Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்று கருத்தாளன் என்பது ஒரு கெளரவமா??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிரித்தானியாவில் இருந்து எழுத்தாளர் ஒருவர் சிட்னி வந்திருந்தா எழுத்தாளர் விழாவில் கலந்து கொள்வதிற்காக அந்த பெண்மணியை வாரம் ஒருமுறை ஒலிபரப்பு செய்யும் தமிழ் ஒலிபரப்பு சேவையினர் பேட்டி கண்டனர்.எழுத்தாளர் இலக்கிய சம்பந்தமான பேட்டியை தான் கொடுப்பார் என்று கேட்டு கொண்டிருந்த எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது காரணம் அவா கதைத்தது முழுக்க அரசியல் அதுவும் கிழக்கு தேர்தல் பற்றிய அரசியல் அங்கு வாழும் மக்களிற்கு இந்த தேர்தலால் நல்ல பயன் கிடைக்கும் என்ற மாதிரியும் தற்போதைய பிரச்சினை கல்வி,உணவு,உடை போன்ற அன்றாட தேவைகள் என்ற ரீதியில் தனது பேட்டியை தொடர்ந்தார்.

மகிந்தாவை தனது சொந்த பணத்தில் தான் சந்தித்தாக கூறினார்,மற்றும் தேசியதிற்கு எதிரான கருத்துகளை முன்வைத்தார்.அது அவரின் சுகந்திரம் நாங்கள் கண்டுக்க தேவையில்லை ஆனால் இவர்களை எல்லாம் ஏன் நம்மவர்கள் தூக்கி பிடிக்கிறார்கள் எனது கேள்வி?

இதே வானொலி ஒரு வாரங்கள் கழிந்த பின் இன்னுமொரு உரையாடல் நடந்தது அதிலும் ஒரு எழுத்தாளர் கலந்து கொண்டார் அவர் அவுஸ்ரெலியாவில் வாழும் எழுத்தாளர் அவரும் கிழக்கு தேர்தலை பற்றிய தன்னுடைய கருத்துகளை பரிமாறினார்.தேர்தல் நல்லம் என்ற ரீதியிலும் அதன் மூகம் மக்களின் அன்றாட பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்ற வகையிலும் கருத்தை முன்வைத்தார்.

இந்த இருவரும் தேசியதிற்கு எதிரான கருத்தை தான் முன்வைத்தார்கள் இருவரும் எழுத்தாளர்கள் படித்தவர்கள் பட்டம் பெற்றவர்கள்,தங்களது தேசியதிற்கு எதிரான கருத்தை தேசிய ஆதரவாளருடன் சேர்ந்து நாசூக்காக மக்களிற்கு புகட்டி உள்ளார்கள் அங்கு தான் இவர்களின் கெட்டிதனம் தெரிகிறது.

தேசிய ஆதரவாளர்கள் என்று கூறுவோருக்கு இவர்களை இனம் கண்டு கொள்ள முடியவில்லையா?சிலர் சொல்லலாம் நாங்கள் ஜனநாயகவாதிகள்,மாற்று கருத்தையும் உள்வாங்க வேண்டும்,மாற்று கருத்தையும் மதிக்க வேண்டும் என்று அது எவ்வளவு உண்மை என்று எனக்கு தெரியவில்லை.

தாயக்த்தில் தேசியதிற்கு வீரோதமானவர்களை துரோகி,ஒட்டு குழு புலத்தில் இருந்து கூச்சல் போடும் நாம்,புலத்தில் தேசதிற்கு வீரோதமானவர்களை மாற்று கருத்தாளன் என்று கெளரவமான பட்டம் கொடுத்து அவர்களுடன் உறவாடுவது ஏன்?மேடைகளிள்,வானொலிகளிள் கருத்து பரிமாறுவது ஏன்?

இவர்களை நாம் ஒதுக்க முடியாதா?

பட்டம் பெற்றோர்,படித்தோர்,எழுத்தாளர

் தேசிய விரோத கருத்தை புலத்தில் இருந்து கூறினால் அவர்கள் மாற்று கருத்தாளன் அதையே தாயகத்தில் பட்டமற்றோர் சொன்னால் துரோகியா??

எதையும் எழுதுறது எனது உரிமை

எதையும் தூக்கிறது நிர்வாகத்தின் உரிமை

எமது தேசிய போராட்டதிற்கு எதிராக பல சக்திகள் செயற்படுகிறது அதில் ஒரு சக்தியாக ஊடகதுறையும் பங்கு வகிக்கிறது.அந்த வகையில் பீ.பி.சி தமிழ் ஒலிபரப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நான் கூறி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை அந்த வகையில் இவர்களும் தங்கள் பணியை தொடர போகிறார்களா?

புத்தன் கூறிய கருத்துக்களுடன் நானும் உடன்படுகிறேன். நேரடியாக மோதும் எதிரியைவிட நல்லவர்போலத் தம்மை இனங்காட்டிக்கொண்டு நாசுக்காக எமது தாயகக்கோட்பாட்டிற்கு எதிரான விசமத்தனமான கருத்துக்களை நம்மவர் மத்தியில் விதைக்கும் இப்படியான கனவான்கள் மிகவூம் ஆபத்தானவர்கள். இவ்விசமிகளை இனங்கண்டு அவர்தம் முகத்திரையைக் கிழிக்க வேண்டியது தாயக்கோட்பாட்டில் பற்றுக்கொண்ட ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும்.

இவையளுக்கு எதோ தனிப்பட்ட கோபதாபங்கள்..! கூட இருந்து குத்தும் இவர்கள் எதிரியை விட ஆபத்தானவர்கள்..!

மாற்று கருத்தாளன் என்றால் உண்மையில் அதற்கு என்ன அர்த்தம் என்று சரியாக விளங்கவில்லை. அரசாங்கம் செய்யும் கொலைகளை புலிகள் தான் செய்தது என்று திருகி எழுதுபவர்களும் தங்களை மாற்று கருத்தாளன் என்று தான் சொல்கின்றார்கள். இவற்றுக்கு வங்காலைப் படுகொலை செஞ்சோலை குண்டுவீச்சு என்னும் நிறைய சம்பவங்களை எடுத்துக்கூறலாம். இது தான் மாற்றா? சம்பவ இடத்துக்கும் சம்மந்தமில்லாமல் அந்த இடத்தில் இருந்து வரும் செய்திகளை நிராகரித்து அரசு கூறும் செய்திகளை அல்லது அதற்கு மேல் ஒருபடி சென்று அரசை காப்பாற்றும் பிரகாரம் செயற்படுவது மாற்றா? இதற்கு என்ன அர்த்தம்?

தன் தனிப்பட்ட பிரச்சனைக்காக தனிப்பட்ட காழ்புணர்ச்சியால் தன்னினத்தையே காவு கொடுக்க விரும்பும் பல விசக்கிருமிகள் இந்த மாற்று முகமூடிக்குள் பதுங்கியிருப்பது அறியக்கூடியவாறு உள்ளது.

இலங்கை அரசு கடசி தமிழனை கொன்றபின்னும் தமிழனில் குறைகண்டுபிடித்து அதைப்பற்றியே கதைக்கவிரும்பும் குணம் கொண்டவரும் இதற்குள் அடங்குகின்றனர்.

பலவிடங்களில் அரசு துணிந்து மக்களை கொல்வதற்கு இவர்கள் ஊக்கமாக இருப்பதும் இருந்ததும் மறுக்க முடியாத உண்மையே. புலம் பெயர் நாடுகளில் அரசபடுகொலைக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டங்கள் செய்த போது அதை தடுக்கும் விதமாக பல அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியவர்கள் எழுதியவர்கள் இதற்கு தக்க சான்று.

துரோகத்தனத்தில் இருந்து மாற்று என்பதை பிரித்து அறிவது சாத்தியமற்றது. அவ்வாறான அவசியமும் சூழலும் மக்களுக்கு இப்போது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம் எதிர்க்கட்சியை அனுமதிக்கிறது. மாற்றுக் கட்சியை அனுமதிப்பதில்லை. உலகில் எந்த நாட்டிலும் ஒரு கட்சிக்கு மாற்றுக் கட்சி என்று ஒன்றில்லை. ஆனால் உலகில் தமிழீழத்தில் அந்த தேச இருப்புக்கு எதிரான செயற்பாட்டுக்கு துரோகத்தனத்துக்கு எதிரியானவன் இட்டுள்ள பெயர் மாற்றுக் கருத்து, மாற்றுக்கட்சி அவற்றைச் சொல்பவன், நடத்துபவன் மாற்றுக் கருத்தாளன். அவர்களின் துரோகத்தனத்துக்கும் அவர்களின் துரோகக் கொள்கைகளுக்கும் பூசப்பட்டுள்ள முலாம் ஜனநாயகம்.

ஒரே கொள்கைக்காக நாலு கட்சிகள் வைப்பதையும், ஒரே கருத்தை.. நாலு பேர் வேறுபட்ட வடிவத்தில் சொல்ல நிற்பதையெல்லாம் ஜனநாயகம் என்று சொல்வதில்லை. அதுமட்டுமன்றி...

ஒரு தேசத்துக்குரிய கட்சிகளுக்கு.. அவர்கள் என்ன தான் தமக்கிடையே வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருப்பினும், தேசத்தின் இறையாண்மை.. அதன் தேசியம்.. தேச நலன்.. தேச அங்கீகாரம்.. போன்ற அடிப்படைகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயம். அதுமட்டுமன்றி அவர்கள் இவற்றை ஏற்றும் மதித்தும் நடக்கும் பட்சத்திலே தான்.. அவர்கள் அங்கு ஜனநாயகம் என்பதன் கீழ் செயற்பட அனுமதிக்கப்படுகின்றனர். இந்திய இறையாண்மையை மதிக்காத ஒரு கட்சியை இந்தியா ஜனநாயகம் என்று அங்கு செயற்பட அனுமதிக்குமா. இல்லை..!

உதாரணத்துக்கு.. அமெரிக்காவின் இறையாண்மையை அல்லது அமெரிக்காவின் தேசியத்தை.. அல்லது அதன் தேச நலனை அல்லது தேசத்தை எதிர்க்கும் கட்சி அங்கு இருக்க வாய்ப்பில்லை..! அமெரிக்க தேசத்தை தற்போதைய நிலை வரையான அதன் கட்டமைப்பின் எல்லைகளின் கீழ் அங்கீகரித்து ஏற்றுக் கொண்ட கட்சிகள் தான்.. அதனை அரசாள என்று அமையும் கொள்கைகள் அளவில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் ஆளும் கட்சி எதிர்க்கட்சிகள் என்று இருக்கின்றன. அவை ஒரு போதும் அமெரிக்க தேசம்.. தேச நலன்.. அதன் இருப்பு.. அதன் தேசியக் கூறுகள்.. அதன் பொது வெளிவிவகாரக் கொள்கை வகுப்புக்கள் இவற்றில் எல்லாம் எந்த செல்வாக்கும் செய்ய முடியாது.

தமிழ் மக்களின் தேசம்.. தமிழீழம். தேசியம்.. தமிழ் தேசியம்.. தேச நலன்.. தேசத்தின் இருப்பு... அதன் இறையாண்மை.. இவற்றை அங்கீகரிக்காத எவரும் தமிழ்மக்களை ஆள தகுதியற்ற ஜனநாயகவாதிகளே.

அந்த அடிப்படையில்.. இவர்கள் பேசுவதனைத்தும் ஜனநாயகமே அன்று. இவை தேசத்துரோகங்கள். அமெரிக்க தேசத்தின் இறையாண்மையை காட்டிக் கொடுப்பவன்.. அல்லது விற்பன்.. அமெரிக்க தேசத்துரோகி. அமெரிக்க தேசத்தின் இருப்பை அதன் தேசியத்தை நிராகரிப்பவன்.. அந்த தேசத் துரோகி.

அதேபோன்றதுதான்.. தமிழீழம் என்பதும். அது விடுதலைப்புலிகளின் கோரிக்கையல்ல. ஒவ்வொரு தமிழீழத் தமிழனின் பூர்வீக உரித்து. அந்த வகையில் அதனை நிராகரித்துவிட்டு.. தமிழ் மக்களுக்கு மாற்றுக் கருத்துச் சொல்வது என்பது.. தேசத் துரோகம். தமிழீழம்.. தமிழ் தேசியம்.. தேச இறையாண்மை.. தமிழ் மொழி இவற்றை அங்கீகரிக்காத.. எந்த பேடிகளும் துரோகிகளும்.. ( அவர்கள் கல்வியில் ஒரு சில துறைகளில் பெற்ற பட்டங்களை வைத்துக் கொண்டு.. அவர்களுக்கு தேவையற்ற சமூக முன்னுரிமை அளித்து..) மாற்றுக் கருத்தாளர்கள் என்ற தோறணையில் கருத்துக்களை விதைப்பதை அனுமதிப்பது தமிழீழ தேசத்துக்கு எதிராகச் செய்யப்படும் துரோகமாகவே கருத வேண்டும்.

தமிழர்கள் எம் ஒரே இலட்சியம். தமிழீழ தேசம். அது கனவல்ல. அது வரலாற்று உண்மை. ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தை விடிவிப்பது என்பதற்கும்.. அதன் இறையாண்மையை மீள நிலைநாட்டுவதற்கும் என்று அங்கு ஒரு மாற்றுக் கருத்தில்லை. தமிழீழம் என்றது ஒரு கருத்துத்தான். அது இலங்கைத் தீவில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அடக்கிய தேசம். அதற்கு மாற்றுக் கருத்து என்ற ஒரு மண்ணாங்கட்டி அங்கில்லை...!

அப்படி தமிழீழத்துக்கு மாற்றுக் கருத்து வைத்திருப்பவர்கள்.. புலிகளின் துரோகிகள் அல்ல. தமிழீழ பூர்வீகத்தைக் கொண்ட தமிழர்களின் தேசத் துரோகிகள். அவர்களை எல்லாம்.. ஜனநாயகவாதிகளாகவோ.. தமிழீழ தேசத்தின் எதிர்கால எதிர்க்கட்சிகளாகவோ இனங்காண்பது மிகப்பெரிய தவறு. அவர்களைத் தெளிவாக தமிழீழத் தேசத்துரோகிகளாக அடையாளம் காணலாம்..! அப்படி அடையாளம் காண்பதில் எந்தத் தவறும் இல்லை.

விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை விமர்சிப்பது வேறு. தமிழீழத்தை நிராகரிப்பது, காட்டிக்கொடுப்பது என்பது வேறு. தமிழீழத்தை அங்கீகரித்து நின்று கொண்டு.. தமிழீழ மக்களின் உரிமைகளை பாதுகாத்து நின்று கொண்டு... தமிழீழத்தை அங்கீகரித்து நிற்கும் புலிகளோடு.. ஜனநாயக ரீதியில் தமிழீழ தேசத்தில் எதிர்க்கட்சி வரிசையில் மக்களை ஆள.. தமிழீழ தேசத்தை திறம்பட நிர்வகிக்க என்று போட்டிக்கு நிற்கலாம். அது ஜனநாயகம். ஆனால்... அப்படியன்றி.. தமிழீழத்தை அங்கீகரிக்காது.. சிறீலங்காவுக்கு தமிழீழத்தைக் காட்டிக் கொடுத்து.. விலை பேசி விற்கும்.. தேசத்துரோகக் கருத்துக்களாக முன் வைக்கப்படும் மாற்றுக் கருத்துக்கள்.. எனப்படுபவை.. தமிழீழத் தேசத் துரோகங்களே..! அது மரண தண்டனைக்குரிய குற்றங்கள். இது தமிழீழத்துக்கு மட்டுமானதல்ல. உலகெங்கும் தமக்கென்றான இறைமையுள்ள தேசத்தில் வாழ விரும்பும் சுதந்திரத்தை விரும்பும் மக்களின் அவர்களை நிர்வகிக்கும் சக்திகளின் நிலைப்பாடும் இதுவே.!

தமிழீழம் என்ற தேச இருப்பையே அங்கீகரிக்காதவன்.. தமிழீழத்தில் எப்படி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆக முடியும். தமிழீழ தேசம்.. அதன் மொழி.. அதன் எல்லைகள்.. அதன் இறையாண்மை.. அதன் தேசியம்.. அதன் நலன்.. இவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு அவற்றை எல்லாம் பாதுகாக்க உறுதி பூணுபவனுக்கே தமிழீழத் தமிழர்களை ஆளும் தகுதியும் தமிழீழத்தை நிர்வகிக்கும் தகுதியும்.. அவர்கள் ஜனநாயக வழியில் தமிழீழத் தாயகத்தில் செயற்படவும் வழி இருக்கும்.

அந்த வகையில் தமிழீழத்தை ஏற்றுக் கொண்டுள்ள.. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கும்.. இன்னும் தமிழீழத்தை அங்கீகரிக்கக் கூடிய வகையில் இருக்கும்.. ஆனால் தமிழீழத்துக்கு எதிராக மாற்றுக் கருத்தோ துரோகச் செயலோ செய்யாதவர்களும் சொல்லாதவர்களும்.. இதற்குள் அடக்கப்படலாம்.

தமிழீழ தேசத்தின் இருப்பையே கேள்விக் குறியாக்கியவன்.. கூறுபோட்டவன்.. தமிழ் மொழியை.. தமிழ் தேசிய அடையாளங்களை.. மக்களை சிதைத்தவன்... தேசத்தை சிறுக சிறுகச் சிதைக்கும் எதிரிக்கு துணை போனவன்.. தமிழீழத்துக்கு எதிராக செயற்படுபவன்.. அல்லது கொள்கை வகுப்பவன்.. அல்லது பேசுபவன்.. தமிழீழத்தை எதிர்க்கும் எதிரியுடன் சேர்ந்து இயங்கி தேசத்தின் இருப்பை அழிக்க நிற்பவன்.. எவனும் தமிழீழத்தில்... ஜனநாயகத்தின் படி.. எதிர்க்கட்சியாளனாகவோ.. அல்லது ஆளும் கட்சியாளனாகவோ ஆக முடியாது. அவர்கள் தெளிவாக உலக நியதிப்படி.. தேசத் துரோகிகள் என்று தெளிவாக இனங்காணப்பட்டு.. ஒன்றில் அழிக்கப்பட வேண்டியவர்கள் அல்லது தேசத்தை விட்டு நாடு கடத்தப்பட வேண்டியவர்கள்.

1972 இல் சிறீலங்காவின் இறையாண்மையை, தேச நலனை மதிக்காது செயற்ப்பட்டதற்காக 1978ல் அன்றைய சிறீலங்கா ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா முன்னாள் சிறீலங்கா பிரதமரான சிறிமாவோ அம்மையாரின் குடியுரிமையைப் பறித்தார். நாடு கடத்தவும் திட்டமிட்டார்.

தங்கள் நாடுகளை குட்டிச் சுவராக்கிய குற்றத்துக்காக ஜேர்மனியின் முன்னாள் அதிபர் கிட்லர்.. உகண்டாவின் முன்னாள் அதிபர் இடியமீன்.. பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மார்க்கோஸ்.. போன்ற பல தலைவர்கள்.. தங்கள் சொந்த தேசத்தின் இருப்பை.. இறையாண்மையை சிதைக்க விளைத்தது என்பதன் அடிப்படையில் நாட்டை விட்டு மக்களால், மக்கள் படைகளால் விரட்டி அடிக்கப்பட்டனர்.

மாறாக சொந்த தேசத்தைப் பாதுகாத்து.. அதன் எல்லைகளை எதிரியின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து.. ஒரு நாட்டை அதன் தேசிய இனத்திடம் கையளித்த எந்தப் போராளிகளும் மக்களால் விரட்டி அடிக்கப்படவில்லை. அந்த வகையில் தமிழீழ தேசத்தின் எல்லைகளை மீள நிறுவி.. அதனை மீட்கவும் பாதுகாக்கவும் போராடும் விடுதலைப்புலிகளும் எப்போதும் விரட்டி அடிக்கப்படமாட்டார்கள்.

தமிழீழத்துக்கு மாற்றாக ஒரு தாயகம் இலங்கைத் தீவில் தமிழருக்கு இல்லை. அங்கு மாற்றுக் கருத்து என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த வகையில்.. தமிழீழத்தை எவ்வெவ்வழிகளில் எல்லாம் எதிர்க்கின்றனரோ.. அது தேசத்துரோகமே அன்றி.. அதை, தமிழீழத்தை ஏற்றுக் கொண்டு.. அதற்குள் நின்று கொண்டு மக்களை ஆள, தேசத்தை நிர்வகிக்க.. ஜனநாயக வழிமுறையில் ஆளும் கட்சி.. எதிர்க்கட்சி அமைத்து செயற்படுவதற்கான, ஜனநாயக அரசியலுக்கான அடிப்படையாக கருத முடியாது. இதை புலம்பெயர் தமிழ் ஊடகங்கள், மக்கள் மற்றும் உறவாளர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

டாக்டர் பட்டம் கொடுப்பது.. அந்தத்துறைக்கு. தமிழருக்காக தமிழீழத்துக்கு மாற்று தேசம் கண்டு பிடித்தத்ததற்காக அல்ல. எனவே அந்தப் பட்டதாரி புடலங்காய் தாரிகளைக் கொண்டு போய்.. குப்பையில் போடுங்கள் அல்லது தேவையான கல்வி சார் கூடங்களில் பாவியுங்கள். தமிழீழம் என்ற தேசத்தை அங்கீகரிக்க.. அதன் வரலாற்று பூர்வீக இருப்பே போதும். அங்கு வாழ்ந்த எம் சந்ததியினரின் அடையாளமே போதும். அதற்கு மாற்றுக் கருத்தில்லை. எனவே தமிழீழம் சார்ந்து வரும் மாற்றுக் கருத்து என்பது.. தமிழீழ தேசத் துரோகக் கருத்து. தமிழீழத்தை துண்டாடும் கருத்து என்பது.. தமிழீழ தேசத்துக்கு எதிரான துரோகக் கருத்து. அவற்றை அங்கீகரிப்பது.. அல்லது பரப்புரை செய்வது.. பேசுவது.. தமிழீழ தேசத்துரோகமே.. அன்றி ஜனநாயக அரசியல் அல்ல...!

இங்கும் இப்பதிவின் பிரதி இடப்பட்டுள்ளது: http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தான் கொஞ்சபேர் "கருத்துகளை கருத்துகளால் வெல்ல வேண்டும் ஆயுதங்களால் அல்ல " எனக்கூறியவர்கள் இன்று அரசின் அடிவருடிகளாக இருக்கிறார்கள்.

இந்த தலைப்பில் தொடங்கிய புத்தன் ஏன் பெயரை சொல்லவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பில் தொடங்கிய புத்தன் ஏன் பெயரை சொல்லவில்லை?

ஒருவர் இலண்டனில் இருக்கும் இராஜேஸ்வரி , பெண்ணியவாதி என்று புலி எதிர்ப்பு கருத்துகளைச் சொல்லும் பெண்மணி. காசுக்காக சொந்த இனத்தினைக் காட்டிக் கொடுக்கும் ஈனப்பிறவி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.