Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஜீவன் உடனான தீபம் தொலைக்காட்சியின் நேர்காணல்

Featured Replies

வணக்கம் அஜீவன் ...என்னத்துக்கு இந்த கோபம்.....ஏன் வெளியேற வேண்டும். தொடர்ந்து உங்கள் கருத்துகளை தாருங்கள் ,,,,

யாழ் கள விவாத்த்தில் அதிகம் கலந்து கொள்ளாமால் ...உங்கள் கருத்துகளை வாசிக்க விரும்பும் அல்லது அறிய விரும்பும் என்னைப் போல இருக்கும் மற்ற வாசகர்களும் அப்படியே தான் எண்ணுவார்கள் என்று நினைக்கிறேன்

  • Replies 181
  • Views 21.2k
  • Created
  • Last Reply

தேசியவாதிகள் இறுதியில் வெற்றிக்கிண்ணத்தை தட்டிச்சென்றுள்ளார்கள். வாழ்த்துகள்! :lol:

அஜீவன் அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

தேசியவாதிகள் இறுதியில் வெற்றிக்கிண்ணத்தை தட்டிச்சென்றுள்ளார்கள். வாழ்த்துகள்! :lol:

அஜீவன் அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!

தேசியவாதம் என்பது ஒரு சிலரின் சொத்தல்ல. ஒரு இனத்திற்கானது. தமிழ் தேசிய உணர்வு என்பது தமிழினத்தின் உணர்வு. :lol:

அஜீவனிடம் கேட்கப்படாது விட்ட கேள்விக்கு விடை வரவில்லை. மாறாக விலகல் என்று வருகிறது. இது எதையோ தவிர்த்துவிட செய்யப்படுகிறது என்றே தோன்றுகிறது.

தமிழ் தேசியம் என்பது புலிகள் சார்பு என்பதாக அஜீவனும் நினைத்து வைத்திருக்கிறார் போல. ஏனெனில் அவரும் இறுதியில் புலிகளைப் பற்றி நாலு வரி இழுத்துவிட்டு விலகிக் கொள்கிறேன் என்றிருக்கிறார்.

மக்கள் எதிர்பார்ப்பது.. தங்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய பதிவுகளை ஏன் செய்யக் கூடாது என்பதுதான். அதையே தான் சாதாரண தமிழ் குடிமகனாகா நான் இங்கு கேட்டேன். தமிழ் மக்களின் போராட்டத்தை புலிகளின் போராட்டம் என்பதாகவே இவர்கள் இன்னும் எண்ணிக் கொண்டு செயற்படுகின்றனர் என்பது அவர்களின் வரிகள் உணர்த்துகின்ற உண்மையாக இருப்பது வேதனை தருகிறது. தமிழ் மக்களின் உணர்வுகளை இவர்களே புரிந்து கொள்ளவில்லை எனும் போது தென்னிலங்கை சிங்களவர்களைக் குறை கூறி என்ன பயன்..! :lol::unsure:

Edited by nedukkalapoovan

தேசியவாதம் என்பது ஒரு சிலரின் சொத்தல்ல. ஒரு இனத்திற்கானது. தமிழ் தேசிய உணர்வு என்பது தமிழினத்தின் உணர்வு. :lol:

தேசியவாதம் என்பது ஒரு சிலரின் சொத்தல்ல ஒரு இனத்திற்கானது என்று ஒரு சிலர் சொல்லிச்சொல்லியே ஒருசிலரை ஒதுக்கி ஒதுக்கி தமிழ்தேசிய உணர்வை பலரது உள்ளங்களில் இருந்து அந்த ஒருசிலர் அகற்றி வருகின்றார்கள். :unsure:

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

தேசியவாதம் என்பது ஒரு சிலரின் சொத்தல்ல ஒரு இனத்திற்கானது என்று ஒரு சிலர் சொல்லிச்சொல்லியே ஒருசிலரை ஒதுக்கி ஒதுக்கி தமிழ்தேசிய உணர்வை பலரது உள்ளங்களில் இருந்து அகற்றி வருகின்றார்கள். :unsure:

அவர்கள் ஒதுங்குவது தமிழ் தேசியத்துக்காக குரல்கொடுப்பவர்களை கண்டல்ல. தாங்கள் தமிழ் தேசியத்தை ஒதுக்கி வாழ்ந்து வருவது வெளிச்சத்துக்கு வந்திடுமோ என்ற பயத்திலாக இருக்கலாம். ஏனெனில் இப்படி முன்னரும் நடந்திருக்கிறது.

நான் நினைக்கிறேன்.. நீங்களும் இது விடயத்தில் தவறாக புரிதல் கொண்டிருக்கிறீர்கள் என்று. தமிழ் தேசியம் தமிழர்களின் தேசியம். அது ஒரு சிலருக்கு சொந்தமானதல்ல. தமிழ் தேசியத்துக்காக குரல் கொடுப்பது விடுதலைப்புலிகளுக்காக குரல் கொடுப்பதல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் தேசியக்குக்கான உணர்வு தான் தமிழ் தேசிய உணர்வு.

சிலர் அதிலிருந்து விலகி இருப்பதுதான்.. கேள்விக் கணைகளைத் தொடுக்க வைக்கிறது. சிங்கள மக்கள் சிங்கள தேசிய விசுவாசிகளாக இருக்கின்றனர். இந்திய மக்கள் இந்திய தேசிய விசுவாசிகளாக இருக்கின்றனர். ஆனால் ஈழத்தமிழர்களில் சிலர் தமிழ் தேசிய உணர்வாளர்களாக இருக்க மறுக்கின்றனர். அது தான் ஏன் என்று புரியவில்லை...??! தமிழ் தேசியம் மற்றும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களைத் தெரிந்திருந்தும்.. அவற்றில் இருந்து விலகி இருப்பதற்கான காரணம் என்ன..??!

சிங்கள தேசியத்தை நேசிப்பவர்களின் அவலங்களை வெளிக்கொணர முயலும் அதேவேளை தமிழ் தேசியத்தை நேசிக்கும் மக்களின் துயரங்களை வெளிக்கொணர மறுக்கிறோம். காரணம்.. அவர்கள் விடுதலைப்புலிகள் சார்ந்து நிற்பதாகக் கருதுவதாலா..???! எனக்கு இதில் இருக்கும் சூட்சுமம் புரியவில்லை. நீங்களாவது அதை விளக்கலாமே...??! ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி.. விலகிறவருக்கு ஆதரவாகவும்.. பிறருக்கு ஆதரவில்லாமலும்.. குரல் கொடுப்பதாகக் காட்டிக் கொண்டிருப்பதிலும்.. எழும் கேள்விகளுக்கு அவர்கள் கருதும் நியாயபூர்வமான அவர்களின் நிலைப்பாட்டுக்கான பதிலை பெற்றுத்தர முயற்சிக்கலாமே..! :lol:

Edited by nedukkalapoovan

தேசியவாதிகள் இறுதியில் வெற்றிக்கிண்ணத்தை தட்டிச்சென்றுள்ளார்கள். வாழ்த்துகள்! :lol:

அஜீவன் அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!

இங்கே போட்டியே நடக்கவில்லை. பின் எப்படி வெற்றிக்கிண்ணத்தை தட்டிப் பறித்தாக நீங்கள் நினைக்கின்றீர்கள். தேசியம் என்ற போர்வையில்ஒருவரை விமர்சித்து அவரை முடமாக்க முனைந்திருக்கின்றார்கள். உண்மையில் ஒரு படைப்பாளியின் படைப்புகள் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் அவற்றை முன்பு நீங்கள் குறிப்பிட்டது போல் நேரடியாக அப்படைப்பாளியிடமே கேட்டிருக்கலாம். ஆனால் இங்கு நோக்கம் அதுவல்ல விமர்சனம் என்ற போர்வையில் விசத்தை விதைக்கின்றார்கள். விதைப்பதை இவர்கள் என்றோ ஒருநாள் அறுவடை செய்யும் போது அதன் தார்ப்பரியத்தை அவர்களும் புரிந்து கொள்வார்கள்.

இதற்காக அஜீவன் களத்தை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை. ஒரு படைப்பாளிக்கு சுயமும், சுதந்திரமும் முக்கியம். அதை எவருக்காகவும் எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இங்கே தேசியம் பேசுவோர்கள் தேசியம் என்ற போர்வைக்குள் குளிர்காய்கின்றார்களே ஒழிய உண்மையான தேசியவாதிகளல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே போட்டியே நடக்கவில்லை. பின் எப்படி வெற்றிக்கிண்ணத்தை தட்டிப் பறித்தாக நீங்கள் நினைக்கின்றீர்கள். தேசியம் என்ற போர்வையில்ஒருவரை விமர்சித்து அவரை முடமாக்க முனைந்திருக்கின்றார்கள். உண்மையில் ஒரு படைப்பாளியின் படைப்புகள் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் அவற்றை முன்பு நீங்கள் குறிப்பிட்டது போல் நேரடியாக அப்படைப்பாளியிடமே கேட்டிருக்கலாம். ஆனால் இங்கு நோக்கம் அதுவல்ல விமர்சனம் என்ற போர்வையில் விசத்தை விதைக்கின்றார்கள். விதைப்பதை இவர்கள் என்றோ ஒருநாள் அறுவடை செய்யும் போது அதன் தார்ப்பரியத்தை அவர்களும் புரிந்து கொள்வார்கள்.

வசம்பண்ணன்.. ஒரு படைப்பாளி.. சில விசயங்களை திட்டமிட்டு தவிர்ப்பதாக தோன்றும் போது அவற்றை வெளிப்படையாகக் கேட்பது.. உங்களுக்கு விசத்தை விதைப்பதாகவா தெரிகிறது.

இங்கு கேட்கப்பட்ட கேள்வி என்ன என்பதும்.. அதற்கு இதுவரை பதில்கள் வரவில்லை என்பதும்.. படைப்புக்கு படைப்பியலுக்கு வெளியில் சென்று பதில்கள் சொல்லப்பட்டிருப்பதும்.. தான் கேள்விகளுக்குப் பயப்பிடுகிறார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை.. அஜீவன் என்ற படைப்பாளியை.. இக்களத்தில் வந்த பின் தான் அறிவேன். தாயகத்தில் இருந்த போது இப்படி ஒருவர் இருக்கிறார் என்றே தெரியாது. ஒரு தமிழ் தேசியக் களம் அறிமுகம் செய்து வைத்த ஒரு படைப்பாளியிடம் தமிழர்களின் விடுதலைப்போராட்டம் பற்றிய ஒரு படைப்பும், பார்வைகளும் இல்லையே என்று வினவுதல்.. விசத்தை விதைப்பதாக நீங்கள் கருத இடமளிக்கிறதா....???!

அஜீவன் உங்களின் படைப்புக்கள் அனைத்தும் திறமை. அவை உங்களை தமிழ் தேசியவாதி என்று இனங்காட்டுகிறது என்று சொல்வது.. பாராட்டு என்றும்.. அதுவே சிறந்தது என்றுமா நீங்கள் கருதுகிறீர்கள். இப்படியான போலிப் பாராட்டுக்கள் தான் என்னைப் பொறுத்தவரை விசம்.

மற்றும்படி.. என்னைப் பொறுத்தவரை இக் களத்தில் இருந்து எவரும் விலகிச் செல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது அஜீவன் விடயத்திலும் பொருந்தும்.

நானும் இதில் கருத்துப் பகர்ந்தவன் என்ற வகையில் இக்கருத்தை முன் வைக்கிறேன். ஒருவேளை எனது கருத்தின் அடிப்படையில் தான் அஜீவன் வெளியேற்றப்படுகிறார் என்றும் நாளை கருத்துக்கள் முன் வைக்கப்படலாம். ஆனால் ஏலவே செய்தி ஒட்டும் விடயத்தில் அஜீவன் நிர்வாகத்தோடு சிறிது குழம்பி இருந்த வேளையில்.. செய்தி ஒட்டுவதை தவிர்த்திருந்த வேளையில் இதுவும் வர.. எல்லாம்.. தமிழ் தேசியம் பேசியே விரட்டினம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகைக்கு இங்குள்ள விடயங்களை திசை திருப்ப அனுமதிக்க முடியாது.

நான் எனது மக்கள் கூட்டத்தில் ஒருவனாக இருந்து கேட்ட கேள்விக்கும் அஜீவனின் வெளியேற்ற முடிவுக்கும் தொடர்பிருப்பதாக நான் கருதவில்லை. நான் கேட்ட கேள்வி ஒரு படைப்பாளியிடம் பதிலை எதிர்பார்த்தே அன்றி.. வெளியேற்றத்தை அல்ல. அதில் விசம் இருப்பதாக எண்ணுவதும் தவறு. வேறு யாராவது அப்படி செய்திருப்பின் அதற்கு நான் பொறுப்பல்ல..! :lol:

Edited by nedukkalapoovan

நெடுக்கு

நீங்கள் உண்மையில் சில சந்தேகங்கள் இருந்து அவற்றை தீர்க்க விரும்பியிருந்தால், அவரை விமர்சித்துக் கருத்தெழுத முன் அவரிடமே உங்கள் சந்தேகங்களை கேட்டிருக்கலாமே?? அதை நீங்கள் முதலில் செய்திருந்தால் உங்கள் கேள்வியில் நியாயம் இருந்திருக்கும். ஒருவரை யோக்கியர் அல்ல என்று விமர்சித்தவிட்டு பின் அவரிடம் பதில் பெற முனைவதை எப்படிச் சொல்லலாம்??

நெடுக்கு

இங்கே அஜீவனை எவரும் தேசியவாதியென்றோ மிகச்சிறந்த படைப்பாளியென்றோ போற்றி புகழவில்லையே. நீங்களாகவே ஏன் பலதையும் கற்பனை பண்ணுகின்றீர்கள்.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு

நீங்கள் உண்மையில் சில சந்தேகங்கள் இருந்து அவற்றை தீர்க்க விரும்பியிருந்தால், அவரை விமர்சித்துக் கருத்தெழுத முன் அவரிடமே உங்கள் சந்தேகங்களை கேட்டிருக்கலாமே?? அதை நீங்கள் முதலில் செய்திருந்தால் உங்கள் கேள்வியில் நியாயம் இருந்திருக்கும். ஒருவரை யோக்கியர் அல்ல என்று விமர்சித்தவிட்டு பின் அவரிடம் பதில் பெற முனைவதை எப்படிச் சொல்லலாம்??

வசம்பண்ணன்.. கீழ் உள்ளது தான் நான் இச்செவ்வியைக் கண்ணுற்ற பின் எழுதிய கருத்தும்.. எனது வினவல்களும்.

"தேசம்" சஞ்சிகை... என்பது தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள் கூடி இருக்கும் இடம் அதுவா..??!

ஓரளவு பழைய கால சிங்கள சினிமாக்காரர்களைப் பற்றி அறிய முடிஞ்சுது. புகலிடத்தில் திரையிடப்படும் சிங்களப் படங்கள் குறித்து அறிய முடிஞ்சுது.. நன்றிகள்.

கேள்வி கேட்டவர்.. தாயக நிகழ்வுகளின் பதிவுகளை ஏதேனும் செய்ய ஆர்வமுள்ளதா என்று ஒரு வார்த்தை தானும்.. தாயகம் அதன் இன விடுதலைப்போர் என்ற கடந்த 3 தசாப்த மக்களின் அவலங்கள் குறித்த சர்வதேச கவனத்தை ஏற்படுத்தக் கூடிய பதிவுகளைச் செய்யும் ஆர்வம் உண்டா.. என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையே ஏன்..??! ஒரு வேளை அப்படிக் கேட்டால் "தேசத்துக்கு" சேதாரம் ஆகிடும் என்றா..??! :D:unsure:

தீபம் சிறீலங்காவின் "மிதவாதிகளின்" பக்கம் சாய்ந்து விட்டதோ.. என்று ஒரு கட்டத்தில் எண்ணத் தோன்றியது.

அஜீவனின் ஆதங்கங்களில் ஒன்று உருப்படியான திரைப்படக் கல்லூரி அல்லது பாடநெறி தமிழர்கள் தாயகத்தில் இல்லை என்பது. அது வெளிப்படையாக உண்மை போலத் தோன்றினும்.. நான் நினைக்கிறேன் தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் உருப்படியான திரைப்பட நெறிகளை கற்றுக் கொண்டவர்களூடு நல்ல பயிற்சிகளை கடந்த இரண்டு தசாப்தமாக வழங்கி வருவதை அவர் அறிந்திருக்கவில்லை என்று.

மற்றும்படி.. தாயகத்தில் பல்கலைக்கழகங்கள் மட்டத்தில் நுண்கலைப்பீடங்கள் உள்ளன. அங்கு திரைப்படக் கலைக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்களோ தெரியவில்லை... இல்லை என்றே நினைக்கிறேன். இவ்விடயத்தில் ஆஜீவனின் ஆதங்கம் நல்ல ஒரு மாற்றத்துக்கு வித்திட வேண்டும். ஆனால் யாழ் பல்கலைக்கழகம் வெளிவாரியாக புறநிலைப்படிப்புகள் அலகினூடு "கமரா" தொழில்நுட்ப பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருவதை நான் அறிந்திருக்கிறேன்.. அது திரைப்படம் எடுக்கும் அளவுக்கு காத்திரமானதல்ல என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

அஜீவன் அதிகம் நாம் அறிந்திராத பழைய காலத்தைப் பற்றி பேசினார். ஆனால் ஈழத்தில் இருந்து கடந்த இரண்டு தசாப்தத்தில் தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் வெளியிட்ட திரைப்படங்கள், குறும்படங்கள் பற்றி எதுவுமே சொல்லவில்லையே..??! ஏன். அவை திரைப்படங்களாக, குறும்படங்களாக காணும் தகுதியற்றனவா..???! :lol::D

1990 களில் குறும்படங்கள் பல சிரமங்களின் மத்தியில் ஈழத்தில் இருந்து வந்திருக்கின்றனவே. பழைய சிங்கள சினிமாப் பற்றி பேசியது போன்று இவற்றைப் பற்றியும் ஒரு ஈழத்தமிழன் என்ற வகையில் ஒரு நாலு வார்த்தை பகர்ந்திருக்கலாமே..???! அப்போதுதான் அவற்றின் தரம்.. தொழில்நுட்ப கையாடல்கள் பற்றிய ஒரு பார்வை மக்களை, குறித்த திரைப்படங்களை தயாரித்த படைப்பாளிகளை சென்றடைய உதவி இருக்கும்... என்பது எனது ஆதங்கம்..!

அஜீவனின் சுவிஸ் திரைப்படச் சங்கத்துடனான கூட்டு முயற்சிகள் வெற்றி அளிக்க வாழ்த்துக்கள்.

ஆங்கிலத்தில் அமைந்த "மழைப்பாட்டு" மனதைக் கவர்ந்திருந்தது. அதை முழுசா எங்கு பார்க்க முடியும்..??!

இச்செவ்வியை நாமெல்லாம் காண வகை செய்த தமிழமுதத்துக்கு நன்றிகள். :D

இதில் அஜீவன் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்கள் எங்குள்ளன.. எனது பின் வந்த கருத்துக்களில் அவரின் படைப்புகள் மற்றும் அவற்றின் தன்மைகளுக்கு அப்பால் அவரின் தனிப்பட்ட நிலைப்பாடுகள் சார்ந்து விமர்சனங்கள் எங்கு எழுதப்பட்டுள்ளன என்று ஒருக்கா சுட்டிக்காட்டுகின்றீர்களா..??! :lol::D

அப்படிச் செய்திருப்பின் நிச்சயம் அது கள நிர்வாகத்தால் அகற்றப்பட்டிருக்கும். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு

இங்கே அஜீவனை எவரும் தேசியவாதியென்றோ மிகச்சிறந்த படைப்பாளியென்றோ போற்றி புகழவில்லையே. நீங்களாகவே ஏன் பலதையும் கற்பனை பண்ணுகின்றீர்கள்.

நான் சொல்லவில்லையே இப்படித்தான் பாராட்டிகிறார்கள் அல்லது பாராட்டினார்கள் என்று. இப்படிப் பாராட்டுவதையா எதிர்பார்க்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்.

ஒரு படைப்பாளியிடம் செவ்வி என்பது செவ்வி காணப்படுபவரை குசிப் படுத்த அல்லது நேரடியாக அவரை விளம்பரப்படுத்த என்று செய்யப்படுவதல்ல. அவரிடமிருந்து தகவல்களை விடயங்களை அறியவும் மக்கள் மத்தியில் எழக்கூடிய அவரின் படைப்புக்கள் மற்றும் படைப்புக்களின் தன்மைகள் பற்றிய பார்வைகள் மற்றும் சந்தேகங்கள் பற்றியும் கேட்டு அறிந்து கொள்ளச் செய்யப்படுவதே அது. :lol:

Edited by nedukkalapoovan

நெடுக்கு

இங்கு நான் உங்களை மட்டுமே குறைசொல்லவில்லை. உங்களைப்போல் எழுதிய மற்றவர்களுக்கும் சேர்த்துத் தான் எழுதினேன். ஆனாலும் நீங்கள் நேரடியாக தாக்காமல் பொதுப்படையாக தாக்கி பல எழுதியுள்ளீர்கள். நீங்கள் எழுதிய கருத்துக்களை மீண்டும் வாசித்துப் பாருங்கள் நிச்சயம் உங்களுக்குப் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு

இங்கு நான் உங்களை மட்டுமே குறைசொல்லவில்லை. உங்களைப்போல் எழுதிய மற்றவர்களுக்கும் சேர்த்துத் தான் எழுதினேன். ஆனாலும் நீங்கள் நேரடியாக தாக்காமல் பொதுப்படையாக தாக்கி பல எழுதியுள்ளீர்கள். நீங்கள் எழுதிய கருத்துக்களை மீண்டும் வாசித்துப் பாருங்கள் நிச்சயம் உங்களுக்குப் புரியும்.

வசம்பண்ணன்.. நேரடியாகவும் அல்ல பொதுப்படையாகவும் அல்ல. எமது தயாக மக்களின் 3 தசாப்த கால விடுதலைப் போராட்ட தேவைகள் அனுபவங்கள் அம்மக்கள் சந்தித்த அவலங்களைப் பதிவு செய்ய முன்வராத எல்லா கலைஞர்களையும் தான் பார்த்து கேள்வி கேட்டிருக்கிறேன்..! அதை நீங்கள் கலைஞர்களைத் தாக்கி எழுதுவதாகக் கருதுவது தவறு. படைப்புக்களை ரசிப்பவன் என்ற வகையில் எனக்குள் எழுந்த சந்தேகத்தை வினாவாக்கினேன் அவ்வளவும் தான்..! அதில் ஒரு குறிப்பிட்டவரே அடக்கப்பட்டார் என்று குறிப்பிடுவது எனது தவறல்ல. அது நீங்கள் கருத்தை எடுத்துக் கொண்ட விதத்தில் இருந்த தவறு என்றே சொல்ல முடியும். அதற்காக வருந்தத்தான் முடியுமே தவிர வேறென்ன செய்யலாம். :lol:

நெடுக்காலபோவான் இது என்ன குழந்தைப்பிள்ளைத்தனமா இருக்கிது உங்கட கேள்வி: :lol:

இஞ்ச படைப்பாளிகளாக இருக்கட்டும், கருத்து எழுதுபவராக இருக்கட்டும்.. ஒருவரை மற்றவர் பாராட்ட அல்லது அவர் பற்றிபேச வெளிக்கிட்டால் எல்லாரும் அவரை Background Check (பின்புலம் ஆராய்தல்) செய்கின்றார்கள். :lol:

கருத்து எழுதுபவர் - அல்லது ஒரு படைப்பாளி முன்பு PLOTE இல இருந்தாரா அல்லது TELO இல இருந்தாரா என்று செவிவழி மற்றும் எம்.எஸ்.என் உரையாடல்கள் மூலம் பெற்ற கதைகளின் அடிப்படையில் தாமாக ஒரு புதியகதையை உருவாக்கிவிட்டு பின் அதன் அடிப்படையில் தமது விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். இதுதான் இங்கு நடக்கின்றது. இப்படியானவர்கள் தான் தம்மை தமிழ்தேசியவாதிகள் என்று சொல்லாமல் சொல்லிக்கொள்கின்றார்கள். :unsure:

விடுதலைப்புலிகளே முன்பு மாற்றுக்குழுக்களில் இருந்தவர்களை தம்முடன் அணைத்து வைத்துள்ள இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலர் அரைகுறையாக எல்லாவற்றையும் விளங்கி வைத்துக்கொண்டு கல்லில் தோசைபோடப்பார்க்கின்றார்கள். ***

ஒரு படைப்பாளியாக இருக்கட்டும்... யாழில் கருத்து எழுதும் ஒரு சக உறவாக இருக்கட்டும்.. இங்கு என்ன தேவை? விமர்சனம் என முன்வைக்கப்படும்போது கவனிக்கப்படவேண்டியவை எவை?

கருத்து ஒன்றே...! Background Check அல்ல. இங்கு என்ன Background Check செய்யப்பட்டு Green Card ஆ கொடுக்கப்படுகின்றது. அல்லது Background Check செய்யப்பட்டு அவர் தேசியவாதி எனக்கணிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவருக்கு UN இல் பதவி ஏதுமா பெற்றுக் கொடுக்கப்படுகின்றது? இல்லையே... இந்த வேலைகளைப் பார்க்க காவல்துறை இருக்கின்றது. அப்படியானால் இனி காவல்துறையை அழைத்து படைப்புக்கள் பற்றிய விமர்சனங்களை கேட்பது சிறப்பானதாக தெரிகின்றது.

ஒரு படைப்பாளியின் படைப்பை எப்படி விமர்சனம் செய்வது என்றே பலருக்கு தெரியவில்லை. இந்தநிலையில் தேசியம் என்று கோசங்கள் வேறு. :lol:

எனது கேள்வி என்ன என்றால் விமர்சனம் செய்கின்ற தேசியவாதிகளால் படைப்பு என்றால் இப்படித்தான் என ஒரே ஒரு படைப்பு செய்து காட்டமுடியுமா? :D ரெண்டு வசனத்தில ஆ, ஊ என்று கத்திவிட்டு வெற்றிக்கிண்ணங்களை (?) பெற்றுச்செல்கின்றார்கள். இவர்கள்தான் எதிர்கால சமூகத்தை வழிநடாத்தப்போகின்றார்களாம். நாம் உருப்பட்ட மாதிரித்தான். சிரிப்பாக இருக்கின்றது. :D

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

முரளி..

என்னைப் பொறுத்தவரை எனக்கு எம் எஸ் என் ஐடியும் கிடையாது.. இவர்கள் பற்றி தனிமடலில் பேசிக் கொள்வதெல்லாம் கிடையாது. இங்கு எழுதப்படும் விடயங்கள் தவிர அஜீவன் போன்றவர்களின் பின்னணியும் தெரியாது.

அவரை இக்களத்தில் அவரின் கருத்துக்கள் மற்றும் படைப்புக்களூடே அறிவேன்.

பேட்டியில் "தேசம்" சஞ்சிகை என்று வந்தது. அச் சஞ்சிகையை ஒரு தடவை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அது எந்த ஒரு அரசியல் இலக்கற்று விடுதலைப்புலிகளை மிகக் கீழ்த்தரமாக வரிக்கு வரி விமர்சிப்பதை கண்டிருந்தேன். அதன் பின்னர் அச்சஞ்சிகை யாரால் அச்சிடப்படுகிறது என்று எனது பல்கலை தமிழ் நண்பர்களிடம் கேட்ட போது அவர்கள் தான் சொன்னார்கள் முன்னாள் தேச விரோதக் கும்பல்கள் தங்களின் காழ்புணர்வைக் கொட்ட அதனை லண்டனில் அச்சிடுகின்றனர் என்று. அதனால் தான் கேட்டேன் "தேசம்" என்பது எதனை என்று..??!

மற்றும் படி அஜீவன் பல படைப்புக்களை செய்திருந்த போதும்.. சுனாமி பற்றி தென்னிலங்கைக்குச் சென்று விபரணம் ஒன்றைச் செய்து இங்கு செய்தியாக்கி அதனை அண்மையில் வாசிக்கக் கிடைத்த போதும்.. தமிழ் மக்களின் அவலங்களை வெளிக்கொணர அவர் போன்ற கலைஞர்கள் முன்வராத சந்தர்ப்பங்களையும் அவதானித்தே என் வினவலைக் கேட்டேன். அவரின் படைப்புக்கள் புலம்பெயர் தமிழ் சமூகம் சார்ந்து குடும்பப் பிரச்சனைகளை.. இளைஞர்களின் தனிமைப் பிரச்சனைகளை.. தொழில்பிரச்சனைகளைச் சொல்லி இருக்கின்றன. ஆனால் தாயக மக்களின் உணர்வுகளை அவர் படைப்புக்களில் பதிவு செய்யத் தயங்குவதும்.. தாயகக் குறும்படங்கள்.. திரைப்படங்கள் குறித்து விமர்சனங்களை.. ஆரோக்கியமான கருத்துக்களை ஒரு திரைப்படக் கலைஞன் என்று முன் வைக்க தயங்குவதையும் அவதானித்தே என் வினவலைக் கேட்டேன். இவரைப் போல இன்னும் சில கலைஞர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.

அதற்கான உண்மைக் காரணத்தை அவர்கள் வெளியிடும் போது.. மக்களும் சம்பந்தப்பட்ட தரப்புகளும் இவர்களின் நியாயங்களை அல்லது தவறுகளை இனங்காண ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதே எனது எதிர்பார்ப்பாக இருந்தது..

மற்றும்படி.. அஜீவனுடன் போட்டி போடும் கலைத்துறையை சேர்ந்தவனல்ல நான். அவருடன் தனிப்பட்ட நட்போ.. அல்லது அறிமுகமோ கொண்டவனல்ல நான். அவரை ஒரு கலைஞனாக இக்களத்தில் கண்டது மட்டும் தான். எனவே உங்களின் மேற்குறிப்பிட்ட பார்வை எனக்குப் பொருந்த எவ்வகையிலும் வாய்ப்பில்லை..!

நான் தமிழன் என்ற வகையில் தமிழ் தேசிய உணர்வு எனக்குள் எப்போதும் உள்ளது. அது எனது எழுத்தில் வருவது நான் தமிழ் தேசியவாதி என்ற அடையாளப்படுத்தலுக்கல்ல. தமிழன் என்ற எனது பிறப்புரிமை சார்ந்து அது வருகிறது. :lol:

Edited by nedukkalapoovan

நான் உங்களை சொல்லவில்லை நெடுக்காலபோவான். பொதுவாகச் சொன்னேன். இங்கு யாழில இதுதானே நடக்கிது? இல்லையெண்டு சொல்லுங்கோ பார்க்கலாம்? ஏதாவது வித்தியாசமாக சொல்லப்பட்டால் அடுத்தகணமே துரோகி பட்டம் காத்து இருக்கிது. நம்மண்ட ஆக்களிண்ட சிந்திக்கும் திறன் இவ்வளவுதான். இவர்களைத்தான் விமர்சகர்கள் மற்றும் தேசியவாதிகள் என்றும் சொல்கின்றார்கள் :lol:

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

பனைக்குக் கீழிருந்து பால்தான் குடித்தேன் என்று சொல்பது சுலபம், ஆனால் அதை நம்பவைப்பது கடினம்.

பனைக்குக் கீழிருந்து பால்தான் குடித்தேன் என்று சொல்பது சுலபம், ஆனால் அதை நம்பவைப்பது கடினம்.

கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் பிரபா. தேசியத்சொத்தான பனைமரத்தின் கீழ் இருந்து தேசியமாகிய கள்ளைக் குடித்ததால் ஏற்படுகின்ற வெறியைப்பற்றி சொல்கின்றீர்களா? :lol:

நான் உங்களை சொல்லவில்லை நெடுக்காலபோவான். பொதுவாகச் சொன்னேன். இங்கு யாழில இதுதானே நடக்கிது? இல்லையெண்டு சொல்லுங்கோ பார்க்கலாம்? ஏதாவது வித்தியாசமாக சொல்லப்பட்டால் அடுத்தகணமே துரோகி பட்டம் காத்து இருக்கிது. நம்மண்ட ஆக்களிண்ட சிந்திக்கும் திறன் இவ்வளவுதான். இவர்களைத்தான் விமர்சகர்கள் மற்றும் தேசியவாதிகள் என்றும் சொல்கின்றார்கள் :lol:

நன்றி!

முரளி

மன்னிக்க வேண்டும். "நம்மண்ட ஆக்களிண்ட சிந்திக்கும் திறன் இவ்வளவுதான். இவர்களைத்தான் விமர்சகர்கள் மற்றும் தேசியவாதிகள் என்றும் சொல்கின்றார்கள்". என்று நீங்கள் எழுதியது தவறு.

"நம்மண்ட ஆக்களிண்ட சிந்திக்கும் திறன் இவ்வளவுதான். இவர்கள் விமர்சகர்கள் மற்றும் தேசியவாதிகள் என்று தம்மைத் தாமே சொல்லிக் கொள்கின்றார்கள்" என்று வந்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன முரளி!

நான் அப்பம் என்கிறேன், நீங்கள் இல்லை புட்டுத்தான் காட்டேன் என்றால் நான் என்ன செய்வது.

அதுசரி தேசியமரத்தை மாற்றிவிட்டார்களா? எப்போ?

அஜீவன் படைப்பாளி, பல்வேறு தடைகளை எதிர்கொண்டு முன்னேறியவர்.

ஆனால் அவரின் யாழ்கள விலகலினை இத்திரியினை விட அவர் ஆரம்பித்த "பதில் தேவை" என்ற திரியே தீர்மானித்திருக்கவேண்டும்.

ஏனெனில் அவர் சீறிக்கொண்டு ஆரம்பித்த திரி

யாழ் களத்தின் நிர்வாகிகள் யார் யார்?

ஏதாவது பிரச்சனை என்றால் யாரோடு பேச வேண்டும்?

எப்படி தொடர்பு கொள்வது?

திரை மறைவில் விளையாட நான் விரும்பவில்லை?

பதில் தேவை?

தக்கவிளக்கம் அளிக்கப்பட்டும்

அஜுவன் வேலை மினக்கெட்டு செய்திகளில் நேரங்களை மாற்ற வேண்டிய தேவை இங்கு யாருக்கும் இல்லை.

புதினம் செய்தி:

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=414675

நீங்கள் இணைத்த செய்தி:

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=414688

அதாவது புதினத்தின் பதிவு 414675 எனவும் உங்கள் செய்தியின் பதிவு 414688 எனவும் பதியப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிடும் ஏனைய பழைய செய்திகளையும் இப்படி சென்று பாருங்கள்.

அது தவிர நேரத்தினையும் சரியாகக் கவனியுங்கள். மேலே இளைஞன் கூறியது போன்று நீங்கள் எந்த நாட்டில் இருப்பதாக அங்கு நேரத்தினைத் தெரிவு செய்துள்ளீர்களோ அதன்படியே நேரம் காண்பிக்கப்படும். உதாரணமாக இலண்டனில் இருக்கும் ஒருவர் நான்கு மணிக்கு ஒரு செய்தியினை இணைத்தால் சுவிசில் இருக்கும் ஒருவருக்கு ஐந்து மணிக்கு இணைத்ததாகக் காண்பிக்கும். (கவனிக்க: இது களத்தில் உறுப்பினராக உள்ள ஒருவர் உள்நுழைந்திருக்கும் போது மட்டும் இப்படிக் காண்பிக்கும்). களத்தில் உள்நுழையாத ஒருவருக்கு பொதுவாக இலண்டன் நேரமே அவர் எங்கிருந்தாலும் காண்பிக்கும்.

இதற்கு முன்னும் இது போன்ற தன்மைகளை பல முறை கண்டுள்ளேன் என்று கூறியுள்ளீர்கள். தயவு செய்து மேற்கூறிய முறைப்படி எவ் இலக்கங்களில் பதியப்பட்டுள்ளது என்று பாருங்கள்.

அடிப்படை தொழில்நுட்பங்களை அறியாமல் நீங்களும் குழம்பி சக கள உறுப்பினர்களையும் குழப்பத்திற்கு உள்ளாக்கி நிர்வாகத்திற்கும் அசெளகரியத்தை உள்ளாக்கும் இதுபோன்ற செயல்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சந்தேகங்கள் இருந்தால் அதனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து இனி வரும் காலங்களிலாவது அவசரப்பட்டு அவசியமில்லாது குற்றஞ்சாட்டுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் எங்கு எப்படி நேரத்தினை மாற்றினாலும் ஒரே கருத்துக்களை இணைக்கும் போது மேற்கூறியபடி கருத்து இலக்கங்களை அடிப்படையாக வைத்தே இணைக்கும்படி இதனை (இந்த script) உருவாக்கியவர்கள் செய்துள்ளார்கள்.

மீளவும் கேட்டுக் கொள்வது அடிப்படை தொழில்நுட்பங்களை அறியாமல் நீங்களும் குழம்பி சக கள உறுப்பினர்களையும் குழப்பத்திற்கு உள்ளாக்கி நிர்வாகத்திற்கும் அசெளகரியத்தை உள்ளாக்கும் இதுபோன்ற செயல்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

தன் விளக்கமின்மையை ஒத்துக்கொள்ளாது

நான் வேலை மினக்கெட்டு எழுதவில்லை

யாரையும் முதன்மைப்படுத்த வேண்டாம்.

அது நானாக இருந்தாலும் சரி!

நட்பு - குடும்பம் என்பது வேறு

பொது வாழ்வு என்பது வேறு

நான் தவறு செய்தாலன்றி

எதற்கும் அஞ்சுவதில்லை.

நான் குடும்பத்தை பார்க்கும் பார்வையோடு

பொது வாழ்வை பார்ப்பதில்லை.

அது வேறு இது வேறு!

மீண்டும் சந்திக்கிறேன்...................

அதுவரை

என முடிக்கிறார்.

முகமூடி அணியாது களம் வருபவன் எனக் கூறும் இவருக்கு இது களங்கத்தினை ஏற்படுத்தியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞனும் அஜீவனை பேட்டி எடுத்துள்ளார். அதன் youTube இணைப்பை தர முடியுமா

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே என்னால் இணைக்கப்பட்டுள்ளதே? யாழ் கள நிர்வாகிகளை கேளுங்கள்.(linux}

கலைஞனும் அஜீவனை பேட்டி எடுத்துள்ளார். அதன் youTube இணைப்பை தர முடியுமா

இதோ நீங்கள்கேட்ட :o மாண்புமிகு Dr. நுணாவிலான்அவர்களால் :o இணைக்கப்பட்ட இணைப்பு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=34498&hl=

நான் உங்களை சொல்லவில்லை நெடுக்காலபோவான். பொதுவாகச் சொன்னேன். இங்கு யாழில இதுதானே நடக்கிது? இல்லையெண்டு சொல்லுங்கோ பார்க்கலாம்? ஏதாவது வித்தியாசமாக சொல்லப்பட்டால் அடுத்தகணமே துரோகி பட்டம் காத்து இருக்கிது. நம்மண்ட ஆக்களிண்ட சிந்திக்கும் திறன் இவ்வளவுதான். இவர்களைத்தான் விமர்சகர்கள் மற்றும் தேசியவாதிகள் என்றும் சொல்கின்றார்கள் :o

நன்றி!

***

அஜீவன் அண்ணாவின் விடயத்தில் அறியாமை கன்னக்க இருக்கு

உ+ம்-= இதே யாழ்களத்தில் ஒரு முறை கோட்டை பற்றிய கருத்து போன போது அஜீவன் அண்ணா பல உண்மைக்கு புறம்பான தகவலை சொன்னார் ஆனால் அவர் அதை யாரோ முலம் அறித்ததாக சொன்னார் ( சாத்திரி அண்ணாவை கேட்டால் சொல்லுவார்) பிறகு யாழ்களத்தில் பல உறவுகள் விளக்கமாக் எடுத்து சொன்னார்கள்.

அதே போல தான் தற்போதும் அஜீவன் அண்ணா 83ம் ஆண்டு கலவரம் நடக்கா விட்டால் இந்த ஆயுத போராட்டம் வந்த்து இருக்காது என்றரிதியில் எழுதி இருக்கார் இது எல்லாம் அவரின் அறியாமை.

இனப்பிரச்சனையின் முலகரனமே அறியாத் அஜீவன் அண்னாவா தமிழீழ அமைப்புகள் முன்னெடுத்து செல்லும் படத்துறையை பற்றி அறித்து இருக்க போகிறார்?

சரி அஜீவன் அண்ணா சிங்கள அரசுக்கும் ஜரோப்பிய ஒட்டு குழுக்களுக்கும் பயது சொல்ல வேண்டிய சில கருத்துக்களை சொல்லமல் விட்டார் என்று எடுத்து கொள்ளலாமா?

***

நெடுக்க்கால போனவர் கேட்ட கேள்விகளுக்கு அஜீவன் அண்ணா பதில் சொல்லாமல் விலகல் என்ற திரைமறைப்பை செய்துள்ளார்.

தனிப்பட்ட முறையில் என்னை அஜீவன் அண்னாவுக்கு தெரியாது ஆனால் எனது மச்சானின் திருமணவைபகத்தத ஒளிப்பதுவு செய்ய வந்தார்( சுவிஸில்) அபோது எனது மச்சான் முலம் அறிமுகம்( நான் யார் என்று சொல்ல மட்டேன் அஜீவன் அண்ணா)

இங்கு நீங்கள் சக கருத்தாடளனே

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளன. - இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.