Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அப்பாவிகளைப் பலி வாங்கியமைக்கு அப்பாவிகள் மீது பழி தீர்க்கலாமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2008-06-12

அப்பாவிகளைப் பலி வாங்கியமைக்கு அப்பாவிகள் மீது பழி தீர்க்கலாமா?

கொழும்பிலும் தென்னிலங்கையிலும் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு "எல்லாளன் படை அணி' என்ற அமைப்பு உரிமை கோரியிருப்பதாக செய்தி ஏஜென்ஸிகள் சில தகவல்கள் வெளியிட்டிருக்கின்றன.

ஆழ ஊடுருவும் படையணியைப் பயன்படுத்தியும், விமானத் தாக்குதல்கள் மூலமாகவும் அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்வதற்குப் பதிலடியாகவே இந்தக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என அந்த "எல்லாளன் படை அணி' தெரிவித்திருக்கின்றதாம்.

இலங்கை இராணுவத் தரப்புக் கூறுவது போல "எல்லாளன் படை அணி' என்ற பெயரில் இந்தக் கைவரிசையைக் காட்டுவது விடுதலைப் புலிகள் அமைப்பாக இருக்கலாம். அல்லது அப்படி இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெறும் அப்பாவிகள் படுகொலைகளுக்குப் பதிலடியாகவே தென்னிலங்கையில் அப்பாவிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்ற நிலைப்பாடு உண்மையானால் அது பெரும் துரதிஷ்ட வசமானதாகும்.

ஓர் அப்பாவியின் படுகொலைக்காக இன்னொரு அப்பாவியைப் படுகொலை செய்யும் "கொலை கலாசாரம்' நாகரிக உலகில் எந்தக் கோட்பாட்டின் கீழும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே அல்ல. கடும் கண்டனத்துக்கும், ஆட்சேபத்துக்கும், விசனத்துக்கும், விமர்சனத்துக்கும் உரிய போக்கு இது.

ஆனாலும் கூட இந்தக் கொடூரப் போக்கு ஏற்படக் கூடிய சூழலை இங்கு வித்திட்டு உருவாக்கி வளர்த்த பின்புலத்தையும் இந்த இடத்தில் மறந்துவிட முடியாது.

இவ்வாறு பழிக்குப் பழி என்ற ரீதியில் அப்பாவிகளின் உயிரைக் காவு கொள்ளும் போக்கு எவ்வளவு தூரம் கண்டிக்கப்படுகின்றதோ, அதேயளவு தூரத்துக்கு இத்தகைய சூழலை உருவாக்கிக் கொடுத்த அகோரச் செயற்பாடுகளும் கண்டிக்கப்பட வேண்டும்.

அப்பாவித் தமிழர்கள் மீதான இனவஞ்சிப்புத் தாக்குதல்கள் என எல்லாளன் படை அணி வரிசைப்படுத்திப் பட்டியலிட்டிருக்கும் கொடூரங்கள், தமிழர் தாயகத்தில் தினசரி அரங்கேறி வரும் துன்பியல் நிகழ்வுகள்தாம். தெற்கில் மூடி மறைக்கப்படும் பரகசியங்கள் இவை.

இந்தக் கோர நிகழ்வுகளை ஒட்டிப் பின்வரும் அவதானிப்புகள் இந்தச் சமயத்தில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவையாகின்றன.

தென்னிலங்கையில் அப்பாவிகளுக்கு எதிராக நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்களின் கொடூரங்களையும், கோரங்களையும் அப்படியே படம் பிடித்துக் காட்டி உலகுக்கும் தென்னிலங்கைக்கும் மனதைத் தொட வைக்கும் விதத்தில் உருக்கமான செய்திகளை வெளியிடும் தென்னிலங்கை ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும், தமிழர் தாயகத்தில் அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் இதேபோன்ற கொடூரங்களை மூடி மறைத்து அமுக்கி விடுகின்றன.

அல்லது அவை எல்லாம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் என்று திரிப்பு வேலை செய்து சித்திரித்து ஒதுக்கி விடுகின்றன.

இத்தகைய போக்கு மூலம் தமிழர் தாயகத்தில் இடம்பெறும் மேற்படி கோரங்களையும் கொடூரங்களையும் சம்பந்தப்பட்டோர் தொடர்ந்தும் இழைப்பதற்கான நியாயப்பாட்டை உருவாக்கித் தரும் பெரும் தவறை சர்வதேச ஊடகங்களும், தென்னிலங்கை ஊடகங்களும் தொடர்ந்து இழைத்து வருகின்றன.

அதேபோலத்தான் ஐ.நாவிலிருந்து சாதாரண அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் வரை ஏன் சர்வதேச நாடுகள் கூட தென்னிலங்கையில் அப்பாவிகளுக்கு எதிராக இழைக்கப்படும் தாக்குதல்கள் தொடர்பில் காட்டும் தீவிர அதிருப்திப் போக்கையும் கண்டனப் பிரதிபலிப்பையும் தமிழர் தாயகத்தில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் இத்தகைய இனவன்முறை நாசவேலைகள் விடயத்தில் வெளிப்படுத்துவதில்லை.

இத்தகைய தரப்பினருக்கு இவ்வாறான பதிலடிகள் மூலமே உண்மையை வெளிப்படுத்தி உணர வைக்கலாம் என்ற தீர்மானத்துக்கு எல்லாளன் படை அணியோ அல்லது இராணுவத் தரப்புக் கூறுவது போல விடுதலைப் புலிகளோ செல்வதற்கான புறச்சூழலை ஏற்படுத்திக் கொடுத்துக் குற்றமிழைத்தவர்களாக தென்னிலங்கை ஊடகங்கள், சர்வதேச ஊடகங்கள் மற்றும் சர்வதேச தரப்புகள் அமைவது கண்கூடு. அத்தகைய விதத்தில் ஒரு பக்கச் சார்பாக அல்லது "ஒரு கண்ணில் வெண்ணெய், மறுகண்ணில் சுண்ணாம்பு' என்ற போக்கில் செயற்படும் தரப்புகளும் இந்நிலைமையை உருவாக்கித் தந்தமைக்காகக் கண்டிக்கப்பட்டேயாகவேண்டும்.

சரி. அரசும் அதன் படைத்தரப்பும் சொல்வது போல தென்னிலங்கையில் அப்பாவிகள் மீதான தாக்குதல்களுக்குப் "புலிப் பயங்கரவாதிகளே' காரணமாக இருக்கட்டும். அதேபோல வடக்கு கிழக்குத் தமிழர் தாயகத்தில் குறிப்பாக வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அப்பாவிகள் மீது இடம்பெறும் தாக்குதல்களுக்கும் அரசுக்குமோ, அரசுப் படைகளுக்குமோ எந்தத் தொடர்புமில்லை என்று கொழும்பு கூறுவதையும் ஒரு பேச்சுக்கு அப்படியே ஏற்றுக்கொள்வோம்.

அப்படியானால் கொழும்பிலும் தென்னிலங்கையின் பிற இடங்களிலும் அரசு குற்றம் சுமத்துவதுபோல புலிப்பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு "இன்று தாக்குதல்; நாளை நஷ்டஈடு' என்ற வேகத்தில் விரைந்து நிவாரணமளிக்கும் அரசு, தமிழர் தாயகத்தில் கொல்லப்படும் அப்பாவித் தமிழர்களுக்கு மட்டும் ஒரு சதம் தன்னும் நிவாரணம் காலம் தாழ்த்தியும் கூட வழங்காமல் அதைப்பற்றியே அலட்டிக் கொள்ளாமல் இருப்பது ஏன்? இவ்வாறு ஒருதலைப்பட்சமாக நடப்பதன் மூலம், இவ்விடயத்தில் அரசுத் தரப்பு சொல்லாமல் சொல்லும் செய்திதான் என்ன?

அதைப் புரிந்து கொள்ள முயல்வோமானால் தென்னிலங்கைக் கொடூரங்களுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் கருத்து நிலைப்பாடுகளை நாம் ஓரளவு புரிந்து கொண்டவர்களாவோம்.

http://www.uthayan.com/

அப்பாவிகளைப் பலி வாங்கியமைக்கு அப்பாவிகள் மீது பழி தீர்க்கலாமா?

தலைப்பை பார்த்தும் அட யாரது சாணக்கியதன்மாக தலைப்பை பொடொடு இருக்கிறார்ன்கல் என்று நினைத்தேன் ஆனால் இந்த வரிகள்..

இலங்கை இராணுவத் தரப்புக் கூறுவது போல "எல்லாளன் படை அணி' என்ற பெயரில் இந்தக் கைவரிசையைக் காட்டுவது விடுதலைப் புலிகள் அமைப்பாக இருக்கலாம். அல்லது அப்படி இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெறும் அப்பாவிகள் படுகொலைகளுக்குப் பதிலடியாகவே தென்னிலங்கையில் அப்பாவிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்ற நிலைப்பாடு உண்மையானால் அது பெரும் துரதிஷ்ட வசமானதாகும்.

ஓர் அப்பாவியின் படுகொலைக்காக இன்னொரு அப்பாவியைப் படுகொலை செய்யும் "கொலை கலாசாரம்' நாகரிக உலகில் எந்தக் கோட்பாட்டின் கீழும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே அல்ல. கடும் கண்டனத்துக்கும், ஆட்சேபத்துக்கும், விசனத்துக்கும், விமர்சனத்துக்கும் உரிய போக்கு இது.

ஆனாலும் கூட இந்தக் கொடூரப் போக்கு ஏற்படக் கூடிய சூழலை இங்கு வித்திட்டு உருவாக்கி வளர்த்த பின்புலத்தையும் இந்த இடத்தில் மறந்துவிட முடியாது.

இவ்வாறு பழிக்குப் பழி என்ற ரீதியில் அப்பாவிகளின் உயிரைக் காவு கொள்ளும் போக்கு எவ்வளவு தூரம் கண்டிக்கப்படுகின்றதோ, அதேயளவு தூரத்துக்கு இத்தகைய சூழலை உருவாக்கிக் கொடுத்த அகோரச் செயற்பாடுகளும் கண்டிக்கப்பட வேண்டும்.

அப்பாவித் தமிழர்கள் மீதான இனவஞ்சிப்புத் தாக்குதல்கள் என எல்லாளன் படை அணி வரிசைப்படுத்திப் பட்டியலிட்டிருக்கும் கொடூரங்கள், தமிழர் தாயகத்தில் தினசரி அரங்கேறி வரும் துன்பியல் நிகழ்வுகள்தாம். தெற்கில் மூடி மறைக்கப்படும் பரகசியங்கள் இவை.

இந்தக் கோர நிகழ்வுகளை ஒட்டிப் பின்வரும் அவதானிப்புகள் இந்தச் சமயத்தில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவையாகின்றன.

தென்னிலங்கையில் அப்பாவிகளுக்கு எதிராக நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்களின் கொடூரங்களையும், கோரங்களையும் அப்படியே படம் பிடித்துக் காட்டி உலகுக்கும் தென்னிலங்கைக்கும் மனதைத் தொட வைக்கும் விதத்தில் உருக்கமான செய்திகளை வெளியிடும் தென்னிலங்கை ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும், தமிழர் தாயகத்தில் அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் இதேபோன்ற கொடூரங்களை மூடி மறைத்து அமுக்கி விடுகின்றன

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன் படைக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எங்கின்றனர் புலிகள்.

புலிகள் நடத்தும் தாக்குதல்களை அதன் படைத்துறைப் பேச்சாளர் உறுதி செய்வார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்களுக்காக இன்னொரு இயக்கம் செயற்படுவது குறித்துக் கேட்டபோது.. அப்படிப் பல இயக்கங்கள் செயற்பட்டு வந்ததையும் புலிகள் அமைப்பே கட்டுக்கோப்பான பாரிய அமைப்பாக உள்ளது என்றும்.. எல்லாளன் படைக்கும் தமக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றும் புலிகள் கூறியுள்ளனர்.

அது மட்டுமன்றி பொதுமக்கள் தரப்பில் இழப்புக்கள் ஏற்படுவது கண்டிக்கத்தக்கன என்றும் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் பிபிசி/தமிழுக்கு வழங்கிய விரிவான செவ்வியை கீழுள்ள இணைப்பில் கேட்கலாம்.

இணைப்பு: http://www.bbc.co.uk/mediaselector/check/t...am=1&nbwm=1

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலில் ஹிஸ்புல்லாவோ ஹமாஸோ தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் கண்ணை மூடிக்கொண்டு எழுந்த மானமாக மக்கள் மீது பதில் தாக்குதல் மேற்கொள்கிறது..! 9/11 க்குப் பதிலடியாக அம்மெரிக்கா ஈராக்கில் பலரையும் கொன்றுவிட்டு, மக்கள் செத்திருந்தால் சொறி என்கிறார்கள். இங்கே மட்டும் ஏன் பாகுபாடு?

யார் இந்த தென்னிலங்கை மக்கள்? 84% பேர் புலிகளை அழிக்க வேண்டும் என்று விரும்பும் மக்களைக் கொண்ட ஒரு தொகுதியினர். இலங்கை அரசின் அட்டூழியங்களைக் கண்டும் காணாமலும் விட்டுவிடும் அப்பாவிகள். இலங்கை அரசின் போர் வெறிக்கு தங்களையே அடகு வைத்தி அரேபிய நாடுகளில் கூலிக்கு உழைத்து முண்டு கொடுப்பவர்கள். இவர்களை யாராவது தாக்கினால் நாம் என்ன அழவா முடியும்? :unsure:

வன்னியில் நடக்கும் அரசின் கிளைமோர் தாக்குதல்களுக்கு சர்வதேசமோ சிங்கள மக்களோ கண்டும் காணாமல் இருந்தால், நாமென்ன செத்துக்கொண்டேயா இருப்பது? இலங்கைப் பயங்கரவாத அரசு செய்வதையெல்லாம் செய்துவிட்டு நாமறியோம் பராபரமே என்றால் மற்றவர்களால் அந்த அவலத்தை திருப்பித் தர முடியாதா? :unsure:

பொதுவாக பொது மக்களின் இழப்புக்கள் கண்டிக்க படுகின்றன. ஆனால் சிங்கள மக்களின் இனவெறியை மாற்றி பிச்சை வேண்டாம் நாயைபிடி நிலைமைக்கு கொண்டு செல்லுமாக இருந்தால், சிங்களவர் மீதான தாக்குதல்கள் நல்ல விடயமாகும். தற்காப்பு என்பது தடுப்பது மட்டும் அல்ல திருப்பி தாக்குவதும்தான்.

தமிழ்மக்களின் விடிவை கருத்தில் கொண்டு செயல்படும் எல்லாளன் படைக்கு ஆதரவு வளங்க வேண்டியது தமிழர்களின் கடமை. எல்லாளன் படை பற்றி பெரிய அளவில் பிரச்சார படுத்த பட்டு சிங்களவர்கள் மத்தியில் அவர்கள் நோக்கம் தெளிவாக்க பட வேண்டும்.

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றிய இன்ஸ்பெக்டர் மார் வாற நேரம் பாத்து நாங்கள் பயங்கரவாதத்தால பாதிக்கப் பட்டிருக்கிறம் எண்டு காட்ட அரசே தன்ர கூலிகள வைச்சுக் குண்டு வெடிப்ப நடத்துதெண்டும் ஒரு ஊகம் இருக்குது. அதுவும் மெய்யா இருக்க வாய்ப்பிருக்கு. கடத்தல் காரரையே பிடிக்க ஏலாமல் இருக்கேக்க குண்டு வைக்கிறவைய எப்படித் தான் பிடிப்பினம்? மற்றப் பக்கம், சர்வதேசத்துக்காக இவ்வளவு பொறுமை காக்கிற புலிகள் இப்படிச் சில்லறை விஷயங்கள் செய்யப் போய் கெட்ட பேர் வாங்க விரும்புவினம் என்றது நம்பக் கஷ்டமாயிருக்கு. யார் வைக்கினம் என்டுறது வெளிக்கப் போறதில்ல. ஆனா யார் வைச்சாலும் தமிழன் கஷ்டப் படும் வரை சிங்களவருக்கும் கெடுதி தான் என்கிற உண்மை மட்டுமே நிரூபணமாகுது.

அடியைப்போல அண்ணன் தம்பி உதவாது

இதுதான் இலங்கையின் பாடம், வரலாறு எல்லாமே.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு நல்வாழ்வையும் கௌரவமான சுதந்திரத்தையும் பெற்றுத்தரும் எந்த ஒரு போராட்டமுறையையும் ஆதரிக்க நான் தயார்.

இதில் விடயம் என்னவென்றால் உலக வழக்கித்திற்காக சிலவற்றை வெளிப்படையாகவும் சிலவற்றை உள்ளார்ந்தமாயும் செய்யவேண்டியுள்ளது.

உலகிலே உயர்வான போர் தர்மங்களையும் கலாசாரத்தையும் கொண்டது நமது தமிழ் பண்பாடு ஆகையால் மற்றவர்கள் சொல்லித்தான் அது எமக்கு தெரியவேண்டுமென்பதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றிய இன்ஸ்பெக்டர் மார் வாற நேரம் பாத்து நாங்கள் பயங்கரவாதத்தால பாதிக்கப் பட்டிருக்கிறம் எண்டு காட்ட அரசே தன்ர கூலிகள வைச்சுக் குண்டு வெடிப்ப நடத்துதெண்டும் ஒரு ஊகம் இருக்குது. அதுவும் மெய்யா இருக்க வாய்ப்பிருக்கு. கடத்தல் காரரையே பிடிக்க ஏலாமல் இருக்கேக்க குண்டு வைக்கிறவைய எப்படித் தான் பிடிப்பினம்? மற்றப் பக்கம், சர்வதேசத்துக்காக இவ்வளவு பொறுமை காக்கிற புலிகள் இப்படிச் சில்லறை விஷயங்கள் செய்யப் போய் கெட்ட பேர் வாங்க விரும்புவினம் என்றது நம்பக் கஷ்டமாயிருக்கு. யார் வைக்கினம் என்டுறது வெளிக்கப் போறதில்ல. ஆனா யார் வைச்சாலும் தமிழன் கஷ்டப் படும் வரை சிங்களவருக்கும் கெடுதி தான் என்கிற உண்மை மட்டுமே நிரூபணமாகுது.

சண்டை தொடர்வதினால் நன்மைபெறும் சில சக்திகளும் இக்குண்டு வெடிப்புகளுக்கு காரணமாகவும் இருக்கலாம். தன்னைச்சுற்றி வர உள்ள நாடுகளில் எதாவது பிரச்சனை இருந்தால் வெளினாட்டு முதலீடுகள் தனது நாட்டுக்கு மட்டுமே வரும். இதனால் பொருளாதரத்தில் மேலும் மேலும் வளரமுடியும் என வல்லரசாக வரத்துடிக்கும் அண்டை நாடும் இக்குண்டு வெடிப்புகளில் சிலவேளைகளில் தொடர்பு இருக்கலாம்.

ஆரென்ன சொன்னாஎன்ன... தமிழனுக்கு அடிச்சா கேக்க ஆளில்லையெண்டு நினைச்சு அடிச்சு உதைச்சு அழிக்க வெளிக்கிட்டவங்கள்...

காட்டினில் வெட்டி விழுத்தின மரம் மாதிரி எங்கட சனத்தை கொன்று குவித்தவங்கள்... அதை தடுப்பதற்கு யாருக்கும் நாதியில்லை.. கேக்கிறதுக்கு யாருமில்லை... கணீர்விட நாதியில்லை.

உதிலேருந்து தப்பவேணுமெண்டா திருப்பி அடிச்சாத்தான் தப்பலாம்... முறை தலை தெரியாமல் செய்தா அதுதான் மருந்து....

இது போலி எல்லாளன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.