Jump to content

தமிழ் நெறித் திருமணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சங்க கால திருமணம்...........

தமிழினம் தொன்மை வாய்ந்த இனம். தமிழ்மொழி இன்று உயிர்த் துடிப்போடுள்ள உலக மொழிகளில், சீனம், கிரேக்கம், ஹீப்புரூ, இலத்தீன் போன்ற மிகப் பழமையான மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் மொழிக்கு இருக்கும் இலக்கிய வளம் ஏனைய மொழி இலக்கியங்களைவிட உயர்வானது. தமிழர் மொழியாலும், நாகரிகத்தினாலும் சிறந்தவர் என்பது மொழி ஆராய்ச்சியாலும், அகழ்வாராய்ச்சியாலும் நிறுவப்பட்ட உண்மைகளாகும்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு -புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு ...

வள்ளுவன் தன்னை உலகினிக்கே -தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு- நெஞ்சை

யள்ளும் சிலப்பதிகார மென்றோர்- மணி

யாரம் படைத்த தமிழ்நாடு

என்று மகாகவி பாரதியார் போற்றிப் பாடுவார்.

ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு காலம் பொற்காலமாகத் திகழ்ந்திருக்கிறது. தமிழினத்தைப் பொறுத்தளவில் சங்ககாலமே தமிழரது பொற்காலமாகும். பாரதியார் வார்த்தையில் கூறவேண்டும் என்றால் உண்மை இது வெறும்புகழ்ச்சி இல்லை.

முடியுடை வேந்தர்கள் மூவரும் கொற்றம் வைத்து சீரோடும் சிறப்போடும் பேரோடும் புகழோடும் அறத்தோடும் மறத்தோடும் பாராண்ட காலம் அது.

சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் தமிழரின் ஒப்பற்ற நாகரிகச் சிறப்புக்கு சான்று பகர்கின்றன.

கள்ளையும் தீயையும் சேர்த்து- நல்ல காற்றையும் வானவெளியையும் சேர்த்துத் தௌளு தமிழ்ப் புலவோர் செய்த தீஞ்சுவைக் காவியங்களான அய்ம்பெரும் காப்பியங்கள் தமிழ் அன்னையின் புகழை திக்கெட்டும் மணம்வீசிப் பரப்பின.

காலில் சிலம்பு, இடையில் மேகலை, காதில் குண்டலம், கையில் வளை, மார்பில் சிந்தாமணி தமிழன்னையின் இயற்கை அழகுக்கு அழகு சேர்த்தன.

இடைக்காலத்தில் தமிழ்மரபுக்கு மாறான வாழ்க்கைமுறை தமிழரிடம் புகுந்தது. தமிழரின் பழக்க வழக்கங்கள் மாறின. மணமுறை மாறியது. பொருளற்ற சடங்குகள் பெருகின. இவற்றின் பயனாக இன்றுள்ள தமிழர் நாமமது தமிழராக இருக்கின்றாரே தவிர மெய்த் தமிழராக - சங்ககால தமிழர்தம் வழித்தோன்றலாக இல்லை.

நாம் தாய்மொழியைப் போற்றாது விட்டோம். தமிழ்க் கலையை வளர்க்காது விட்டோம். தமிழினத்தின் மரபைக் காவாது விட்டோம். வடமொழிக்கு அடிமையானோம்.

பாவேந்தர் பாரதிதாசனின் ஆசையை இன்று தமிழீழம்தான் செயல்படுத்தி நிறைவு செய்து வருகிறது. தமிழகம் பாரதி, பாரதிதாசன் காலத்திலேயே இன்றும் இருக்கிறது.

இன்றைய தமிழரின் மணமுறை பண்டைத் தமிழர் மரபுக்கு முற்றும் மாறானாதாக இருக்கிறது. இதனைத் தமிழ் இலக்கியச் சான்று கொண்டு காட்டலாம்.

அன்றைய தமிழருடைய திருமணம் எளிமையாக நிகழ்ந்தது. அதில் சடங்குகள் எதுவும் இல்லை. எரியோம்புதல் இல்லை. தீவலம் வருதல் இல்லை. அருந்ததி பார்த்தல் இல்லை. புரோகிதர் இல்லை.

அகநாநூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் உள்ள 400 பாடல்கள் வௌவேறு காலத்தில் வௌவேறு புலவர்களால் பாடப்பட்டவை. இதில் காணப்படும் இரண்டு பாடல்கள் (பாடல் 86, 138) பழந்தமிழரின் திருமணமுறையை வர்ணிக்கின்றன.

அவற்றுள் பாடல் 86 நல்லாவூர் கிழார் என்ற செந்தமிழ்ப் புலவர் பாடிய பாடல். பொருள் தேடத் தலைவியைப் பிரிந்து சென்று திரும்பும் தலைவனை தலைவியின் தோழி வழிமறித்து “எனது தலைவி உன்னோடு மணமகன் தனக்கு முன்பு நிகழ்ந்த திருமணத்தைக் கூறுவதாகப் பாடப்பெற்றதாகும். இந்தப் பாடலில் கூறப் பெறும் திருமணமுறையைக் காண்போம்.

உழுந்துதலைப் பெய்த கொழுந்கனி மிதவை

பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்

தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமரி

மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்

கனையிருள் அகன்று கவின் பெறு காலைக்

கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்

கேடில் விழப்புகழ் நாடலை வந்தென

வுச்சிக் குடந்தர் புத்தகல் மண்டையர்

பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்

முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்

புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று

வாலிழை மகளிர் நால்வர் கூடிக்

"கற்பினின் வாழாஅ நற்பல வுதவிப்

பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென

நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி

பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க

வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்

கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து

"பேரில் கிழத்தி யாகென" தமர் தர

ஓரில் கூட்டிய வுடன்புணர் கங்குற்

கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்

தொடுங்கினள் கிடந்த வோர்புறந் தமீஇ

முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப

வஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்

நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென

வின்னகை யிருக்கைப் பின்யான் வினவலிற்

செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர

அகமலி யுவகைய ளாகி முகனிகுத்

தொய்யென விறைஞ்சி யோளே மாவின்

மடங்கொண் மதைஇய நோக்கின்

ஒடுங்கீ தோதி மாஅ யோளே. (அகநானூறு பாடல் 86)

"எங்கள் திருமணநாளன்று உழுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த, பக்குவமாகக் குழைந்த பொங்கலோடு, மலைபோல் குவிந்த பெருஞ் சோற்றினை உண்பவர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.

வரிசையாக கால்களை நட்டுக் குளிர்ந்த மணப் பந்தல் முழுதும் வெளியிலிருந்து கொண்டுவந்த வெண்மணல் பரப்பப் பட்டிருந்தது.

மனையில் விளக்கு ஏற்றி மலர் மாலைகளை பந்தல் முழுதும் நெருக்கமாகத் தொங்க விட்டு மிகஅழகாக அலங்கரித்துள்ளார்கள். திருமண வீட்டில் மனைவிளக்குகளை ஏற்றி வைத்து ஒளிபெறச் செய்துள்ளார்கள்.

புகழினையுடைய திங்களுடன் கூடிய உரோகிணி நன்னாள் குற்றமற்றதும் வாழ்விற்கு நல்லது பயக்கும் அடர்ந்த இருள் நீங்கி, விடியல் தொடங்கும் வனப்பு மிகு நேரத்தில் திருமண விழா தொடங்குகிறது.

தலையில் நன்நீர்க் குடத்தினைத் தாங்கியும், கையில் அகன்ற பாத்திரத்தை ஏந்திக் கொண்டும், திருமணத்தை செய்து வைக்கும், கலகலப்புடன் கூடிய முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட மணமகளை நன் நீராட்டினர்.

நல்ல மக்களைப் பெற்று அடி வயிற்றில் வரி வரியாகத் தழும்புகள் கொண்ட மணிவயிறு வாய்ந்த மங்கல மகளிர் நால்வர் தூய ஆடைகளையும் அணிகளையும் அணிந்து கூடிநின்ற மணமகளிடம் 'உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் "கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாhக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!"

என்று நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்தியதால் மணமளின் அடர்த்தியான கரிய கூந்தலில் அவை தோற்றமளிக்க, திருமணம் இனிதே நிகழ்கிறது.

அதன்பின் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் சூழ்ந்த உறவினர் 'இன்று முதல் நீயும் பெரிய மனைக் கிழத்தி ஆகிவிட்டாய்' என்று கேலி பேசி மணமகளுக்கு கோடியுடுத்தி மெல்லிய அலங்காரங்களைச் செய்து, வனப்புடன் கூடிய முதலிரவு அறைக்குள் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய அன்றிரவே அவளை அனுப்பி வைத்தனர். அவ்வறைக்குள் நுழையும் மணமகள் உடுத்திய புதிய புடவைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு, தன் இனிய கணவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்கின்றாள்.

அப்போது அவள் புத்தாடையில் ஒடுங்கி முகம் புதைத்துக் கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்பத்தோடு முகத்தை மூடிய துணியைச் சற்றே விலக்க அவள் அதற்கு அஞ்சி பெருமூச்சு விட்டாள். நடுங்கி ஒடுங்கினாள். "ஏன் பயந்தனை, உன் மனதில் உள்ளதை உள்ளவாறு என்னிடம் கூறு'

என வினாவினேன்.

அப்போது மானைப்போல் மடமை கொண்டவளும், செருக்கினையுடைய நோக்கினையுடையவளும், குளிர்ந்த கூந்தலையுடையவளும், மாநிறத்தினை உடையவளுமாகிய மணமகள், அகம் மலர்ந்த மகிழ்ச்சியளாய் முகம் தாழ்த்தி என் காதலி மெலிந்த மடல் கொண்ட காதில் அணிந்திருந்த சிவந்த மணிகள் பதித்த அழகிய குழைகள் அசைய விரைந்து வந்து தனக்குரியவனை வணங்கினாள். ஆதலால் அவள் எக்காலத்தும் என்பால் அன்புடையவள். அதனை நீ அறியாய்" என்று தோழியிடம் கூறினான்.

(பதவுரை)

உழுந்து - பருப்பு

களிமிதவை - குழைதலையுடைய கும்மாயம்

கோள் - கெட்ட கிரகங்கள்

கால் - இடம், சகடம்

திங்களையுடைய நாள் - திருமண நாள்

பொதுசெய் கம்பலை - திருமணம். எல்லாரும் புகுதற்கு யோக்கிய மாதலால் முதுசெம் பெண்டிர் - அதனைச் செய்கிற ஆரவாத்தினையுடைய செவ்விப்

பெண்டிர்

முன்னவும் பின்னவும் - முற்படக் கொடுப்பனவும் பிற்படக் கொடுப்பனவும் முறை

முறையாகக் கொடுக்க

புதல்வர் பயந்த - பிள்ளைகளைப் பெற்ற மகளிர்

அலரி - பூ

வதுமை நன்மணம் - வதுவைத் திருமணம்

ஓரில் - சதுர்த்தி அறை

உடன்புணர்தல் - கூடப்புணர்கிற

நெஞ்சம் நினைந்தது எஞ்சாதுரை - மறையாதுரை

கொடும்புறம் - நாணத்தால் வளைந்த உடம்பு

சதுர்த்தியறை - நான்காம் நாட் பள்ளியறை

சங்ககாலத் தமிழரது திருமண நெறியை பாடலில் படம்பிடித்து வைத்த புலவர் நல்லாவூர் கிழார் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அவரது சொல்லோவியத்தைப் படிக்கும்போது எமது முன்னோரது நாகரிகச் சிறப்பையும் பகுத்தறிவையும் எண்ணி மனம் பூரிப்படைகிறது.

புலவர் நல்லாவூர் கிழார் காதலால் பிணைக்கப்பட்ட தலைவன் - தலைவியது முதல் இரவை எப்படி மிக நாகரிகமாக, மிக நளினமாக தலைவன் கூற்றாகச் எடுத்துச் சொல்கிறார் என்பதும் எண்ணி மகிழத்தக்கது.

முன்னர் கூறியவாறு இந்த இரண்டு சங்க காலத் திருமணங்களிலும் இன்றைய

திருமணங்களில் உள்ள -

(1) பொருள் புரியாத வட மொழி மந்திரங்கள் இல்லை

(2) புரோகிதர் இல்லை.

(3) எரி ஓம்பல் இல்லை.

(4) தீவலம் இல்லை.

(5) அம்மி மிதித்தல் இல்லை.

(6) அருந்ததி காட்டல் இல்லை.

(7) கோத்திரம் கூறல் முதலியன இல்லை.

சங்ககாலத் திருமணங்களைப் பற்றிக் கூறுமிடத்துக் காலம் சென்ற வரலாற்றுப் பேராசிரியர் திரு. பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் "இப்பண்டைத் திருமண நிகழ்ச்சிகளில் எரிவளர்த்தல் இல்லை, தீவலம் இல்லை, இது முற்றும் தமிழர்க்கே உரிய திருமணம்" எனக் குறித்திருத்தல் மகிழத்தக்கது.

பழந்தமிழர் திருமண முறைப்பற்றி நமக்கு தாராளமான வரலாற்றுச் செய்திகள் இல்லை. அகநானூறு 86 ஆவது பாடலில் ஊரில் நடந்த திருமணம் பற்றிய செய்தி உள்ளது.

அதுபோல புறநானூற்றில் 77 ஆவது பாடல் மற்றும் 37 ஆம் பாடலிலும் அகநானூற்றின் 54-ஆவது பாடலிலும் மணவிழாவைபற்றி ஒரு சில கருத்துகள் கூறப்பட்டுள்ளன. தாலி கட்டுதல் போன்ற சடங்குகள் எல்லாம் பின்னால் வந்தவைகளாக இருக்கின்றன.

மணப்பந்தலிலே புது மணல் பரப்பப் பட்டிருந்தது, பந்தலில் மறை விளக்கு எரிந்து கொண்டிருந்தது, காலை நேரம் மாசற்று இருந்தது, ஒருபுறம் உணவு குவியல் கிடந்தது, முதுபெண்டிர் உச்சியில் நீர்குடம் ஏந்தி நின்றனர், அவர்கள் முன்னவும், பின்னையும் நீர்க் குடங்கள் முறை முறையாகப் பல பிள்ளைகளைப் பெற்ற மகளிர் நால்வர் கூடி கற்பு நெறி என்றும் தவறாமல் நல்லறங்களை செய்து கணவன் விரும்பத்தக்க மனைவியாக வாழ்வாயாக என வாழ்த்தி மணமகளை நீராட்டினர். அந்த நீரில் நெல்லும், மலரும் கலந்திருந்தன.

இங்ஙனம் பெண்ணை நீராட்டும் சடங்கு நடைபெற்றது. இது நடைபெற்ற பிறகு மணமகளை அவளின் உறவினர் சிலர் விரைந்துவந்து பெரிய இல்லக்கிழத்தியாய் திகழ்வாயாக! என்று வாழ்த்தி என் கையில் ஒப்படைத்து அவளும், நானும் ஒருங்கு கலந்திருந்த இராப்பொழுது என்று அந்தப் பாடலிலே இருக்கின்றது.

ஆகவே குத்து விளக்கு வைப்பது, மணமக்கள் நெருப்பைச் சுற்றி வருவது, அம்மி மிதிப்பது, 'அருந்ததி ' என்ற இல்லாத நட்சத்திரத்தைப் பகலிலே காண முயற்சிப்பது, இதுபோன்ற கற்பனைகள் எல்லாம் பழைய திருமண முறையில் இருக்கவில்லை. அது மட்டுமல்ல திருமணத்தைப் பெண்களே செய்து வைத்தார்கள்.

குறுந்தொகை நிகழ்வு இருக்கிறதா? இங்கே கவிஞர் அவர்கள் அருமையாக சுட்டிக் காட்டினார்கள் 'ஞாயும், யாயும் யாராகியரோ' என்று.

அப்படி இருவர் உள்ளங்கள் இணைந்த ஒரு மணவிழாவாகத்தான் முதலில் நடந்து கொண்டிருந்தன. ஆனால், இன்றைக்கு தமிழர்களின் வாழ்வில், குறுந்தொகை நிகழ்வு இருக்கின்றதா? இதுபற்றிதான் இன்றைக்கு நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

எனவே, மனப்பொருத்தம் என்கிற அடிப்படையிலே 'ஞாயும், யாயும் யாராகியரோ' என்ற முறையிலே ஒன்று சேர்ந்திருக்கின்றார்கள் என்று கவிஞர் அவர்கள் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.

தமிழ் நாட்டில், ஏன் பல இடங்களிலே திருமணம் எப்படி நடைபெறுகின்றது? குறுந்தொகைக்குப் பதவுரை பொழிப்புரை சொல்லிக் கொடுக்கிறவர் வீட்டில் கூட, இதைச் செரிமானம் செய்து கொள்கிறார்களா என்றால் இல்லை! தந்தை - மகனை கண்டிப்பார் 'அய்யோ இப்படி வேறு சாதியில் பெண்ணைப் பார்த்துவிட்டாயே உனக்காக பெரிய இடத்தில் அல்லவா பெண் பார்த்து வைத்திருந்தேன். பெருந்தொகை வரும் என்று கணக்குப்போட்டு வைத்திருந்தேன் வருந்தொகையும் போய்விட்டதே' என்று குறுந்தொகைப் பாடலை சொல்லிக் கொடுப்பவர் கேட்பார்.

நுழையக் கூடாத ஒரு தத்துவம் தமிழர் வாழ்விலே வரதட்சணை என்ற பெயராலே நுழைந்திருக்கின்றது. வரதட்சணை என்ற சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. வரனும் தமிழ் சொல் அல்ல, தட்சணையும் தமிழ் சொல் அல்ல, தமிழனுக்கு வரதட்சணை வாங்கி பழக்கமே கிடையாது.

மணமக்களுடைய அழைப்பிதழைப் பாருங்கள் மன்றல் அழைப்பு மடல் என்று தூய தமிழிலே, நல்ல தமிழிலே அழைப்பிதழ் அச்சடித்திருக்கின்றார்கள். இந்த உணர்வு வருகின்ற தலைமுறையினருக்கும் இருக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டியிருக் கின்றார்கள் எனக்கு முன்னாலே வாழ்த்துரை கூறிய அறிஞர் பெருமக்கள்.

பழைய திருமணத்திலே யாரோ ஒருவரிடம் கொடுத்து 'முகூர்த்த ஓலை' என்று எழுதச் சொல்வார்கள். இதில் முகூர்த்தம் என்பது தமிழ்ச்சொல் அல்ல. விவாஹ சுப முகூர்த்தம் என்று போட்டு கன்னிகாதானம் செய்விக்கப் பெரியோர்களால் நிச்சயித்தபடி என்று போட்டு, தாராமுகூர்த்தம் செய்விக்க என்று திருமண ஓலையில் போடுகின்றார்கள். இதிலே ஏதாவது ஒரு சொல் தமிழ்ச் சொல் உண்டா? இதற்குப் பொருள் தெரிந்து கொண்டு யாராவது எழுதியிருக்கின்றார்களா? இதை மட்டும் இந்த நேரத்திலே நான் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

'கன்னிகா தானம்' என்று சொல்லுகின்றார்கள். கன்னி என்றால் பெண் தானம் என்றால் தர்மம். பெண்ணை வளர்த்துத் தருமமாகக் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்வதிருக்கிறதே அது தமிழர் பண்பாடு அல்ல, ஏன் மனித பண்பாடே அல்ல, காரணம் பெண்களை ஒரு பொருள் போலக் கருதிய அடிமை மனப்பான்மை இது. எப்படியோ, ஆரியப் பண்பாட்டின் மூலமாக உள்ளே நுழைந்ததன் மூலமாகத்தான் இப்படி ஏற்பட்டது.

பேனா என்னிடத்திலே இருக்கிறது, இதை ஒருவருக்குத் தானமாகக் கொடுத்தால், வாங்கியவர் இதை இன்னொருவருக்கு விற்கலாம் - கொடுக்கலாம் அல்லது உடைத்தும் போடலாம், நொறுக்கலாம் ஏன் என்று கேட்கக்கூடிய உரிமை எனக்குக் கிடையாது. இது பொருளுக்குப் பொருந்தும். ஆனால், பெண் ணுக்குப் பொருந்துமா? என்று கேட்டவர்தான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். அதனுடைய விளைவு தான் மாறுபட்ட சுயமரியாதை சீர்த்திருத்த வாழ்க்கை இணை ஒப்பந்தம் ஆணுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அவ்வளவு உரிமைகளும் பெண்ணுக்கும் உண்டு.

இதை பார்த்துத்தான் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கின்றோம்.

பாரதக் கதை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாரதக் கதையில் தருமன் சூதாடினான் பஞ்ச பாண்டவர்கள் அய்ந்து பேரில் யோக்கிய மானவர் யார் என்று சொல்லும்பொழுது தர்மராசா என்றுதான் சொல்லுவார்கள்.

தருமன்தான் தன் மனைவி திரௌபதையை வைத்துச் சூதாடினான். அதுவும் தருமனுக்கு அய்ந்திலே ஒரு பங்குதான் சொந்தம். தருமன் சூதாட்டத்திலே தோற்கிறான். பெண்ணை ஒரு பொருளாக வைத்துத் தருமன் சூதாடினான்.

இந்தக் கருத்து நமது இனத்திற்கோ, பண்பாட்டிற்கோ, மனித சமுதாயத்திற்கோ ஒத்ததல்ல. இதில் தாரா முகூர்த்தம் என்று சொல்வது இன்னும் மோசமானது.

பெற்றோர், மணப் பெண்ணை மடியிலே உட்கார வைத்து கையிலே எள்ளும், தண்ணீரையும் விட்டுத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டோம் என்று சொன்னால், அந்தப் பொருள் கைநழுவிப் போய் விட்டது என்று பொருள். ஆகவே தாரா முகூர்த்தம் அதுவும் தமிழ்ச் சொல் அல்ல, தமிழ்ப் பண்பாட்டிற்குரியது அல்ல ஏன் பண்பாட்டிற்கே உரியது அல்ல.

http://www.tamilnation.org/culture/marriag...am_marriage.htm

  • Replies 180
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சபேசனை உசுப்பேத்தி விட்டால்.. இந்து சமயத்தை கடிக்கிறது தொடரும் என்று நினைச்சிட்டீங்கள் போல..! :rolleyes:

"கைப்புள்ள அரிவாளோட வாறான்.. இன்று எத்தனை தலை உருளப் போகுதோ" என்று வடிவேலை.. பார்த்துச் சொல்லுற நகைச்சுவை போல இருக்குது.. உங்களின் வரிகைகளை வாசிக்கேக்க..! :wub:

முதலில் திருமண வாழ்த்துக்கள் மணமக்களுக்கு உரித்தாகட்டும்.

நீங்கள் சமஸ்கிருத/இந்து மத திருமணத்தை எதிர்த்து தமிழ்/இந்து திருமணத்தை நடத்தியிருக்கிறீர்கள்.அவ்வள

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தற்கால தமிழர் திருமண முறை பற்றி முதலாவது கட்டுரையில் பார்த்தோம்...

சங்ககால தமிழர் திருமணம் முறை பற்றி இரண்டாவது கட்டுரையில் பார்த்தோம்...

இறுதியாக "திராவிடர் புரட்சித் திருமணம்" (கவனியுங்கள் தமிழர் அல்ல.. திராவிடர்) பற்றி பார்ப்போம்...

நடத்தும் முறை

திராவிடர் புரட்சித் திருமணம் இந்நாளில் முன்னாளிற் போலின்றிப் பெருமக்களால் மிகுதியும் மெற்கொள்ளப் பட்டுவருகிறது. ஆங்காங்கு - அன்றன்று, திராவிடர் புரட்சித் திருமணங்கள். சில அல்ல, மிகப் பல! மணம் நடத்துவோர் சிற்றூராயினும் - தம் ஊரில் உள்ள வர்களைக் கொண்டே நடத்திக் கொள்வதால் செலவு குறையும். தலைவர்கட்கும் தொல்லை இராது.

1. அழைப்பிதழால் அல்லது வேண்டுகோளால் மண வீட்டில் குழுமியோர் அவையத்தார் ஆவார்.

2. இசை: திராவிட நாட்டுப் பண்.

3. மணமக்கள் அவைக்கு வருதல்.

4. முன்மொழிவோர் அவையில் எழுந்து, அவைத் தலைமை தாங்கி, இத்திருமணத்தை முடித்துத்தரும்படி இன்னாரை வேண்டிக்கொள்கிறேன், என்று முன் மொழிதல்.

5. அவையத்தாரின் சார்பில் ஒருவர் அதை, நாங்கள் ஆதரிக்கிறோம், என்று வழிமொழிதல்.

6. முன் மொழிந்தார், வழி மொழிந்தார் அவைத் தலைவரை அழைத்துவந்து சிறப்புறுத்தி இருக்கை காட்டுதல்.

7. அவைத் தலைவர் முன்னுரை.

8. திருமணம் நடத்துதல்:

மணப்பெண், இன்னாரை நான் என் வாழ்க்கைத் துணைவராகக் கொண்டு வாழ்க்கை நடத்த ஒப்புகிறேன், என்று சொல்லல்.

மணமகனும் அவ்வாறு சொல்லல்.

அதன்மேல் இருவரும் மாலை மாற்றுதல்; கணையாழி மாற்றுதல். வாழ்க என முழங்குதல்.

9. தலைவர் மற்றும் அறிஞர் மணமக்களை வாழ்த்துதல்.

10.வரிசை:

அவையத்தார்க்கு வெற்றிலை, பாக்கு முதலிய வழங்குதல்.

இந்த நடைமுறைக்கு முதல்நாளே நீதிமன்றத்தில் மணமகன் மணமகள் மணப்பதிவு செய்து கொள்வ துண்டு. பிறகும் பதிவு அறிவிப்புச் செய்து கொள்ளலாம்.

இக்கருத்தை வைத்தே சுருக்கமாகக் கவிதை நடையில் ஈண்டு எழுதியுள்ளேன். இங்கு காட்டிய திட்டம் பெரும் பாலும் நடைபெறுகின்றது என்பது தவிர, இப்படித்தான் நடத்தப்பட வேண்டும் என்று கட்டுப்படுத்தியதாகாது. இதனிலும் சுருக்கமான முறையில் நடத்திக் கொள்ளலாம். ஆதலினால்தானே இது புரட்சித் திருமணம்? - பாரதிதாசன்

1 அவையத்தார்

அகவல்

வருக வருகென மலர்க்கை கூப்பித்

திருமண மக்கட்கு உரியோர் எதிர்கொளத்

திராவிட நாட்டுப் பெருங்குடி மக்கள்

அரிவைய ரோடுவந் தமர்ந்தனர் நிறையவே!

குழலும் முழவும் பொழிந்த இன்னிசை

மழையை நிறுத்திஓர் மறவன் எழுந்து,தேன்

மழைபொழி வான்போல் மாத்தமிழ் சிறக்கத்

திராவிட நாட்டுப்பண் பாடினான்;

ஒருபெரு மகிழ்ச்சி நிலவிற்று அவையத்தே.

மணமக்கள் வருகை

மணமகள் தோழிமார் சூழவும், மணமகன்

தோழர் சூழவும் தோன்றி அவைதொழுது

யுஇருக்கரு என்று தோழர் இயம்ப

இருக்கையில் இருவர் அமர்ந்தி ருந்தனர்.

2. முன் மொழிதல்

மன்னுசீர் மணப்பெண், மணமகன் சார்பில்

முன்மொழிந் தார்ஓர் முத்தமிழ் அறிஞர்:

புதிராவிடநாட்டுப் பெருங்குடி மக்களே,

அருமைத் தோழியீர் தோழரே அறிஞரே,

என்றன் வணக்கம் ஏற்றருள் வீர்கள்.

இன்று நடைபெற இருக்கும் இத் திராவிடர்

புரட்சித் திருமணப் பெருங்கூட் டத்திற்குத்

தலைமை தாங்கவும் நிலைமை உயர

மணமகள் மணமகன் வாழ்க்கை ஒப்பந்தம்

நிறைவேற் றவும்பெரி யாரை

முறையில் வேண்டினேன் முன்னுற வணங்கியே.

வழி மொழிதல்

அவையத் தாரின் சார்பிலோர் அறிஞர்,

புமுன்மொழிந் தாரின் பொன்மொழி

நன்றொப்பு கின்றோம்மு என்றார் இனிதே.

வேண்டுகோள்

முன்மொழிந் தாரும், வழிமொழிந் தாரும்

பின்னர்அப் பெரியார் இருப்பிடம் நாடி,

எழுந்தருள் கென்றே இருகை கூப்பி

மொழிந்து சீர்செய்து முன்னுற அமைந்த

இருக்கை காட்டத் தமிழ்ச்சொற்

பெருக்கைப் பெரியார் தொடங்கினர் நன்றே:

3 அவைத்தலைவர்

சேர சோழ பாண்டியர் வழிவரு

திராவிட நாட்டுப் பெருங்குடி மக்களே,

அருமைத் தோழியீர் தோழரே அறிஞரே,

தாங்கள் இட்ட பணியைத் தலைக்கணிந்து

ஈங்குச் சிலசொல் இயம்பு கின்றேன்.

ஆரியர் மிலேச்சர் ஆதலால், ஆரியத்து

வேரினர் பார்ப்பனர் வேறி னத்தவர்

ஆதலால், அவரின் வேத மந்திரம்

தீது பயப்பன ஆதலால், திராவிடர்

வாழு மாறு மனங்கொளார் என்பதும்,

தாழ இன்னலே சூழுவார் என்பதும்,

அன்றாட வாழ்வில் அறிந்தோம் ஆதலால்,

நம்மொழி, நம்கலை, நம் ஒழுக்கம்

நம்பேர் ஒட்பம் நடைமுறை மாய்க்கவே

தம்மொழி தீயதம் தகையிலா முறைகளை

மணமுதல், திராவிடர்வாழ்க்கை முறைகளில்

இணைக்க அவர்கள் எண்ணினர் ஆதலால்

ஆரியர் பார்ப்பனர் அடாமண முறையை

வேரொடு சாய்க்க வேண்டும் அன்றோ?

அமிழ்தைத் தமிழென்று பேசும் அழகிய

தமிழ்மண வீட்டில் உமிழத் தக்க

வடமொழிக் கூச்சலா? இன்ப வாழ்வு

தொடங்கையில் நடுவிற் சுடு நெருப்பா?

தாய்தந் தைமார் தவஞ்செய்து பெற்றனர்

தூய்பெருங் கிளைஞர் சூழ்ந்திருக் கின்றனர்

ஒருமனப் பட்ட திருமண மக்களைப்

பெரிதின்பம் பெறுக பெறுக என்று

வாய்க்கு மகிழ்வாய் வாழ்த்த இருக்கையில்

ஏய்த்திங்கு வாழுமோர் நாய்க்கென்ன வேலை?

ஊழி தொடங்கையில் ஒளிதொடங்கு மூவேந்து

வாழையடி வாழையாய் வந்த திராவிடர்

சூழ்ந்திங் கிருக்கையில் சூழ்ச்சி யன்றி

ஏதுங்கெட்ட பார்ப்புக் கிங்கென்ன வேலை?

நல்லறம் நாடும் நம்மண மக்கட்குக்

கல்லான் கைப்படும் புல்லென் செய்யும்?

மிஞ்சும் காதலர் மெய்யன் பிருக்கையில்

கெஞ்சிப் பிழைப்போன் பஞ்சாங்க மேனோ?

தீதிலா மிகப்பல திராவிட மறவர்

ஆதர விருக்கையில், அறிவிலான் படைத்த

சாணிமுண் டங்கள் சாய்ப்ப தென்ன?

கீழ்நெறிச் சடங்குகள் கிழிப்ப தென்ன?

மணத்தின் மறுநாள் மணப்பெண் ணாளைத்

தண்கதிர்ச் செல்வன் புணரத் தருவதாம்!

இரண்டாம் நாளில் இன்பச் செல்வியைக்

கந்தரு வர்பால் கலப்புறச் செய்வதாம்!

தீஎனும் தெய்வம் மூன்றாம் நாளில்

தூயள்பால் இன்பம் துய்க்கச் செய்வதாம்!

நாலாம் நாள்தான் மணமகன் புணர்வதாம்!

திராவிட மக்களின் செவிஏற்கு மோஇதை?

வைதிக மணத்தை மெய்என ஒப்பிடில்

தமிழர் பண்பு தலைசா யாதோ?

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழைஎனப் பேசும்

திருவள் ளுவனார் திருநெறி மாய்ப்பதோ?

திராவிடர் புரட்சித் திருமணம்

புரிந்தின் புறுக திருமண மக்களே!

வாழ்க்கை ஒப்பந்தம்

ப·றொடை வெண்பா

திராவிட நாட்டுப் பெருங்குடி மக்கள்

இருவர்தம் வாழ்க்கைஒப் பந்தம் இனிதாக -

நீவிர் சான்றாக - நிகழ்த்துவிக் கின்றேன்நான்.

"பாவையீரே!* உங்கள் பாங்கில் அமர்ந்துள்ள

* பாவையீரே - மணமகளாரே.

ஆடவர் தம்மை அறிவீரோ? அன்னாரைக்

கூடிஉம் வாழ்க்கைத் துணையாகக் கொள்ள

உறுதி உரைப்பீரோ?" என்று வினவ,

உறுதி அவ்வாறே உரைத்தார் மகளாரும்.

"தோழரே!* பாங்கிலுள்ள தோழியரைத் தேர்ந்தீரோ?

* தோழரே - மணமகனாரே

வாழுநாள் வாழ்க்கைத் துணையாகக் கொண்டீரோ?

ஆயின் உறுதி அறிவிக்க!மு என்னவே,

தூயர் அவ்வாறே உறுதியும் சொல்லிட

வாழிய நீவிர்எனப் பெரியார் வாழ்த்தினார்!

வாழிய என்றவையுள் மக்களெலாம் வாழ்த்தினார்!

தாரொன்றைத் தாங்கித்தம் கொழுநர்க்கே சூட்ட

நேரிழை யார்க்கும் நெடுந்தா ரவர்சூட்டக்

கையிற் கணையாழி கட்டழகியார் கழற்றித்

துய்யமண வாளரைத் தொட்டணிய, அன்னவரும்

தம்ஆழி, மங்கையர்க்குத் தந்து மகிழ்ந்தமர்ந்தார்!

செம்மைப் பெரியார் அறமொழிகள் செப்புகின்றார்:

அற மொழிகள்

"அன்பும் அறனும்

உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும்

அது" என்றார் வள்ளுவனார்.

இல்வாழ்வில் அன்பும்

அறமும் இருக்குமெனில்

நல்லதன்மை நல்லபயன்

நாளும் அடையுமன்றோ?

"மனைத்தக்க மாண்புடையாள்

ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத்

துணை" என்றார் வள்ளுவனார்!

வாழ்க்கைத் துணைவி

மனைக்குரிய மாண்புகொண்டு

வாழ்வில் அவனின்

வருவாய் அறிந்து

செலவு செயல்வேண்டும்

என்பது மன்றியும்,

"தற்காத்துத் தற்கொண்டான்

பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள்

பெண்" என்று சொல்கின்றார்.

தன்னையும் தக்கபடி

காத்துக் கொளல்வேண்டும்

தன்கொழுநன் தன்னையும்

காத்திடல் வேண்டும்

சீர்சால் திராவிடர்

பண்பு சிதையாமல்

நிற்பவளே பெண்ணாவாள்.

"மங்கலம் என்ப

மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட்

பேறு" பெறுக.

"வழங்குவ துள்வீழ்ந்தக்

கண்ணும் பழங்குடி

பண்பின் தலைப்பிரிதல்

இல்"மற வாதீர்.

"இளிவரின் வாழாத

மானம் உடையார்

ஒளிதொழு தேத்தும்

உலகு" தெளிக.

மணமகளாரே, மணமகனாரே

இணைந்தின் புற்றுநன்

மக்களை ஈன்று

பெரும்புகழ் பெற்றுநீடூழி

இருநிலத்து வாழ்கஇனிது.

நன்றி கூறல்

அறுசீர் விருத்தம்

மணமக்கட் குரியார் ஆங்கு

வாழ்த்தொலிக் கிடை எழுந்தே,

"மணவிழாச் சிறக்க ஈண்டு

வந்தார்க்கு நன்றி! இந்த

மணஅவைத் தலைமை தாங்கி

மணமுடித் தருள் புரிந்த

உணர்வுடைப் பெரியார்க் கெங்கள்

உளமார்ந்த நன்றி" என்றே

கைகூப்பி, அங்கெ வர்க்கும்

அடைகாயும் கடிது நல்கி

வைகலின் இனிதின் உண்ண

வருகென அழைப்பா ரானார்!

பெய்கெனப் பெய்த இன்பப்

பெருமழை இசையே யாக

உய்கவே மணமக்கள் தாம்

எனஎழும் உள்ளார் வாழ்த்தே.

http://www.tamilnation.org/culture/marriag...arriage.htm#pan

--------------------

இதில் சபேசனின் திருமண முறை ( தமிழ் நெறி திருமணமல்ல) எவ்வாறு அமைந்தது என்பதை நீங்களே தீர்மானியுங்கள்..!

Posted

என்ர மனுசி தாலி கட்டின அடுத்த நாள்ளே சொல்லி போட்டுது இந்த தாலி கொடியை கழுத்திலை வைச்சு இருக்க ஏலாமல் கிடக்குது ( 10 பவுண் எண்டா சும்மாவா) எண்டு.... நானும் பெரும்தன்மையா சொல்லி போட்டன். கழட்டி வையுங்கோ எண்டு ( எதுக்கு தாலிக்கொடியை பழுதாக்குவான்..??)

இதைவிட மஞ்சள் கயிற்றில் கட்டி இருக்கலாமே. வசதியாக இருந்திருக்குமோ என்னமோ . :rolleyes:

நெடுக் தாத்தா அபப்டியே எதிர்கால திருமண முறை பற்றியும் சொன்னீங்களே என்றால் உதவியாக இருக்கும் :wub:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சபேசனை உசுப்பேத்தி விட்டால்.. இந்து சமயத்தை கடிக்கிறது தொடரும் என்று நினைச்சிட்டீங்கள் போல..! :rolleyes:

"கைப்புள்ள அரிவாளோட வாறான்.. இன்று எத்தனை தலை உருளப் போகுதோ" என்று வடிவேலை.. பார்த்துச் சொல்லுற நகைச்சுவை போல இருக்குது.. உங்களின் வரிகைகளை வாசிக்கேக்க..! :wub:

நெடுக்காலபோவான் உங்கள் மனதிற்கு பட்டது சரியானதுதான்.............. நான் எழுத வந்ததை முழுமையாக எழுதமுடியாமல் ஒரு தடங்கல் ஏற்பட்டுவிட்டு அதனால் குறையாகவே அதை பதிவு செய்துவிட்டு சென்றுவிட்டேன் அப்படி செய்வது ஒரு முறையான கருத்தாடலுக்கு விலக்கானது. அந்த குறையான பதிவை நீங்கள் தவறாக புரிந்திருப்பின் அது எனது தவறே. தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலில் திருமண வாழ்த்துக்கள் மணமக்களுக்கு உரித்தாகட்டும்.

நீங்கள் சமஸ்கிருத/இந்து மத திருமணத்தை எதிர்த்து தமிழ்/இந்து திருமணத்தை நடத்தியிருக்கிறீர்கள்.அவ்வள

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதைவிட மஞ்சள் கயிற்றில் கட்டி இருக்கலாமே. வசதியாக இருந்திருக்குமோ என்னமோ . :rolleyes:

நெடுக் தாத்தா அபப்டியே எதிர்கால திருமண முறை பற்றியும் சொன்னீங்களே என்றால் உதவியாக இருக்கும் :wub:

பிள்ள தமிழர்கள் உலகில் ஒரு இனத்துவத்துக்கான மக்கள் கூட்டம். அவையின்ர எதிர்காலத்தை "நானே அறிவாளி" என்று கொண்டு தனிப்பட்ட நெடுக்காலபோவன் போன்றவர்கள் தீர்மானிக்க முடியாது. எனது அபிப்பிராயத்தை சான்றோர் முன் வைக்கலாம். அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

தமிழர்களின் பாரம்பரியம் பண்பாடு கலை கலாசாரம் என்பன எழுந்தமானமா ஒரு சிலர் தங்களின் சுய தேவைகள் கருதிச் சொல்லிட்டுப் போனவையல்ல. சான்றோர் (கற்றுத் தேறி சமூக நீதி வழி வாழ்ந்தோர்) சபை முன் வைத்து அலசி ஆராய்ந்து அதன் பின் தான் தமிழரின் வாழ்வியல் நடைமுறைகள் வகுப்பட்டு வந்த வரலாறு எம்மிடம் உண்டு. நாம் காட்டுமிராண்டி அல்லது வேடுவ இனமல்ல.

எம் மக்களில் சான்றோர் எனப்படுவோர் இருந்துள்ளனர். அவர்கள் வரலாற்றை இயக்கி உள்ளனர். அந்த வகையில்.. தனி ஒரு மனிதனான நான் எனது இனத்துக்கு என்னுடைய சீர்கேடுகளை மறைக்க பூசி மொழுகின நடைமுறைகளை வைச்சுக் கொண்டு.. இனத்துக்கான நெறி இதுதான் என்று சொல்ல.. அதை கேட்கிறதுக்கு தமிழன்.. கே***யன் இல்ல..! :lol:

*** - சுயதணிக்கை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நல்லவன்

***

நீங்கள் சொல்கின்ற கருத்துக்கும், இந்து மதத்தைப் பற்றிக் குற்றம்சாட்டி, அசிங்கமாகப் பேசி விட்டு,அது கொண்டிருந்த கலாச்சார அடையாளமான தாலி கட்டி வாழ விரும்புகின்ற சபேசனின் பற்றியதற்கும் என்ன சம்பந்தம்?

தேசியத் தலைவரின் திருமணத்தை இழுத்துப் பேசக் கூடாது என்று முழங்கிய தாங்கள், தமிழேந்தி அவர்களை ஏன் இழுக்க வேண்டும். அல்லது அப்போது புலிகள் அப்படியிருந்தார், இப்போது மாறிவிட்டார்கள் என்று தாங்கள் எழுதுவது என்ன அர்த்தத்தில்? புலிகள் அடிக்கடி கொள்கை மாற்றுகின்றவர்கள் என்று சொல்ல வருகின்றீர்களா?

கர்ப்பமாக இருக்கும்போது தாலி கட்டக் கூடாது என்பது மூட நம்பிக்கையா?

இத்தகவல் நான்; கேள்விப்படாத ஒன்று. அவ்வாறு இருப்பின், இப்படிக் கதைப்பது தான் முட்டாள்தனமானது. அக்காலத்தில் திருமணத்துக்கு முன்னர் குடும்பம் நடத்துவது கிடையாது. திருமணத்திற்குப் பின்னர் உடலுறவு வைத்துக் கொள்வார்கள். அப்படியிருக்கின்றபோது, ஒரு பெண் கர்ப்பமாக இருக்கின்றபோது தாலி கட்டுவது என்றால் அது இன்னுமொரு திருமணம். அப்போது அன்றிரவு உடலுறவு நடக்கலாம். இதனால் கர்ப்பமான பெண்ணின் குழந்தை சிதையக்கூடும். அப்பெண்ணுக்கும் உடலியல் பிரச்சனை வரும். தாலி கட்டாதே என்றால் அது கர்ப்பனாலத்தில் திருமணம் செய்யாதே என்ற அர்த்த்தில் எழுந்ததாகவே இருக்க வேண்டும்.

முன்னர்கள் எது செய்தாலும் உங்களைப் புத்தாலிசாலிகள் என்று நினைத்துக் கொண்டு தூசித்துப் பேசுவதே உங்களுக்கு வேலையாகப் போச்சு. முதலில் பகுத்தறிவான் ஆகுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சபேசன் அண்ணா!

உங்கள் திருமணத்திற்கும் அப்பாவாகவும் இருக்கின்றீர்கள்போல்...... அதற்கும் எனது மனமமார்ந்த வாழ்த்துக்கள்!

எல்லோருடைய கருத்துக்களையும் ஆழ்ந்து வாசித்தேன் முக்கியமாக உங்களுக்கு எதிரான கருத்துக்களை திரும்ப திரும்ப வாசித்தேன். ஒரு உண்மை ஒன்றை புரிந்துகொள்ள முடிகின்றது. நியாயமான கருத்தாடல்.... நாகரீகமான கருத்தாடல் மூலம் தமிழ் சமூதாயத்தை மாற்றிவிடலாம் என்று எண்ணினால் அது எளிதானதல்லா. மூடர்களை அறிவாழிகளாக்குவது வெறும் கற்பனையாக மட்டுமே இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன் ( சபேசனக்கு எதிரான கருத்துக்களை எழுதும் சக உறவுகள் நான் உங்களை மூடர்கள் என்று எழுதியதாக நினைக்க வேண்டாம் தொடர்ந்து வாசிக்கவும்). ஒரு மூளைநலம் குன்றியவரை நலமடைய செய்வதற்கு பல நேரங்களில் நாமும் மூளை நலம் குன்றியவர்போன்று நடிக்க வேண்டிய உங்களின் கட்டாயத்தை என்னால் புரியமுடிகின்றது. ஆனால் அதை நீங்கள் பல முறை சொல்லியும் சிலருக்கு விழங்காதது எனக்கு ஆச்சரியமாகவில்லை.

எனக்கு தமிழ்சமுதாயத்தின்........... ஒருசாரர் அடிக்கடி நடத்தும் ஒரு சம்பாசனைதான் (விவாதம்) ஞபாகம்வருகின்றது... தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது பிள்ளைகளை வைத்துக்கொண்டு மற்றான் பிள்ளைகளை கரும்புலிகளாக வெடிகுண்டுடன் அனுப்புகிறாராம்.... அது எவ்வாறு நியாயமானது என்பதே அந்த அறிவாளி கூட்டத்தின் நியாயமான கண்டுபிடிப்பு. அதாவது அவர்கள் மறைமுகமாக சொல்லவருவது தலைவரும் அவரது துணைவியாரும் பிள்ளைகளும் முதலில் கரும்புலிகளாக சென்று வெடித்தபின்தான் மற்றவர்களை அனுப்பும் தகுதி அவருக்கொண்டென்பதே அவர்களின் அறிவுக்கெட்டியது. தமிழனை தலைநிமிர வைக்க அந்த குடும்பம் எத்தனை நாட்கள் காட்டினில் வாழ்ந்திருக்கும்??? அத்தனைகளையும் இங்கே எழுத்திலே தரமுடியாது. இத்தனைகளையும் அவர்கள் தமது தாய்மணணுக்காக செய்த குற்றமே இன்று இந்த அறிவாளிகளுக்கு இப்படியொரு கேள்வியை கேட்க வைத்தது. ஆனால் அதை அவர்களுக்கு புரியவைக்க முடீயுமென்றால்............. முடியாதென்பதே எனது முடிவு. காரணம் அனுபவம்.

அதைத்தான் திரும்பவும் சொல்லவருகிறேன்..... ஒரு நல்ல அறிவுசார் விடயத்தை ஒரு சமுதாயத்தில் புகுத்துவது எளிதான ஒன்றல்ல.... அதற்கு பல உதரணங்கள் உண்டு. அதில் ஒன்றை உன்னிப்பாக பார்த்தால் இந்த உலகில் 13வீதம் தான் பணக்காரர்கள் மிகுதி 87வீதமும் அவர்கள் இன்னமும் பணக்காரர் ஆவதற்கு நேரடியாகவோ மறைமுகமாவோ உழைத்துகொண்டிருப்வர்கள் இதன் பொருள் என்ன? 87விதம் முட்டாள்கள் என்பதுதானே?

எத்தனை அறிவாளிகள் மீண்டும் மீண்டும் பிறந்து எனிமையானமுறையில் ஏழ்மையில் இருந்து வெளியேற எத்தனை முறைகளை சொன்னார்கள் புத்தக வடிவில் எழுதி வைத்துள்ளார்கள்........... ஆனால் பலன் என்ன ஆட்கள் மாறியார்கNளு தவிர வீதம் மாறவில்லையே? அவர்களின் முயற்சி கைகூடியதா,?

நீங்கள் சொல்லவருவதை எழுதிவைத்துவிட்டு மரணம்வரும்போது இறந்துபோகவேண்டிதுதான்..... முயற்சியை முடிந்த அளவில்தான் முயற்சிசெய்யலாம். முட்டாள்கள் மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டே இருப்பார்கள்.

கொஞ்சம் ஒருபடி மேலேபோய் தத்துவத்திற்காகவே வாழநினைத்தால்....... ஜேசுவை கடவுளாக்கியதுபோல் ஒருவேளை கோவிலுக்குள் உருவபடத்தை வைத்து கும்பிடவும் தொடங்கிவிடுவார்கள்....... அதிக கூட்டத்தை வரவழைத்தால் அவனுக்கு லாபம்தானே. தமிழிலே எனக்கு பிடித்த சொல் மதம்...... அது யானைகளிடத்திலும் இருப்பதால் மட்டுமல்ல மனிதர்களிடமும் இருப்பதால்.

(ஒரு பின்குறிப்பு தயா நெடுக்காலபோவான்....... நான் உங்களுக்கு திரும்பவும் ஒன்றை ஞபகபடுத்துகின்றேன் நான் கடவுள் இல்லை என்பதை 110வீதம் நம்புகிறேன். அதற்காக கடவுளை நம்புவவனை நான் வெறுப்பதில்லை. சமயங்கள் பலபேரை நன்வழி நடத்தி செல்வதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். உங்கள் இருவரினதும் பல கருத்துக்களில் எனக்கு எப்போதும் ஈடுபாடு உண்டு. நீங்கள் இருவரும் எனது மேற்கண்ட கருத்தைவாசிப்பின் இதன் பொருளை அறிவீர்கள் என எண்ணுகிறேன்.)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு பின்குறிப்பு தயா நெடுக்காலபோவான்....... நான் உங்களுக்கு திரும்பவும் ஒன்றை ஞபகபடுத்துகின்றேன் நான் கடவுள் இல்லை என்பதை 110வீதம் நம்புகிறேன். அதற்காக கடவுளை நம்புவவனை நான் வெறுப்பதில்லை. சமயங்கள் பலபேரை நன்வழி நடத்தி செல்வதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். உங்கள் இருவரினதும் பல கருத்துக்களில் எனக்கு எப்போதும் ஈடுபாடு உண்டு. நீங்கள் இருவரும் எனது மேற்கண்ட கருத்தைவாசிப்பின் இதன் பொருளை அறிவீர்கள் என எண்ணுகிறேன்.

நான் கடவுளை நிராகரிப்பதற்கோ அல்லது முழுமையாக ஏற்பதற்கோ என்னிடம் கடவுள் பற்றிய ஏற்புக்கோ.. நிராகரிப்புக்கோ எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. அதேபோல் என்னைச் சூழ உள்ளதைப் பற்றிய முழுமையான அறிவியல் அறிவும் என்னிடமும் இல்லை தற்போதை வரை உலகிடமும் இல்லை.. இன்னும் அது வரைக்கு வளரவில்லை..!

நான் மற்றவர்களின் சுதந்திரத்தை (மத சுதந்திரம் உட்பட) அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். அதில் தலையிடுவதில்லை. ஆனால் அவர்களுக்கு உள்ளது போல எனது எண்ணங்களை வெளிப்படுத்துவேன். அதை விடுத்து இதுதான் சரி என் வழியில் மந்தைகள் போல பின் தொடருங்கள் என்று எல்லாம் நான் கூவுவதில்லை. காரணம்.. உலகில் உள்ள எல்லா மனிதனையும் சமனாக மதிக்கிறேன். எல்லோருக்கும் சிந்திக்கும் ஆற்றல் உள்ளது ஆனால் அது வேறுபட்ட மட்டங்களில் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்வதால்..! எவரையும் நான் முட்டாள்களாக இனங்காண்பதும் இல்லை. அவர்களை அப்படிச் சொல்லி என்னை அறிவாளி அல்லது பகுத்தறிவுவாதி என்று ஆக்கிக்கிறதும் இல்லை..! :rolleyes:

Posted

(ஒரு பின்குறிப்பு தயா நெடுக்காலபோவான்....... நான் உங்களுக்கு திரும்பவும் ஒன்றை ஞபகபடுத்துகின்றேன் நான் கடவுள் இல்லை என்பதை 110வீதம் நம்புகிறேன். அதற்காக கடவுளை நம்புவவனை நான் வெறுப்பதில்லை. சமயங்கள் பலபேரை நன்வழி நடத்தி செல்வதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். உங்கள் இருவரினதும் பல கருத்துக்களில் எனக்கு எப்போதும் ஈடுபாடு உண்டு. நீங்கள் இருவரும் எனது மேற்கண்ட கருத்தைவாசிப்பின் இதன் பொருளை அறிவீர்கள் என எண்ணுகிறேன்.)

நானும் கடவுள் இருக்கிறார் என்பதை நம்புவதில்லை.... அப்படி ஒருவேளை இருந்தாலும் நான் கோயிலுக்கு போய் வளிபடுவதால் தான் எனக்கு நன்மை செய்வார் என்பதையும் நம்புவதில்லை...

நான் நம்புவதெல்லாம் நமது மக்களினால் கட்டப்பட்டு இருக்கும் சமுதாயம்... அதனோடு இருக்கும் பழக்க வழக்கங்கள்.. இதை எல்லாம் ஏற்று கொண்டதால்தான் நான் கூட அந்த சமூகத்தில் ஒருத்தன்...!

அப்படியான எமது சமூகத்தில் நல்ல சிந்தனைகள் இருக்கும் போது சில காலத்துக்கு ஒவ்வாத சிந்தனைகளும், மூடநம்பிக்கைகளும் இருக்கிறது...

மூட நம்பிக்கைகள் உடனடியாக களையப்பட்டு செயல் இளக்க செய்யப்பட வேண்டியது... காலத்துக்கு ஒவ்வாத சிந்தனைகள் மாற்றப்பட வேண்டும்... அதில் திருமணத்தையும் சேர்த்து கொள்ள முடியும்...

திருமணம் என்பது காலத்துக்கு ஒவ்வாத விடயம் இல்லை.. ஆனால் அதில் இருக்கு சில சடங்குகளை மாற்றி அமைப்பதில் தவறும் இல்லை...

குறிப்பாக அம்பி மிதித்து மனைவிக்கு கால்கழுவி மெட்டி போட்டுவிடலாம்.. அதன் பின் அருந்ததி பார்ப்பது கேணைத்தனமாக இருக்கும்... மஞ்சள் நீர் குடத்தில் கணவனும் மனைவியும் மோதிரம் தேடுவது இன்னும் கேணைத்தனமாக இருக்கும்...

ஐம்பூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, விண் எண்று எல்லாம் சாட்ச்சியாக வைத்து ஊர் கூடி மணமக்களை வாழ்த்துவது தான் தமிழர்களின் பாரம்பரிய திருமணம்.... அதில் அதைவிட ஒரு ஐயரை வைத்து தெரியாத மொழி ஒண்றில் புசத்த விடுவதையும் தவிர்க்கலாம்... அதுக்கு பதிலாக தமிழில் (அர்ச்சனை அல்ல) ஐம்பூத வாழ்த்துரையும், மணமக்களின் உறுதி உரையும் எடுத்து மாலை மாற்ற வைத்து... விரும்பினால் தாலியும் அணிவிக்கலாம்..!

இதில் பெரும்பகுதியானதை செய்த சபேசன் சிலதை செய்யாமல் விட்டார் என்பதை நீங்கள் எப்படி புதுமையாக பார்க்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை...

சாமியே இல்லை கோயிலை இடி என்பது புதுமை... திருமணமே செய்ய மாட்டோம் என்பதும் புதுமை... திருமண மந்திரங்களை தமிழில் ஓதுவது புதுமை அல்லவே... எனது திருமணம் சிங்கப்பூரில் நடந்தபோது ஐயர் தமிழில்தான் மந்திரம் ஓதினார்... அந்த கோயிலில் தமிழ் அர்ச்சனை நடப்பது வழக்கமாகி நீண்ட காலம் என்பதை பின்னர் அறிந்து கொண்டேன்... அதை நான் புதுமையாக பார்க்கவில்லை... வேண்டிய மாற்றமாகவே பார்க்கிறேன்...!!

Posted

ஏழு பக்கத்தை தாண்டியும் தனியொரு மனிதனாக இவ்வளவு பேர்களுடைய எதிர்த்தாக்குதலையும் சமாளித்து நிற்பதென்றால்........ "முதலையும் மூர்க்கனும் கொண்டது விடாது" என்ற தமிழ் மொழிதான் எனக்கு ஞாபகம் வருகிறது.

Posted

நண்பர் நெடுக்காலபோவான் இணையத் தளங்களை மட்டும் வாசிக்காது புத்தகங்களையும் வாசிக்க வேண்டும். குறள் நெறித் திருமணம் பற்றி இணையத் தளங்களில் இல்லாதது என்னுடைய குற்றம் அல்ல.

நீங்கள் கடைசியாக இணைத்த திருமண வடிவம் திராவிட கழகம் உருவாக்கிய "புரட்சித் திருமணத் திட்டம்" ஆகும்.

இதன் பாடல் வரிகளை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதியுள்ளார். "சுயமரியாதைத் திருமணம் - தத்துவமும் வரலாறும்" என்ற நூலில் 159ஆம் பக்கத்தில் இருந்து 163ஆம் பக்கம் வரை இந்தப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

எமது தமிழ் நெறித் திருமணத்தில் பயன்படுத்திய குறள்கள் மலேசியா போன்ற நாடுகளில் நடக்கின்ற "குறள் நெறித் திருமணங்களில்" இடம்பெறுபவை. சுவிஸில் நடந்த ஒரு திருமணத்திலும் இந்தக் குறள்கள் இடம்பெற்றன.

"தமிழிய நெறித் திருமணம்" என்ற நூலில் இந்தத் திருமண முறை விளங்கப்படுத்தப்பட்டுள்ளது.

அதை விட பக்தி நெறித் திருமணங்கள் பயன்படுத்தப்படும் தேவாரங்கள் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.

http://www.composetamil.com/tamil/content....p;Contentid=203

அதே வேளை தமிழர் திருமணங்களில் பயன்படுத்தக் கூடிய வேறு பல பாசுரங்களை இணைத்த உங்களுக்கு என்னுடைய அன்பான நன்றி! இவைகளும் தமிழ் நெறித் திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு பயன்படட்டும்.

இன்னும் ஒன்று

எங்கோ இருந்து வந்தவர்கள் ஏதோ ஒரு மொழியில் தமிழர்களின் திருமணத்தை நடத்தி வைக்க முடியும் என்றால், சந்தியில் நிற்பவர்களாலும் அது முடியும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

தயா சொல்வது போன்று நான் எந்தப் புதுமையும் செய்யவில்லை. உண்மையில் தமிழர்கள் சமஸ்கிருதத்தில் செய்கின்ற திருமணங்கள்தான் "புரட்சியானதும்", "புதுமையானதும்" ஆகும். அதைப் பற்றி நாம் ஏலவே நிறைய பேசியுள்ளோம்.

"சும்மா" சொல்வது போன்று அந்தந்த மதத்தவர்கள் அந்த மதங்களின் முறையிலேயே செய்வது என்றால் செய்யட்டும். ஆனால் ஓதுபவற்றை அந்தந்த இனத்தவர்களின் தாய்மொழியில் ஓதட்டும். தமிழர் திருமணங்கள் தமிழில் நடைபெற வேண்டும் என்பது பற்றியும் நிறைய விவாதித்து விட்டோம். நேரம் கிடைத்தால் நண்பர் "சும்மா" அவைகளை படித்துப் பார்க்கட்டும்.

பொன்னையா!

தமிழர் வாழ்வில் பத்து விதமான திருமணங்கள் இருந்ததாக அறிகிறோம். தமிழர்கள் காதல் வாழ்க்கைக்கு பெரு மதிப்புக் கொடுத்தவர்கள். முதலில் காதலித்து ஒன்றாக இணைந்து வாழ்ந்து, தாம் இணைந்து வாழ்வதை உலகிற்கு பிரகடனம் செய்வதே தமிழர் திருமணமாக இருந்தது. அதவாது அவர்கள் வாழ்கின்ற வாழ்வை உறுதிப் படுத்தும் ஒரு சடங்குதான் திருமணம். இணைந்து வாழ்பவர்கள் பிரிந்து விடக் கூடாது என்பதற்காகவே திருமணங்கள் உருவாக்கப்பட்டன.

பேச்சுத் திருமணங்கள் பிற்காலத்தில்தான் உருவாகின. இன்றைக்கு நீங்கள் சொல்கின்ற திருமண முறையும் மிகவும் பிற்காலத்தில்தான் உருவாகின. வாழ்க்கை முறைகள் காலத்திற்கு காலம் மாறி வந்திருக்கிறது. இதுதான் முறை என்று எதையும் நாம் முடிவு செய்ய முடியாது.

திருமணம் என்ற சடங்கிற்கு முன்பே நீங்கள் இணைகிறீர்களா அல்லது பின்பு இணைகிறீர்களா என்பது உங்கள் தனிப்பட்ட விடயம்.

உங்களுக்கு நேரம் கிடைத்தால் சங்க இலக்கியங்கள் சொல்கின்ற களவொழுக்கம் பற்றி படித்துப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நண்பரே

நான் சொல்வது கருத்தரித்த பெண்ணு;குத் தாலி கட்டுவது மூடநம்பிக்கை என்ற வாதத்தில் நீங்கள் சொன்ன கருத்துக்கு. அந்தப் 10 வகைத் திருமணங்களில் கருத்தரித்த பின்னர் திருமணம் செய் என்பது அடங்குகின்றதா?

களவொழுக்கம், கற்பொழுக்கம் என்பன எல்லாக் காலத்திலும் இருந்தன. ஏன் எக்காலத்திலும் விபச்சாரம் என்பது தமிழருக்குள் நடந்தவையே. அதற்காக அதைத் தமிழர் கலாச்சாரம் என்று அடையாளம் சொல்லிட முடியுமா?

10 திருமணங்களும் இவை தான்.

உறவு கொண்ட பின் திருமணம் என்பதை இவை வலியுறுத்தவில்லை

களவு மணம், தொன்றியல் மரபின் மன்றல், பரிசில் கொடுத்து மணத்தல், சேவை மணம், திணைக் கலப்பு மணம், ஏறுதழுவி மணம் முடித்தல், போர் நிகழ்த்தி மணமுடித்தல், துணல் கையாடி மணத்தல், பலதார மணம்

Posted

பொன்னையா,

எமது முன்னோர்கள் ஒன்றாய் இணைந்து வாழ்ந்த பின்னே திருமணம் செய்தார்கள் என்பதற்கு போதுமான இலக்கிய சான்றுகள் உள்ளன. தமிழர்கள் திருமணம் பற்றிச் சொல்கின்ற எமது இலக்கியங்கள் கருத்தரித்த காரணத்தினால் திருமணங்கள் செய்து வைத்ததாக சொல்லவில்லை. "பொய்யும் வழுவும்" தோன்றிய பின்னரே திருமணம் உருவாக்கப்பட்டதாக சொல்கிறது.

அதாவது இணைந்து வாழந்து விட்டு தலைவியை கைவிட்டு தலைவன் சென்றதாலும், வேறு பெண்களை நாடியதாலும்... இது போன்ற காரணங்களினால் பெரியவர்கள் திருமண முறையை கொண்டு வந்தார்கள். ஒன்றாய் வாழ்ந்து பிள்ளையும் பெற்று அதன் பிறகு பிரிந்து போயிருப்பார்கள் என்பதையும் நாம் இலகுவாக புரிந்து கொள்ளலாம்.

திருமணம் என்பது இருவர் ஒன்றாய் வாழ்வதை பிரகடனம் செய்யும் ஒரு முறை. இங்கே கருத்தரித்தல் பற்றி எந்தப் பிரச்சனையும் வரவில்லை. நீங்கள் கருத்தரித்தல் பற்றிய விடயத்திற்குள் நின்று சுற்றிக் கொண்டிருப்பது ஏன் என்று விளங்கவில்லை. திருமணத்தின் போது கருத்தரித்திருந்தால் என்ன கருத்தரிக்காது இருந்தால் என்ன? அது அவரவர் தனிப்பட்ட விடயம். தமிழர் திருமணம் என்பதற்கும் கருத்தரித்தல் என்பதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

யாழ் களத்தின் புகழ்பெற்ற தாலிமறுப்பாளர்கள் நான் தாலி கட்டியதால் கோபம் கொண்டு நான் தாலி கட்டியதன் காரணத்தை வினாவினார்கள். அதற்கான பல காரணங்களில் ஒன்றாக நான் சொன்ன ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு நீங்கள் எதற்கு சுழல்கிறீர்கள்? நான் திருமணத்தின் போது தாடி வளர்த்திருந்தேன். இப்பொழுது தமிழர் திருமணத்தில் மணமகன் தாடி வளர்த்திருக்க வேண்டுமா என்று கேட்பீர்கள் போலிருக்கிறதே?

இங்கே சொல்லப்பட்ட விடயம் தமிழர் திருமணங்கள் தமிழில் நடக்கட்டும் என்பதுதான்.

Posted

பகுத்தறிவு எண்டுற பெயரில எல்லாவிதமான கூத்துகளுக்கும் நாங்கள் தாளம் போடவேண்டும் என்ற தேவை இல்லை. பகுத்தறிவாளன் மட்டும் மனுசன் மிச்சம் எல்லாரும் குரங்குகளா?

தோழர் முரளீ! நாம் எல்லோருமே ஒரு காலத்தில் குரங்குகள் தான். சிலர் மனிதனாகிவிட்டோம். இன்னமும் கூட பலர்....? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

விமர்சனம் என்ற பெயரில் சபேசன் அவர்களின் மீது தனிப்பட்ட வன்மத்தில் அவரின் திருமணத்தை விமர்சித்தது கண்டனத்துக்குரியது. சபேசன் வெகு இலகுவாக புரியும் வண்ணம் தாலி கட்டியதன் அர்த்தத்தை விளக்கினார். தாலிகட்டியதும் மூடநம்பிக்கையை எதிர்த்து என சொன்னது கூட புரியவில்லையா? அது புரியாமல் ஏன் தாலி கட்டினாய் என அறிவிளி போல கேள்விகேட்டது நகைப்புக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எமது முன்னோர்கள் ஒன்றாய் இணைந்து வாழ்ந்த பின்னே திருமணம் செய்தார்கள் என்பதற்கு போதுமான இலக்கிய சான்றுகள் உள்ளன. தமிழர்கள் திருமணம் பற்றிச் சொல்கின்ற எமது இலக்கியங்கள் கருத்தரித்த காரணத்தினால் திருமணங்கள் செய்து வைத்ததாக சொல்லவில்லை. "பொய்யும் வழுவும்" தோன்றிய பின்னரே திருமணம் உருவாக்கப்பட்டதாக சொல்கிறது.

நம் முன்னோர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது கற்கால விலங்கு நடத்தை மனிதனை அல்லது இருண்ட உலக மனிதனையா..??!

எமது முன்னோர்கள் கூடி வாழ்ந்து கர்ப்பம் தரித்த பின் திருமணம் செய்யும் நடைமுறையைக் கொண்டிருத்தனர் என்பதற்கான இலக்கியச் சான்றுகளை இங்கு சமர்ப்பிப்பது அவசியம். வெறுமனவே இலக்கியச் சான்றுகள் இருக்கு என்று எவரும் எழுதிவிட்டு.. தங்களின் பொய்களையும் வழுக்களையும்.. " தமிழ் நெறித் திருமணம்" என்பதன் பெயரால் மூடி மறைக்கலாம் அல்லவா.

சபேசன்.. நான் 3 கட்டுரைகளையும் இணைத்ததன் நோக்கம்.. நீங்கள் அந்த 3 இலும் எதனையும் உருப்படியாக பின்பற்றவில்லை என்பதைக் காட்டத்தானே தவிர.. தமிழர் திருமண நெறி முறைகளை வரையறுப்பதல்ல எனது கட்டுரைச் சேர்க்கையின் நோக்கம்..!

இந்து தமிழர் முறைப்படி.. தாலி கட்டி இருக்கிறீர்கள். கூறை மாற்றி இருக்கிறீர்கள். கற்புக்கரசிகளை சபையில் நிறுத்தி இருக்கிறீர்கள்...???! இப்படி இன்னோரென்ன மூடநம்பிக்கைகளை கடைப்பிடித்திருக்கிறீர்கள்..!

ஆணாதிக்கம் உங்கள் திருமணத்தின் ஆரம்பம் தொடக்கம் செல்வாக்குச் செய்துள்ளது. இன்று வரை உங்கள் துணைவின் ஒரு கருத்துக் கூட எங்கும் பதிவாகவில்லை.. இத்திருமணம் தொடர்பில்..???! ஒரு பெண்ணின் உணர்வுகளைச் சிறைவைத்து விட்டு.. அவளுக்கு சம அந்தஸ்துக் கொடுத்தேன் என்று ஒரு ஆண் சொல்வது முற்றிலும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும். அந்தப் பெண் சொல்ல வேண்டும்.. என்னால் சம அந்தஸ்தை உணர முடிந்ததென்று.. அது நடக்கவே இல்லை..!

இப்படி.. பல முரண்பாடுகள் மிக்க ஒரு திருமணத்தை செய்துவிட்டு.. அதற்கு தமிழ் நெறித் திருமணம் என்று பெயரிட்டுக் கொண்டதும் இன்றி இப்படிச் செய்ய முன் வருவோருக்கு நான் உதவி செய்வேன் என்று உங்கள் தனிப்பட்ட எண்ணங்களை சமூகத்தில் தமிழ் நெறி என்பதாகக் காட்டி விதைப்பதை கண்டிப்பதே எமது கருத்தின் அடிப்படை நோக்கம்.

நாம் தாலி கட்டுவதற்கு எதிரானவர்கள் அல்ல. பக்தி பாசுரங்கள் பாடுவதற்கு எதிரானவர்கள் அல்ல. தமிழில் திருமண உறுதி மொழிகள் எடுப்பதற்கு எதிரானவர்கள் அல்ல. திருக்குறள் ஓதப்படுவதற்கு எதிரானவர்கள் அல்ல.

தாலியை தமிழரின் கையாலாகாத்தனம் என்றவர் நீங்கள்...! பக்திக்குரிய அடிப்படைகளை நிராகரித்தவர் நீங்கள். ***

*******

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குறிப்பாக இந்த நடைமுறைக்கு என்ன காரணம்..

இல்லத்தரசிகள் இருவர் குத்துவிளக்கு ஏற்றிய பின் மணமக்கள் திருமண உறுதிமொழி எடுக்கின்றனர்.

ஏன் இல்லத்தரசிகள் இருவர் குத்து விளக்கு ஏற்ற தெரிவு செய்யப்பட்டனர். இரண்டு விதவைப் பெண்களையோ அல்லது இரண்டு தவுதாரன் களையோ விட்டிருக்கலாம் தானே. அவர்களும் மனிதர்கள் தானே. ஏன் அவர்களுக்கு குத்து விளக்கு ஏற்ற அருகதை இல்லையா..??! சரி அவைதான் வேண்டாம்.. ஆணும் பெண்ணும் என்று ஒரு சிறுவனையும் சிறுமியையும் தேர்வு செய்து பாதுகாப்பான முறையில் மெழுகுவர்த்தி கொண்டு குத்து விளக்கை ஏற்றி இருக்கலாம் தானே.

இல்லத்தரசிகள்.. கற்புக்கரசிகள்.. இதில் தேர்வு செய்யப்பட்டக் காரணம் என்ன..??! இது மூடநம்பிக்கையில்ல்லையா..???! :unsure::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குறிப்பாக இந்த நடைமுறைக்கு என்ன காரணம்..

ஏன் இல்லத்தரசிகள் இருவர் குத்து விளக்கு ஏற்ற தெரிவு செய்யப்பட்டனர். இரண்டு விதவைப் பெண்களையோ அல்லது இரண்டு தவுதாரன் களையோ விட்டிருக்கலாம் தானே. அவர்களும் மனிதர்கள் தானே. ஏன் அவர்களுக்கு குத்து விளக்கு ஏற்ற அருகதை இல்லையா..??! சரி அவைதான் வேண்டாம்.. ஆணும் பெண்ணும் என்று ஒரு சிறுவனையும் சிறுமியையும் தேர்வு செய்து பாதுகாப்பான முறையில் மெழுகுவர்த்தி கொண்டு குத்து விளக்கை ஏற்றி இருக்கலாம் தானே.

இல்லத்தரசிகள்.. கற்புக்கரசிகள்.. இதில் தேர்வு செய்யப்பட்டக் காரணம் என்ன..??! இது மூடநம்பிக்கையில்ல்லையா..???! :unsure::D

இது கேள்வி. :lol: குற்றம் பார்த்தால் சுற்றமில்லை என்பதை பகுத்தறிவாளர் என்போர் எனிமேற் கொண்டு புரிந்து கொள்வார்கள்.

நானும் என்ன உங்களின் கொள்கை என்று கேட்டால் பதில் சொல்வதே இல்லை. பகுத்தறிவு எல்லாத்தையும் இங்கு இணைப்பார். அதை மட்டும் அங்கே போய்ப் படி, இங்கே போய்ப்படி என கதை விடுவார்.

தங்களுடைய கொள்கை என்ன என்று தெரியாதது ஒரு பிரச்சனை. அப்படி இருக்கின்றதிலும் விமர்சனம் வரும் என்பது அடுத்த பிரச்சனை.

Posted

இது கேள்வி. :D குற்றம் பார்த்தால் சுற்றமில்லை என்பதை பகுத்தறிவாளர் என்போர் எனிமேற் கொண்டு புரிந்து கொள்வார்கள்.

நானும் என்ன உங்களின் கொள்கை என்று கேட்டால் பதில் சொல்வதே இல்லை. பகுத்தறிவு எல்லாத்தையும் இங்கு இணைப்பார். அதை மட்டும் அங்கே போய்ப் படி, இங்கே போய்ப்படி என கதை விடுவார்.

தங்களுடைய கொள்கை என்ன என்று தெரியாதது ஒரு பிரச்சனை. அப்படி இருக்கின்றதிலும் விமர்சனம் வரும் என்பது அடுத்த பிரச்சனை.

தோழர் தூயவன்!

எங்கள் கொள்கைகளின் பால் தாங்கள் வைத்துள்ள அக்கறைக்கு மிக்க நன்றி! :unsure:

எங்களுடைய கொள்கைகளின் ஒன்று பார்ப்பனீய சடங்குகளை கட்டுடைத்தல். இப்போது நம் தோழருக்கு நடந்த திருமணத்தில் எது எது பார்ப்பனீய சடங்கு என்று அடையாளம் கண்டு சொல்வீர்களேயானால், அடுத்தடுத்த தோழர்களின் திருமணங்களில் அவற்றை தவிர்க்கலாம். பார்ப்பனரின் சடங்குகள் என்னவென்று பார்ப்பனருக்கு தானே தெரியும்? எங்களுக்கு எப்படி தெரியும்? :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தூயவன் இப்படி நிறைய இருக்குது. எல்லாவற்றையும் ஒரே தடவையில் கேட்டால்.. சபேசன்.. அவற்றுக்கு ஒரு காரணம் கண்டுபிடித்து விளக்கம் சொல்லி சமாளிப்பை பதிலளிப்பார். எனவே கொஞ்சம் கொஞ்சமா அவரட்ட இருந்தே அவரின்ர நிலைப்பாடுகளைக் கறந்திட்டு.. கேள்விகளைத் தொடுப்பதுதான் அவரின் உண்மை முகத்தை தமிழ் மக்கள் இனங்காண உதவும்..! :unsure::D

Posted

தூயவன் இப்படி நிறைய இருக்குது. எல்லாவற்றையும் ஒரே தடவையில் கேட்டால்.. சபேசன்.. அவற்றுக்கு ஒரு காரணம் கண்டுபிடித்து விளக்கம் சொல்லி சமாளிப்பை பதிலளிப்பார். எனவே கொஞ்சம் கொஞ்சமா அவரட்ட இருந்தே அவரின்ர நிலைப்பாடுகளைக் கறந்திட்டு.. கேள்விகளைத் தொடுப்பதுதான் அவரின் உண்மை முகத்தை தமிழ் மக்கள் இனங்காண உதவும்..! :unsure::D

நெடுக்ஸ் அவர்களே!

அப்படி என்ன அவரை இதுவரை இனம் காண வைத்துவிட்டீர்கள்? இன்னமும் இனம் காண வைக்க உதவப் போகிறீர்கள்!

தனிநபர் தாக்குதலை தவிர்த்து சரக்கிருந்தால் விவாதத்தில் ஈடுபடுங்கள். ***

தோழர் சபேசன் அவர்கள் பார்ப்பனரை அழைத்து மந்திரம் ஓதாமல் திருமணம் செய்து காட்டியிருப்பதை ஒரு புரட்சியாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். சுயமரியாதை திருமணங்கள் இன்னமும் பிரபலமாகாத ஐரோப்பிய தமிழ் சமூகத்தில் சபேசன் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். வென்றவர் அவர் தான்! ***

***

Posted

களவொழுக்கம் பற்றி தனியாக பார்ப்போம். இங்கே பிரச்சனை என்னவென்றால் பலருக்கு விளக்கம் குறைவு.

"இப்படிச் செய்யலாம்" அல்லது "இப்படிச் செய்வது தவறு இல்லை" என்று சொன்னால் அதை "இப்படித்தான் செய்ய வேண்டும்" என்று முட்டாள்தனமாக புரிந்து கொள்ளும் அரைகுறை விளக்கக்காரர்கள் இங்கே பலர் இருக்கிறார்கள். இல்லையென்றால் "கர்ப்பம்" பற்றிய விடயத்தை இந்த நிமிடம் வரை பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

இது பற்றி விவாதிப்பதை இந்தப் பதிலோடு நான் முடித்து வைக்க விரும்புகிறேன்.

தமிழர் மரபில் கர்ப்பமாய் இருக்கும் பொழுது திருமணம் செய்யக் கூடாது என்று எந்த விதிமுறையும் இல்லை. கர்ப்பமாய் இருக்கும் பொழுதுதான் திருமணம் செய்ய வேண்டும் என்றும் எந்த விதிமுறையும் இல்லை.

இதுவும் உங்களுக்கு விளங்கவில்லை என்றால் அதற்கு மேல் நான் ஒன்றும் செய்ய முடியாது.

ஆணாதிக்கம் பற்றிய விடயத்திற்கு வருகிறேன்.

திருமணத்தில் நேரே கலந்து கொண்டவர்கள் அந்தத் திருமணம் பற்றி எழுதியிருக்கிறார்கள். அவர்கள் திருமணம் ஆணாதிக்கம் இன்றி நடந்ததாக சொல்கிறார்கள். நான் எழுதியதை வைத்து தீர்மானிப்பவர்களை விட, நேரில் பார்த்தவர்களின் கருத்து சரியானது என்று நினைக்கிறேன். அவரவர் அவரவரின் சூழலைக் கொண்டு சில ஊகங்களை செய்வார்கள். அதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

இதிலே மிகப் பெரிய முரண் ஒன்றைப் பார்க்கிறேன்.

தாலி, குறள், பக்திப் பாசுரங்கள் இடம்பெற்ற என்னுடைய திருமணத்தை பெரும்பாலான பகுத்தறிவாளர்கள் வரவேற்கிறார்கள். என்னுடைய திருமணம் எப்படி நடக்க இருக்கிறது என்பது பற்றி நன்கு அறிந்த திராவிட இயக்கத் தலைவர்கள் எமக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்கள். நேரே திருமணத்தில் கலந்து கொண்ட பகுத்தறிவாளர்களும் மிக்க மகிழ்ச்சியோடு திருமணத்தை வாழ்த்தினார்கள்.

ஆனால்

கடவுளுக்கு, மதத்திற்கு, தாலிக்கு ஆதரவாக வாதாடியவர்கள் ஏதோ ஒரு விதத்தில் இந்தத் திருமணத்தில் குறைபிடிப்பதற்கு திரிகிறார்கள். இதற்கு பார்ப்பன விசுவாசத்தை விட வேறு காரணம் இருக்க முடியாது.

நான் தாலி இல்லாமல், பக்திப் பாசுரங்கள் இல்லாமல் உறுதிமொழி மட்டும் எடுத்துத் திருமணம் செய்திருந்தால், இவர்கள் பேசாது இருந்திருப்பார்கள். காரணம் அது இவர்களுடைய பிழைப்பை எவ்விதத்திலும் கெடுக்காது.

ஆனால் நானோ இந்துக்களும் பயன்படுத்தக்கூடிய ஒரு திருமண முறையோடு வந்து நிற்கிறேன். கடவுள் உண்டு என்று சொல்பவன், தாலி வேண்டும் என்று சொல்பவன் அனைவரும் பயன்படுத்தக் கூடிய ஒரு முறை இது.

அதுதான் இவர்களுடைய வயிற்றில் புளியைக் கரைக்கிறது. தம்மை இந்துக்களாக கருதுகின்ற தமிழர்கள் மத்தியிலும் இந்தத் திருமண முறை பரவினால், அது மற்ற விடயங்களிலும் தமிழைக் கொண்டு வருவதற்கு வழிகோலும். அதுதான் இவர்களுடைய அச்சம்.

உங்கள் அச்சம் புரிகிறது நண்பர்களே! நீங்கள் தாரளமாக குறை பிடியுங்கள்! விளங்கியும் விளங்காத மாதிரி நடியுங்கள்!

உண்மையில் உங்களோடு ஒரு சமரசத்தை நான் செய்திருக்கிறேன்.

சித்திரை புத்தாண்டை தமிழர்களின் அரசுகள் தூக்கிக் வீசி விட்டு, தைப் புத்தாண்டை அறிவித்தன. காரணம் சித்திரைப் புத்தாண்டில் ஆரியம் கலந்து விட்டது.

தமிழர் திருமணத்திலும் ஆரியம் கலந்து விட்டது. ஆனால் நான் அதை அப்படியே தூக்கி வீசாது, சீர்திருத்த முயன்றிருக்கிறேன். உண்மையில் இது நீங்கள் செய்ய வேண்டிய பணி.

நான் அடிக்கடி சொல்வேன். உங்கள் வேலையையும் நாம்தான் செய்ய வேண்டும் என்று. தம்மை இந்துக்கள் என்று சொல்லும் தமிழர்கள் செய்ய வேண்டிய வேலை இது. உங்களுக்காக என்னுடைய கொள்கைகளை ஓரமாக வைத்து விட்டு செய்து தந்திருக்கிறேன்.

இதில் மேலும் ஆலோசனைகள் தந்து இதை மெருகு படுத்த உதவுங்கள். அதை விடுத்து தொடர்ந்தும் இப்படியே இருந்தால், ஒரு நேரத்தில் ஆரியம் கலந்த அனைத்துமே குப்பைக்குள் போய்விடும், கடவுள்கள் உட்பட.

உங்கள் மீது கொண்ட அக்கறையால் இதை சொல்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதிர்கன்னி [மலர்குழலி]     இன்றைய வாழ்க்கையில் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சோகம் குறிப்பிடத்தக்க வயதில் திருமணமாகாமல் வாழ்க்கையைக் கழிப்பது. வேலை பார்ப்பதினாலோ அல்லது நிறையவே படிப்பதினாலோ அல்லது திருமணம் செய்து கொள்வதற்கான பொருளாதார மற்றும் சூழ்நிலை வசதியின்மையினாலோ பெண்களில் சிலர் முதிர்கன்னிகளாக வாழ்கின்றார்கள். அப்படியான ஒருவர்தான் மலர்குழலி. இவள் இலங்கை கிளிநொச்சி என்ற பகுதியில் பசுமையான வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தாள். இவள் 40களின் முற் பகுதியில் ஒரு அழகான முதிர்கன்னி, கருணை நிறைந்த இதயம் மற்றும் அரவணைப்பை வெளிப்படுத்தும் ஒரு ஆன்மா. மலர்குழலி தனது வாழ்நாள் முழுவதையும் தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இயற்கையின் அழகால் சூழப்பட்ட அந்த கிராமத்திலேயே கழித்தார்.   "அல்லிப்பூ தாமரைப்பூ ஆயிரம் பூப்பூத்தாலும் கல்யாணப் பூவெனக்குக் காலமெல்லாம் பூக்கலையே!"   அப்படித்தான் வாழ்க்கை போய்விட்டது. பூத்துக் காய்க்காத வாழ்வு; தனியளாக வாழ்ந்து முதிர்ந்து போனாள். சிறு வயதிலிருந்தே, மலர்குழலி ஆர்வமுள்ள மனதையும், கற்றலில் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். படிப்பில் விடாமுயற்சியுடன் இருந்த அவளுக்கு ஆசிரியை ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. இருப்பினும், சூழ்நிலைகள் அவளது அபிலாஷைகளுடன் ஒத்துப்போகவில்லை, அவள் ஊனமுற்ற. கொஞ்சம் வயதான பெற்றோரை கவனித்துக்கொள்வதற்கும் குடும்பத்தின் பாரங்களாலும் படிப்பை மேல் தொடரமுடியாமல் போய்விட்டது.   என்றாலும் வாழ்க்கை அளிக்கும் எளிய இன்பங்களில் ஆறுதலையும் மனநிறைவையும் கண்ட அவள், தனது பிரகாசமான புன்னகை, கனிவான இதயம் துணை கொடுக்க, தாயிடம் இருந்து இளமையில் பெற்ற விதிவிலக்கான சமையல் திறன் கைகொடுக்க, அதையே ஒரு தொழிலாக்கி கிராமத்தைச் சுற்றியுள்ள மக்களை தனது வீட்டு வாசலுக்கு இழுத்து, வீட்டில் இருந்தே தங்கள் தேவைக்கு உழைக்கத் தொடங்கினாள்.   வருடங்கள் செல்ல செல்ல, மலர்குழலியின் சுவையான உணவு வகைகளுக்கான நற்பெயர் வளர்ந்தது, மேலும் அவளது ருசியான உணவு மற்றும் ஆறுதலான கூட்டத்தை நாடும் கிராம மக்கள் கூடும் இடமாக அவளது வீடு மாறியது. அவள் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் அவள் மனதிற்குள் சில வேளை, அவளுடைய உணர்வுகள் போராடுவதும் உண்டு, மலர்கள் அணிந்த கொண்டையை உடையவள் என்று பெற்றோர் இட்ட பெயர், பெயர் அளவிலேயே வாழ்ந்து, தனிமையான வாழ்க்கை அமைந்த போதிலும், அதை தனக்குள்ளேயே அடக்கி, அவள் வெளியே அதை காடடாமல் மகிழ்வு போல வாழ கற்றுக்கொண்டாள்.   வாழ்க்கை அவளை தன் வழியில் அழைத்துச் சென்றாலும், மலர்குழலி அறிவு மற்றும் சுய முன்னேற்றத்தின் மீதான தனது ஆர்வத்தை ஒருபோதும் இழக்கவில்லை. அவள் மிகவும் நேசித்த புத்தகங்களின் ஒரு சிறிய தொகுப்பை அவள் வைத்திருந்தாள், அவள் இரவுகளை அவற்றின் பக்கங்களில் மூழ்கடித்தாள். பலதரப்பட்ட தலைப்புகளில் உரையாடும் அவளது திறன், அவளின் உணவுக்கு வரும் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்களிடமிருந்து மரியாதையையும் பாராட்டையும் பெற்றது.   மலர்குழலியின் இல்லமானது அறிவுரையை நாடுபவர்களுக்கு அல்லது வெறுமனே கேட்கும் காதுகளுக்கு ஆறுதல் மற்றும் ஞானம் தரும் இடமாகவும் மாறத் தொடங்கியது. வயிற்றுப் பசிக்கு உணவையும், அறிவு பசிக்கு நல்ல கருத்துக்களையும் கொடுத்தது. அதனால் அவர் கிராமத்தின் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசகராக ஆனார், சர்ச்சைகளுக்கு மத்தியஸ்தம் செய்ய உதவினார், ஊக்கமளிக்கும் வார்த்தைகளை வழங்கினார், மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடங்களைக் கற்பிக்கும் கதைகளைப் பகிர்ந்து கொண்டார். அவளுடைய அமைதியான இருப்பும், எந்தச் சூழ்நிலையிலும் ஏதாவது ஒரு பொருத்தமான தீர்வு காணும் திறனும் அவளைப் பலருக்கு நங்கூரமாக மாற்றியது.   ஒரு நாள், அகக்கடல் என்ற நபர் அந்த கிராமத்திற்கு தனது ஆசிரியர் வேலையில் மாற்றம் கிடைத்து வந்தார். அவர் ஒரு திறமையான இசைக்கலைஞரும் கூட. அவர் ஏற்கனவே ஒரு ஆசிரியை ஒருவளை திருமணம் செய்து இருந்தாலும், கொரோனா நோயினால் அவரை பறிகொடுத்தது மட்டும் அல்ல, பிள்ளைகளும் இல்லாததால், தனிக்கடடையாகவே அங்கு தனது புது ஆசிரியர் பணியை தொடங்கினார். மலர்குழலியின் சமையல் திறமை மற்றும் அவளது துடிப்பான இயல்புகளைப் பற்றிய கதைகளால் ஈர்க்கப்பட்ட அவர், அவளைச் சந்திக்க, மற்றும் தனது இரவு, வார விடுமுறை நாள் உணவுகளை அங்கு சாப்பிட முடிவு செய்தார். அவளுடைய அடக்கமான இல்லத்தில் அவன் அடியெடுத்து வைத்த கணம், மசாலா வாசனையும் சிரிப்பொலியும் அவனை வரவேற்றன.   மலர்குழலிக்கும் அகக்கடலுக்கும் நாளாக ஆக ஒரு நல்ல புரிந்துணர்வு நட்பு ஏற்பட்டது. அவர்கள் தங்கள் வாழ்க்கை, கனவுகள் மற்றும் அவர்களின் அனுபவங்களைப் பற்றி மணிக்கணக்கில் பேசினர். அகக்கடல் தனது கிட்டார் மீது தனது ஆத்மார்த்தமான சுருதிகளை வாசித்தார், மலர்குழலி தனது வயதை பெரிதாக பொருட்படுத்தாமல் அதற்கு ஏற்றவாறு அபிநயங்கள் பிடித்து மகிழ்வார். அவளும் அவனும் ஒத்த வயதில் இருப்பதாலும், தன்னை மாதிரியே ஒரு தனிமை அவனிடமும் இருப்பதாலும், அவள் வெளிப்படையாகவே அவனுடன் பழகுவதில் பிரச்சனை இருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் அவர்களின் தொடர்பு ஆழமடைந்தது, மேலும் கிராமவாசிகள் அவர்களுக்கு இடையே உருவாகும் பிணைப்பை கவனிக்காமல் இருக்கவும் இல்லை.   அகக்கடல் அந்த கிராமத்துக்கு வந்து, ஒரு ஆண்டால் மலர்குழலியின் பெற்றோர்கள் இருவரும் ஒரு விபத்தில் காலமானார்கள், இதுவரை பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற துணிவில் இருந்த அவளுக்கு, தனிமை மேலும் பெரிதாகியது. சிலர் அவளை இப்ப வெளிப்படையாக ஒரு முதிர்கன்னி, திருமணம் செய்து கொள்ளாத ஒரு பெண்ணாக பார்க்க தொடங்கினர். அவளது வீடு இன்னும் உணவுக்கு திறந்திருந்தது, என்றாலும் இப்ப அங்கு வருபவர்களின், சிலரின் போக்கில் சில மாற்றம் காணப்பட்டது. அது அவளுக்கு தொடர்ந்து சமையல் செய்து உணவு பரிமாறுவது ஒரு இடைஞ்சலாக மாறிக்கொண்டு இருந்தது.   அதைக்கவனித்த அகக்கடல், அங்கேயே அவளுக்கு துணையாக தங்க முடிவு செய்தான். நாட்கள் செல்ல செல்ல மலர்குழலி மற்றும் அகக்கடலின் நட்பு இன்னும் ஆழமான ஒன்றாக மலர்ந்தது. அவர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் கனவுகளையும் அச்சங்களையும் பகிர்ந்துகொண்டு ஒருவருக்கொருவர் சகவாசம் அடைந்தனர். இளமை கடந்து இருந்தாலும், அவர்களின் இதயம் இளம் பருவத்தினர் போல, ஒரே அலைநீளத்தில் எதிரொலித்தது. மலர்குழலி தன் எல்லைக்கு அப்பாற்பட்டதாக நீண்ட காலமாக நம்பியிருந்த உணர்வுகளை, தான் இப்ப அனுபவிப்பதை உணர்ந்தாள். என்றாலும் சமூக அமைப்பையும் மதிக்க வேண்டும் என்பதும் அவனுக்கு தெரியும். எனவே ஊரறிய, அவர்களின் முன்னாலையே அவளின் கையை பிடிக்க வேண்டும் என்ற முடிவுடன், ஒரு மாலை நேரத்தில், சூரியன் வானத்தை ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களால் வரைந்தபோது, அகக்கடல் தனது கிட்டார் மெல்லிசை மூலம் மலர்குழலியிடம் தனது காதலையும் திருமணம் செய்யும் எண்ணத்தையும் ஒப்புக்கொண்டார். மலர்குழலியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, அவள் ஒரு காலத்தில் இளமைக்காகவே காதல் ஒதுக்கப்பட்டது என்று எண்ணியவள், அது தவறு என்பதை உணர்ந்தாள். இவர்களது காதல் கதை கிராமத்தில் கிசுகிசுக்கப்பட்ட கதையாக மாறினாலும், காதலுக்கு வயது இல்லை என்பதற்கான அடையாளமாக அது அமைந்தது.   ஒரு நாள், சிறு குழந்தைகள் சிலர் அவளது புத்தகங்களின் தொகுப்பைக் தற்செயலாக கண்டுபிடித்தனர். அந்த பக்கங்களில் உள்ள கதைகள் மற்றும் அறிவால் ஈர்க்கப்பட்ட அவர்கள், பாடசாலையால் வந்தபின் தங்கள் மாலை நேரத்தை அதில் செலவிடத் தொடங்கினர். ஆசிரியையாக வேண்டும் என்ற மலர்குழலியின் கனவு உண்மையில் இறக்கவில்லை; வேறு வடிவமாக பிள்ளைகளூடாக வெளிவரத் தொடங்கியது.   குழந்தைகளின் உற்சாகம் மலர்குழலியில் ஒரு புதிய தீப்பொறியைப் பற்றவைத்தது. அவள், புது கணவர் அகக்கடலின் உதவியுடன் ஒரு பெரிய மரத்தின் நிழலின் கீழ் முறைசாரா வகுப்புகளை நடத்தத் தொடங்கினாள். குழந்தைகளுக்கு வரலாறு, இலக்கியம், அறிவியல் மற்றும் கருணை மற்றும் பச்சாதாபத்தின் முக்கியத்துவம் பற்றி கற்பித்தாள். கிராமப் பெரியவர்கள் விரைவில் அவளது முயற்சிகளை அங்கீகரித்து, தங்களின் ஆதரவை வழங்கினர், ஒரு சிறிய சமூக நூலகம் மற்றும் கற்றல் மையத்தை நிறுவ உதவினார்கள்.   மலர்குழலியின் நூலகம் முழு கிராமத்திற்கும் அறிவு மற்றும் உத்வேகத்தின் மையமாக மாறியது. படிக்கவும், கற்றுக்கொள்ளவும், விவாதிக்கவும் எல்லா வயதினரும் அவளது தாழ்மையான இல்லத்திற்கு திரண்டனர். அவள் கற்பித்த குழந்தைகள் தாங்களாகவே மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் வளர்ந்தனர், அவர்களின் பாதைகள் மலர்குழலியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டன.   வருடங்கள் செல்லச் செல்ல மலர்குழலியின் இருப்பு அவளைச் சுற்றியிருந்தவர்களின் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டே இருந்தது. அவளின் முதிர்கன்னி வாழ்க்கை முற்றுப்புள்ளிக்கு வந்தது மட்டும் அல்ல, அவளின் மற்றோரு ஆசையான ஆசிரியர் பணியும் ஒரு விதத்தில் நிறைவேறியதுடன், இரட்டைக் குழந்தைகளின் தாயாகவும் இன்று மகிழ்வாக வாழ்கிறாள். மலர்குழலியின் கதை அவளது கிராமத்திற்குள் மட்டுமல்ல, இலங்கையில் எங்கும் பரவி அவளுக்கு புகழ் சூடியது.   என்றாலும் அவளின் வாழ்வு சவால்கள் இல்லாமல் இல்லை, ஏனென்றால் சமூகம் அதன் தப்பெண்ணங்களைக் கொண்டிருந்தது, ஆனால் மலர்குழலியும் அகக்கடலும் அவர்களை நெகிழ்ச்சியுடனும், விதிமுறைகளின்படியும், இணைந்து வாழும் உறுதியுடனும் எதிர்கொண்டனர். வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் காதல் மலரலாம், வயது என்பது வெறும் எண்தான் என்பதை கிராமவாசிகளுக்குக் கற்பித்த அவர்களின் கதை பலருக்கு உத்வேகமாக அமைந்தது.   நன்றி   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு! இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹெச்.இ.மே-எலின் ஸ்டெனர் (H.E.May-Elin Stener) உடன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்திப்பினை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பானது நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சந்திப்பின் போது, வறுமை ஒழிப்பு, சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள், வரிச் சீர்திருத்தங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய விடயங்களுடன் இரு நாடுகளுக்கும் இடையே கூட்டுப் பங்காளித்துவ மேம்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது பிரதமர் கலாநிதி அமரசூரிய, இலங்கையின் கல்வி முறையை மாற்றியமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், மேம்பட்ட பொதுச் சேவை வழங்கலுக்காக ஆட்சியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துரைத்தார். பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி.சகரிகா போகஹவத்த மற்றும் பணிப்பாளர் நாயகம் திருமதி ஷோபினி குணசேகர உட்பட நோர்வே தூதரகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். https://athavannews.com/2024/1413421
    • கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்! அமெரிக்காவின்  நியூயார்க் நகரத்திலிருந்து லண்டனுக்கு 60 நிமிடங்களுக்குள் பயணம் செய்யும் வகையில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையொன்றை அமைக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் எலான் மஸ்குக்கு சொந்தமான தி போரிங் கம்பெனி சார்பாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதைகளை அமைத்து போக்குவரத்தை ஏற்படுத்த அவர் திட்டமிட்டு இருப்பதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுரங்க பாதையானது 3,000 மைல்கள் அதாவது 4800 கிலோமீற்றர் நீளம் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது. அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு அதில் அதிவேக ரயில்களை இயக்க வேண்டும் என்பதே எலான் மஸ்கின் கனவாகும். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையினான பயண நேரத்தை 1 மணிநேரமாகக் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அமெரிக்காவிலிருந்து பிரித்தானியாவுக்கு  விமானத்தில் செல்ல வேண்டும் என்றால் 8 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. . இதற்கு முன்பு இது போன்ற சுரங்கப்பாதைகளை அமைப்பதற்கான தொழில் நுட்பங்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் இந்த திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டிருந்தார். ஆனால் தற்போது அவருக்கு சொந்தமான போரிங் கம்பெனி சுரங்கப்பாதை அமைப்பதில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்துள்ளதால் தனது கனவை நனவாக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1413381
    • ஜேர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தையில் கார் தாக்குதல்! ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் உள்ள மாக்டேபர்க் (Magdeburg) நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஒன்பது வயது மற்றும் நான்கு வயோதிபர்கள் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை (20) மாலை வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அவர்களில் குறைந்தது 41 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலையடுத்து வெள்ளிக்கிழமை அந் நாட்டு நேரப்படி இரவு 07:00 மணிக்குப் பின்னர் சுமார் 100 பொலிஸார், வைத்தியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் 50 மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயதுடையவர் என்றும் அவர் 2006 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் வசித்து வருவதாகவும் அருகிலுள்ள நகரமொன்றில் வைத்தியராக பணியாற்றி வருவதாகவும் ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் ஒரு மனநல மருத்துவர் ஆவார், அவர் மாக்டேபர்க்கிற்கு தெற்கே 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பேர்ன்பர்க்கில் வசித்து வந்தார். 2006 இல் ஜெர்மனிக்கு வருதை கதந்த அவர் 2016 இல் அகதியாக அங்கீகரிக்கப்பட்டார். மேலும், ஜேர்மன் அதிகாரிகளின் கூற்றுப்படி சந்தேக நபர் தனியாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். எனினும், தாக்குதலின் பின்னணியில் உள்ள சாத்தியமான நோக்கம் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை. மேலும், அவருக்கு இஸ்லாமிய தீவிரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லை எனவும், அவர் கடந்த காலத்தில் சமூக ஊடகங்களில் இஸ்லாத்தை விமர்சித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1413409
    • செங்கடலில் சொந்த போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திய அமெரிக்கா! செங்கடலில் தனது சொந்த போர் விமானம் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது. அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்ட F/A-18F போர் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. எனினும், அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை அந்த நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானிகள் மேற்கொண்ட பணி என்ன என்பதை விவரிக்கவில்லை. 1200 பேரைக் கொன்று 250 பேரை பயணக் கைதிகளாகக் கைப்பற்றிய இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதலுக்குப் பின்னர் 2023 ஒக்டோபரில் காசா பகுதியில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து சுமார் 100 வணிகக் கப்பல்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஹவுத்திகள் குறிவைத்துள்ளனர். காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 45,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, காசாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல், அமெரிக்கா அல்லது ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கப்பல்களை குறிவைப்பதாக ஹவுத்திகள் கூறுகின்றனர். இந்த நிலையில் ஹவுத்திகளை குறிவைத்து அமெரிக்கா செங்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தனது வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1413449
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.