Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நெறித் திருமணம்

Featured Replies

வசம்பு!

நீங்கள் இன்னும் ஒன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். சமுதாயத்திற்கு அஞ்சியிருந்தால் அவர்கள் தாலி கட்டச் சொன்ன போதுதான் கட்டியிருப்பேன். தாலி கட்ட வேண்டாம் என்று சொன்ன போது அல்ல.

உண்மையில் சமுதாயம் இப்பொழுது தாலி கட்டியதைத்தான் பழிக்க முனைந்தது. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கிடைத்தது போன்று கிண்டல்களும் கேலிகளும் கிடைக்கத்தான் செய்தன.

ஆகவே சமுதாயப் பழிக்கு அஞ்சி.. என்பது அர்த்தமற்ற குற்றச்சாட்டு. சமுதாயம் சொன்ன அத்தனை விடயங்களுக்கும் நேர்மாறாகத்தான் அனைத்தையும் செய்து விட்டு நிற்கிறேன். இந்த நிலையில் நீங்கள் சொல்வது எனக்கு சிரிப்பை வரவழைக்கிறது.

தூயவனுக்கு பதில் சொன்னால் விவாதம் எங்கேயே போய் விடும். லீயின் கேள்விக்கு என்னுடைய பதிலை தந்திருக்கிறேன். இந்து மதம் பற்றிய என்னுடைய பார்வை சரியா தவறா என்பது பிறிதொரு விடயம். அதை தனியாக வைத்துக் கொள்வோம்.

Edited by சபேசன்

  • Replies 180
  • Views 42.5k
  • Created
  • Last Reply

என்னுடைய எந்தக் கொள்கையையும் காற்றில் பறக்க நான் விடவில்லை. அப்படித்தான் எங்களுடைய திருமணம் நடந்தது.

பக்தி நெறித் திருமணத்தில் உள்ள பாடல்களை நான் தேர்ந்தெடுத்தேன். அதில் சிவபெருமானை நேரடியாக குறிப்பிடுகின்ற பாடல்களை நீக்கினேன். அதைப் பற்றி பின்பு சொல்கிறேன்.

இப்பொழுது தாலி விடயத்திற்கு வருகிறேன்.

தாலி கட்ட வேண்டும் என்று என்னுடைய மனைவி விரும்பினாலும், தாலி கட்டுவது இல்லை என்ற முடிவில்தான் நான் இருந்தேன். ஆனால் என்னுடைய முடிவை இரண்டு சம்பவங்கள் மாற்றின.

ஏற்கனவே ஐரோப்பாவில் நடந்த "வடமொழி மறுப்புத் திருமணம" ஒன்றில் கலந்து கொண்ட ஒருவர் அது பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்தத் திருமணம் தாலி இன்றி திருக்குறள் இன்றி திருமண உறுதிமொழியோடு மட்டும் நடந்திருந்தது. அந்தத் திருமணம் பற்றி அவர் சொல்கின்ற போது, அது ஒரு "றிசப்சன்" போல் இருந்தது, திருமணம் போன்று இருக்கவில்லை என்றார்.

அங்கே தாலி கட்டப்படவில்லை என்பதால், அது திருமணம் போன்ற உணர்வை அவருக்குத் தரவில்லை.

இப்பொழுது எனக்குள் சில சிந்தனைகள் எழுந்தன.

எந்தச் சடங்கின் மீதும் நம்பிக்கை இல்லாத நான், எமது மக்கள் தமது திருமணத்தை தமிழில் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் நான் என்னுடைய திருமணத்தை செய்கிறேன். என்னுடைய திருமணத்தில் கலந்து கொள்பவர்கள், என்னுடைய திருமணத்தை ஒரு திருமணமாக உணர்ந்தால்தான் அதைப் பின்பற்ற முன்வருவார்கள். அந்த உணர்வு வராது விட்டால் பின்பற்றுவது பற்றி பரிசீலிக்கக் கூட மாட்டார்கள். என்னுடைய முயற்சி வீணாகி விடும்.

ஆகவே தாலியை கட்டுவோமா என்ற யோசனையில் ஆழ்ந்தேன்.

இந்த நேரத்தில் இரண்டாவது சம்பவமும் நடந்தது.

மேலே சொன்னதன் அடிப்படையிலேயே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன். அதற்கு பதில் தாருங்கள். மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள் யாருக்கு விளக்கம் குறைவு என்று???

உங்கள் மனைவி கற்பினியாக இல்லாமல் இருந்திருந்தால் உங்கள் மனைவியின் ஆசைப்படி, சமுதாயம் திருமணம் என்று ஏற்றுக்கொள்வதற்காக நீங்கள் தாலி கட்டியிருப்பீர்களா இல்லையா??

  • கருத்துக்கள உறவுகள்

தாரளமாகப் பதில் சொல்லாம் சபேசன். அல்லது பிறிதொரு தலைப்பையும் போட்டாலும் பிரச்சனையில்லை. எனக்கும் அது பற்றிக் கதைக்க வேண்டி நிறையவே இருக்கின்றது.

வசம்பு!

எப்பொழுதும் போன்று உண்மையான பதிலையே இதற்கும் தருகிறேன். என்னுடைய பதில் என்ன செய்திருப்பேன் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்பதுதான். அனேகமாக தாலி கட்டியிருக்க மாட்டேன்.

நீங்கள் நான் எழுதியதைப் படித்துப் பாருங்கள்.

என்னுடைய மனைவி விரும்பினார். ஆனால் நான் கட்டுவதில்லை என்று முடிவில் இருந்தேன். பின்பு எல்லோரும் தமிழ் நெறித் திருமணத்தை பின்பற்றும் வண்ணம் தாலியை இடம்பெறச் செய்வோமா என்று ஆலோசிக்கிறேன்.

"தாலியை கட்டுவோமா என்ற யோசனையில் ஆழ்ந்தேன்".

கவனியுங்கள். முடிவெடுக்கவில்லை. யோசனைதான் செய்கிறேன்.

தாலி தேவையில்லை என்ற கருத்துள்ள நான், அதை மீறி தாலி கட்டும் முடிவை எடுத்தேன் என்றால், அதற்கு வலுவான காரணங்கள் தேவை. மனைவியின் விருப்பம் என்ற ஒரு காரணம் மட்டும் எனக்குப் போதவில்லை. மற்றவர்களும் தமிழ் நெறித் திருமணத்தை பின்பற்ற வேண்டுமே என்ற சிந்தனை அதை பரிசீலிக்கத் தூண்டுகிறது. தாலி பற்றிய ஒரு மூடநம்பிக்கை முடிவெடுக்க வைக்கிறது.

இதில் ஏதாவது ஒரு காரணம் மட்டும் இருந்திருந்தால், நான் தாலியை கட்டியிருக்க மாட்டேன். ஒரு காரணம் போதாது. மற்றைய காரணங்கள் இருந்து என்னுடைய மனைவி விரும்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் என்ன முடிவெடுத்திருப்பேன் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.

ஆனால் இப்பொழுது கேட்டால், தாலி கட்டி அது பற்றி ஒரு பிரகடனம் வெளியிட்டது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்தச் சம்பவங்கள் நடந்தது நல்லதுதான். உண்மையில் நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்.

என்னுடைய இயல்பு பற்றி எனக்கு ஒரு கருத்து உண்டு. சபையோரை அழைத்து, தாலியைக் கட்டி விட்டு, "இந்தத் தாலியைப் பற்றி தீர்மானிக்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை" என்று பிரகடனம் செய்ததன் மூலம் நான் நானாக நின்றிருக்கிறேன் என்ற திருப்தியும் பெருமிதமும் எனக்கு இருக்கிறது. தாலி கட்டாது விட்டிருந்தால் என்னால் இதை செய்திருக்க முடியாது.

திருமணத்தில் தாலியைக் கட்டி விட்டு, தாலி பற்றி சமூக மதவியல் கற்பிதங்களுக்கு எதிரான பரப்புரையை எம்முடைய பிரகடனத்தின் மூலம் செய்திருக்கிறேன். மற்றவர்களால் இணையத்தில் எழுதத்தான் முடியும். என்னால் சபையின் நடுவின் நின்று செய்து காட்ட முடியும்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ கலைஞர் மஞ்சள் சால்வைக்கு மருத்தவ காரணம் சொன்னது போலத் தான் தோன்றுது

நடந்தது அனைத்தையும் உள்ளது உள்ளபடி எழுதுகிற நான், அதற்கான காரணங்களையும் உள்ளது உள்ளபடிதான் எழுதுவேன்.

நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.

தாலி என்பதற்கு சமூகம் கொண்டிருக்கும் விளக்கம் என்ன என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல.

தாலியை கடவுளுக்கு நிகராக சமூகம் மதிக்கிறது. அது யாருடைய கழுத்தில் இருக்க வேண்டும் என்பதை சமூகம் தீர்மானிக்கிறது. அதை யார் கட்ட வேண்டும், எப்படிக் கட்ட வேண்டும், எப்பொழுது கட்ட வேண்டும் என்பதையும் சமூகம் தீர்மானிக்கிறது. அதை யார் யார் கட்டக் கூடாது என்பதையும் சமூகம் தீர்மானிக்கிறது.

தாலியை நான் கட்டி விட்டு, தாலி பற்றி தீர்மானிக்கும் உரிமை சமூகத்திற்கு இல்லை என்று அறிவிக்கிறேன். தாலி எங்களுடைய தனி உரிமை என்று அறிவிக்கிறேன்.

இதுதான் உண்மையான கலகம். தாலியை கட்டாது விடுவது கலகம் அல்ல. தாலி மீது சமூகம் வைத்திருக்கும் உரிமையை நான் என்னுடைய திருமணத்தில் வைத்து பறித்திருக்கிறேன்.

உண்மையை; சொல்லுங்கள்!

தாலி என்பது தனியுரிமை என்றும், அன்புச் சின்னம் என்றும் ஆகி விட்டால் பின்பு அதை யாராவது எதிர்ப்பார்களா?

தாலியை இல்லாது செய்வதை விட, தாலியை எதிர்ப்பதற்கான காரணங்களை இல்லாது செய்ய முயன்றிருக்கிறேன்.

இதை நீங்கள் புரியாது போன்று நடிப்பதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

சரி சபேசன். இதே அன்பு அடையாளம் கொண்டு தான் மற்றவர்களும் தாலியைக் கட்டினார்கள். அது உங்களுக்கு ஏன் தப்பாகத் தெரிந்தது. மூடநம்பிக்கை என்று தாக்கிப் பேசினீர்கள். மூடநம்பிக்கை காரணமாக இவ்வாறு கட்டுவது என்பதைத் தாங்கள் வாதிட்டாலும், அன்பினால் அவ்வாறு தாலி கட்ட முடியும் என்பதை ஏன் விவாதம் புரிந்த சந்தர்ப்பங்களில் தாங்கள் வலியுறுத்தத் துணியவில்லை??

என்னுடைய நினைவிலிருந்து சொல்வது என்றல் நான் தாலியைப் பற்றி பேசியது இரண்டு சந்தர்ப்பங்களில்.

ஒன்று தாலியின் இன்றைய தேவையற்ற கற்பிதங்கள் உருவான காலம் எது என்பது பற்றிய விவாதத்தில். இதன் அடிப்படையில் நான் எழுதிய கதையை கொண்டு விவாதம் வளர்ந்தது.

அந்தக் கதையிலும் தாலி தமிழர்களிடம் இருந்தது என்பதை சொல்லியுள்ளேன். தாலி திருமண அடையாளமாக கட்டுவார்கள் என்பதையும் சொல்லியுள்ளேன். ஆனால் தாலிக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து, தாலிதான் எல்லாம் என்ற கருத்துருவாக்கத்தை கிண்டல் செய்திருப்பேன். தாலிக்கு இப்படி ஒரு முக்கியத்துவம் வந்ததே தமிழர்களின் கையாலகத்தனத்தால்தான் என்று எழுதியிருப்பேன்.

இந்தக் கருத்துக்களில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. முன்பு தமிழர்கள் திருமணத்தின் ஒரு அடையாளமாக, அன்புச் சின்னமாக தாலியை அணிவித்தது போன்று நானும் அணிவித்தேன். சமூகம் கொடுக்கும் அர்த்தமற்ற கற்பிதங்களை நிராகரித்தேன்.

இரண்டாவது முறையாக ஒரு பெண்ணிடம் இருந்து தாலி அறுக்கப்பட்ட போது பேசியிருக்கிறேன்.

நீங்கள் கவனித்துப் பாருங்கள்! தாலியை சமூகம் அதீதமாக தூக்கிப் பிடிப்பதைப் பற்றித்தான் நான் கண்டித்திருக்கிறேன். தாலி கழுத்தில் இருப்பது சம்பந்தப்பட்டவர்களின் உரிமை என்று வாதாடியிருக்கிறேன்.

அதைத்தான் என்னுடைய திருமணத்திலும் செய்தேன்.

தமிழர்களின் திருமணத்தில் ஒரு அடையாளமாக அன்புச் சின்னமாக இருந்த தாலி, பின்பு வந்த ஆக்கிரமிப்பாளர்களால் அர்த்தமற்ற விதத்தில் அமைக்கப்பட்டு விட்டது. தாலி மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது போன்ற நிலை வந்து விட்டது.

இதற்கு எதிரான என்னுடைய கருத்துக்கள் அன்றும் இருந்தன. நாளையும் இருக்கும். அதில் மாற்றமில்லை.

அன்புச் சின்னமாக யாராவது தாலி அணிவித்து, அதை நான் கிண்டல் செய்திருந்தால், அவற்றைய நீங்கள் இங்கே இணைக்கலாம். ஒரு பெண்ணிடம் இருந்து தாலி கழற்றப்பட்ட போது "தாலி அன்புச் சின்னம் என்றால், கணவன் மீது அன்பு இருக்கும் வரை தாலி இருக்கலாம் அல்லவா?" என்று கேள்வி எழுப்பி வாதாடியிருக்கிறேன்.

தாலி அன்புச் சின்னமாக இருப்பதற்கு நான் ஆதரவாகவே இருந்திருக்கீறேன்.

தாலி தமிழர்களிடம் இருந்தது என்பதை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு சமூகம் வைத்திருக்கின்ற தாலி பற்றிய கருத்துருவாக்கத்தையே நான் எதிர்க்கிறேன். அதை தொடர்ந்தும் செய்வேன். சமூகத்தில்இந்த அர்த்தமற்ற கற்பிதங்கள் பற்றிய என்னுடைய கண்டனங்களும் கிண்டல்களும் தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனுக்கு வாழ்த்துக்கள் கூறி இப்படியான ஒரு புரட்சிகர திருமணத்தை அவுஸ்திரேலியாவில் நமது ஜமுனா அவர்கள் செய்வார் என்றும் இது ஒர அவுஸ்திரேலிய தமிழர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் என்றும் தெரிவித்துக்கொள்கின்றேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னடா இது........

ஒரு கல்யாணத்தால் இவ்வளவு குழப்பம் நிறைந்த பிரச்சனையா????? :D

இதுக்கு பதிலா நீங்க முதல்ல இருந்த மாதிரி கல்யாணம் கட்டமலே இருந்திருக்கலாம் :lol:

எல்லா சடங்குகளையும் மூடநம்பிக்கை எண்டு சொல்லுவதை என்னால் ஏற்க இயலாது......

எல்லாச் சடங்குகளும் முடநம்பிக்கையா இல்லையா என்பதை நாங்கள் தீர்மானிக்க முடியாது. எமக்குத்தான் ஒரு விளக்கமும் தெரிவதில்லையே.

ஆகக் குறைந்தது அவை தமிழில் அமைந்தால்தான் எங்களால் அவற்றை புரிந்து கொண்டு ஒரு தீர்மானத்திற்கு வர முடியும்.

அதற்காகவும் தமிழர்களை தமிழில் தங்கள் நிகழ்வுகளை நடத்தச் சொல்லிக் கேட்கிறோம்.

சுண்டல்!

அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே ஐந்தாறு தமிழ் நெறித் திருமணங்கள் நடந்துள்ளதாக அறிந்துள்ளேன்.

முதலில் தம்பதிகளுக்கு திருமணா வாழ்த்துக்கள்.

அச்சோ இவ்வளவு குழப்பங்களா?

ஏன் தமிழில் திருமணம் செய்கிறேன் என்று புரியாமல் நின்றவர்கள், வீட்டில் சென்று புத்தகத்தை படித்த பின்பு காரணத்தை அறிந்து கொண்டதாக பேசிக் கொண்டார்கள் என்று கேள்விப்பட்டேன்

எனக்கொரு சின்ன சந்தேகம்.

புரியாமல் நின்றவர்கள் சிந்தித்தபடியே(அதாவது மனதை ஒரு நிலைபப்டுத்தி இவ்விளம் தம்பதிகள் சீரும் சிறப்புமாக வாழணும் என மனசில் நினையாமல் ஏண்டா இவங்க குறள் ஓதி தமிழ்நெறி முறையென சொல்லி கட்டுறாங்க என குழம்பிப்போய் அதுதான் புரியாமல் நின்று) உங்கள் மங்கலநாண்களுக்கு ஆசீர்வாதம் செய்தார்களா? :D

  • கருத்துக்கள உறவுகள்

தாலி என்பதை வைத்துச் செய்யப்படும் அனைத்து மூடநம்பிக்கைகளையும் நான் எதிர்க்கிறேன்.

என்னுடைய பார்வையில் அது ஒரு ஆபரணம். ஆகக் கூட அதை ஒரு அன்புச் சின்னமாக வழங்கலாம். அதற்கு மேல் வேறொரு அர்த்தமும் அதற்கு இல்லை.

தாலி கட்ட வேண்டும் என்று சமூகம் சொல்வதற்கு காரணம்தாலி பற்றிய அர்த்தமற்ற கற்பிதங்கள்.

குறிப்பிட்ட நேரங்களில் தாலி கட்டக் கூடாது என்று சொல்வதற்கு காரணமும் அதே கற்பிதங்களே.

நான் எதிர்ப்பது தாலியை வைத்து உருவாக்கப்பட்டுள்ள கற்பிதங்களை.

நான் என்னுடைய கொள்கையில் தெளிவாக இருக்கிறேன்.

கோயில் வேண்டாம் என்று சொல்கின்ற நான், கோயில் தமிழில் வழிபாடு செய்யுங்கள் என்று வலியுறுத்துவதும் உண்டு.

பகுத்தறிவு என்பது இப்படி இப்படித்தான் என்று வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல.

வணக்கம் சபேசன்.

இன்றைய காலங்களில் தாலி பற்றிய மூடநம்பிக்கை என்பது வெறும் நடிப்பே. காரணம் 365 நாட்களில் 360 நாளும் வங்கி பாதுகாப்பு பெட்டியில் (locker) இல் தான் இருக்கும். அதனால நீங்கள் எந்த மூடநம்பிக்கையை எதிர்க்கிறீர்கள் என புரியவில்லை.

உங்களைப்போலத்தான் எனக்கும் தாலி கட்டுவதில் விருப்பம் இருக்கவில்லை ஆனால் எனது காரணம் 3000 - 4000 டொலர் வீண் பண விரையமம் செய்து எதற்காக வங்கியில் வைக்க வேணும் என. ஆனால் எனது மனைவியோ தாலி கட்டி தான் திருமணம் செய்யவேண்டும் என வற்புறுத்தினார். அதனால் நானும் நீங்கள் கொண்டிசன்(இதுக்கு என்ன தமிழ் சொல்) போட்ட மாதிரி தாலி கட்டினால் அவர் எப்பபும் தாலிலை அணிந்திருக்க வேண்டும் என கொண்டிசன் போட்டேன். அதற்கு இலவுவாக மெல்லிய சங்கிலியில் தாலியை கோர்த்து கட்டலாம் எனவும் கூறினேன் (செலவு மிச்சம் தானே) அதற்கும் அவர் சம்மதிக்கவில்லை. வாளிக்கம்பி போல இருக்கணும் என விரும்பினார். எனது கொண்டிசனுக்கும் சம்மதித்தார். எங்கள் 3500 டொலர் விரையமானது அவரது களுத்தில் தாலி ஏறியது. அவர் ஒத்துகொண்டதின் படி எங்கும் எப்பவும் தாலிலை அணிந்திருந்தார். அலுவலகத்திற்கும் அப்படிதான் சென்றுவந்தார். அவர் அதை ஒரு சுமையாக நினைத்ததாகவும் நான் நினைக்கவில்லை. உங்களின் பிரச்சாரபடி "அன்புச் சின்னம்" என நினைத்திருநத்தாரோ தெரியாது. பையன் பிறந்ததன் பின்னர் அவன் தாலி இல பிடிச்சு ஊஞ்சல் ஆடுறான் என அணிவதில்லை.

என்ன சொல்ல வாறேன் எண்டால்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பு வெறுப்பு இருக்கும். விரும்புவதற்கான காரணங்கள் வேறுபடலாம் அதுபோல விரும்பாததற்கான காரணங்களும் வேறு படலாம். உதாரணமாக: வசதி, பணவிரையம், பகுத்தறிவு, பாரம்பரியத்தை காப்பாற்றல், விளம்பரம், அதில் சமூக அந்தஸ்து இருப்பதாக கருதுதல் (உ.ம். பெண்ணுக்கு எத்தனை வயதோ அத்தனை பவுணில் தாலி கட்டுதல்), சமூகத்தடன் ஒத்து போதல்... இப்பிடி சொல்லிக்கொண்டே போகலாம்.

அதற்காக மற்றவர்களின் விருப்பு வெறுப்பையே இல்லை நம்பிக்கையையோ அதற்கான காரணங்களையோ பகுத்தறிவு என்ற பெயரில் கொச்சை படுத்தாதீர்கள். பகுத்தறிவு என்பதற்கு பல்வேறு வரைவிலக்கணங்கள் இருக்கலாம் என நினைக்கிறேன். இந்த திரியை முழுவருமாக படிக்கமு; வரை உங்கள் பகுத்தறிவின்வரைவிலக்கனம் கூட வித்தியாசமானது என நினைத்திருந்தேன் . இப்போதுதான் புரிகிறது பிராமண (பார்ப்பண) எதிர்ப்பு தான் உங்கள் வரைவிலக்கனம் என. இதை சிலர் சாதி வெறி எனவும் கூறுவர்.

பி.கு. எழுத்து பிழைகள் இருப்பின் தயை பண்ணி திருத்தி வாசிக்கவும்.

திருமணத்தில் எந்த ஒரு குழப்பமும் இல்லை. பெரும்பாலானவர்கள் தமிழ் நெறித் திருமணத்தை வரவேற்றதை என்னால் காண முடிந்தது. எல்லோருமே இரண்டு மங்கல நாண்களையும் ஆசீர்வதித்தார்கள்.

ஆனால் சிலருக்குள் "ஏன் ஐயர் இல்லை, ஏன் சமஸ்கிருத மந்திரங்கள் இல்லை" போன்ற கேள்விகள் மனதுக்குள் இருந்தது. அவர்களும் பின்பு புத்தகம் படித்து விளங்கிக் கொண்டதாக அறிந்தேன்.

இங்கே யாழ் களத்தில்தான் குழப்பம். ஆனால் இங்கே கள உறவுகளின் கேள்வி நியாயமானது. தாலியை கிண்டல் செய்த நான் தாலியை திருமணத்தில் இடம்பெறச் செய்தது ஏன் என்ற கேள்வி யாருக்குமே வரத்தான் செய்யும். அதைக் கேட்பது நியாயமானதுதான்.

அதற்கு என்னுடைய பதிலை சொல்லப் புறப்பட்டு மிக நீண்டு விட்டது.

சபேஸ்!

என்னுடைய பகுத்தறிவுச் சிந்தினைகளின் அடிப்படையாக தமிழ் பற்று விளங்கியது. தமிழை இழிவுபடுத்துகின்ற அனைத்தையும் நான் எதிர்க்கிறேன்.

இந்த விவாவதத்தில் நான் எழுதிய ஐந்து பக்கங்களில் தமிழைப் பற்றி நூறு முறையும் பார்ப்பனர்கள் பற்றி ஓரிரு முறையும் எழுதியருக்கிறேன். ஆனால் உங்களுடைய கண்ணுக்கு பார்ப்பனர் பற்றி எழுதியதுதான் தெரிகிறது.

இப்படியான பார்வையோடு நீங்கள் ஒன்றைப் படிப்பதில் யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை.

சில வேளைகளில் தமிழ் நெறித் திருமணங்கள் பரவினால் பார்ப்பனர்கள் தமிழர்களை சுரண்ட முடியாமல் போய்விடும் என்று கவலைப்படுகிறீர்களா?

எதை வைத்து தமிழ்நெறித் திருமணத்திற்காக வாதாடுவது "பார்ப்பன எதிர்ப்பு" என்ற முடிவுக்கு வந்தீர்கள்?

பக்தி இலக்கியங்களை தமிழ் நெறித் திருமணத்தில் சேர்த்தது பற்றி கடவுள் நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் உங்களுக்கு கடவுள் முக்கியம் இல்லை. சிலருடைய பிழைப்பும் தமிழர்கள் மீதான ஆதிக்கமும் காக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறீர்கள்.

அதனால்தான் "தமிழ் நெறித் திருமணம்" பற்றிய பரப்புரையை "பார்ப்பன எதிர்ப்பு" என்று அலறுகிறீர்கள்.

என்றாலும்தமிழை ஆதரிப்பது என்பது "பார்ப்பன எதிர்ப்பு" என்று சொல்லி பார்ப்பனர்கள் தமிழுக்கு எதிரானவர்கள் என்பதை நீங்கள் ஏற்றக் கொண்டதற்கு மகிழ்ச்சி!

உங்களைப்போலத்தான் எனக்கும் தாலி கட்டுவதில் விருப்பம் இருக்கவில்லை ஆனால் எனது காரணம் 3000 - 4000 டொலர் வீண் பண விரையமம் செய்து எதற்காக வங்கியில் வைக்க வேணும் என. ஆனால் எனது மனைவியோ தாலி கட்டி தான் திருமணம் செய்யவேண்டும் என வற்புறுத்தினார்.

3000 டொலர் தாலிக்கா இல்லை தாலிகோர்க்கும் கொடிக்கா செலவு செய்தீர்கள்..??

10 பவுணிலை கொடி எடுத்தால் அதை கழுத்திலை போடேக்கை நல்லா தூக்கி கொண்டு நிக்கும்... அதுக்கு கீழை ( புட்டலங்காயுக்கு கல்லு கட்டுறது போல ) கீழ ஒரு தங்க கட்டியை கோத்து விட்டா சரியா நிக்கும்.. அதுதான் தாலி எண்டுவினம்...

என்ர மனுசி தாலி கட்டின அடுத்த நாள்ளே சொல்லி போட்டுது இந்த தாலி கொடியை கழுத்திலை வைச்சு இருக்க ஏலாமல் கிடக்குது ( 10 பவுண் எண்டா சும்மாவா) எண்டு.... நானும் பெரும்தன்மையா சொல்லி போட்டன். கழட்டி வையுங்கோ எண்டு ( எதுக்கு தாலிக்கொடியை பழுதாக்குவான்..??)

என்னுடைய அறிதலின் படி மங்கலம் என்பது தமிழ்ச் சொல். தமிழில் இருந்து வடமொழிக்கு சென்றதாக தமிழறிஞர்கள் சொல்கிறார்கள். "நாண்" என்ற சொல் பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. "நாண்" என்பதும் தமிழ் சொல்லாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். எதற்கும் ஒரு முறை ஆராய்ந்து பார்த்துச் சொல்கிறேன்.

"சர்வ மங்கள பாக்ய " எண்டு ஐயர் மந்திரம் ஓதுறதை எண்டாவது கேட்டு இருக்கிறீர்களோ...??

மேலை எழுதி இருக்கிறீர்கள் தமிழுக்கு எதிரானது ஏதை எண்டாலும் எதிர்ப்பேன் எண்று... தாலி என்பது தமிழ் சொல் அதை ஏன் எதிர்க்கிறீகள்...?? மங்களநாண் ( நாண் எண்டால் கயிறு அல்லது றொட்டி) எண்று...

நீங்கள் செய்தது திருமணம் மட்டுதான் சபேசன்...

பெரியவர்களை அழைத்து உற்றார் உறவினர் முன்னிலையில் பெரியவர் ஒருவர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து, கையொப்பம் இட்டு, மாலை மாற்றி கணவன் மனைவி ஆகில் உறவுகளின் ஆசியை பெறுதன் தமிழ் முறைமை...

நீங்கள் செய்தது இந்து தமிழ் முறை திருமணம்... அவ்வளவுதான்... எண்றாலும் எண்றாலும் பிராமணன் ஒருவரை அழைத்து பணத்தை விரையம் செய்யாமல் சிக்கனமாக செய்த திருமணத்துக்கு வாழ்த்த வேண்டும்...!!! வாழ்த்துக்கள் சபேசன்.

Edited by தயா

சம்பிரதாயபூர்வமாக இணைந்த சபேசன் தம்பதிகககுகு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கடவுளை வழிபடுவது மூடநம்பிக்கை என்்றால்.. பாசுரங்களைப் பாடுவதோ அல்லது திருக்குறளை உச்சரிப்பதோ மூடநம்்பிக்கைதான்.. திருக்குறள் எல்லோருக்கும் விளங்கவா போகிறது?

அதற்கும் பார்க்க.. நாமே நல்ல வசனங்களை இலகு தமிழில் எழுதி வாசிக்கலாம்.

திருக்குறள்தான் தேவை என்றால்.. கடவுள் நம்்பிக்்கை தேவை இல்லை என்று எவ்வாறு கூற முடியும்? அடிப்படையில் இரண்டுக்கும் நம்பிக்கைதானே காரணமாகிறது! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

3000 டொலர் தாலிக்கா இல்லை தாலிகோர்க்கும் கொடிக்கா செலவு செய்தீர்கள்..??

10 பவுணிலை கொடி எடுத்தால் அதை கழுத்திலை போடேக்கை நல்லா தூக்கி கொண்டு நிக்கும்... அதுக்கு கீழை ( புட்டலங்காயுக்கு கல்லு கட்டுறது போல ) கீழ ஒரு தங்க கட்டியை கோத்து விட்டா சரியா நிக்கும்.. அதுதான் தாலி எண்டுவினம்...

மன்னிக்கணும்தயா. தாலி கொடி இரண்டிற்கும் தான். அதனாலதான் தாலிய செய்து சிறிய சங்கிலியில் கோர்த்து கட்டுவோமோ என அனுமானம் (idea) சொல்லிப் பர்த்தேன் (செலவு குறைந்திருக்கும்) ஆனாலும் அவா ஏற்கவில்லை. :lol:

என்ர மனுசி தாலி கட்டின அடுத்த நாள்ளே சொல்லி போட்டுது இந்த தாலி கொடியை கழுத்திலை வைச்சு இருக்க ஏலாமல் கிடக்குது ( 10 பவுண் எண்டா சும்மாவா) எண்டு.... நானும் பெரும்தன்மையா சொல்லி போட்டன். கழட்டி வையுங்கோ எண்டு ( எதுக்கு தாலிக்கொடியை பழுதாக்குவான்..??)

நானும் உதைப் பிந்திதான் யோசிச்சனான். பவுண் விலை ஏறிக்கொண்டு போற படியால கவனமா வைத்திருந்தால் ஒரு நேரம் நட்டம் இல்லாமல் விற்கலாம். :lol::lol:

Edited by Sabesh

இனிய சைவத்தமிழ் பாசுரங்களை மணவிழாவில் பாடி தன்னை ஒரு நல்ல சைவன் என நிரூபித்திருக்கிறார் நண்பர் சபேசன்!

வாழ்க அவர்தம் சிவபக்தி! வாழ்க அவர்தம் துணைவியார். வாழிய வாழிய மணமக்கள்!

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!!!

என்னும் சைவசித்தாந்தத்திற்கு ஏற்ப திருமந்திரத்தை ஜேர்மன் மணவிழாவில் முழங்கச்செய்த சபேசன் அவர்களின் சிவபக்தியை எவ்வளவு மெச்சினாலும் தகும். திருமந்திரமும் தேவாரமும் எல்லா தமிழர் திருமணங்களிலும் முழங்க வேண்டும் என்பது எனது ஆசை. வாழ்த்துக்கள் சபேசன்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

சபேஸ்!

என்னுடைய பகுத்தறிவுச் சிந்தினைகளின் அடிப்படையாக தமிழ் பற்று விளங்கியது. தமிழை இழிவுபடுத்துகின்ற அனைத்தையும் நான் எதிர்க்கிறேன்.

இந்த விவாவதத்தில் நான் எழுதிய ஐந்து பக்கங்களில் தமிழைப் பற்றி நூறு முறையும் பார்ப்பனர்கள் பற்றி ஓரிரு முறையும் எழுதியருக்கிறேன். ஆனால் உங்களுடைய கண்ணுக்கு பார்ப்பனர் பற்றி எழுதியதுதான் தெரிகிறது.

இப்படியான பார்வையோடு நீங்கள் ஒன்றைப் படிப்பதில் யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லை.

சில வேளைகளில் தமிழ் நெறித் திருமணங்கள் பரவினால் பார்ப்பனர்கள் தமிழர்களை சுரண்ட முடியாமல் போய்விடும் என்று கவலைப்படுகிறீர்களா?

எதை வைத்து தமிழ்நெறித் திருமணத்திற்காக வாதாடுவது "பார்ப்பன எதிர்ப்பு" என்ற முடிவுக்கு வந்தீர்கள்?

பக்தி இலக்கியங்களை தமிழ் நெறித் திருமணத்தில் சேர்த்தது பற்றி கடவுள் நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால் உங்களுக்கு கடவுள் முக்கியம் இல்லை. சிலருடைய பிழைப்பும் தமிழர்கள் மீதான ஆதிக்கமும் காக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறீர்கள்.

அதனால்தான் "தமிழ் நெறித் திருமணம்" பற்றிய பரப்புரையை "பார்ப்பன எதிர்ப்பு" என்று அலறுகிறீர்கள்.

என்றாலும்தமிழை ஆதரிப்பது என்பது "பார்ப்பன எதிர்ப்பு" என்று சொல்லி பார்ப்பனர்கள் தமிழுக்கு எதிரானவர்கள் என்பதை நீங்கள் ஏற்றக் கொண்டதற்கு மகிழ்ச்சி!

சபேசன், எனது சிற்றறிவுக்கு எட்டின வரை உங்கள் திருமணம் முழுவதுமாக ஒரு இந்து/சைவ திருமணம்போலவே நடந்திருக்கிறது. ஒன்றைத்தவிர... அதுதான் ஜயர். ஆனாலும் திருக்குறள் வாசித்தவர்களை அய்யர் என்றே குறிப்பிட்டுள்ளீர்கள். மற்றும் படி எதைத்தவிர்த்தீர்கள் எனக் கூறமுடியுமா?

தாலி, கூறை, கூறை மாற்றல், அய்யருக்கு பதில் உங்கள் நண்பர் திருக்குறள் ஓதினார், மந்திரத்திற்கு பதில் திருக்குறள், ஆணாதிக்கம் (உங்களின் மனைவிக்கு முழுவதுமாக இதில் உடன்பாடு இருக்கவில்லை என நீங்களே கூறியிருக்கின்றீர்கள் அத்துடன் ஒரிடத்தில் உங்கள் மனைவிக்காக தேவாரம்/ பக்தி பாடல்களை உள்ளடக்க ஒத்துக்கொண்டதாகவும் ஆனாலும் நீங்கள் தான் எந்த எந்த பாடல்களை போடுவது என்தை தீர்மானித்ததாக சொல்லியிருக்கிறீர்கள்.)

இப்படி பல விடயங்கள் என்னை அப்படி சிந்திக்க வைத்தது.

நிங்கள் மற்றவர்களின் நம்பிக்கை அல்லது அவர்கள் வாழும் முறை களை கொச்சைபடுத்தாமல் இருந்திருந்தால் இந்த திரியில் எனது கருத்தை வைத்திருக்வே மாட்டேன்.

இதுக்கு கீழ் உள்ளது எனது கருத்து மட்டுமே (நீங்கள் நான் அந்தணருக்கு வக்காலத்து வாங்குவதாக எழுதியதானால் எழுதினேன்) திசைதிருப்புவதற்காக அல்ல.

உண்மையை சொன்னால் எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் இருந்திருந்திட்டு கோவிலுக்கு செல்வேன். திருமணத்திற்கு முன்னர்: திருவிழா நேரம் எனில் பம்பலுக்கா, சைற் அடிக்க, சாப்பாடு தருவாங்கள் என பல காரணங்கள். மன அமைதிக்காகவெனின் முக்கிய பூசைகள் எதுவும் இல்லாத நேரம். (திருவிளா நேரம் போனால் கோவிலுக்கு உள்ளேயே போவதில்லை) திருமணத்திற்கு பின்னர் கூடுதாலாக மனைவிக்காக அவருடன் போவதுண்டு. விசேவ பூசைகள் அர்ச்சனை செய்வதில் எல்லாம் நம்பிக்கை இல்லை அதனால் செய்வதில்லை. மனைவிக்கு அர்ச்சனை செய்ய விருப்பம் ஆனால் என்னோட கிண்டுபடேலாதென விட்டுவிட்டார்.

ஒருமுறை அம்மா சனி விரத எள்ளெண்ணை எரிக்க கோவிலுக்கு அழைத்து செல்ல கேட்டு அழைத்து சென்ற போது... ஆழுக்கொரு பொட்டலம் எரிகக்வேணுமென 6 பொட்டலம் வாங்க சொன்னார். நானும் 5-6 டொலர் வருமாக்குமெண்டு "அண்ணை 6 பொட்டலம் தாங்கோ" எண்டு கேக்க அவரோ "60 டொலர்" தாங்கோ எண்டார்என்க்கு shocked ஆ போச்சு....இருங்கோவாறேன் எண்டுபோட்டு அம்மாட்ட அவங்கள் கள்ளர் கோயில்லை வியாபாரம் பண்ணுறாங்கள் எண்டு சொல்ல அம்மா என்னை ஏசிபோட்டு தானே வேண்டி எரித்தார்.

இதை ஏன் சொல்றேன் எண்ணடால், கடவுளை வியாரபொருள் ஆக்கி கோவிலை வியாபார நிலையமாக்கி கடவுள் நம்பிக்கை கொண்டர்களை வாடிக்கையாளர்களாக்கி ஏமாற்றுபவர்களை தான் குறை கூறணுமே தவிர பொதுவாக சைவர்களை கொச்சைபடுத்துவதாலோ அவர்கள் நம்பும் கடவுளை கொச்சைபடுத்துவதாலோ நிங்கள் எதிர் பார்க்கும் பகுத்தறிவு எடுபடாது. எதிர்மாறான தாக்கத்தையே ஏற்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறார். நான் தாலி கட்டாது திருமணம் செய்ய இருப்பதை என்னுடைய நண்பர் ஒருவரிடம் சொன்ன போது அவர் சொன்னார் "அதுதான் சரி, கர்ப்பமாக இருக்கும் போது தாலி கட்டக் கூடாது"

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

அவரோடு நின்றிருந்தால் பறவாயில்லை. ஒரு நேரத்தில் தாலி கட்டக்கூடாது என்ற சமூகத்தின் நச்சரிப்பு அதிகரித்து விட்டது. எம்முடன் திருமணம் பற்றி பேசுபவர்களில் பெரும்பாலனவர்கள் "தெரியும்தானே! தாலி கட்டக் கூடாது" என்று முடித்துக் கொண்டார்கள்.

ஆரம்பத்தில் நாம் இருவரும் தாலி கட்டாது இணைந்து வாழ்வதை கேலி செய்த அதே சமூகம் இப்பொழுது திருமணம் செய்யப் போகும் நேரத்தில் "தாலி கட்டாதே" என்று அடம்பிடித்தது.

எனக்கு இப்பொழுது தாலி கட்டுவதை விட, தாலி கட்டாது இருப்பதுதான் மூடநம்பிக்கைக்கு துணைபோவதாகப் பட்டது.

இதை வாசிக்க கிட்டடியில பார்த்த சத்தியராஜ் இன் படம் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. அதில் அவருக்கு ஒரு பைத்திய வேடம். மற்றவர்கள் சொல்வதற்கு எதிர்மாறாகத்தான் செய்வார் அல்லது சொல்லுவார். ஒருகட்டத்தில வில்லன்கள் (இதற்கு தமிழ் சொல் என்ன?) அவரை அடிப்பார்கள். உடனே அவரதுபக்கத்தார் அவரை திருப்பி அடிக்குமாறு கூற அவர் போசாம அடி வாங்கி கொண்டே இருப்பார். அவங்கள் யோசிச்சிட்டு "திருப்பி அடியாதை" எண்டு கத்துவாங்கள் உடனை திருப்பி அடீப்பார்.

Edited by Sabesh

ஒருமுறை அம்மா சனி விரத எள்ளெண்ணை எரிக்க கோவிலுக்கு அழைத்து செல்ல கேட்டு அழைத்து சென்ற போது... ஆழுக்கொரு பொட்டலம் எரிகக்வேணுமென 6 பொட்டலம் வாங்க சொன்னார். நானும் 5-6 டொலர் வருமாக்குமெண்டு "அண்ணை 6 பொட்டலம் தாங்கோ" எண்டு கேக்க அவரோ "60 டொலர்" தாங்கோ எண்டார்என்க்கு shocked ஆ போச்சு....இருங்கோவாறேன் எண்டுபோட்டு அம்மாட்ட அவங்கள் கள்ளர் கோயில்லை வியாபாரம் பண்ணுறாங்கள் எண்டு சொல்ல அம்மா என்னை ஏசிபோட்டு தானே வேண்டி எரித்தார்.

இதை ஏன் சொல்றேன் எண்ணடால், கடவுளை வியாரபொருள் ஆக்கி கோவிலை வியாபார நிலையமாக்கி கடவுள் நம்பிக்கை கொண்டர்களை வாடிக்கையாளர்களாக்கி ஏமாற்றுபவர்களை தான் குறை கூறணுமே தவிர பொதுவாக சைவர்களை கொச்சைபடுத்துவதாலோ அவர்கள் நம்பும் கடவுளை கொச்சைபடுத்துவதாலோ நிங்கள் எதிர் பார்க்கும் பகுத்தறிவு எடுபடாது. எதிர்மாறான தாக்கத்தையே ஏற்படுத்தும்.

நீங்கள் சொல்வது மிகச்சரி. இது போன்ற செயல்களால் நானும் கோவில் பக்கம் போய் பலவருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் சபேசன் போன்றவர்களின் பிரச்சாரங்கள், கொஞ்சம் மறந்து போய் கொண்டிருந்த தேவாரம், திருமந்திரம் , வேதமந்திரங்கள் போன்றவற்றை மீண்டும் படிக்க தூண்டிவிட்டது. வீட்டில் தனி அறை வைத்து பூசை செய்யும் பழக்கத்தையும் மீண்டும் ஏற்படுத்திவிட்டது :lol:

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போதுதான் வாசிக்கிறேன். முதலில் உங்கள் இருவருக்கும் அன்புகனிந்த வாழ்த்து.

//ஒரு இடத்தில் தாலி கட்டுவது மூடநம்பிக்கையாக இருக்கிறது. இன்னொரு இடத்தில்தாலியை கழற்றுவது மூடநம்பிக்கையாக இருக்கிறது. இன்னோர் இடத்தில் தாலியை கட்டாது விடுவது மூடநம்பிக்கையாக இருக்கிறது.

நாம் எந்த இடத்தில் நிற்கின்றோம் என்பதை வைத்துத்தான் எமது போராட்டத்தின் வடிவம் அமையும். //

மிக நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் சபேசன்.

கலப்புத் திருமணம் செய்ய முயன்றால், 'உங்களுக்குத்தான் சாதிப் பாகுபாடு இல்லையே, பிறகேன் உதைப்பற்றி யோசிக்கிறியள்?' எண்டுறது, தமிழில் வழிபாடு அல்லது அனைவருக்கும் அர்ச்சகர் உரிமை என்று கேட்டால், 'உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லையே, பிறகேன் கோயில் விசயங்களில தலையிடுறியள்' எண்டுறது.

இப்பிடி ஆண்டாண்டு காலமாக வைக்கப்பட்டுவரும் 'மொன்னையான' எதிர்க்கருத்தாடல்கள் உங்களிடமும் அவ்வப்போது சிலரால் வைக்கப்படுகின்றன. பொறுமையாகப் பதிலளித்துக்கொண்டிருக்கிற??ர்கள். சிலர் மட்டுமே சரியான விளக்கத்தோடு (வசம்பு போன்றவர்கள்) உங்கள் விளக்கங்களைக் கேள்விக்குட்படுத்துகிறார்க??்.

+++++++++++++++++++++++++++++

'ஏன் திருமணம் செய்தேன்' என்பதை நீங்கள் விளக்கிய பின்னரும் எனக்குத் தோன்றுவது, இதைத் தவிர்த்திருக்கலாமென்பதுதான

Edited by மோகன்
***** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

==============================

புதுசா ஒரு திருமணம் செய்துவிட்டு, அதையே பெரிய புரட்சியாகப் பறைதட்டித் திரியவேண்டிய சூழலில் நாம் வாழ்கிறோம்.

என்ன செய்வது?

தாலிகட்டி திருமணம் செய்வது, கட்டாமல் திருமணம் செய்வது அல்லது திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழ்வது எதுவுமே தவறல்ல! எல்லாம் அவரவர் சொந்த விருப்பு வெறுப்புகளை பொறுத்தது. ஆனால் இதையெல்லாம் புரட்சி, கத்தரிக்காய் என்று கூவி விற்க முனையும் போது தான் பிரச்சினை.

"நடைமுறை மீறல்" என்னும் ஒரு தகுதியை வைத்து மட்டுமே சில செயல்களுக்கு புரட்சி என்னும் முத்திரை குத்துவதென்றால் இன்று சில மேற்கு நாடுகள் ஆணும் ஆணும் திருமணம் செய்வதை சட்டபூர்வமாக்கி உள்ளதையும் புரட்சி என்று ஒப்புக்கொள்வோமா? இதை ஈழத்திலும் நடைமுறைப்படுத்தி விடலாமா? இல்லை என்றால் ஏன் கூடாது? இதை வேண்டாம் என்பது எப்படி பகுத்தறிவாகும்? பகுத்தறிவு(?) பேசும் நண்பர்கள் விளக்குவார்களா?

****

Edited by vettri-vel
**** மூலக்கருத்து நீக்கப்பட்டுள்ளதால் அதற்கான பதில் கருத்தும் நீக்கப்பட்டுள்ளது. - மோகன்

தயா,

வடமொழியில் உள்ள சொற்கள் அனைத்தும் வடமொழி அல்ல. தமிழில் இருந்தும் சில சொற்களை வடமொழி பெற்றிருக்கிறது. "மங்கலம்" என்பது தமிழில் இருந்து சென்ற சொல் என்பது சில அறிஞர்களின் வாதம். இந்தக் கட்டுரையில் திரு இராமகி அவர்கள் "மங்கலம்" என்பதன் வேர்ச்சொல் பற்றி ஆராய்ந்திருக்கிறார்.

நல்லவன்,

உங்களின் நல்லெண்ணம் மிக்க கருத்துகளுக்கு நன்றி. நானும் நிறையப் பேரிடம் தமிழ் நெறித் திருமணம் செய்யச் சொல்லி கேட்டுப் பார்த்து விட்டேன். யாரும் தயாராக இருக்கவில்லை. மதத்தைக் காட்டி மறுத்தார்கள். இந்துவாக இருந்து கொண்டும் தமிழில் செய்ய முடியும் என்று சொல்லிப் பார்த்தேன். அப்பொழுதும் தயங்கினார்கள்.

என்னிடம் ஒரு உறவினர் கேட்டார், "இவ்வளவு காலமும்இருந்து விட்டு, இப்பொழுது எதற்கு கலியாணம்?". நான் சொன்னேன் "சரி, நான் செய்யவில்லை, உங்கள் மகனுக்கு தமிழ் நெறியில் திருமணம் செய்வீர்களா?". அவர் ஒரு பதிலும் சொல்லவில்லை.

எல்லோரும் வெறுமனே பேச்சிலும் எழுத்திலும் "தமிழ் நெறித் திருமணம்" பற்றி பேசினால் போதுமா? யார் முன்வருவது? நான் முன்வந்தேன்.

ரிக், யதுர் போன்ற வேதங்களில் இருந்து புரியாத மந்திரங்களைப் பெறுவதை விட, தமிழ் மறை என்று சொல்லப்படும் குறளில் இருந்து நாம் எமக்கு தேவையானவற்றை பெறுவது தவறு அல்ல என்பது என்னுடைய கருத்து.

எனக்கும், உங்களுக்கும் சடங்கு என்பது தேவையில்லாமல் இருக்கலாம். தேவை என்று சொல்பவர்கள் பயன்படுத்தும் வண்ணம் "தமிழ் நெறித் திருமணம்" செய்தேன். நான் செய்த முறையை தந்திருக்கிறேன். இவற்றிலும் தேவையில்லாதவற்றை நீக்கி விடலாம். புதிதாக சேர்ப்பது என்றாலும் சேர்க்கலாம்.

இது வரை "தமிழ் நெறித் திருமணமா?" என்று கேட்டவர்கள் இருக்கிறார்கள். அதை எப்படிச் செய்வது என்பது குறித்து எதுவும் தெரியாதவர்களாக எம்மில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது பயன்படட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.