Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழும் நானும் (பகுதி 12: குளக்காட்டான் அண்ணா)

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தூயா!இப்போதுதான் இந்த மாலைக்கண்ணுக்கு உங்கள் ஆறாம் பகுதி தென்பட்டது.முதற்கண் என் மனமார்ந்த நன்றிகள்.

இருப்பினும் என்னைவிட எத்தனையோ திறமைசாலிகள் இருக்கின்றனர்.அவர்களை முதலில் முன்னிறுத்துங்கள். :wub:

எனக்கு அடிக்கடி இங்கே கவலை தரும் விடயம் என்னவெனில் பழைய பல கருத்தாடல் உறவுகளை அல்லது அவர்களின் கருத்துக்களை இங்கே காணக்கிடைப்பதில்லை . அவர்களும் இங்கே அடிக்கடி வந்து கருத்து தருவார்களாயிருந்தால் யாழ்களத்திற்கு மேன்மேலும் சிறப்பூட்டுமென நினைக்கின்றேன். :lol:

மீண்டுமொருமுறை நன்றிகள் :lol:

  • Replies 235
  • Views 28.2k
  • Created
  • Last Reply

நன்றி தூயா!இப்போதுதான் இந்த மாலைக்கண்ணுக்கு உங்கள் ஆறாம் பகுதி தென்பட்டது.

பின்ன அங்காலை நின்று பி(றா)ராக்குப் பார்த்தால், இங்காலை எப்படித் தெரியும். :lol::wub:

  • தொடங்கியவர்

நன்றி தூயா!இப்போதுதான் இந்த மாலைக்கண்ணுக்கு உங்கள் ஆறாம் பகுதி தென்பட்டது.முதற்கண் என் மனமார்ந்த நன்றிகள்.

இருப்பினும் என்னைவிட எத்தனையோ திறமைசாலிகள் இருக்கின்றனர்.அவர்களை முதலில் முன்னிறுத்துங்கள். :wub:

எனக்கு அடிக்கடி இங்கே கவலை தரும் விடயம் என்னவெனில் பழைய பல கருத்தாடல் உறவுகளை அல்லது அவர்களின் கருத்துக்களை இங்கே காணக்கிடைப்பதில்லை . அவர்களும் இங்கே அடிக்கடி வந்து கருத்து தருவார்களாயிருந்தால் யாழ்களத்திற்கு மேன்மேலும் சிறப்பூட்டுமென நினைக்கின்றேன். :lol:

மீண்டுமொருமுறை நன்றிகள் :lol:

யாரையும் தரப்படுத்த விரும்பவில்லை. அனைவரும் உறவுக்கள் தானே. அதனால் தான் குழுக்கலாக பிரித்து எழுதிவருகின்றேன். :lol:

மாலைக்கண்?? (இப்போ அங்க மாலையா?) ;)

  • கருத்துக்கள உறவுகள்

தூயா,

என்போன்ற புதிய யாழ் உறவுகளுக்கும் நன்கு புரியக்கூடியவாறு பல பழைய சம்பவங்களை மீட்டு மிகவும் விளக்கமாக நீங்கள் எழுதிவருவது மிகவும் பாராட்டுக்குரியது. இனிவரப்போகும் புதியவர்களும் இதைப்படிக்கும்போது பயனடைவார்கள் என்பது நிச்சயம். உங்களை எனக்கு அதிகம் அறிமுகமில்லை இருப்பினும் உங்கள் கருந்துக்களை விரும்பிப் படிப்பவர்களில் நானும் ஒருவன். நீங்கள் இப்படியான ஒரு முயற்சியில் இறங்கியதும் யாழிலிருந்து நீங்கள் பிரியாவிடைபெறப்போகிறீர்களோ என்று எனக்கு உள்ளுர ஒரு அச்சம். உங்கள் முயற்சி புதியவர்களுக்கு குறிப்பாக களத்தில் இனி இணையப்போகும் பெண் உறவுகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமேயில்லை. உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

Edited by vanangaamudi

  • தொடங்கியவர்

தூயா,

என்போன்ற புதிய யாழ் உறவுகளுக்கும் நன்கு புரியக்கூடியவாறு பல பழைய சம்பவங்களை மீட்டு மிகவும் விளக்கமாக நீங்கள் எழுதிவருவது மிகவும் பாராட்டுக்குரியது. இனிவரப்போகும் புதியவர்களும் இதைப்படிக்கும்போது பயனடைவார்கள் என்பது நிச்சயம். உங்களை எனக்கு அதிகம் அறிமுகமில்லை இருப்பினும் உங்கள் கருந்துக்களை விரும்பிப் படிப்பவர்களில் நானும் ஒருவன். நீங்கள் இப்படியான ஒரு முயற்சியில் இறங்கியதும் யாழிலிருந்து நீங்கள் பிரியாவிடைபெறப்போகிறீர்களோ என்று எனக்கு உள்ளுர ஒரு அச்சம். உங்கள் முயற்சி புதியவர்களுக்கு குறிப்பாக களத்தில் இனி இணையப்போகும் பெண் உறவுகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமேயில்லை. உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

வணக்கம் வணங்காமுடி,

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. நான் எப்போதும் யாழை விட்டு போக மாட்டேன். அச்சம் வேண்டாம். :) தொடர்ந்து உங்கள் கருத்துக்களை தாருங்கள்.

:wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமியில் வண்ணத்திரை பதிவுகளை பார்த்தால், இவர் ஒரு சிம்ரன் ரசிகராக இருப்பாரோ என்ற சந்தேகம் யாழ்கள சிட்னி துப்பறிவாளர்களுக்கு எழுகின்றதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதை குமாரசாமி அவர்கள் உறுதிசெய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சினிமாவைப்பொறுத்தவரை நான் பிரத்தியேகமாக ஒருத்தரின் ரசிகனல்ல.சரோஜாதேவி தொடக்கம் பாவனா மட்டும் வந்து நிற்கின்றது :wub: நான் என் மனைவியின் ரசிகனாக்கும் :)

  • தொடங்கியவர்

நான் என் மனைவியின் ரசிகனாக்கும்

தப்பிச்சுக்கிறிங்க.. :):wub:

புலத்தில் பிறந்த தூயா யாழுறுப்பினர்களை பற்றி எழுதுவது பாராட்டபட வேண்டிய விடயம் :)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகலகலாவல்லி தூயா.நீங்கள் இணைந்த நாட்களிலேயே நானும் இணைந்திருந்தேன்.அப்போ உறவுகளுக்கிடையில் இருந்த நெருக்கம் இப்போ இல்லை.இப்போ வெள்ளை வான் சுற்றி திரிவது போல் ஒரு பிரமை.தொடருங்கள் ரசிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகலகலாவல்லி தூயா.நீங்கள் இணைந்த நாட்களிலேயே நானும் இணைந்திருந்தேன்.அப்போ உறவுகளுக்கிடையில் இருந்த நெருக்கம் இப்போ இல்லை.இப்போ வெள்ளை வான் சுற்றி திரிவது போல் ஒரு பிரமை.தொடருங்கள் ரசிப்போம்.

அட இங்கையாவது வானுக்கு கலரை மாத்துங்கோவன் :)

  • தொடங்கியவர்

அட இங்கையாவது வானுக்கு கலரை மாத்துங்கோவன் :wub:

\கிகிகிகிகி :wub::D:lol::D

சிரிப்பதை மட்டும் பதிவாக போடகூடாது என்பதால் இந்த விளக்கம் ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா,,

முன்னோரான யாழ்கள உறவுகளை அறிந்து கொள்ள ஒரு உன்னத வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கீ

நன்றி தூயா அக்கா உங்கள் மூலம் யாழை அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வளவுதானா உங்கள் மரியாதைக்குரியவர்கள்? அல்லது இன்னமும் இருக்கின்றார்களா? ஆவலாக இருக்கிறது. ஆனால் நீங்கள் மெதுவாக எழுதுகிறீர்கள்

  • தொடங்கியவர்

பகுதி 7

சென்ற பகுதியில் முகத்தாரை பற்றி எழுதுகின்றேன் என கூறியிருந்தேன். இதில் நான் புதிதாக கூற எழுதுவுமே இல்லை. உங்கள் அனைவருக்குமே முகத்தாரை பற்றி நன்றாக தெரிந்திருக்கும். இப்பகுதியில் எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ள போகின்றேன். உங்களுக்கு தெரிந்தவற்றையும் மறக்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முகத்தார்

113514142343b76c46831d7.gif

யாழில் இணைந்தது: 16-March 05

மனைவி: பொன்னாம்மாக்கா

நண்பர்கள்: சின்னப்பு, சாத்திரி

பெயர்கள்: முகம்ஸ்

பிடித்தது: பாலைவனம், ஒட்டகப்பால்

அதிகம் எழுதியது: கள உறுப்பினர்களுக்கு மட்டும்

யாழில் சின்னப்புவின் வருகைக்கு பின்னர் நகைச்சுவை களத்தை பிரகாசமாக்கி கொண்டிருந்தது மறக்க முடியாத உண்மை. தொடர்ந்து வந்த முகத்தாரும் சின்னப்புவும் சேர்ந்த பின்னர் சொல்லவே தேவையில்லை. இருவரும் சேர்ந்த்து களத்தையே சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்கள். தனியே ஒருவர் பேசுவதை விட, இருவருக்கும் இடையிலான உரையாடல்களை நான் தேடிப்போய் படிப்பதுண்டு.

முகத்தாரின் கலக்கலான அறிமுகமே யாழை அவர்பக்கம் இழுக்க வைத்தது. அதை இங்கு பார்க்கலாம் :முகத்தாரும் யாழ் வலையில் தன்னை பற்றி முகத்தார் தந்த விளக்கம் இது தான் "நான் வந்து கலியாண புரோக்கர்..சுன்னாகத்திலை வந்து "புரோக்கர் முகத்தார் " எண்டு கேட்டுப் பார் சின்ன பிள்ளைக்குக் கூடத் தெரியும்..."

அறிமுகத்தின் பின்னர் முகத்தார் எழுதிய முதல் பதிவு: விதவைகள் மறுமணம் புரியலாமா.............? நகைச்சுவையாக எழுதினாலும், முகத்தாரின் கருத்துக்கள் பெரும்பாலும் சமுதாயம் பற்றியதாக இருக்கும். இவர் ஆரம்பித்த பதிவுகளே இதற்கு சாட்சி.

முகத்தார் ஆரம்பித்த: புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம் அடைந்திருக்கிறதா? பதிவு 13 பக்கங்களுக்கு விவாதங்களை கொண்டு போயிருக்கு. தொடர்ந்து எழுதிய விவாகரத்துக்கு காரணம் என்ன பதிவும் சிறந்த கருத்தாடல்களை உள்ளடக்கியுள்ளது.

நகைச்சுவையாக எழுதிய பதிவு: சின்னப்புவும் நானும் தண்ணியடிச்சா. இப்படி எழுதவும் ஒரு திறன் இருக்கணும். முகம்ஸின்: நண்பர்களுக்கிடையே பாவிக்கும் வித்தியாசாமான கருத்துள்ள சொற்கள் பதிவை நிச்சயம் படித்து பாருங்கள். இந்த பதிவு இங்கும் தொடரணும்.

சமையல்கட்டில் முகம்ஸ் எழுதிய முதல் பதிவு: கப்சா றைஸ். அவரின் முன்னுரை: இதெண்டா புதுப் பேராக் கிடக்கு எண்டு யோசிக்காதைங்கோ அரபு நாடுகளில் இருந்தவர்களுக்கு இந்தப் பேரை தெரியாமல் இருக்காது வெறும் தக்காளி சாதம் மாதிரித்தான் செய்முறையிலும் கொஞ்சம் வித்தியாசம் இது எங்கையும் சுட்டுப் போடேலை 5வருசமா செய்து சாப்பிட்டு வாறதாலை பயமில்லாமல் நீங்களும் இந்த செய்முறையைப் பயன் படுத்துங்கோ.

முகமின் ஒரு பதிவை பார்த்து நான் இரவு தூங்காமால் இருந்திருக்கேன். அது என்ன பதிவு என பார்க்கணும் என்றால் இங்கு போகத்தான் வேண்டும்: பயங்கர பதிவு

களத்தில் அப்புக்கள் ஒவ்வொருத்தரும் காதலை பற்றி ஒரு பதிவு போட தவறியதில்லை. அந்த வழக்கத்தை ஆரம்பித்து வைத்த பெருமை முகம்ஸை தான் சேரும் என்பது என் கருத்து: காதல் அனுபவங்கள் பதிவுக்கு முதல் ஆளாக பதில் போட்ட சின்னப்புவின் லொள்ளை பாருங்கள்: அப்படிப்போடு போடு போடு அசத்திப்போடு முன்னாலை. எட முகத்தான் அந்தக்குறோஸ் ஐ ஏன் கேக்கிறாய்

நான் பாக்க அவள் பாக்க (அது தான் சின்னாச்சி :evil: ). விழுந்தனடாப்பா ஒரு விழுகை அப்பிடியே குத்தியன் குடும்பத்திக்கை இண்டைக்கு வரைக்கும் எழும்பேல்லை.

எனக்கு முகமின் பதிவுகளில் மிகவும் பிடித்த பதிவு என்றால்: யாழ் களத்தின் 2005 ஆண்டு ஒன்றுகூடல் தான். அதில் என்னை பற்றி எழுதியது: வாசலுக்கு வெளியே சுட்டிகளான தூயா வெண்ணிலா இருவரும் வெளியில் நிக்கும் ஒரு நாய்க்கு கல் எடுத்து எறிவதும் நாய் இவர்களைப் பாத்து உறுமுவதும் இவர்கள் ஓடி ஓளிவதுமாக இருக்கிறார்கள் களத்தில் செய்யும் அவர்களின் வேலை விழா மண்டபத்திலும் தொடர்கிறது.

அதே போல நான் விழுந்து விழுந்து சிரித்த இன்னொரு பதிவு: கடத்தல் மன்னர்கள். சி*5, சாத்திரி, முகத்தார் பங்குபற்றியிருப்பார்கள். முகத்தாரின் எழுத்து திறனை இதில் பாருங்கள். சிரிக்க வைப்பது அத்தனை எளிதான காரியம் இல்லையே.

முகத்தாரின் பதிவுகளுக்கு சிகரம் வைத்த பதிவென்றால் அது: முகத்தார் வீடு தான். அருமையான கற்பனை. நிறைவான எழுத்து என முகத்தார் கலக்கியிருப்பார். இத்தொடரை படிக்காதவரும் உண்டோ.

புதியகளத்திற்கு நாங்க வந்த பின்னர், முகத்தார் எழுதுவதை குறைத்துக்கொண்டார். காரணம் வெளிநாடிலிருந்து ஊருக்கு சென்றது தான் என களத்தில் பேசிக்கொண்டார்கள். ஊரிலிருந்தும் முகத்தார் சில தடவை யாழுக்கு வந்திருந்தார். தற்போது முகத்தார் எங்கே என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும் என நினைக்கின்றேன். முகத்தாருடன் யாராவது தொடர்பில் இருந்தால், அவர் எப்படியிருக்கார் என சொல்லுங்கள். சின்னப்புவும், சாத்திரியும், முகத்தாரும் மறுபடி சேர்ந்து களத்தை கலக்கணும். முகத்தார் எங்கிருந்தாலும் யாழ் உறவுகள் அவரை வாழ்த்திகொண்டேயிருப்பார்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் ஒரு நினைவூட்டலுக்கு நன்றி தூயா. முகத்தாரின் நகைச்சுவையை மீட்டி பார்த்தபோது என் வயிறு வலியெடுக்கின்றது :rolleyes:

  • தொடங்கியவர்

மீண்டும் ஒரு நினைவூட்டலுக்கு நன்றி தூயா. முகத்தாரின் நகைச்சுவையை மீட்டி பார்த்தபோது என் வயிறு வலியெடுக்கின்றது :rolleyes:

முகஸ் எழுதின காலத்தில நீங்களும் இருந்திங்க தானே..சின்னப்புவும் முகத்தாரும் சேர்ந்த்தால் எப்படி இருக்கும் என தெரியும் தானே;)

  • தொடங்கியவர்

நன்றி தூயா அக்கா உங்கள் மூலம் யாழை அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வளவுதானா உங்கள் மரியாதைக்குரியவர்கள்? அல்லது இன்னமும் இருக்கின்றார்களா? ஆவலாக இருக்கிறது. ஆனால் நீங்கள் மெதுவாக எழுதுகிறீர்கள்

மேலும் சில தொடர்கள் எழுதுவதால் தான் தாமதம்..

இன்னும் நிறைய பேர் இருக்காங்க.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

தூயா நினைவு மீட்டல் அருமை பலவிடயங்கள் முக்கியமாய் முகத்தாரின் பதிவுகளை மீட்டியது மகத்தார் இப்பொழுது எங்கே என்று தெரியவில்லை ஒரு வருடத்திற்கு முன்னர் கொழும்பு வந்திருந்த சமயம் தொடர்பு கொண்டேன். திருகோணமலையில் இருப்பதாக் சொன்னார் அவ்வளவுதான் எங்காவது வெளி நாடுகளில் இருந்தால் நிச்சயம் யாழிற்கு வருவார். ஊரில் இருந்தால் அவரது குடும்பத்துடன் நலமாக இருக்கவேண்டும். ஏதோ ஒரு காலம் யாழில் வரவேண்டும். :icon_mrgreen:

  • தொடங்கியவர்

தூயா நினைவு மீட்டல் அருமை பலவிடயங்கள் முக்கியமாய் முகத்தாரின் பதிவுகளை மீட்டியது மகத்தார் இப்பொழுது எங்கே என்று தெரியவில்லை ஒரு வருடத்திற்கு முன்னர் கொழும்பு வந்திருந்த சமயம் தொடர்பு கொண்டேன். திருகோணமலையில் இருப்பதாக் சொன்னார் அவ்வளவுதான் எங்காவது வெளி நாடுகளில் இருந்தால் நிச்சயம் யாழிற்கு வருவார். ஊரில் இருந்தால் அவரது குடும்பத்துடன் நலமாக இருக்கவேண்டும். ஏதோ ஒரு காலம் யாழில் வரவேண்டும். :)

வருவார் என நம்புவோம்..

இலங்கையில் இருக்கின்றார்....கவனமாக இருந்தால் சரி தான்

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார் பற்றிய இனிய நினைவு மீட்டலுக்கு நன்றிகள் தூயா. அரபு நாடுகளில் இருக்கும் போது யாழுக்கு வந்த முகத்தார், திருக்கோணமலைக்கு சென்றபின்பு யாழுக்கு வருவது குறைந்துவிட்டது. தமிழ்ச்செல்வன் வீரமரணத்தின் போது தாயகத்தில் இருந்து கருத்து எழுதினார். கடைசியாக மார்ச் மாதம் தான் யாழுக்கு வந்தார். பிரச்சனை உள்ள இடத்தில் வாழும் முகத்தார், நலமாக இருக்கவேண்டும். மீண்டும் யாழில் அவரைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  • தொடங்கியவர்

முகத்தார் பற்றிய இனிய நினைவு மீட்டலுக்கு நன்றிகள் தூயா. அரபு நாடுகளில் இருக்கும் போது யாழுக்கு வந்த முகத்தார்,

ம்ம் ஒட்டகத்தில் தானே வாருவார்...;) மறக்க முடியுமா?

  • தொடங்கியவர்

பகுதி 8

சென்ற பகுதியோடு யாழில் மரியாதைக்குரியவர்களை நிறைவு செய்தேன். இந்த பகுதியிலிருந்து புதிதாக "யாழில் எனக்கு கிடைத்த அண்ணன்கள்" என்ற தலைப்போடு சில கள உறுப்பினர்களை பற்றி எழுத இருக்கின்றேன். யாழில் அனைவரும் ஒரு குடும்பமாக ஒருவரை ஒருவர் தெரிந்திருப்பதற்கும், கடந்த வருடங்களை நினைவூட்டவும் தான் இந்த தொடரை எழுத ஆரம்பித்தேன். நான் என்னோடு ஆரம்பித்த விடயம், இன்று களத்தில் பலரோடு போய் கொண்டிருக்கின்றது. உங்களில் பலர் எனக்கு உற்சாகம் தருகின்றீர்கள். இங்கு எழுதியும், தனிமடலில் எழுதியும் உற்சாகம் தருகின்றீர்கள். அதற்கு மிக்க நன்றி. தொடரை என்னால் முடிந்த வரை தொடர்வேன்.

யாழில் எனக்கு கிடைத்த அண்ணன்கள்

நான் முன்னர் பல தடவை களத்தில் குறிப்பிட்டுள்ளேன், என் குடும்பத்தில் எனக்கு அண்ணன்கள் தான் அதிகம் என. அது போல யாழுக்கு வந்த போதும் எனக்கு சகோதரிகளை விட பல சகோதரர்கள் தான் கிடைத்தார்கள். இன்று வரை இவர்களுடன் எனக்கு ஒரு நல்ல சகோதர உறவு தொடர்கின்றது. உறவுகள் அனைவரும் வெவ்வேறு நாடுகளில் இருப்பதால் எனக்கு களத்து உறவுகள் தான் நெருக்கமாகி போனார்கள். யாழ்களம் என்பது வெறும் ஒரு கருத்துக்களமாக நான் பார்த்து பல வருடங்கள் கடந்துவிட்டன. யாழ் குடும்பத்தில் ஏற்கனவே அப்புக்களை பற்றி எழுதிவிட்டேன். இனிமேல் அண்ணன்களை பார்க்கலாம்.

சியாம்

யாழ்களத்தில் அண்ணா என்றால் அதில் மிக முக்கியமானவர் சியாம் அண்ணா தான். இணையத்தில் என்னை பற்றி அதிகம் தெரிந்தவர்களை ஒரு கையில் உள்ள விரலால் எண்ணிவிடலாம். அதில் ஒருவர் சியாம் அண்ணா. களத்தில் இணைந்த நேரமாகட்டும், நான் எழுத ஆரம்பித்த நேரமாகட்டும் சியாம் அண்ணா இல்லை எனில் ஒரு வேளை எழுதாமலே இருந்திருப்பேன். நான் எழுத முதல் அடி எடுத்து வைக்க வைத்தவர் சியாம் அண்ணா தான். நான் களத்தில் இணைந்த நேரத்தில் சியாம்ஸ் அதிகம் எழுதிக்கொண்டிருந்தார். அவரோடு சேர்ந்து எழுதி களத்தை களை கட்ட வைப்பது வசம்பு அண்ணா தான்.

சிறிது காலத்தின் பின்னர் சாத்திரி எனும் பெயரில் எழுத ஆரம்பித்தார். களத்தில் எத்தனை பேருக்கு அது தெரியும் என எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு ஆரம்பித்திலேயே சொல்லியிருந்தார். (அதனால தான் நான் சாத்திரிகிட்ட அத்தனை நக்கலா பேசுவது இல்லை) அவராக களத்தில் சொல்லும் வரை ரகசியத்தை நான் காப்பாற்றியிருக்கேன். அதனால் உடனே எனக்கு "ரகசியம் காப்பாள்" போன்றதொரு பட்டத்தை சாத்திரி வழங்குவார் என நினைக்கின்றேன்.

சாத்திரியா வந்ததில எனக்கு ஒரு நல்ல விசயம். சியாம்ஸ் என்றால் மரியாதை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். பம்பலா எல்லாம் கதைக்க முடிவதில்லை. சாஸ்த் என்றால் கிகிகிகிகி சொல்லவே வேண்டாம். இதோடு சாத்திரியை விட்டுவிட்டு சியாம் அண்ணா பற்றி பேசலாம். (காரணம்: எனக்கு களத்தில் பலரின் போலி ஐடிகள் தெரியும். அதை பற்றி எழுதும் போது சாத்திரியை வம்புக்கிழுக்கலாம்)

யாழில் இணைந்தது: 1-July 04

வேறு ஐடி: சாத்திரி

மனைவி: சாத்திரிக்கு உண்டு, சியாமண்ணாக்கு இல்லை (என அவரே சொல்லிக்கிறார்)

நண்பர்கள்: வசம்பு

அதிகம் எழுதியது: கவிதை/பாடல்கள்

சியாம்ஸ் யாழில் இணைந்து 4 சரியாக நான்கு வருடங்கள் முடிந்துவிட்டது.

சமையல்கட்டிலும் சியாம்ஸ் தனது திறமையை காட்டியுள்ளார். என்னுடைய பால்தேத்தண்ணி விகடன் வரை போனது. தேநீர் என்றாலே அப்படி ஒரு ஈர்ப்பு அனைவருக்கும். எங்க சியாம்ஸ் போட்ட தேநீரை பருகி பாருங்கள். தேநீர் தந்த தெம்பில் ஒடியல்கூழ் காய்ச்சியிருக்கார். அதில குளம்ஸ் கூழ் படம் கூட போட்டிருக்கார்.

குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயம் ஒன்று: சியாம் அண்ணாவோடு கொஞ்சம் வித்தியாசமான கருத்துக்களை களத்தில் பலர் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது கருத்தாடல் மிகவும் மதிக்க கூடிய வகையில் இருக்கும். உதாரணத்திற்கு குருவிபபா, கிருபன் போன்றோரை சொல்லலாம். வேறு கருத்து கொண்டிருந்தாலும் மற்றவர்கள் ஆக்கங்கள் படைக்கும் போது முதலாவதாக போய் தம் கருத்துக்களை வைப்பார்கள். திருந்த வேண்டியவற்றை எடுத்து சொல்வார்கள். என்னை பொருத்தவரை இவை பாராட்ட பட வேண்டிய விடயங்கள்.

சியாம் அண்ணா பற்றிய கிசு கிசு: அவரே 2005 இல் சொல்லியிருக்கார். படியுங்கள் : "மற்றவை இந்த தினத்தை எப்பிடியெல்லாம் கொண்டாடினம் எண்டு எனக்கு தெரியாது என்ரை முஞ்சையை ஓரு பெண்பிடிச்சிருக்கெண்டு ஒருகடதாசியிலை எழுதி ஒரு ரோசா மலரையும் வீட்டு வாசல்லை கட்டிபோட்டு போயிருக்கு அவரிற்கு தனது விருப்பத்தை சொல்ல இந்தநாள் ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தபடியால் எனக்கு காதலர் தினம் தேவை : biggrin.gif biggrin.gif மற்றபடி (halloowine )புனித ஆத்மாக்கள் தினத்தையும்தான் இப்ப இங்கு தண்ணியடிச்சு பேய்மாதிரி வேடம் போட்டு குடிச்சு கூத்தாடி கொண்டாடுறாங்கள்.இப்ப எல்லாமே வியாபாரம் தான்.கலை கலாச்சாரம் பாரம்பரியம் மனிதம் எல்லாம் இரண்டாம் பட்சம்"

ஆரம்பகாலத்தில் சியாம் அண்ணா கவிதை கூட எழுதி கொண்டிருந்தார். கவிதைகளை ரசித்து கொண்டிருந்தார். மிகவும் சாதாரணமாக படிக்கும் போது தோன்றும், ஆனால் அவர் சொல்ல வந்த கரு, நிச்சயம் படிப்பவரை எட்டிவிடும் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை. அது போல எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு படைப்பு "என்றென்றும் துரோகிக்கு". தன் நண்பன் ஒருவரின் சொந்த வாழ்க்கை பற்றி எழுதிய கவிதையை குறிப்பிட்டு சொல்லலாம். "வெறுமை" என தலைப்பிடப்பட்டிருந்த கவிதை எங்களில் பலரை பாதித்தது. அவரின் "முதிர் கன்னி" ஒரு சிறந்த படைப்பு. அதன் பின்னர் சியாம் அண்ணாவின் கவனம் கதைகளில் பதிந்தது. அவரின் ஒரு கதையை வாசிக்காதவர் யாழில் உண்டா. இப்போதும் அவர் அதிகம் எழுதுவது கதைகள் தானே.

புலத்தில் உள்ள ஈழத்து பிள்ளைகள் எப்படி வாழ்கின்றனர், என்ன பிரச்சனைகளை சந்திக்கின்றனர் போன்ற பல விடயங்களை சியாம் அண்ணாவிடமிருந்து அறிந்து கொள்ளலாம். புலத்திலே தமிழ் பிள்ளைகள் பதிவை இதற்கொரு உதாரணமாக எடுக்கலாம். சமுதாயம் சார்ந்த அவரது கவலைகளை பெரும்பாலும் அவருடைய முன்னய பதிவுகளில் பார்க்கலாம்.

இப்போது சாத்திரியானாலும், இனி பூசாரி ஆனாலும்....சியாம் அண்ணாவின் இடம் யாழில் அவரால் கூட நிரப்ப முடியாத விசயம். என்னை பொருத்த வரை, சியாம் அண்ணா போல் மற்றவர்களை ஊக்கப்படுத்துபவர்களை காண்பது அரிது. என்னுடை ஆக்கங்கள் யாழிலும், யாழை தாண்டியும் வரும் போது சியாம் அண்ணா நிச்சயம் என்னை பார்த்ஹ்து பெருமை கொள்வார் என நினைக்கின்றேன். எத்தனை தடை வந்தாலும், தன் வழியில் சென்றுகொண்டிருக்கும் சியாம்ஸிற்கு இந்த சந்தர்ப்பத்தில் என் நன்றியையும், அன்பையும் தெரிவித்து கொள்கின்றேன்.

அடுத்த பகுதியில் இன்னொரு சகோதரன் வீரநடை போடுவார்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் மதிப்புக்குரிய சியாம் அண்ணனைப்பற்றி அழகாக சொல்லியிருக்கின்றீர்கள் . வாழ்த்துக்கள் :lol:

  • தொடங்கியவர்

உங்கள் மதிப்புக்குரிய சியாம் அண்ணனைப்பற்றி அழகாக சொல்லியிருக்கின்றீர்கள் . வாழ்த்துக்கள் :lol:

:D உங்களுக்கும் அவரை தெரியும் தானே??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: உங்களுக்கும் அவரை தெரியும் தானே??

என்ன கேள்வியிது?கொஞ்சக்காலம் ஒரு மூலயிலையிருந்து இஞ்சை நடந்த கூத்துக்களை கண்டுகளிச்சவனாச்சே :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.