Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தசாவாதாரம் தமிழ் படம் அல்ல

Featured Replies

chaos theory ஒன்று உள்ளது. butter fly effect இனை விளக்கி எவ்வாறு சிறு நிகழ்வு தொடர் விளைவுகளினால் ஒரு பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.என்பது..படத்

Edited by matharasi

கமலுக்கு மலர் செண்டு.

தாயாரிப்பாளருக்கு மலர் வளையம்.

  • தொடங்கியவர்

கமலுக்கு மலர் செண்டு.

தாயாரிப்பாளருக்கு மலர் வளையம்.

பொன்னி சார் ...என்னங்க இப்படி சொல்லிட்டீங்க...

தசவதாரம் வசூல் நூறு கோடி

உலகிலேயே பத்து வேடங்களில் ஒரே நடிகர் நடித்த முதல் படம் என்ற வகையில் தசாவதாரம் ஏற்கனவே உலகசாதனை புரிந்திருக்கிறது. சர்வதேச சினிமா சந்தையில் இப்படத்தின் ஓபனிங் வசூல் மற்றொரு உலகசாதனையை புரிந்திருக்கிறது. இதுவரை தமிழ் சினிமா எதுவும் பெற்றிராத மிகப்பெரிய வரவேற்பு தசாவதாரம் திரைப்படத்துக்கு கிடைத்திருக்கிறது. படம் ஒரே வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 21 கோடி வசூலித்திருக்கிறது. சென்னை மாநகரில் மட்டும் ஒருவார வசூல் மூன்று கோடியை எட்டிப் பிடித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக தசாவதாரம் உலக அளவில் முதல் ஒரு வாரத்திலேயே நூறு கோடி ரூபாயை வசூல் ரீதியாக சம்பாதிக்கும் என்றும் எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

சென்னை மாநகரில் 17 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட தசாவதாரம் முதல் மூன்று நாட்களிலேயே கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் (சரியாக 97 லட்சத்து ஐம்பது ஐந்து ஆயிரத்து முன்னூற்றி தொண்ணூற்றி ஏழு ரூபாய்) வசூலித்து கோலிவுட், பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என்று எல்லாத் தரப்பு சினிமா வட்டாரத்தையும் மூக்கில் விரல் வைக்க செய்திருக்கிறது. சென்னை மாநகராட்சி இப்படத்துக்கு சிறப்பு அனுமதியாக ஒவ்வொரு தியேட்டரிலும் வாரநாட்களிலும் கூட ஐந்து காட்சிகள் நடத்திக்கொள்ள அனுமதி தந்திருக்கிறது. தமிழ் படங்களுக்கு அதிக வசூலை வாரித்தரும் மதுரை, கோவை சினிமா மாவட்டங்களிலும் இதே நிலைமை. இன்னமும் அதிக பிரிண்டுகள் போட்டு அதிக திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர் தரப்பு யோசித்து வருகிறது.

தெலுங்கில் வெளியிடப்பட்ட தசாவதாரம் திரைப்படம் ஹைதராபாத் நகரில் 25 பெரிய திரையரங்குகளில் 34 திரைகளில் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடி ஓபனிங் வசூலில் சாதனை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திராவின் நிஜாம் சினிமா ஏரியாவுக்கு மட்டுமே 45 பிரிண்டுகள் போடப்பட்டு வெளியாகியிருக்கிறது. கேரளாவிலும் 50 தியேட்டர்களில் தசாவதாரம் வெளியாகி அரங்குநிறைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்துக்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பை விட அயல்நாடுகளில் அபார வரவேற்பு கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் ஐம்பது நகரங்களில் வெளியிடப்பட்ட தசாவதாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த தென்னிந்தியப் படமும் அங்கே பெறாத வரவேற்பு இது. அமெரிக்காவில் தமிழில் வெளியிடப்பட்டதை விட தெலுங்கில் வெளியிடப்பட்ட தசாவதாரத்துக்கு கூட்டம் அலைமோதுகிறது. அமெரிக்க அதிபர் ஜார்ஷ் புஷ் வேடத்தில் கமலை காண்பதற்காக அமெரிக்கர்களும் தசாவதாரம் திரைப்படத்தை காண ஆவலோடு திரையரங்குக்கு வருகிறார்கள். ஆங்கிலத்தில் சப் டைட்டில் போடப்பட்டு அமெரிக்காவில் பல தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படுகிறது.

மலேசியாவில் 58 தியேட்டர்களில் வெளியான தசாவதாரம் முதல் வாரத்தில் 6 லட்சம் டாலர்களை வசூலித்திருக்கிறது. பிரிட்டனில் மிகக்குறைவான திரைகளில் வெளியிடப்பட்டிருந்தாலும், வெளியிடப்பட்ட முதல் மூன்று நாட்களில் இரண்டரை லட்சம் டாலர் வசூலித்திருக்கிறது. கனடாவில் வால்ட் டிஸ்னி நிறுவனம் இப்படத்தை வினியோகித்திருக்கிறது. முதல் தடவையாக தமிழ்படத்தை வாங்கி வெளியிட்டிருக்கும் வால்ட் டிஸ்னி நிறுவனம் படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை கண்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.

நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளுக்காக டைம் ஸ்கொயர் தியேட்டரில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அமெரிக்க பத்திரிகையாளர்களும் படத்தை ஐநா அதிகாரிகளோடு கண்டு ரசித்துப் பாராட்டியிருக்கிறார்கள். அமெரிக்காவில் இப்படத்தை வெளியிட்டிருக்கும் நர்மதா டிராவல்ஸ் நிறுவனத்தார் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.

படம் வெளியிடப்பட்டதுமே நிறைய எதிர்மறை விமர்சனங்களையும் கமல்ஹாசன் சந்தித்தார். இந்தப்படத்தின் வசூல் விமர்சகர்களின் வாயை அடைக்கும், இப்படம் குறித்து இனி எதுவும் பேசமாட்டேன் என்று கமல் அப்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

vi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கமலுக்கு மலர் செண்டு.

தாயாரிப்பாளருக்கு மலர் வளையம்.

இந்த கூற்றை எழுதிய தமிழ்சினிமா.கொம் அஜித்துக்கு வால்பிடிக்கும் ஒரு மூன்றாம்தர இணையமாகும். பலராலும் பாராட்டப்படும் தசாவதாரம் பலருக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றுதான் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்தேன். கமலின் உழைப்பை நடிப்பை அர்ப்பணிப்பைக் கண்டு வியந்தேன், எப்படித்தான் ஒற்றைவரியில் 'படம் சரியில்லை என்று விமர்சிக்க முடிகிறதோ தெரியவில்லை.

ஒப்பனைக்காக மட்டுமல்ல அந்தக் கதாபாத்திரமாகவே மாறி பேச்சு, அசைவுகள் என்று ஒவ்வொன்றிலும் அவர் கொடுத்துள்ள வித்தியாசம் "உலகநாயகன்" என்று நிமிர்ந்து சொல்லலாம். தமிழுக்கும் கூட முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார் கமல். படம் ஓட வேண்டும் ஜப்பானிலும் என்கின்ற வியாபார உக்தி தெரிந்தாலும் கமலின் நடிப்புக்குத் தலைவணங்கியே ஆகவேண்டும். படம் தொடங்கிய கட்டத்திலிருந்து வேறு எந்தத் திசையிலும் கவனம் சிதறாது ஒன்றிப்போக வைத்தது இது என்னுடைய கருத்து.

'கடவுள் இல்லை என்று நான் சொல்லவே இல்லையே இருந்தா நல்லா இருக்குமே என்று சொன்னார் பாருங்கள்' ' நச்"...என்று இருந்தது.

சுனாமி ஏற்படுவதற்கு இப்படிக்கூட ஒரு காரணம் இருக்குமோ என்று சிந்தித்து அதற்கேற்ப தசா அவதாரங்களையும் கொண்டு வந்து கலந்து சிறப்பித்திருக்கும் கதைக்கு கமலுக்குப் பாராட்டு.

அன்பே சிவம்' என்ற படத்தில் சொன்னது போல் முதலில் மனிதனை மதியுங்கள் மனிதத்தைப் போற்றுங்கள் என்று சொல்கின்றார்.

காட்சி அமைப்பு கன கச்சிதம்.

வாழ்த்துகள் கமல்.....

தசாவதாரம்...."முதல் தரம்"....

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் சிவாஜி மாதிரி இல்லை. ரஜனி ரஜினிதான். உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு. தமிள் வாள்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10 வேடங்களில் கமல் நடிக்க, 70 கோடி செலவில் ஹாலிவுட்டுக்குச் சவால் விடும் வகையில் வந்திருக்கிறது தசாவதாரம். முதல் காட்சியே பிரமிக்க வைக்கிறது. சென்னையிலிருந்து கடலைப் பார்த்திருக்கிறோம். கடலிலிருந்து சென்னையை பார்த்திருக்கிறோமோ? கடலிலிருந்து மேலாகப் பறந்து வந்து கழுகு பார்வையில் சென்னையைப் பார்ப்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசு. அத்துடன் நிற்காமல் அந்தப் பார்வை அப்படியே கடந்து போய் சோழர்கால சிவ வைஷ்ணவ பிரச்சனையின் நடுவே சென்று நிற்பது அதைவிட புதுசு.

படத்தின்ரை செலவு எழுபது கோடிக்கு மேலையாம் :o அப்புடியெண்டால் கமல் அசினுக்கு சமைச்சுக்கொண்டுவந்து குடுத்த றால்கறி :wub: கணக்கும் எழுபது கோடிக்குள்ளைதான் அடங்குமோ :lol:

2pq9ic3.jpg

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் இருந்தாலும் சிவாஜி மாதிரி இல்லை. ரஜனி ரஜினிதான். உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு. தமிள் வாள்க.

கேவலம்!

Edited by Tigerblade

சினிமா என்று வந்தால் சீமானும் ஒன்று தான் ரஜனியும் கமலும் ஒன்று தான் ....

சீமான் போராட்டத்துக்கும் தமிழ்ணர்வாளர் என்றதுகும் அவரின் படமும் அவர் நடிக்க வைத்த அனைத்து நடிகரும் எப்படி தொடர்பு இல்லையோ அதே போல் கமலுக்கும் ரஜனிக்கும் பொருந்தும் இது ஏற்றுக்கொள்ள கஷ்டம் தான் ஆனால் உண்மை..................

இந்த கூற்றை எழுதிய தமிழ்சினிமா.கொம் அஜித்துக்கு வால்பிடிக்கும் ஒரு மூன்றாம்தர இணையமாகும். பலராலும் பாராட்டப்படும் தசாவதாரம் பலருக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கிறது.

யார் எழுதிகிறது முக்கியம் இல்லை அமூது அப்பு, அதில் இருக்கிற நளினம், நக்கல் தான் முக்கியம். நாலே சொல்லில , கலக்கிட்டார் எல்லே.

உண்மையில் இந்தியாவில் ரஜனியின் சிவாஜியும் கமலின் தசாவாதராரமும் எதிர்பார்த்த லாபம் இல்லை. புலம்பெயர் நாடுகளில் எதிர்பார்த்தைவிட பல மடங்கு லாபமாம். காரணம் நாம்தான. ஈழத்தமிழர் இளிச்ச வாயர்கள் என்பதை இந்தியா மட்டுமல்ல இந்திய சினிமாவும் நன்றாகவும் புரிந்துகொண்டுள்ளது. நாம் எப்போதுதான் திருந்தப்போகின்றமோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் கதை என்று எதுவுமில்லை. கமலின் 10 வேடங்களைக் காட்டுவதற்கென்றே எடுக்கப்பட்ட படம். கமல் தூள் கிளப்பியிருக்கிறார் ஆனால் கதையில் நாரடித்து விட்டார். நாயகன், குணா, மகாநதி, தேவர்மகன், சலங்கை ஒலி தந்த கமல் எங்கே இந்தத் தசாவதாரம் தந்த கமல் எங்கே ?????

சுத்த மசாலாப் படம். அதற்காக ரஜனி என்ற கூத்தாடியை கமலுடன் ஒப்பிட்டு எழுதுவதை எல்லாம் ஏற்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழமையான புளிச்சுப் போன கதை. ஏதொ கையில் கிடக்கின்ற ஒரு சாமானை, ஆபத்தான சாமான் ஒன்றைக் கண்டபாடிட்டிற்கு எறிந்து விளையாடுகின்றார்களாம். வில்லனும், 100 கோடிப்பேரில் கமலை இனம் கண்டு துரத்துகின்றாராம். எத்தனை காலத்துக்கு 2 வேடம், 3 வேடம் காட்சிகளில் மக்களை ஏமாற்றப் போகின்றார்களாம்.

12ம் நூற்றாண்டு விஸ்ணுக்கதையோடு, இப்போது நடந்ததற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. வேண்டும் என்று இணைக்கப்பட்டது போலத் தோன்றுகின்றது. சுனாமி என்பது ஆழ்கடலில் இருக்கின்றதை இடம்பெயர்க்கும் சக்தி உள்ளது போரக் காட்டுவது மிகவும் வேடிக்கையானது மட்டுமல்ல, அடிப்படை அறிவே இல்லை என்பது போலத் தான் தோன்றுகின்றது. மக்கள் நகர்த்துவதற்குக் கஸ்டப்படும் கல் ஒன்றை, அதுவும் ஆழ்கடலில் உள்ள கல்லை சுனாமி இடம்பெயர்த்து கரையில் போடுகின்றதாம்...

இப்போது எல்லாம் பச்சைப் பின்ணனியை வைத்துப் படம் எடுப்பது கஸ்டமானது அல்ல. ஸ்பைடர் மான் என்ற படத்தையே ஒரு வீட்டிற்குள் வைத்து இலகுவாக எடுத்து முடித்திருக்கின்றபோது கமலின் திறமை, புகழ் என வெறும்வாய் மெல்லாதீர்கள்..

அண்ணை நீங்கள் பத்து டொலர் வீணாப்போய்விட்டதென்று கவலைப் படுறியள்.

அந்த பத்து டொலருடன் மூன்று மணிநேரமும் வீணாய் போய்விட்டதே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கமலின் இந்தப்படம் தமிழ்படமே இல்லைத் தான். பார்த்த யாராவது சொல்லுங்கள். இப்படத்தில் எத்தனைவீதம் தமிழ் பேசுன்றார்கள். ஆமெரிக்கா, வெள்ளையர்கள் எல்லாம் ஆங்கிலம், ரோவில் இருக்கின்ற கமல் தெலுங்கு, அக்ரகாரம் போனால் சமஸ்கிருதம் கலந்த பாதித்தமிழ்... இந்த இலட்சணத்தில் இதைப் போய்த் தமிழ்ப்படம் என்றால் ஏற்கலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் படத்துக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகையென்றார்கள். அந்தச் சலுகையைப் பயன்படுத்தி தமிழ்ப்பெயரில் (தசாவதாரம்- இது வட மொழியும் கூட) இங்கிலீஸிலும் தெலுங்கிலும் பஞ்சாபியிலும் இந்தியிலும் பேசிப் படமெடுத்திருக்கிறார்கள். ஜப்பான் பாசையும் வருகின்றது.

கலைஞரின் தமிழ்ப் பெயர்த்திட்டம் பிள்ளையார் பிடிக்கப்போக அது குரங்காகிய கதையாகிவிட்டது. தமிழ்நாடு அரசின் படத்துறைப் பிரிவு நன்றாக ஏமாற்றப்பட்டுள்ளது.

இனிமேல் வரப்போகும் படங்களெல்லாம் தமிழ்ப் பெயரில் பிறமொழிபேசும் படங்களாகவே இருக்கப்போகின்றன.

தமிழ்நாடு அரசு அணிலேறவிட்ட நாய்போல வாயைப் பிளந்துகொண்டு நிற்கவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

Dasavatharam, தசாவதாரம்: FAQ - வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்

படம் பெயர் என்ன? தசாவதாரம்

என்று பிறந்த நாள்? ஜூன் 12, 2008, வியாழன்

எத்தனை மணி நேரம்? மூன்று மணி 15 நிமிடங்கள் அல்லது 166 மணித்துளிகள்

என்ன வகை? மசாலா (சண்டை + காமெடி - டிராமா - காதல்)

குழந்தைகளுக்கு உகந்ததா? நடு விரலும், ‘ஷிட்’ பிரயோகங்களும், மல்லிகாவின் லேப் டான்சும், கழுத்தை அறுக்கும் கொலையும், கழுத்தில் குத்தும் கொலையும் உண்டு என்பதால் பதின்ம வயதினருக்கு மேல் பொருத்தமானது. ஆனால், ‘வேட்டையாடு… விளையாடு’ அளவு வன்முறை கிடையாது.

பெரியவர்களுக்குப் பிடிக்குமா? நிச்சயம் பிடிக்கும்

உலகில் யாருமே ஒரே படத்தில் பத்துக்கு மேல் வேடம் தரித்ததில்லையா? எட்டி மர்ஃபி மட்டுமே ஞாபகம் வந்தாலும், 1913- இலேயே 27 வேடம் கட்டியவர் இருந்திருக்கிறார்.

இரட்டை வேட அசின் எப்படி? விஜய் படத்திலேயே இதை விட பெட்டர் ரோல் கிடைக்கும் என்னும் மறக்கக்கூடிய நிலை.

அப்படியானால், மல்லிகா ஷெராவத்? சடாரென்று வந்து அரங்க ஆட்டத்திற்குரிய சாமுத்ரிகா லட்சணங்களைக் காட்டி. ஒய்யார நடை பயின்று இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் கமல் இருட்டடிக்கப் படுவார் என்பதாக துள்ளுகிறார்.

அமெரிக்காவை விட்டு வெளியேற ‘டிபார்ட்மென்ட் ஆஃப் ஹோம்லான்ட் செக்யூரிட்டி’ செல்ல வேண்டுமா? விசாவில் வந்தாலும் சரி; பச்சை அட்டை வைத்திருந்தாலும் சரி; குடிமகனாக இருந்தாலும் சரி. தேவையில்லை. ஆனால், மல்லிகா ஷெராவத்துக்கு (ஜாஸ்மின் கதாபாத்திரம்) க்யூவில் நிற்கிறாள். புதிதாக கமல்ஹாசன் (அதாவது, ஜார்ஜ் புஷ் குணச்சித்திரம்) உருவாக்கி இருக்கலாம்.

லாஜிக்? மூளைக்கு வேலை உண்டா? படம் பார்த்து களிக்க சிரமப்படத் தேவையில்லை. விஜய்காந்த், விஜய் போன்றவர்கள் நாயகர்களாக வரும் சினிமா போலவே இதுவும் ஜாலியாக ரசிக்க வேண்டியது.

அப்படியானால் ‘வண்ணாத்திப்பூச்சி விளைவு’ & ‘கசாகூளக் கோட்பாடு’ எல்லாம்?

திரைப்படத்தின் இசை, பாடல்கள்? வெளியாகுவதற்கு முன்பு ‘உலக நாயகனே’ & ‘கல்லை மட்டும் கண்டால்’ ரசித்தது. படத்தில் மல்லிகா ஷெராவத்தின் காபரே தவிர எந்தப் பாட்டுமே ஒட்டவில்லை. குறிப்பாக, அலகிட்டு அந்தரத்தில் தொங்கும்போது அரற்றத்தான் இயலுமே தவிர வாயசைக்க கூட முடியாது என்பது போல் உறுத்தலான இடையூறுகள்.

எத்தனை பாடல் ஒட்டுமாங்கனிகள்? ‘கல்லை மட்டும் கண்டால்’ குறித்து ஏற்கனவே பலர் சொல்லிவிட்டார்கள். படத்தின் இறுதியில் வரும் ‘உலக நாயகனே’ கூட ‘தில் மாங்கே மோர்’ ஹிந்திப்படத்திற்காக ஹிமேஷ் ரேஷமையா ஏற்கனவே இட்டதை திருப்பி சுட்டதுதான். தசாவதாரத்தில் பாடல்களே தேவையில்லை என்பது வேறு விஷயம்.

சரி… எங்கே உருப்படியான விமர்சனம்? பிரசன்னா :: நிழல்கள்: தசாவதாரம் - ஒட்டாத முகங்கள்

அந்த பத்து பெருமாள் அவதாரங்களுக்கும் கமல் வரும் தோற்றங்களுக்கும் ஆன தொடர்பு? புருனோ :: பயணங்கள்: மகாவிஷ்னுவின் பத்து வேடங்களும் - ஒப்பீடு / ஒற்றுமை / வேற்றுமை

டி20 ஆட்டம் தொலைக்காட்சியில் காட்டுறாங்க; டி10 போக கூப்பிடுறாங்க! என்ன செய்யலாம்? டி20 பாருங்க. கடைசி ஒவர் வரைக்கும் விறுவிறுப்பாக இருக்கும். யாரு மேட்ச் - ஃபிக்சிங் செஞ்சிருப்பாங்கன்னு தெரியாது. இங்கே கமல் சாகமாட்டார் என்பது கோலிவுட் நியதி.

அந்த முதல் பதினைந்து நிமிடம்? ‘பள்ளிகளில் நாடகம் நடத்தும் போது கடல் காட்சி இருந்தால் நீல நிற புடவையை ஆட்டி கடல் உணர்வை ஏற்படுத்துவார்கள்‘ என்று மாதவன் சொல்வது போல்; சீரீயஸ் காட்சிகளில் கமல் அழுது காமெடியாக்குவது போல் பல்லிளித்திருக்கிறது.

அப்படியானால் கிராஃபிக்ஸ்? தீவிரவாத குண்டுவெடிப்பு நடக்காமல் தடுப்பதில்தான் ‘உளவுத்துறை’யின் சூட்சுமம் என்பதாக கலக்கல் மேக்கப், சூப்பர் கிராஃபிக்ஸ் என்று சிலாகிக்காமல் இருப்பதில்தான் அந்தந்தத் துறையின் வெற்றி இருக்கிறது. பல்ராம் நாயுடுவும் கோயிந்துவும் பேசும் காட்சிகளில் கண்ணாடி பிரதிபலிப்பு, இறுதிச் சண்டை என்று பல இடங்களில் இருப்பதே தெரியல.

பத்தில் ஒட்டாதது எவர்? ஹீரோயிச கோவிந்த் இராமசாமி

பத்தில் நம்பமுடியாதவர் எவர்? ரொம்பவே அப்பாவியாக விபத்தை உண்டாக்கியவர் எவர் என்று கூட பார்க்காத கலிபுல்லா கான்

வெறுப்பேற்றுபவர்? ‘செத்துத் தொலையேண்டா’ என்று அவஸ்தைப்பட்டு, தமிழ் பேசத் தெரியாதது போல் சரளமாக அளவளாவும் அவ்தார் சிங்

தோற்றத்தில் பின்னி பெடலெடுப்பவர்? ஜப்பானியர். நடை, உடை, சண்டை எல்லாம் தூள். ஆங்கிலம் & தமிழ் பேசும் இடங்களில் மட்டுமே கமல் தலைதூக்குகிறார். மற்ற இடங்களில் ஏதோ ஒரு சப்பானிய வீரர் மட்டுமே இருக்கிறார்.

அசத்தல் மன்னர்? க்றிஸ்டியன் ஃப்ளெட்சர். கமல் எட்டிக் கூட பார்க்காமல் தூர நிற்கும் அமெரிக்க டாலருக்கு டஜன் கொலைகாரர்.

படம் பொலிடிகலி கரெக்டா? இறை மறுப்பாளர்களும் குற்றம் காண்கிறார்கள். நம்பிக்கையாளர்களும் ‘சூ’ கொட்டுகிறார்கள். அப்படியானால் நிச்சயம் ‘pc’.

சின்னத் திரையில் வரும்வரை காத்திருக்கலாமா? வேண்டாம். அத்தனை விளம்பரங்களுக்கு, கலைஞர் தொலைக்காட்சியில் கீழே ஓடும் துணுக்குகளுக்கு நடுவே பார்ப்பது தண்டனை. எனினும், குறுவட்டு வரும் வரை காத்திருக்கவும். அவசியம் 70 எம்.எம்.மில் பார்க்கும் நிர்ப்பந்திக்கத்தக்க பிரும்மாண்டம் இல்லை என்றாலும், வெள்ளித்திரையில் பார்த்தால் கொட்டாவி வராது.

படம் பார்ப்பதற்கு முன் காபியா? ஜாக் டேனியல்ஸ் சிறந்ததா? காது குளிக்குமளவு வசனமழை பொழிவதால் காபி சிறந்தது; ஆனால், அதன் மூலம் மூளை சுறுசுறுப்படைந்து ஓட்டைகள் விகாரமாகும் என்பதால் ஒரு பெக் ஜாக் டேனியல்ஸ் உகந்தது. சுருக்கமாக ஜாக் டேனியல்ஸ் அடித்துப் போனால் அவ்தார் சிங் அழும்போது சிரிக்கலாம்; காப்பி அடித்துப் போனால் அடுத்த கேள்விக்கான பதில் வரும்.

படத்தில் கமல் தவிர குறிப்பிடத்தகுந்தவர்? அலுவல் சகாவாக வந்து கோவிந்தை வீட்டில் வைத்துக் காட்டிக் கொடுக்கும் சுரேஷ். கை கால் ஆட்டி, முகத்தில் அஷ்ட கோணல்களையும் கொணர்ந்து சிறந்த மேடை நாடகத்திற்கான கூறுகளை விளக்கியிருக்கிறார்.

இந்த மாதிரி பதிவுகளை ‘திரைப்படங்கள் வந்ததுமே இணையத்தில் அவற்றை நாராகக் கிழிப்பவர்கள் எழுதுவது எனக்குப் பெரும்பாலும் புரிவதில்லை’ என்றிருக்கிறாரே ஜெயமோகன்? எனக்கு தமிழ் இலக்கிய விருதுகள் குறித்த ஞானம் மிக மிகக் குறைவு.

ஞானக்குழந்தை தெரிகிறதா? தெரிகிறது

அசின் தொப்புள்?

வசனம்? நிறைய

கதை? அது எதற்கு

மொத்தத்தில்? ட்விட்டரில் கதைத்ததுதான்

http://snapjudge.wordpress.com/2008/06/23/...ae%95%e0%af%87/

நான் கமரா டீவீடியில் பார்த்தேன். கமல் படத்தில் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் இது தமிழ் படம் இல்லை ஆங்கிலப்படம் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.