Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களுக்கு கறுப்பு ஓட்டை (Black hole) எண்டு விஞ்ஞானத்தில சொல்லபடுறது என்ன எண்டு தெரியுமோ?

Featured Replies

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

உங்களுக்கு உங்களுக்கு கறுப்பு ஓட்டை (Black hole) எண்டு விஞ்ஞானத்தில சொல்லபடுறது என்ன எண்டு தெரியுமோ? எனக்கும் அது என்ன எண்டு விபரமா விளக்கமா தெரியாது. நான் அண்மையில தொலைக்காட்சியில இதுபற்றிய ஒரு விவரணச்சித்திரம் பார்த்து இருந்தன். நான் ஆங்கிலத்தில இதுபற்றி வாசிச்சும் அறிஞ்சன் அத இப்ப தமிழில எப்பிடி சொல்லிறது எண்டு தெரிய இல்ல.

இதில முக்கியமான ஒரு விசயத்த மட்டும் பற்றி சொல்லலாம் எண்டு நினைக்கிறன். இப்ப விஞ்ஞான புனைகதைகள் இருக்கிதுதானே? அவற்றுக்கு கருவூலமால இருக்கிறதில மிகவும் முக்கியமானது இந்த கறுப்பு ஓட்டை.

ஆக்கள், விஞ்ஞான கதாசிரியர்கள் என்ன சொல்லுறீனம் எண்டால் இந்த கறுப்பு ஓட்டையுக்க நாங்கள் விழுந்தால் உள்ளுக்க போனாப்பிறகு வேறு ஒரு உலகம் இருக்குமாம் எண்டு. இது வெறும் கதையாக இருந்தாலும், நடைமுறையில இதுபற்றி சிந்திச்சு பார்க்கேக்க..

எண்ட கேள்வி என்ன எண்டால் கறுப்பு ஓட்டையுக்க ஒரு உயிரினம் விழுந்திது எண்டால் அது விழுந்த ஓரிரு மில்லி செக்கன்களிலேயே அந்த உயிரினம் இறந்துவிடும். அதிண்ட கலங்கள், இழையங்கள் எல்லாம் ஓரிரு மில்லி செக்கன்களிலேயே இறந்துவிடும். எண்டபடியால் வழமையான இறந்த உடல் - உயிரற்ற உடல் ஒண்டு தொடர்ந்து கறுப்பு ஓட்டையுக்க போறதில ஏதாவது வித்தியாசமா நடக்கும் எண்டு நினைக்க இல்ல. கறுப்பு ஓட்டையுக்க ஏதாவது பொருள் ஒண்டு போகேக்க அது Squeeze பண்ணப்படும். எண்டபடியால் உயிரினம் அதுக்க விழுந்தால் விழுந்த கனத்திலேயே இறக்கவேண்டும். ஏன் எண்டால் உயிர் வாழக்கூடிய சூழல் கறுப்பு ஓட்டையுக்க செயற்கையாக கூட உருவாக்கப்பட முடியாதுதானே?

ஆனால் இந்த கறுப்பு ஓட்டைய உண்மை எண்டு விஞ்ஞானிகள் நிரூபனம் செய்து இருக்கிறீனம்.

இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள். கறுப்பு ஓட்டை பற்றி யாரும் விபரமான அல்லது அரைகுறை அறிவு உடைய ஆக்கள் அல்லது இல்லாத ஆக்கள் உங்கட கருத்துக்களயும் கொஞ்சம் சொல்லுங்கோ. நன்றி!

ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொல்லிட்டு போறன்..!

நம்மட சூரியன் தொடக்கம் எல்லா நட்சத்திரங்களுக்கும் ஒரு ஆயுட் காலம் இருக்கு பாருங்கோ..! நம்மட சூரியன்ட ஆயுட்காலம் கிட்டத்தட்ட 14 பில்லியன் ஆண்டுகள்..! இப்போது 5 பில்லியன் முடிஞ்சிட்டுது..! அதுக்கப்புறம் நம் சூரியன் ஒரு " White Dwarf" ஆக மாறி விடும் (இதற்கு பல விளக்கங்கள், தத்துவங்கள் உண்டு , சுருங்க சொல்லின் ஒளியிளந்த நிறை ஒடுங்கிய நட்சத்திரம்) நம்மட சூரியனை விட 10 மடங்கு பெரிய நட்சத்திரங்கள் தம் ஆயுட்காலம் முடியும் போது "Black hole " ஆக வாய்ப்பு உண்டு.. இதற்கிடையே இடைப்பட்ட மாற்றங்களும் உண்டு.. கவனிக்க, ஒவ்வொரு மாற்றங்களுக்கும் கிட்டத்தட்ட மில்லியன் கணக்கான ஆண்டுகள் எடுக்கும். ஆயுட்காலம் முடிவது என்று குறிப்பிடுவது "hydrogen/helium fusion " நிறைவு பெறுவது

இந்த மாற்றத்தின் போது அந்த நட்சத்திரத்தின் சடப்பொருளானது ( mass) அணுக்கருவினும் நுண்ணிய இடத்தினுன் ஒடுக்கப்படுகின்றது. இதனால் அதன் ஈர்ப்பு சக்தி கற்பனை செய்ய முடியாத அளவு அதிகமாக இருக்கும், இது ஒளியை கூட வளைக்ககூடியது என்று கூறப் படுகின்றது. இந்த பிளாக் கோல் பற்றிய விளக்கங்களுக்கு அல்பேர்ட் ஐன்ஸ்டைனின் "General Relativity theory " யே முன் மாதிரி.

"Black hole " பற்றி ஆராய்வில் பலர் ஈடுபட்டுள்ளனர்..! அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்லுவர்..! உண்மை என்ன என்பதை நாம் பொறுத்திருந்துதான் (?) பார்க்க வேண்டும். ஏனென்டால் ஆய்வு எல்லாம் குறிப்பிட்ட கருதுகோள்களை வைத்து கொண்டுதான் நிறுவப்படுகின்றது .

lifeofstarsia7.th.png

Edited by லீ

கருங்குழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கருங்குழிகள் (Black Hole) பாரிய நட்சத்திரங்களின் பரிணாமத்தின் இறுதிக்கட்டமாகக் கருதப்படுகிறது. ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடுகளின் அடிப்படையிலான கணிப்புகளின்படி கருங்குழிகள் இருப்பது பற்றி எதிர்வு கூறப்பட்டது எனினும், பரிசோதனை அடிப்படையிலான சான்றுகள் அண்மையிலேயே கிடைக்கத் தொடங்கியுள்ளன. ஐன்ஸ்டீனின் கோட்பாடுகள் எதிர்வு கூறுகின்றபடி, இது அண்டவெளியில் ஒரு புள்ளி மட்டுமே. இதற்குக் கன அளவோ, மேற்பரப்போ கிடையாது. ஆனால் இதன் பிரம்மாண்டமான திணிவு (mass) காரணமாக இது முடிவிலியான அடர்த்தியைக் கொண்டுள்ளது.

அண்டங்களில் பலகோடி சூரியன்கள் இருப்பதாக என்றோ நம்மவர்கள் சொல்லியுள்ளார்கள். அவைகள் இப்போது கண்டுபிடிப்புகளாக பிரபலப்படுத்தப்படுகின்றது. அதுபோல்தான் இந்தக் கறுப்பு ஓட்டை பற்றியதும். குறுகியகாலத்தில் இதுபற்றிய வெளியீடு ஒன்று பற்றி நானும் அறிந்தேன். அது அண்டங்களின் சுழற்சி மையமாகக் கூட இருக்கலாம். இருந்தாலும் இதுபற்றி இனித் தேடிப்பார்க்க வேண்டும். என்ன இருக்கிறது என வெள்ளைக்காரன் சொன்னால் ஆராய்ச்சி நிருபிப்பு என்போம். அதையே பல நூற்றாண்டுகளுக்கு முன் நம்மவர்கள் சொல்லி வைத்ததை எந்த விஞ்ஞான கூடத்தில் ஆராய்ந்து கண்டுபிடித்தார்கள் என்று கேட்டு பகுத்தறிந்து கொள்வோம்.

"கருங்குழி" பெயர் நல்லாயிருக்கே?

என்ன இருக்கிறது என வெள்ளைக்காரன் சொன்னால் ஆராய்ச்சி நிருபிப்பு என்போம். அதையே பல நூற்றாண்டுகளுக்கு முன் நம்மவர்கள் சொல்லி வைத்ததை எந்த விஞ்ஞான கூடத்தில் ஆராய்ந்து கண்டுபிடித்தார்கள் என்று கேட்டு பகுத்தறிந்து கொள்வோம்.

அப்படியா இறைவன் .. அதைப் பற்றி அறியத் தாருங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

A Brief History of Time புத்தகத்தைப் படித்தால் பல சுவாரசியமான விடயங்கள் தெரியவரும்.. யாவரும் எளிதாகப் படிக்கக்கூடிய புத்தகம். எழுதியவரும் ஒரு வித்தியாசமான விஞ்ஞானி!

http://en.wikipedia.org/wiki/A_Brief_History_of_Time

http://www.amazon.com/Brief-History-Time-S...g/dp/0553380168

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவையான தலைப்பாக இருந்தாலும் கறுப்பு ஓட்டைக்குள் உள்ள நல்ல விடையத்தை அறிந்து கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஓட்டையப் பற்றி நான் விளங்கிக் கொண்டதைச் சொல்லுறன்: பிக் பாங்க் தியரிப்படி பிரபஞ்சம் கோளவடிவானது விரிஞ்சு கொண்டு செல்லுது (ஒரு காலத்தில ஒடுங்கி மோதிப் பிறகும் சிதறும்). இந்தப் பெருவெடிப்பு ஏற்பட்டதால நட்சத்திரக் கூட்டங்கள் பல உருவாகி நீர்ச் சுழியளப் போல சுழிச்சுக் கொண்டு பிரபஞ்சத்தில இருக்குது. நாமளும் பால்வெளி மண்டலமெண்டிற ஒரு வெள்ளைச் சுழியுடைய ஒரு ஓரத்திலதான் இருக்கிறம். இந்தச் சுழியளுக்கு நடுவில ஏற்படுற மையக்கவற்சிப் பகுதியில காணப்படுற பள்ளங்கள் கறுப்பு ஓட்டையள் என்று சொல்லப்படுகுது. அவ்விடத்தில கறுப்பாயிருக்கிறதால சில கறுப்பு ஓட்டையள் சுழிப்பு இல்லாத இடங்களிலயும் இருக்ககலாம். ஒரு ஊதுன பலூன் மாதிரி விரிவடைஞசுகொண்டு போற பிரபஞ்சத்தில காணப்படுற கறுப்பு ஓட்டைகள் சுழியப் பள்ளங்களாக இருக்கிறதால அதற்கூடாகப் புகுந்துகொண்டு பிரபஞ்சத்துடைய அடுத்தபக்கததை லண்டனில ரியூப்பில போற மாதிரிப் போய் அடையலாம் அதற்கு எடுக்க கூடிய காலப்பகுதி சாதாரணமாகப் பிரபசத்தில பயணஞ்செய்யுற காலத்தை விடக் குறைவானது எண்டு சொல்லப் படுகுது. இதைவிட அங்க காலம் பூச்சியமாகிறது, திணிவு அதிகரிக்கிறது பற்றியெலாம் விளக்கங்கள் இருக்குது. ஆராவது இதில பிழையான விபரங்களிருந்தால் திருத்துங்கோ. கூகிளில அடிச்சால் அல்லது பிபிசியில ஸ்பேஸ் பகுதியில தேடினால் விரிவாக அறியலாம்தானே.

  • தொடங்கியவர்

நன்றி லீ, மின்னல், இறைவன், கிருபன், தமிழ்சிறீ, கரு..

லீ அந்தமாதிரி விளக்கம் குடுத்து இருக்கிறீங்கள். நான் தொலைக்காட்சியில பார்க்கேக்க கிட்டத்தட்ட இதே கருத்தைதான் சொன்னவங்கள். தமிழில வடிவா விளக்கமா சொல்லி இருக்கிறீங்கள். பாராட்டுக்கள். :)

ஓ கறுப்பு ஓட்டை எண்டு சொல்லிறத விட கருங்குழி எண்டு சொல்லிறது நல்லா இருக்கிது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பு எண்டாலே பயமாய்க்கிடக்கப்பா :)

Black hole கருந்துளை அல்லது கருமைத்துவாரங்கள் என்று வாசித்திருக்கிறேன்..

அண்மையில் வலைப்பதிவில் ஒருவர் இது பற்றி வித்தியாயசமாக

எழுதியிருந்தார்.. நேரமிருந்தால் படித்துப்பாருங்கள்...

எமது பிரபஞ்சத்தில் (black holes) கருந்துளை அல்லது

கருமைத்துவாரங்கள் என அழைக்கப்படும் இறந்த நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் அருகே செல்பவர்களுக்கு நேரம் மெதுவாகவே நகரும். ஆனால் இங்கே பூமியில் இருப்பவர்களுக்கோ நேரம் வழமை

மாதிரியே ஓடும்.இந்த நேர இடைவெளி பூமியிலே பல வருடங்களுக்கு சமமானதாகும்..

இதில நான் சொன்ன "white dwarf " பற்றிய முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் தான் சுப்பிரமணியன் சந்திரசேகர். இவர் பெயரால் ஒரு செயற்கை கோள் விண்ணில் உள்ளது.

Chandrasekhar's most famous success was the astrophysical Chandrasekhar limit. The limit describes the maximum mass of a white dwarf star, ~1.44 solar masses, or equivalently, the minimum mass, above which a star will ultimately collapse into a neutron star or black hole (following a supernova). The limit was first calculated by Chandrasekhar in 1930 during his maiden voyage from India to Cambridge, England for his graduate studies.

http://en.wikipedia.org/wiki/Subrahmanyan_Chandrasekhar

  • தொடங்கியவர்

ஆக்கள் கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு எண்டு பாடிக்கொண்டு திரியுற இந்தக்காலத்தில கு.சா அண்ணா என்ன இப்பிடி சொல்லி போட்டீங்கள்? :)

வசி இணைப்பிற்கு நன்றி. விகடகவி என்பது யாழ்கள விகடகவியா இல்லாட்டி இது வேற யாரோவா? அவரது கற்பனைக்கு பாராட்டுக்கள். எண்டாலும் இதுகளும் ஒண்டுதான் நம்மன்ட கந்தபுராணமும் ஒண்டுதான். ஹிகி.

அடிப்படையில நான் ஒரு விசயம் சொல்லிறன் கேளுங்கோ.

கொஞ்சம் ஆழமாக பார்த்தால் நேரம் எண்டுறது முதலாவது வெளிப்பொருள் சம்மந்தப்பட்ட விசயம் இல்ல. அது எம்மைப் பற்றியது.

மற்றது,

எங்களுக்கு ஆறு அறிவு மாத்திரமே இருக்கின்றது. ஆனால் ஏழாவது, எட்டாவது அறிவுகள் இருக்குமாக இருந்தால் நாம் அடிப்படையில் விளங்கி வைத்துள்ள இந்த உலகம் மிகவும் தவறானது.

உதாரணமாக,

இப்ப எறும்பு ஒண்டப்பாருங்கோ, எங்களப் பாருங்கோ. எங்களையும் எறும்பையும் ஒப்பிட்டால், எறும்பு தனது அறிவுக்கு எட்டினது தான் உலகம் எண்டு முடிவு கட்டினால் அது எறும்பின் அறியாமை. ஆனால், எங்களுக்கு எங்கட உடம்பில ஒரு எறும்பு ஊறும்போது அதப்பார்க்க எமக்கு சிரிப்பாக இருக்கிது.

இதுமாதிரித்தான் எமது அறிவுக்கு மேற்பட்ட ஏழாவது, எட்டாவது ஒன்பதாவது அறிவுகள், புலன்கள் உள்ள உயிரினங்கள் இருந்தால் அவை எம்மைப்பார்த்து இப்போது சிரித்துக்கொண்டு இருக்கும்.

ஏன் என்றால்,

அவற்றுக்கு எம்மை பார்க்கக்கூடியதாக இருக்கும். ஆனால் எம்மால் அவற்றை உணரமுடியாமல் இருக்கலாம். ஏன் என்றால் எமது அறிவு ஆறு அறிவுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

எண்டபடியால் இப்போதைக்கு நாம் பொத்திக்கொண்டு இருக்கிறது நல்லது போல இருக்கிது எண்டு நான் சொல்ல இல்ல. ஹிகி :D

நாம் நம் ஆறறிவுகளுடன் பொத்திக்கொண்டிருக்காமல் ஆராய்வதே நல்லது..! சரிதானே முரளி..! சில 100 ஆண்டுகளோட ஒப்பிடும் போது இப்ப நாங்க எவ்வளவோ அறிந்துள்ளோம்..! போகப் போக இன்னும் இன்னும் அறிவோம். விண்ணை வெல்வோம்.

  • தொடங்கியவர்

ஆனால் பாருங்கோ லீ ஆறு அறிவோட நிண்டு ஆறு அறிவின் எல்லைக்கு உட்பட்ட விடயங்களத்தான் அறியலாம். ஏழாவது, எட்டாவது அறிவுகள் இருந்தால் ஒழிய ஆறு அறிவுக்கு அப்பால்பட்ட விசயங்கள்பற்றி நாம் போகமுடியாது. ஆறு அறிவினால் செல்லக்கூடிய விடயங்களுக்கும் ஒரு எல்லை உண்டு.

இப்ப எறும்புகள் தமது தொழிநுட்பத்தை விருத்தி செய்யலாம். ஆனால் எறும்புகள் விண்ணுக்கு விண்கலம் ஏவமுடியுமா? இதுபோலவே, எமது ஆறு அறிவின் எல்லைக்கு உட்பட்ட செயல்களையே நாம் செய்து மகிழமுடியும்.

நாம் கேட்கின்ற வழமையான கேள்விகளான கடவுள், இறப்பு, பிறப்பு பற்றிய கேள்விகளிற்கான விடைகள் எல்லாம் இந்த ஏழாவது எட்டாவது அறிவு உள்ளவர்களிற்கு கிடைத்து இருக்கலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கெல்லாம் ஏழெட்டெண்டு போகத்தேவையிவல்ல. தன்னைத் தானே உணர்தல் எண்டிற முதலாவது அறிவே போதும்

நிசமா நேக்கு இத பற்றி ஒன்னுமே தெரியாது.. :lol: (பெயர் மட்டும் எங்கையோ கேட்ட மாதிரி இருக்கு)...ரொம்ப நன்றி குருவே உந்த "கறுப்பு ஓட்டை" பற்றி அறிய தந்ததிற்கு :lol: ..அது சரி குருவே ஏனிப்ப இத பற்றி எல்லாம் சிந்திக்கிறியள் நன்ன விசயம் தான் என்டாலும்.. :)

இத வாசிக்கிற நேரம் தான் நேக்கு ஒன்னு மட்டும் விளங்குது லோகத்தில பல ஓட்டைகள் மட்டும் இருக்குது என்டு மற்றது "லீ" அண்ணாவிற்கும் நன்றிகள்.. :( (எனக்கும் இப்ப உத பற்றி அறிய ஆவலா இருக்கு நானும் ஏதாச்சும் புத்தகங்களை எடுத்து தேடி வாசிக்க போறன்).. :(

அப்ப நான் வரட்டா!!

நல்லம் ஜமுனா.. இதப்பற்றி நிறைய புத்தகங்கள் இருக்கு. எடுத்து வாசிங்கோ. நேரம் போறதே தெரியாது..!

  • தொடங்கியவர்

அதுக்கெல்லாம் ஏழெட்டெண்டு போகத்தேவையிவல்ல. தன்னைத் தானே உணர்தல் எண்டிற முதலாவது அறிவே போதும்

எண்டு மனிதர் தங்களுக்க கதைச்சு கொள்ளுறீனம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மனிசர் தங்களுக்குள்ளை தானே கதைக்க வேணும் பின்னக் குரங்குகளோடையே கதைக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.