Jump to content

'கருணா தன்னிச்சையாக முடிவு.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'கருணா தன்னிச்சையாக முடிவு எடுக்கமுடியாது' அஷாத் மௌலானா

வியாழன், 17 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்]

கருணா தனித்து எந்த விதமான ரி.எம்.வி.பி. கட்சியின் முடிவுகளையும் எடுக்கமுடியாது எனவும், முடிவுகள் மற்றும் கட்சியின் செயற்பாடுகள் என்பவற்றை தீர்மானிக்க கருணர் உட்பட 10 பேர் அடங்கிய ரி.எம்.வி.பி.யின் பேராளர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரி.எம்.வி.பியின் பேச்சாளர் அஷாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

இந்த கட்சிப்பேராளர் குழுவில் ரி.எம்.வி.பியின் கட்சித்தலைவர் கருணர், பிரதித்தலைவர் பிள்ளையான், மௌலானா, பத்மினி, ஜெயம், மார்க்கன், உருத்திரன், பிரதீப் மாஸ்டர், இனியபாராதி, சின்னத்தம்பி, மங்களம் மாஸ்ரர் மற்றும் ஜீவேந்திரன் ஆகியோர் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருணர் இணைந்தே செயற்படுவதற்கு இந்த பேராளர் குழுவே முடிவுகளை எடுத்ததாகவும், ஆனால் கருணா தனித்து எந்த முடிவுகளையும் எடுக்கமுடியாது, இந்த நிர்வாகக்குழுவுடன் கலந்துரையாடியே எதையும் செய்யமுடியும் எனவும் மௌலானா தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் பிரதித்தலைவரான பிள்ளையான் தொடர்ந்தும் தமது முதலமைச்சர் பதவியில் இருப்பார் எனவும் மகாணசபை மற்றும் முதலமைச்சரின் தீர்மானங்களை அவர் தமது பதவிக்கு ஏற்றவகையில், செயற்படமுடியும் எனவும் மௌலான மேலும் தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

இதில என்ன கிடக்கு?

அவங்கள் இப்பிடித்தான் அடிபடுவாங்கள்.. அல்லது அடிபட வைக்கப்படுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எய்தவனை விட்டுவிட்டு...............

அம்பை நோவானேன்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எய்தவனை விட்டுவிட்டு...............

அம்பை நோவானேன்????

அம்புகளுக்கு கொஞ்சம் தன்னும் யோசிக்கும் தன்மை இல்லையா ?

இதுகள் புடுங்குப் படுவதால் எத்தனை உயிர் இழப்பு .......

நேற்றும் ஈ. பி .டி . பி.க்கு சொந்தமான காணியில் பிள்ளையான் குழுவை சேர்ந்தவரை கொன்று புதைத்துள்ளார்கள் என்று செய்தி ,

கிழக்கில் மனிதப் படுகுழிகள் என்று மற்றொரு செய்தி .

இவை வெளிவந்தவை , வெளிவராமல் எத்தனையோ யாரறிவார் .........

இது எல்லாம் தமிழன் இலங்கையில் மெல்ல , மெல்ல அழிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றான் என்பது இவர்களுக்கு ஏன் விளங்கவில்லை .

சீ .........கோடாலிக்காம்புகள்.

Link to comment
Share on other sites

அம்புகளுக்கு கொஞ்சம் தன்னும் யோசிக்கும் தன்மை இல்லையா ?

இதுகள் புடுங்குப் படுவதால் எத்தனை உயிர் இழப்பு .......

நேற்றும் ஈ. பி .டி . பி.க்கு சொந்தமான காணியில் பிள்ளையான் குழுவை சேர்ந்தவரை கொன்று புதைத்துள்ளார்கள் என்று செய்தி ,

கிழக்கில் மனிதப் படுகுழிகள் என்று மற்றொரு செய்தி .

இவை வெளிவந்தவை , வெளிவராமல் எத்தனையோ யாரறிவார் .........

இது எல்லாம் தமிழன் இலங்கையில் மெல்ல , மெல்ல அழிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றான் என்பது இவர்களுக்கு ஏன் விளங்கவில்லை .

சீ .........கோடாலிக்காம்புகள்.

நம்மை நாமே அழித்துக் கொள்ளும் போது எதிரிக்கு லாபம். அதுதான் தொடர்கிறது? வேதனை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D நாம் என்ன சொல்லியும் எந்தப் பிரயோசனமும் இல்லை. தென் தமிழீழ மக்கள் இந்த துரோகிகளை அடித்து விரட்டாதவரை ! குறைந்தது தேர்தலிலாவது இந்த நாய்களை நிராகரிக்க வேண்டும். இவர்களை எதிர்த்துப் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும்( அவர் தமிழராக இருந்தாலென்ன, முஸ்லீமாக இருந்தாலென்ன )வாக்களிக்கும் தெளிவும் உறுதியும் பிறக்க வேண்டும்.
Link to comment
Share on other sites

அவங்களே கள்ள வாக்கை கொட்டும் போது அப்பாவிகள் என்ன செய்வார்கள் ரகுநாதன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D உண்மைதான் தலைவன். ஆனால் சில கிழக்கின் நண்பர்கள் தாம் பிள்ளையானைத் தெரிவு செய்தது முஸ்லீம் முதலமைச்சர் வருவதைத் தடுக்கவே என்று சொல்லும்போது கவலையாக இருக்கிறது.

கள்ள வாக்கு, வாக்கு மோசடி- இந்த ரெண்டினாலும் தான் பிள்ளையான் பதவிக்கு வந்தான். அதுதான் உண்மை. அதை விடுத்து "நாமே தான் தெரிவுசெய்தோம்" என்று உரிமை கோருவது தவறு. அவ்ர்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

நான் தென் தமிழீழ மக்கள் பிள்ளையானைத் தெரிவு செய்தார்கள் என்று நம்பவும் இல்லை, நினைக்கவுமில்லை.

Link to comment
Share on other sites

ரகுநாதன்!

உண்மையா தென் தமிழ் ஈழ மக்களுக்கு இருந்த தெரியு பேக்கும் பிசாசுக்கும்மான தெரிவுதான்....

அதுல வந்த சனியனை எதிர்க்கிறாதிலும் பாக்க அனுசரிச்சு காரியமாற்றுவது மேல்... இதை பிள்ளையான் இல்லாத வேற ஒருவனால் செய்யேலாது....

ஏனெண்டா மத்தவங்கள் சிந்திப்பாங்கள்.. இது ...ஆக....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அட ஞான சூனியமே, குமார் பொன்னம்பலம் போட்டியிட்டபோது எத்தனை தமிழ் கட்சிகள் அல்லது எத்தனை தமிழ் அரசியல்வாதிகள் அவரை எதிர்த்து, சிங்கள வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற வேண்டும் என்று பிரச்சாரம் செய்தீர்கள்? எத்தனை பேர் குமார் பொன்னம்பலத்திற்கு தமிழர்கள் வாக்குப் போடக் கூடாது என்று தமிழர்களிடம் தீயாகப் பிரச்சாரம் செய்தீர்கள்? அப்படி எவருமே குமாருக்கு எதிராகவும், சிங்களத்தின் சந்திரிக்காவையோ வேறு எவரையும் ஆதரித்தும் பிரச்சாரம் செய்யவில்லை. அவர் வெற்றிபெறவேண்டும் என்பதில் கொழும்புத் தமிழர்களுக்கு விருப்பம் இருந்தது, ஆனால் வடக்குக் கிழக்கில் அவரை அதிகம் அறியாததால் வாக்குகள் விழவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளருக்கெதிராக எத்தனை தமிழ் அரசியல்க் கட்சிகள், தமிழ் அரசியல்ப் பிரமுகர்கள், அரசியல் விற்பனர்கள், தனிமனிதர்கள், குழுக்கள், இணையத் தளங்கள், பத்திரிக்கைகள் என்று போட்டிபோட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்தீர்கள்? சுத்து மாத்து மட்டுமே எத்தனை தேர்தல் மேடைகள், கூட்டங்கள், பிரச்சாரப் பேரணிகள் என்பவற்றில் கலந்துகொண்டு "பொதுவேட்பாளரைத் தோற்கடிப்பதே எனது ஒற்றை நோக்கம்" என்று சூளுரைத்து வந்தது? இவ்வளவு எதிர்ப்பிற்கும், அவதூறுப் பிரச்சாரத்திற்கு மத்தியிலும் பொதுவேட்பாளர் 1.67 வீதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்றால், நீங்கள் அனைவரும் அவருக்கெதிராகப் பிரச்சாரம் செய்யாது விட்டிருந்தாலே அன்று குமார் பெற்றதைக் காட்டிலும் அதிகம் பெற்றிருப்பார். ஆனால் அவரை எங்கே விட்டீர்கள்? பேரம் பேசுகிறோம் பேரம் பேசுகிறோம் என்று தோற்கிற குதிரையில் கட்டிவிட்டு வென்ற குதிரையிடம் போய்க் காசு கேட்கிறீர்களே? 
    • நான்  கத்துகிறேன்,.....அரியநேந்திரன் கள்ளன் கள்ள வோட் போட்டவர்,...... இப்போது கணக்குச் சரியாக வந்திருக்குமே,. 🤣 என்ன,...ஒருவரைக் குற்றம் சாட்டுவதற்கு ஆதாரம் தேவையில்லை. சும்மா  கத்தினால் அல்லது இரவில் அல்லது நேரங்கெட்ட நேரத்தில்  நடமாடினால்  போதும்,....அதுவே போதும் இவர்களுக்கு.  திருந்துங்களேன்,... புலம்பெயர்ந்து அறிவியலில் விஞ்ஞானத்தில் வளர்ந்த நாடுகளுக்கு வந்திருக்கிறோம். அதில் கொஞ்சமாவது எங்கள் மண்டையில் ஏற வேண்டாமா,..? 🥺
    • முடிந்த தேர்தலை தொட்டு மணக்க மணக்க நாற்றம் தான் வரும். அடுத்தடுத்த தேர்தல்களுக்கு நாளும் குறித்தாகி விட்டது. அதை எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள் என்று பிரயோசனமாக பேசலாமே?
    • ஊக்கத்துக்கும், தன்னம்பிக்கைக்கும் வாழ்த்துக்கள் 
    • 1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது.  தமிழ்ப்பொதுவேட்பாளர் இத்தேர்தலில் போட்டியிட்டது ஜனாதிபதியாகும் நோக்கத்தில் இல்லையென்று எத்தனை முறை கூறினாலும் சிலருக்குப் புரியப்போவதில்லை. சுத்து மாத்து மந்திரத்திற்கும் புரியவில்லை என்பது இப்போது புரிகிறது. ஆக, இவ்வளவு நாளும் இது தெரியாமல்த்தான் இந்த அறிவாளி செயற்பட்டு வந்திருக்கிறார்.  2. அப்படியான சூழ்நிலையில் தேவையில்லாத இந்த விஷப்பரீட்சையை செய்து தோற்பதன் விளைவு என்ன?  சிங்களவர்கள் தாமாக விரும்பித் தரும் தீர்வை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும். சிங்களவர்களைக் கோபப்படுத்தினால் நாம் சாம்பலாகிவிடுவோம். ஆகவே அவர்களைக் கோபப்படுத்தும் எந்தச் செயலிலும் நாம் ஈடுபடலாகாது. இதுதான் சுத்து மாத்து மந்திரனும் அவரது ஆசான் சாவக்கிடந்த சம்பந்தனும் 2009 இலிருந்து  இன்றுவரை செய்த, செய்துவருகின்ற சாணக்கிய, சமரச, சரணாகதி அரசியல். ஆகவே இப்படியான  சிங்களத்தின் கைத்தடிகளுக்குத் தமிழரின் பிரச்சினை குறித்த எந்தச் செயற்பாடும், எந்த வெளிப்படுத்தலும் விசப்பரீட்சையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  3. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷை இனியும் நிரூபிக்கப்பட வேண்டியதொன்றல்ல. அப்படியிருக்க இந்த நேரத்தில் இதைச் செய்வது எவரும் இதுவரை கேள்விக்குட்படுத்தாத எமது அரசியல் நிலைப்பாட்டை காட்டிக் கொடுப்பதாகவே இருக்கும்.  தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்னவென்று முதலில் சுத்து மாத்து மந்திரன் அறிவிக்க வேண்டும். ஏனென்றால் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்று தமிழர்கள் நம்புவதற்கும், சுத்து மாத்து எண்ணுவதற்கும் இடையில் பாரியளவு வேறுபாடு இருக்கும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஆகவேதான், தான் நம்பிவரும் தமிழரின் அபிலாஷைகள் என்பதற்கு மாற்றாக வேறு எவரும் தமிழரின் அபிலாஷைகளைப் பெற்றிப் பேசினால் அவருக்குக் கெட்ட கோபம் வந்துவிடுகிறது. சுத்து மாத்து இன்று பேச மறுக்கின்ற, பேச விரும்பாத தமிழரின் அபிலாஷைகளை இன்னொருவர் பேசுமிடத்து, தான் சிங்களத்திடம் கூறிவருகின்ற தனது பாணியிலான தமிழரின் அபிலாஷைகள் குறித்து வெளியே, குறிப்பாக தமிழருக்குத் தெரிந்துவிடும் என்பதால்"ஏன் அதுகுறித்து இப்போது மீண்டும் பேசவேண்டும்?" என்று அப்பாவியாகக் கேட்கிறார். ஏன், இப்போது பேசினால் என்னவாம்? நீயும் பேசமாட்டாய், பேசுபவனையும் விடமாட்டாய் என்றால் வைக்கொல் பட்டடை நாய்தான் நினைவிற்கு வருகிறது. தமிழரின் அரசியல் அபிலாஷைகளை எப்போது பேசலாம், எப்போது பேசக்கூடாதென்று சட்டம் ஒன்று இருக்கிறதா, என்ன?  4. 2022 மக்கள் போராட்டத்தின் பின்னரான இன்றைய சூழ்நிலையில் சிங்கள பௌத்த இனவாதம் மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது. பிரதான வேட்பாளர் ஒருவர் கூட இனவாதத்தை தூண்டாத விதத்தில் நாம் அவர்களோடு பேரம் பேசுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்த பேரம்பேசும் பலகாரத்தை 1950 களில் இருந்தே பார்த்து வருகிறோம். ஐம்பதுக்கு ஐம்பது, தமிழரசு, சமஷ்ட்டி, இணைந்த வடக்குக் கிழக்கில் சுயாட்சி என்று பல பெயர்களில் பேரம் பேசி, ஒவ்வொரு பேரம் பேசலிற்குப் பின்னரும் தவறாது ஏமாற்றப்பட்டதே வரலாறு. எந்தப் பேரம் பேசலும் எமக்கான நீதியைத் தரப்போவதில்லை என்று கற்றுணர்ந்த பின்னர்தான் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டமே ஆரம்பிக்கப்பட்டது. ஆக, சுத்து மாத்து மந்திரன் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பேரம் பேசப்போகிறாராம். எப்பிடி? சிங்கள இனவாதிகளின் வேட்பாளர் ஒருவரின் தேர்தல்ப் பிரச்சார மேடையில் ஏறி "ஐயோ கும்பிட்டுக் கேட்கிறன், பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க சஜித்துக்கு வாக்குப் போடுங்கோ" என்று ஊழைக் கும்பிடு போட்டுப் பேரம் பேசினது போன்றா? அதுசரி சஜித்துடன் நடத்திய பேரம் என்னவென்றாவது சுத்து மாத்து தமிழ் மக்களுக்குச் சொல்வாரா?  இதில் வேடிக்கை என்னவென்றால், சுத்து மாத்து ஆதரவளித்த சஜித்தும் வெல்லவில்லை, மனதளவில் விரும்பிய ரணிலும் வெல்லவில்லை. வென்றிருப்பது தெற்கின் இனவாதிகளின் கதாநாயகனான அநுர. அவரின் வெற்றியில் சிறு துரும்பைந்தன்னும் சுத்து மாத்து எடுத்துப் போடவில்லை. அப்படியிருக்க அவருடன் பேரம்பேசி தமிழரின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளப்போகிறாராம். முதலில் சுத்து மாத்து விழுந்து விழுந்து அடிமைச்  சேவகம் செய்த பொன்சேக்கா (2010), மைத்திரி(2015), ரணில் (2015), சஜித் (2019) என்ற எவருமே சுத்து மாத்துடன் செய்த எந்தப் பேரத்தையும் இன்றுவரை சட்டை செய்யவில்லை. நல்லிணக்க அரசாங்கத்தின் பங்காளிகள், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அரிதாரங்களைப் பூசிக்கொண்டு வலம் வந்தபோதும் கிடைத்தது கொழும்பு கறுவாத் தோட்டத்தில் வீடும் லான்ட்குரூஸர் வாகனமும் மட்டும்தான். இந்த இலட்சணத்தில் அனுரவைத் தோற்கடிக்க சஜித்துக்கு காவடி தூக்கிவிட்டு இனவாதமில்லாத‌ தெற்கின் தலைமைத்துவத்துடன் பேரம் பேசப்போகிறாராம். "நீ எனக்காக என்ன செய்தாய்?" என்று அநுர செருப்பால் அடிக்காதவரை சரி.  5. இரண்டு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தருணத்தை விட, மூன்று பேர் வெற்றி வாய்ப்புள்ளவர்களாக காணப்படும் போது எமது பேரம்பேசும் சக்தி பன்மடங்காக அதிகரித்துள்ளது.  அட, என்னவொரு அருமையான யோசனை? இது ஏன் முன்பிருந்த தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியவில்லை? ஆக அநுர வெல்லப்போவது சுத்துமாத்திற்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தெரியவில்லையா? நம்பீட்டம். தெற்கு எங்கிலும் அநுர அலை. வெல்லப்போவது அநுரதான் என்பது கொழும்பில் வசித்துவந்த சாதாரண தமிழருக்கே நன்கு தெரிந்திருக்க சிங்கள அரசியலின் செல்லப்பிள்ளையான சுத்து மாத்திற்கு அது தெரியாமல்ப் போனதென்பது நம்பக்கூடியதா?  இல்லை, அநுரதான் வெல்லப்போகிறார் என்று தெரிந்திருந்தும் சஜித்திற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை சுத்து மாத்து கேட்டிருந்தால் எப்படிப் பேரம் பேசலாம் என்று எண்ணிவைத்திருப்பார். வெல்லப்போகும் வேட்பாளரை முதலில் அடையாளம் கண்டு, அவருடன் பேரம்பேசி, அதனைத் தெளிவாக தெற்கிலும், வடக்குக் கிழக்கிலும் (முன்னர் செய்ததுபோல தெற்கிற்கு தலையையும், வடக்குக் கிழக்கிற்கு வாலையும் காட்டியது போல அல்லாமல்) மக்களிடம் வெளிப்படையாகவே கூறி, உனது வெற்றிக்காக நாம் பிரச்சாரம் செய்கிறோம், ஆனால் அதற்குமுன் தமிழரின் அபிலாஷைகளை நீ ஏற்றுக்கொண்டு எமக்கான தீர்வைத் தருவதாக எழுத்துமூல வாக்குறுதி தரவேண்டும் என்று கேட்டிருக்கவேண்டுமா இல்லையா? இப்படி எதையும் செய்யாது கண்ணைமூடிக்கொண்டு , நிபந்தனையில்லாத ஆதரவு என்று மறுபடியும் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு சிங்கள வேட்பாளருக்கு மணியடித்துவிட்டு தமிழரின் ஆதரவின்றி வென்ற ஒருவனுடன் என்ன முடியை வைத்துக்கொண்டு பேரம் பேசலாம் என்று சுத்து மாத்து கூறுகிறார்?  6. இப்படியான அருமையான சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் எமது மக்கள் நலன் சார்ந்து எமக்கு எஞ்சியிருக்கின்ற ஒரே பலமான வாக்குரிமையை பேரம்பேசி பயன்படுத்துதல் வேண்டும்.   தமிழரின் வாக்குரிமையினை இதுவரை காலமும் எத்தனை முறை, அருமையான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி தமிழருக்கு எத்தனை தீர்வுகளை சுத்து மாத்து பெற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதை முதலில் அவர் பட்டியலிடட்டும். அவர் பட்டியலிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், அப்படி அவர் பெற்றுக்கொடுத்த ஒவ்வொரு தீர்வையும் தமிழ் மக்கள் தீர ஆராய்ந்து இனிவரும் காலங்களிலும் சுத்து மாத்து தமது பொன்னான வாக்குகளை சிங்களத்தின் காலடியில் நிபந்தனையின்றிக் கொட்டுவதற்கு அனுமதி தருவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரின் வாக்குகளை வாரி, அள்ளிச் சுருட்டிக்கொண்டு கொத்தாக ஏதோவொரு சிங்கள இனவாதியின் காலில், "ஐயா, இந்தமுறை அவர்களை நன்றாக ஏமாற்றி எல்லா வாக்குகளையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோம், ஏதாவது பார்த்துச் செய்யுங்கள். கொழும்பு 7 இல் வீடும் லான்ட்குரூசரும் போன தடவை தந்தீர்கள், அதற்கு எமது கோடி நன்றிகள் ஐயா, இந்தமுறை ரேஞ்ரோவர் ஸ்போர்ட்டும் சங்கிரிலா உல்லாச விடுதியில் ஒரு புளொக்கும் தாங்கோ"  என்று இந்தமுறையும் சுத்து மாத்தும், "வடிவேலு பாணியில் அவனிட்டை வேண்டின காசுக்கு அவனுக்கு ஒரு குத்து, இவனுக்கு வேண்டின காசுக்கு இவனுக்கொரு குத்து - புகழ் மாவையும்" நிச்சயம் சொல்லியிருப்பார்கள்.  இன்னும் எத்தனை நாளுக்குத்தான் தமிழரின் வாக்குகளை விற்று வயிறு வளர்க்கப்போகிறீர்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.