Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பலத்தார் பக்கம்

Featured Replies

அம்பலத்தார் பக்கம்

முந்தி உங்களுக்கு நான் கன கதையளெல்லாம் சொன்னனான் ஞாபகமிருக்குமெண்டு நினைக்கிறன். இடையிலை கொஞ்சக்காலமா பலசோலியளிலையும் ஓடித்திரிஞ்சதிலை பல கதையளையும் சொல்ல நினைச்சும் நேரம் வராததிலை விட்டிட்டன்.

இப்பத்தான் கொஞ்சம் நேரம் கிடைச்சுது அதுதான் சட்டென்று ஒன்றிரண்டு விசயங்களையெண்டாலும் சொல்லாட்டில் மண்டைவெடிச்சிடும்போலக் கிடக்குது.

சட்டுப்புட்டென்று விசயத்துக்குவாறன் கேளுங்கோ சங்கதியை.

இப்ப கொஞ்சக்காலமா எனக்கு வாற மறதியும் அதாலை படுகிறபாடும் கொஞ்சநஞ்மில்லை. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது அதிலையும் ஒரு வசதி இருக்குது பாருங்கோ அதை நான் பிறகு சொல்லுறன் ஆனால் பிறகு ஏதும் இசகுபிசகான நேரத்திலை அம்பலத்தான் இப்பிடிச் சொன்னவன் எண்டு போட்டுக்குடுத்திடாதையுங்கோ.

"அம்பலத்தான் ரொம்பவும்தான் அறுக்காமல் சீக்கிரமா விசயத்துக்கு வா" என்று திட்டுறது கேட்குது.

அறுக்கிறதுக்கு நானென்ன கத்தி அரிவாளோடையே திரியிறன். சரி சரி கொஞ்சம் பொறுங்கோ.

நான் என்ன சொல்ல வந்தனான் எண்டால் போனகிழமை உவன் சீட்டுக்காரச் சோதியின்ரை பெடியின்ரை பிறந்தநாளுக்குச் சொல்லியிருந்தவங்கள்.

உங்களுக்குத்: தெரியும்தானே இப்படி இடங்களுக்கு எங்கையும் போறதெண்டால் என்ரை மனிசி செல்லம்மாவும் உவள் எங்கட சின்னவளும் ஒருபாட்டம் சதிராடித்தான் என்னை வெளிக்கிடுத்திறவளுகள் எண்டுஇ நான் 97இல ஊருக்குப்போகேக்க வாங்கியந்த பற்றிக்சேட்டையும் கறுத்தக்காற்சட்டடை ஒன்றையும் மாட்டிக்கொண்டு விலாசமா வெளிக்கிட்டாச்சு என்று சொல்லிக்கொண்டு தொலைக்காட்சிக்கு முன்னாலை உக்காந்திட்டன்.

அந்தப்பக்கமா வந்த சின்னவள் "என்னப்பா உதுகோலம் மாத்துங்கோ உந்தச் சேட்டை" எண்டு சொல்லிக்கொண்டு போட்டிருந்த சேட்டை உருவிக்கொண்டுபோட்டாள்.

சத்தம்கேட்டு எட்டிப்பார்த்த செல்லம்மா உதென்ன உது கவுண்டனுக்கு மாட்டடின களிசான்போல கண்றாவியாக்கிடக்கு கழட்டுங்கோ உதை எண்டு போட்டிருந்த காற்சட்டையையும் உருவிக்கோண்டுபோக கடைசியில நான் வெறும் ஜட்டியோட நடுவீட்டுக்கை நிண்டு கெஞ்சிக்குகூத்தாடி அவளவை எடுத்துத்தந்ததுகளை மாட்டிக்கொண்டு பிறந்தநாளுக்குப் போனால் கேக் எல்லாம் வெட்டிமுடிஞ்சு சனஞ்சாப்பிடத் தொடங்கிவிட்டுது.

இனி என்ன சட்டுப்புட்டெண்டு சாப்பிட்டிட்டு குடுக்கவேண்டியதைக் குடுத்திட்டு புறப்படவேண்டியதுதான் எண்டு நினைச்சுக்கொண்டு போய் உட்கார்ந்தால்........... முன்னாலை நமட்டுச் சிரிப்போட ராசுக்குட்டி என்ன அம்பலத்தார் வலுவெள்ளன வந்திட்டியள்போல எண்டு கேட்கவும்

நான் எரிச்சலோட இண்டைக்கு பிறாங்போட்டிலை ஒரு சாமத்தியவீடெலே மத்தியானம் அங்கையும் போட்டு வந்ததிலை கொஞ்ச் சுணங்கிப்போச்சுது" எண்டு முடிக்கமுந்தி........

அவன் பாவி ஓம்! ஓம்! நானும் கேள்விப்பட்டனான்தான் யார் வீட்டிலை எண்டுதான் சரியாத்தெரியேல்லை" எண்டு சொல்லவும்

நான் விலாசமா உவன் தவத்தின்ரை பெடிக்குத்தான்

தவமோ? ஆரதது ஞாபகத்துக்குவராதாம்.

பிராங்பொட் தமிழ்சங்கத்திலை கனகாலமா இருந்தானே

ம்...ம்.....

என்ன ராசுக்குட்டி எனக்குத்தான் மறதியெண்டால்..... நீ.... அதைவிடமோசமாக்கிடக்கு.

தேவையில்லாத நக்கல் கதையளைவிட்டிட்டு சொல்லுறதெண்டால் ஒழுங்காச் சொல்லும்.

ஒரு சொல்லுச்சொல்லுறதுக்கிடையில எதுக்கிப்ப எண்ணையில போட்ட கடுகுமாதிரிப் பொரிஞ்சுதள்ளிறாய். அவன்............. வண்டியும் வழுக்கைத் தலையுமா லொள்ளு சபாவிலை காமடி பண்ணிறவன்போல

அட லொள்ளு சபா எண்டு சொல்லத்தான் ஞாபகத்துக்கு வருகிது. முந்தி உம்மோட இரண்டொரு நாடகங்கள்ளையெல்லாம் நடிச்ச.......

அது ஆராடா அவன்பாவி

கதவிடுக்கில மாட்டுப்பட்ட எலிபோல கீச்சுகீச்ச்செண்டு கதைச்சுக்கோண்டு....

சீ! சீ! அவன் சிவாவெல்லோ அவனில்லை.

இவன் கொஞ்சம் மூக்கும் முழியுமான பெண்டுகளைக்கண்டால் காணும் வழிஞ்சுகொண்டு நிற்பான்.

ஆ..ஆ....

அட என்ன இன்னும் பிடிபடேல்லையோ? அவன்ரை மனிசிகூட ஒல்லியா உயரமா கொஞ்கம் மாநிறத்தில...

அவன் ராசன்ரை மனிசி செல்வியக்காவோ?

ராசன்ரை மனிசி எப்ப தவத்தைக் கட்டினவ? நீயும் உன்ரை கண்டுபிடிப்புகளும். இவ இன்னும் கொஞ்சம் நிறமா சுருட்டைத் தலையும்....

அப்ப அவன் கடைக்காரக் கண்ணன்ரை சகலனே? என்று ராசுக்குட்டி சொல்லிமுடிக்கமுந்தி இடையிலை நான் பாய்ஞ்சுவிழுந்து "ஓம்! ஓம்! அவன் தவத்தின்ரை மூத்த மகளுக்குத்தான்......................." எண்டு சொல்லேக்கைதான் விசயம் ஞர்பகத்துக்கு வர எனக்கு வேர்த்து விறுவிறுத்து! அடிவயித்தை வேற கலக்க......................................

"விடிஞ்சதிலையிருந்து கொம்பியுட்டருக்கு முன்னாலை உக்கார்ந்து டொக்கு டொக்கென்று தட்டிக்கொண்டு உங்களுக்கெல்லே கோழியை வெட்டி உப்பு துள் போட்டுப் பிரட்டி வையுங்கோ எண்டு சொன்னனான். எதைத்தான் ஒழுங்காச் செய்யிறியள்".

உங்களுக்கும் சத்தம் கேக்குதே? அதுபாருங்கோ வேறஒண்டுமில்லை என்ரை செல்லம்மா சதிராடத் தொடங்கிறா. கோவியாதையுங்கோ பிறகு வந்து மிச்சத்தைச் சொல்லுறன்.

தொடரும்......

Edited by ampalathar

நீங்கள் வீட்டில படுறகஸ்டங்களக் கேட்க கஸ்டமாத்தான் இருக்கிது அம்பலம் அங்கிள். மாநிறம் எண்டுறது என்ன நிறம் எண்டு முதலில சொல்லுங்கோ. இது இந்தியத் தமிழர் வழமையா பாவிக்கிற சொல்லு எண்டு நினைக்கிறன்... சின்னனில தமிழ்நாட்டு ரீவிய ஊரில கேட்கேக்க.. காணாமல் போன ஆட்கள் பற்றி சொல்லேக்க அடிக்கடி சொல்லும். இன்றும்தான் அது என்ன நிறம் எண்டு எனக்கு தெரியாது. மா - நிறம் ... ? அது என்ன? மாம்பழத்திண்ட நிறமோ? இல்லாட்டி கோதுமை மாவிண்ட நிறமோ? இல்லாட்டி மாட்டிண்ட நிறமோ? குழப்பமா இருக்கிது.

Edited by முரளி

  • தொடங்கியவர்

முரளிச்செல்லம் மாநிறம் புரியல்ல! உங்க ஊரில பொதுநிறம் பொது நிறமெண்டு சொல்லுவாங்களே அதுக்கு மேலா கொஞ்சம் தூக்கலா புசினாப்போல இருப்பாங்களே அதுதான் மாநிறம் இப்ப புரிஞ்சுதோ என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

அம்பலத்தாரின் பக்கம் நன்னாயிருக்கு.

வீட்டில மதுரை ஆட்சிதான் நடக்குதாக்கும் :)

  • தொடங்கியவர்

பிள்ளை கறுப்பி நீங்கள் பாட்டுக்கு வஞ்சகம் இல்லாமல் என்னோட கதைப்பியள் நாலு நாளைக்கு நாங்கள் கதைக்கிறதை உவள் செல்லம்மா மட்டும் கண்டாளோ! என்னைப் பிடிச்சு ஒரு உலுப்பு உலுப்பி எடுத்திட்டுத்தான் அடுத்த அலுவல்பாப்பாள்.

Edited by ampalathar

அம்பளம் அங்கிள், எனக்கு இன்னுந்தான் விளங்க இல்ல. மாநிறம் எண்டு நீங்கள் சொல்லிற அந்த நிறத்தை கொண்ட ஒரு படத்தை இஞ்ச இணைக்க முடியுமோ? எனக்கு யாரோ ஒருவர் மாநிறம் எண்டால் பேய்களின் நிறமாம் எண்டு சொல்லி மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். பயமா இருக்கிது. :(

  • கருத்துக்கள உறவுகள்
image005.jpg

பேயெண்டு சொன்னது இதைத்தானோ?

  • தொடங்கியவர்

முரளிச்செல்லம் மாறிச் சொல்லிப்போட்டியள் உங்களுக்கு இப்ப பேயும் பெண்ணாத் தெரியிற வயசு. நுணாவிலான் சரியாத்தான் படம் பிடிச்சுப் போட்டிருக்கிறார்.மாநிறமெண்ட

அட அம்பலத்தார்.. முரளிய பேக்்காட்டாதேங்கோ.. இந்த பொண்ணு மாநிறம் இல்லை.. மாதான் இந்த பொண்ணு நிறம்.. :lol:

சோழியன் அங்கிள் அப்ப நீங்களாவது மாநிறம் எண்டு சொல்லப்படுற நிறத்தை உடைய ஒரு படத்தை இஞ்ச இணைச்சு விடுங்கோவன்? வீட்டில என்னட்ட இருக்கிற கதிரவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதியில மாநிறம் எண்டுற சொல் இருக்கிதோ எண்டு பார்த்தன். அதிலையும் காண இல்ல. மா எண்டால் நிறைய அர்த்தங்கள் கொடுத்து அதில ஒண்டாக நிறம் எண்டும் எழுதப்பட்டு இருக்கிது. ஆனால் என்ன நிறம் எண்டு சொல்லப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கறுப்பாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு மணம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். (கறுப்பு என்றால் மாநிறத்திற்கும் சற்று அடர்ந்த நிறம். மாநிறம் என்றால் தமிழில் என்னவென்று தெரியுமோ? மாங்கொழுந்து நிறம் எதுவோ, அதுதான் மாநிறம். மாங்கொழுந்தில் மஞ்சள் கெழுவும் (yellow colour) ஊடே ஓடினாற் போல் இருக்கும். மஞ்சள் பூசிய தமிழ் மகளிரும், அந்தப் பழக்கத்தின் காரணமாய் கொஞ்சம் மாங்கொழுந்து போல் இருப்பார்கள். தமிழரில் கணிசமானவர் மாநிறம் தான்.

அப்ப தமிழரில கணிசமான ஆக்கள் பேய்களோ? ஹிஹி

  • தொடங்கியவர்

இண்டைக்குக் காலங்காத்தாலையே எழும்பிப் புசிப்பிணத்தி வெளிக்கிட்டுக்கொண்டு செல்லம்மா என்ரை சகலன் வீட்டுக்குப்போட்டா, கிடைச்ச சந்தில புகுந்து விளையாடவேண்டியதுதான்.

ஊர் உலகத்திலை ஒருத்தருக்கும் வராத வியாதி எனக்குமட்டுந்தான் வந்தமாதிரி "உங்களுக்குச் சக்கரை வியாதியெல்லோ? கோழியைத் தின்னாதையுங்கோ கொழுப்பைத் தின்னாதையுங்கோ" எண்டு சொல்லிச் சொல்லிச் சொல்லியே வாய்க்கு ருசியான ஒரு சாப்பாட்டையும் கண்ணில காட்டமாட்டாள் பாவி செல்லம்மா!

சட்டென்று ஒரு கோழியைத்தூக்கி வாட்டுறதுக்கு அடுப்பில வெச்சிட்டு வந்து மிச்சக் கதையைச் சொல்லுறன்.

அதுக்கிடையில "இவன் அம்பலத்தான் எப்பவும் இப்படித்தான் ஒரு கதையைச் சொல்லத் தொடங்குவான் பிறகு என்னடா எண்டால் பாதியில அம்போ எண்டு விட்டிட்டு கண்ணிலயும் எத்துப்படாமல் துலைஞ்சிடுவான்." எண்டு நாலைஞ்சுபேர் முணுமுணுத்தது என்ரை காதிலையும் விழுந்தது. உங்கட பொறுமையையும் சோதிக்காமல் மிச்சக் கதையையும் சொல்லுறன் கேளுங்கோ.

..................... ஒரு வழியாஆள் அடையாளம் சொல்லி ராசுக்குட்டியனுக்கு தவம் ஆரெண்டு விளங்கத்தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது நான் போனது தவத்தின்ரை பெடியின்ரை சாமத்தியத்துக்கில்லை செல்லத்துரையற்றை மகளின்ரை சாமத்தியவீட்டுக்கெண்டு, பிறகென்ன வழக்கம்போல ஏதோ கன்னாபின்னா எண்டு உளறத் தொடங்கினன்.

அட ராசுக்குட்டியன் உந்தத் தவத்தின்ரை பெடிக்கே சாமத்தியச் சடங்கெண்டு நினைச்சனி.,

அது........ அவன் செல்லத்துரையன்ரை கடைக்குட்டிக்குத்தான் சாமத்தியம் நடந்தது

ஆனால் செல்லத்துரையரை ஆரெண்டு உனக்குத் தெரியாது என்;று உளறி முடிக்கவும் ராசுக்குட்டியன் ஒரு முறையல் முறைச்சான் பாருங்கோ அப்பத்தான் எனக்கு விளங்கிச்சுது சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தால் என்ன அகோரமா இருந்திருக்குமெண்டு.

அவன் பாவி ராசுக்குட்டி அண்டைக்கு என்னோட கதைக்கிறதை விட்டவன் இண்டுவரை கதைக்கவே இல்லையெண்டால் பாருங்கோவன்.

அதுசரி உங்களுக்கெண்டாலும் என்ரை பிரச்சனை விளங்குதுதானே? மறதியிலை எதுவும் உளறினன் எண்டாலும் வயசுபோன காலத்திலை பாவம் அம்பலத்தார் எண்டு பெரிசுபடுத்தாமல் விட்டிடுங்கோ என்ன.

இப்பிடி இன்னும் ஏகப்பட்ட கதையள் கிடக்கு....

அடுப்பில கோழி கருகி மணக்குது போலகிடக்கு முதலிலை வயித்துப்பாட்டைப் பார்த்திட்டு வந்து அடுத்த கதையைச் சொல்லுறன் அப்ப போட்டு வரட்டே?

நீங்கள் நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு என்ரை குசினியிக்கை எட்டிப் பார்க்காதையுங்கோ நான் ஒரு கோழிதான் வாட்டினனான். உங்கள் எல்லாருக்கும் தரக்காணாது

ஏன் உங்களுக்கும் எதுவும் பிரச்சனையே? நீங்களாச்சு உங்கட மனிசிமாராச்சு ஆளைவிடுங்கோ! நான் போட்டுவாறன்.

Edited by ampalathar

ஏன் அம்பளம் அங்கிள் பெடியளுக்கு சாமத்தியவீடு வைக்கலாம் தானே? இதப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்? பெடியலுக்கு சாமத்தியவீடு செய்யுறது பற்றி? பெடியள் இப்ப காதில தோடு போடுறாங்கள், தலைமயிர் வளர்க்கிறாங்கள்.. கழுத்துக்கு சங்கிலி, கையுக்கு காப்பு போடுறாங்கள்.. இதுகளப் பார்த்தால் இனிவரும் காலங்களில பெடியளுக்கும் சாமத்தியவீடு செய்தால் நன்னா இருக்கும்போல எனக்கு தெரியுது. உங்களுக்கும் மாநிறம் எண்டால் என்ன எண்டு தெரியாது என. ஹிஹி.. மலுப்பிப்போட்டீங்கள். சரி பரவாயில்ல.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கறுப்பாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு மணம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். (கறுப்பு என்றால் மாநிறத்திற்கும் சற்று அடர்ந்த நிறம். மாநிறம் என்றால் தமிழில் என்னவென்று தெரியுமோ? மாங்கொழுந்து நிறம் எதுவோ, அதுதான் மாநிறம். மாங்கொழுந்தில் மஞ்சள் கெழுவும் (yellow colour) ஊடே ஓடினாற் போல் இருக்கும். மஞ்சள் பூசிய தமிழ் மகளிரும், அந்தப் பழக்கத்தின் காரணமாய் கொஞ்சம் மாங்கொழுந்து போல் இருப்பார்கள். தமிழரில் கணிசமானவர் மாநிறம் தான்.

இதுவா விடயம்? :o:unsure: நான் மாவின் (கோதுமை) நிறம் வெள்ளையென்பதால், கொஞ்சம் நிறமானவர்களை (அதுதான் அவிச்ச றால் போல இருக்கிறாக்களை) அப்படிச் சொல்றதெண்டு நினைத்திருந்தேன். :D

நன்றி தகவலுக்கு.

உங்களுக்கும் மாநிறம் எண்டால் என்ன எண்டு தெரியாது என. ஹிஹி.. மலுப்பிப்போட்டீங்கள். சரி பரவாயில்ல.

என்ன மாநிறத்துக்கு இவ்வளவு பிரச்சனை படுறிங்கள்?

கறுப்பெண்டால் குரக்கன் மா நிறம் எண்டிறது. :D

சிவப்பெண்டால் அரிசி மா நிறம் எண்டிறது. :lol:

வெள்ளையெண்டால் கோதுமை மா நிறம் எண்டிறது. (அதுக்காக கேக்கிறதில்லை எங்கடை ஆக்களில ஆர் வெள்ளையெண்டு....சிலபேரை பாருங்கோ "அவிச்ச றால்" நிறத்தில இருப்பினம்... அவையள் தான்) :blink:

  • தொடங்கியவர்

ஏன் அம்பளம் அங்கிள் பெடியளுக்கு சாமத்தியவீடு வைக்கலாம் தானே? இதப்பற்றி என்ன நினைக்கிறீங்கள்? பெடியலுக்கு சாமத்தியவீடு செய்யுறது பற்றி? பெடியள் இப்ப காதில தோடு போடுறாங்கள், தலைமயிர் வளர்க்கிறாங்கள்.. கழுத்துக்கு சங்கிலி, கையுக்கு காப்பு போடுறாங்கள்.. இதுகளப் பார்த்தால் இனிவரும் காலங்களில பெடியளுக்கும் சாமத்தியவீடு செய்தால் நன்னா இருக்கும்போல எனக்கு தெரியுது. உங்களுக்கும் மாநிறம் எண்டால் என்ன எண்டு தெரியாது என. ஹிஹி.. மலுப்பிப்போட்டீங்கள். சரி பரவாயில்ல.

தம்பி முரளி சத்தமா சொல்லாதையெடா பிள்ளை புலம்பெயர் தமிழர் நடத்திற சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் பார்த்தால் உதையும் இனித் தொடங்கிவிடுவாங்கள் உலகம் எவ்வளவோ வேகமா அறிவியல் ரீதியா வளர்ந்துகொண்டு போகிற இன்றைய காலத்திலை சாத்திரியளுக்குப் பின்னாலையும் சாமியாருகளுக்குப் பின்னாலையும் எங்கட சனங்கள் ஓடுறதைப் பார்த்தால் ரொம்ப வேதனையாக் கிடக்கு. இஞ்சை என்ரை வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு குடும்பத்திலை இளம் பையன் ஒருவனுக்குப் பரம்பரை சம்பந்தமா ஒரு வருத்தம் தொடர்ந்து மருந்துகள் வாழ்நாள் முழுக்கச் சாப்பிட வேணும். அவன்ரை தாய் தகப்பன் என்னடா என்றால் இங்கு பக்கத்து நாடொன்றில இருக்கிற எங்கட சாமியர் ஒருவரிட்டைப்போய் ஆசிபெற்றால் எல்லாம் சரியாகிவிடும் என்று போக சாமியாரும் பாட்டுக்கு உதுக்கு மருந்து மாத்திரையெல்லாம் எதுக்கு நான் சொல்லுகிறமாதிரிச் செய்தால் சுகம்வரும் என்று சொல்ல இந்த லூசுகளும் மருந்தையெல்லாம் நிப்பாட்டிப் பெடி சாகிற கட்டத்திலை மருத்துவமனையிலை கிடந்து இப்பத்தான் மீண்டு வந்திருக்கிறான். இந்தமாதிரிச் சனங்களை எப்படித் திருத்திறது.

சரி அதவிடுங்கோ அம்பளம் ஆங்கிள், இப்ப மாநிறம் எண்டால் என்ன எண்டு எனக்கு சொல்லுங்கோ.. :D மாநிறம் எண்டு ஒண்டச் சொல்லித் துவங்கிப்போட்டு இப்ப அதுண்ட நிறத்த சொல்ல ஏலாமல் நிக்கிறீங்கள்.

கீழ இருக்கிற நிறங்களில எந்த இலக்கம் கிட்டத்தட்ட மாநிறம் எண்டாவது சொல்லுங்கோ. :wub:

நிறக்கலவை படம்01

htmlrgb.gif

நிறக்கலவை படம் 02

bgcolors216.gif

  • கருத்துக்கள உறவுகள்

முரளி நுணாவிலான் மினக்கெட்டு தேடியெடுத்து ஒரு படத்தையும் கொண்டு வந்து போட்டால் பிறகும் மாநிறம் எண்டது விளங்காட்டி என்ன செய்யிறது அதுக்கு மேலை உதாரணம் சொல்லுறதெண்டால் புட்டவிக்ககிற கோதுமை மா பாத்திருக்கிறியளோ அதுகின்ரை நிறம் என்னவோ அதுதான் மாநிறம். அப்ப மா என்ன நிறம் வெள்ளை நிறம் அப்ப வெள்ளை என்ன நிறம் எண்டு எல்லாம் கேக்க தொடங்கினால் பிறகு என்னாலை ஒண்டும்செய்ய ஏலாது :D:wub:

சாத்திரி அண்ணை, சோழியன் அங்கிள் சொல்லி இருந்தார் அது பொய்யாம் எண்டு. சரி நீங்கள் விளக்கம் உள்ளனீங்கள் எண்டால் மேல உள்ள நிறங்களில எந்த இலக்கம் அல்லது இலக்கங்கள் மாநிறம் எண்டாவது சொல்லலாம் தானே? அதான் நிறக்கலவைகளிண்ட படம் போட்டு இருக்கிறன். பிறகு ஏன் கொஞ்சம் தயக்கம்? :D

  • தொடங்கியவர்

மாநிறத்தில இடியப்பச் சிக்கலைவிடச் சிக்கலா இவ்வளவூ சிக்கல் இருக்குமெண்டு ஆரம்பத்தில தெரியாமல்போச்சு .ஆளவிடுசாமி இடத்தைக் காலி பண்ணுகிறன். :wub:

ஹா ஹா.... மாநிறம் எண்டதை போட்டு தமிழ் மின் அகராதியில் தேடினன். அதில் இருந்தது இப்படி....

// சிவப்புக்கும் கறுப்புக்கும் இடைப்பட்ட (உடல்) நிறம் .மாநிறம் // ஒரு பழுப்பு நிறம் எண்டே நினைக்கிறேன்.... ஆக கறுப்பானவர்களாகவும் இல்லாமல் ஆக வெள்ளையாகவும் இல்லாமல் இருக்குற ஆக்கள் நம்மட ஆக்களில் நிறையப்பேர் இருக்கினமே ...... அவர்களைத்தான் மாநிறம் எண்டு சொல்லுறது போல.....!

மாநிறத்தில இடியப்பச் சிக்கலைவிடச் சிக்கலா இவ்வளவூ சிக்கல் இருக்குமெண்டு ஆரம்பத்தில தெரியாமல்போச்சு .ஆளவிடுசாமி இடத்தைக் காலி பண்ணுகிறன்.

ஹிஹி நீங்கள் தொடந்து எழுதுங்கள்.....உங்கள் எழுத்து நடை வாசிக்க நல்லாருக்கு நகைச்சுவையாகவும் இருக்கு..! முந்தி முகத்தார் அண்ணா & சாத்திரி அண்ணா எழுதுவது போல்...... ! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை கறுப்பி நீங்கள் பாட்டுக்கு வஞ்சகம் இல்லாமல் என்னோட கதைப்பியள் நாலு நாளைக்கு நாங்கள் கதைக்கிறதை உவள் செல்லம்மா மட்டும் கண்டாளோ! என்னைப் பிடிச்சு ஒரு உலுப்பு உலுப்பி எடுத்திட்டுத்தான் அடுத்த அலுவல்பாப்பாள்.

உங்களோட கதைக்கிறதை செல்லம்மா கண்டால் தானே வில்லங்கம். அப்படி பார்த்தாலும்

ஆஆஆஆஆஆஆஆ.......... இந்த கறுப்பு நிறத்தைக் கண்டாலே விலகிப்போயிடுவாங்க சார்.

என்ன அம்பளம் அங்கிள் இப்பிடிச் சொல்லிப்போட்டீங்கள். சரி மிச்சம் கோழி இறைச்சிக் கதையச் சொல்லுங்கோ. கோழி இறைச்சி காய்ச்சி சாப்பிட்டீங்களோ இல்லாட்டி அதுக்கு முன்னமே ஆத்தா வீட்டுக்கு வந்திட்டாவோ?

நான் நினைக்கிறன் அம்பளம் அங்கிள் இந்த மாநிறம் எண்டுறது ஆங்கிலத்தில ஆக்கள் பாவிக்கிற fair skin - not dark எண்டுறதில இருந்து வந்திச்சிதோ தெரியாது.

இப்ப கலியாண வீடுகளுக்கு போயிட்டு வரேக்க மற்ற ஆக்கள் பொம்பிளை எப்பிடி எண்டு கேட்டால் அதுக்கு பதிலாக அவ கொஞ்சம் fair இல்லாட்டி நல்ல fair எண்டு ஆக்கள் சொல்லிறவேள் தானே? சிலது மாநிறம் எண்டுறது அதுவா இருக்கலாம் எண்டு நினைக்கிறன்.

சரி அப்ப fair skin எண்டால் எந்த நிறம் எண்டு யாருக்கும் தெரியுமோ? ஹாஹா.. :rolleyes:

இப்ப வெள்ளைக்காரன WHITE எண்டு சொல்லிறம். இதுமாதிரி கறுவலுகள Black எண்டு சொல்லிறம். ஆனா உண்மையான வெள்ளை நிறத்தில ஆக்கள் இல்லத்தானே, உண்மையான கறுப்பு நிறத்திலயும் ஆக்கள் இல்லத்தானே. கடும் மண்நிறத்த கறுப்பு எண்டு சொல்லிறம் எண்டு நினைக்கிறன்.

ஆக்கள நிறத்த வச்சு ஒப்பீடு செய்து கதைக்கிறது கொஞசம் அல்ல நிறையவே கஸ்டம். இப்ப நாங்கள் அவ நல்ல வெள்ளை எண்டு சொல்லுவம். வெள்ளைக்காரன் நாங்கள் சொல்லிற அதே ஆள சிலது கறுப்பி/ இடைநிறம்/மண்நிறம் எண்டு சொல்லக்கூடும்.

எண்டபடியால் இந்த மாநிறத்த இதோட வெட்டிப் புதைப்பம். சரியோ அம்பளம் அங்கிள் :lol:

Edited by முரளி

  • தொடங்கியவர்

அனித்தா ரொம்பவூம் ஐஸ் வச்சிட்டாயம்மா குளிர் ஜீரம்பிடிச்சிட்டுது பரவாயில்லை இரண்டு நாளிலை சரியாப்போயிடும். ஆனாலும் என்ரை சின்னதொரு ஆதங்கம் என்னடா எண்டால் அமபலத்தார் இன்னுமொரு முகத்தாராகவோ சாத்திரியாராகவோ பார்க்கப்படாமலுக்கு அம்பலத்தாராகவே இருக்கவிரும்புகிறன்.இப்பிடி

Edited by ampalathar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.