Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வினை எட்ட முடியாது: யுத்தத்தின் மூலமே தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் - கொழும்பு பேராயர்

Featured Replies

பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வினை எட்ட முடியாது: யுத்தத்தின் மூலமே தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் - கொழும்பு பேராயர்

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு எட்டக்கூடிய காலம் கடந்து விட்டதாகக் கொழும்புப் பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் தெரிவித்துள்ளார்.

வத்திக்கான் வானொலிச் சேவைக்குப் பேராயர் அளித்த செவ்வியை மேற்கோள்காட்டி கத்தலிக்நெட் என்ற இணையத்தளம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

யுத்தத்தின் மூலமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் என்ற ஓர் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டால் அது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அரசாங்கம் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்ற நிபந்தனையில் உறுதியாக இருப்பதாகவும் புலிகள் ஆயுதங்களைக் களையப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கடந்த சில காலமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் பல தோல்விகளை எதிர்நோக்கி வருவதாகவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபடும் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்காக முழுத் தமிழர்களும் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்தத்தின் மூலம் தோற்கடித்ததன் பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கொழும்பு பேராயர் ஒஸ்வில் கோமிஸ் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/

அடப்பாவி... உன்னை நீவணங்கும் உன் ஆண்டவன் மன்னிப்பானா? :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி... உன்னை நீவணங்கும் உன் ஆண்டவன் மன்னிப்பானா? :lol::lol::lol:

அவசரப்பட வேண்டாம்

இதுவும் நமது பத்திரிகை நண்பர்களின் வியாபாரயுத்தியாக இருக்கலாம்..........

பொறுமையே நன்று....

குகா எந்த செய்தியை நம்பச்சொல்கின்றீர்கள்.எனக்க

யுத்தம் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிடவில்லை – கொழும்பு பேராயர் மறுப்பு

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வு எட்டப்பட வேண்டுமெனத் தாம் வத்திக்கான் வானொலிக்குத் தெரிவிக்கவில்லை எனக் கொழும்பு பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் தெரிவித்தார்.எமது இணையத் தளமான தமிழ் வின்னுக்குப் பேராயர் அளித்த விசேட செவ்வியின் போது இதனைக் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களது நியாயமான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய அதேவேளை ஏனைய சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதொரு தீர்வுத் திட்டம் நோக்கிச் செல்ல வேண்டுமெனத் தாம் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.

வத்திக்கான் வானொலிக்கு அடிக்கடி வானொலிச் செவ்விகளை வழங்கி வருவதாகவும்இ தமது செவ்வியின் உட்கிடக்கையைத் திரிபுபடுத்தி கத்தலிக்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.

இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் யுத்தத்தின் மூலம் தீர்வு காண முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் யுத்தத்தின் காரணமாகப் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகப் பேராயர் சுட்டிக் காட்டினார்.

மேலும்இ அனைத்து இன மக்களாலும் சகோதரத்துடன் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டமொன்று விரைவில் முன்வைக்கப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாததெனப் பேராயர் ஒஸ்வல்ட கோமிஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் வின்

குகா நீங்கள் சொன்னது நடந்தே விட்டது

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு இந்துவாக இருந்தபோதும்

எனக்கு கத்தோலிக்க போதகர்கள்மீது அளவுகடந்த மதிப்பு உண்டு

அவர்களது சேவைகள் அளப்பரியன..........

அந்த நேரம் எம்மினத்தின்கொடுமைகளை அந்தநேரமே எதிர்த்துக்குரல் கொடுத்தவர்களும் உதவிசெய்தவர்களும் அவர்களே........

சிங்கராய அடிகளார்களிருந்து இமானுவல் அடிகளார் என்று அவர்களின் பட்டியல் மிகநீளமானது.............

அவர்களுடைய மதத்தின் கொள்கை வேறாயினும் .............

தமிழர்கள் வன்முறையை வேறுவழியின்றியே மேற்கொள்கின்றனர் என உலகத்துக்கு எப்பொழுதோ சொன்னது மட்டுமல்லாது அதற்கு உதவியும் அளித்தவர்கள் இவர்கள் என்பதை ஒவ்வொரு தழிழனும் மறக்கக்கூடாது.........

அதனாலேயே பொறுக்கும்படி சொன்னேன்

நல்ல பதில் உடனேயே கிடைத்திருக்கிறது..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா இன்று பிள்ளையான் சார்பில் உலக வலம் வருவதும் இவர்களே :wub::lol:

The statue of Our Lady of Madhu was brought to the official residence of the Mannar Bishop, Rt. Rev. Rayappu Joseph, last evening (July 22nd). Following heavy clashes between the security forces and the LTTE, the statue was moved to St. Saviour`s Church at Vellankulam in Thevanpiddi on April 04th.

இதுவும் இவர்களே :lol::lol:

அவசரப்பட வேண்டாம்

இதுவும் நமது பத்திரிகை நண்பர்களின் வியாபாரயுத்தியாக இருக்கலாம்..........

பொறுமையே நன்று....

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

  • கருத்துக்கள உறவுகள்

கோடிக்கணக்கானவர்களில் ஒன்று இரண்டை உதாரணமாக எடுப்பது சரியல்ல???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோடிக்கணக்கானவர்களில் ஒன்று இரண்டை உதாரணமாக எடுப்பது சரியல்ல???

அண்ணா ஒரு துளி விசம் போதும் கோடிக்கணக்கானவர்களை அழிக்க :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா ஒரு துளி விசம் போதும் கோடிக்கணக்கானவர்களை அழிக்க :wub:

கோடிக்கணக்கானோரை கணக்கிலெடுக்காது

முட்டையில் மயிர்புடுங்கும் உங்களுடன் என்நேரத்தை வீண்விரயம்செய்யவிரும்பவில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோடிக்கணக்கானோரை கணக்கிலெடுக்காது

முட்டையில் மயிர்புடுங்கும் உங்களுடன் என்நேரத்தை வீண்விரயம்செய்யவிரும்பவில்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான அரசியல் அறிவாளிகளை ஈழத் தமிழர் கொண்டிருப்பதனால் தான் இன்று முற்றிலும் இழக்க போகின்றார்கள்

காலம் பதில் சொல்லும்

அதன்போது நீங்கள் களத்தில் தோன்றினால் ..........................

பதில் தருகின்றேன்............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம் பதில் சொல்லும்

அதன்போது நீங்கள் களத்தில் தோன்றினால் ..........................

பதில் தருகின்றேன்............

அன்று தொட்டு என்றும் இதே பெயர் தான் யாழில் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தொட்டு என்றும் இதே பெயர் தான் யாழில் :wub:

சரி உங்கள் யோசனைப்படியே பேசலாம்*

பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வினை எட்ட முடியாது: யுத்தத்தின் மூலமே தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும் - கொழும்பு பேராயர்

இந்தச்செய்தி ஏன் வந்தது????

ஒர் செய்தியை போடுபவர்

ஒரு கொழும்பு பேராயர்

இப்படி சொல்லுவாரா என்று ஒர நிமிடமாவது யோசிக்க வேண்டாமா???

ஓர் பிரதான மதத்தின் பிரதான பொறுப்பிலுள்ளவர்

அதுவும் வன்முறையை ஆதரிக்காத மதத்தின் பிரதிநிதி..............

நான் ஒரு இந்துவாக இருந்தபோதும்

எனக்கு கத்தோலிக்க போதகர்கள்மீது அளவுகடந்த மதிப்பு உண்டு

ஓ... நீங்கள் இந்துவா...??? அங்காலை ஒரு இடத்திலை நான் கடவுள் இருந்தா நல்லா இருக்கும் எண்டதுக்கு . 25 வாருசமா நான் அப்படித்தான் எண்டு வீர வசனம் எல்லாம் விட்டு இருந்தியள்...??

:lol:

எப்படி அடிக்கடி மாறுமோ...? :wub:

Edited by தயா

பிறப்பால் இந்து..................

பிறப்பால் இந்து..................

பிறப்பில் இந்துவாக இருந்து மதம் மாறியவர்கள் எல்லாம் தங்களை ஒரு இந்து எண்று அடையாளப்படுத்தி கொள்வது இல்லை....!!

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் என்றொருத்தன் உலகத்தில் இருக்கவேண்டும்

அல்லது அப்படி நாம் நம்பவேண்டும்

அதுதான் இந்த உலகத்தை ஒர ஒழுங்கான பாதையில் கொண்டு செல்ல ஒரேயொரு வழி

என்பது என் கருத்து.............

அது யார் என்பது......

அல்லது

அது என்பது எனக்குத்தெரியவில்லை....

ஆனால் அவரவர் நம்பிக்கையை வீணாக்கவும் விரும்பவில்லை

ஏனெனில் அவன் ஏதோ ஒன்றை நம்புவதனால்தான்

இப்படியாவத உலகம் அமைதியாக உள்ளது .............???

இல்லையென்றால்?????????????????

பிறப்பில் இந்துவாக இருந்து மதம் மாறியவர்கள் எல்லாம் தங்களை ஒரு இந்து எண்று அடையாளப்படுத்தி கொள்வது இல்லை....!!

அது அவரவர் உரிமை

அதே நேரம் திரும்பிவந்தவர்கள் பலரை நான் சந்தித்துள்ளேன்...............

கடவுள் என்றொருத்தன் உலகத்தில் இருக்கவேண்டும்

அல்லது அப்படி நாம் நம்பவேண்டும்

அதுதான் இந்த உலகத்தை ஒர ஒழுங்கான பாதையில் கொண்டு செல்ல ஒரேயொரு வழி

என்பது என் கருத்து.............

அது யார் என்பது......

அல்லது

அது என்பது எனக்குத்தெரியவில்லை....

ஆனால் அவரவர் நம்பிக்கையை வீணாக்கவும் விரும்பவில்லை

ஏனெனில் அவன் ஏதோ ஒன்றை நம்புவதனால்தான்

இப்படியாவத உலகம் அமைதியாக உள்ளது .............???

இல்லையென்றால்?????????????????

கடவுள் நம்பிக்கையே கிட்டத்தட்ட 5000 வருடங்கள்தான் இருக்கும், அதிலையும் மக்களை பெரிய அளவில் நெறிப்படுத்தும் பெரிய மதங்களான இசுலாமும் கிறிஸ்தவமும், பௌத்தமும் தோண்றி 2000-3000 வருடங்கள் தான்... அதுக்கும் முன்னம் மனிதன் என்ன நம்பிக்கையில் அமைதியாக வாழ்ந்தானாம்...?? அப்படி மனிதன் வாழவில்லை எண்றால் நீங்கள் ஏது நான் எதூ...?

போனாம் போக்கிலை எதையாவது எடுத்து விடாதீர்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்புக்கும் வருகின்ற கருத்துக்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. பேராயர் அவர்கள் சிங்களவர் தானே. அவரின் மனதில் இனவாதம் இருக்காது என்று சொல்ல முடியாது. குருத்துவப் பணி செய்கின்றவர்கள் எல்லோரும் புனிதர்களாக இருக்கவும் முடியாது.

அவர் மறுப்பறிக்கை விட்டது வாழ்த்தக்கூடிய ஒன்று. ஆனால் ஒரு பாதிரியாராக ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விதியாகவே அது வெளிப்பட்டிருக்குமே தவிர, தனிப்பட்டவிதத்தில் அவர் ஒரு சிங்கள பேரினவாதியாக இருக்கலாம்....(இல்லாமலும் இருக்கலாம்)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எங்கேயோ போகின்றீர்கள்

நான் நடப்பு ஆண்டைப்பற்றி கதைக்கின்றேன்

நானும் கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு காலம் இப்படித்தான் விவாதித்துக்கொண்டிருந்தேன்

காலங்கள் போகப்போக...........

பொறுப்புகள் .........பிரச்சினைகள் தலையில் விழ.....

நாலுபேருக்கு ......நல்லது செய்ய வெளிக்கிட...........

உண்மையானவர்களாக வாழ பழக்க........

கெட்டதுகளைத்தவிர்க்க செய்ய.........

ஏதோ ஒன்றை நாம் நம்பியே ஆக வேண்டும் என்ற நிலை........

அது போகப்போக புரியும் தங்களுக்கு.........

அதுவரை?????????????????................

தலைப்புக்கும் வருகின்ற கருத்துக்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. பேராயர் அவர்கள் சிங்களவர் தானே. அவரின் மனதில் இனவாதம் இருக்காது என்று சொல்ல முடியாது. குருத்துவப் பணி செய்கின்றவர்கள் எல்லோரும் புனிதர்களாக இருக்கவும் முடியாது.

அவர் மறுப்பறிக்கை விட்டது வாழ்த்தக்கூடிய ஒன்று. ஆனால் ஒரு பாதிரியாராக ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விதியாகவே அது வெளிப்பட்டிருக்குமே தவிர, தனிப்பட்டவிதத்தில் அவர் ஒரு சிங்கள பேரினவாதியாக இருக்கலாம்....(இல்லாமலும் இருக்கலாம்)

அவர் சிங்களவரா

தமிழரா என்பதல்ல பிரச்சினை

அவர் சொல்லாததை வெளியிட்டதே பிரச்சினை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்லினக்ஸ் என்பவர் தொடர்பாக நான் சில விடயங்களைச் சொல்ல வேண்டும்.

ஒருவரைத் தனிப்பட்ட விதத்தில் தாக்குவதாக இணையவன் போன்ற அறிவாளிகள் இக்கருத்தைத் தூக்கலாம். ஆனால் இவர் எழுதுகின்ற கருத்தின் நோக்கங்களைப் புரியாமல் விட்டுவிடுவார்கள்.

இந்தத் தலைப்பில் இந்து-கிறிஸ்தவ பிரிவினையைத் தூண்டுகின்ற விதத்தில் ஈழப்போரைப் பாவிக்க முனைகின்றார்.

மற்றய தலைப்புக்களில் எம் விடுதலைப்போராட்டம் மலிவடைகின்றது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முனைவார். மக்களின் நம்பிக்கை இழக்க வைக்க முயலுவார். இது மெதுவான வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அமையும்.

பிரிதொரு தலைப்பில் ஈழத்தை விட்டு ஓடுவது போல சிங்கள அரசின் பிரச்சாரத்தை இங்கே மெதுவாக ஏற்ற முயல்கின்றார். அச் சண்டை நடந்து சில மணிகளே கடந்த நிலையில் இப்படிச் செய்தி இவரிடம் எங்கிருந்து கிடைத்தது? ஏன் இப்படிச் செய்தியை இங்கு பரப்ப வேண்டும் என்ற கேள்வி கேட்டால் அதற்கான விடை புரிந்து விடும்

சிங்களச் செய்தி ஊடகங்களில் வருகின்ற செய்திகளை யாழில் இணைப்பது தவறு என்பேன். சிலர் ஜனநாயகம், ஊடகதர்மம் பற்றிப் பிதற்றக்கூடும். ஆனால் தமிழ்நெற்றை இலங்கையரசு தடை செய்தபோது அது அவர்களிடம் இருந்து வெளிப்பட்டிருக்க வேண்டும்

அதற்கு நான் எழுதிய பதிலை தேவை கருதி இங்கே மீண்டும்

தயா @ துரட 24 2008இ 08:18 Pஆ)

அண்ணை எனக்காக ஒருக்கா எந்த பிள்ளேனிலை பறந்து வெளியிலை போனவை எண்டும் ஒருக்கா கேட்டு சொல்லுங்கோ...!

கடலிலை இந்தியா பாதுகாப்பு போட்டுதாம் அதாலை நகர முடியாது எண்டு அந்த அண்ணை சொன்ன ஞாபகம்..!

அதில்லை

உண்மையில் அப்படி நடக்கவேணும் என்று கனவுகண்டபடி எம்மில் சில??????????????

அதனால் தான் இப்படியான செய்திகளை உருவாக்கினம்...

மனிதன் என்று கூட்டமாக வேட்டையாட தொடங்கினானோ.. அண்டைக்கு புடிச்சது சனி....

மதம்... இண்டைக்கு இந்து நாளை வேம்படி.. அடுத்தநாள்.. லொஸ்வேகாஸ்....

மனிதர்களை ஒட்டவைப்பதற்க்கு பிசின் போல மதம் பாவிக்கபடுகிறது. :lol:

கடவுள்......

இருப்பது உண்மை... அபூர்வமாக உணரும் சந்தர்ப்பம் அனேகமாக எல்லருக்கும் கிடைத்திருக்கும்.

உண்மையான கடவுளின் மதத்தில் எந்தவித கட்டுப்படும் கிடையாது.

உங்களை நீங்களே கட்டுப்படுத்தும்போது நீங்களே கடவுளின் மதத்தில் இணைகிறீர்கள்.

:wub:எதை கட்டுப்படுத்துவது என்பதில்தான் இருக்குது விஷியம்! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனங்காய்

மதங்கள் பற்றிய விவாதத்தலைப்பாக இதை மாற்றுவதில் இருந்து தவிர்ப்பமே. கடவுள் என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட புரிதலாகவும், பிரச்சனையாகவும் இருக்கட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.