்க நாங்கள் முயற்சி செய்வோம்.

மற்றவர்களுக்கு புரியாது என்ற வேண்டாவாதம் தேவையில்லை. நாம் ஒவ்வொருவரும் எங்களை திருத்த முயற்சித்தாலே போதும்.

இப்படி ஒவ்வொருவரும் மாறி மாறி குற்றம் சுமத்துவதால் தான் தமிழே இப்படி நாசமாகி போய்க்கொண்டிருக்கின்றது.

ஒருவன் ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுத்தால் ஏன்தான் முரண்டு பிடிக்கின்றீர்களோ?

Edited by Valvai Mainthan

"கொம்பியூட்டர் என்ற சொல்லை நீங்கள் பிறக்கும்போதே பழகிக் கொண்டு வந்தீர்களா? பிறகு தானே தெரிந்து கொண்டீர்கள். அவ்வாறு கணனி என்பதையும் அறிந்து கொள்வது தானே? தமிழில் போதுமான தமிழ் சொற்கள் இல்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்று தான். ஆனால் இருப்பதைப் பாவிக்கமட்டும் ஏன் முடியாமல் போகின்றது".

தூயவன் நீங்கள் சரியான முறையில் , ஆக்கபூர்வமான , நிர்வாகத்தினரின் எதிர்பார்ப்புடன் ஒத்துப்போகக்கூடிய முறையில் கருத்துக்களை முன்வைக்கின்றீர்கள், பாராட்டுக்கள்.

தமிழ்த்தேசியம் என்றால் என்ன? தமிழ், தமிழர், தமிழீழம் என்பனவையாகும்.

தமிழ்மொழியைக் காப்பாற்ற இதுவும் ஒரு சிறந்த வழி தான். இதுவொரு வரவேற்கத்தக்க முயற்சி. எங்களால் ஆக்கப்படுகின்ற ஆக்கங்களை தனித்தமிழில் படைக்க நாங்கள் முயற்சி செய்வோம்.

மற்றவர்களுக்கு புரியாது என்ற வேண்டாவாதம் தேவையில்லை. நாம் ஒவ்வொருவரும் எங்களை திருத்த முயற்சித்தாலே போதும்.

இப்படி ஒவ்வொருவரும் மாறி மாறி குற்றம் சுமத்துவதால் தான் தமிழே இப்படி நாசமாகி போய்க்கொண்டிருக்கின்றது.

ஒருவன் ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுத்தால் ஏன்தான் முரண்டு பிடிக்கின்றீர்களோ?

வல்வை அண்ணை,

எல்லாம் சரி...

இஞ்ச அடியடா பிடியடா எண்டு கோசம் போடும் எத்தனை பேர் யாழில தமிழில ஆக்கங்கள் எழுதி இருக்கிறீனம் அல்லது எழுதிக்கொண்டு இருக்கிறீனம்? எழுதுறது எல்லாம் நக்கலும், நையாண்டியும். இதுகள தமிழில எழுதினால் என்ன? சிங்களத்தில எழுதினால் என்ன? இஞ்ச கோசம் போடுற ஒருவரும் ஆக்கங்கள் எண்டு ஒண்டும் படைப்பதில்லை. செய்வது எல்லாம் வெட்டி ஒட்டுற தொழில் மாத்திரம் தான். அல்லது குந்தி இருந்து நக்கல் அடிக்கிறது.

என்னாலையும் எல்லா விசயங்கள் பற்றியும் தமிழில வெட்டி ஒட்ட முடியும். இதையா நீங்கள் எதிர்பார்க்கிறீங்கள்? யாழ் இணையத்தின் நோக்கம் இதுதானா?

கோசங்கள் போடுவதன் மூலம் தமிழ் வளரும், என்னைத் தேசியவாதி, தமிழ்ப்பற்றாளன் எண்டு காட்டிக்கொள்ள முடியும் என்றால் நானும் கும்பலில கோவிந்தா போடுறன்.

கோசங்கள் போடுபவர்கள் முதலில் சுயமாக ஆக்கங்கள் படைத்துப் பார்த்தால் கொஞ்சம் நல்லா இருக்கும்.

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

திருத்தம் வல்வை.

எம்முடைய தாய்மொழி என்பதற்காகவே இதை ஆதரிக்கின்றேனே தவிர, யாழ் நிர்வாகத்தை நியாயப்படுத்த வேண்டும் என்ற தேவைக்காக அல்ல. அவர்கள் மீது வைத்திருந்த மரியாதையும், மதிப்பும் இன்று எனக்கில்லை. எம் மொழி, எம் இனம், எம் தேசம், எம் பக்தி போன்ற விடயங்களில் நியாயமாக எதிரி கூடச் செய்தால் ஆதரிப்பதில் தப்பில்லை என்பதே என் கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் எனது கருத்தை நீங்கள் தப்பாக புரிந்துள்ளீர்கள். அதாவது நிர்வாகத்தினரின் எதிர்பார்ப்பு என்பது, தனித்தமிழ் என்பதாகும்..அதற்காக அவர்களை நியாயப்படுத்துவது என்பதல்ல எனது கருத்து.

முகமாலையில் களமுனைப் போராளிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி வாழ் மக்கள் சமைத்த உணவு, உலர் உணவு, குளிர்களி என்பவற்றை வழங்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது ..........

http://www.puthinam.com/full.php?2b3dUW04a...4iZf20cc3si4Bde

பாருங்கப்பா ஆர்வத்தை....!! அதுக்காக தவறாக விளக்கம் கொடுக்கிறதா...??

குளிர்களி என்பது ஐஸ்கிறீம்... Ice cream

நான் கேட்டது ஐஸ்பழம்...

Edited by தயா

முகமாலையில் களமுனைப் போராளிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி வாழ் மக்கள் சமைத்த உணவு, உலர் உணவு, குளிர்களி என்பவற்றை வழங்கும் நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது ..........

http://www.puthinam.com/full.php?2b3dUW04a...4iZf20cc3si4Bde

பாருங்கப்பா ஆர்வத்தை....!! அதுக்காக தவறாக விளக்கம் கொடுக்கிறதா...??

குளிர்களி என்பது ஐஸ்கிறீம்... Ice cream

நான் கேட்டது ஐஸ்பழம்...

அப்ப குளிர்கட்டி ஆக்கும். :mellow:

நான் கேட்டது ஐஸ்பழம்...

இதில் ஐஸ் என்பது மட்டும் தானே ஆங்கிலம்

ஆக குளிர்பழம் ;)

இதில் ஐஸ் என்பது மட்டும் தானே ஆங்கிலம்

ஆக குளிர்பழம் ;)

இதைத்தான் நானும் நினைச்சேன்....!! :mellow:

ஐஸ்பழம் ஆங்கில சொல்லும் இல்லை எண்டதையும் கவனத்திலை எடுங்கோ...!

உங்கள் அனைவரினதும் தமிழ் பற்றினை பார்க்க புல்லரிக்கின்றது. உங்களிற்கு தெரிந்த செந்தமிழில் இனிவரும் காலங்களில் ஒருவரை ஒருவர் அறுத்து தமிழை வளர்த்துக் கொள்ளுங்கள். நானும் நேரம் கிடைக்கும்போது உங்களைப் பின்பற்றி உங்கள் பணி தொடர்கின்றேன். அடிப்பது அரட்டை அதை செந்தமிழில் தான் அடிப்போம் என்று ஒற்றைக்காலில் நிற்கின்றீர்கள். நானும் முயற்சி செய்கின்றேன்.

வண்ணத் தமிழ் வணக்(கம்) குருவே..செந்தமிழை வளர்க்க இங்கே சிலர் பாடுபடுகிறார்கள் மெச்சலாம் வரவேற்கலாம்..(ஆனால் தலையில் தூக்கி வைத்து நாட்டியம் ஆட முடியாது)...வருந்துகிறோம் அதற்கு.. :)

நிர்வாகம் இந்த வேண்டுகோளை விடுத்தது ஆனால் எவ்வாறான ஒரு தொனியில் ஒரு கருத்தை வெளியிடுவது என்று நிர்வாகதிற்கு தெரியவில்லை..வருந்த கூடிய ஒரு செயற்பாடு.. :( (எனி வரும் காலபகுதிகளிளாவது எவ்வாறான தொனியில் ஒரு வேண்டுகோளை விடுப்பது என்று தயவு செய்து அறிந்து கொள்ளவும்)..அறிவீர்கள் செயற்படுத்துவீர்கள் என்று நம்புவோமாக!!..

அடுத்து இந்த செயற்பாடு நடைமுறைக்கு வந்து ஏறத்தாழ இரு நாட்கள் கடந்த நிலையில் "செந்த தமிழை " உலகறிய செய்வோம் என்று குக்குரல் இட்ட கோஷ்டியினரின் செயற்பாட்டை உன்னிப்பாக கவனித்ததன் பிரகாரம் இந்த கருத்தை இவ்வேளையிள் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைக்கிறேன்.. :wub:

அதாவது இந்த இரு நாட்களிளும் இந்த பகுதியில் காரசாரமான விவாதம் நடைபெறுகிறது,ஆனால் "செந்தமிழை" வளர்க்கிறோம் என்று கூறி கோஷம் போட்டவர்களாள் எதுவித உருபடியான கருத்துகளும் இவ் பகுதியில் பரிமாறபட்டது என்றா..கேள்விகுறியே??

ஆனால் மற்றவர்களை எள்ளி நகையாடுதலும் மற்றவர்கள் பற்றிய விமர்சனங்கலும் நிறைந்து கிடந்தன ஜயாமார்களே,பெரியோர்களே இந்த இலட்சனத்தில் தானா "செந்தமிழை" வளர்க்க போறீர்கள்??.வளரட்டும் "செந்தமிழ்" செம்மையாக..(ஆனால் இவ்வாறான ஆட்கள் செந்தமிழை வளர்க்க வெளிகிட்டால் அது செந்தனல் ஆகி தான் போகுமே தவிர செம்மையான தமிழ் ஆகாது).. :)

அடுத்து ஜயாமார்களே உங்களிடம் ஒரு வினாவை தொடுக்க விரும்புகிறேன்??..அதாவது உங்களுடன் தமிழை முடிக்க ஆசைபடுகிறீர்களா அல்லது தொடர ஆசைபடுகிறீர்களா..

ஏன் இந்த வினாவை இவ்வேளையில் தொடுக்கிறேன் என்றால் புலத்தில் இருந்து வரும் தமிழ் சிறுவர்கள் தமிழை கற்கவேண்டும் என்றால் தொடர்ந்து உங்கள் "செந்தமிழ்" சரிபட்டு வராது ஜயாமார்களே..அதே நேரம் நீங்கள் கேட்கலாம் இதற்கும் இந்த கருத்து பரிமாற்றதிற்கும் என்ன சம்பந்தம் என்று??

இருக்கிறது ஜயாமார்களே..அதாவது உங்களை போன்ற பண்டிதர்கள் "யாழில்" வந்து இசை மீட்டுவதை விடுத்து புலத்தில் பிறந்த சிறுவர்களுக்கும் வழியை கொடுத்தீர்கள் என்றா மெத்த பெரும் உபகாரமாக இருக்கும் அது நீங்கள் தமிழிற்கு ஆற்றும் சேவையாகவும் இருக்கும்... :)

இசையை மீட்ட தெரிந்தவன் மட்டும் இசையை மீட்ட மற்றவன் அதனை பார்த்து கொண்டு இருந்தால்..(இசை தமிழ் வளருமா)??அந்த இலட்சனத்தில் தான் இருக்கிறது உங்கள் செயற்பாடு உங்களுக்கு மற்றவனின் செயற்பாடு "கோமாளிதனமாக" இருக்கிறது..

ஆனால் நிஜத்தில் உங்கள் செயற்பாடு எள்ளி நகைக்க வைக்கிறது..(ஆனா எள்ளி நகைக்க முடியவில்லை)..ஏனேனில் மறுபடி சிலருக்கு மட்டும் தமிழ் சொந்தமாகுவதை பார்த்து..

உங்களின் இன்னொரு வினாவை தொடுக்கிறேன் "நீங்கள் உங்கள் இல்லத்தில் கூட" இப்படி தானா தமிழை கதைப்பீர்கள் அல்லது வெறும் சம்பாசனைக்காகவும் பெயருக்காகவுமா தமிழ்??

வெறும் மழையை கண்டால் மட்டுமே கத்தும் "கிணத்து தவளைகளாக" இருக்காம வெளி உலகத்தையும் உங்கள் கண்ணால் பார்த்தால் நன்றாக இருக்கும்..யாரல் தமிழ் அழிகிறது என்றால் உங்களை போன்றவர்களாள் தான் என்று அடித்து கூறலாம்..(ஒரு மொழியின் மீதே வெறுப்பை ஏற்படுத்து நடவடிக்கையை அரபடித்த பண்டிதர்கள் மேற்கொள்கிறார்கள் எங்கள் தமிழில்).. :(

ஈற்றில் மற்றவனை எள்ளி நகையாடுகிறார்கள்..(இந்த இலட்சனத்தில் தமிழ் போனால்)..உங்களுடன் மெல்ல தமிழ் சறுக்கும் அதை பார்க்க நீங்கள் இருக்கபோறதில்லை என்று தொடர்ந்தால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது..

தொடுக்கிறேன் இன்னொரு வினாவை ஏன் யாழிற்கு புலத்தில் பிறந்து வளர்ந்த சிறுவர்கள் வாறதில்லை??அப்படி இருந்துவிட்டு ஓரிருவர் வந்தாலும் அவர்களாள் ஏன் இதில் நின்று பிடிக்க முடியவில்லை...காரணம் நான் மேலே குறிபிட்டவை தான்..

இவ்வாறு அனைத்து பிழைகளையுமே உங்களிடம் வைத்து கொண்டு மற்றவனை பார்த்து ஏளனம் செய்வது உங்களையே நீங்கள் ஏளனபடுத்து கொள்வதிற்கு சமன் ஜயா?? :lol:

உங்கே சில அன்பர்கள் கேட்டார்கள் மொழிக்காக இதை கூடவா உங்களாள் செய்ய முடியாது என்று..(மெச்சுகிறோம் ஜயா உங்களை)..நான் உங்களின் ஒரு சிறிய விண்ணப்பத்தை கோருகிறேன் அதாவது வெட்டி ஒட்டும் ஆக்கங்களை தவிர்த்து நீங்கள் சுயமாக கடைசி இரண்டு வரிகளிளாவது ஒரு ஆக்கத்தினை தந்தீர்கள் என்றால்..(பெருமைபடலாம் கரகோஷமிடலாம்)..

ஆனால் உங்கே நடப்பது வெறும் வாய்பேச்சு அல்லோ..(எத்தனை நாளைக்கு தான் நீங்கள் வாயால் தமிழ் செம்மையாக்க போறீர்கள்)..??

ஜயாமார்களே!!காலையில் எழுந்து நீங்கள் செல்வது "டொயிலட்"..(அது கோமாளியான நாங்கள் பாவிக்கும் மொழி)..நீங்கள் பாவிப்பது "கக்கூஸ்" அந்த சொல்லே ஒரு ஒல்லாந்த மொழி சொல் என்பதனை தாங்கள் அறியவில்லையா அல்லது அறிந்தும் அறியாதவர்கள் போல் பாசங்கு செய்கிறீர்களா??

முதலில் இவற்றை செப்பமிட வழியை பாருங்கள் அதனை பார்க்கமாட்டீர்கள்..(பேச்சளவ

இருக்கிறது ஜயாமார்களே..அதாவது உங்களை போன்ற பண்டிதர்கள் "யாழில்" வந்து இசை மீட்டுவதை விடுத்து புலத்தில் பிறந்த சிறுவர்களுக்கும் வழியை கொடுத்தீர்கள் என்றா மெத்த பெரும் உபகாரமாக இருக்கும் அது நீங்கள் தமிழிற்கு ஆற்றும் சேவையாகவும் இருக்கும்...

இசையை மீட்ட தெரிந்தவன் மட்டும் இசையை மீட்ட மற்றவன் அதனை பார்த்து கொண்டு இருந்தால்..(இசை தமிழ் வளருமா)??அந்த இலட்சனத்தில் தான் இருக்கிறது உங்கள் செயற்பாடு உங்களுக்கு மற்றவனின் செயற்பாடு "கோமாளிதனமாக" இருக்கிறது..

:D:(:wub::lol::):):):):(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடஅடஅடஅட ஜமுனாவா இப்படி எழுதியது?

நம்ப முடியவில்லை - வில்லை -வில்லை

என்னைக் கேட்டால் சொல்வதற்கொன்றுள்ளது. அது

mission completed

Edited by காவடி

நன்றி ஜமுனா உங்கள் கொள்கை விளக்கத்துக்கு..

இப்ப எண்ட தீர்மானத்தையும் சொல்லிறன்:

நாங்கள் எப்பிடி எழுதினாலும் - அதாவது செந்தமிழில எழுதினால் என்ன, ஆங்கிலத்தில எழுதினால் என்ன, திமிங்கிலத்தில எழுதினால் என்ன, சிங்களத்தில எழுதினால் என்ன... குந்தி இருந்து வசைபாடும் கூட்டம் - நக்கல், நையாண்டி அடிப்போர் கும்பல் தொடர்ந்து எம்மை போட்டுத் தாக்கத்தான் போகிது. அவர்களது நோக்கமே இதுதானே.. இதற்காக - இவர்களுக்காக எமது தனித்தன்மையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற தேவை இல்லை.

மேலும்...

ரெண்டு, மூண்டு சிலவேளைகளில நாலு, அஞ்சு மணித்தியாலம் எண்டு மினக்கட்டு எழுதப்படும் ஒரு சுய ஆக்கத்தை நிருவாகம் மட்டறுத்தல் - விதிமுறைகள் எண்டுற பெயரில ரெண்டு செக்கனில (வினாடி) தூக்கிறதையும் அனுமதிக்க முடியாது.

பதில் கருத்துக்களாக இருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் சுய ஆக்கத்திற்கே வேட்டு வைப்போம் எண்டுற தொனியில சொல்லப்படுவதை - பூச்சாண்டி காட்டுவதை கேட்டுவிட்டு தொடந்தும் யாழில சுய ஆக்கம் ஒன்றை படைச்சு பிறகு அதிகளில மட்டறுத்துனர் கைவைச்சு விளையாட பிறகு மனஸ்தாபப்பட்டு பிரச்சனைப்பட ஏலாது...

இதற்காக எழுதாமலும் இருக்க முடியாது..

இதனால...

நான் யோசிச்சு வச்சு இருக்கிற தீர்வு என்ன எண்டால்...

நானும்... ஒரு புளக்கில இல்லாட்டி வேறு ஒரு டொட் கொம்மில எனது பாணியிலேயே தொடர்ந்து எழுதிப்போட்டு.. யாழுக்கு இணைப்பு கொடுக்கப்போறன்...

அதாவது...

வழமையா இஞ்ச பலர் செய்யுற மாதிரி.. நாலு வசனத்தில ஒண்டை சொல்லிப்போட்டு தொடர்ந்து படிக்க எனது புளக்குக்கு - வலைக்கு வருமாறு கேட்டு இணைப்பு கொடுக்கப் போறன்.

இதுவே அடியேனின் முடிவு..

நீங்களும் ஜம்முபேபி டொட் காம் (தமிழில் - ஜம்முபேபி புள்ளி நிறுவனம்) எண்டு ஒண்டு தொடங்கிப்போட்டு மேலதிகமா படிக்க அங்க வரச்சொல்லி ஆக்களக் கூப்பிடுங்கோ.

ஒரு பக்கத்தால நிருவாகம், மற்றப்பக்கத்தால கோசம் போடுபவர்கள் இப்படியான சூழ்நிலையில எனது தனிப்பட்ட வலையில் சுய ஆக்கங்களை எழுதிப்போட்டு யாழுக்கு இணைப்பு கொடுப்பது மட்டுமே சிறந்த ஐடியாவாக இப்போதைக்கு தெரியுது.

தாங்கள் ஒண்டும் சுயமாக எழுதாமல் - படைக்காமல் நீ இப்பிடி எழுது அப்பிடி எழுது எண்டு உத்தரவு போடுற ஆக்களுக்கு முன்னால் நிண்டு கருத்தாடல் செய்வதற்கு இப்படியான ஐடியா (வழிமுறை) ஒரு தீர்வாக அமையும் எண்டு நான் எதிர்பார்க்கிறன்.

நீங்கள் சொன்னபடி யாழை இஞ்ச மீட்ட வழி இல்லை எண்டால் எங்கட வீட்டு தெருக்கோடியில ஒரு ஓரமா இருந்து மீட்டுப் பார்ப்பம். இஞ்ச யாழில எங்கட தெருக்கோடிக்கு எப்பிடி வருவது எண்டு வாசகர்களுக்கு ஒரு பாதையை மட்டும் - மேலதிகமாக படிக்க இஞ்ச வாங்கோ எண்டு காட்டுவம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா என்ன விளக்கம்....எவ்வளவு பெரிய பந்தி..இப்படி எல்லாம் எழுதினால் உண்மை ஆகி விடுமா?

நான் நினைக்கின்றேன், நிர்வாகத்தின் கருத்தை அதாவது எதிர்பார்ப்பை நாம் விளங்கிக்கொள்ள வில்லை என்று.

அவர்கள் கூறுவது உங்கள் கோமாளித்தனமான சொல் புகுத்தலை நிற்பாட்டும்படி....

ஆனால் உங்களால் படைக்கும் ஆக்கங்களில் தவிர்க்கமுடியாமல் ஏற்படும் ஆங்கிலச்சொற்களை அவர்கள் நீக்குவார்கள் என்று நான் நினைக்கவில்லை.

யாழில் ஆக்கபூர்வமான கருத்துக்களில் ஆக்கிலச்சொல் கலப்படம் மிகக்குறைவு என்றுதான் சொல்ல முடியும்.

ஆனால் பொழுதுபோக்குக்காக மற்றவர்களை கிண்டல் பண்ணும் விதமாக , அதாவது அரைகுறையாக ஆங்கில அறிவுள்ளவர்களினால் தான் அதிகளாவாக ஆங்கிலச்சொற்கள் இங்கே புகுத்தப்படுகின்றன.

தாங்கள் ஆங்கில அறிவுள்ளவர்கள் என்று காட்டிக்கொள்வதிற்காகவோ என்னவோ தெரியவில்லை.

இறுதியாக நிர்வாகத்தினர் ஒரு விளக்கத்தை இங்கு முன்வைப்பார்கள் அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

சிறு தகவல்: யாழ்களத்தில் சிறுவர்களுக்கான பக்கமும் இருக்கின்றது. யாராவது சிறுவர்கள், பால்குடிப் பிள்ளைகள் இங்கு இருந்தால் அங்கு போய்ப் பலன் பெறலாம். :D:(

http://www.yarl.com/kids/

வணக்கம் கருத்துக்கள உறவுகளுக்கு,

தமிழ் தெரிந்திருந்தும் மற்றவர்கள் ரசிக்கவேண்டும் என்பதற்காகவும், நாகரிகத்துக்காகவும் ஆங்கிலச் சொற்களை கலந்து எழுதுவதையே யாழ் இணைய நிர்வாகம் மாற்றிக்கொள்ளச் சொல்கிறது. செந்தமிழில் எழுதவேண்டும் என்று யாரையும் அது வற்புறுத்தவில்லை. நீங்கள் சாதாரணமாக பேச்சு வழக்கிலேயே எழுதலாம். தமிழில் பேச்சு வழக்கில் எழுதுகிறபோதும், பிறரை கவரக்கூடியது போன்று எழுதலாம். நீங்கள் முன்னுதாரணமாக இருந்தால் இனி வருகிறவர்களும் அதைப் பின்பற்றுவார்கள். யாழ் களத்தை புலத்தில் பிறந்து வளர்ந்தவர்களும் பார்க்க நேர்கிற போது, ஆங்கிலம் கலந்து எழுதப்படும் ஆக்கங்கள் அவர்களுக்கு தவறாக/தவறான தமிழைக் கற்றுக்கொடுக்கும். ஏற்கனவே (குறிப்பாக) தென்னிந்திய சினிமாவும், தென்னிந்திய மசாலா சஞ்சிகைகளும், தென்னிந்திய இணையத்தளங்கள் சிலவும் 100 க்கு 90 வீதம் ஆங்கிலம் கலந்த தமிழையே தமிழாக அரங்கேற்றிக்கொண்டிருக்க, நாமும் அதையே செய்தால் நிலை என்னாவது?

முன்னரும் இது தொடர்பாக கருத்துக்களத்தில் பலரும் கதைத்திருக்கிறார்கள். நானும் ஒருமுறை அறிவுறுத்தலாக இல்லாமல் வேண்டுகோளாக ஒரு தலைப்பில் முன்வைத்திருந்தேன். ஆனால் கருத்துக்களத்தில் இப்படி ஆங்கிலம் கலந்து எழுதுகிற போக்கு அண்மைக் காலங்களில் அதிகமாகிக் கொண்டிருப்பதால் தான் இப்படி ஒரு அறிவுறுத்தல் விடவேண்டியிருந்தது.

தமிழ் தெரியாதவிடத்து ஆங்கில எழுத்துக்களிலேயே (உதாரணம்: Portal) எழுதுங்கள். தமிழ் தெரியாத சொற்களை களத்தில் ஏனையவர்களிடம் கேட்கிற போது அவர்கள் தெரிந்ததை சொல்லித் தருவார்கள். தெரியாத தமிழை தெரிந்து கொள்ள முயற்சிப்பதும், தெரிந்த தமிழை புறக்கணிக்காமல் பயன்படுத்துவதும் தமிழை வளப்படுத்தும். நாம் நாகரிகத்துக்காகவும், கலகலப்புக்காகவும், பிறர் இரசிக்கவேண்டும் என்பதற்காகவும் தெரிந்த தமிழ்ச் சொற்களையே புறக்கணிக்கிறபோது, தெரியாத தமிழ்ச் சொற்களை எப்படிக் கற்றுக்கொள்ளப் போகிறோம்?

பட், பிகோஸ், ஜஸ்ட், மாட்டர், நைஸ், ஹவ் ஆர் யூ, ரேக் இட் ஈசி, பாய், குட் - இவற்றுக்கெல்லாம் தமிழ் தெரியாமல் இருக்கிறவர்கள் இங்கே கருத்துக்களத்தில் கருத்தாடுகிறார்கள்/ எழுதுகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்படி தெரியாதவர்கள் இருந்தால் நிச்சயமாக அவர்கள் ஒரு தலைப்புத் தொடங்கி அதில் தமக்குத் தெரியாத சொற்களை எழுதினால் அவற்றுக்கான தமிழ்ச் சொற்கள் உறுப்பினர்களாலோ அல்லது கருத்துக்கள நிர்வாகத்தினாலோ தரப்படும்.

இதற்கு மேலும் விளக்கங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன். யாழ் இணைய நிர்வாகம் ஒன்றும் தமிழ் வளர்க்கப் புறப்படவில்லை. தெரிந்த தமிழை புறக்கணிக்காமல் பேசுங்கள் என்பதே எமது வேண்டுகோள். புரிந்துணர்வுக்கு நன்றி.

அடுத்து,

உளவியல் பிரச்சனை இருப்பவர்கள் தொடர்பாக விடுக்கப்பட்ட அறிவுறுத்தல். உளவியல் பிரச்சனை என்பதை 'விசர்' என்றும், 'பைத்தியம்' என்றும் பொருள்கொண்டால் கருத்துக்கள நிர்வாகம் அதற்கு பொறுப்பேற்க முடியாது.

யாழ் இணைய நிர்வாகத்துக்கு வருகிற தனிமடல்கள் சிலவும், பொறுப்பாளர்களுக்கு வருகிற மின்னஞ்சல்கள் சிலவுமே உளவியல் பிரச்சனை அல்லது மன உளைச்சல் தொடர்பான அறிவுறுத்தலுக்கான பின்னணி. எமக்கு வருகிற மின்னஞ்சல்/தனிமடல்கள் சிலவற்றில், குறிப்பிட்ட சில ஆக்கங்களால் அல்லது கருத்துக்களால் தாம் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவோ அல்லது உள ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சிலர் தெரிவித்துள்ளார்கள். இவர்கள் கருத்துக்கள உறுப்பினர்களாகவும், சிலர் வாசகர்களாகவும் இருக்கிறார்கள். அதேபோல, உணர்ச்சி மேலீட்டால் கருத்துக்கள நிர்வாகத்தினருக்கு தனிமடலூடாக வசைபாடல்களை அனுப்புகிற செயல்களும் நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றை மையப்படுத்தியே அந்த அறிவுறுத்தல் விடப்பட்டிருக்கிறது. இது அவர்களது உள உடல் நலம் சார்ந்த அக்கறையின் பாலானதே. ஏற்கனவே சில அனுபவங்களை கருத்துக்கள நிர்வாகம் பெற்றிருப்பதால், முன்னெச்சரிக்கையாகவே இந்த அறிவுறுத்தல் விடப்பட்டிருக்கிறது. திரைப்படம் தொடங்குவதற்கு முன்னால், "குழந்தைகளும் இதயநோயாளிகளும் இத்திரைப்படத்தை பார்ப்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்" என்று விடப்படுகிற அறிவுறுத்தல் போன்றதுவே இதுவும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக தமிழர்கள் தமக்கிடையே பண்பாகப் பழகுவது குறைவு. அதை இங்கும் காணலாம்.

ஒரு அறிவுறுத்தலை வழங்கும் போது polite ஆகச் சொல்ல வேண்டும் என்ற இங்கிதம் கூடவா இங்கு உணரப்படவில்லை.

"உதாரணத்துக்கு ஈவிரக்கமின்றி" என்பதை.. பாகுபாடுகளுக்கு அப்பால் நாம் அகற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை என்று தாழ்மையாகக் குறிப்பிடலாம்.

கோபம் ஆத்திரம் உளநலம் என்பதை.. கடிந்து சொல்வதைக் காட்டினும்.. கருத்துக்களால் ஏற்படும் அனைத்துப் பாதிப்புக்களுக்கும் களம் பொறுப்பேற்காது என்று கூறிக்கொள்ளலாமே..! இது தேவையற்ற சர்ச்சைகளை விளக்கம் கொள்ளலைத் தவிர்க்கவும் தாழ்மை உணர்வை ஏற்படுத்தவும் செய்யும்.

முரளி..

உங்கள் கருத்தில் நீங்கள் வெட்டி ஒட்டுபவர்களை உங்களை அறியாமலே பல இடங்களில் தாக்கி இருக்கிறீர்கள். உங்களின் சில கருத்துக்கள் எனது பார்வைக்கு தாழ்மையான வகைக்குரிய கருத்தாகத் தெரியவில்லை.

அதேபோல்.. சுய ஆக்கங்கள் எழுதாதவர்களை நோக்கியும் நீங்கள் வைத்துள்ள சில கருத்துக்கள் தாழ்மையானவையாக இல்லை.

வலைப்பூக்களைப் பரிகரிப்பது இன்று இணைய உலகில் முக்கியத்துவமான தாக உணரப்படுகிறது. அதனால் தான் பத்திரிகைகள் கூட வலைப்பூக்களுக்கு முக்கியம் தந்து அதில் வரும் ஆக்கங்களை.. வலைப்பூ விமர்சனங்களை அளித்து ஊக்குவிக்கின்றன. உலகெங்கும் மக்கள் தமது சொந்தக் கருத்துக்களைச் சொல்ல வலைப்பூக்களைப் பாவிக்கின்றனர். இந்திய பிரபல நடிகர் அமிதாப்பச்சன் கூட தனது வலைப்பூவினூடு ரசிகர்களுடன் மிகவும் எளிமையான வகையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.

வலைப்பூ பரிகரிக்கின்ற ஒருவர் தனது வலைப்பூவுக்கான ஆக்கத்தை இன்னோர் இடத்துக்கு அறிமுகம் செய்வது தவறல்ல. அது ஆக்கம் தொடர்பான அறிதலை அதிகரிக்கும். இதில் சிலர் ஆத்திரப்படுவதற்கு எதுவும் இல்லை.

வெட்டி ஒட்டுதல் என்றால் யாழ் புதினத்தில் இருந்தும் வெட்டி ஒட்டுதலைத்தான் செய்கிறது. தானியங்கியாகச் செய்தால் தவறில்லை. அதையே கள உறவுகள் செய்தால் குற்றமா..?! அதை ஒரு குறையாக நோக்க வேண்டுமா..??! :(:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.