Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா கடற்படையினர் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு!

Featured Replies

தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் இன்று அதிகாலையும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருப்பதாக, தமிழ்நாடு கடற்றொழிலாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.

500இற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளில் கச்சதீவுக்கு அருகில் தொழிலில் ஈடுபட்டபோது, அங்கு சென்ற கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.சில கடற்றொழிலாளர்கள் கடலில் குதித்ததுடன், மேலும் சிலர் படகில் மறைந்திருந்த காரணத்தினால், உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படாத போதிலும், 40 படகுகள் சேதமடைந்துள்ளன என தமிழகத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.tamilseythi.com/tamilnaadu/tami...2008-07-31.html

கூரையேரி கோழி புடிக்கத்தெரியாதவன் வானமேறி கைலாயம் போவானாம்

சொந்த சனத்துக்காக குரல் கொடுக்காத சிங்குக்கு 3000 இந்தியப்படைகள் காவல்... ஒரு வார்த்தையானும் பேசுவார?...

  • கருத்துக்கள உறவுகள்

கூரையேரி கோழி புடிக்கத்தெரியாதவன் வானமேறி கைலாயம் போவானாம்

சொந்த சனத்துக்காக குரல் கொடுக்காத சிங்குக்கு 3000 இந்தியப்படைகள் காவல்... ஒரு வார்த்தையானும் பேசுவார?...

எதைப் பற்றி ஆயுத கொடுக்கல் வாங்கல்கள் பற்றியோ :icon_mrgreen::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சற்று நேரத்திற்கு முன்பு தான் ஒரு கட்டுரை வாசித்தேன் யாழில்.சிங்களவருக்குப் புரியும் மொழியில் பேசுங்கள் என்னும் தலைப்பில். அதற்கிடையில் மீண்டும் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் இன்று அதிகாலையும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. மன்மோகன்சிங் இலங்கை வரவுள்ள நிலையில் இந்த துயரம் நடந்துள்ளது. மன்மோகன்சிங் இலங்கையில் சார்க் மாநாட்டில் பங்குபற்றும் வேளையில் இந்தியாவில் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் இலங்கை அரசுக்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மன்மோகன்சிங் மீது அழுத்தத்தை பிரயோகித்து இது சம்பந்தமாக மன்மோகன்சிங் உரிய பேச்சு வார்த்தைகளை சார்க் மாநாட்டில் மேற்கொள்ள முயல வேண்டும்.

இது ஒரு முயற்சி மட்டுமே.

எதைப் பற்றி ஆயுத கொடுக்கல் வாங்கல்கள் பற்றியோ :rolleyes::icon_mrgreen::lol:

பின்ன என்ன

சொந்த மீனவர்களைக்காப்பாற்ற வக்கில்லை சிறிலங்காவுக்கு ஆயுத உதவியாம்.

  • கருத்துக்கள உறவுகள்

குட்டக்குட்ட குனிந்தால்?????????

இப்படித்தான்.............

நாங்களும் குனியும் மட்டும் குனிந்த பிறகுதான்........?????

செய்தியை இணைத்தவர் இதை எங்கிருந்து பெற்றார். (அவரது மேற்கோள் காட்டப்பட்ட சொந்த இணையத்தளத்தை அல்ல) ஏன் இவ்விடயம் வேறு இணையத்தளங்களிலோ, பத்திரிகைகளிலோ வரவில்லை என்பதை விளக்குவாரா??

  • தொடங்கியவர்

வசம்பு இந்தச் செய்தி அனைத்து இந்திய இணையத்தளங்களிலும் வந்துள்ளது. பார்வையிடலையா? நான் உங்கள் பார்வைக்கு மட்டும் தான் இணைத்தேன்.ஆனால் தாங்கள் தான் அதனை உண்மையா,அல்லது பொய்யா என்று முடிவு செய்யனும். நான் இல்லை! :rolleyes:

குறிப்பாக எமது ஈழத்தமிழர்களின் இணையத்தளம் சங்கதியும் இந்தச் செய்தியினை வெளியிட்டுள்ளது.

http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

Edited by tamilarasu

சொந்த மீனவர்களைக்காப்பாற்ற வக்கில்லை சிறிலங்காவுக்கு ஆயுத உதவியாம்

வசம்பு இந்தச் செய்தி அனைத்து இந்திய இணையத்தளங்களிலும் வந்துள்ளது. பார்வையிடலையா? நான் உங்கள் பார்வைக்கு மட்டும் தான் இணைத்தேன்.ஆனால் தாங்கள் தான் அதனை உண்மையா,அல்லது பொய்யா என்று முடிவு செய்யனும். நான் இல்லை! :icon_mrgreen:

குறிப்பாக எமது ஈழத்தமிழர்களின் இணையத்தளம் சங்கதியும் இந்தச் செய்தியினை வெளியிட்டுள்ளது.

http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

நீங்கள் குறிப்பிட்டது போல் அனைத்து இந்திய இணையத்தளங்களிலும் வந்திருந்தால் ஏதாவது ஒரு இணைப்பைத் தாருங்களேன். குறிப்பாக அநேகமானோர் பார்க்கும் தற்ஸ்தமிழ் இணையத் தளத்தில் இதுபற்றிய செய்தி ஒன்றுமில்லையே?? எனவே நீங்கள் பார்த்த இந்திய இணையத்தளங்களின் இணைப்பையும் தாருங்கள். அதன் பின் எனது கருத்தைச் சொல்கின்றேன். :rolleyes:

தமிழக நாளிதழ் தினமலர்

http://www.dinamalar.com/Sambavamnewsdetai...ls=&ncat=DI

நீங்கள் சொன்னது போல உங்கட தற்ஸ்தமிழ் இணையம்

http://thatstamil.oneindia.in/news/2008/07...rmen-again.html

வெப்துனியா இணையம்

http://tamil.webdunia.com/newsworld/news/t...080731087_1.htm

காணுமா? :icon_mrgreen:

என்ன வசம்பு அவர்தான் அந்த இணைய இணைப்புக்களை போட்டுட்டாரே.. இப்ப என்ன செய்யப்போறிங்கள்?

விசயமறியாம கதை விடக்கூடாது...

காணுமா? :icon_idea:

நன்றி தமிழரசு உங்கள் இணைப்புகளுக்கு.

இது பற்றிய எனது கருத்தை எனக்கு அறிவுரை கூறும் சூறாவழிக்கு எழுதும் பதிலுடன் சேர்க்கின்றேன்.

நன்றி தமிழரசு உங்கள் இணைப்புகளுக்கு.

இது பற்றிய எனது கருத்தை எனக்கு அறிவுரை கூறும் சூறாவழிக்கு எழுதும் பதிலுடன் சேர்க்கின்றேன்.

ஏன்!

எப்பவும் மத்தவங்களில குறைபிடிக்கிறது... முட்டையில மயிர் புடுங்குறது.. நாங்கள் சொன்னா சுர்ரெண்டு கோவம்...

போங்கோ போய் நல்லா யோசித்து எங்கள்ள பிழை புடியுங்கோ பிறகு நாங்கள் உங்களில பிழை புடிப்பம்...

உப்பிடி மாறிமாறி சாணியடிப்பம்.

என்ன வசம்பு அவர்தான் அந்த இணைய இணைப்புக்களை போட்டுட்டாரே.. இப்ப என்ன செய்யப்போறிங்கள்?

விசயமறியாம கதை விடக்கூடாது...

சில இங்கு பதியப்படும் விடயங்களைப் பார்த்துத் தான் நான் வினாக்களை தொடுத்தேன். உங்களைப் போன்றவர்கள் ஏதாவது எழுத வேண்டுமென்பதற்காக எந்தச் செய்தியைப் பார்த்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது எழுதி விட்டு போகின்றீர்கள்.

உம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=41172&hl=

பொதுவாக செய்திகளை இணைப்போர் அதன் மூலங்களை குறிப்பிட வேண்டுமென்பது களவிதி. ஆனால் பலர் செய்தியின் உண்மையான மூலத்தை குறிப்பிடாமல், தமது இணையத்தளத்தின் முகவரியை மாத்திரம் விளம்பரத்திற்காக இணைத்துவிட்டுச் செல்கின்றனர். அதனால் தமது விருப்பப்படி எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுச் செல்கின்றார்கள். மேலே இணைக்கப்பட்ட 4 இணைப்புக்களிலுமே ஒரே செய்தி எத்தனை விதமாக வந்துள்ளது என்று பார்த்தீர்களா??

பத்திரிகைகளைப் பொறுத்தவரை அவைக்கு செய்திகள் வெளியிடுவதில் விதிமுறைகள் உண்டு. ஆனால் இணையத்தளங்களுக்கு இதுவரை எந்த விதிமுறையுமில்லை. அதனால் அவர்கள் எதை வேண்டுமானாலும், தமது விருப்பப்படி தமது இணையத்தளங்களுக்கு விளம்பரம் தேட பரபரப்பாக எழுதுகின்றார்கள். செய்திகளை புதினம், தற்ஸ்தமிழ் போன்ற இணையத்தளங்களிலிருந்து சுட்டுப் போட்டுவிட்டு தமது நிருபர் என்று ஒரு பெயரையும் போட்டு சுய விளம்பரத்தை மட்டும் தேடுகின்றார்கள். இப்படியானவற்றை பார்த்து எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்தெழுதும் நீங்கள் எனக்குப் புத்தி சொல்வதை என்ன சொல்ல??

எனி மேலே குறிப்பிட்ட தாக்குதல்கள், ஏற்கனவே இதற்கு முன்னரும் இடம்பெற்ற போது, இதே களத்தில் இது பற்றிய கருத்தப் பகிர்வுகள் இடம் பெற்றன. அதில் ஏற்கனவே நான் எழுதிய கருத்துக்களையே இங்கும் நான் நினைவூட்டுகின்றேன்.

இலங்கையில் எமது மீனவர்கள் இலங்கை அரசின் தடையால் மீன் பிடிக்க முடியாமல் பரிதவிக்கும் போது, இதைத் தமக்கு சாதகமாக பயன்படுத்த தமிழ்நாட்டு மீனவர்கள் முன் வருவதும், இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைவதும் தவறானது தான். மேலே இணைக்கப்பட்ட செய்தியில் கூட கச்சதீவுக்கப்பால் இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போதே தாக்கப்பட்டுள்ளார்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதைவிட விடுதலைப்புலிகள் சாதாரண மக்கள் போல் தமிழ் நாட்டிலிருந்து ஆயுதக்கடத்தலில் ஈடுபடுகின்றார்கள் என்ற சந்தேகத்தினால்த் தான் இலங்கை அரசு எமது மக்கள் மீன் பிடிக்கத் தடை போடுகின்றார்கள். இப்படியான நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களை அங்கு அனுமதிப்பார்களா??

இதே பிரச்சனையைச் சிங்கள மக்கள் செய்தால் சிங்கள அரசு அவர்களுக்குக் கடலில் மீன்பிடிக்கத் தடை போடுமா என்ன? அதை ஏன் தமிழர் பிரதேசங்களில் செய்கின்றது. வடமராட்சி, மற்றும் தீவுப்பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை போடும் சிங்கள அரசு, யுத்தம் தற்போது நடக்கும் மணலாறு, மற்றும் புத்தளம் கடற்கரையில் சிங்கள மீனவர்களுக்குத் தடை போடவில்லையே!

விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் என்பது சுத்த ஏமாற்றுத்தனம். அது முழுக்கமுழுக்க சிங்கள இனவாதம். எந்தத் தமிழனானவது பலனடையக்கூடாது என்பது தான் சிங்கள அரசின் சிந்தனையே தவிர, அங்கே ஒரு சந்தேகமும் கிடையாது.

இதில என்ன சந்தேகம் பொன்னையா...

சிங்களவன் கக்கூசுக்குப்போனாலும் தமிழன்ர காணிக்குள்ளதான் போகவெணுமாம்...

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: வசம்பு, சூராவளி உங்கள் இருவருக்கும் அறிவுரை கூறும் யோக்கியதை எனக்கில்லை. ஆனாலும் ஒரு சின்ன வேண்டுகோள், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதாகத்தானே செய்தி வந்திருக்கு. நீங்கள் இருவரும் தலைப்பை விட்டு விட்டு ஆளாளுக்கு அடிபடுவானேன்?

வசம்பு,

யாரும் எப்படியும் கருத்துக்கள் எழுதலாம்தான். அதற்காக "ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக எல்லாக் கருத்துக்கும் எழுதுகிறீர்கள்" என்று சொல்வது அவ்வளவு நாகரீகமாக எனக்குத் தெரியவில்லை.அவரவர் விருப்புக்கும், நேரத்துக்கும் ஏற்ப விதத்தில் அவர்கள் கருத்து எழுதுகிறார்கள். அடுத்தது எல்லாக் கருத்துக்களிலும் பங்கு கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருப்பின் அதை நாங்கள் குறை கூறுவதும் நாகரீகம் இல்லையல்லவா? பாவம், எவரும் எம்மால் புண்பட வேண்டாமே?!

இந்தக் கருத்து உங்களை எந்த விதத்திலாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். ஏதோ எனக்குச் சொல்ல வேண்டும் போல் இருந்ததால் சொன்னேன், அவ்வளவுதான். நன்றி.

:lol: வசம்பு, சூராவளி உங்கள் இருவருக்கும் அறிவுரை கூறும் யோக்கியதை எனக்கில்லை. ஆனாலும் ஒரு சின்ன வேண்டுகோள், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதாகத்தானே செய்தி வந்திருக்கு. நீங்கள் இருவரும் தலைப்பை விட்டு விட்டு ஆளாளுக்கு அடிபடுவானேன்?

வசம்பு,

யாரும் எப்படியும் கருத்துக்கள் எழுதலாம்தான். அதற்காக "ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக எல்லாக் கருத்துக்கும் எழுதுகிறீர்கள்" என்று சொல்வது அவ்வளவு நாகரீகமாக எனக்குத் தெரியவில்லை.அவரவர் விருப்புக்கும், நேரத்துக்கும் ஏற்ப விதத்தில் அவர்கள் கருத்து எழுதுகிறார்கள். அடுத்தது எல்லாக் கருத்துக்களிலும் பங்கு கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருப்பின் அதை நாங்கள் குறை கூறுவதும் நாகரீகம் இல்லையல்லவா? பாவம், எவரும் எம்மால் புண்பட வேண்டாமே?!

இந்தக் கருத்து உங்களை எந்த விதத்திலாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். ஏதோ எனக்குச் சொல்ல வேண்டும் போல் இருந்ததால் சொன்னேன், அவ்வளவுதான். நன்றி.

நன்றி இரகுநாதன் உங்கள் கருத்திற்கு

எவரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இல்லை. ஆனால் சிலர் இங்கு தமது இணையத்தளத்தை பிரபலப்படுத்தவதற்காக, பரபரப்பாக ஏதாவது செய்ய வேண்டுமென்பதற்காக பொய்யான செய்திகளை போடுகின்றார்கள். அவற்றை வாசிக்கும் போது எதையும் சிந்திக்காது, எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பதில் எழுதுவதில் தான் எனக்கு உடன்பாடில்லை.

உதாரணமாக சுவிசில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்பிப்பதாக ஒருவர் செய்தி இணைக்கும் போதோ அல்லது சுவிசில் இராணுவம் இல்லையென்று ஒரு தவறான செய்தி வரும் போதோ நடைமுறைக்கு இவை சாத்தியமா?? எனச் சிந்திக்க வேண்டாமா?? அதைவிடுத்து செய்திகளை நம்பி கருத்தக்களை எழுதும் போது, எதை நினைத்து செய்திகளை இணைத்தாரோ, அவரின் எண்ணம் இலகுவாக நிறைவேற, தொடர்ந்தும் பொய்யான செய்திகளை இணைத்து பரபரப்பாக்கி தமது இணையத்தளத்திற்கு விளம்பரம் தேடும் முயற்சிகளே தொடரும்.

இதனால் கருத்தாளர்கள் பலர் முட்டாள்கள் ஆக்கப்படுவதில் உங்களுக்கு உடன்பாடா??

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=5621

http://www.sudaroli.com/pages/news/today/02.htm

****

ஆகிய செய்தி தளங்களில் இருந்து எடுகப்பட்ட செய்திகளை செய்தி மூலங்களை சரியாக குறிப்பிடாது தமது வலைப்பதிவுகளை செய்தி மூலங்களாக குறித்து செய்திகளை வெளியிட்ட isoorya, puspaviji ஆகியோர் இணைத்த செய்தி தலைப்புக்கள் நீக்கப்பட்டுள்ளன.

பாராட்டுக்கள். உண்மையில் இப்படியான நடவடிக்கைகள் தான் தேவை. நிர்வாகத்திலுள்ள அனைவரும் பாரபட்சம் பார்க்காமல் இதனைக் கைக்கொள்ள வேண்டும்.

உங்கள் தகவல்களுக்கும் விளக்கத்துக்கும் நன்றி வசம்பு, விளக்கத்துக்கு உதவிய ரகுநாதனுக்கும் நன்றி..

ஒவ்வொருக்கும் சொந்தகருத்து உண்டு அதை அவர்கள் தெரிவிக்க யாழ்க்களம் உதவியாக இருக்கிறது...

இதில் மற்றவர்களை குறைகூறுவதையே நான் சொட்டிக்காட்ட முனைந்தேன்... எல்லோரினது கருத்தும்

எப்பவும் சரியாக இருக்கவேண்டுமில்லை... கருத்துக்களில் உள்ள வேறுபாட்டை வைத்துக்கொண்டு...

வேறுபாடான கருத்துக்கள் வெறும் புலம்பல் எண்று முடிவுக்கு வரமுடியாது.

எது எவ்வாறாயினும், பிழைகளை சுட்டிக்காட்ட உதவிய உங்களுக்கு நன்றி... தனிப்பட்ட முறையில்

உங்களை நான் சாடியிருந்தால் அதுக்காக வருந்துகிறேன்..

பிழைகள் விடுவது மனித இயல்பு. இதற்கு நான் கூட விதிவிலக்கல்ல. தவறுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டுமென்பதே எனது அவா. அதனாலேயே சிலவற்றை சுட்டிக் காட்டியிருந்தேன். நீங்கள் உட்பட எவரையாவது எனது கருத்தும் புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள். மற்றும்படி தற்போது விடயத்தை புரிந்து கொண்டு கருத்துப் பகிர்ந்தமைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

பாவம்...மீனவர்கள்.

கருத்துக்கள உறுப்பினர் ஐசூர்யா வுக்கு பலமுறை அறிவுறுத்தல் செய்யப்பட்டும், இறுதியாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டும் அவர் தனது செயலை மாற்றிக்கொள்வதாக இல்லை. தொடர்ந்தும் செய்திகளின் மூலத்தைக் குறிப்பிடாமல் (எந்த ஊடகத்திலிருந்து செய்திகளைப் பெற்றார் என்கிற தகவலைக் குறிப்பிடாமல்) தனது தளத்துகக்கு விளம்பரம் தேடும் நோக்கோடு அல்்்்லது வேறு ஒரு நோக்கோடு மற்றவர் உழைப்பைத் திருடி யாழ் இணையக் கருத்துக்களத்தில் இணைத்து வருகிறார். இதனை நாம் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. எனவே இனிவரும் காலங்களில் அவர் கருத்துக்களத்தில் எந்தவொரு ஆக்கத்தையும் இணைப்பதற்கு அனுமதியில்லை.

செய்திகளின் மூலம் குறிப்பிடாமல் செய்திகளை தங்களது செய்தி போல் இணைக்கிற ஏனையவர்களும் இதனைக் கவனத்தில் கொள்ளவும். இனிவரும் காலங்களில் இது தொடராமல் இருக்கட்டும். நன்றி

:wub:பாராட்டுக்கள். தொடரட்டும் பணி. :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.