Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பி.கே.கே. அமைப்பு மூலம் ஆயுதங்கள் - துருக்கிய இராணுவத் தளபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பி.கே.கே. அமைப்பு மூலம் ஆயுதங்கள் - துருக்கிய இராணுவத் தளபதி

புதன்இ 09 ஜுலை 2008 ஜசெய்தியாளர் மயூரன்ஸ

பி.கே.கே கொன்கிறா-ஜெல் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும்இ பயிற்சிகளையும் அளித்துவருவதாக துருக்கிய இராணுவத்தளபதி ஜெனரல். ஜஷார் பஜூஹானின் தெரிவித்துள்ளார்.

பி.கே.கே அமைப்பு துருக்கி ஈரான் மற்றும் ஈராக் பிரதேசங்களுக்கிடையில் தமக்கு தனியான ஒரு நாடு வேண்டும் எனக்கோரி போராடிவரும் அமைப்பாகும். எனினும் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் என்ற பட்டியலில் இந்த அமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகில் 80 வீதமான போதைப்பொருட்களை ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு பி.கே.கே அமைப்பே வழங்கிவருவதாகவும்இ இந்த அமைப்பு பிரதேசத்திற்கு மட்டுமின்றி முழு உலகத்திற்கும் அச்சுறத்தலான அமைப்பாகவும் உள்ளதாகவும்இ அதேவேளை சிறி லங்காவில் தனிநாடு கோரி போராடிவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட பல பயங்கரவாத அமைப்புக்களுக்கு இந்த பி.கே.கே அமைப்பு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கிவருவதாகவும் ஜெனரல். ஜஷார் பஜூஹானின் தெரிவித்துள்ளார்.

நன்றி:- பதிவு இணையத்தளம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் என்ன பக்கத்தில் இருந்து பார்த்தவராமோ???

இதுவும் இலங்கை அரசாங்கத்தின் திருவிளையாடலோ????

இந்த செய்தியில் இருந்தே தெரியுது ஏன் குருதிஸ் போராட்டத்தை இன்னும் இவர்களால் முறியடிக்க முடியவில்லையெண்டு...

குருதிஸ் இன நன்பர்கள் சிலருடன் பழகிய அனுபவம் உண்டு.. ஏறக்குறைய எங்கட நிலைதான் அவங்களுக்கும்...

அதாவது சுத்திவர அடிவாங்குறது... மற்றபடி போராட்டத்தின் அளவும் வேகமும் வேறுபடுகின்றது...

இது சிங்கள நாளேட்டில் வந்த ஒரு செய்தி

இது சிங்கள நாளேட்டில் வந்த ஒரு செய்தி

இப்ப எல்லாச்செய்தியையும் எங்கிருந்தோ தானே வருது அதுல சிங்களமென்ன கிந்தி என்ன எல்லாம் ஒண்டுதான்..

இப்ப நாங்கள் வேற இடங்களில இருந்து செய்தியை சுவதில்லையா? அதை மாதிரி சிங்களவங்களும் சுட்டிருப்பாங்கள்..

அதே செய்தியை திரும்ப சுட்டு இங்க போடப்பட்டு இருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pkk-frauen-artikel.jpg

imagesCASDE5Q3.jpg

இவர்களும் எம்மைப் போலவே......... இந்த விடுதலை இயக்கத்தை அழிப்பதற்கு இஸ்ரேல் துருக்கிக்கு சகல ஒத்தாசைகளையும் செய்து வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

PKK அமைப்பையும் விடுதலைப்புலிகளையும் இணைத்துக் கதைப்பது இது முதற் தடவையல்ல. விடுதலைப்புலிகளுக்கு 1990 களில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கியதாக அமெரிக்கா உட்பட சில நாடுகள் இவ்வமைப்பு மீது குற்றம்சாட்டி இருந்தன..!

குர்திஸ் மக்களுக்கு பிகேகே போல.. தமிழ் மக்களுக்கு விடுதலைப்புலிகள். இந்த இரண்டு அமைப்பும் இன்று வரை கொள்கை விலகல் இன்று உறுதியாக தமது இன விடுதலைக்காகப் போராடி வருகின்றன.

துருக்கியின் ஆதரவுக்காக அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகள் பிகேகேயை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் போட்டு வைத்துள்ளன..! :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

PKK அமைப்பையும் விடுதலைப்புலிகளையும் இணைத்துக் கதைப்பது இது முதற் தடவையல்ல. விடுதலைப்புலிகளுக்கு 1990 களில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கியதாக அமெரிக்கா உட்பட சில நாடுகள் இவ்வமைப்பு மீது குற்றம்சாட்டி இருந்தன..!

குர்திஸ் மக்களுக்கு பிகேகே போல.. தமிழ் மக்களுக்கு விடுதலைப்புலிகள். இந்த இரண்டு அமைப்பும் இன்று வரை கொள்கை விலகல் இன்று உறுதியாக தமது இன விடுதலைக்காகப் போராடி வருகின்றன.

துருக்கியின் ஆதரவுக்காக அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகள் பிகேகேயை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் போட்டு வைத்துள்ளன..! :wub:

எனக்கும் சில குர்திஸ் நண்பர்கள் உண்டு

எமது போராட்டம் பற்றி அவர்களுக்கு என்றுமே நல்ல மரியாதையுண்டு

அவர்கள் அடிக்கடி எம்மைப்பார்த்து பிரமிக்கும் விடயம்

தாங்கள் மலையும் மலைசார்ந்த பகுதியிலும் இருந்து போராடுவதால்

தம்மை அசைக்கமுடியாது உள்ளது

ஆனால் உங்களுக்கு அந்த வசதியில்லை

ஆனால் அதற்கு நிகரான தலைவர் இருக்கிறார் என்பது.................

உண்மைதான் குகதாசன் மனவுறுதி என்பது ஆயிரம் மலைத்தொடரிலும் மேலான பாதுகாப்பு. ..

அது எங்கள் தலைவரிடம் இருக்கிறது.

அதுதான் எந்தவித இரத்த உறவும் இல்லாமலேயே அவர் பெயரை நினைக்கும்போதே எமக்குள்ளேயேம் ஓருவித துடிப்பு வீரம் பிறக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் குகதாசன் மனவுறுதி என்பது ஆயிரம் மலைத்தொடரிலும் மேலான பாதுகாப்பு. ..

அது எங்கள் தலைவரிடம் இருக்கிறது.

அதுதான் எந்தவித இரத்த உறவும் இல்லாமலேயே அவர் பெயரை நினைக்கும்போதே எமக்குள்ளேயேம் ஓருவித துடிப்பு வீரம் பிறக்கின்றது.

அவரின் காலத்திலேயே நம் கனவெல்லாம் பலிக்க உழைப்போம்

LTTE / PKK எது ஆயுத உபயோகத்தில் பெரியது? :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

name='Panangkai' date='Jul 10 2008, 12:28 AM' post='426470']

LTTE / PKK எது ஆயுத உபயோகத்தில் பெரியது? :wub:

என்ன பனங்காய் போட்டு வாங்கிறீங்களா :lol:

என்ன பனங்காய் போட்டு வாங்கிறீங்களா :wub:

ஒரேவகையான ஆயுதத்தை கண்டபடி உபயோகிப்பதில் PKK யும் அதே வகையான ஆயுதத்தை தெரிவாகவௌம் புதுமையாகவும் பாவிப்பது LTTE.

Edited by Sooravali

பி.கே.கே. அமைப்பு மூலம் புலிகளுக்கு பயிற்சியும் ஆயுதங்களும்!துருக்கி இராணுவத் தளபதி தகவல்!

துருக்கி ஈரான் மற்றும் ஈராக் பிரதேசங்களுக்கிடையில் தமக்கு தனியான ஒரு நாடு வேண்டும் எனக்கோரி போராடிவரும் பி.கே.கே கொன்கிறா-ஜெல் அமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் அளித்துவருவதாக துருக்கிய இராணுவத்தளபதி ஜெனரல். ஜஷார் பஜூஹானின் தெரிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இந்த அமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகில் 80 வீதமான போதைப்பொருட்களை ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு பி.கே.கே அமைப்பே வழங்கிவருவதாகவும், இந்த அமைப்பு முழு உலகத்திற்கும் அச்சுறுத்தலான அமைப்பாகவும் உள்ளதாகவும் ஜெனரல். ஜஷார் பஜூஹானின் மேலும் தெரிவித்துள்ளார் என சிறிலங்கா ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிருபர்:சிறிதரன்

http://www.tamilseythi.com/srilanka/turkey-2008-07-10.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத வள ரீதியிலும், ஆள்ப்பல ரீதியிலும் பி. கே.கே புலிகளை விடவும் பெரிய இயக்கம். அதற்கு உதவி கிடைக்கும் வழிகளும் எம்மை விடப் பெரியவை.அதன் எதிரியான துருக்கிய ராணுவம் இலங்கை ராணுவத்தைக் காட்டிலும் மிகவும் பலமான ராணுவம்.

ஆனால், தாக்குதல்கள் என்று பார்க்கும் போது புலிகளின் தாக்குதல்களும் அவற்றில் எதிரிக்கு ஏற்படும் அழிவுகளும் மிக மிகப் பெரியவை. இதைத் துருக்கியப் போராளிகளின் தாக்குதல்களோடு ஒப்பிட முடியாது.

1980 களின் ஆப்கானிஸ்த்தானிய முஜாகிதீன் போராளிகளுக்குப் பிறகு இன்று உலகிலேயே மிகவும் பலமான போராளி இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள்தான். சில நாடுகள் எம்மைப் பயங்கரவாதிகள் என்று அழைத்தாலும் கூட பெரும்பாலான நாடுகளில் தமிழ்ப் புலிகளின் தாக்குதல் திறன் பற்றியும், அவர்களின் இலட்சியப் பற்றுக் குறித்தும் மிகவும் உயர்வான கருத்தே காணப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத வள ரீதியிலும், ஆள்ப்பல ரீதியிலும் பி. கே.கே புலிகளை விடவும் பெரிய இயக்கம். அதற்கு உதவி கிடைக்கும் வழிகளும் எம்மை விடப் பெரியவை.அதன் எதிரியான துருக்கிய ராணுவம் இலங்கை ராணுவத்தைக் காட்டிலும் மிகவும் பலமான ராணுவம்.

ஆனால், தாக்குதல்கள் என்று பார்க்கும் போது புலிகளின் தாக்குதல்களும் அவற்றில் எதிரிக்கு ஏற்படும் அழிவுகளும் மிக மிகப் பெரியவை. இதைத் துருக்கியப் போராளிகளின் தாக்குதல்களோடு ஒப்பிட முடியாது.

1980 களின் ஆப்கானிஸ்த்தானிய முஜாகிதீன் போராளிகளுக்குப் பிறகு இன்று உலகிலேயே மிகவும் பலமான போராளி இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள்தான். சில நாடுகள் எம்மைப் பயங்கரவாதிகள் என்று அழைத்தாலும் கூட பெரும்பாலான நாடுகளில் தமிழ்ப் புலிகளின் தாக்குதல் திறன் பற்றியும், அவர்களின் இலட்சியப் பற்றுக் குறித்தும் மிகவும் உயர்வான கருத்தே காணப்படுகிறது.

இதற்காகத்தான் தலைவர் தற்கொடையாளர்களை உருவாக்கினார்

ஆனால் அது உருவாக்கப்பட்ட நோக்கத்தைப்பார்க்காமல்

உலகம் அதை பயங்கரவாதமாக பார்க்கிறது

வெற்றிகள் வரும்போது அது உருவாக்கப்பட்ட நோக்கம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றுநினைக்கிறேன்

இன்னுமொரு ஒற்றுமை!

எங்களுக்கும் குருதிஸ் இனத்தவருக்குமான புரிந்துணர்வு... ஆனேகமான குருதிசார் எங்களின் போராட்டம் பற்றி அறிந்திருக்கிறார்கள்....

அதுமாத்திரமில்லை... அகதி வரலாற்றில் இவர்களின் சாதனையை தமிழர்கள் தான் உடைக்கக்கூடிய நிலையில் உள்ளார்கள்...

பி . கே . கே அமைப்பு, ஆயுத உதவிகள் புரிவதானால், அவர்கள் அமெரிக்காவின் பயங்கரவாதப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதனால் அமெரிக்க ஆயுதம் இவர்களுக்கு எப்படிக் கிடைக்கிறது. பி . கே . கே வாழ்க!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1980 களின் ஆப்கானிஸ்த்தானிய முஜாகிதீன் போராளிகளுக்கு

என்ன நடந்தது???

அவர்கள் என்ன ஆனார்கள்???

தற்போது அவர்கள் எங்கே???

தயவு செய்து விபரம் தெரிந்தோர் கூறமுடியுமா???

முன்பு படித்தவைதான் ...

ஆனால் ஞாபகமில்லை.

1980 களின் ஆப்கானிஸ்த்தானிய முஜாகிதீன் போராளிகளுக்கு

என்ன நடந்தது???

அவர்கள் என்ன ஆனார்கள்???

தற்போது அவர்கள் எங்கே???

தயவு செய்து விபரம் தெரிந்தோர் கூறமுடியுமா???

முன்பு படித்தவைதான் ...

ஆனால் ஞாபகமில்லை.

முகாஜிதீன்களின் தலவர்களான் ஷெக் மாக்தியா, அப்துல் ரபாணி, போண்ரோர் பாக்கிஸ்தான் ஆதரவு(அமெரிக்க கூட்டு) தலிபான்களால் கொல்லப்பட்டனர். ஆனாலும் முகாஜுதீன்களுக்கு பேருதவியாக இருந்த பல்நாட்டு போராளிகள் இண்று அல்கடாவாக மாற்றம் அடைந்து விட்டனர், அதோடு வடக்கு கூட்டணி எனப்படும் குர்திஸ்கள் இண்றும் தனியாக போராடுகிறார்கள்.

இன்னும் சில முகாஜிதீன்கள் தாலிபான்கள் ஆனார்கள்... தலிபானின் தலைவர் முல்லா ஒமார் கூட ஒரு முகாஜிதீன்னின் உருவாக்கமெண்டு ஒரு ஆங்கில செய்தித்தளத்தில் படித்ததுண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில முகாஜிதீன்கள் தாலிபான்கள் ஆனார்கள்... தலிபானின் தலைவர் முல்லா ஒமார் கூட ஒரு முகாஜிதீன்னின் உருவாக்கமெண்டு ஒரு ஆங்கில செய்தித்தளத்தில் படித்ததுண்டு.

முகாஜிதீன்களின் தலவர்களான் ஷெக் மாக்தியா, அப்துல் ரபாணி, போண்ரோர் பாக்கிஸ்தான் ஆதரவு(அமெரிக்க கூட்டு) தலிபான்களால் கொல்லப்பட்டனர். ஆனாலும் முகாஜுதீன்களுக்கு பேருதவியாக இருந்த பல்நாட்டு போராளிகள் இண்று அல்கடாவாக மாற்றம் அடைந்து விட்டனர், அதோடு வடக்கு கூட்டணி எனப்படும் குர்திஸ்கள் இண்றும் தனியாக போராடுகிறார்கள்.

தகவலுக்கு நன்றி

அதாவது

அவர்கள் ரசியாவுக்கு எதிராக அமெரிக்கர்களால் வளர்க்கப்பட்டு

பின்னர் அமெரிக்கர்களுக்கே எதிரானார்கள் என்பதுதானே???.........

தகவலுக்கு நன்றி

அதாவது

அவர்கள் ரசியாவுக்கு எதிராக அமெரிக்கர்களால் வளர்க்கப்பட்டு

பின்னர் அமெரிக்கர்களுக்கே எதிரானார்கள் என்பதுதானே???.........

நீங்கள் கிட்ட கிட்ட வந்துட்டிங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

குகதாசன்,

நான் நெடுங்காலமாக பின்பற்றிவரும் ஒரு போராட்டம்தான் ஆப்கானிஸ்த்தன் மக்களின் சுதந்திரத்துக்கான போர்.ரஷ்ஷிய் ஆக்கிரமிப்பை எதிர்த்து அவர்கள் நடத்திய அந்தப் போராட்டம் பற்றி நீங்கள் கேட்டதில் எனக்கு ரெட்டை மகிழ்ச்சியே. இதோ சில விபரங்கள்.

இன்றுள்ள அகமட் கர்ஸாயின் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகள் தான் முன்பிருந்த விடுதலைப் போராளிகளான முஜாகிதீன்கள். இவர்கள் முன்னர் அகமட் ஷா மசூத், குல்புடீன் கெக்மட்யார், இஸ்மாயில்கான், அப்துள் ரபாணி, அப்துள் ரஷீத் தோஸ்த்தம்( இவர் முன்னாள் அதிபர் நஜிபுள்ளாவின் ராணுவத்தின் பகுதித் தளபதியாக இருந்து பின்னர் அரசு கவிழும்போது போராளிகளுடன் இணைந்து கொண்டவர்) போன்ற முஜாகிதீன் தளபதிகளின் கீழ் போராடியவர்கள்.

பின்னர் ரஷ்ஷியா தனது ஆக்கிரமிப்பு ராணுவத்தை 1989 இல் திருப்பி அழைத்தபோது அதுவரை ரஷ்ஷியாவின் பாதுகாப்பில் இருந்த நஜிபுள்ளாவின் பொம்மை அரசு ஆட்டங்கண்டு போனது. ரஷ்ஷியப்படைகளின் வெளியேற்றத்தோடு முஜாகிதீன்கள் ஒரு சில மாதங்களிலேயே தலைநகர் காபூலைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்கள். அதன் பின்னர் யார் ஜனாதிபதி, யார் பிரதமர் என்ற போட்டியில் மீண்டும் தமக்குள் பிரிந்து அடிபட்டார்கள். தலைநகர் ஜனாதிபதியிடமும்(ரபானி), வெளி நகர்கள் பிரதமரிடமும்(குல்புடீன் கெக்மட்ட்யார்) வீழ்ந்தன.

இந்த குழுமோதல்கள் அயல் நாடான பாக்கிஸ்த்தானுக்குள் அகதிகள் பிரச்சனையை ஏற்படுத்தியது.அதுவரை முஜாகிதீன்களுக்கு அமெரிகாவின் உதவிகளை எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்த பாக்கிஸ்த்தான் ஒருகட்டத்தில் முஜாகித்தீகளை ஒழித்துக்கட்ட நினைத்தது. தனது நோக்கத்துக்காக பாக்கிஸ்த்தானில் அகதிகளாயிருந்த ஆப்கானிய இளைஞ்சர்களை இஸ்லாமிய அடிப்படைவாதப் பொறிக்குள் வீழ்த்தி அவர்கள் மூல ஒரு பெரிய அழித்தொழிப்புப் போரை ஆப்கானிஸ்த்தானில் நடத்தத் திட்டமிட்டது.

பாக்கிஸ்த்தனிய ராணுவத்தின் படைப்பலத்துடன் ஆப்கானிஸ்த்தானுக்குள் புகுந்த இந்தத் தலிபான்கள் போகுமிடமெல்லாம் தம்மை எதிர்த்தவர்களை அழித்துக்கொண்டே சென்றனர். இஸ்லாமிய அடிப்படைவாதச் சட்டத்தை துப்பாக்கி முனையில் மக்களிடையே புகுத்தினர். முன்பு உலகில் கேள்விப்படாதளவிற்கு பெண்களுக்கெதிரான வன்முறைகளும், மனித உரிமை மீறல்களும் இந்தத் தலிபான்களால் நிகழ்த்தப்பட்டன. இதில் பெண்களுக்கு படிப்புத் தேவையில்லை, அவர்களுக்கு நோய் வந்தால் எவரும் மருத்துவம் பார்க்கக் கூடாது, பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது...போன்றவை மிகவும் பிரபலம்.

ஆனைப் பலத்துடன் அசுர வேகத்தில் முன்னேறி வந்துகொண்டிருந்த தலிபான்களை ஏற்கனவே தமக்குள் அடிபட்டு பலமிழந்து போயிருந்த முஜாகிதீன்களால் எதிர்த்து நிற்க முடியவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக நகரங்களும், மாவட்டங்களும் தலிபான்களிடம் விழ முஜாகிதீன்கள் நாட்டின் வடக்கு மூலைக்குள் ஒடுக்கப்பட்டார்கள். வடக்கில் ஒடுக்கப்பட்ட சில முஜாகிதீன் தளபதிகள் தமக்குள் "வடக்கு முன்னணி" என்ற ஒரு மரபு வழி ராணுவத்தை உருவாக்கி முன்னேறிவந்த தலிபான்களை எதிர்க்கத் தொடங்கினார்கள். இதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றார்கள்.

ஒரு கட்டத்தில் நாட்டின் 85 வீதம் தலிபான்களின் கைகளிலும் மீதி வடக்கு முன்னணியின் கைகளிலும் இருந்தது.

இஸ்லாமிய அடிப்படைவாத ராணுவமான தலிபான் அதே நோக்கத்தைக் கொண்ட அல் கய்டாவை தனது நண்பனாக்கிக் கொண்டது. அதனால் ஒசாமா பின்லாடன் ஆப்கானிஸ்த்தானுக்குள் காலூன்ற தலிபான் வழிசமைத்துக் கொடுத்தது.(ஒசாமா ஏற்கனவே முஜாகிதீன்களுடன் இணைந்து ரஷ்ஷியாவுக்கெதிராகப் போரிட்ட சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி).

இஸ்லாமிய அடிப்படைவாதத் தலிபான்களுக்கும், அதனை எதிர்த்த வடக்கு முன்னணிக்கு இடையில் நடந்த போரில் முஜாகிதீன்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலைவரான ஜெனரல் அகமத் ஷா மசூத் தலிபான் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து அதுவரை அமெரிக்காவில் வாழ்ந்து வந்த இன்றைய ஆப்கானிய ஜனாதிபதி அரசுத் தலைவரானார்.

ஒருகாலத்தில் ரஷ்ஷியப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த வீரம் மிக்க முஜாகிதீன்கள் வல்லரசுகளின் பலப் பரீட்சியில் அகப்பட்டு இன்று அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பில் ஆப்கானிஸ்த்தானில் பொம்மைகளாக இயங்கி வருவது வருத்தமளிக்கிறது.

தமக்குள் அடிபட்டு அழிந்துபோன முஜாகிதீன்களின் சரித்திரம் எமக்கு நல்ல பாடம். தமது சொந்த மக்களில் தங்கியிராமல், அமெரிக்கா, ரஷ்ஷியா, ஈரான், சவுதி அரேபியா என்று குழுவுக்கு ஒரு நாடு என்ற ரீதியில் ஆயுதமும், பணமும் வந்து குவிந்து கொண்டதால் தமக்குள் அடிபட்டே அழிந்தும் போனார்கள். ஆனால் ரஷ்ஷிய ஆக்கிரமிப்பை எதிர்த்து அந்த மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி. லட்சக்கணக்கில் மக்கள் செத்து மடிந்தபோதும் அவர்கள் பாரிய ரஷ்ஷிய ராணுவத்தை புற முதுகிடச் செய்தார்கள்.

வல்லரசுகளால் பாவிக்கப்படும் போராட்டங்களுக்கு இறுதியில் என்ன கிடைக்கும் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு !

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கியின் மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த நகரமான இஸ்தான்புல், போச்புருஸ் கடலால் இரண்டாக பிரிக்கப் படுகின்றது. மேற்கு பகுதி, ஐரோப்பிய நிலமாகவும், கிழக்கு பகுதி ஆசிய நிலமாகவும், புவியியல் ரீதியாக அல்ல, அரசியல் ரீதியாக கருதப்படுகின்றது. இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பிரமாண்டமான பாலம், மனிதனால் கட்டப்பட்ட அதிசயங்களில் ஒன்று. இது இன்னொரு பக்கம், துருக்கியின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது எனலாம். மேலைத்தேய கலாச்சாரமும், கிழகதிய கலாச்சாரமும், லிபரல் சித்தாந்தமும், இஸ்லாமிய மதமும், என்று நாடு முழுக்க இரு வேறு பட்ட உலகங்களை காணலாம். அரசாங்கம் என்னதான் துருக்கியை ஒரே மொழி பேசும், ஓரின மக்கள் வாழும் நாடாக காட்ட விரும்பினாலும், சிறுபான்மை மொழி பேசும் இனங்கள் அடக்கப்பட்ட நீண்ட வரலாறு அதற்குண்டு. அதன் எதிர்வினையாக, இரண்டாவது சிறுபான்மை இனமான குர்து மொழி பேசும் மக்களின் தாயகத்திற்கான ஆயுதப் போராட்டம் இன்று சர்வதேச பிரச்சினையாக மாறி பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அந்த மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்குவதற்காக ஏவி விடப்பட்ட துருக்கி இராணுவம் பல மனித உரிமை மீறல்களை புரிந்து, பலரை காணாமல் போக வைத்து இருந்த காலகட்டத்தில், “காணாமல் போவதகெதிரான சர்வதேச கமிட்டி ” என்ற மனித உரிமைகள் நிறுவனம் ஒழுங்கு படுத்திய மகாநாட்டில் கலந்து கொண்ட போது, நான் பார்த்த விடயங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

முதலாம் உலக யுத்தத்தில் தோல்வியை தழுவிய அன்று ஒட்டோமான் சாம்ராஜ்யத்தை ஆண்ட சக்கரவர்த்தி பதவியில் இருந்து நீக்கபட்டு , அரசியல் உள்நோக்கம் கொண்ட கமல் அட்டடுர்க் என்ற இராணுவ அதிகாரி துருக்கியின் ஆட்சியை கைப்பற்றிய பிறகு அது நவீனமடைய தொடங்கியது. மேற்கு ஐரோப்பிய பாணியில் கல்வி, ஒரு கலாச்சார புரட்சியை உருவாக்கியது. பழமைவாதத்தை ஆதரித்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மதச்சார்பற்ற கொள்கை வலியுறுத்தப் பட்டது. இவ்வாறு அட்டடுர்க் அரசாங்கம் ஒருபக்கம் முர்போக்கனதாக இருந்தாலும், மறு பக்கம் பாசிச மயமாகி சிறுபான்மை இனங்களை அடக்கி, துருக்கி மொழி திணிப்பு இடம்பெற்றது. ஆர்மேனிய மொழி பேசும் மக்கள் இந்த பேரினவாதத்திற்கு அதிக விலை கொடுத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள்படுகொலை செய்யப் பட்டு, மிகுதிபேர் தமது குடியுருப்புகளை விட்டு விரட்டப்பட்டனர்.

அந்த இனப்படுகொலைக்கு பிறகு எஞ்சியிருந்தோறும், பிற இனத்தவர்களும், துருக்கி மொழி மட்டுமே பேச வேண்டுமென கட்டாய படுத்தப் பட்டனர். அவ்வாறே தென் கிழக்கு மலைபிரதேசங்களில் வாழும் குர்து மொழி பேசும் மக்களின் இன அடையாளமும் புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் “மலைநாட்டு துருக்கியர்” என்று அழைக்கப்பட்டனர். இஸ்லாம் என்ற மதம் மட்டுமே இவ்விரு இன மக்களுக்கும் பொதுவானது. மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய துருக்கி மொழி பேசுவோரும், இந்தோ-ஈரானிய மொழி பேசும் பூர்வ குடிகளான குர்த்தியரும், கலாச்சார ரீதியாக வேறுபட்டவர்கள். இத்தகைய கலாச்சார பாரம்பரியம் கொண்ட மக்கள், தமக்கென பாடசாலை இன்றி துருக்கி மொழியில் கல்வி கற்க வேண்டிய நிலை. எந்த பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு குர்து மொழிப் பெயர் இட்டால் சிறை செல்ல வேண்டும். குர்து மொழியை வீதியில் பேசுவது கூட தடை செய்ய பட்டது. அந்த இன மக்களுக்கே உரிய “நெவ்ரோஸ்” எனப்படும் புத்தாண்டு கொண்டாடுவது கூட அண்மைக்காலமாக தடை செய்யப் பட்டிருந்தது.

துருக்கி-குர்து கலப்பின பெற்றோருக்கு பிறந்த அப்துல்லா ஒச்சலான், குர்திய தொழிலாளர் கட்சி (pkk) என்ற ஆயுதபோராட்ட வழியில் நம்பிக்கை கொண்ட அமைப்பை நிறுவிய பிறகு, அந்த பிராந்தியத்தில் வன்முறை கலாச்சாரம் பரவியது. துருக்கியின் போலிஸ், இராணுவத்தை குறிவைத்து கெரில்லாக்கள் தக்க தொடங்க, பதிலடியாக இராணுவம் அப்பாவி பொதுமக்களை கொன்று, அவர்களின் குடியிருப்புக்களை அழித்து, பெண்களை பாலியல் துன்புருதலுக்குள்ளாக்கி , சொத்துகளை நாசமாக்கி, அடக்குமுறையை ஏவி விட்டது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராளிகளை மாற, தனது போராட்டம் முன்னேறி, அது ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று ஒச்சலான் கணக்கு போட, தள நிலைமை எதிர்பாராத அளவு மோசமடைந்தது.

துருக்கி இராணுவம் பெருமளவு குர்து மக்களை, அவர்களது கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி, ஆயிரம் மைல்களுக்கு அப்பால், துருக்கியின் மேற்கு பகுதியில் குடி அமர்த்தியது. நேட்டோ அமைப்பில் உறுபினராக இருந்ததால், அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து இராணுவ ஆலோசனைகள், ஆயுத தளபாடங்கள் ஆகியனவற்றை பெற்றுக் கொண்டது. இதனால் பி.கே.கே.யின் தாக்குதிறன் கணிசமாக குறைக்கப்பட்டு, போராளிகள் மலைகளில் மட்டும் முடங்கி கொள்ள நேர்ந்தது. அண்டை நாடான சிரியாவை, பி.கே.கே. நீண்ட காலமாக தனது பின்தளமாக பயன்படுத்தியது. இயக்கத்தின் தலைவர் ஒச்சலான் அங்கே தங்கியிருந்தது மட்டுமல்ல, பல பயிற்சி முகாம்களும் இருந்தன. பின்னர் துருக்கி அரசாங்கம் சிரியா மீதும் படையெடுப்போம் என்று மிரட்டியதால், அங்கிருந்து வெளியேறிய ஒச்சலனை கென்யாவில் வைத்து, துருக்கிய கொமாண்டோக்கள் சிறை பிடித்து கூட்டி வந்தனர். இந்த பின்னடைவு,பி.கே.கே. இயக்கத்தில் பெரும் பதிப்பை உண்டாக்கி, இரண்டாக உடைந்து பலவீனப்பட்டது. தற்போது பி.கே.கே.யின் முக்கிய முகாம்கள் துருக்கி எல்லையோரமாக இருக்கும் ஈராக்கின் மலைப் பகுதிகளில் உள்ளன. துருக்கி இராணுவம் அவ்வப்போது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு ஈராக்கினுள் நுழைந்து திரும்பி வரும். இது தான் இன்றுள்ள நிலைமை.

2006 ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இஸ்தான்புல் நகர மத்தியில் இருந்த “கலதசரை” விளையாட்டு மைதானத்திற்கு அருகில் குழுமிய, காணமல் போன இளைஞர்களின் அன்னையருடன், பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த சர்வதேச பிரதிநிதிகளும் இணைந்து கொண்ட ஊர்வலம், தானுண்டு தன் வீடுண்டு என்று வாழும் நகர மக்களையும் மட்டுமல்ல, பெருமளவு பொலிசரையும் கவர்ந்தது. தொடர்ந்து ஒரு உணவு விடுதியின் மண்டபத்தில் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டிற்கு , அனைத்து பத்திரிகைகளுக்கும் அழைப்பு விடுக்க பட்டிருந்தாலும், வந்ததென்னவோ ஒரு சில இடதுசாரி சார்பு பத்த்ரிகையாளர்கள் தான். இந்தப் போக்கு பின்னர் குர்திஸ்தான் நகரமான டியார்பகிரில் நடந்த மகாநாட்டிலும் காணப்பட்டது. பாதுகாப்பு படைகளால் பிடித்து செல்லப் பட்டு காணாமல் போனவர்கள், ஒன்றில் சிறுபான்மை குர்த்தியராக இருப்பார்கள், அல்லது இடதுசாரி கட்சி உறுப்பினராக இருப்பார்கள். இந்த காரணத்தால் துருக்கி அரசாங்கத்தை ஆதரிக்கும் பெரும்பான்மை பத்திர்கையளர்கள் புறக்கணித்தனர்.

துருக்கியின் தென் கிழக்கு மூலையில் இருக்கும் டியார்பகிர் நகரத்திற்கு சர்வதேச பிரதிநிதிகளுடன் வந்திறங்கிய போது வித்தியாசங்கள் தெரிய ஆரம்பித்தன. குர்திய தேசியவாத கட்சி ஆளும் நகரசபை, மகாநாட்டிற்கு என மண்டபத்தை ஒதுக்கி தந்தது. அயல் கிராமங்களில் இருந்தும் சாதாரண குர்து மக்கள் மகாநாட்டிற்கு கலந்து கொள்ள வந்திருந்தனர். நான்கு நாட்கள் நடந்த மகாநாட்டில் தமது கண்ணீர் கதைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். வீடிற்கு வந்து தமது பிள்ளைகளை கூட்டி சென்ற இராணுவத்தினர், சில நாட்களின் பின்னரும் விடுதலை செயாதலால், தேடிப்போகும் பெற்றோருக்கு தமக்கு தெரியாது என கை விரித்த சம்பவங்கள். அப்படி “காணாமல் போனவர்கள்” சில மதங்களின் பின்னர் ஆள் அரவமற்ற பகுதிகளிலோ, அல்லது புதைகுளிகளிலோ உயிரற்ற சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவங்கள், போன்றவற்றை, மனதை உருக்கும் விதத்தில் கூறிய போது, மகாநாட்டு மண்டபத்தில் பலர் அழுததை காணக்கூடியதகவிருந்தது. காணமல் போனோர் சங்கத்தை உருவாக்கியவர் ஒரு துருக்கி தாய். அவர் பேச எழுந்த போது, பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து விண்ணதிர முழக்கமிட்டனர். இதனை அங்கிருந்த சிவில் உடையில் இருந்த போலிஸ் அதிகாரிகள் எரிச்சலுடன் கவனித்தனர். அந்த பெண்மணியின் மகன் ஹசன் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர். நன்றாக படித்து நல்ல வேலைக்கு போகக்கூடிய மத்திய தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் பட்டம், பதவியை உதறி தள்ளி விட்டு, டியர்பகிர் நகரத்திற்கு வெளியே இருந்த, குர்திய சேரி மக்களுக்கு சேவை செய்து வந்தார். இவ்வாறு அடித்தட்டு மக்கள் மத்தியில் வேலை செய்வது கூட துருக்கி அரசாங்கத்தின் பார்வையில் குற்றமாக தெரிந்தது. திடீரென ஒரு நாள் காணமல் போன அந்த வாலிபனின் உடல் பின்னர் ஒரு மயானத்தில் கண்டெடுக்கப் பட்டது. இந்த சம்பவத்தால் ஹசனின் குடும்பம் துவண்டு விடவில்லை. வயதான தாயும், ஒரேயொரு சகோதரியும் காணாமல் போவதர்க் எதிரான சங்கத்தை ஆரம்பித்து நீதிக்காக போராடுகின்றனர். இன்று அந்த சங்கத்தின் கிளைகள் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளிலும், கொலம்பியா தென் அமெரிக்கா நாடுகளிளுமாக, சர்வதேச நிறுவனமாக மாறியுள்ளது.

மாநாட்டிற்கு வந்திருந்த சிவில் போலிஸ் தலையிட்டு குழப்பிய சம்பவம் ஒன்றும் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஒரு வயதான குர்திய பெண்ணும், ஒரு துருக்கி இளம் பெண்ணும் “வாழ்க குர்திஸ்தான்” என்று கோஷம் எழுப்பிய காரணத்திற்காக, போலிஸ் அலுவலகம் கூட்டிசென்று விசாரிக்கப் பட்டனர். துருக்கியில் இப்போதும் குர்து மக்களின் தாயகத்தை குறிக்கும் “குர்திஸ்தான்” என்ற சொல்லை பயன்படுத்த தடை உள்ளது. மேலும் போலிஸ் உளவாளி ஒருவர் மண்டபத்தின் பின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, மகாநாட்டில் நடப்பனவற்றை வீடியோ வில் பதிவு செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாநாடு கூட்டங்கள் ஓய்ந்த நேரம், இருபது வயதே மதிக்கத்தக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, புரட்சி பாடல்களை பாடி ஆடினர். இறுதி நாளன்று பலஸ்தீன இசைக் குழுவொன்றின் இன்னிசைகச்சேரி களை கட்டியது . தொடர்ந்து கலந்து கொண்ட சர்வதேச பிரதிநிதிகளுக்கு குர்திய சால்வை வழங்கி கௌரவித்து, “சர்வதேச கீதம்” பாடி மாநாடு இனிதே முடிந்தது. அடுத்த நாள் டியர்பகிர் நகரில் இருந்து சில நூறு கி.மி. தூரத்தில் இருக்கும் “ஹஸந்ஹெய்ப்” என்ற பண்டைய நாகரீகத்தின் சிதிலங்களை பார்வையிட சென்றோம். வழி நெடுக பச்சை புல்வெளிகள், மலைகள், பள்ளத்தாக்குகள் என்று அழகிய இயற்கை காட்சி. இடையிடையே இது ஒரு யுத்த பூமி என்பதை நினைப்பூட்டும் துருக்கி இராணுவ வாகன தொடரணிகள். குர்து மக்களின் கலாச்சார சொத்து என வர்ணிக்கப்படும் பண்டைய நாகரீகம், மலையுச்சியில் சிறு சிறு குகைகள் போன்று தோற்றம் தரும், இடிந்த வீடுகளை கொண்டுள்ளது. சிறுவர்களின் கற்பனை கதைகளில் வாசித்ததை நேரே பார்ப்பது போலிருந்தது. ஆயிரம் வருடங்களை கடந்தும் அழியாது நிலத்து நிற்கும் அந்த பண்டைய நாகரீக சின்னங்களை இனிமேல் பார்க்க முடியுமா என்பது கேள்விகுறி. ஏனெனில் அந்த இடத்தில் ஒரு பிரமாண்டமான அணைக்கட்டை கட்டி, அனைத்தையும் தண்ணீருக்குள் மூழ்கடிக்க துருக்கி அரசு திட்டம் போட்டுள்ளது.

குர்திய மக்களுக்கு மலைகள் மட்டுமே சொந்தம் என்று ஒரு மேலைத்தேச எழுத்தாளர் நூல் வெளியிட்டார். அவர்களில் பெரும்பான்மையானோர் ஏதுமற்ற ஏழைகள். அதனாலேயே போரினால் இரட்டிப்பு பாதிப்புக்குள்ளாகும் போது, ஆயுதமேந்தும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். பி.கே.கே. கொண்டு வந்த குர்து தேசியவாதம், பல பிரதேச வேறுபாடுகளை கொண்ட குர்து மக்களை ஓரணியில் சேர்த்து. ஐரோப்பிய நகரங்களில் பெற்றோருடன் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த சில வாலிபர்கள், இளம் பெண்கள் கூட, தமது சொகுசான வாழ்க்கையை உதறித்தள்ளி விட்டு, விடுதலை வேட்கையுடன் ஆயுதம் தரித்த போராளிகளாக, பனி படர்ந்த மலைகளில் துருக்கி இராணுவத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அழிவுகள், துயரங்கள், எல்லாமே இப்போதும் தொடர்கதையாக இருப்பினும் யுத்தம் ஒரு இனத்தின் இருப்பை நிச்சயப் படுத்தியிருக்கிறது.

http://kalaiy.wordpress.com/2008/03/14/%e0...ae%af%e0%ae%bf/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.