Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடத்தல் தீவு பகுதி இராணுவத்தினர் வசம்-பாதுகாப்பு அமைச்சகம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vidaththl-thiivu.jpg

வீரகேசரி இணையம் 7/16/2008 8:39:44 AM -

மன்னார் விடத்தல் தீவு பகுதியை இராணுவத்தினர் இன்று காலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இப்பகுதியிலேயே கடற்புலிகளில் பிரதான தளம் அமைதுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

விடத்தல்தீவை நோக்கிய படை நகர்வு பாரிய பதிலடியைச் சந்திக்குமென எமது ஆய்வாளர்கள் அங்கிருக்கிற வெட்ட வெளிகளையெல்லாம் காட்டி தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களிற்கு பாதகமாகவிருக்குமென அரூடம் கூறியிருந்தனர். புலிகள் விடத்தல்தீவைத் தக்க வைக்க படையினருடன் கடுமையாக மோதுவார்களென எல்லோர் மத்தியிலும் எதிர்பார்ப்பதிருந்தது. ஆனால் பெரியளவில் மோதல்கள் எதுவுமின்றி படையினர் இன்று விடத்தல்தீவைக் கைப்பற்றியுள்ளனர்.

படையினரின் அகலக்கால் பதிப்பு தொடர்கிறது. விடத்தல்தீவிலிருந்து கிழக்காக பெரியமடு பெரியமடுவிலிருந்து வடக்காக நட்டாங்கண்டல் நட்டாங்கண்டலிருந்து தென்கிழக்காக பாலமோட்டைவரை படையினர் தம்மை விரிவாக்கம் செய்துள்ளனர்.

இவ்வளவு பாரிய நிலப்பரப்பு பாரிய சமர்களின்றி வல்வளைப்புச் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்த அனுமதி மேலும் சில பகுதிகள் வல்வளைப்புச் செய்யும்வரை இருக்கலாம். இதைப்பற்றி நாம் கவலைப்பட எதுவுமில்லை.

போறவரைக்கும் போகட்டும்... போய் புடுங்கிறளவுக்கு புடுங்கி பாக்கட்டன்....

  • கருத்துக்கள உறவுகள்

:) விடத்தல்த் தீவை ஏற்கனவே பிடித்துவிட்டோம் என்று கூறினார்கள். இப்போது மீண்டும் பிடித்திருக்கிறார்கள். நாளைக்குத் திருப்பியும் பிடிப்பார்கள். இதையெல்லாம் பெரிசாக எடுத்துக்கொண்டு.

ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும். புலிகள் தமக்குத்தாமே தூக்குக்கயிறு மாட்டிக்கொள்ள மாட்டார்கள். விடத்தல்த்தீவிலுள்ள கடற்புலிகளின் தளம் மூலம்தான் புலிகளுக்கு எல்லா விநியோகங்களும் வருகிறதென்றால் அதைத் தக்கவைக்க அவர்கள் போராடித்தானிருப்பார்கள்.

இதிலிருந்து புலனாவது என்னவென்றால், ஒன்றில் ராணுவம் விடத்தல்த்தீவைப் பிடிக்கவில்லை, அல்லது ராணுவம் கூறுவதுபோல விடத்தல்த்தீவு அப்படியொன்றும் பெரிதான கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

விடத்தல்தீவை இவர்கள் சொன்னது போல 1990க்குப் பிறகு இப்பதான் இராணுவம் அடைகிறது என்பது பொய். ஜெயசிக்குறு காலப்பகுதியில் அப்பகுதியில் இராணுவம் - கடற்படை நிலை கொண்டிருந்து.. பின்னர் ஓயா அலைகளோடு அள்ளுப்பட்டு ஓடினவை.

விடத்தல் தீவை.. ஒரு இராணுவ கேந்திர மையமாக மட்டுமன்றி பெரிய நகராகக் கூட அரசு சர்வதேசத்துக்கு காட்டி வந்தது. எப்போ பெரிய மடுவுக்குப் போனார்களோ அப்பவே விடத்தல் தீவை விடுவித்து விட்டார்கள் என்பதுதான் கள யதார்த்தம்.

ஆனால் இப்போ வெளிநாட்டு பிரதிநிதிகள்.. ஐநா பிரதிநிதி.. சார்க் மாநாட்டு.. மாகாண சபைத் தேர்தல்கள் என்று நாடு பிசியா உள்ள இந்த நிலையில் அரச பிரச்சாரத்துக்கு.. அரசு தன்னைப் பலமான சக்தியாக இனங்காட்ட விடத்தல் தீவு இப்பதான் விடுவிக்கப்பட்டிருக்கிறது.

அரசாங்கம் செய்யுறதுக்கு தமிழனின் நிலப்பறிப்புத்தான் சிங்களவனுக்கு முதலீடு என்றாகிப் போச்சு.

விடுதலைப்புலிகளும் நாளுக்கு நாள் இழப்புக்களை சந்தித்து வரும் நிலையில் ஆளணி வளத்தை பாதுகாக்க சில மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டியது கட்டாயம் என்ற நிலையில்.. அரசுக்கு இப்போ போர் சாதகமான திசையில் இருப்பது போல ஒரு தோற்றப்பாடு இருக்கிறதே தவிர.. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது.. புலிகள் திருப்பித் தாக்கும் வரை மர்மமாகவே இருக்கும்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,

திருப்பித்தாக்குவதற்கு முடியாத அளவுக்கா புலிகள் பலமிழந்து விட்டார்கள் ? நான் அப்படி நினைக்கவில்லை. ஆளணிப் பற்றாக்குறை என்பது புலிகளுக்கு இருக்கலாம். ஆனால் ஆளணிகளைப் பாவிக்க வேண்டிய இடத்தில் பாவிக்க முடியாதளவிற்கு புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்றும் சொல்ல முடியாது.ஏதோ ஒரு ஆயத்தப்படுத்தல்தான் புலிகளை மன்னார் களமுனையில் தற்காப்பு யுத்தத்திற்குள் வைத்திருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. எதுவாக இருந்தாலும் தலைவர் செய்வது தீர்க்க தரிசனத்துடன் தான் இருக்கும்.பொறுத்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நிலவும் தற்போதைய இராணுவ நிலைமை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலமிழந்துவிட்டார்கள் என்று கருதுகின்றீர்களா?

ஆம். விடுதலைப் புலிகள் பலமிழந்துவிட்டார்கள் என்ற கருத்து நிலை ஒன்று உள்ளது. ஆனால்இ கடந்த காலத்தை எடுத்துக்கொண்டால் நிகழ்காலம் தமக்கு பாதகமாக அமையும் போதெல்லாம் புலிகள் தமது நடவடிக்கைகளை அடக்கி வாசித்துள்ளார்கள்.

ஆனால்இ அக்காலப் பகுதியில் அவர்கள் சோம்பல் முறித்துக்கொண்டோ நேரத்தை வீணடித்துக்கொண்டோ இருப்பதில்லை.

அந்த வகையில்இ அவர்கள் தற்போது பெரும் தாக்குதலுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றார

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிபிசி செய்தியில் இருந்து விடத்தல் தீவு பற்றி அரசு செய்த பெரிய தோற்றப்பாட்டுடனான பிரச்சாரத்தின் விளைவை அறிய முடிகிறது...

'Tamil Tiger sea base captured'

The Sri Lankan government says it has captured a key town in the north of the island from the Tamil Tiger rebels.

Vidattaltivu, the rebels' main sea base on the north-west coast, is 12 miles (20km) from Mannar.

This is the first time since Indian peace keeping forces left Sri Lanka in 1990 that troops have taken over the town, the defence ministry said.

The rebels have been fighting for a separate state for the island's ethnic Tamil minority for a generation.

Defence officials say the loss of Vidattaltivu would be "a fatal blow" to the Tigers as the coastal town is an important base used by the Sea Tigers - the naval wing of the rebels.

There has been no comment from the rebels about the report.

There has been intense fighting between the rebels and the army in the north over the last few weeks.

Both sides claim to have inflicted heavy casualties on the other.

It is impossible to verify either account because the government bars journalists from the frontline areas.

The government says the Tigers are on the verge of being defeated and senior military officials say only 4,000-5,000 Tiger fighters remain.

They have vowed to destroy the rebel group by the end of the year.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7508829.stm

----------

இராணுவத்தால் ஆனையிறவு நோக்கிய நகர்வுகளையும்.. மணலாறு ஊடான முல்லைத்தீவு நோக்கிய நகர்வுகளையும் நினைத்த படிக்கு செய்ய முடியாமை பற்றிய அறிவின்மையோடா இந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.. என்ற கேள்வி எழவே செய்கிறது..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போறவரைக்கும் போகட்டும்... போய் புடுங்கிறளவுக்கு புடுங்கி பாக்கட்டன்....

இது தான் என் கருத்தும் அவர்களுக்கு ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது. அப்போது துண்டை காணோம் துணியை காணோம் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் மனதை சோர்வடையச் செய்யும் செய்திதான், ஆனாலும் புலிகள் மீது நம்பிக்கை என்றுமே இழந்தது இல்லை. புலிகள் தான் எம் பலம், புலிகளிற்கு நாம் தான் பக்கபலமாக இருக்கவேண்டும்!

மன்னார் விடத்தல்தீவு நகரை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்?

மன்னார் விடத்தல்தீவு நகரப்பகுதியை இராணுவத்தின் 58 படைப்பிரிவு தமது முழுமையான கட்டுப்பட்டின்கீழ் கொண்டுவந்திருப்பதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

வடமேல் கரையோரப் பகுதியில் மன்னாரிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் விடத்தல்தீவு அமைந்திருப்பதாகவும், இங்கு விடுதலைப் புலிகளின் முக்கிய கடற்புலி முகாம் அமைந்திருந்ததாகவும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 1990ஆம் ஆண்டு இந்திய அமைதிகாக்கும் படையினர் நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர் முதற்தடவையாக விடத்தல்தீவு விடுதலைப் புலிகளிடமிருந்து பாதுகாப்புத் தரப்பினரால் விடுவிக்கப்பட்டிருப்பதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்புலிகளுக்கு மிகவும் முக்கியமான தளமாக விளங்கிய விடத்தல் தீவு முகாமின் வீழ்ச்சி அவர்களுக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக விடத்தல்தீவு பகுதியில் இரண்டு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வந்ததாகவும், இந்த மோதல்களில் 30ற்கும் அதிகமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்புத் தரப்பில் கூறப்படுகிறது.

எனினும், கடற்புலிகளின் விடத்தல் தீவு முகாம் கைப்பற்றப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை.

http://www.tamilseythi.com/srilanka/vidath...2008-07-16.html

வாழ்த்துக்கள். . .

நாம் நினைப்பதுபோல் தாக்குதல் செய்ய முடியாது. காரணம் எதிரி தாக்குதலை தொடுக்கும்போது எதிர்தாக்குதல் செய்தால் இழப்பு எமக்குத்தான். அதை ஏன் யாருமே புரிந்துகொள்ள மறுக்கின்றீர்களோ தெரியாது. சாதாராண ஒரு அறிவுள்ள நாங்களே ஆயிரம் சிந்திக்கும்போது இத்தனை ஆயிரம் வீரர்களை வைதது பாதுகாக்கும் எம் தலைவர் எத்தனை ஆயிரம் சிந்திப்பார். அவர் கட்டாயம் ஓரு வெற்றி செய்தி அளிப்பார். அதுவரை பொறுத்திருங்கள். தலைலவரின் பொறுமையை இழப்பாக நினைக்காதீர்கள். அது ஒரு பெரிய பாய்ச்சலிற்கு அறிகுறி. . சாதாரண ஒரு காட்டு விலங்கான புலியே பதுங்குகின்றதென்றால் அதன் பாய்ச்சல் பாரியதாக இருக்கும்.

எம் புலி வீரர்களின் பதுங்கள் உலகிற்கே தெரியும் எப்படியானதாக இருக்குமென்று . . . பாய்வார்கள் அன்று மகிந்த அல்ல மற்றவர்களும் வாயடைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை பரணி. புலிகளின் தாக்குதல் தந்திரமே வித்தியாசமானது. உறுதியுடன் காத்திருப்போம். எமது பங்களிப்பை அவர்களுக்கு கட்டாயம் அவர்களுக்கு செய்தல் தான் எமது வரலாற்று கடமை.

1999 ஆம் ஆண்டு சந்திரிக்கா சன்னதம் ஆடினா இப்ப 2008 இல மகிந்த சனனதம் ஆடுது ..... ஆடங்கும் வரை ஆடட்டும்.

வழமையாக மனிதருக்கு வாயிற்னுள் தான் பல் இருக்கும் மகிந்தவிற்கு வாயே பல்லு .

வழமையாக மனிதருக்கு வாயிற்னுள் தான் பல் இருக்கும் மகிந்தவிற்கு வாயே பல்லு .

மகிந்தவை இப்பிடியும் திட்டலாமா?...

நான் டியூப் லையிட் எனக்கு இது சரியா விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

:mellow: எல்லாம் நன்மைக்கே என்று எனக்கு தென்படுகிறது

ஏன் என்றால் முன்னேறி வரும் போது நிறைய ஆயுதம்

கொண்டுவருவார்கள் பாருங்க விட்டுற்று ஓடும் போது

யாருக்கு கிடைக்கும் எம் படைக்கே............

முனிவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.