Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்கத்தெரியவில்லை ........

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மறக்கத்தெரியவில்லை ........

உயிரே உயிரே ஏன் மறந்தாய் எனை ?

உறவுகள்தான் சொந்தமில்லை நீயும் இல்லையா எனக்கு?

உன்னுடன் பேசாவிட்டால் நான் ஊமையடி

உன்னை பார்க்காத கண்களும் குருடே எனக்கு

ஆலையில் இட்டவை அழியாமல் வந்திடுமோ ?

காதலில் விழுந்த மனம் காயமில்லாமல் போய்விடுமோ ?

காவியக் காதலது காதலே கேட்டது

கண்டதும் காதலது அனுபவித்துப் பார்த்தது

என் உயிரது மூச்சினிலே இருக்குமென்றால்

மூச்சது உன் பேச்சினிலே இருக்குதடி

மௌனம்தான் உன் பதிலா எனக்கு

மரணமே அதற்கு பரிசு எனக்கு

உன் பேச்சு கூட்டியது என் ஆயுளை

இப்போது உன் மௌனம் கொல்கிறது என் ஆயுளை

போகின்றாயே எனை விட்டு நெடுந்தூரம்

போய்விட்டது என் மனம் அத்தூரம்

பிடிவாதம் மறைக்கின்றதா உன் கண்ணை

பிடித்த வாதமும் மறந்துவிட்டாயே இந்நேரம்

பிரிந்திருந்தால் காதல் கூடுமாம் இவ்வுலகில்

ஆனால் பிரிவுதான் பிரித்தோ நம் காதலை

எனக்கொரு மனைவி நீதான்

ஆனால் நீ தான் யோசிக்கின்றாய் நான் உன் காதலான என்று

முடிவான முடிவதுவை கண்டுவிட்டாயா

ஆறறில் போட்டாலும் அளந்து போடு பழமொழி

ஆனால் எனக்குத்தான் அன்பை அளந்து போடத் தெரியவில்லைய ? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை... உங்க வரிகள் ரெம்பக் கணக்கிறது. காதல் என்று வந்துவிட்டால்.. பிரிவும் வரத்தான் அண்ணோய் செய்யுது.

யாழில் முதலடி.. சுப்பரா இருக்கு சுப்பண்ணை..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கவிதை அழகு.

காதல், பிரிவு, இன்பம்,துன்பம் எல்லாம் வாழ்க்கையில சகஜம்.

பொண்ணுங்களே இப்படித்தாங்க காதல் என்பாங்கள் பிறகு காலை வாரிடுவாங்கள்.

ஆறறில் போட்டாலும் அளந்து போடு பழமொழி

ஆனால் எனக்குத்தான் அன்பை அளந்து போடத் தெரியவில்லைய

அளந்து போடத் தெரியாம ஆத்துல்ல போட்டதால தான் உங்க அன்பும் ஆத்தோட போயிட்டுதோ

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அண்ணை சுப்பு .....

நான் நிலாமதி ..யாழ் களத்துக்கு சற்று ... புதியவள் ...

பிள்ள என்றால் பெண்களையும் பையன் என்றால் ஆண்களையும் குறிக்கும் என்பர்கள் ...யாரை

குறிபிடுகிறீர்கள் ? பிள்ள ...பிள்ள... என்று .கவிஞ்சர்கள் பாடி வைத்ததைசற்று கேளுங்கள் ...

நினைக்க தெரிந்த ... மனமே ...உனக்கு மறக்க தெரியாதா?

பழக தெரிந்த உயிரே விலகதேரியாதா?

கொதிக்க தெரிந்தே நிலவே குளிரத்தேரியாதா ?

குளிரும் தென்றல் காற்றே ,...எனை ...புரியாதா?... என்று

எல்லாம் தெரிந்து , அறிந்து கொள்ள ...வாழ்த்துக்கள் ..இரண்டு ... மனம் வேண்டும் ....

வணக்கமுடன் நிலாமதி ....

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை கவிதை இனிமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோனே நெடுக்ஸ் சரியாக சொன்னீங்கள். பிள்ள ரொம்ப அனுபவமோ? :icon_mrgreen: முதல்ல இது எல்லாம் யாருக்கு அப்பு தெரியும் :( முதல் சொல்லுவாங்க அத்தான் என்று அப்பவே நாங்கள் செத்தான் என்று ஓடி இருந்தால் இன்று இப்படி கவிதை எல்லாம் எழுத தேவையில்லை . நன்றி பிள்ள உங்கட கருத்துக்கு . இப்பத்தான் தொடங்கிறவை இதை கொஞ்சம் கவனத்தில எடுங்கோ பிள்ளை :(

பிள்ள கறுப்பி நாங்கள் அளந்து போட்டல் நீங்கள் உண்மையாக காதலிக்கல என்றும் விட்டிட்டு போறாங்கள் அளவுக்கு அதிகமா அன்பை காட்டினாலும் விட்டிட்டு போறாங்கள் என்ன செய்ய பிள்ள இந்த பொம்பிளைகளே (சில பேர் மட்டும் மற்றவர்கள் கோவப்படதீங்க ) அப்பிடித்தான் போல இருக்கு :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ள நிலாமதி உங்கட வீட்ட எத்தனை பிள்ளைகள் என்றால் பெண் பிள்ளைகளின்ர எண்ணிக்கையா சொல்லுவிங்கள்? :icon_mrgreen: நினைக்கிறதையும் மறக்கிறதையும் செய்து பார்த்தல் தான் தெரியும் பிள்ளை. போனால் போகட்டும் போடா என்று இருந்துவிடலாம் தான் ஆனால் எல்லாராலையும் முடியாது பிள்ள.

கருத்துக்கூறிய நெடுக்ஸ்,கறுப்பி, நிலாமதி,நுனாவிலன் நன்றிகள். :(

சுப்பண்ணை....

என்ன இபப்டி சொல்லிடீங்க? இனி எல்லோரும் பொண்ணுக மீது அன்பை அளவாகத்தான் காட்டப்போறாங்க போல

இருந்தாலும் அளவான அன்பு, அளவுக்கு மிஞ்சிய அளவு என்பதை விட போலியில்லாத அன்பை காட்டினாலே போதும் என...

சுப்பண்ணை இப்ப எல்லாம் உங்க வீட்டில்

"மறக்கத் தெரியவில்லை என் காதலை

மறக்கும் உருவமில்லை என் தேவதை............"

இந்த பாடல் தான் காற்றலைகளில் தவழ்கின்றதா? :icon_mrgreen:

ஒவ்வொரு அடியும் வாழ்வில் ஏணிப்படிகள்.. ஆதலால் இன்னோர் காதல் செய்வீராக............... :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை....

என்ன இபப்டி சொல்லிடீங்க? இனி எல்லோரும் பொண்ணுக மீது அன்பை அளவாகத்தான் காட்டப்போறாங்க போல

இருந்தாலும் அளவான அன்பு, அளவுக்கு மிஞ்சிய அளவு என்பதை விட போலியில்லாத அன்பை காட்டினாலே போதும் என...

சுப்பண்ணை இப்ப எல்லாம் உங்க வீட்டில்

"மறக்கத் தெரியவில்லை என் காதலை

மறக்கும் உருவமில்லை என் தேவதை............"

இந்த பாடல் தான் காற்றலைகளில் தவழ்கின்றதா? :icon_mrgreen:

ஒவ்வொரு அடியும் வாழ்வில் ஏணிப்படிகள்.. ஆதலால் இன்னோர் காதல் செய்வீராக............... :(

பெண்கள் (சிலபேர் மட்டும்)

மனித வாழ்வில் துன்பத்தின் மறுபெயர்

பிரச்சினைகளின் வாழ்விடம்

புரியாத புதிர்கள்

நிம்மதியின் சாவுமணிகள்

சுயநலத்தின் உறைவிடம்

சந்தேகங்களின் தாய்மடி

மொத்தத்தில் "பாவம் செய்த மனிதர்களுக்கு தண்டனை வழங்க இறைவன் பூமிக்கு அனுப்பிய எமதூதர்கள்" :unsure:

பிள்ள வெண்ணிலா எப்படி சுகம்? அதே பாட்டுத்தான் போகுது பிள்ள ஆனால் அந்த பொம்பிளையோ இன்று வந்ததும் இதே நிலா ஆனால் நாளை வரப்போறது வேறு நிலா என்றுல்லோ பாடிட்டு போய்விட்டாள்

அன்பை அளவாக காட்டினால் என்ன உண்மையான அன்பை காட்டினால் என்ன ஆப்பு (சில பேருக்கு ) தவிர்க்கமுடியாததுது. நீங்களும் கவனம் பிள்ளை :(

Edited by suppannai

  • கருத்துக்கள உறவுகள்

மோனே நெடுக்ஸ் சரியாக சொன்னீங்கள். பிள்ள ரொம்ப அனுபவமோ? :wub: முதல்ல இது எல்லாம் யாருக்கு அப்பு தெரியும் :o முதல் சொல்லுவாங்க அத்தான் என்று அப்பவே நாங்கள் செத்தான் என்று ஓடி இருந்தால் இன்று இப்படி கவிதை எல்லாம் எழுத தேவையில்லை . நன்றி பிள்ள உங்கட கருத்துக்கு . இப்பத்தான் தொடங்கிறவை இதை கொஞ்சம் கவனத்தில எடுங்கோ பிள்ளை :lol:

பிள்ள கறுப்பி நாங்கள் அளந்து போட்டல் நீங்கள் உண்மையாக காதலிக்கல என்றும் விட்டிட்டு போறாங்கள் அளவுக்கு அதிகமா அன்பை காட்டினாலும் விட்டிட்டு போறாங்கள் என்ன செய்ய பிள்ள இந்த பொம்பிளைகளே (சில பேர் மட்டும் மற்றவர்கள் கோவப்படதீங்க ) அப்பிடித்தான் போல இருக்கு :(

சுப்பண்ணை வாழ்க்கையில ரெம்ப அடிவாங்கிட்டீங்க சுப்பண்ண. கவலையாக இருக்கிறது. ஆண்களுக்கு பிறக்கும் போதே இப்படி ஒரு விதி ரேகையும் பதியப்படுகிறது போல...! (நான் விதியை நம்புறவனில்ல.. ஆனாலும்.. சில பெண்கள் விதியோட கூட்டு வைச்சிடுறாங்களே..!) :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சுப்பண்ணை?வந்தவரகிடேலை செந்தமிழிலை ஒரே கவிதையாய் இழுத்து விடுகிறியள். :wub:

நல்ல கவிதை அண்ணோய் :lol:

அட..சித்தப்பு வரும் போதே "மறக்க தெரியவில்லை" எண்டு கொண்டு வாறார் :wub: ..ஓமோம் சித்தபுவின்ட கவிதையும் மறக்க ஏலாம தான் இருக்கு.. :lol:

மறக்க தெரியவில்லை எண்டு கவிதையில் உங்கள் நினைவுகளை சொல்லி சென்ற விதம் நன்னா இருக்கு சித்தப்பு :( ..அது சரி பரீட்சையில கேள்விக்கு விடை மறந்து போகுது ஏன் உந்த காதல் மட்டும் மறந்து போது இல்ல எண்டு தான் எனக்கும் விளங்கள்ள.. :o

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துஎழுதிய கு.சா , ஜமுனாக்கும் நன்றிகள். பிள்ள ஜமுனா நீங்கள் படிப்பை காதலித்தால் அது மறந்து போகாது பிள்ள

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னவளே புரிந்திடுவாய் ........

காலங்கள் கடக்கின்றன கனவுகளும் கரைகின்றன

கல்நெஞ்சம் கனியானது முன்னாளில்

பூ நெஞ்சம் கருகுகின்றது இந்நாளில்

கேட்பதற்கு நீ மனைவியும் இல்லை

சொல்வதறகு எனக்கு உரிமையும் இல்லை

வாழ்க்கைதனில் துன்பம் இயல்பு

துன்பவாழ்க்கையே எனக்கிங்கு இயல்பு

புரிகின்றவை புரிந்துவிட்டால் நமக்குள் பிரிவினை ஏது

புரிந்தும் அவை புரியாமல் இருந்தால் நம் வாழ்வில் இன்பம் தான் ஏது

புரியவில்லை உனை எனக்கு புரிகிறதா எனை உனக்கு

புரிந்து பார்த்துவிடு புது யுகம் பிறந்துவிடும்

புரியவில்லை என்றால் இருண்டுதான் போய்விடும் நம் வாழ்க்கை

புரிந்து பார்ப்பதற்கு தேவையில்லை சொல் பேச்சு

சொல்லிடுமே என் மௌனம் அதை உனக்கு எடுத்தியம்பி

புரிந்திடுவாய் என் கண்ணே நம் வாழ்க்கை நம் கையில் ...... :wub:

ம்ம்..சித்தப்பு எனக்கு கவிதை புரியுது :lol: ஆனா புரியிறவாவிற்கு புரியனும் என்ன..(அது சரி இங்க எழுதினா அவா புரிந்திடுவாவோ சித்தப்பு).. :wub:

புதிர் பல புரிந்தேன்

உன் புதிர்

புரியாம போனது

தான் ஏனோ..!! :(

எல்லாமே புரிஞ்சிட்டா வாழ்க்கையில சுவாரசியமே இருக்காது சித்தப்பு புரியனும் அதே நேரம் புரியாத மாதிரியும் இருக்கனும் சொல்ல போனா இனிக்கனும் அதே நேரம் கசகனும் அப்ப தான் எதுவுமே சுவை.. :o

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்..சித்தப்பு எனக்கு கவிதை புரியுது :) ஆனா புரியிறவாவிற்கு புரியனும் என்ன..(அது சரி இங்க எழுதினா அவா புரிந்திடுவாவோ சித்தப்பு).. :lol:

புதிர் பல புரிந்தேன்

உன் புதிர்

புரியாம போனது

தான் ஏனோ..!! :lol:

எல்லாமே புரிஞ்சிட்டா வாழ்க்கையில சுவாரசியமே இருக்காது சித்தப்பு புரியனும் அதே நேரம் புரியாத மாதிரியும் இருக்கனும் சொல்ல போனா இனிக்கனும் அதே நேரம் கசகனும் அப்ப தான் எதுவுமே சுவை.. :D

அப்ப நான் வரட்டா!!

நல்லது மோனே உங்களுக்காவது புரியுதே சந்தோசம் பிள்ள கசந்தது எல்லாம் காணும் இனிமல் கசக்கவும் வேண்டாம் இனிக்கவும் வேண்டாம் :D . பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள் "களவை கற்று மறந்துவிடுங்கள் ஆனால் காதலை கற்று மறந்துவிடதீர்கள் " :rolleyes: ஜமுனா ஆண்பாவம்

பொல்லாததுதானே? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ணை காதல் என்பது மீளமுடியாவலி

மீட்டி மீட்டி உயிரைக் கசக்கி வேதனை செய்யும்.

மொழி மெளனிப்பது காதலர்களுக்கு இடையில்தான்.

உங்கள் எழுத்துக்களில் உயிர்ப்பும், வலியும் இணைந்து இழைகிறதுபோல் உள்ளது. ஆறுதல்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை சுப்பண்ணை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை காதல் என்பது மீளமுடியாவலி

மீட்டி மீட்டி உயிரைக் கசக்கி வேதனை செய்யும்.

மொழி மெளனிப்பது காதலர்களுக்கு இடையில்தான்.

உங்கள் எழுத்துக்களில் உயிர்ப்பும், வலியும் இணைந்து இழைகிறதுபோல் உள்ளது. ஆறுதல்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை சுப்பண்ணை.

ஏன் மனிதர்களுக்கு நீண்ட கால ஞாபகசக்தி இருக்கு என்று சிலவேளை நினைத்துப்பர்ப்பேன் பிள்ள.என்னத்தை செய்ய ? :o நன்றி பிள்ள

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீதானா அன்பே நீதானா...........

அன்பே என்று அழைத்ததும் நீதானா ?

அண்ணா என்று அழைப்பதுவும் நீதானா (சரிதானா?)

ஆப்பிள் கன்னத்தில் முத்தம் கேட்டதும் நீதானா ?

அப்படியே விட்டுவிட்டு போவதும் நீதானா (சரிதானா?)

காதல் இல்லையேல் சாதல் சொன்னதும் நீதானா ?

காதலில் ஏதடா கல்யாணம் சொல்வது நீதானா (சரிதானா?)

சத்தியங்கள் பல கேட்டதும் நீதானா ?

சத்தமில்லாமல் போவதும் நீதானா (சரிதானா?)

என் மனக்குழந்தைக்கு வழிகாட்டியதும் நீதானா ?

குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுப்பதும் நீதானா (சரிதானா?)

பாலையை சோலையாக்கியதும் நீதானா ?

சோலையை பாலையாக்குவதும் நீதானா (சரிதானா?)

நினைத்தால் வருவேன் சொன்னது நீதானா ?

நினைக்காதே என்று சொல்லவதும் நீதானா (சரிதானா?)

என்னுயிரே என்றதும் நீதானா ?

என்னுயிரை எடுப்பதும் நீதானா (சரிதானா? ) :o

Edited by suppannai

என்னுயிரே என்றதும் நீதானா ?

என்னுயிரை எடுப்பதும் நீதானா (சரிதானா? ) :o

ரொம்ப நன்னாருக்கு சுப்பையாண்ணை. தொடருங்கோ.

பாத்து, எதுக்கும் சுப்பம்மா ஆச்சி கிட்ட இருக்கிறாவோ எண்டு கவனிச்சுக்கொள்ளுங்கோ. வயசான காலத்தில அடிகிடி விழப்போகுது.

சித்தப்பு வந்துட்டியளே..ரசனியின்ட படம் வந்தா ஓடி போய் பார்க்கிற மாதிரி சித்தபுவின்ட கவிதைக்கு நான் ஒரு விசிறியா போயிட்டன்.. :o (பிறகு விசுக்க சொல்லி கேட்கிறதில்ல சொல்லிட்டன்).. :o

நீ..தானா..அன்பே..நீ..தானா..எண்டு யாரை நினைச்சு கவிதை எழுதினியள் சித்தியை நினைச்சு எழுதவில்ல தானே இந்த கவிதை.. :lol:

அன்பே எண்டு அவா அழைக்கும் போதே வேண்டாம் வம்பு எண்டு போயிருந்தா உத்தனை பிரச்சினையும் வந்திருக்காது சரி எனி என்ன செய்யிறது :) ..ஆனா கவிதை நன்னா இருக்கு சித்தப்பு.."அன்பே அன்பே கொல்லாதே" உந்த பாட்டு தெரியுமோ சித்தப்புவிற்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுப்பு அண்ணை .....

நான் நிலாமதி ...வந்து இருக்கிறான் ..சமைக்க தெரியுமா?... ? என்று கேடிங்க ..

.சமைப்பேன் .ஆனால் என் "சுப்புவுக்கு " பிடிக்குதில்லை .

ஆனால் பட்டினி எல்லாம் போடுவதில்லை .சாப்பாடு மேசையில் சத்தம் தன்

. தன் அம்மா மாதிரி இல்லையாம் என்று ...இருக்கிறதை விட்டு பறந்ததை பிடிக்கிராக ..

..உரலில் இட்டிச்ச சம்பல் வேணுமாம் . தாயகத்தில் கிரைண்டர் கேட்டேன் .

புலத்தில் உரல் உலக்கை கேட்கவா முடியும் ?....காலம் போக போக எல்லாம் இப்படித்தான்

.......இந்த ஆண்களே இப்படித்தான் ..

.காளை.. மனசு கட்டான சைசு களங்கமிலா மனசு........(பாடல் தெர்யுமா?) (திருப்தி இல்லா மனசு ).

நான் நிலாமதி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப நன்னாருக்கு சுப்பையாண்ணை. தொடருங்கோ.

பாத்து, எதுக்கும் சுப்பம்மா ஆச்சி கிட்ட இருக்கிறாவோ எண்டு கவனிச்சுக்கொள்ளுங்கோ. வயசான காலத்தில அடிகிடி விழப்போகுது.

நன்றி ஈஸ். மோனே உங்களுக்கு வீட்ட நடந்த ஒரு கதையை சொல்லுறன் கேளுங்கோ. சுப்பம்மா ஒருநாள் வெளியில போட்டா நானும் சுக்ஸ்ம் தான் வீட்ட இருந்தநாங்கள். திடீரென்டு அழைப்புமணி அடிச்சுகேட்டுது அப்ப சுக்க்ஸ் தான் எழும்பிபோய் பார்த்திட்டு அப்பா வீட்ட பூதம் வந்திட்டப்பா என்று கத்தி அழுகிறான் பிள்ள :D .என்னவென்று போய் கதவில பொருத்தியிருக்கிற கண்ணாடிகுள்ளால பார்த்தால் வெளியில சுப்பமா நிக்கிறா . பிறகுதான் பிள்ளைக்கு சொன்னது அது பூதம் இல்லடா உன்ர அம்மா தான் என்று அவன் அழுகையை நிப்பாட்டவே கனநேரம் ஆயிட்டு பிள்ள. இல்ல அப்பா அது பூதம் தான் என்று சொல்லி சொல்லி அழுகிறான் பிள்ள :o .

சித்தப்பு வந்துட்டியளே..ரசனியின்ட படம் வந்தா ஓடி போய் பார்க்கிற மாதிரி சித்தபுவின்ட கவிதைக்கு நான் ஒரு விசிறியா போயிட்டன்.. :) (பிறகு விசுக்க சொல்லி கேட்கிறதில்ல சொல்லிட்டன்).. :o

நீ..தானா..அன்பே..நீ..தானா..எண்டு யாரை நினைச்சு கவிதை எழுதினியள் சித்தியை நினைச்சு எழுதவில்ல தானே இந்த கவிதை.. :lol:

அன்பே எண்டு அவா அழைக்கும் போதே வேண்டாம் வம்பு எண்டு போயிருந்தா உத்தனை பிரச்சினையும் வந்திருக்காது சரி எனி என்ன செய்யிறது :D ..ஆனா கவிதை நன்னா இருக்கு சித்தப்பு.."அன்பே அன்பே கொல்லாதே" உந்த பாட்டு தெரியுமோ சித்தப்புவிற்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

பிள்ள நான் வந்திட்டன் .பிள்ள பாத்து விசிருங்கோ.வேகமா விசிறினால் கட்டியிருக்கிற பல்லும் காத்தோட போயிடும் :D சித்தியை நினைச்சால் கவிதை வராது ஒப்பாரி தான் வரும் :D , .அந்த பாட்டு எல்லாம் ஒரு காலத்தில தேசியகீதமாவும் இருந்தது இப்ப தேசியகீதம் எல்லாம் இதுதான் " நிம்மதி என்ன விலை சொன்னால் வாங்குவேன்" :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சுப்பு அண்ணை .....

நான் நிலாமதி ...வந்து இருக்கிறான் ..சமைக்க தெரியுமா?... ? என்று கேடிங்க ..

.சமைப்பேன் .ஆனால் என் "சுப்புவுக்கு " பிடிக்குதில்லை .

ஆனால் பட்டினி எல்லாம் போடுவதில்லை .சாப்பாடு மேசையில் சத்தம் தன்

. தன் அம்மா மாதிரி இல்லையாம் என்று ...இருக்கிறதை விட்டு பறந்ததை பிடிக்கிராக ..

..உரலில் இட்டிச்ச சம்பல் வேணுமாம் . தாயகத்தில் கிரைண்டர் கேட்டேன் .

புலத்தில் உரல் உலக்கை கேட்கவா முடியும் ?....காலம் போக போக எல்லாம் இப்படித்தான்

.......இந்த ஆண்களே இப்படித்தான் ..

.காளை.. மனசு கட்டான சைசு களங்கமிலா மனசு........(பாடல் தெர்யுமா?) (திருப்தி இல்லா மனசு ).

நான் நிலாமதி .

மோனே நிலாமதி வணக்கம் . உங்கட சுப்பு பிள்ள குடுத்துவைச்சவர் .நீங்களும் நல்ல பிள்ள போலத்தான் இருக்கு. (வீட்ட சமைத்தால் நல்ல பிள்ளைதானே :o ) அவருக்கு உரலில இடிச்ச சம்பல் கேட்குதோ ? :lol: இனிமல் கேட்டால் என்னைப்போல சமைக்க சொல்லுங்கோ அதுக்கு அப்புறம் கேட்கமாட்டார் .ஏன் நீங்கள் அரைப்பான் கேட்கிறிங்க ஒரு வேலைக்காரியை கேளுங்க பிள்ள :lol: .(வாசிச்சுப்போட்டு களத்தோட விட்டுட்டு போகனும் வீட்ட எல்லாம் எடுத்து போகக்கூடாது)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேய் ஓன்று பெண்ணாகி வந்ததே

பேய் ஓன்று பெண்ணாகி வந்ததுவோ ?

காதல் செய்ய ஏங்கி துடித்ததோ ?

காதல் வலை வீசி பார்த்ததோ ?

நேசக்கரம் நீட்டியதோ ?

இன் மொழி அள்ளி வீசியதோ ?

நிழலின் தடத்தில் நிஜத்தை காட்டியதோ ?

நினைவெல்லாம் நீதான் என்றதுவோ ?

மெய்ப்பொருளும் நீதான் என்று உரைத்ததுவோ ?

உணர்வுகளை மாற்றி சென்றதுவோ ?

உள்ளத்தை திருடி பறந்ததுவோ ?

காதல் வலையில் விழுந்துதான் போனேனோ ?

பெண் என நினைத்து ஏமாந்து போனேனோ ?

காதல் வலி என்னவென்று காட்டியதோ ?

பேய் ஓன்று பெண்ணாகி மீண்டும் பேயாக மாறியதோ? :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.