Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரஜினி - கமல்

Featured Replies

"வண்ணத்திரை" பகுதியில் யாரும் சொந்தமாக எழுதுவதாக தெரியவில்லை. நான் ஏதாவது எழுதுவோம் என்று நினைக்கிறேன். என்னுடைய வெப்ஈழம் இணையத்தில் அரசியலும், யாழ் களத்தில் பகுத்தறிவு சார்ந்த விடயங்களும் நான் எழுதுவது உங்களுக்குத் தெரியும். ஒரு மாறுதலுக்கு கொஞ்சம் சினிமாவும் எழுதப் போகிறேன்.

அதற்குள்ளும் அரசியல், திராவிடம், பார்ப்பனியம் என்று ஏதாவது வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. தமிழக சினிமா இவைகளை தவிர்த்துவிட்டு இயங்குவதும் இல்லை.

"ரஜினி - கமல்" என்று தலைப்புக் கொடுத்தாகி விட்டது. இவர்கள் இருவரையும் பற்றி எனது மனதில் தோன்றியவைகைளை எழுதுவது என்னுடைய எண்ணம். ஆனால் இவர்களைப் பற்றி மட்டும் எழுதப் போவதில்லை. எழுதுகின்ற பொழுது வருகின்ற அனைத்து எண்ணங்களையும் இதில் சேர்த்துக் கொண்டு போவேன்.

தமிழக சினிமாவில் எப்பொழுதும் "இரட்டையர்கள்" என அழைக்கப்படும் இரண்டு நடிகர்கள் உச்சத்தில் இருப்பார்கள். "தியாகராஜ பாகவதர் - பியூ சின்னப்பா", "சிவாஜி - எம்ஜிஆர்", "ரஜினி - கமல்" என்று இது தொடர்கிறது. அடுத்த இரட்டையர்கள் "அஜித்- விஜய்" என்றும் சொல்லப்படுகிறது.

இந்த "இரட்டையர்கள்" விடயத்தில் ஒரு உறுத்தலான ஒற்றுமை உண்டு. இரண்டு நடிகர்களில் ஒருவர் உயிரைக் கொடுத்து நடிப்பார். மற்றவர் சும்மா வந்து பாடி, ஆடி, சண்டை செய்து விட்டு போவார். உயிரைக் கொடுத்து நடிக்கும் நடிகரை விட மற்ற நடிகருக்குத்தான் மக்கள் செல்வாக்கு எப்பொழுதும் அதிகமாக இருக்கும். இது தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து இன்று வரை தொடர்கிறது.

தியாகராஜ பாகவதர் குதிரையில் பாடிய படி வந்தே மக்களை கவர்ந்து விட்டார். சவாலான பாத்திரங்களை ஏற்று நடித்து பியூ சின்னப்பாவிற்கு இரண்டாம் இடம்தான் கிடைத்தது.

"சிவாஜி - எம்ஜிஆர்" கதை சொல்லத் தேவையில்லை. உலகின் மிகச் சிறந்த நடிகர்களில் சிவாஜியும் ஒருவர் என்பது என்னுடைய கருத்து. இந்தக் கருத்தைச் சொல்வதற்காக உலக நடிகர்களின் படத்தை எல்லாம் நான் பார்க்கவில்லை. சிவாஜியோடு ஒப்பிடப்பட்ட மார்லன் பிராண்டோவின் ஓரிரு படங்களைப் கொஞ்சம் கொஞ்சம் பார்த்திருக்கிறேன்.

மார்லன் பிராண்டோவின் "காட் ஃபாதர்" கதைதான் கமலின் "நாயகன்" என்று கேள்விப்பட்டு, அதைப் பார்ப்பதற்கு உட்கார்ந்தேன். ஆனால் முழுவதும் பார்க்கவில்லை. பார்க்க முடியவில்லை. தமிழக சினிமாக்களை மட்டும் பார்த்த கண்களுக்கு அந்தப் படம் பெரும் அயர்ச்சியைக் கொடுத்தது. அண்மையில் ஒரு நண்பர் "காட் ஃபாதர் ஒரு அற்புதமான படம், கட்டாயம் பாருங்கள்" என்று சொன்னார். மீண்டும் ஒரு முறை பொறுமையாக இருந்து பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

மார்லன் பிராண்டோவின் இன்னொரு படமும் பார்த்திருக்கிறேன். சில காமக் காட்சிகளும் வந்ததாக ஞாபகம். படத்தின் பெயர் நினைவில் இல்லை. அந்தப் படத்தையும் முழுதாகப் பார்க்கவில்லை.

"நாயகன்" போன்ற காரணங்கள் இருந்தாலும் மார்லன் பிரண்டோவின் ஓரிரு படங்களைப் பார்த்ததற்கு சிவாஜியும் ஒரு காரணம். சிவாஜியோடு ஒப்பிடுகின்ற அளவிற்கு இவரிடம் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்கின்ற ஆவலும் ஒரு காரணம். ஒன்றும் இல்லை என்பது என்னுடைய கருத்து.

சிவாஜி கணேசனின் நடிப்பை சொல்வதற்கு பல படங்கள் இருக்கின்றன. அவருடைய திறமையை வீணாக்கிய படங்களும் அதை விட அதிகம் இருக்கின்றன என்பது வேறு விடயம்.

சிவாஜி நடிப்பில் சிகரம் தொட்டிருக்க, எம்ஜிஆரோ கை வீசிப் பாடியும் வில்லன்களின் முகத்தில் குத்தியும் மக்கள் செல்வாக்கைப் பெற்றுவிட்டார். அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ஒரு சர்ச்சைக்குரிய கட்டுரையை ஆனந்த விகடன் வெளியிட்டது: சிவாஜிiயும் ஜெயமோகன் கிண்டலடித்திருந்தாலும், எம்ஜிஆரின் நடிப்புப் பற்றி அவர் எழுதிய கருத்து எனக்கு ஒன்றும் தவறாகப்படவில்லை.

தன்னுடைய உதட்டைக் கடித்து காதல் உணர்வை திரையில் வெளிப்படுத்திய உலகின் ஒரேயொரு நடிகர் எம்ஜிஆராகத்தான் இருக்க முடியும்.

ஆயினும் எம்ஜிஆர் திரைப்படத் துறைக்கு நிறைய செய்திருக்கிறார். தொழில்நுட்பம் சார்ந்த சில முயற்சிகளை தன்னுடைய திரைப்படத்தில் எம்ஜிஆர் அறிமுகப்படுத்தியிருக்கிறார

திரு சபேசன்

நன்றாக இருக்கு தொடருங்கள்.

ஒவ்வொருவர் பார்வையிலும் சினிமா எப்படி என்று பாப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஆனால் "சிவாஜி - எம்ஜிஆர்" என்பதற்கு பின்பு எதிர்பார்க்கப்பட்ட இரட்டையர்கள் ரஜினி - கமல் அல்ல. ஜெய்சங்கரும் ரவிச்சந்திரனுமே அடுத்த இரட்டையர்களா எதிர்பார்க்கப்பட்டார்கள். இருவரும் பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்த போதும் அவர்களால் அடுத்த "இரட்டையர்கள்" என்ற நிலையை அடைய முடியவில்லை. அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருந்தன.

நாளைக்கு எழுதுகிறேன்......

அஹா...

இதை நான் இதுவரை கேள்வி பட்டதே இல்லை.....

தொடர்ந்து எழுதுங்கள் சபேசன்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காரணம் ஜெயலலிதாவின் மீது கொண்ட மயக்கம். இதனால் எம்.ஜி.ஆரிடம் ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் ஆகியோர் அடிவாங்கிய விடயம்.

ரவிச்சந்திரனும் ஜெய்சங்கரும் சிவாஜி-எம்.ஜி.ஆர் காலம் முடிய முன்பே வந்தது தான் காரணம். இருவர் உச்சத்தில் இருந்துகொண்டு நிறையப் படங்கள் நடித்துக்கொண்டிருக்கும் போது வேறு நடிகர்கள் உச்சத்துக்கு வரமுடியாது. இப்போது ரஜினி-கமல் அதிகம் நடிப்பதில்லை. அதனால் தான் அடுத்து யார் என்ற கேள்வி வருகிறது. இந்தக்கேள்வி இருவரும் பிஸியாக நடித்த கால கட்டத்தில் வரவில்லை.

இது மட்டுமல்ல. மஞ்சுளாவைக் காதலித்த விஜகுமாரும், நடிகை லதாவைக் காதலித்த ரஜினிகாந்தும் கூட எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கியவர்கள் தான்.

அப்ப எல்லாரையும் எம் ஜி ஆர்... எல்லாரையும் தன்ர கட்டுபாட்டுக்குள்ள வைச்சிருந்திருக்கார் எண்டு சொல்லுங்கோ...

  • தொடங்கியவர்

நண்பர் "ஈஸ்" அவர்கள் சரியான காரணங்களை சொல்லியிருக்கிறார். முதலாவது காரணம் "சிவாஜி - எம்ஜிஆர்" காலத்திலேயே நடிக்க வந்தது. அவர்களுடன் போட்டி போட்டு அடுத்த இரட்டையர்களாக ரவிச்சந்திரனாலும் ஜெய்சங்கராலும் ஆக முடியவில்லை.

எம்ஜிஆர் நடிப்புத்துறையில் இருந்து விலகுகின்ற நேரத்தில் ரஜனியும் கமலும் வந்து விட்டார்கள். இதற்கு இடையில் ரவிச்சந்திரனாலும் ஜெய்சங்கராலும் சிக்குப்பட்டுப் போனார்கள். இருவருக்கும் ஒரு பத்து வயது குறைவாக இருந்திருந்தால், அவர்கள் அடுத்த இரட்டையர்கள் என்ற இடத்தை பெற்றிருக்கலாம்.

சரியான காலகட்டத்தில் வருபவர்களாலேயே இந்த "இரட்டையர்கள்" என்ற இடத்தை பெற முடிகிறது. முதலில் இருக்கின்ற "இரட்டையர்கள்" ஒய்வு பெறக் கூடிய நேரத்தில் வரவேண்டும்.

இந்த நேரத்தில் இன்னும் ஒரு விடயம் ஞாபகம் வருகிறது. 80களின் நடுப்பகுதியில் என்று நினைக்கிறேன். ரஜனியும் கமலும் உச்ச இடத்தை பிடித்து அடுத்த இரட்டையர்களாக ஆகியிருந்தார்கள். வழமை போன்று ஊடகங்களுக்கு அடுத்த இரட்டையர்கள் யார் என்ற கேள்வி எழுந்தது.

அந்தக் காலகட்டத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த பிரபுவும் கார்த்திக்கும்தான் அடுத்த இரட்டையர்கள் என்று சில சினிமா ஊடகங்கள் எழுதின. ஒரு சினிமா இதழ் (பொம்மை என்று நினைக்கிறேன்) நடிகர்களை பேட்டிக் கண்டு "அடுத்த இரட்டையர்கள் யார்" என்று கேள்வி கேட்டது.

நடிகர் சுரேஸிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டார்கள். அவர் மிகச் சீரியசாக பதில் சொன்னார். "தற்பொழுது இரட்டையர்கள் என்பது மாறி "மூவர்" என்று ஆகி விட்டது. சுரேஸ், பிரபு, கார்த்திக் எனும் மூவர்தான் அவர்கள்". இப்படி அவர் பதில் சொன்னார். ஆனால் என்ன ஆனது என்பது எமக்கு எல்லோருக்கும் தெரியும்.

சுரேஸை விடுவோம். மிகப் பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபுவாலும் கார்த்திக்காலும் கூட அடுத்த இரட்டையர்களாக ஆக முடியவில்லை.

மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகிய கார்த்திக் அவருடைய சில பழக்க வழக்கங்கள் காரணமாக தேடுவாரின்றிக் கிடக்கிறார். அரசியலில் இறங்கி அங்கும் "மார்க்கட்" இன்றி காணப்படுகிறார்.

நடிகர் பிரபு குணச்சித்திர வேடங்களில் இறங்கி விட்டார். ரஜனிகாந்த் டுயட் பாடிக் கொண்டிருக்க பிரபு விசாலுக்கு மாமாவாக நடிக்கிறார்.

இப்படி ஏற்கனவே ஒரு இரட்டையர் இருக்கின்ற போது, அவர்களை வீழ்த்தி இன்னொரு இரட்டையர் உருவாக முடியாது. முதலில் இருக்கின்ற இரட்டையர்களின் காலம் முடிகின்ற நேரத்தில் அறிமுகம் ஆகின்றவர்களாலேயே அந்த இடத்திற்கு வர முடியும்.

ரவிச்சந்திரனும் ஜெய்சங்கரும் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்கள். அதிலும் ஜெய்சங்கர் ஒரு குறுகிய காலங்களில் அதிக படங்களை கொடுத்திருக்கிறார். ஒரு காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஜெய்சங்கரின் படம் வெளிவருமாம். இதனால் ஜெய்சங்கரை "வெள்ளிக் கிழமை நாயகன்" என்றும் அழைத்தார்கள். இன்றைய காலகட்டத்தில் இதை எல்லாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

அதிகமான துப்பறியும் படங்களில் நடித்ததால், "தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்" என்றும் அழைக்கப்பட்டார்.

இதில் ஒரு விடயம் கவனிக்கத்தக்கது. அந்தக் காலத்தில் மக்கள் அனைத்து விதமான படங்களையும் ரசித்திருக்கிறார்கள். அரச படங்கள், புராணப் படங்கள், சமூகப் படங்கள், காதல் படங்கள், துப்பறியும் மர்மப் படங்கள், மாசாலாப் படங்கள் என்று எல்லாவிதமான படங்களும் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இன்றைக்குத்தான் இந்தக் "காதல்" என்ற குண்டுச் சட்டிக்குள் தமிழ் சினிமா குதிரை ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜெய்சங்கர் துப்பறியும் படங்களில் ஒரு புறம் கலக்க, மறுபுறம் ரவிச்சந்திரனும் பல தரப்பட்ட படங்களில் கலக்கினார். ரவிச்சந்திரன் தனிக் கதாநாயகனாக நடித்ததோடு, மற்றைய கதாநாயகர்களுடன் இணைந்தும் ல படங்களில் நடித்திருந்தார். ஆயினும் ஏற்கனவே இருவர் இருக்கின்ற போது, அவர்களால் ஒரு கட்டத்தை தாண்டி செல்ல முடியவில்லை.

இதை விட ரவிச்சந்திரனும் ஜெய்சங்கரும் அடுத்த இரட்டையர்களாக முடியாமல் போனதற்கு இன்னும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அது அரசியல், குறிப்பாகச் சொல்வது என்றால் எம்ஜிஆர்.

அதைப் பற்றி நாளைக்கு எழுதுகிறேன்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் சபேசன்.

நிறைய சுவாரசியமான விசயங்கள் மற்றும் கேள்விபடாத விசயங்கள் உங்கள் தொடரில் இருக்கின்றன.....நான் ரவிச்சந்திரனின் படங்கள் எதுவும் பார்க்கவில்லை எனினும் ஜெய்சங்கரின் படங்கள் பார்த்திருக்கிறேன். அவர்கள் இருவரையும் உப? நடிகர்கள் என்றே நினைத்திருந்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன்!

அரசியல், பகுத்தறிவு, மற்றும் இலக்கியம், என்று பல வற்றை கதைத்து விட்டீர்கள் சற்று மாறுதலுக்காக சினிமா! நல்லது.

சேர, சோழ பாண்டியர் என அந்தக்காலத்தில் திரையுலக முவேந்தர்களில் ஒருவராக இருந்த அந்த நடிகரை மறந்து விட்டீர்களே!

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவகுமார்?

  • கருத்துக்கள உறவுகள்

இலட்சிய நடிகர் எஸ்.எஸ். இராஜேந்திரன் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மூவேந்தர் - 1)எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி

2)தியாகராஜா பகவதர், பி.யூ.சின்னப்பா, ரி.ஆர். மகாலிங்கம்.

எம்.ஜி.ஆர் வீர அபிமன்யூ படத்தில் சாதாரண வேடத்தில் தான் நடித்தார். ஆனால் அவர் திரைக்கு வந்து 10 வருடங்களுக்கு பிறகுதான் பெரிய நடிகரானார். அக்காலத்தில் பி.யூ.சின்னப்பா, பகவதர் ஆகியோர் இரட்டையர்களாக இருந்தார்கள். குடிப் பழக்கத்தினால் 35 வயதில் பி.யூ.சின்னப்பா காலமாகிவிட, இலக்சுமி நாதன் கொலை வழக்கில் பகவதர்,என்.எஸ்.கிருஸ்ணனுடன் சிறைவாசம் அனுபவிக்க அடுத்த இரட்டையர்களாக எம்.ஜி.ஆர், சிவாஜி தமிழ்த்திரையில் வந்தார்கள்.

வெள்ளிக்கிழமைகளில் படங்கள் வந்ததினால் வெள்ளிக்கிழமை நாயகன் என்று ஜெய்சங்கரைஅழைத்தது போல இரவிச்சந்திரனை வெள்ளி விழா நாயகன் என்றே அழைக்கப்பட்டார். அதாவது தொடர்ந்து 175 நாட்களுக்கு மேல் இரவிச்சந்திரனின் படங்கள் அக்காலத்தில் ஓடியது. உ+ம் - காதலிக்க நேரமில்லை. அதே கண்கள்.

94,95 களில் ஒரு பத்திரிகையில் பேட்டி ஒன்றில் அடுத்த இரட்டையர்கள் யார் என்று கேட்டபோது பிரபுதேவா, அரவிந்தசாமி என்றும் ஒருவர் பதில் அளித்ததினைப் படித்த யாபகம்.

  • தொடங்கியவர்

இன்று வேறு வேலையாக இருப்பதால் எழுத முடியவில்லை. நாளை எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் இன்று வெள்ளிக்கிழமை.சைவர்களுக்கு விசேட நாள்.

சுவாராசியமான தகவல்கள்..! பார்ப்போம் எப்படி போகுது என்று?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் குறிப்பிட்ட நடிகர் காதல் மன்னன் ஜெமினி கணேசன். மிகை நடிப்புக் காலத்திலே எதார்த்த நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர். கணவனே கண் கண்ட தெய்வம், கல்யாணப் பரிசு, கற்பகம், கொஞ்சும் சலங்கை என பல படங்களைக் குறிப்பிடலாம் சிவாஜி கணேசனுடன் பல படங்கள் நடித்து இருக்கிறார்.

இலட்சிய நடிகர் எஸ்.எஸ். இராஜேந்திரன் :o

இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனைப் பற்றி இங்கு சில முக்கியமான விடயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழ் சினிமா இதுவரை கண்ட நடிகர்களுள் அப்பழுக்கற்ற பச்சை நாத்திகர் என்றால் இவர்தான் (கடவுளை நம்புவது கூடாது என்ற விவாதத்தை நான் இங்கு வைக்கவில்லை. அது அவரது சொந்த விருப்பம், தயவு செய்து விவாதத்தை திசை திருப்ப வேண்டாம்).

நான் இங்கு சொல்ல வருவது நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் நாத்திகத்தில் வைத்திருந்த கொள்கைப் பிடிப்பை. இயக்குனர் ஏ.பி. நாகராஜன் போன்றவர்களின் புராணப் படங்களில் நடிக்காத ஒரேயொரு நடிகர் அந்தக் காலத்தில் இருந்தார் என்றால் அது இவர்தான். நாத்திகவாதியான நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்கள்கூட தாசாவதரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் இது போன்ற பட பட வாய்ப்புகள் வந்தும் பல வற்றை உதறித்தள்ளயவர் எஸ்.எஸ். ராஜேந்திரன். நடிகர் சத்தியராஜ்கூட சில படங்களில் திருநீறு பூசி நடித்துள்ளார் ஆனால் இவரோ ஒரு படத்தில் கூட அப்படி நடித்ததில்லை.

பாரசக்தி (இவருக்கும் இதுதான் முதல் படம் என நினைக்கின்றேன்) முதல் பல படங்களில் சிவாஜி கணேசனுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

Edited by இளங்கோ

  • தொடங்கியவர்

ரவிச்சந்திரனும் ஜெய்சங்கரும் அடுத்த இரட்டையர்கள் ஆக முடியவில்லை என்பதோடு ஒரு நேரத்தில் அவர்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்து நீண்ட நாட்கள் வீட்டில் உட்கார வேண்டியும் வந்தது.

அறிஞர் அண்ணாவின் காலத்தில் ரவிச்சந்திரனும் ஜெய்சங்கரும் தம்மை திமுகு அனுதாபிகளாகவே வெளிப்படுத்திக் கொண்டனர். அறிஞர் அண்ணா தமிழ் திரையுலகை திமுகவின் பக்கம் ஈர்த்து வைத்திருந்தார். அண்ணா ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பல முன்னணி நடிகர்கள் திமுகவிற்கு ஆதரவாக இருந்தனர். இது உண்மையில் ஒரு ஆச்சரியமான விடயம்தான்.

இன்றைக்கு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால் அவர் அஷ்டலட்சுமியாக தமிழ் திரையுலகிற்கு தெரிகிறார். கலைஞர் ஆட்சியில் இருந்தால் அவரே எல்லாமாக தெரிகிறார். அறிஞர் அண்ணாவிற்கு பிறகு தமிழ் திரையுலகை உறுதியான முறையில் தம் பக்கம் வைத்திருக்கும் கலை யாருக்கும் சரியாக வரவில்லை.

ரவிச்சந்திரன் அறிமுகமாகி ஒரு துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். எம்ஜிஆர் பாணி படங்களிலும் நடித்தார். அவருக்கு "சின்ன வாத்தியார்" என்ற பட்டமும் வந்து சேர்ந்தது. எம்ஜிஆரை தமிழ்நாட்டு மக்கள் "வாத்தியார்" என்று அழைப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். திமுக ஆதரவு நிலைகொண்டு இன்னொரு நடிகர் "சின்ன வாத்தியார்" என்ற பட்டத்தோடு வளர்ந்து வருவதை எம்ஜிஆர் ரசிக்கவில்லை.

ரவிச்சந்திரன் ஜெயலலிதாவோடும் தொடர்ந்து சில படங்களில் ஜோடி போட்டு நடித்தார். தன்னை இன்னொரு வாத்தியராக காட்டிக் கொள்ள முயன்றார்.

ஆனால் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த எம்ஜிஆரின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டு ரவிச்சந்திரனால் முன்னணி நடிகராக நீடிக்க முடியவில்லை. எம்ஜிஆர் மேற்கொண்ட நடவடிக்கைகள் ரவிச்சந்திரனை வீட்டில் உட்காரச் செய்தன. எம்ஜிஆர் என்ன செய்தார் என்பது பற்றி உறுதியான செய்திகள் இல்லை. நிறைய வதந்திகள் உண்டு. ராமாவரம் தோட்டத்தில் ரவிச்சந்திரனை கட்டி வைத்து எம்ஜிஆர் அடித்தார் என்பது போன்ற செய்திகளும் உண்டு.

யார் என்ன செய்தார்களோ தெரியவில்லை, வெள்ளி விழா நாயகன் என்று தலையில் வைத்துக் கொண்டாடிய ரவிச்சந்திரனை தமிழ் சினிமா கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.

ஜெய்சங்கர் ரவிச்சந்திரனைப் போன்று திமுக ஆதரவாளராக வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அதிகமாக திமுக ஆதரவு இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதற்கே முன்னுரிமை கொடுத்து வந்தார். அதே வேளை "சபாஸ் தம்பி" போன்ற ஒரு சில படங்களில் திமுக ஆதரவை வெளிப்படையாகக் காட்டினார்.

எம்ஜிஆர் பிரிந்து தனிக்கட்சி கண்டபின் "பணக்காரப் பெண்" என்று ஒரு திரைப்படம் வெளியானது. ஜெய்சங்கர்தான் கதாநாயகன். அந்தப் படத்தில் அப்பட்டமாக எம்ஜிஆரை ஆதரித்து ஜெய்சங்கர் குரல் கொடுத்திருந்தார். எம்ஜிஆர் கணக்கு கேட்டதை நியாயப்படுத்தும் வசனங்களும் எம்ஜிஆர் நாடாள வேண்டும் என்ற பாடல்களும் அந்தப் படத்தில் இடம்பெற்றன.

ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா

நீ நாடாள வரவேண்டும் ராமச்சந்திரா

என்று ஒரு பாடல்இந்தப் படத்தில் இடம்பெற்றது. இந்தப் பாடல் எம்ஜிஆரின் பிரச்சாரக் கூட்டங்களில் இடம் பிடிக்கும்.

எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பின்பு கலைஞர் கருணாநிதியின் உருவாக்கத்தில்ஒரு படம் வெளிவந்தது. எம்ஜிஆர் ஆட்சியில் இருந்ததால் பெரும்பாலான நடிகர்கள் இந்தப் படத்தில் நடிப்பதற்கு தயங்கினர். ஆனால் எம்ஜிஆருக்குப் பயப்படாமல், எம்ஜிஆருக்கு எதிரான வசனங்களைப் பேசி பாடல்களுக்கு வாயசைத்து அந்தப் படத்தில் ஜெய்சங்கர் நடித்தார். "வண்டிக்காரன்" என்ற அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது.

ஜெய்சங்கர் இதை ஏன் செய்தார் என்று தெரியவில்லை. இருவருக்கு பொதுவான ஒரு நடிகனாக தன்னைக் காட்டிக் கொள்ள முயன்றாரோ தெரியவில்லை. படம் வெற்றி பெற்றது. ஆனால் தயாரிப்பாளர்கள் ஜெய்சங்கரை தமது படங்களில் நடிக்க வைக்க தயங்கத் தொடங்கினர்.

கலைஞர் கருணாநிதியின் இன்னும் ஒரு படத்திலும் (பெயர் நினைவில்இல்லை) ஜெய்சங்கர் நடித்தார். அவ்வளவுதான். அவர் அப்படியே அவர் ஏறக்குறைய ஒன்றரை வருடம் வீட்டில் இருக்க வேண்டியதாகி விட்டது. ஒவ்வொரு வெள்ளியும் ஒரு படம் வெளிவந்த ஒரு நடிகர் அத்தனை காலம் வீட்டில் இருப்பது என்பது சாதாரண விடயம் அல்ல.

ஜெயங்கரால் மீண்டும் 1980ல் வெளிவந்த முரட்டுக்காளை படத்தின் மூலம் ஒரு வில்லனாகத்தான் தமிழ்சினிமாவில் மறுபிரவேசம் செய்ய முடிந்தது. நல்ல பாதையில் காலடி வைத்து வீறுநடை போடத் தொடங்கிய தமிழ் சினிமாவை மீண்டும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கியதில் அந்தத் திரைப்படத்திற்கு பெரும் பங்கு உண்டு.

நாளைக்கு எழுதுகிறேன்......

இப்ப விஜய் என்கிறியள் அஜித் என்கிறியள் அசத்தலா நடிச்சு அடிமேல அடிவச்சு சிவாஜி கமலின்ரை இடத்துக்கு கிட்ட வந்திட்டாரே நம்ம விக்ரம் மறந்துபோனியளோ என்ன

நல்லதொரு தொடர்

தொடருங்கள் சபேசன்.....

ரவிச்சந்திரன் குட்டி எம்ஜீஆர் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார்.

இவரது முதல் படம்

காதலிக்க நேரமில்லை என்று நினைக்கிறேன்.

மாடி மீது மாடி கட்டி

கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே

என்ற பாடலில் ரவிச்சந்திரன் அற்புதமாக நடித்திருந்தார்.

ஜெய்சங்கர்

மொடர்ன் தியெட்டர்ஸ் தயாரித்த

ஜேம்ஸ் பாண்ட திரைப்படங்களில் நடித்தார்.

வல்லவன் ஒருவன் அதில் நல்ல படம்.

அதில்தான் தேங்காய் சீனிவாசன் அறிமுகமானார்.

வேதாவின் இசைக்கு தீனி போட்ட படங்கள் அவை...........

நான் எனும் படத்தில்தான் ரவிச்சந்திரன் முதன் முதல் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இவர் மலேசிய நாட்டைச் சேர்ந்தவர்.

ரவிச்சந்திரன் நடித்த அதே கண்கள் ஒரு மர்ம படம்.

அதில் ரவிச்சந்திரன் கதாநாயகன்.....

MGRருடைய சாயல் அவரிடம் இருக்கும்

ரவிச்சந்திரனை தெரியாதவர்கள்

அதே கண்கள் திரைப்படத்தின் கிளைமெக்ஸ் காட்சியில் பார்க்கலாம்:

http://www.youtube.com/watch?v=YKYTF2-ndJQ...feature=related

நான் திரைப்படம் குறித்த தகவல்கள்்:

http://holyox.blogspot.com/2006/10/204.html

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

நான் படத்திற்கு முதலே தானது முதலாவது படத்தில் கதா நாயகனாக அறிமுகமானவர் இரவிச்சந்திரன். சிறிதரின் காதலிக்க நேரமில்லை படத்தில் காஞ்சனாவுடன் அறிமுகமானார். இப்படத்தில் இரவிச்சந்திரனுக்கு சோடியாக இராஜசிறி நடித்தார். இன்னொரு கதா நாயகனாக முத்துராமனுக்கு சோடியாக காஞ்சனா நடித்தார்.

ஆமாம் கந்தப்பு

காதலிக்க நேரமில்லையில்லை திரைப்படத்தில் இரு கதாநாயகர்கள்

ஒருவர் முத்துராமன்

அடுத்த அறிமுகம் ரவிச்சந்திரன்.

ரவிச்சந்திரன் கதநாயகனாக நடித்த முதல் படம் நான்!

அதையே குறிப்பிட்டிருந்தேன்.

Edited by AJeevan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாள் போதுமா. இதில் நடித்தவர் பெயர் என்ன?

http://eelamtube.com/view_video.php?viewke...dd8fe4e481144d8

பாலையா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.