Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுட்டுத்தள்ள வேண்டும்''

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pg1.jpg

மீனவர்கள் நலனுக்காகவும்,கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவும் ராமேஸ்வரத்தில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம்நடக்குமென்று கடந்த வாரம் விஜயகாந்த் அறிவித்த போதே, மாவட்டத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது.

தவிர, ஆர்ப்பாட்டத்துக்கு முந்தைய நாள் வேதாரண்யத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், சிங்கள கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால், ராமேஸ்வரம் உள்பட தமிழக கடலோரப் பகுதிகள் மிகவும் சென்சிட்டிவ் நிலைக்கு மாற, அந்தச் சூழலில் விஜயகாந்த் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமும் முக்கியத்துவம் பெற்று விட்டது.

ஆகவே,மத்திய-மாநில உளவுத்துறையினர் ராமேஸ்வரத்தில் குவிக்கப்பட்டு விஜயகாந்த் பேச்சு, மீனவர்களின் எழுச்சி, மக்களின் ஆதரவு, கூடிய கூட்டம் என அத்தனை நடவடிக்கைகளையும் வீடியோவிலும், ஆடியோவிலும் பதிவு செய்தனர்.

நிலவரம் தெரிந்தோ, தெரியாமலோ சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விஜயகாந்த் ஆவேச நர்த்தனம் ஆடித் தீர்த்து விட்டார்.

ஒரு மணி நேரம் அவர் பேசிய பேச்சில் கலைஞரை மட்டுமல்ல; தங்கம் தென்னரசு, பொன்முடி. எ.வ.வேலு, சுப. தங்கவேலன் ஆகிய தி.மு.க. அமைச்சர்களையும் விளாசித் தள்ளிவிட்டார். அவருடைய பேச்சுக்கு ஆரவாரத்தோடு கூட்டமும் வரவேற்புக் கொடுக்க, ஒருகட்டத்தில் முழுமையாக உணர்ச்சிவசப்பட்ட சூழலில்தான், ``தமிழக மீனவர்களைச் சுட்டுத் தள்ளும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திராணி இல்லாத ஆளும் தி.மு.க.வினரைச் சுட்டுத்தள்ள வேண்டும்'' என்று முழங்கினார் விஜயகாந்த்.

அவரின் அந்தப் பேச்சைக் கேட்டு ஒரு கணம் ஸ்தம்பித்த ஒட்டுமொத்த கூட்டமும் அடுத்த கணமே ஆரவாரித்தது. அதனையும் வீடியோ எடுக்கத் தவறவில்லை மாவட்ட உளவுத்துறை.

சரியாக பதினொன்றரை மணிக்குப் பேச ஆரம்பித்த விஜயகாந்த், எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் கலைஞரைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்.

``கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக சிங்கள கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த மீனவர்களின் எண்ணிக்கை முந்நூற்றைம்பது இருக்கும். அவ்வளவு பேரும் கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் சாகடிக்கப்பட்டிருக்கிறார்க

திமுகவினரை சுட்டுத் தள்ள சொன்னேனா - விஜய்காந்த்

புதன்கிழமை, ஜூலை 16, 2008

சென்னை: திமுகவினரை சுட்டு தள்ள வேண்டும் என்று நான் பேசவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 13ம் தேதி தேமுதிக சார்பில் ராமேசுவரத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டு வருவதைக் கண்டித்து மிக பிரமாண்டமான முறையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏராளமான அளவில் மீனவர்கள் பங்கு பெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தை பற்றி அங்கு வந்திருந்த பல பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் தத்ரூபமாக வெளியிட்டன. ஆனால் ஒரு வார இதழ், நான் அங்கு பேசாததை பேசியதாக வெளியிட்டிருக்கிறது.

இந்த வாரம் 20ம் தேதி வெளியான அந்த பத்திரிகையில் முதல் பக்க அட்டையிலேயே எனது புகைப்படத்துடன், ஆளும் திமுகவினரை சுட்டு தள்ள வேண்டும் என்று நான் பேசியதாக தலைப்பிடப்பட்டுள்ளது.

பத்திரிகையின் உட் பகுதியில் வந்துள்ள செய்தியிலும், தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க திராணி இல்லாத ஆளும் திமுகவினரை சுட்டுத் தள்ள வேண்டும் என்று நான் முழக்கமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறியவாறு நான் அங்கு பேசாதது மட்டுமல்ல, எங்குமே பேசக் கூடியவன் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பேசாத ஒன்றை ராமேசுவரத்தில் பேசியதாக செய்தி வெளியிட்டிருப்பது வேண்டுமென்றே திட்டமிட்டு திரித்து வெளியிடப்பட்டிருப்பது மட்டுமல்ல, என்னைத் தனிப்பட்ட முறையில் அவதூறு செய்வதற்கும், நாட்டு மக்களிடையே கலவரத்தை தூண்டி அமைதியைச் சீர்குலைக்கும் செயலாகவும் அமைந்துள்ளது.

கடந்த 6ம் தேதியன்றும் இதே போன்று அட்டையில் என் புகைப் படத்தை போட்டு, தன்னிலை மறந்து பேசிய விஜயகாந்த், என்று தலைப்பிட்டு நடக்காத சம்பவத்தை நடந்தது போல் அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இப்பொழுதும் அதைவிடப் பெரிய தவறை மீண்டும் செய்துள்ளது. எந்த பத்திரிகையும் நடுநிலையோடு செய்திகள் வெளியிடுவதையும் விமர்சனம் செய்வதையும் நான் முழு மனதோடு வரவேற்கிறேன்.

ஆனால் உள்நோக்கத்தோடு செய்திகளை இட்டுகட்டி வெளியிட்டு பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. வேண்டுமானால் அந்த பத்திரிகை ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படட்டும். ஆனால் பத்திரிகை தர்மம் தமிழ்நாட்டில் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

அவதூறு செய்திகளை தொடர்ந்து பரப்புவதும், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதும், தனிப்பட்ட முறையில் மக்களிடம் என்னைப் பற்றி தவறான கருத்தை பரப்ப முயலுவதும் தொழிலாகக் கொண்டுள்ளதால், அந்த பத்திரிகையின் மீது சட்டப்படி அவதூறு வழக்கு தொடர்வதற்கு அந்த பத்திரிகைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.

வழக்கமாக இதுபோன்ற மறுப்பு அறிக்கைகள் எல்லாம் விட மாட்டார் விஜய்காந்த். முரட்டு பேச்சு பேசிய காடுவெட்டி குரு கைதாகியுள்ள நிலையில் இந்த அறிக்கை விஜய்காந்திடம் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தற்ஸ்தமிழ்

இன்னொரு அரசியல்வாதி..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இன்னொரு அரசியல்வாதி..
என்று நிரூபிப்பது தவறா?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னொரு அரசியல்வாதி..

என்று நிரூபிப்பது தவறா?

இல்லையா என்பதல்ல பிரச்சினை....

இவர் இப்படி பேசலாமா.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஈழத்தமிழனுக்கோர் நல் வாழ்வு கிட்டும் வரை எனது பிறந்த நாளை கொண்டாட மாட்டேன்" சபதம் எடுத்த கப்ற்றன் எங்கே......?

"இலங்கை அரசுக்கு ஆயுதம் தருவதில் தவறேதும் கிடையாது" மத்திய அரசுக்கு மாரடிக்கும் அற்புதமான அரசியல்வாதி.

ஐயா கனவானே

இரண்டரை மணி நேர திரைப்படம் அல்ல எங்கள் வாழ்வு. ஓடி வந்து சுவர் ஏறி எகிறி எதிரியை வீழ்த்த உங்களை அழைக்கவில்லை. கூண்டோடு தமிழனை அழிக்க முனையும் சிங்கள அரசுக்கு உதவியதாக, ஒரு மதுரைத் தமிழனுக்கு பழி வந்திடாமல் நடந்து கொண்டாலே போதும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஈழத்தமிழனுக்கோர் நல் வாழ்வு கிட்டும் வரை எனது பிறந்த நாளை கொண்டாட மாட்டேன்" சபதம் எடுத்த கப்ற்றன் எங்கே......?

"இலங்கை அரசுக்கு ஆயுதம் தருவதில் தவறேதும் கிடையாது" மத்திய அரசுக்கு மாரடிக்கும் அற்புதமான அரசியல்வாதி.

கப்டனும் கட்சியும் தற்போதுதான் தவழத்தொடங்கியிருக்கிறது. இப்போதே விடுதலைப்புலிகளுக்கும் விடுதலைப்போராட்டத்திற்கும் திறந்த ஆதரவு தெரிவித்தால் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விடுவார்கள் மத்திய/மாநில உளவுத்துறையினரால்.

கப்டனும் கட்சியும் தற்போதுதான் தவழத்தொடங்கியிருக்கிறது. இப்போதே விடுதலைப்புலிகளுக்கும் விடுதலைப்போராட்டத்திற்கும் திறந்த ஆதரவு தெரிவித்தால் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு விடுவார்கள் மத்திய/மாநில உளவுத்துறையினரால்.

இருந்தாலும் இலங்கை அரசு சார்பா பேசாமல் இருந்திருக்கலாம் மதுரைக்காரர். அதோட அவர் மதிபப்பு போயிடுச்சு சார்.

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டுத்தள்ள வேண்டும்

சமீபத்தில் நாமக்கல்லில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், `மக்களுக்குத் துரோகம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு நல்ல சாவே வராது' என்று முழங்கிய விஜயகாந்த், கடந்த பதின்மூன்றாம் தேதி ராமேஸ்வரத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில்,`ஆளும் தி.மு.க.வினரைச் சுட்டுத் தள்ள வேண்டும்' என்று அதிரடியாக முழங்கி, தி.மு.க.வினரை அதிர வைத்திருக்கிறார்.

அவருடைய அந்தப் பேச்சை மாவட்ட உளவுத்துறையினர் வீடியோவில் பதிவு செய்ததோடு, தங்களது செல்போன் மூலம் சென்னையில் உள்ள தங்கள் உயர் அதிகாரிகளுக்கு அப்படியே `லைவ்' செய்தும் விட்டார்கள். சர்ச்சைக்குரிய விஜயகாந்தின் அந்தப் பேச்சு, அவரைக் கைது செய்யும் சூழலையும் உருவாக்கியிருப்பதாக ஒரு பேச்சும் கிளம்பியிருக்கிறது.

தவிர,மாவட்ட தி.மு.க.வினரும் கொந்தளித்துப் போய் தங்கள் தலைமைக்கு ஃபேக்ஸ் மேல் ஃபேக்ஸ் அனுப்பி, விஜயகாந்தின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்க அனுமதியும் கேட்டிருப்பது, நிலவரத்தை மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறது.

மீனவர்கள் நலனுக்காகவும்,கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவும் ராமேஸ்வரத்தில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம்நடக்குமென்று கடந்த வாரம் விஜயகாந்த் அறிவித்த போதே, மாவட்டத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது.

தவிர, ஆர்ப்பாட்டத்துக்கு முந்தைய நாள் வேதாரண்யத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், சிங்கள கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால், ராமேஸ்வரம் உள்பட தமிழக கடலோரப் பகுதிகள் மிகவும் சென்சிட்டிவ் நிலைக்கு மாற, அந்தச் சூழலில் விஜயகாந்த் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமும் முக்கியத்துவம் பெற்று விட்டது.

ஆகவே,மத்திய-மாநில உளவுத்துறையினர் ராமேஸ்வரத்தில் குவிக்கப்பட்டு விஜயகாந்த் பேச்சு, மீனவர்களின் எழுச்சி, மக்களின் ஆதரவு, கூடிய கூட்டம் என அத்தனை நடவடிக்கைகளையும் வீடியோவிலும், ஆடியோவிலும் பதிவு செய்தனர்.

நிலவரம் தெரிந்தோ, தெரியாமலோ சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விஜயகாந்த் ஆவேச நர்த்தனம் ஆடித் தீர்த்து விட்டார்.

ஒரு மணி நேரம் அவர் பேசிய பேச்சில் கலைஞரை மட்டுமல்ல; தங்கம் தென்னரசு, பொன்முடி. எ.வ.வேலு, சுப. தங்கவேலன் ஆகிய தி.மு.க. அமைச்சர்களையும் விளாசித் தள்ளிவிட்டார். அவருடைய பேச்சுக்கு ஆரவாரத்தோடு கூட்டமும் வரவேற்புக் கொடுக்க, ஒருகட்டத்தில் முழுமையாக உணர்ச்சிவசப்பட்ட சூழலில்தான், ``தமிழக மீனவர்களைச் சுட்டுத் தள்ளும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திராணி இல்லாத ஆளும் தி.மு.க.வினரைச் சுட்டுத்தள்ள வேண்டும்'' என்று முழங்கினார் விஜயகாந்த்.

அவரின் அந்தப் பேச்சைக் கேட்டு ஒரு கணம் ஸ்தம்பித்த ஒட்டுமொத்த கூட்டமும் அடுத்த கணமே ஆரவாரித்தது. அதனையும் வீடியோ எடுக்கத் தவறவில்லை மாவட்ட உளவுத்துறை.

சரியாக பதினொன்றரை மணிக்குப் பேச ஆரம்பித்த விஜயகாந்த், எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் கலைஞரைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்.

``கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக சிங்கள கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த மீனவர்களின் எண்ணிக்கை முந்நூற்றைம்பது இருக்கும். அவ்வளவு பேரும் கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் சாகடிக்கப்பட்டிருக்கிறார்க

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டுத்தள்ள வேண்டும்

ஒரு மூதாட்டி விஷயகாந்தைப் பார்த்து, ``இப்போ எங்களைத் தேடி வர்ற நீங்க, முதலமைச்சரா ஆன பின்னாடி எங்கே பார்க்க வரப் போறீங்க? எங்களுக்கு எங்கே நல்லது செய்யப் போறீங்க? மத்த முதலமைச்சருங்க மாதிரி நீங்களும்தான் மாறிடுவீங்க'' என்று துணிச்சலாகக் கூற, திகைத்துப் போன விஷயகாந்த், ``எங்கிட்டே ஆட்சி, அதிகாரம் எதையும் கொடுக்காமலே இப்படி கேள்வி கேட்கலாமா? எனக்கு இன்னும் நீங்க எதுவும் செய்யலே. செய்துட்டு இந்தக் கேள்விகளை எங்கிட்டே கேளுங்க. அதுக்குப் பதில் சொல்றேன்'' என்றார்.

இப்படி நச்சென்று கேட்ட பிறகும் ஒரு உறுதி மொழி கொடுக்காமல் "பதவி கொடு..கொடு.." என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையுறதப் பாருங்கோவன்! உண்மையிலேயே "விஷய" காந்த் தான்!

இந்திய அரசியல்ல எதுகும் நடக்கலாம்... உவரும் முதமைச்சராகலாம்... பாவம் சனங்கள்.

பா.ம.க காடுவெட்டி குரு அவர் பேசிய பேச்சினால் கைது செய்யப்பட்டதைப் பார்த்துத் தான் இவரும் இப்படி பேசிப் பார்த்துள்ளார். இதன் மூலம் தன்னை அரசு கைது செய்தால் அதன் மூலம் தனக்கும் கட்சிக்கும் ஒரு பப்ளிசிட்டி கிடைத்து வோட்டு வங்கி அதிகரிக்கும் என எண்ணியிருப்பார். ஆனாலும் குத்தக்கரணம் அடித்து மறுப்பறிக்கை ஒன்றையும் பயம் காரணமாக உடனடியாக விட்டுவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜளணைநஸ்ரீ"5"ஸசுட்டுத்தள்ள வேண்டும்'' ஜஃளணைநஸஜஉழடழசஸ்ரீ"சூகுகு0000"ஸஜஃஉழடழசஸ

யாரை என்பதில்தான் சிக்கல்........

vijayakanthmg2.png

கடந்த 13.7.2008 ஞாயிற்றுக்கிழமையன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இராமேசுவரத்தில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுடப்படுவதைக் கண்டித்து, மிகப் பிரமாண்டமான முறையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான அளவில் மீனவர்கள் பங்குபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தைப் பற்றி அங்கு வந்திருந்த பல பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அவற்றை தத்ரூபமாக வெளியிட்டன. ஆனால் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை, நான் அங்கு பேசாததைப் பேசியதாக விஷமத்தனத்தோடு வெளியிட்டிருக்கிறது.

இந்த வாரம் 20.7.2008 தேதியிட்ட இதழில் வெளியிடப்பட்டுள்ள குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் முதல் பக்க அட்டையிலேயே எனது புகைப்படத்துடன் ``ஆளும் தி.மு.க.வினரை சுட்டுத் தள்ள வேண்டும்!'' என்று நான் பேசியதாகத் தலைப்பிடப்பட்டுள்ளது. பத்திரிகையின் உட்பகுதியில் வந்துள்ள செய்தியிலும் ``தமிழக மீனவர்களைச் சுட்டுத் தள்ளும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திராணி இல்லாத ஆளும் தி.மு.க.வினரைச் சுட்டுத்தள்ள வேண்டும்'' என்று நான் முழக்கமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறியவாறு நான் அங்கு பேசாதது மட்டுமல்ல; எங்குமே பேசக்கூடியவன் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

நான் பேசாத சிலவற்றை இராமேசுவரத்தில் பேசியதாகச் செய்தி வெளியிட்டிருப்பது, வேண்டுமென்றே திட்டமிட்டுத் திரித்து வெளியிட்டிருப்பது மட்டுமல்ல, என்னைத் தனிப்பட்ட முறையில் அவதூறு செய்வதாகவும் நாட்டு மக்களிடையே கலவரத்தைத் தூண்டி அமைதியைச் சீர்குலைக்கும் செயலாகவும் அமைந்துள்ளது. பத்திரிகை விற்க வேண்டும் என்கின்ற வெறும் வியாபார நோக்கில் மட்டும் இந்தச் செய்தி வெளியிடப்பட்டதாக நான் கருதவில்லை.

கடந்த 6.7.2008 அன்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் கூட இதே போன்று அட்டையில் என் புகைப்படத்தைப் போட்டு, ``தன்னிலை மறந்து பேசிய விஜயகாந்த்!'' என்று தலைப்பிட்டு நடக்காத சம்பவத்தை, நடந்தது போல் அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பொழுதும் அதைவிடப் பெரிய தவறை மீண்டும் செய்துள்ளது. எந்தப் பத்திரிகையும் நடுநிலையோடு செய்திகள் வெளியிடுவதையும் விமர்சனம் செய்வதையும் நான் முழுமனதோடு வரவேற்கிறேன். ஆனால் உள்நோக்கத்தோடு செய்திகளை இட்டுக்கட்டி வெளியிட்டு, பொதுஅமைதிக்குப் பங்கம் விளைவிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. வேண்டுமானால் அந்தப் பத்திரிகை ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படட்டும். ஆனால், பத்திரிகை தர்மம் தமிழ்நாட்டில் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

அவதூறு செய்திகளைத் தொடர்ந்து பரப்புவதையும், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதையும், தனிப்பட்ட முறையில் மக்களிடம் என்னைப் பற்றித் தவறான கருத்தைப் பரப்ப முயலுவதையும் தொழிலாகக் கொண்டுள்ளதால், குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையின் மீது சட்டப்படி அவதூறு வழக்குத் தொடர்வதற்கு அந்தப் பத்திரிகைக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

- தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்.

-இப்படி கடந்த 16-ம்தேதியன்று எல்லா தினசரிகளுக்கும் `பத்திரிகைச் செய்தி' என்கிற தலைப்பில் மறுப்பு அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார் என்றாலும் ஓரிரு மாலை நாளிதழ் தவிர, வேறு எந்த நாளிதழும் இதைப் பிரசுரிக்கவில்லை.

திரு.விஜயகாந்த் தமது மறுப்பு அறிக்கையை இதுவரை நமக்கு நேரடியாக அனுப்பாவிட்டாலும், நம்மைப் பற்றியே எழுதியிருப்பதால்தான் அதற்கு நாம் இங்கே பதில் சொல்ல வேண்டிய அவசியமாகிறது. அதில், முக்கியமாகச் சொல்வது, அவர் பேசாத ஒன்றை நாம் தலைப்புச் செய்தியாக்கிப் பிரசுரித்துள்ளோம் என்பது; அதனால் கலவரத்தைத் தூண்டி, பொது அமைதியைச் சீர்குலைக்கும் செயலை நாம் செய்திருப்பதோடு, பத்திரிகை தர்மத்தையும் மீறிவிட்டோம் என்பது. மேலும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

உண்மையில்,கடந்த 13-ம்தேதியன்று ராமேஸ்வரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரு. விஜயகாந்த் பேசாத ஒன்றைத்தான் நாம் பிரசுரித்திருக்கிறோமா? இதை வாசகர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக திரு.விஜயகாந்த் அன்று பேசியவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே தருகிறோம்:

``...நேத்தோ முந்தா நேத்தோ விண் டிவி பார்த்தேன். அதுல மீனவ சங்கத்தலைவர் போஸ் பேசுறாரு. `எல்லா முதலமைச்சரையும் பாத்தோம். யாரும் ஒண்ணும் செய்யலை'னு எங்க செய்வாங்க? எல்லாம் வாங்கிக்கிட்டே இருக்காங்க. யாருய்யா செய்யப் போறாங்க? பிடிக்கிற மீனுக்கு லஞ்சம் குடுக்குறீங்களா? சொல்லுங்க, குடுத்தீங்கன்னா உடனே கொண்டு வந்து போட்டுடுவாங்க மிலிட்டரிய... ஒரு மீனுக்கு ரெண்டு ரூபாலஞ்சம் குடுக்குறீங்களா?

...(இலவச) டி.வி.ய விக்கிறாங்க. உடனே அரசாங்கம் சட்டம் போடுது... கலெக்டரே `போலீஸே டி.வி.ய வித்தா புடிச்சு உள்ள போடு'ன்னு... அடுத்து அரிசி... அரிசிய ரெண்டு ரூபாக்கு குடுக்குறோம். உடனே அரிசியக் கடத்துறாங்க. அ.தி.மு.க.வுல லாரியில அரிசியக் கடத்துனாங்க. ஆனா இவங்க ரெயில்லயும் கப்பல்லயும் கடத்துறாங்க...

...அதுதான் சொல்றேன். சாது மிரண்டா காடு கொள்ளாது. ரொம்ப நோண்டாதீங்கடா, ரொம்ப நோண்டாதீங்க. இருபது போலீஸ வச்சு கேக்குறாங்களாம். நேரடி ஒலிபரப்பு பண்றாங்க போலீஸு. ஏதாவது தப்பா பேசுனா புடிச்சு ஜெயில்ல போட்டுடுவேன்னு சொல்றாரு. எதுலயாவது போடுங்கறேன். எதுக்காகப் போடப் போற... என் மக்களுக்காகப் பேசுனதுக்காகத்தானே. நீ புரியாம பேசுற... நடிகன்னா, மெரட்டுனா பயந்துடுவான்னு. ஆனா இந்த விஜயகாந்த் பயப்புட மாட்டான். இது அவருக்குப் புரிய மாட்டேங்குது. புரியாம மெரட்டிப் பாக்குறாங்க...

...விலைவாசி ஏறிப்போச்சுன்னு சொன்னா உடனே கலைஞர் சொல்றாரு, வாங்குற சக்திய அதிகமாக்கணும்னு. உங்களுக்கு வாங்குற சக்திய அதிகமாக்கியிருக்கு... (தணிந்த குரலில்) லஞ்சம் வாங்க. எங்களுக்கு தாங்குற சக்தி இல்லையே...

...நான் நிறையப் பேசணும்னு நெனைக்கிறேன். உளவுத்துறை டேப் பண்ணிக்கிட்டிருக்கு. வேற ஒண்ணும் கெடையாது. கோபம் வருது. சத்தியமா, மக்கள ஏமாத்துனா ரொம்பக் கோபம், வெறி வருது. சுட்டுக் கொல்லணும்... பூராபேத்தையும். (தணிந்த குரலில்) ஆட்சியில இருக்குறவங்கள..''

- இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார். அவர் அங்கே 43 நிமிடங்களும் 42 வினாடிகளும் பேசியிருக்கிறார். அப்படிப் பேசியபோது 33-வது நிமிடத்தில்தான் `சுட்டுக் கொல்லணும்......பூராத்தையும்' என்று உரத்த குரலிலும் `ஆட்சியில் இருக்குறவங்கள....' என்பதைத் தணிந்த குரலிலுமாகப் பேசியிருக்கிறார்.

ஆக, `சுட்டுக் கொல்லணும்' என்று அவர் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில்-மெய்மறந்த நிலையில் பேசியிருந்தாலும் நாம் அதைப் புரிந்து கொண்டு, `கொல்லணும்' என்பதைத் `தள்ளணும்' என்று வேகத்தைக் குறைத்துத்தான் வெளியிட்டிருக்கிறோம். ஒருவர் தன்னை மறந்த நிலையில் வாய்தவறிப் பேசியதை அப்படியே பிரசுரிப்பது பத்திரிகை தர்மமாகாது என்பதால்தான் அதை நாம் மாற்றிப் பிரசுரித்திருக்கிறோம். சொல்லப் போனால் நாம் பிரசுரித்ததைவிட பிரசுரிக்காமல் விட்டதே அதிகம்.

எனினும், தாம் அன்று ஏதோ உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசியதை உணர்ந்துதான் இப்போது அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார் என்பதை நம்மால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அளவில் அவரை நாம் மனமார பாராட்டுகிறோம். அதற்காக அவர் குமுதம் ரிப்போர்ட்டர் மீது பழிபோடுகிறாரே என்பதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசியதையே இப்படி மறுக்கிறாரே என்பதிலும் தான் நமக்கு வருத்தம். இப்படியிருந்தால், அவரது வாக்குறுதிகளை மக்கள் எப்படி நம்புவார்கள் என்பதே நமது கவலை.

உலகில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. தவறுகளைத் திருத்திக் கொள்பவன்தான் மனிதன். மறைப்பவன் திருடன். மறுப்பவன் குற்றவாளி. ஒப்புக் கொள்பவன்தான் தலைவன். இதை திரு. விஜயகாந்த் புரிந்து கொண்டு, அவர் மிகச் சிறந்த தலைவராக வளர வேண்டும் என்பதே நமது ஆசை!

-ஆசிரியர்

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.