Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பே(பி) பிலிம்ஸ் தமிழ் மக்களுக்கு பெருமையுடன் வழங்கும் "கடலைக்கு கடலை!" (ஓர் காதல் காவியம்)

Featured Replies

ஒருக்கா எல்லாரும் மறுபடியும் சைக்கிளை எடுத்துக்கொண்டு கொக்குவிலை சுத்தி ஒரு சுத்து போவோமே..? <_<

  • Replies 116
  • Views 15.2k
  • Created
  • Last Reply

நான் புலவரட்டப் படிக்கல்ல.. பொன்னரட்ட (பொன்னுச்சாமி) படிச்சிருக்கிறன்..! <_<

ஒருக்கா எல்லாரும் மறுபடியும் சைக்கிளை எடுத்துக்கொண்டு கொக்குவிலை சுத்தி ஒரு சுத்து போவோமே..?

எல்லாரும் கிட்ட கிட்ட வாறியள். பயமா இருக்கு... தெரிஞ்ச ஆக்களோ தெரியாது..

ஒருக்கா எல்லாரும் மறுபடியும் சைக்கிளை எடுத்துக்கொண்டு கொக்குவிலை சுத்தி ஒரு சுத்து போவோமே..? <_<

சைக்கிள் "பஞ்சர்" ஆகிட்டால் அண்ணே.. :huh:

அப்ப நான் வரட்டா!!

எல்லாரும் கிட்ட கிட்ட வாறியள். பயமா இருக்கு... தெரிஞ்ச ஆக்களோ தெரியாது..

ஏன்..அண்ணா ஊரில அவ்வளவு குழப்படி செய்தனியளோ...அப்ப வலு கவனமா இருங்கோ.. :wub:

அப்ப நான் வரட்டா!!

எல்லாரும் கிட்ட கிட்ட வாறியள். பயமா இருக்கு... தெரிஞ்ச ஆக்களோ தெரியாது..

ரொம்பத்தான் பயப்படுறியள்.. <_<

சைக்கிள் "பஞ்சர்" ஆகிட்டால் அண்ணே.. :huh:

சைக்கிளை தலைக்கு மேல தூக்கி கொண்டு ஓடிறது தான் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லிற மணி எந்த மணி எண்டு இப்ப எனக்கு நினைவில இல்ல. நிறையவாத்திகளுக்கு மணி எண்டு பெயர்.

கட்டை மணியம் என்றால்.. கொக்குவில் இந்து கணிதம் படிப்புக்கும் மணியம் மாஸ்ரரைத்தான் அதுக்குள்ள சொல்லிக்கிறது என்று நினைக்கிறன். <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா அப்ப இதுக்க கே.கே.எஸ் ரூட் பஸ் ஒண்டு எடுத்து ஓடலாம் போல இருக்கிது. :wub:

ஓம்.. நான் உந்த மஞ்சவனப்பதி, நந்தாவில் கோயிலுகள மறந்துபோனன்... நம்மோட ஆட்சி கொக்குவிலோட மட்டும் நிக்க இல்ல... குளப்பிட்டி, தாவடி, இணுவில், மருதனார்மடம், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை, காங்கேசந்துறை, ஊறணி, மயிலிட்டி, கீரிமலை, இளவாலை, சித்தங்கேணி, சங்கானை, மானிப்பாய், எண்டு அப்பிடியே திரும்பவும் மேற்கு கொக்குவில் பக்கம் வந்து பிறகு நாச்சிமார் கோயிலடி, வண்ணார்பண்ணை, குறுக்குத்தெருக்கள், குருநகர், பாசையூர், கொழும்புத்துறை... பிறகு முத்திரைச்சந்தி, செம்மணி... பிறகு நீர்வேலி, புத்தூர், அச்சுவேலி, கரவெட்டி, தும்பளை... பிறகு இருபாலை.. நாவற்குழி... இப்பிடி ஓரு பெரிய ஏரியாவக் கவர் பண்ணி சைக்கிள் சவாரிகள் செய்தனாங்கள். எனக்கு அனுபவம் குறைவான இடம் எண்டால் தென்மாராட்சிப் பகுதிகளும், தீவுப்பகுதியும்தான். ஒருக்கால் கூட தீவுப்பகுதிகளுக்கு போக சந்தர்ப்பம் கிடைக்க இல்ல. அட மண்டைதீவுக்கு கூட போகமுடிய இல்லை எண்டால் பாருங்கோவன். தாயகத்தில இருக்கேக்க தீவுப்பகுதிகளை ஒரு முறையாவது போய்ப்பார்க்க இல்லை என்பதை நினைக்க மனதுக்கு கொஞ்சம் கஸ்டமாத்தான் இருக்கிது. :wub:

மற்றது மேற்கு கொக்குவில விட கிழக்கு கொக்குவிலில அலுவல்கள், கூட்டாளிகள் அதிகம் எண்டபடியால மேற்கு கொக்குவில் பக்கம் பரீட்சயம் குறைவு. எண்டாலும் அடிக்கடி அவசரகால தேவைகளுக்கு மேற்கு கொக்குவில் பக்கமாத்தான் போய்வாறது. மேற்கு கொக்குவில் பக்கம் உலங்குவானூர்தி தாக்குதல் அதிகமா நடக்கிறது கொக்குவில் கிழக்க விட.

நீங்கள் சொல்லிற மணி எந்த மணி எண்டு இப்ப எனக்கு நினைவில இல்ல. நிறையவாத்திகளுக்கு மணி எண்டு பெயர். :huh:

உங்களுக்கெல்லாம் வசு(பேரூந்து) சரிவராது தட்டி வான் தான் அம்சமாய் இருக்கும் <_<

கட்டை மணியம் என்றால்.. கொக்குவில் இந்து கணிதம் படிப்புக்கும் மணியம் மாஸ்ரரைத்தான் அதுக்குள்ள சொல்லிக்கிறது என்று நினைக்கிறன். <_<

அடிக்கடி 'மணி', 'மணி' என்று சொல்பவர். நான் இவரிடம் சில மாதங்கள் க.பொ.த உயர்தரம் கணிதத்தினை இணுவிலில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் கற்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் நாச்சிமார் கோயில்ல இருந்து மகாஜனாக்கு சைக்கிள்ள போறது மாப்ஸ் நீங்க சொhன்ன இடமெல்லாம் தாண்டி மருதனார்மடத்துக்கு அப்பிடியே ஸ்கூல் முடிஞ்சு சுன்னாகம் பக்கம் போய் ஒரு ரவுண்டுமு கட்டிட்டு வாறது...

ம்ம் நாச்சிமார் கோயில்ல இருந்து மகாஜனாக்கு சைக்கிள்ள போறது மாப்ஸ் நீங்க சொhன்ன இடமெல்லாம் தாண்டி மருதனார்மடத்துக்கு அப்பிடியே ஸ்கூல் முடிஞ்சு சுன்னாகம் பக்கம் போய் ஒரு ரவுண்டுமு கட்டிட்டு வாறது...

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியா? இல்லை இணுவில் சைவ மகாஜனாவா?

  • தொடங்கியவர்

என்ன அரவிந்தன் சுண்டலோட நக்கலா? <_<

ம்ம் நாச்சிமார் கோயில்ல இருந்து மகாஜனாக்கு சைக்கிள்ள போறது மாப்ஸ் நீங்க சொhன்ன இடமெல்லாம் தாண்டி மருதனார்மடத்துக்கு அப்பிடியே ஸ்கூல் முடிஞ்சு சுன்னாகம் பக்கம் போய் ஒரு ரவுண்டுமு கட்டிட்டு வாறது...

ரொம்பத்தூரம் போய் படிச்சிருக்க்றீர்கள் போல.

கொக்குவில் இந்து கல்லூரி, கணிதம் (மணி வேலாயுதம், வாமதேவன்) விஞ்ஞானம் (செல்வவடிவேல்) தமிழ் (பொன்னுச்சாமி, கந்தையா) போன்ற இடங்களில் படித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

கொக்குவிலில் எனக்கு பொற்பதி வீதி எனக்கு மிகவும் பிடித்த வீதி.

  • கருத்துக்கள உறவுகள்

தெல்லிப'பளை மகாஜனா தான் பட் மருதனார் மடத்துக்கு தானே இடம்பெயர்ந்து இயங்கிச்சு..

றொம்ப தூரம் இல்ப்பா அளவெட்டில இருக்கேக்க பட் இடம்பெயர்நது வந்தா பிறது தான் றொம்ப தூரம்...Eas

கொக்குவிலில் எனக்கு பொற்பதி வீதி எனக்கு மிகவும் பிடித்த வீதி.

யாரோ இருக்கினம் போல.. <_<

  • தொடங்கியவர்

பொற்பதி வீதி மிகவும் கலகலப்பான ஒரு தெரு. எப்பவும் பல்கலைக்கழக மாணவகளால நிறைஞ்சு இருக்கும். அழகானதும் கூட. அதத்தான் சொல்லுறார் எண்டு நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ இருக்கினம் போல.. :D

எனது நண்பர் ஒருவர் அங்கு வசித்து வந்தவர் லீ , அவரிடம் அடிக்கடி போய்வருவது உண்டு.

பொற்பதி வீதி மிகவும் கலகலப்பான ஒரு தெரு. எப்பவும் பல்கலைக்கழக மாணவகளால நிறைஞ்சு இருக்கும். அழகானதும் கூட. அதத்தான் சொல்லுறார் எண்டு நினைக்கிறன்.

ஓம் முரளி , எப்போதும் கலகலப்பாகவும் , நேர்த்தியாகவும் இருக்கும் .

இது அவ்வீதியில் வசிக்கும் எல்லோரின் ஒத்துழைப்புடன் தான் சாத்தியப்படும்

  • கருத்துக்கள உறவுகள்

இத விட யாழ் பல்கலைகழகத்துக்கு முன்னால அபிராமி என்ட ஒரு சாப்பாட்டு கடை இருக்கு தெரியுமோ? நல்லா இருக்கும் அங்க சாப்பாடு எல்லாம்...

பரமேஸ்வரா சந்தியில் இருக்கும் கடைதானே...? தோசை பிரபலம் என்று ஞாபகம்...

  • தொடங்கியவர்

ஓம் பரமேசுவரா சந்தி அந்த மூலையில இருக்கிது. நானும் சிலது போறது. ஆனா அப்ப அந்தநேரம் கையில காசு இல்ல. இப்ப கையில காசு இருக்கிது. அங்க போக முடிய இல்ல. ஹிஹி.

நான் ஸ்கூலில படிக்கேக்க கொஞ்சகாலம் நாவலர் ரோட்டில இருந்தது.. (பிரவுண் ரோட் சந்திக்கு கிட்ட).. அப்ப ஒவ்வொரு நாளும் காலம்பற தட்டார் தெரு சந்தியில இருக்கிற ஒரு கடையிலதான் சாப்பாடு. கிழங்கு ரொட்டி ரெண்டும், பால் தேத்தாவும்தான் அப்ப எனக்கு காலம்பற ஆகாரம். :D

அந்தநேரம் அந்த பக்கற் யூஸ் - ஐஸ்பழம் பிரபலமா இருந்தது அல்லோ? நீங்களும் வாங்கி சூப்பி இருக்கிறீங்களோ? நாச்சிமார் கோலிலடியில இருந்து கே.கே.எஸ் ரோட்டால தட்டார் தெரு பக்கம் போகேக்க... ஒரு கடை இருந்திச்சிது. அதில வாங்கி குடிச்சா சூப்பரா இருக்கும். சொல்லி வேலை இல்ல. நான் சொல்லிறது விளங்கிது தானே? அந்த சின்ன பொலித்தீன் பாக் ஒண்டுக்க ஐஸ்பழத்த அடைச்சு விப்பீனம்? அதுதான். அதுக்கு வேற ஒரு பெயர் இருக்கிது போல. எனக்கு இப்ப நினைவுக்கு வருகிது இல்ல.

Edited by முரளி

உண்மைதான்...மசாலாதோசையை முதலில அங்க தான் கண்டனான். (வீட்ட இதெல்லாம் செய்யமாட்டினம் தானே) எங்கட வீட்ட இருந்த மருத்துவபீட அண்ணாமார் அப்பப்ப போய் வாங்கி கொண்டு வந்து சாப்பிடுவினம்.

கிழங்கு ரொட்டியும் மறக்க ஏலாது. அதே போல் எங்கட சென். ஜோன்ஸ் ரோல்ஸும்..

பக்கற் ஐஸ் நான் படிக்கேக்க இருந்ததா ஞாபகம் இல்லை. கொழும்பில் தான் கண்டதா ஞாபகம். ஐஸ் எண்டுதான் சொல்வினம். பக்கற்றுக்குள் கலர் தண்ணியை விட்டு ஐஸ்ஸில் freeze ஆக வைப்பார்கள்...

  • தொடங்கியவர்

ஓம் சென்.ஜோன்ஸ் கண்டீனுக்க நடக்கிற, மற்றது ஹொஸ்டல் பெடியங்கள் செய்யுற சேட்டைகள் ஏராளம். எனக்கு ஹொஸ்டல் நண்பன் ஒருத்தன் இருந்தவன். சரியான நெருக்கம். நல்ல நண்பன். அவன் செய்யுற சேட்டைகள் கொஞ்ச நஞ்சம் இல்ல. ஹொஸ்டலுக்க நடக்கிற குளப்படிகள் பத்தியும் சொல்லுவான்.

ஒருக்கால் சாப்பிட்டுக்கொண்டு இருக்கேக்க லைட் நூந்துபோச்சிதாம். பிறகு ஹொஸ்டலுக்கு பொறுப்பான வாத்திகளுக்கு தாங்கள் புட்டு கட்டியால எறிஞ்சது எண்டு சொன்னான். இருட்டுக்க தெரியாது தானே யார் எறிஞசது எண்டு. எல்லாரும் பெரிய மேசை ஒண்டில சுத்தி இருந்து சாப்பிடிறது.

மற்றது, ஒருத்தனுக்கு பைத்தியம் பிடிச்ச கதை தெரியுமோ? அவன் இரவில பக்கத்து சவக்காலையுக்கு அருகில இருந்த மாடிக்கட்டடத்தில தனிய இருந்து படிக்கிறது சோதினைக்கு. இவங்கள் ஹொஸ்டல் பெடியங்கள் இரவு ஒருநாள் அவனுக்கு, மாடிக்கு பக்கத்தில இருக்கிற அசோக்கா மரங்களில ஏறி பயம் காட்டி பிறகு அவனுக்கு மூள தட்டிப்போச்சிது கொஞ்சம்.

நீங்கள் தெஹிவலை சந்தியில அந்த மூலையுக்க இருக்கிற கடையுல மரவள்ளிக் கிழங்கு பொரியல் வாங்கி சாப்பிட்டு இருக்கிறீங்களோ? அந்தமாதிரி இருக்கும். அதில நிறைய விதம்விதமான பட்டாணிக் கடலைகள் விக்கிறவங்கள். நான் அதால போகேக்க வரேக்க வாங்கி சாப்பிடிறது.. :D

அப்ப ஒவ்வொரு நாளும் காலம்பற தட்டார் தெரு சந்தியில இருக்கிற ஒரு கடையிலதான் சாப்பாடு. கிழங்கு ரொட்டி ரெண்டும், பால் தேத்தாவும்தான் அப்ப எனக்கு காலம்பற ஆகாரம். :D

ஓம் அந்த கடை ரொட்டி ரொம்ப சுவை தான்.

மேலும் பழைய பூங்காவுக்கு கிட்ட ஒரு சின்ன தேனீர் கடை ஒன்றில் சுவையான ரோல்ஸ் கிடைக்கும். ரியூசனுக்கு போய்வரேக்க சாப்பிறது வழக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடலை போடுறதிலை தொடங்கி இப்ப உறவுகள் தேடும் பாலத்திலை வந்து நிக்குது

தம்பி மாப்பு! பேசாமல் "உறவுகள் தேடும் பாலம்" எண்டொரு பக்கத்தை திறந்தியளண்டால் உங்கை கனபேருக்கு வசதியாயிருக்குமெல்லே :D

பழசுகளும் அதுக்குள்ளை வந்து கடலை போடலாமெல்லே :D

நல்ல கற்பனை முரளி.... வாழ்த்துக்கள்: அப்பகுதி மக்களுக்கு நண்பராய் இருப்பதற்கே பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.