Jump to content

நன்மை, தீமைகள்


Recommended Posts

பதியப்பட்டது

Apple Mac System த்திற்கும் Windos System த்திற்கும் இடையிலுள்ள நன்மை, தீமைகளை அறிய விரும்புகின்றேன். நான் இதுவரை Apple Mac System ஐ பாவிக்கவில்லை. எனவே அதனைப் பாவித்த அனுபவமுள்ளோர் அதுபற்றிய விபரங்களை அறியத் தந்தால் பலரும் அறிந்து கொள்ள உதவியாகவிருக்கும். நன்றி.

Posted

நானும் விரைவில அப்பிள் லப்டொப் ஒண்டு வாங்கலாம் எண்டு இருக்கிறன். இப்ப பாவிக்கிறது டெல்.

யாராச்சும் அப்பிள் லப்டொப் வச்சு இருந்தால் உங்கட அனுபவங்கள கொஞ்சம் பகிர்ந்துகொள்ளுவீங்களோ? குறிப்பா இப்ப latest ஆனதில நிறைய மாற்றங்கள் வந்து இருக்கிறதா சொல்லுறீனம். யாராச்சும் மிக அண்மையில அப்பிள் கணணி வாங்கி இருக்கிறீங்களோ?

மற்றது அப்பிள் வாங்கேக்க கவனிக்க வேண்டிய முக்கியமான விசயங்கள் பற்றியும் உங்களுக்கு தெரிஞ்சால் சொன்னால் புண்ணியமாப் போகும்.

நான் முக்கியமா அப்பிள் வாங்க விரும்புறது ஏன் எண்டால் மியூசிக் எடிட்டிங், மற்றது கிராபிக்ஸ் வேலைகளுக்கு அப்பிள் நல்லது எண்டு சொல்லிறீனம். அதான்.

எண்ட அண்ணா அப்பிள்தான் பாவிக்கிறார். அதில எம்.எஸ். மெசஞ்சர், எம்.எஸ்.என் வெப்காம்புகள் போன்றது பாவிக்க ஏலாது எண்டு சொன்னார். மற்றும்படி வேற முறைப்பாடுகள் இல்லை. வேற ஆக்களிடம் இருந்தும் அப்பிள் கணணி வாங்க ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றேன். நன்றி!

நான் அண்ணாவின்ட அப்பிள் லப்டொப்பை பாவிச்சபோது எனக்கு அதுகொஞ்சம் கஸ்டமாக இருந்தது பாவிப்பதற்கு. புதுப்பழக்கம் எண்டபடியால். பழகக்பழக சரிவரும் எண்டு நினனக்கிறன்

Posted

எனனிடம் அப்பிள் மக் புக் இல்லை. அதனால் சொந்த அனுபவத்தை சொல்ல முடியாது.

இணையத்தில் தேடி கிடைத்தது.

http://kb.wisc.edu/showroom/page.php?id=3045

http://www.macvswindows.com/index.php?titl...ows_Comparisons

http://www.macvswindows.com/index.php?titl...ware_Management

Posted

நன்றி குளக்காட்டான் பபா. பிறகு நேரம் இருக்கேக்க இத வாசிச்சு பார்க்கிறன். ஆனால் ஒரு சிக்கல் அப்பிள் சரியான விலை.

Posted

குளக்காட்டான் பபா, நுணாவிலான் பபா இணைத்த இணைப்புக்கள் மூலம் பல தகவல்களை பெறக்கூடியதாக இருந்திச்சிது. இருவருக்கும் முரளி பபாவின் நன்றிகள்!

  • 2 weeks later...
Posted

இணைப்புக்களை இணைத்த குளக்காட்டன் மற்றும் நுணாவிலானுக்கு நன்றிகள். ஆனாலும் யாரவது நம்மவர்கள் பாவித்த போது கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Posted

13 வருடமாக Apple Macintosh மட்டுமே பாவிக்கிறேன்.

தொழில்னுட்பத்தின் முன்னோடியாக Apple நிறுவனம் கருதப்படுகிறது. Microsoft நிறுவனத்தின் Windos System கூட ஆரம்பத்திலிருந்து இன்றுவரை Apple இன் புதுமையான கண்டுபிடிப்புகளையே பிரதிபலிக்கிறது.

Mac System பாவிப்பதற்கு இலகுவானது. அழகான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இன்று பரவலாகப் பாவிக்கப்படும் graphics மென்பொருட்களின் (Photoshop, Adobe Premier, Quark Xpress... ) தோற்றத்திற்கு காரணமாக இருந்துள்ளது.

2000 ம் ஆண்டுவரை பிடிவாதமாக தனக்கென தனித்துவமான தொழில்னுட்பங்களுடன் இயங்கி வந்த Apple நிறுவனம் அதன்பின்னர் விற்பனையை அதிகரிக்கும் விதமாக சில மாற்றங்களைச் செய்யவேண்டி வந்தது.

அதன் ஒஉர் கட்டமாக PC கணணியில் பாவிக்கும் உதிரிப்பாகங்களை தனது கணணியிலும் பாவிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்து அதன் System இல் பாரிய மாற்றம் ஏற்பட்டது. Unix system (Free BSD) ஐ பல மாற்றங்களுடன் தனது கணணிக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் பல வசதிகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக வைரஸ் தாக்கம் இல்லவே இல்லை. நான் இதுவரை எந்த Anti Virus அல்லது Anti Spy மென்பொருட்களையும் பாவித்தது கிடையாது.

வேலைத் தளத்தில் எனக்கு Mac தான் வேண்டுமென்று பிடிவாதமாகக் கூறினேன். 50 பேர் வேலை செய்யும் நிறுவனத்தில் நான் மட்டுமே Mac பாவிக்கிறேன். முதலில் வாங்கிய கணணி 7 வருடங்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இயங்கியது. பின்னர் வேகம் குறைவாக இருந்ததால் மாற்றிவிட்டேன். Microsoft Office நன்றாக வேலை செய்கிறது. இப்போது வெளிவரும் Mac கணணிகளில் Mac System, Windows Vista ஆகிய இரண்டையும் இயக்கலாம். கணணியைத் திறக்கும்போது எந்த System தேவை என்பதைத் தெரிவு செய்யலாம்.

ஆனால் பாதகமான விடயங்களும் உண்டு. PC யிலுள்ள மென்பொருட்கள் இதனுடன் சேராது. விளையாட்டுகள் மிக மிகக் குறைவு.

Posted

macpc2va4.jpg

இடது பக்கம் உள்ளது ஒரு iMac

வலது பக்கம் அதற்குச் சமனான Dell PC

macpc1ek9.jpg

Mac Pro ஒன்றின் உள் பக்கம்.

PC ஒன்றின் உள் தோற்றம் (வலது).

iphone-abonnement-zoom.jpg

iPhone இல் பாவிக்கப்படுவதும் Mac system தான்

Posted

நன்றி இணையவன்

உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு.

ஏனைய கள உறவுகள் எவரேனும் அனபவமுடையோர் உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Posted

உலகம் பூராவும் பெரும்பாலோர் பாவிப்பது PC கணனிகளைத்தான்.

உலகம் பூராவும் பெரும்பாலான அச்சகத்தார், வெளியீட்டாளர்கள், Graphic designers பாவிப்பது அப்பிளின் MAC கம்பியூட்டர்களையும் அதனோடு Quark மென்பொருளையும். Quark ல் விண்டோஸ் பதிப்பும் உண்டு.

ஆனால் தற்போது PCயும் InDesign மென்பொருளும் சரியான போட்டியை கொடுக்கிறது.

Quark ம் InDesign உம் வெளியீட்டாளர்கள் பாவிக்கும் Lay-out Programme.

குறித்த தேவைக்கு உகந்தது Apple+Mac. பரவலான பொது தேவைக்கு PC+விண்டோஸ்.

Mac கம்பியூட்டர்கள் 3 மடங்கு விலை அதிகமானது. ஆனால் உறுதியானது. நீடித்து உழைக்ககூடியது.

Posted

நன்றி தேவகுரு அண்ணா.

உங்களை நீண்ட நாட்களின் பின் பார்ப்பதில் மகிழ்ச்சி.

  • 2 weeks later...
Posted

சமீபத்தில் எனது நண்பரொருவர் Apple Computer வாங்கினார். அதில் Harddisk 300 GB இருக்கின்றது. அதை குறைந்தது 6 பகுதிகளாக பிரிக்க விரும்பி கணினியை வாங்கிய கடையில் கேட்ட போது, Apple Computer அப்படி பிரிக்க முடியாது என்று கடைக்காரர் கூறினார். இது சரியான தகவலா?? ஏன் பகுதிகளாக பிரிக்க முடியாது என்பதை யாராவது விளக்குவீர்களா!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சமீபத்தில் எனது நண்பரொருவர் Apple Computer வாங்கினார். அதில் Harddisk 300 GB இருக்கின்றது. அதை குறைந்தது 6 பகுதிகளாக பிரிக்க விரும்பி கணினியை வாங்கிய கடையில் கேட்ட போது, Apple Computer அப்படி பிரிக்க முடியாது என்று கடைக்காரர் கூறினார். இது சரியான தகவலா?? ஏன் பகுதிகளாக பிரிக்க முடியாது என்பதை யாராவது விளக்குவீர்களா!!!

இதிலை இருக்கோ எண்டு பாருங்கோ.

Posted

நன்றி சபேஷ் இணைப்பிற்கு. எனது நண்பருக்கு தெரிவித்து விடுகின்றேன்.

Posted

சமீபத்தில் எனது நண்பரொருவர் Apple Computer வாங்கினார். அதில் Harddisk 300 GB இருக்கின்றது. அதை குறைந்தது 6 பகுதிகளாக பிரிக்க விரும்பி கணினியை வாங்கிய கடையில் கேட்ட போது, Apple Computer அப்படி பிரிக்க முடியாது என்று கடைக்காரர் கூறினார். இது சரியான தகவலா?? ஏன் பகுதிகளாக பிரிக்க முடியாது என்பதை யாராவது விளக்குவீர்களா!!!

16 பகுதிகளாக இலகுவாகப் பிரிக்க முடியும்.

image4cq3.gif

Posted

நன்றி இணையவன் தங்களின் படத்துடன் கூடிய விளக்கத்திற்கு.

ஆனால் HD ஐ பிரிக்கும் போது HD யில் பதிந்துள்ளவை அழியாமல் எப்படிப் பிரிப்பதென்பதை கொஞ்சம் விளக்கமாகத் தருவீர்களா??

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

Apple Mac System த்திற்கும் Windos System த்திற்கும் இடையிலுள்ள நன்மை, தீமைகளை அறிய விரும்புகின்றேன். நான் இதுவரை Apple Mac System ஐ பாவிக்கவில்லை. எனவே அதனைப் பாவித்த அனுபவமுள்ளோர் அதுபற்றிய விபரங்களை அறியத் தந்தால் பலரும் அறிந்து கொள்ள உதவியாகவிருக்கும். நன்றி.

கருங்கல் வீட்டிற்கும் செங்கல் வீட்டிற்கும் உள்ள வித்தியாசம்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.