Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆசை! ஆசையாய்........... என்னையும் வாழவிடுங்கோ!

Featured Replies

ஆசை! ஆசையாய்........... என்னையும் வாழவிடுங்கோ!

ஓ! வழமைபோல இரண்டு நாள் வந்தான் பாவி, பிறகு இந்தத் திக்குத் திசையிலேயே ஆளைக் காணமென்று ஆளாளுக்கும் திட்டுகிறது கேட்குது.

எனக்குக் கொஞ்ச நாளா மனசு சரியில்லை. அந்தக் கதையையும் கட்டாயம் உங்களுக்குச் சொல்லவேணும் அப்பொழுதுதான் எனக்கும் ஒரு ஆறுதலாக இருக்கும்.

அண்மையில் நண்பரொருவர் இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து பார்க்கச் சென்றிருந்தேன்.

அப்பொழுது

அண்ணை உங்களுக்குத் தெரியுமே உங்களுக்கு வந்திருக்கிற வருத்தத்தின் தீவிரம்?

ஓ ! ஓ! தெரியாமலே சா! கிட்ட வந்திட்டது தெரியும், முடிஞ்சவரை சாகிற காலத்தைக் கொஞ்ச் ஒத்திப்போடலாம் என்று நினைக்கிறன்.

உங்களிடம் இருக்கிற கெட்ட பழக்கத்தை விட்டியளென்றாலே கனகாலத்துக்கு வாழலாம். எப்பவாவது அதைப்பற்றி யோசிச்சனிங்களே?

இன்றைக்கு நேற்றே! முதன்முதலா அரும்பின மீசையைத் தினத்துக்கும் நூறுவாட்டி கண்ணாடிக்கு முன்னாலை நின்று தடவிப்பார்த்து ரசித்த காலத்திலேயே எனக்கு அந்த ஆசையும் தொடங்கிவிட்டது.

அப்பவே ஒருநாள் தம்பிராசா கடை வாசலிலைபோய் மசிந்தி மசிந்திக்கொண்டு நின்று ஒருத்தரும் கடைக்கு வராத நேரமா பார்த்து

அண்ணை எனக்கொரு ....... தாங்கோ எண்டு கேட்கும்போது தம்பிராசா அண்ணை உதைத் தொட்டபின் விட்டவனும் இல்லை! பிறகொரு நேரத்திலை தொட்டதுக்காக வருந்தாதவனுமில்லை என்ற இலவச அறிவுரையோட அந்தச் சனியனை தர என்ரை கையில வாங்கேக்கை பயத்தில கை நடுங்கேக்ககையே நினைச்சனான் இந்த ஒருதடவைதான் முதலும் கடைசியுமாய் வாங்கினதுக்கு..... ஆசைக்கு....... ஒருதடவை பாவிச்சுப் பார்க்கிறதோட சரி பிறகு சீவியத்திலையும் தொடுகிறதில்லை என்று.

ஆனால் அடுத்தநாள் பள்ளிக்கூடத்தில முதல்நாள் தம்பிராசா கடையில வாங்கினதில இருந்து நடந்ததுகளை நண்பர்களுக்குச் சொன்னதில இருந்து அவர்கள் என்னை ஒரு கதாநாயகனாகப் பார்க்க................. அவங்களுக்கு பந்தா காட்டுவதற்காக அடுத்தநாளும் தம்பிரைசா கடையில போய் அங்குமிங்கும் பார்த்து முழிசினபடி இரண்டாவது தடவையா வாங்கேக்கை கை நடுக்கம் கொஞ்சம் குறைஞ்சமாதிரித் தெரிந்தது.

பிறகென்ன ரமேசுக்காக சிவத்துக்காக என்று அடிக்கடி தம்பிராசா கடைக்குப்போய்..................

பயம் விட்டுப்போனதுமட்டுமில்லாமல

Edited by ampalathar

அம்பலத்தார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

உதில ஒரு சங்கதி தெரியுமோ.. பத்திறவையை விட பக்கத்தில நிக்கிறவைக்குத்தான் பாதிப்பு அதிகம் என்று சொல்கின்றன ஆய்வுகள்.

பத்திறவர் "பில்ரர்" கட்டைக்கால இழுப்பார். பக்கத்தில நிக்கிறவர் "பில்ரர்" இல்லாமல் இழுப்பார்.

இதில பத்திறவை.. பக்கத்தில நிக்கிறவை என்று இவர்களுக்கு பிரதானமாக 3 பொருட்களால ஆபத்து..

1. ரார் (Tar) இதுதான் சுவாசப்பையில் புற்றுநோயைத் தூண்டத்தக்க தூசு இரசாயனங்கள் அடங்கிய கலவை. இது வேறு பல பக்க விளைவுகளையும் உருவாக்குவது. குறிப்பாக சுவாசப்பாதையில் உள்ள தூசை வடிகட்டும் பிசிர்களை அழிப்பது உட்பட. இதனால் மரணத்தை விளைவிக்கக் கூடிய Emphysema, bronchitis போன்ற சுவாசப்பை சார்ந்த நோய்களும் ஏற்படுகின்றன.

2. நிக்கட்டின் (Nicotine) இதுதான் நரம்பு மண்டலத்தில் செல்வாக்குச் செய்து கிலுகிலுப்பூட்டும் இரசாயனம். இதுவே இவர்களை சிகரட்டுக்கு அடிமை ஆக்கச் செய்வது. இது குருதிக்குழாய்களின் அளவில் மாற்றத்தை உண்டு பண்ணி குருதி அமுக்கத்தையும் மாற்றும் இதயப் பலவீனத்துக்கு வழி வகுக்கும்.

3. காபனோரொக்சைட். (Carbon monoxide) - இது நச்சுத் தன்மையான வாயு. இது பிராணவாயுவை அல்லது உயிர்வாயுவான ஒக்சிசனை உடல் கலத்துக்கு காவிச் செல்லும் செங்குருதிக் கலத்தில் உள்ள சிவப்பு நிறப்பொருளான கீமோகுளோபினுடன் மீளாத இணைப்புக்கு உள்ளாவதால் புகைப் பிடிப்பவர்கள் உயிர்வாயுக் குறைபாட்டுக்கு இலக்காகி களைப்படைவர்.

"பில்ரர்" போடாத புகையை உள்ளிளுப்பவர்கள்.. பக்கத்தில் நிற்பவர்கள்.. Passive smokers .. இவற்றுடன் பிற மாசுக்களையும் மேலதிகமாக உள்ளுக்கின்றனர் என்பதுடன் அதிகளவு Tar ஐ உள்ளிளுக்கின்றனர் என்பது பரிதாபகரமான உண்மை. "பில்ரர்" முற்றாக இல்லாதுவிடினும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ராறை வடிகட்டுகிறது. எனினும் தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் கூடிய அளவுக்கு ராறை சிறுக சிறுக உள்ளிள்ளுது விடுவதால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இதில் ராறில் மட்டும் சுமார் 4500 வேறுபட்ட இரசாயனங்கள் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 50 வகைகள் புற்றுநோயை உருவாக்கவல்லன. புற்றுநோய் சிகரட் இழுப்பவருக்கும் வரலாம் பக்கத்தில நின்று இழுப்பவருக்கும் வர வாய்ப்புள்ளது.

இப்போ எல்லாம் நிக்கற்றினை சிகரட் மூலம் பெறாமல்.. சுவிங்கம்.. நிக்கட்டின் பச் (patch) என்பன மூலம் நிக்கட்டின் இரசாயனம் குறைந்த அளவில் உடலில் செல்ல வகை செய்யப்படுகின்றன. இதனால் சிகரட் குடிப்பவர்களை அதன் அடிமைத்தனத்தில் இருந்து மீட்க முடிவதோடு பக்கத்தில் நிற்கும் அப்பாவிகளையும் காக்க முடியும்.

சிந்திப்போமாக..!!

கதையின் நாயகன் அழித்தது தன்னைத் தான் மட்டுமல்ல.. வீட்டில் இருந்து புகைக்கும் போது.. வீட்டில் உள்ளவர்களையும்.. வீதியில் புகைக்கும் போது வீதியால் போனவர்களையும் புகைக்க வைத்து.. நாசம் செய்திருப்பார் என்பது உண்மை. இவர்களும் ஒரு வகையில் கொலைஞர்களே..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்பலத்தார் கதைக் கரு, ஓட்டம் பிரமாதம். நெடுக்கால போவார் அம்பலத்தாரோடு இணைந்து , "இன்று ஒரு செய்தி" என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தலாமே.... தகவலுக்கு நன்றி.

எனக்கும் புகை பிடிச்சு இறந்த ஒருவருடைய நுரைஈரலைப் பர்க்கக்கிடைச்சது...

அதன் சுவர்கள் கன்னங்கரேல் என்று கறைகளோட இருந்தது...

இவர் என்னென்டு இவ்வளவு காலமும் உதோட உயிரோட இருந்தவர் எண்டு வியந்து போனன்...

அதோட புகை பிடிகிறதால இன்னொரு நட்டம் என்னவென்றால்,பெருமளவு பண விரயம் ஏற்படுகுது...

எனது நன்பர் ஒருவர் சொன்னார், தான் ஒரு நாளைக்கு ஒரு பெட்டி(20) வெண்சுருட்டு(சிகரெட்) குடிப்பார் எண்டு..

சும்மா கணக்கு போட்டு பாத்தன்

30 நாள்*5.0 £=150£

இலங்கைக்காசுக்கு 150*210=31500//=

ஊரில ஒரு குடும்பம் இந்த காசுக்கு நிம்மதியா வீட்டில உக்காந்திருந்து சாப்பிடலாம்..

அல்லது இவர் உந்தக்காசை தேச விடுதலைக்காக குடுத்திருக்கலாம்.. மாதம் மாதம் 150£ என்றால் எதிர் காலத்தில இவற்றை பேர் பொன்னெழுத்தால பொறிக்கப்பட்டிருக்கும்...

ம்ம்..இதெலாம் யாரிட்ட சொல்லி அழுகிறது.

அவரை பார்க்கேக்கை எனக்கு அம்மா அடிக்கடி சொல்லுற பழமொழி தான்..ஞாபகம் வாறது.. .

''கெடு குடி சொற் கேளாது''

களத்தில இது என்னுடைய 50 ஆவது கருத்து,இப்பிடி ஒரு உருப்படியான ஒரு கருத்தை சொல்லுறதுக்கு சந்தர்ப்பம் தந்த தலைப்பை போட்டதுக்கு அம்பலத்தாருக்கு நன்றி... கதை நன்றாக இருந்தது.. வாழ்த்துக்கள்..

Edited by uthayam

  • கருத்துக்கள உறவுகள்

அம்பலம் அவர்களுக்கு வணக்கம்,...............

ஆசை ..ஆசை யாய்...நன்றாக உள்ளது ...எனை நோக்கு ..தெரியுமோ? ...தங்களைச் தெரியம் ..(வாசிப்பது ) நுழைந்தது .................அண்மையில் தான் ... சிலருக்கு பட்ட பின் தான் தெரியும் ..எனக்கு தெரிந்த ஒருவரும் இப்படித்தான் ....பட்ட பின்பு .... வருகின்ற ஞானம் ...........யாருக்கும் ,உதவும் ????

நட்புடன் நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

அம்பலத்தார்,

புகைப்பிடித்தல் பழக்கத்திற்கு ஆளான ஒருவரின் உளஓட்டத்தை மிகவும் அற்புதமாகவும் ஆளுமையாகவும் படைத்திருக்கிறீர்கள். உங்களுக்குச் சொந்த அனுபவமாக இருக்குமோ?

அம்பளம் மாமா, கதை நல்லா இருக்கிது. குடி, புகைத்தல்... பழகினால் பிறகு விடுறது பெரும்பாடா போயிடும். எண்டபடியால அவற்றை அணுகாமல் இருப்பதே நல்லது.

  • தொடங்கியவர்

நான் எழுதுறதை நீங்களெல்லாம் சட்டென்று ஓடிவந்து படிக்கிறதும் பட்டென்று பதிலெழுதுறதும் சந்தோசமாக்கிடக்கு. எல்லாருக்கும் நன்றிகள். தொடர்ந்தும் வாங்கோ! வந்து படியூங்கோ கருத்துக்களைச் சொல்லுங்கோ அதுதான் வயசுபோன கிழவன் மூலையில சுருண்டு படுத்துக் கிடக்காமலுக்கு பலதையூம்பத்தையூம் எழுதுவதற்குத் தெம்பைத் தரும்.

அதோட புகை பிடிகிறதால இன்னொரு நட்டம் என்னவென்றால்,பெருமளவு பண விரயம் ஏற்படுகுது...

எனது நன்பர் ஒருவர் சொன்னார், தான் ஒரு நாளைக்கு ஒரு பெட்டி(20) வெண்சுருட்டு(சிகரெட்) குடிப்பார் எண்டு..

சும்மா கணக்கு போட்டு பாத்தன்

30 நாள்*5.0 £=150£

இலங்கைக்காசுக்கு 150*210=31500//=

ஊரில ஒரு குடும்பம் இந்த காசுக்கு நிம்மதியா வீட்டில உக்காந்திருந்து சாப்பிடலாம்..

அல்லது இவர் உந்தக்காசை தேச விடுதலைக்காக குடுத்திருக்கலாம்.. மாதம் மாதம் 150£ என்றால் எதிர் காலத்தில இவற்றை பேர் பொன்னெழுத்தால பொறிக்கப்பட்டிருக்கும்... களத்தில இது என்னுடைய 50 ஆவது கருத்து,இப்பிடி ஒரு உருப்படியான ஒரு கருத்தை சொல்லுறதுக்கு சந்தர்ப்பம் தந்த தலைப்பை போட்டதுக்கு அம்பலத்தாருக்கு நன்றி... கதை நன்றாக இருந்தது.. வாழ்த்துக்கள்..

உதயம் சொன்ன விசயம் எங்கள் எல்லாரின்ரை மூளையிலயூம் உதித்திருந்தால் எங்களது தேசம் என்றௌ விடிந்திருக்கும். ஐம்பதாவது கருத்து எழுதியதற்து வாழ்த்துக்கள். 100.. 1000....10000.................... என தொடர்ந்தும் ஆக்கமான கருத்துக்களாக எழுதுங்கள்

அம்பலம் அவர்களுக்கு வணக்கம்,...............

ஆசை ..ஆசை யாய்...நன்றாக உள்ளது ...எனை நோக்கு ..தெரியுமோ? ...தங்களைச் தெரியம் ..(வாசிப்பது ) நுழைந்தது .................அண்மையில் தான் ... சிலருக்கு பட்ட பின் தான் தெரியும் ..எனக்கு தெரிந்த ஒருவரும் இப்படித்தான் ....பட்ட பின்பு .... வருகின்ற ஞானம் ...........யாருக்கும் ,உதவும் ????

நட்புடன் நிலாமதி

பிள்ளை நிலாமதி எனக்கெண்டால் இணையத்தில எழுதுறதை வைச்சு ஆளைக் கண்டுபிடிக்கிற மாயமெல்லாம் தெரியாது. அதுபோக நான் போட்டிருக்கிற படத்தைப் பார்த்துத்தானே என்னைக் கண்டுபிச்சனிங்கள்..... உங்களுக்குத் தெரிந்த அந்த பெரிய.............. பெயர் பெற்றவரைப் பார்த்ததில பிறந்ததுதான் இந்தக் கதை.

அம்பலத்தார்,

புகைப்பிடித்தல் பழக்கத்திற்கு ஆளான ஒருவரின் உளஓட்டத்தை மிகவும் அற்புதமாகவும் ஆளுமையாகவும் படைத்திருக்கிறீர்கள். உங்களுக்குச் சொந்த அனுபவமாக இருக்குமோ?

வல்வைசகாரா சொந்த அனுபவத்திலைதான் எழுதவேணுமென்றால் செத்தகதை எழுதச் செத்துப் பார்த்தே எழுதமுடியூம் அப்பு. எல்லாம் ஒரு ஊகத்திலதான் எழுதுறது. தங்களைச் சுற்றி இருப்பவர்களையூம் சுற்றிலும் நடக்கும் விடயங்களையூம் நல்லா அவதானிச்சியளென்றால் எல்லோராலும் நல்ல கதையளெல்லாம் நல்லா எழுதலாம்.

Edited by ampalathar

அம்பலம் அங்கிள் என்ன ஞாபகம் இருக்கோ.. :) (வயசு போன காலத்தில மறந்து போட்டியளோ தெரியாது)..எண்டாலும் தங்களின் "ஆசை!ஆசையாய்" கதையை வாசிக்க தான் விளங்கிச்சு ஊதுறது சரியான இலகு பிறகு அநுபவிக்கிறது பிரச்சினைகள் பல எண்டு.. :)

உதுக்காக நினைக்கிறதில்ல நான் ஊதுறனான் எண்டு..(எண்ட நண்பர்கள் எல்லாம் ஊதுறவை அல்லோ)..அவைக்கு ஒருக்கா ஊதினா தான் கணக்கியல் பாடத்தில ஒரு கணக்கு செய்ய முடியும் எண்டா பாருங்கோவன் :( அப்படி இருக்கு அவையின்ட நிலை உதை வாசிக்கும் போது நேக்கு அவையளின்ட ஞாபகம் தான் வந்தது பாருங்கோ.. :lol:

மற்றது அம்பலம் அங்கிள் நம்ம பசங்கள் இருக்கீனம் அல்லோ அவையளிள சில பேர் பெட்டைகளுக்கு படம் காட்டவும் ஊதுறவை பாவம் அவையளின்ட நிலைமை என்ன :lol: ..உதை எல்லாத்தையும் விட சில பேர் பொது இடங்களிள புகை பிடித்து கொண்டு இருப்பார்கள் அவர்களாள பெரிய தொல்லை..(ஏணேண்டா நேக்கு உந்த மணம் விருப்பமில்ல அது தான் பாருங்கோ).. :)

முந்தி நேக்கு ஒரு ஆசை இருந்தது தான் ஒருக்கா ஊதி பார்த்தா எப்படி இருக்கும் எண்டு.. :D (ஆனா ஊத பயம் யாரும் வீட்ட போட்டு கொடுத்தா உதை தான் விழும் எண்டு)..அதனால ஒரு மாதிரி தப்பிட்டன் உப்படியான ஆபத்தில இருந்து எண்டு நினைக்கிறன்.. :lol:

சரி அம்பலம் அங்கிள் நேக்கு இன்னொரு சோதனை வேற இருக்கு அதையும் முடித்து போட்டு ஆறுதலா கதைக்கிறன்..இப்ப போயிற்று வாரன் என்ன.. :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

"நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமாய் அம்பலத்தார்"

  • தொடங்கியவர்

அம்பலம் அங்கிள் என்ன ஞாபகம் இருக்கோ.. :) (வயசு போன காலத்தில மறந்து போட்டியளோ தெரியாது)..எண்டாலும் தங்களின் "ஆசை!ஆசையாய்" கதையை வாசிக்க தான் விளங்கிச்சு ஊதுறது சரியான இலகு பிறகு அநுபவிக்கிறது பிரச்சினைகள் பல எண்டு.. :lol:

மற்றது அம்பலம் அங்கிள் நம்ம பசங்கள் இருக்கீனம் அல்லோ அவையளிள சில பேர் பெட்டைகளுக்கு படம் காட்டவும் ஊதுறவை பாவம் அவையளின்ட நிலைமை என்ன :lol: ..உதை எல்லாத்தையும் விட சில பேர் பொது இடங்களிள புகை பிடித்து கொண்டு இருப்பார்கள் அவர்களாள பெரிய தொல்லை..(ஏணேண்டா நேக்கு உந்த மணம் விருப்பமில்ல அது தான் பாருங்கோ).. :lol:

சரி அம்பலம் அங்கிள் நேக்கு இன்னொரு சோதனை வேற இருக்கு அதையும் முடித்து போட்டு ஆறுதலா கதைக்கிறன்..இப்ப போயிற்று வாரன் என்ன.. :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்முக்குட்டியை அங்கிள் மறப்பனோ என்ன? செல்லத்தின்ரை குறும்புகளையெல்லாம் ஒழுங்காகக் கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறன். பத்துறவையளுக்குக் கிட்டப்போகாதையூங்கோ! பேபி பக்கத்தில இருப்பவர் பத்திறதாலை வாற பாதிப்புக்களை எங்கட நெடுக்ஸ் விவரமா எடுத்துவிட்டிருக்கிறார் படிச்சனிங்கள்தானே?

இப்படித்தான் பொம்பளையளுக்குப் படம் காட்ட வெளிக்கிட்டவை கனபேர் சீக்கிரமே சாமிப்படத்துக்குப் பக்கத்தில படத்தோட படமா படமாகி உக்கார்ந்த கதை எல்லாம் நிறைய இருக்கு கொஞ்சம் கொஞ்சமா எடுத்துவிடுறன்.

அம்பலத்தாரோட அரட்டையடிச்சுச் சோதனையைக் கோட்டைவிட்டிடாதை பிள்ளை அந்த அலுவலையூம் ஜோராக் கவனியூங்கோ.

"நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமாய் அம்பலத்தார்"

புத்தா! உமக்குத் தெரியாதோ என்ன நாளைக்கு என ஒத்திப்போடுவது என்பது சோம்பேறிகளதும் கோழைகளினதும் செயலென்று

கதையின் கரு நிச்சயம் சிந்திக்க வைக்கும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.