Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளவத்தையில் குண்டுவெடிப்பு

Featured Replies

தெஹிவலையில் குண்டு வெப்பு

சற்று முன் தெஹிவலையில் குண்டு வெடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

மேலதிக விபரங்கள் விரைவில்.

வெள்ளவத்தை- தெஹிவலை தொடருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில் பாதையிலே இவ் வெடிப்புச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் களுபோவிலை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

ஜானா

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு நேரப்படி அதிகாலை 7.10 மணியளவில் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.

Blast near railway track Dehiwala

The Railway control room says the blast near Dehiwala was along a rail track at Wasala Road, In DehiwalaThe Railway control room says the blast near Dehiwala was along a a rail track at Wasala Road, in Dehiwala. Several injured persons were admitted to the Kalubowila Hospital.

refered news from

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளவத்தை தொடரூந்துப் பாதையில் 7.35 மணிக்கு குண்டு வெடிப்பு.

காவல்துறையினரும், படையினரும் குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.

  • தொடங்கியவர்

குண்டு வெடிப்பினால் தண்டவாளத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் தொடருந்து போக்குவரத்துகள் வழமையாக நடைபெறுவதாக தெரிவிக்கபட்டள்ளது. இவ் வெடிப்பின் போது 06 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளதாகவும் தெரிவருகின்றது. பாணதுரையிலிருந்த கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தை இலக்கு வைத்தே இக் குண்டு பொருத்தபட்டிருக்கலாம் என பொலிஸ்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

Edited by Janarthanan

(2ம் இணைப்பு)வெள்ளவத்தையில் குண்டுவெடிப்பு

[புதன்கிழமை, 04 யூன் 2008, 07:46 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் தொடருந்துப் பாதை அருகில் இன்று புதன்கிழமை காலை 7:10 மணியளவில் குண்டு குண்டுவெடிப்பச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் களுபோவில மருத்துவமனையில் அனுமதிப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்தில் படையினரும், காவல்துறையினரும் குவிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

கடற்கரை வீதி தற்போது போக்குவரத்துக்காக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய காயங்களுடன் 17 பேர் களுபோவிலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

சிங்கள ஊடகத்தில்(ஈலகிரி) வந்த புகைப்படம்.

tdf4if45mogu0buusvlect5tw7.gif

சர்வதேச ஊடகங்களில் இருந்து

Explosion in a residential area in Sri Lanka capital 04 Jun 2008 02:18:45 GMT

Source: Reuters

COLOMBO, June 4 (Reuters) - A loud explosion shook a residential area in the Sri Lankan capital on Wednesday, military sources and police said.

"There is an exposion in Wellawatta. We are investigating the incident," said an official at the police bomb disposal unit.

There were no immediate details of any injuries or damage. (Reporting by Ranga Sirilal; Editing by David Fox)

http://www.alertnet.org/thenews/newsdesk/COL79057.htm

Loud Explosion Heard Near Sri Lanka Capital -Military

COLOMBO (AFP)--A loud explosion was heard just outside Sri Lanka's capital of Colombo on Wednesday, the defense ministry said.

"An explosion was heard in Dehiwela" a short while ago, the ministry said in a statement, referring to an area just outside city limits.

There was no immediate word of casualties, the statement said, without giving further details.

http://www.nasdaq.com/aspxcontent/NewsStor...&title=Loud

கருத்துக்கள உறவுகளின் செய்திகளின் தொகுப்பு

சற்று முன் தெஹிவலையில் குண்டு வெடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

வெள்ளவத்தை- தெஹிவலை தொடருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில் பாதையிலே கொழும்பு நேரப்படி அதிகாலை 7.10 மணியளவில் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.

குண்டு வெடிப்பினால் தண்டவாளத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் தொடருந்து போக்குவரத்துகள் வழமையாக நடைபெறுவதாகவும் கடற்கரை வீதி தற்போது போக்குவரத்துக்காக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டள்ளது.

சிறிய காயங்களுடன் 17 பேர் களுபோவிலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளதாகவும் தெரிவருகின்றது.

பாணதுரையிலிருந்த கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தை இலக்கு வைத்தே இக் குண்டு பொருத்தபட்டிருக்கலாம் என பொலிஸ்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

காவல்துறையினரும், படையினரும் குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாணந்துறை- கொழும்பு புகையிரதத்தினைத் தாக்கவே இக்குண்டு வைக்கப்பட்டதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Railway blast injures 17 in Sri Lanka 04 Jun 2008 02:51:31 GMT

Source: Reuters

(Adds casualties)

COLOMBO, June 4 (Reuters) - At least 17 people were injured in a blast by a railway track in the Sri Lankan capital on Wednesday, the military said.

The explosion in Wellawatta, a suburb of Colombo, comes amid daily land, sea and air attacks in a bloody civil war that has killed more than 70,000 people.

Doctors said 17 people were admitted to hospital.

"All of them were out of danger," said Dr. Wilfred Kumarasiri, director at the Kalubovila Teaching Hospital.

http://www.alertnet.org/thenews/newsdesk/COL83430.htm

(5th lead)தெஹிவலையில் குண்டு வெப்பு

சற்று முன் தெஹிவலையில் குண்டு வெடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

வெள்ளவத்தை- தெஹிவலை தொடருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில் பாதையிலே கொழும்பு நேரப்படி அதிகாலை 7.10 மணியளவில் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.

அசேல மாவத்தைக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குண்டு வெடிப்பினால் தண்டவாளத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது தொடரூந்து குறித்த இடத்திற்கு வரும் முன்னரே குண்டு வெடித்துள்ளது. இதன் காரணமாக பாரிய இழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன

எனினும் தொடருந்து போக்குவரத்துகள் வழமையாக நடைபெறுவதாகவும் கடற்கரை வீதி தற்போது போக்குவரத்துக்காக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டள்ளது.

சிறிய காயங்களுடன் 17 பேர் களுபோவிலா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளதாகவும் தெரிவருகின்றது.

பாணதுரையிலிருந்த கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தை இலக்கு வைத்தே இக் குண்டு பொருத்தபட்டிருக்கலாம் என பொலிஸ்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குண்டை பொருத்தியவரை சிலர் கண்டபோதும் அவர் தப்பிச்சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் அவரை கைதுசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரும், படையினரும் குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலதிக விபரங்கள் விரைவில்......

http://isoorya.blogspot.com/

space.gif

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியசாலைக்கு சிறிய காயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளபோது, இவர்கள் அபத்தான நிலையிற்கு செல்லவில்லை .

Doctors said 18 people were admitted to hospital on Wednesday.

"All of them were out of danger," said Dr. Wilfred Kumarasiri, director at the Kalubovila Teaching Hospital.

Reuters witnesses reported slight damage to the railway track and minor damage to two train compartments.

The explosion came a day after Tamil Tiger rebels blamed the military for a roadside blast that killed six civilians in the far north.

http://www.alertnet.org/thenews/newsdesk/COL83430.htm

அசேல மாவத்தைக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாசல மாவத்தை!

வெள்ளவத்தை ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு-18 பேர் வரை காயம்

111wa9.jpg

தெஹிவளைக்கும் வெள்ளவத்தைக்கும் இடைப்பட பகுதியில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.காலை 7.10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுல் 15 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவதாக களுபோவிலை வைத்தியசாலை பணிப்பாளர் வில்பட் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

வீரகேசரி இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

காயம் மட்டும் தானா ?

வீதியால் சென்றவர்களுக்கு அடி விழுந்ததாக ஊர்ஜிதப் படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன...

குண்டுவெடிச்சா என்ன வேறேதாவது செய்தியெண்டாவென்ன முதல்ல வாற 10 அல்லது 15 இணைப்புக்கள் அதைப்பத்தினதான் கிடக்கு... அது பறவாயில்லை.. போடுறவங்கள் ஒருக்கா வந்து வாசிச்சுப்போட்டு போடுங்கப்பா...

ஒருதலைப்பின் கீழ் 40 50 செய்தியைப்பாக்க கொஞ்சம் விசனமாகிடக்கு அட போரிங்கா கிடக்கப்பா அதைத்தான் விசனமெண்டு புரியிறமாதி சொன்னேன். ... அப்பிடி வாசிக்கேலாதவங்கள் செய்தியை போடாதேங்கோ... யாழ்களத்தை வெட்டி ஒட்ட பாவியாதேங்கோ..

ஓரே ஒருக்கா நான் ஒரு செய்தியை போட மட்டுறுத்தினர் வந்து எனக்கு தனிமடலனுப்பி முன்னம் போட்ட செய்தியெண்டு ஒரு கிழமைக்குமுன்னம் இருந்த செய்தியை மேற்கோள் காட்டினவர்... இதை சொன்னதுக்காக இதை தூக்கீடாதேகொவ்....

Edited by Sooravali

எனக்கென்னவோ சாணக்கியனின் கருத்தை குண்டு வைப்பவர் வாசிக்கிறார் போல?

குண்டு வைத்தவரை இருவர் கண்டதாகவும் அவரை துரத்திக் கொண்டு செல்லும் போது அவர் தப்பிவிட்டதாகவும், தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் உடனடியாகவே குண்டுவெடிப்பின் சூத்திரதாரி எண்டு வத்தளையை சேர்ந்த யசீதரன் என்ற 1978 ஆம் ஆண்டு பிறந்த ஒருவரின் புகைப்படத்தை அரசாங்கத்தின் ரூபவாகினியில் காண்பிக்கப்பட்டு தகவல் தரக்கோரப்பட்டுள்ளது!

இது சிங்கள காடையர்களுக்கான சங்கேத தகவலோ என்னவோ?

எனக்கென்னவோ சாணக்கியனின் கருத்தை குண்டு வைப்பவர் வாசிக்கிறார் போல?

நடேசன் அண்ணையும் வாசிக்கிறவர் போலத்தான் தெரியுது....

உடன பி.பி.சீயால பதில் சொல்லியிருக்கிறார் பாருங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு வைத்தவரை இருவர் கண்டதாகவும் அவரை துரத்திக் கொண்டு செல்லும் போது அவர் தப்பிவிட்டதாகவும், தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் உடனடியாகவே குண்டுவெடிப்பின் சூத்திரதாரி எண்டு வத்தளையை சேர்ந்த யசீதரன் என்ற 1978 ஆம் ஆண்டு பிறந்த ஒருவரின் புகைப்படத்தை அரசாங்கத்தின் ரூபவாகினியில் காண்பிக்கப்பட்டு தகவல் தரக்கோரப்பட்டுள்ளது!

இது சிங்கள காடையர்களுக்கான சங்கேத தகவலோ என்னவோ?

அதுமட்டுமன்றி வெள்ளவத்தையில் தனியார் தொழிலகம் ஒன்றில் 4 கிலோ C4 வெடி பொருளும் மைக்குரோ பிஸ்ரலும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறதாம். இது குண்டுகள் வெள்ளவத்தையில் இருந்துதான் வருகின்றன என்பதைக் காட்டி சிங்கள பேரினவாதக் காடைக் கும்பல்களை தமிழ் மக்களுக்கு எதிராக தூண்டி விட அரசு செய்யும் செயலாகவே தெரிகிறது.

குண்டு வைத்தவர் ஓடினாராம்... ஆனால் அருகில் காவலரண் அமைத்திருக்கும் பொலீசும் இராணுவமும் சும்மா நின்றதாம்..??! பின்னர் பாஸ்போட் அடையாள அட்டை சகிதம் சந்தேக நபரைத் தேடினராம். ஓடினவர் பாக்கை எறிந்து விட்டு ஓடினாராம்..??! ஆனால் ஓடும் போது கண்ட பெண்மணி சொல்லுறா தனக்கு ஒரு டிவைசைக் காட்டினவராம்..??! பாக்கை எறிஞ்சவர்.. டிவைசோட ஏன் ஓடினவர்..??! :wub::wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
:wub: தமிழரை அடியுங்கள் என்று சொல்லப்படுகிறது போல. இவ்வளவுகாலமும் வெள்ளவத்தைப் பகுதியில் தமிழரின் இருப்பைக் கண்டு உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் சிங்களக் காடைக் கூட்டம் இதனால் வெகுண்டெழுந்து தமிழரைத் தாக்கலாம் என்று அரசு எதிர்பார்க்கிறது அல்லது அதற்குத் தேவைப்படுகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
:wub: முன்னெச்சரிக்கை என்றால் எப்படி சிறி ? அடிவாங்க ஆயத்தமாகவா அல்லது அடிக்க ஆயத்தமாகவா? இப்போதைக்கு எம்மால் அடிவாங்கத்தான் முடியும் என்று நினைக்கிறேன்.

குண்டு வைத்தவர் ஓடினாராம்... ஆனால் அருகில் காவலரண் அமைத்திருக்கும் பொலீசும் இராணுவமும் சும்மா நின்றதாம்..??! பின்னர் பாஸ்போட் அடையாள அட்டை சகிதம் சந்தேக நபரைத் தேடினராம். ஓடினவர் பாக்கை எறிந்து விட்டு ஓடினாராம்..??! ஆனால் ஓடும் போது கண்ட பெண்மணி சொல்லுறா தனக்கு ஒரு டிவைசைக் காட்டினவராம்..??! பாக்கை எறிஞ்சவர்.. டிவைசோட ஏன் ஓடினவர்..??! :wub: :wub:

கருவியையும் எறிஞ்சு போட்டு பிறகு மந்திரத்தாலையே வெடிக்க வைக்கிறது?

குழந்தைப்பிள்ளை கேள்வியை கேட்டிட்டு ஒரு சிரிப்பு வேற!

முன்னெச்சரிக்கை என்றால் எப்படி சிறி ? அடிவாங்க ஆயத்தமாகவா அல்லது அடிக்க ஆயத்தமாகவா? இப்போதைக்கு எம்மால் அடிவாங்கத்தான் முடியும் என்று நினைக்கிறேன்.

திருப்பி அடிக்கிறத்துக்கு தமிழர் படை வான் மற்றும் கடல் வழி சூட்டாதரவு தராதோ?

25 வருசத்திற்குப் பிறகும் அடிவாங்கிற நிலமைதானோ?

அது சரி அடிவாங்கிறது என்று முடிவாயிட்டு இனி எப்படி அடிவாங்கிறது என்றதை பற்றி சிந்திப்பம்....

மாப்பை கேட்டா நல்ல பல திட்டங்களை முன்வைப்பார்.....

1) உடம்பு முழுக்க தே.எண்ணையை பூசிப்போட்டு நின்றால் வழுக்கிக்கொண்டு ஓடலாம்!

2) வீட்டில இருக்கிற வாளிகளை ஒழிச்சு வைக்கலாம், பிறகு அதை காட்டி என்ன இது என்று கேட்டு அடிப்பாங்கள்!

3) வீட்டில இருக்கிற எரியக்கூடிய சாமங்கள் பழைய பேப்பர்கள் எல்லாத்தையும் குப்பைக்காரனிடம் கொடுக்கலாம்.

4) டக்கிளஸ் அல்லது சங்கரியின்டை படத்தை கூடத்தில மாட்டி வைக்கலாம்.

5) ....

ம்...ம்...வேற ஏதாவது தெரிஞ்சா எழுதுங்கப்பா? புண்ணியமா போகும்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளவத்தை- தெகிவளைக் கடற்கரை ஓரமாகப் பெரிய இராணுவக் காவலரன் அமைக்கப்பட்டுள்ளது. இராமகிருஸ்ண மிசன் பக்கமாக.... அவர்கள் கூடவா காணவில்லை. அதுவம் பெரிய பரண் வேறு உள்ளது

  • தொடங்கியவர்

தெஹிவளையில் பயணிகள் ரயிலை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலுடன் தொடர்புடய சந்தேக நபர் கைது

வீரகேசரி இணையம் - தெஹிவளையில் நேற்றைய தினம் பயணிகள் ரயிலை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபர் ஜதீசன் பாலசுப்ரமணியம் என்ற இளைஞர் வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியை கடந்து வவுனியாவுக்குள் செல்ல முயற்சித்தபோது, ஊர்காவற்படையினர் இவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பெறப்பட்ட தகவல்களை கொண்டு, அவருடன் தொடர்புடைய ஏனையோரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சந்தேகநபரின் படம் வீரகேசரி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. www.virakesari.lk/news/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.